"மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள்
By
Shankarlaal,
in வாழும் புலம்
-
Tell a friend
-
Topics
-
2
By பிழம்பு
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
ஐ.நா அறிக்கைக்கு பன்னாட்டு இராஜதந்திரிகளும் டுவிட்டரில் ஆதரவு (நா.தனுஜா) கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாகவும் இவ்விவகாரத்திற்கு விரைவில் தீர்வுகாணப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் பன்னாட்டு இராஜதந்திரிகள் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளனர் . கட்டாயத்தகனம் தொடர்பான ஐ.நா அறிக்கையை மேற்கோள்காட்டி இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில், 'ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களிடமிருந்து மிகத்தெளிவான செய்தியொன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை சர்வதேச சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையிலும், தத்தமது மதநம்பிக்கைகளின் பிரகாரமும் அடக்கம் செய்வதற்கு அவர்களது குடும்பத்தினர் அனுமதிக்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கிறார். அதேவேளை 'இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டாயத்தகனம் தொடர்பில் மிகவும் வலுவானதொரு அறிக்கை ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடயத்திற்கு உடனடியாகத் தீர்வுகாணப்பட வேண்டும்' என்று இலங்கைக்கான கனேடியத்தூதுவர் டேவிட் மக்கினொன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மிகமுக்கிய அமர்வு விரைவில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது ஒருமித்த தீர்வொன்றை அடையமுடியும் என்று நம்புகின்றோம்' என்று ஜேர்மனியத்தூதுவர் ஹோல்கர் சீபர்ட் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களைக் கட்டாயத்தகனம் செய்வதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை மிகவும் முக்கியமானது என்று சுட்டிக்காட்டியிருக்கிறது. 'தேசியவாதம், பாகுபாடு, ஆக்கிரமிப்புக்கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் பொதுச்சுகாதாரத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதை ஐ.நா அறிக்கை கண்டித்துள்ளது' என்றும் அதன் பதிவில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா அறிக்கைக்கு பன்னாட்டு இராஜதந்திரிகளும் டுவிட்டரில் ஆதரவு | Virakesari.lk
-
By பிழம்பு · பதியப்பட்டது
(நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான புதியதொரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று ஜேர்மனி உள்ளிட்ட உறுப்புநாடுகளிடம் சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மிகமுக்கிய அமர்வு விரைவில் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது. இதன்போது ஒருமித்த தீர்வொன்றை அடையமுடியும் என்று நம்புகின்றோம்' என்று ஜேர்மனியத்தூதுவர் ஹோல்கர் சீபர்ட் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார். அந்தப் பதிவை மேற்கோள்காட்டி மீள்பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, அதில் மேலும் கூறியிருப்பதாவது: சர்வதேச சட்டங்களுக்கு முரணாக இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு ஏற்றவாறான, தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்த பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறவில்லை. ஒருமித்த தீர்மானத்திற்கு வரமுடியும் என்பதைப் பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை கேட்டுவிட்டார்கள். எதிர்காலத்தில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும் தண்டனைகளிலிருந்து தப்பிப்பதைத் தடுப்பதையும் நோக்காகக்கொண்ட சர்வதேச பொறிமுறை ஒன்றுக்கு ஆதரவு வழங்குவதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவிக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் 'ஒருமித்த தீர்மானம்' ஒன்றினால் எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை. ஆகவே இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைத் தொடர்ந்து கண்காணித்தல், மனித உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் மற்றும் அவற்றைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான புதியதொரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் என்று ஜேர்மனி உள்ளிட்ட உறுப்பு நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றை வலியுறுத்துகின்றோம் என்று மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக புதியதொரு தீர்மானம் அவசியம் - சர்வதேச மன்னிப்புச்சபை | Virakesari.lk -
18 திகதி எழுதிய உங்கள் கருத்தில் 19 திகதி அடுத்தநாள் எடிட் பண்ணப்பட்டு இருக்கிறது சரி 50லே 50களில் பெரிய வித்தியாசம் இல்லை தானே அதைவிடுவம் .மறை நீர் பாதிப்புகளை கூறும் ஒருத்தமிழ் படத்தை கூறுங்க விவசாயி அது இது எல்லாம் நீண்ட பட்டியல் இருக்கிது என்கிறீர்கள் ?
-
By Sasi_varnam · Posted
இந்தியாவில் தென்னகத்து மேதைகளுக்கு மட்டும் உயரிய அரச கெளரவம் எல்லாம் காலம் கடந்து தான் நடக்கும். பாடும் நிலா / பாட்டுத்தலைவன் பாலு ஸாருக்கு இந்த விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. 🙏 2001 - பத்ம ஸ்ரீ 2011 - பத்ம பூஷன் 2021 - பத்ம விபூஷன் இந்த பத்மங்களை கடந்து எங்கள் உயிரோடு கலந்த மரியாதை அவருக்கு என்றுமே உண்டு. ஐயா எம்.எஸ்.வீ , இளையராஜா போன்ற இன்னும் பல மேதைகளுக்கான அங்கீகாரம், பாராட்டு கூடியவிரைவில் கைகூட வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன். 🙏 -
அப்படியே என்னையும் சேர்த்து கொள்ளுங்கோ பாஸ் .😜
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.