Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

"மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்" இந்த இளம் பெண்ணுக்கு உதவுங்கள்

Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் சாணக்கியன் ஆகியோரின் கருத்தே எனதும் ஆனால் நான் இந்த ஆவனத்தில் கையொப்பமிட்டேன்

ஆனால் இதே தளத்தில் இருக்கும் இந்த கடிதம் ஏனோ எம் மனித நேய உணர்வாளர்களின் கண்ணில் படவில்லை

http://www.ahrchk.net/ua/mainfile.php/2006/2506/

இதனை ஒருசிங்கள தளத்தில் பார்த்த்ஹென் உடனே இதன்னை அங்கு இணைத்தேன்[http://www.ahrchk.net/ua/mainfile.php/2006/2506/] கிடைத்தது திட்டல் சொந்த மண்ணில் நடந்ததுக்கு அப்பீல் செய்ய மாடீனம் ஆனால் அந்நிய மண்ணில் ஒரு குற்றம் செய்தவர் என கருதப்படும் ஓருவருக்கு கருணை காடீனம் என யோசிக்கும் போது கோவமே வந்தது

Link to comment
Share on other sites

 • Replies 278
 • Created
 • Last Reply
 • கருத்துக்கள உறவுகள்

மரண தண்டனை பெற்ற யுவதியை

காப்பாற்றும் முயற்சி தோல்வி

பிரதி அமைச்சர் பைலா நாடு திரும்பினார்

சவூதிஅரேபியாவில் மரணதண்டனை வழங்கப்பட்ட மூதூர் பெண் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று லக்ஷ்மன் கதிர்காமர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மரண தண்டனை வழங்கப்பட்ட மூதூர் பெண் றிஸானா ரபீக்கிற்கு அத்தண்டனையிலிருந்து விடுதலை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுஸைன் பைலா வெற்றிபெறத் தவறிவிட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நாடுதிரும்பிய பிரதி வெளிவிவகார அமைச்சருக்கு சவூதி அரேபிய ராஜதந்திர உயர்மட்டத்தையோ , உயர் அதிகாரிகளையோ அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களையோ நேரடியாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படாமையினால் அவர்

அவ்விவகாரத்தில் வெற்றிபெறாமலே நாடு திரும்பினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

19 வயதான மூதூர் பெண் றிஸானா ரபீக்கிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை ராஜதந்திர முறையில் ரத்துச் செய்யும் நோக்கில் கடந்த 20 ஆம் திகதி அமைச்சர் ஹுஸைன் பைலா சவூதி அரேபியாசென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்தர்ப்பத்தில் இப் பெண்ணிற்கு சவூதி அரேபியா வழங்கியுள்ள தண்டனையை ரத்துச் செய்வது குறித்தும் இலங்கை அரசு தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் வெளிவிவகார அமைச்சு தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.(க)

http://www.sudaroli.com/pages/news/today/03.htm

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்க மனித உரிமை குழு Human Rights Watch (HRW) ரிஸானாவின் மரணதண்டணையை மீளாய்வு செய்யுமாறு சவுதி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

Saudi authorities asked to review minor’s death sentence

By Khalid Hasan

WASHINGTON: Human Rights Watch (HRW) has asked the Saudi Arabian government to review the death sentence awarded to a Sri Lankan maid who was a minor when the alleged crime, the death of a baby under her care, took place.

The human rights watchdog asked Riyadh to have the review of the fairness of the original investigation into Rizana Nafeek, the Sri Lankan domestic worker, and her trial. Last month, a Shari’a court in Dawadmi, Saudi Arabia, sentenced Nafeek, 19, to death, ruling that she had murdered an infant in her care in 2005.

Nafeek filed an appeal last week. International law prohibits the death penalty for crimes committed before the age of 18. “This case raises many troubling questions about the treatment of children and foreigners in Saudi Arabia’s criminal justice system,” according to Nisha Varia, senior researcher in the Women’s Rights Division of Human Rights Watch.

The New York-based group urged the appeals court to consider evidence verifying Nafeek’s age was 17 at the time of the incident, review her access to lawyers and translators during the interrogation and trial, and examine the conditions under which she made a confession.

Nafeek had only been employed in Saudi Arabia for two weeks as a domestic worker when her employers’ four-month-old baby died while in her care. A copy of Nafeek’s birth certificate shows her year of birth as 1988, although her passport lists it as 1982. Research has found that migrant workers are often unfamiliar with immigration regulations, and labour recruiters routinely falsify workers’ passports in order to meet age requirements for jobs abroad.

Saudi Arabia is a signatory to the Convention on the Rights of the Child, which expressly prohibits the death penalty or life sentences without parole for offenses committed before the age of 18. Saudi law, however, gives judges wide discretion to treat children as adults in criminal cases, and courts have imposed death sentences on children as young as 13. Individuals charged with a capital offense rarely have access to lawyers during interrogation and trial, and often do not even receive a copy of the verdict.

Dailytimes

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்க மனித உரிமை குழு Human Rights Watch (HRW) ரிஸானாவின் மரணதண்டணையை மீளாய்வு செய்யுமாறு சவுதி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில தினம் தினம் விசாரணை இல்லாமல் மரண தண்டனை வழங்கீனம் இலங்கையிடம் இதனை மறு பரீசீலணை செய்ய சொல்ல மாட்டீனமா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lankan teen maid on death row

CNN

Saudi Arabia urged to review decision to execute Sri Lankan housemaid

IHT

Sri Lanka family prays for Saudi death row teen maid

Reuters

Tribal leader will intervene on Rizana case only if Saudi govt. approves

Lankabusinessonline

SL delegation returns after appealing for Rizana’s life

News lk

Lawyers hopeful of pardon for Rizana

Daily News

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ரிஸானாவின் விடுதலை தொடர்பாக அரசு கடும் முயற்சிகளை மேற்கொள்ளும்

[31 - July - 2007]

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிஸானாவை மீட்பதற்காக அங்கு சென்ற பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா தலைமையில் சென்ற தூதுக்குழு நாடு திரும்பியுள்ளது.

இது தொடர்பாக அங்கு மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு அமைச்சர் ஹுசைன் பைலா விளக்கியுள்ளார்.

இந்த நிலையில், ரிஸானாவின் விடுதலை தொடர்பாக சட்ட ரீதியாகவும் ஏனைய வழிகளிலும் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர் தனது அமைச்சுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, அங்கு விஜயம் செய்து திரும்பிய பிரதியமைச்சர் ஹுசைன் பைலா இதுபற்றித் தெரிவிக்கையில்;

"நாம் அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து ரிஸானாவின் விடுதலை தொடர்பான விடயங்களைப் பேசியதுடன், இலங்கை அரசின் வேண்டுகோளை சவூதி அரசிடம் தெரிவித்ததுடன், சவூதி இளவரசருக்கும் தனிப்பட்ட கடிதமொன்றையும் கையளித்துள்ளோம்.

நாம் அங்கிருந்த சமயம் ரிஸானாவை அவரது பெற்றோர் இரு தடவை சிறையில் சந்தித்துப் பேசினர். மேலும், ரியாத்தில் தங்கியிருந்து தொடர்ந்தும் அவர்கள் தமது மகளை சிறையில் பார்வையிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்ததாக"வும் தெரிவித்தார்.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், சவூதிச் சட்டத்தின்படி பிரச்சினைக்கான அணுகுமுறை நீண்டகாலம் செல்லும் அதேவேளை, மனிதாபிமான வேண்டுகோளைத் தொடர்ந்தும் விடுப்போம். இப்பிரச்சினை முடியும் வரை வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து பாடுபடுமெனவும் தெரிவித்துள்ளது.

தினக்குரல்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாணக்கியன் உங்களின் வேண்டுகோள் நியாயமானது.

தினமும் எங்கட மக்கள் சாவிலும், மரணபீதிலும் வாழும்போது, ஏதோ ஒரு வகையில் எம் போராட்டத்i வைச்சு அனுகூலம் அனுபவிக்கின்ற எச்சமுதாயத்துக்கும் உதவுகின்ற எண்ணம் எனக்குமில்லை. இதை வெளியால் சொன்னால் என்னை ஈவிரக்கம் அற்றவன் என்று யாரும் சொல்லுவியள். அதைப் பற்றிக் கவலையில்லை.

எங்கட சனம் சாகக்க எத்தனை பேர் ஈவிரக்கம் காட்டினவை என்று என்னைத் திட்டுகின்றவர்கள் யோசிக்கட்டும்.

நானும் பல தடவை பலரது நையாண்டி கருத்தை (முஸ்லீம் பெண் சிறுமி தொடர்பான) கவனித்திருக்கின்றேன். எமது மக்கள் துன்பத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக மற்றவர்களுக்கு மனிதாபிமானம் மறுக்கப்படுவதை தட்டிக்கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. எமது மக்கள் துன்பப்படுவதையும் தட்டிக்கேட்பதை செய்துகொண்டுதானே இருக்கிறோம்..

இதற்காக இதை ஒருவரும் புறக்கணிக்கவில்லையே!

நாம் மற்றவர்கள் மேல் கரிசனை காட்டாதபோது, மற்றவர்கள் (உ.ம்: அனைத்துல நாடுகள்) எம்மீது கரிசனை காட்டவேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம்?

நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்பதைபோலத்தானே மற்றவர்களும் தங்களுக்கென்ன அது அவர்களுடைய போராட்டம், எமக்கு தேவையில்லாத விடயம் என்று கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்?

நீங்கள் செய்வது சரியென்றால், அவர்கள் செய்வதும் சரியே!

இல்லையா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கிசான் என்ன கனநாளைக்குப் பிறகு,

உங்கள் இதே கேள்விக்குப் பதில் வேறு இடத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

(எல்லோரும் இந்தத் தலைப்பை விட்டு வெளியில் வரவே மாட்டன் என்று அடம்பிடிக்கிறார்களே!)

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Forgiving better than punishing

................Prophet Muhammad (peace be upon him) said: "If there is any way (to avoid punishing someone for a legal offence), let that person go. For it is better for a leader to make a mistake in forgiving than to make a mistake in punishing." (Al-Tirmidhi, Hadith 1011).

khaleejtimes

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ரிஸானாவின் மரண தண்டனை சர்வதேச சட்டத்திற்கு முரண்

[01 - August - 2007]

* கைவிடுமாறு சவூதி அரசிடம் மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ரிஸானா நபீக், குழந்தையை கொலை செய்ததாக தெரிவிக்கப்படும் காலப்பகுதியில் அந்தப் பெண் சிறுமியென சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு, இதன் காரணமாக இவர் மீதான தண்டனையை கைவிடுமாறு சவூதி அரேபிய அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

நியூயோர்க்கை மையமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

குழந்தை கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் காலப்பகுதியில் ரிஸானா 17 வயதுச் சிறுமியென்பதை மேல்முறையீட்டு நீதிமன்றம் கவனத்திலெடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, மேலும் ரிஸானாவை சட்டத்தரணிகள் சென்று பார்ப்பதற்கு அனுமதியளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

6மேலும், விசாரணைகளின் போது மொழி பெயர்ப்பாளர்கள் பிரசன்னமாகியிருப்பதை உறுதி செய்யுமாறும் ரிஸானா எவ்வாறான சூழ்நிலையில் வாக்குமூலமளித்தார் என்பதை கருத்திலெடுக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவின் குற்றவியல் சட்டமுறையில் குழந்தைகளும் வெளிநாட்டவர்களும் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பது குறித்த கேள்வியை இது எழுப்பியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களின்படி, 18 வயதிற்கு முன்னர் குற்றங்கள் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க முடியாது என்பதையும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தை இறந்த காலப்பகுதியில் 17 வயதுடையவராகக் காணப்பட்ட ரிஸானா நபீக்கிற்கு மரண தண்டனையை விதித்தன் மூலம் சவூதி அரேபியா மனித உரிமை கடப்பாடுகளை மீறியுள்ளது. மேலும், சவூதி அரேபியா, இரு வருடங்களாக ரிஸானா நபீக்கிற்கு சட்ட உதவிகளை மறுத்து வந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள 1.5 மில்லியன் இலங்கைத் தொழிலாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தினக்குரல்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கு நாடுகளும் இலங்கைப் பணிப் பெண்களும்ரிசானாவின் தாயாருடன் சகோதரிகள்

[01 - August - 2007]

சட்டத்தரணி மரினா மன்சூர்

இன்று நம் நாட்டில் எங்கும் பரவலாகப் பேசப்படும் விடயம் சவூதி அரேபிய நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிசானா நபீலைப் பற்றியதே. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் எனப்படும் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதே நிரம்பிய ரிசானா எனப்படும் இவ்விளம் பெண், இன்று சவூதி அரேபிய மண்ணிலே 4 மாதக் குழந்தையின் மரணத்திற்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறைக் கைதியாகி உள்ளார்.

இப்பெண்ணின் பரிதாபக் கதை இலங்கையை மட்டுமன்றி, சர்வதேச நாடுகளையும் உலுக்கி விட்டிருக்கிறது. இப்பெண்ணை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட அதேவேளை, சர்வதேச அமைப்புகள் பலவும் குரல் கொடுக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக, ஆசிய மனித உரிமைகள் குழுவின் பங்களிப்பு மகத்தானது.

மத்திய கிழக்கு அரபு நாடுகளின் குற்றவியல் சட்டமானது, பிரெஞ்சு சட்டத்தினையும் ஷரிஆ சட்டத்தினையும் அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட குற்றங்கள் போன்வற்றிற்கு அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது குற்றம் சுமத்தப்பட்டவரே குற்றத்தை ஒப்புக்கொண்டாலோ தீர்ப்பானது மரணதண்டனையே. இச்சட்டத்தின் கீழான தீர்ப்பிற்குட்படுவது இலங்கையர்களுக்கு புதிதல்ல. ஏற்கனவே, இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் சவூதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் மேற்குறிப்பிட்ட தண்டனைக்கு உள்ளானது யாவரும் அறிந்ததே.

இந்நிலையில், ரிசானா நபீலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனைத் தீர்ப்பு இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதென்றால் அதற்குத் காரணங்கள் பல. அவற்றை விரிவாக ஆராய முன் நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தேடிச் செல்லும் எத்தனை ரிசானாக்கள் வெவ்வேறு விதமான துன்பங்களையும் தண்டனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுவே.

ஒவ்வொரு வருடமும் சுமார் இரண்டு இலட்சம் இலங்கையர் மத்திய கிழக்கிற்கு வேலை வாய்ப்புத் தேடிச் செல்கின்றனர். இவர்களில் 60 வீதமானோர் வீட்டுப் பணிப் பெண்கள். இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்பவர்கள் அனைவரும் துன்பம் அனுபவிக்கின்றனர் என்பதல்ல. சிலர் தமது இரண்டு வருட சேவைக்காலத்தின் போது எவ்வித சிரமங்களுக்கோ, துன்புறுத்தலுக்கோ உள்ளாகாது சேவைக்கால சம்பளத்தினையும் மாதா மாதம் பெற்றுக் கொண்டு நலமே நாடு வந்து சேருகின்றனர். இன்னும் சிலர் இரண்டு வருட சேவைக்காலத்திற்குச் சென்றாலும் கூட, தாங்கள் பணிபுரியும் வீட்டுச் சொந்தக்காரர்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற்று பல வருடகாலம் ஒரே வீட்டில் சேவை புரிந்து மிகச் சிறந்த நிலையில் உள்ளனர்.

ஒரு சிலரின் நிலை இவ்வாறிருக்க, மற்றைய சிலரின் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. மாதக் கணக்காக மாத்திரமன்றி, வருடக் காணக்காக சம்பளம் பெறாதவர்களின் தொகை அதிகம். வீட்டு வேலைகளில் ஏற்படும் சிறு தவறுகளுக்காக வேதனை தரும் தண்டனைகளை வீட்டுச் சொந்தக்காரர்களினால் அனுபவிக்கும் பணிப் பெண்களின் கதை சோகம். இவற்றை எல்லாம் விட பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பெண்களின் நிலையோ சொல்லில் அடங்காதவை.

இவ்வாறான நிலைமைக்கு யார் காரணம்? வறுமையா, அல்லது அவ்வறுமையை விரட்ட வேண்டி திருமணம் முடியாத பெண்களைக்கூட எவ்வித தயக்கமும் இன்றி வேலை தேடி வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் அப்பெண்ணின் குடும்பத்தினரா? அல்லது தங்களின் உழைப்பிற்காக சுயநலமாக செயற்படும் சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களா? அதுவும் இல்லை என்றால், தனது நாட்டுக்கு அதிகளவு வருமானத்தை ஈட்டித்தரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் மூல காரணமான இப்பணியாட்களின் நலனைப் பாதுகாக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசாங்கமா? மேற்கூறப்பட்ட காரணங்கள் அனைத்துமே ஒன்றாக பொறுப்பேற்க வேண்டுமே தவிர, ஒரு தனி நபரையோ, நிறுவனத்தையோ அல்லது அரசாங்கத்தையோ தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்வது முறையல்ல.

மேற்குறிப்பிட்ட காரணங்களில் அடங்குபவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் கடமையை உணர்ந்து அதற்கேற்ப செயற்படுவார்களாயின், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியச் செல்லும் நம் நாட்டுப் பெண்கள் அந்நாடுகளில் முகம் கொடுக்க நேரிடும் பிரச்சினைகள் கணிசமான அளவில் குறைவடையும்.

உதாரணமாக, ஒரு பெண்ணை வெளிநாட்டிற்கு தொழில் புரிய அனுப்பும் போது அப்பெண்ணின் குடும்பத்தினராலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராலும் கருத்திற்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்று, அப்பெண்ணின் வயதும் பக்குவத்தன்மையுமாகும். அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வயது இருபத்து இரண்டாக இருந்தாலும் நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை. அறிமுகமே இல்லாத ஒரு தேசத்தில், முன் பின் அறிந்திராத மக்கள் மத்தியில், இதுவரை கேட்டிராத மொழி, பழக்க வழக்கங்களுக்கு நடுவே ஒரு பெண் தொழில்புரியப் போகின்றாள் என்றால் அதற்கு எந்தளவு மனப் பக்குவம் வேண்டும் என்று ஊகிக்க முடியும். இருபத்து இரண்டு வயதில் கூட மனதளவில் பக்குவப்படாத பெண்கள் பலபேர் நம் நாட்டில் இருக்கின்றபோது மிகவும் வயது குறைந்த பெண்களை அவர்களின் வயதைக் கூட்டி பொய்ச் சான்றிதழ் கொடுத்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவைப்பது மிகப் பெரும் தவறாகும். இவ்வாறான மனப்பக்குவத்தைக் கருத்திற்கொண்டுதான் இந்தியா போன்ற நாடுகள் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தம் பெண்களின் குறைந்த வயது முப்பத்தைந்து என நிர்ணயித்துள்ளன.

அடுத்ததாக கருத்திற்கொள்ள வேண்டிய விடயம், தொழில் புரியச் செல்லும் நாட்டு மக்களது வாழ்க்கைத் தரம். அபிவிருத்தி அடைந்துவரும் நாடான இலங்கையில் நகரங்களை விட கிராமங்களே அதிகம். இக்கிராமங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து வெளிநாட்டிற்கு வேலை தேடிச் செல்லும் பெண்களில் பலர் கொழும்பிற்கே ஓரிரு தடவைகள் தான் வந்திருப்பர். அது கூட வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்காகவே இருக்கும். இப்படிப்பட்ட ஒரு பெண் மத்திய கிழக்கு நாடுகளின் பல மாடிகளைக் கொண்ட மிக விசாலமான ஆடம்பர இல்லங்களுக்கு பணிபுரியச் சென்றதும் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றாள்.

ஓரிரு வாரங்களிலேயே வேலை செய்ய முடியாமல் சோர்ந்து போகின்றனர். இதன் விளைவு அவ்வீட்டுச் சொந்தக்காரர்களின் கோபத்துக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகுதல். இந்நிலைமையைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஒன்று, அந்நாடுகளைப் பற்றியும் அந்நாட்டு மக்களது வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அங்கு பணிபுரியச் செல்வோருக்கு தெளிவான விளக்கத்தை அளித்தல்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியப்போகும் பெண்களுக்கான பயிற்சிநெறி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் அளிக்கப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு வழங்கப்படும் இப்பயிற்சிநெறியின் போது சமையல் முறை, நவீன மின் இயக்கக் கருவிகளின் மூலம் மேற்கொள்ளப்படும் வீட்டுப் பணிகள், அன்றாட வாழ்க்கையில் பிரயோகிக்கும் அரபு வார்த்தைகள் போன்றன பிரதானமாக பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்பயிற்சி நெறியானது மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். இரண்டு வருட ஒப்பந்தத்தில் பணிபுரியச் செல்லும் இப்பெண்களுக்கு இரண்டு வாரப் பயிற்சி போதுமானதல்ல. பயிற்சிக்காலத்தைக் கூட்டுவதோடு முக்கியமான சில விடயங்கள் இப்பயிற்சி நெறியில் சேர்த்துககொள்ளப்படல் வேண்டும். அவைகளில் ஒன்று, மேற்கூறப்படட் முறையிலான அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை பற்றிய விளக்கவுரையாகும். இவ்விளக்கமானது திரைக் காட்சிகளின் மூலமான விளக்கமாக இருத்தல் அவசியம். அடுத்ததாக பயிற்சி அளிக்கப்பட வேண்டிய மிக முக்கிய விடயம், தற்பாதுகாப்பினைப் பற்றியதாகும். தொழில்புரிவதற்காகச் செல்லும் நாட்டில் தனது உடலுக்கோ, உயிருக்கோ அல்லது தன் உடைமைகளுக்கோ ஏற்படக்கூடிய தீங்குகள், அவை ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் பற்றிய விரிவான விளக்கமும் அறிவுறுத்தல்களும் பயிற்றுவிக்கப்படல் மிக அவசியமாகும்.

அந்நிய நாட்டில் தனக்கு ஒரு அநீதி இழைக்கப்படும் போது, தான் நாட வேண்டிய ஒரே இடம் அந்நாட்டில் இருக்கும் தனது நாட்டுத் தூதுவராலயம் என்பதனை வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் மனதில் வைத்திருத்தல் வேண்டும்.

அநேகமான மத்திய கிழக்கு நாடுகளில் அங்கு வேலைக்குச் செல்பவர்களின் கடவுச்சீட்டானது அவர்களது தொழில் தருநர்களினால் எடுத்துவைத்துக் கொள்ளப்படுவது வழக்கம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அக்கடவுச்சீட்டின் பிரதி ஒன்றை தன்வசம் வைத்திருப்பது வேலைக்குச் செல்பவர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். கடவுச்சீட்டின் பிரதி மாத்திரமன்றி, தனது தொழில் சம்பந்தமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களின் பிரதிகளையும் தன்வசம் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு மாத்திரமல்லாது, தனக்கு ஏதும் தீங்கு அல்லது அநீதி இழைக்கப்பட்டு அதன் காரணமாக அந்நாட்டிலுள்ள தனது தூதுவராலயத்திற்குப் பாதுகாப்பு தேடிச் செல்கையில், மேற்குறிப்பிட்ட பிரதிகளை தன்வசம் எடுத்துச் செல்லல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத ஆவணங்களாக அமையும்.

தொழில் நிமித்தம் தன் நாடு விட்டு பிறநாடு செல்லும் தொழிலாளியின் நலன்களை அந்நாட்டிலே பாதுகாக்கவென பல சர்வதேச சட்டங்கள் உள்ளன. சர்வதேச தொழிலாளர் ஒன்றியம் (ஐஃ?), சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International)போன்றவை இவற்றிற்காகவே செயற்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பு உயர்சபையின் செயலாளர் நாயகத்தினால் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் திகதி வரையப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஆவணமானது வெளிநாடுகளுக்கு தொழில்புரியச் செல்பவர்களின் நலனை மாத்திரமல்லாது, அவர்களது குடும்ப அங்கத்தவர் நலனையும் சகல விதத்திலும் பாதுகாப்பதாக அமைந்திருக்கின்றது.

வெளிநாடுகளில் தொழில்புரியும் தன் நாட்டுப் பிரஜைகளுக்கு ஏதேனும் தீங்கு அல்லது அநீதி வேலைபுரியும் நாட்டிலே இழைக்கப்பட்டால் அதற்கெதிராக தன் பிரஜை சார்பில் சட்டரீதியாக பிரதிநிதித்துவப்படுத்துவதற

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல்களுக்கு மிகவும் நன்றி கறுப்பி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ரிஸானாவை காப்பாற்றும் முயற்சியில் அரசு தீவிரம் `அனுதாப அலைகளே' உதவும் என்கிறார் அமைச்சர் யாப்பா

[03 - August - 2007]

-எம்.ஏ.எம்.நிலாம்-

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டிரு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rizana case: Govt vows action against all responsible

Daily News

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நானும் பல தடவை பலரது நையாண்டி கருத்தை (முஸ்லீம் பெண் சிறுமி தொடர்பான) கவனித்திருக்கின்றேன். எமது மக்கள் துன்பத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக மற்றவர்களுக்கு மனிதாபிமானம் மறுக்கப்படுவதை தட்டிக்கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. எமது மக்கள் துன்பப்படுவதையும் தட்டிக்கேட்பதை செய்துகொண்டுதானே இருக்கிறோம்..

இதற்காக இதை ஒருவரும் புறக்கணிக்கவில்லையே!

நாம் மற்றவர்கள் மேல் கரிசனை காட்டாதபோது, மற்றவர்கள் (உ.ம்: அனைத்துல நாடுகள்) எம்மீது கரிசனை காட்டவேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம்?

நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்பதைபோலத்தானே மற்றவர்களும் தங்களுக்கென்ன அது அவர்களுடைய போராட்டம், எமக்கு தேவையில்லாத விடயம் என்று கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்?

நீங்கள் செய்வது சரியென்றால், அவர்கள் செய்வதும் சரியே!

இல்லையா?

அருமையான பதில் கொடுதீர்கள் கிசான். இப்படி ஒவ்வொரு சம்பவங்களும் வரும் போது தான் யார் யார் எப்படி கோரமானவர்கள் என அறிய முடிகிறது. சிலர் குறும்புத்தி கொண்ட சுயநலக்காரர். இன்னும் சிலர் எமக்கு உதவினால் நாமும் உதவலாம் என எண்ணுபவர்கள், சிலர் குளப்பம் விளைவிக்க வேண்டும் என்றே குதர்கமாய் கருத்து எழுதிக்கொண்டிரூப்பவர். இதனிடையே தூற்ருவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் என தங்கள் இலக்கை நோக்கி செல்லும் இரத்தம் கொதிக்கும் சித்தம் கொண்ட பொது நல கருத்தாளர்கள். கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்று எங்கோ ஒருவன் பாடியதை நிதர்சனமாய் இங்கு காணமுடிகிறது.

ஒரு தனிமனிதருக்காக குரல் கொடுக்கும் மேதாவிகள் ஒரு சமுதாயத்தின் இன்னல்களிற்காக குரல் கொடுத்ததாக தெரியவில்லை குறிப்பாக யாழில் ஒரு சில நபர்கள் வில்லங்கதிற்காக மீண்டும் மீண்டும் இதை பிரசுரிப்பத்ல் இருந்து தெரிகிறது. :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவை எடுத்துக்காட்டி சிறுமி ரிசானாவை கைவிட்டது சிறிலங்கா அரசாங்கம்!

[வெள்ளிக்கிழமை, 3 ஓகஸ்ட் 2007, 14:17 ஈழம்] [செ.விசுவநாதன்]

லிபியாவில் ஐரோப்பிய நாட்டவர் ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட போது லிபியாவின் சட்டத்தை மதித்து ஐரோப்பிய நாடு நடந்து கொண்ட நிகழ்வானது சவூதியா அரேபியாவில் மரண தண்டனைக்கு முகம் கொடுத்து நிற்கும் சிறுமி ரிசானா விடயத்தில் எமக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்று சிறிலங்கா அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கூறியுள்ளார்.

ரிசானாவின் மரண தண்டனையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா கூறியதாவது:

சவூதி அரேபியா ஒரு சுதந்திர நாடு. அந்நாட்டுக்குச் சில வரையறுத்த சட்டதிட்டங்கள் உள்ளன. அச்சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு எம்மால் நிர்ப்பந்திக்க முடியாது. நாம் அப்பெண் விவகாரம் குறித்துக் கருணை காட்டுமாறு அந்நாட்டு அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

இது தொடர்பில் சிறிலங்காவின் வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவும் சவூதிக்கு நேரடியாகச் சென்றது. நாம் சாதகமான பதிலை எதிர்பார்க்கிறோம்.

லிபியாவில் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த ஐவர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது அவை லிபியாவின் சிவில் சட்டங்களை மதித்தே நடந்து கொண்டன. பலம் பொருந்திய நாடுகளே ஒரு சுதந்திர நாட்டின் சட்டத்திற்கு மதித்து நடந்து கொண்டது எமக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு அமைச்சர்களின் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்கக் கூறுவது அரசியல் கட்சிகளில் வெற்றுப் பிரச்சாரமேயாகும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதற்கு அனைத்துலக நிலையில் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை ஏற்றமே காரணமாகும். சிறிலங்காவில் எந்த ஒரு கட்சியும் அரசாங்கத்தை அமைப்பதாக இருந்தால் கூட்டுச் சேர்ந்தே ஆகவேண்டும். சிறிலங்காவினது அரசியல் யதார்த்தம் இதுவே. ஆகையால் அமைச்சரவையைக் குறைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. அது நடைமுறைச் சாத்தியமும் அற்றது.

அமைச்சர்கள் தமது மாதாந்த ஊதியத்தில் 50 விழுக்காட்டை எதிர்வரும் 6 மாதங்களுக்கு குறைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளனர். சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இது ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். சிறிலங்கா அமைச்சுக்களின் செயலாளர்களும் தமது மாதாந்த ஊதியத்தில் 15 விழுக்காட்டை அரசாங்கத்துக்கு வழங்க உள்ளனர். அமைச்சர்களுக்கு வழங்கும் எரிபொருள் செலவும் கூட குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரச நிறுவனங்களின் கூடுதல் செலவீனங்கள் அனைத்தையும் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

puthinam

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு தனிமனிதருக்காக குரல் கொடுக்கும் மேதாவிகள் ஒரு சமுதாயத்தின் இன்னல்களிற்காக குரல் கொடுத்ததாக தெரியவில்லை குறிப்பாக யாழில் ஒரு சில நபர்கள் வில்லங்கதிற்காக மீண்டும் மீண்டும் இதை பிரசுரிப்பத்ல் இருந்து தெரிகிறது. :D

தனி மனிதர்கள் சேரும் போதுதான் அது சமுதாயம் .

சமுதாயத்தில் இருந்து ஒவ்வொருவர் பிரியும் போது அது சூனியம்.

ஒவ்வொரு சதமும் சேர்ந்துதான் ஒரு ரூபாயாகிறது.

ஒவ்வொரு ரூபாயும் சேர்ந்துதான்..........ஆயிரம்..........லட

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
:D யாராவது சவூதி அரசின் மரணதண்டனை வழங்கப்படும் பிரிவின் தொலைபேசி இலக்கம் அல்லது தொலைநகல் இலக்கம் இருந்தால் தாருங்கள்!! கொலைக்கு கொடுக்கப்படும் தண்டனையை உடனே கொடுக்கும்படி வற்புறுத்த!! :D
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "ரிஸானா விவகாரம்"

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தென்மராட்சியில் பெண்மணி சுட்டுக்கொலைசாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் பெரிய அரசடி வீதியில் வெள்ளி மதியம் 2.15 மணியளவில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்மணி மீது உந்துருளியில் சென்ற இளம்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சுட்டதில் அப்பெண்மணி உயிரிளந்துள்ளதாக தெரியவருகிறது.இதன்போது கொல்லப்பட்டவர் 31 அகவையுடைய மகேந்திரன் தாரணி எனத் தெரியவருகிறது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

யாழிலில் குடும்பஸ்தர் சுட்டுப்படுகொலைவெள்ளி மாலை 6.45 மணியளவில் மருந்தகத்திற்கு மருந்துகள் வாங்குவதற்க சென்ற குடும்பஸ்தர் ஒருவரை உந்துருளியில் சென்ற இனம்தெரியாத ஆயுததாரி ஒருவர் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரா கல்லூரிக்கு அருகில் சுட்டுப்படுகொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.இச்சம்பவமானது யாழ்மாநகரசபை வளாகத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர் 34 அகவையுடைய தர்மலிங்கம் சண்முகராஜா எனத்தெரியவருகிறது.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது நீங்கள் எல்லாம் வெளிநாடு தப்பியோடியதால் வந்த நிலை இது. நீங்கள் எல்லோரும் தாயகத்தில் இருந்து போராடி இருந்தால் ஏன் எமக்கு இந்த நிலை?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்ஜசீரா தொலக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மத்தியகிழக்கு நாடுகள் சம்பந்தபட்ட "இலங்கை பெண்கள் பற்றிய விபரம்"

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பஹ்ரெய்ன் (Bahrain) நாட்டில் செல்வி ராசையா கலாமலருக்கும் அவரின் 5 வயது குழந்தை வசந்திக்கும் ஏற்பட்டுள்ள சிக்கல்

Amnesty hope for mother

Gulf Daily News

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்திய கிழக்கு நாடுகளும் இலங்கைப் பணிப் பெண்களும்

சட்டத்தரணி மரினா மன்சூர்

இன்று நம் நாட்டில் எங்கும் பரவலாகப் பேசப்படும் விடயம் சவூதி அரேபிய நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிசானா நபீலைப் பற்றியதே. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் எனப்படும் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதே நிரம்பிய ரிசானா எனப்படும் இவ்விளம் பெண், இன்று சவூதி அரேபிய மண்ணிலே 4 மாதக் குழந்தையின் மரணத்திற்கு காரணமானவர் என்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு சிறைக் கைதியாகி உள்ளார்.

இப்பெண்ணின் பரிதாபக் கதை இலங்கையை மட்டுமன்றி, சர்வதேச நாடுகளையும் உலுக்கி விட்டிருக்கிறது. இப்பெண்ணை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட அதேவேளை, சர்வதேச அமைப்புகள் பலவும் குரல் கொடுக்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக, ஆசிய மனித உரிமைகள் குழுவின் பங்களிப்பு மகத்தானது.

மத்திய கிழக்கு அரபு நாடுகளின் குற்றவியல் சட்டமானது, பிரெஞ்சு சட்டத்தினையும் ஷரிஆ சட்டத்தினையும் அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் கொலை, ஆயுதமேந்திய கொள்ளை, போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட குற்றங்கள் போன்வற்றிற்கு அக்குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது குற்றம் சுமத்தப்பட்டவரே குற்றத்தை ஒப்புக்கொண்டாலோ தீர்ப்பானது மரணதண்டனையே. இச்சட்டத்தின் கீழான தீர்ப்பிற்குட்படுவது இலங்கையர்களுக்கு புதிதல்ல. ஏற்கனவே, இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் சவூதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளுக்குச் சென்றவர்கள் மேற்குறிப்பிட்ட தண்டனைக்கு உள்ளானது யாவரும் அறிந்ததே.

இந்நிலையில், ரிசானா நபீலுக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனைத் தீர்ப்பு இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதென்றால் அதற்குத் காரணங்கள் பல. அவற்றை விரிவாக ஆராய முன் நாம் கேட்க வேண்டிய முக்கியமான கேள்வி, வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தேடிச் செல்லும் எத்தனை ரிசானாக்கள் வெவ்வேறு விதமான துன்பங்களையும் தண்டனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுவே.

ஒவ்வொரு வருடமும் சுமார் இரண்டு இலட்சம் இலங்கையர் மத்திய கிழக்கிற்கு வேலை வாய்ப்புத் தேடிச் செல்கின்றனர். இவர்களில் 60 வீதமானோர் வீட்டுப் பணிப் பெண்கள். இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்பவர்கள் அனைவரும் துன்பம் அனுபவிக்கின்றனர் என்பதல்ல. சிலர் தமது இரண்டு வருட சேவைக்காலத்தின் போது எவ்வித சிரமங்களுக்கோ, துன்புறுத்தலுக்கோ உள்ளாகாது சேவைக்கால சம்பளத்தினையும் மாதா மாதம் பெற்றுக் கொண்டு நலமே நாடு வந்து சேருகின்றனர். இன்னும் சிலர் இரண்டு வருட சேவைக்காலத்திற்குச் சென்றாலும் கூட, தாங்கள் பணிபுரியும் வீட்டுச் சொந்தக்காரர்களின் நம்பிக்கையையும் அபிமானத்தையும் பெற்று பல வருடகாலம் ஒரே வீட்டில் சேவை புரிந்து மிகச் சிறந்த நிலையில் உள்ளனர்.

ஒரு சிலரின் நிலை இவ்வாறிருக்க, மற்றைய சிலரின் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது. மாதக் கணக்காக மாத்திரமன்றி, வருடக் காணக்காக சம்பளம் பெறாதவர்களின் தொகை அதிகம். வீட்டு வேலைகளில் ஏற்படும் சிறு தவறுகளுக்காக வேதனை தரும் தண்டனைகளை வீட்டுச் சொந்தக்காரர்களினால் அனுபவிக்கும் பணிப் பெண்களின் கதை சோகம். இவற்றை எல்லாம் விட பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பெண்களின் நிலையோ சொல்லில் அடங்காதவை.

இவ்வாறான நிலைமைக்கு யார் காரணம்? வறுமையா, அல்லது அவ்வறுமையை விரட்ட வேண்டி திருமணம் முடியாத பெண்களைக்கூட எவ்வித தயக்கமும் இன்றி வேலை தேடி வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் அப்பெண்ணின் குடும்பத்தினரா? அல்லது தங்களின் உழைப்பிற்காக சுயநலமாக செயற்படும் சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களா? அதுவும் இல்லை என்றால், தனது நாட்டுக்கு அதிகளவு வருமானத்தை ஈட்டித்தரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் மூல காரணமான இப்பணியாட்களின் நலனைப் பாதுகாக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசாங்கமா? மேற்கூறப்பட்ட காரணங்கள் அனைத்துமே ஒன்றாக பொறுப்பேற்க வேண்டுமே தவிர, ஒரு தனி நபரையோ, நிறுவனத்தையோ அல்லது அரசாங்கத்தையோ தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்வது முறையல்ல.

மேற்குறிப்பிட்ட காரணங்களில் அடங்குபவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் கடமையை உணர்ந்து அதற்கேற்ப செயற்படுவார்களாயின், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியச் செல்லும் நம் நாட்டுப் பெண்கள் அந்நாடுகளில் முகம் கொடுக்க நேரிடும் பிரச்சினைகள் கணிசமான அளவில் குறைவடையும்.

உதாரணமாக, ஒரு பெண்ணை வெளிநாட்டிற்கு தொழில் புரிய அனுப்பும் போது அப்பெண்ணின் குடும்பத்தினராலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராலும் கருத்திற்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்களில் ஒன்று, அப்பெண்ணின் வயதும் பக்குவத்தன்மையுமாகும். அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வயது இருபத்து இரண்டாக இருந்தாலும் நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை. அறிமுகமே இல்லாத ஒரு தேசத்தில், முன் பின் அறிந்திராத மக்கள் மத்தியில், இதுவரை கேட்டிராத மொழி, பழக்க வழக்கங்களுக்கு நடுவே ஒரு பெண் தொழில்புரியப் போகின்றாள் என்றால் அதற்கு எந்தளவு மனப் பக்குவம் வேண்டும் என்று ஊகிக்க முடியும். இருபத்து இரண்டு வயதில் கூட மனதளவில் பக்குவப்படாத பெண்கள் பலபேர் நம் நாட்டில் இருக்கின்றபோது மிகவும் வயது குறைந்த பெண்களை அவர்களின் வயதைக் கூட்டி பொய்ச் சான்றிதழ் கொடுத்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவைப்பது மிகப் பெரும் தவறாகும். இவ்வாறான மனப்பக்குவத்தைக் கருத்திற்கொண்டுதான் இந்தியா போன்ற நாடுகள் தொழிலுக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் தம் பெண்களின் குறைந்த வயது முப்பத்தைந்து என நிர்ணயித்துள்ளன.

அடுத்ததாக கருத்திற்கொள்ள வேண்டிய விடயம், தொழில் புரியச் செல்லும் நாட்டு மக்களது வாழ்க்கைத் தரம். அபிவிருத்தி அடைந்துவரும் நாடான இலங்கையில் நகரங்களை விட கிராமங்களே அதிகம். இக்கிராமங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களில் இருந்து வெளிநாட்டிற்கு வேலை தேடிச் செல்லும் பெண்களில் பலர் கொழும்பிற்கே ஓரிரு தடவைகள் தான் வந்திருப்பர். அது கூட வெளிநாடு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்காகவே இருக்கும். இப்படிப்பட்ட ஒரு பெண் மத்திய கிழக்கு நாடுகளின் பல மாடிகளைக் கொண்ட மிக விசாலமான ஆடம்பர இல்லங்களுக்கு பணிபுரியச் சென்றதும் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றாள்.

ஓரிரு வாரங்களிலேயே வேலை செய்ய முடியாமல் சோர்ந்து போகின்றனர். இதன் விளைவு அவ்வீட்டுச் சொந்தக்காரர்களின் கோபத்துக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகுதல். இந்நிலைமையைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஒன்று, அந்நாடுகளைப் பற்றியும் அந்நாட்டு மக்களது வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அங்கு பணிபுரியச் செல்வோருக்கு தெளிவான விளக்கத்தை அளித்தல்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியப்போகும் பெண்களுக்கான பயிற்சிநெறி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் அளிக்கப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு வழங்கப்படும் இப்பயிற்சிநெறியின் போது சமையல் முறை, நவீன மின் இயக்கக் கருவிகளின் மூலம் மேற்கொள்ளப்படும் வீட்டுப் பணிகள், அன்றாட வாழ்க்கையில் பிரயோகிக்கும் அரபு வார்த்தைகள் போன்றன பிரதானமாக பயிற்றுவிக்கப்படுகின்றன. இப்பயிற்சி நெறியானது மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். இரண்டு வருட ஒப்பந்தத்தில் பணிபுரியச் செல்லும் இப்பெண்களுக்கு இரண்டு வாரப் பயிற்சி போதுமானதல்ல. பயிற்சிக்காலத்தைக் கூட்டுவதோடு முக்கியமான சில விடயங்கள் இப்பயிற்சி நெறியில் சேர்த்துககொள்ளப்படல் வேண்டும். அவைகளில் ஒன்று, மேற்கூறப்படட் முறையிலான அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறை பற்றிய விளக்கவுரையாகும். இவ்விளக்கமானது திரைக் காட்சிகளின் மூலமான விளக்கமாக இருத்தல் அவசியம். அடுத்ததாக பயிற்சி அளிக்கப்பட வேண்டிய மிக முக்கிய விடயம், தற்பாதுகாப்பினைப் பற்றியதாகும். தொழில்புரிவதற்காகச் செல்லும் நாட்டில் தனது உடலுக்கோ, உயிருக்கோ அல்லது தன் உடைமைகளுக்கோ ஏற்படக்கூடிய தீங்குகள், அவை ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் பற்றிய விரிவான விளக்கமும் அறிவுறுத்தல்களும் பயிற்றுவிக்கப்படல் மிக அவசியமாகும்.

அந்நிய நாட்டில் தனக்கு ஒரு அநீதி இழைக்கப்படும் போது, தான் நாட வேண்டிய ஒரே இடம் அந்நாட்டில் இருக்கும் தனது நாட்டுத் தூதுவராலயம் என்பதனை வெளிநாடு செல்லும் ஒவ்வொருவரும் மனதில் வைத்திருத்தல் வேண்டும்.

அநேகமான மத்திய கிழக்கு நாடுகளில் அங்கு வேலைக்குச் செல்பவர்களின் கடவுச்சீட்டானது அவர்களது தொழில் தருநர்களினால் எடுத்துவைத்துக் கொள்ளப்படுவது வழக்கம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அக்கடவுச்சீட்டின் பிரதி ஒன்றை தன்வசம் வைத்திருப்பது வேலைக்குச் செல்பவர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். கடவுச்சீட்டின் பிரதி மாத்திரமன்றி, தனது தொழில் சம்பந்தமாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களின் பிரதிகளையும் தன்வசம் பாதுகாப்பாக வைத்திருப்பதோடு மாத்திரமல்லாது, தனக்கு ஏதும் தீங்கு அல்லது அநீதி இழைக்கப்பட்டு அதன் காரணமாக அந்நாட்டிலுள்ள தனது தூதுவராலயத்திற்குப் பாதுகாப்பு தேடிச் செல்கையில், மேற்குறிப்பிட்ட பிரதிகளை தன்வசம் எடுத்துச் செல்லல், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத ஆவணங்களாக அமையும்.

தொழில் நிமித்தம் தன் நாடு விட்டு பிறநாடு செல்லும் தொழிலாளியின் நலன்களை அந்நாட்டிலே பாதுகாக்கவென பல சர்வதேச சட்டங்கள் உள்ளன. சர்வதேச தொழிலாளர் ஒன்றியம் (ஐஃ?), சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International)போன்றவை இவற்றிற்காகவே செயற்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பு உயர்சபையின் செயலாளர் நாயகத்தினால் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினெட்டாம் திகதி வரையப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஆவணமானது வெளிநாடுகளுக்கு தொழில்புரியச் செல்பவர்களின் நலனை மாத்திரமல்லாது, அவர்களது குடும்ப அங்கத்தவர் நலனையும் சகல விதத்திலும் பாதுகாப்பதாக அமைந்திருக்கின்றது.

வெளிநாடுகளில் தொழில்புரியும் தன் நாட்டுப் பிரஜைகளுக்கு ஏதேனும் தீங்கு அல்லது அநீதி வேலைபுரியும் நாட்டிலே இழைக்கப்பட்டால் அதற்கெதிராக தன் பிரஜை சார்பில் சட்டரீதியாக பிரதிநிதித்துவப்படுத்துவதற

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.