Jump to content

முகம்மது நபிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியவருக்கு நடவடிக்கை எடுக்க முறைப்பாடு: இல்லாவிடின் போராட்டம்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும்

 முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
 
இன்று (30) சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து இவ்வேண்டுகோளை முன்வைத்தனர்.
 
இதன் போது கருத்து தெரிவித்த அவர்கள்
 
உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவர் பகிர்ந்துள்ளார்.
 
அண்மைக்காலமாக இவர் இனங்களுக்கிடையே குழுப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் பரவலாக மேற்கொண்டுள்ளதை காண முடிகின்றது.இவ்வாறு தான் உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதரான எமது முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி பதியவிட்டுள்ளனர்.
 
இதனால் எமது நாட்டின் சமாதானம் சீரழிவும் மிகப்பெரிய இனக்கலவரம் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது.
 
எனவே இவரை கைது செய்து நாட்டின் இறையாண்மையை பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம் .
 
சிங்கள தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாக செறிந்து வாழும் இந்தநாட்டில் இனக்கலவரம் ஒன்றை உருவாக்க எத்தனித்திருக்கும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவரை நாட்டை சீரழிக்க முனைந்த குற்றத்திற்காக கைது செய்து இலங்கை குடியரசின் சட்டத்தின் படி உயர்ந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க பொலிஸாரும், அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
 
மேலும் இன்று மாலை குறித்த முக நூல் பதிவு தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா , சமூக மேம்பாட்டுக்கான நல்லிணக்க பேரவை தலைவர் எம்.எச்.எம். இப்ராஹிம் ,கல்முனை நல்லிணக்க அமைப்பின் தலைவர் ஏ.சி.எம். கலீலுர் ரஹ்மான் ,உள்ளிட்ட அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள் மேற்கொண்டிருந்தனர்.
 
Link to comment
Share on other sites

 • Replies 66
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

valavan

சைவசமயத்தவர்கள் தமது மதத்தை ஒரு வழிபாடாக மட்டுமே வைத்துக்கொண்டிருக்கிறார்களேயொழிய  வீட்டுக்கு வெளியே அதை தலையில் காவி செல்வதில்லை, நாங்கள் மதத்தை வாழ்க்கையின் ஒரு அங்கமாக பார்க்கிறோமேயொழிய வாழ்க்

தமிழ் சிறி

சைவ சமய  கடவுள்களை,  நாங்கள்...  நீ, வா, போ, தா..... என்று,  நெருங்கிய நண்பர்களுடன்  பழகுவது போல் தான்... நாம்,  பழகுவோம்.  அது ஏன்... இஸ்லாம் சமயத்தில் மட்டும் அப்படி இருக்கு என்று சொன்னாலே.

goshan_che

ஆனால் ஒன்று. குழந்தை திருமணம் இந்துக்கள் செய்யாத ஒன்றும் அல்ல. அல்லது இந்துக்கள் கொலையே செய்யாத காருண்ய ஜீவன்கள் என்பதுமல்ல. வைஸ்ணவம் என்றும் சைவம் என்றும் மாறி, மாறி கொண்டு தீர்த்தார்கள். அ

 • கருத்துக்கள உறவுகள்

குரானில் அல்லா கூறுகின்றான்:

 “நபியே! நீர் உம்முடைய மனைவிமார்களிடம் கூறிவிடும்: “நீங்கள் உலகவாழ்வையும், அதன் அழகையும் விரும்புகிறீர்கள் என்றால், வாருங்கள்! நான் ஏதேனும் சிலவற்றைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை அனுப்பிவிடுகின்றேன்.”

குறிப்பு: இஸ்லாமியர் அல்லாவின் மரியாதை இல்லாமல் அவன் இவன் என்றுதான் சொல்லுவார்கள்🙄

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வாசித்த நூலின் பக்கத்தை பிரதி பண்ணி இணையுங்கள். முழுமையாக பார்க்கலாம். அல்லது இணைய மூலத்தை இணையுங்கள். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

http://www.tamililquran.com/qurandispcmp.php?start=33

يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيٰوةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا فَتَعَالَيْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيْلً

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, வாலி said:

http://www.tamililquran.com/qurandispcmp.php?start=33

يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ اِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيٰوةَ الدُّنْيَا وَزِيْنَتَهَا فَتَعَالَيْنَ اُمَتِّعْكُنَّ وَاُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيْلً

நபியே, உன் திருமணத்தை சொல், இந்த உலக வாழ்க்கை மற்றும் அதன் அலங்காரத்தை நீங்கள் விரும்பினால், நாங்கள் உங்களிடம் வருவோம்.

-நன்றி கூகிள்.-

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நீங்கள் வாசித்த நூலின் பக்கத்தை பிரதி பண்ணி இணையுங்கள். முழுமையாக பார்க்கலாம். அல்லது இணைய மூலத்தை இணையுங்கள். 

சைவ சமய  கடவுள்களை,  நாங்கள்... 
நீ, வா, போ, தா..... என்று,  நெருங்கிய நண்பர்களுடன் 
பழகுவது போல் தான்... நாம்,  பழகுவோம். :)

அது ஏன்... இஸ்லாம் சமயத்தில் மட்டும் அப்படி இருக்கு என்று சொன்னாலே..
உங்களுக்கு, மூக்கு... வேர்க்குது. 🙃

பாலும், தெளிதேனும்....  பாகும், பருப்பும்... இவை நாலும்,

கலந்து...  உனக்கு,  நான் தருவேன்- கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத்  தூமணியே... நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா...

Edited by தமிழ் சிறி
 • Like 5
 • Haha 1
Link to comment
Share on other sites

6 hours ago, colomban said:

மிகப்பெரிய இனக்கலவரம் உருவாகவும் வாய்ப்பிருக்கிறது.

இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஒவ்வொரு இனக்கலவரங்களிலும், பெரும் பொருளீட்டி இலாபம் கண்ட பலர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நாடறியும். ஆகவேதான் இன்னொரு கலவரம் எப்போது ஏற்படும் என்று எதிர்பார்த்து நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.😛 

 • Like 1
 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சைவ சமய  கடவுள்களை,  நாங்கள்... 
நீ, வா, போ, தா..... என்று நெருங்கிய நண்பர்களுகுடன் 
பழகுவது போல் தான் நாம் பழகுவோம். :)
அது ஏன்... இஸ்லாம் சமயத்தில் மட்டும் அப்படி இருக்கு என்று சொன்னாலே..
உங்களுக்கு, மூக்கு வேர்க்குது. 🙃

பாலும், தெளிதேனும்....  பாகும், பருப்பும்... இவை நாலும்,

கலந்து...  உனக்கு,  நான் தருவேன்- கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத்  தூமணியே... நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா...

சைவ சமயத்திலை மட்டும் தான் கடவுள்களை  நீ,நான்,அவன்,இவன்,அவள் இவள்,கோவணத்தான் எண்டு சொல்லி உரிமையோடை கும்பிடேலும் சிறித்தம்பி. 😁

இக்கருத்து ஏனைய மதம் சார்ந்தவர்களை தாக்கும் நோக்கோடு எழுதியது அல்ல.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

சிங்கள தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாக செறிந்து வாழும் இந்தநாட்டில் இனக்கலவரம் ஒன்றை உருவாக்க எத்தனித்திருக்கும் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவரை நாட்டை சீரழிக்க முனைந்த குற்றத்திற்காக கைது செய்து இலங்கை குடியரசின் சட்டத்தின் படி உயர்ந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க பொலிஸாரும், அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

ஓகோ! இவர்கள் குண்டுவெடிப்பின், இக்கலவரத்தின் மூலம்தான் தங்கள் இன ஒற்றுமையை இவ்வளவு காலமும் தமிழருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நாங்கள்தான் இவர்களை பிழையாய் விளங்கிக்கொண்டு விட்டோம்.

முடிஞ்சு விடுகிற நரிக்கூட்டம். அப்போ ரிஷாத் செய்தது சரியென்று அல்லாஹ் சொல்லுகிறாரோ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

சைவ சமயத்திலை மட்டும் தான் கடவுள்களை  நீ,நான்,அவன்,இவன்,அவள் இவள்,கோவணத்தான் எண்டு சொல்லி உரிமையோடை கும்பிடேலும் சிறித்தம்பி. 😁

இக்கருத்து ஏனைய மதம் சார்ந்தவர்களை தாக்கும் நோக்கோடு எழுதியது அல்ல.

குமாரசாமி அண்ணை,  இதுதான்... சைவ சமயத்தின் சிறப்பு அம்சம்.
எமது கடவுள்களை, அவர்கள் வணங்கும் மக்களே....
கோவிலில் நின்று... திட்டித்  தீர்த்து, பேசி விட்டு போவார்கள்.

ஆனால்... மற்ற, மதங்களில் இந்த உரிமை இல்லவே இல்லை.
அப்படி... ஒருத்தன், செய்தால்... இங்கு வந்து... நெஞ்சை  நிமிர்த்தி காட்டட்டும்.

சில்லறை... விசயங்களுக்கு, கத்தி கூப்பாடு போடும்...
இஸ்லாமிய  மதத்தவர் மேல், கடுங் கோபம் வருகின்றது.    

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

ஓகோ! இவர்கள் குண்டுவெடிப்பின், இக்கலவரத்தின் மூலம்தான் தங்கள் இன ஒற்றுமையை இவ்வளவு காலமும் தமிழருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நாங்கள்தான் இவர்களை பிழையாய் விளங்கிக்கொண்டு விட்டோம்.

முடிஞ்சு விடுகிற நரிக்கூட்டம். அப்போ ரிஷாத் செய்தது சரியென்று அல்லாஹ் சொல்லுகிறாரோ?

சிங்களவர்களும், முஸ்லீம் மதத்தவர்களும் கலவரங்கள்,தாக்குதல் மூலம் மட்டுமே தமது ஒற்றுமையை வெளிக்காட்டி வருகின்றனர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குரான் ஓர் கடல். எல்லாருக்கும் எல்லாம் தெரியும் என்று இல்லை. குரானில் தேர்ச்சி பெற்றவர்கள் இமான்கள். நீங்கள் அனுப்பிய அரபு வாக்கியத்தின் கருத்தை இமாம் ஒருவரிடம் கேட்டுவிட்டு அதன் அர்த்தத்தை இங்கு பின்னர் பகிர்ந்து கொள்கின்றேன். 

உங்களை மேதாவிகளாக காட்டி கொள்ளவும், பச்சை புள்ளிகள் வாங்கவும் இஸ்லாம் மதம் பற்றி அறிவிலித்தனமாக கருத்துக்களை பகிர்ந்து துவேசத்தை ஊக்குவிக்காதீர்கள். அன்பே சிவம் என்று கூறுவது சைவம். வணக்கம்.

Edited by நியாயத்தை கதைப்போம்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

குரான் ஓர் கடல். எல்லாருக்கும் எல்லாம் தெரியும் என்று இல்லை. குரானில் தேர் தேர்ச்சி பெற்றவர்கள் இமான்கள். நீங்கள் அனுப்பிய அரபு வாக்கியத்தின் கருத்தை இமாம் ஒருவரிடம் கேட்டுவிட்டு அதன் அர்த்தத்தை இங்கு பின்னர் பகிர்ந்து கொள்கின்றேன். 

உங்களை மேதாவிகளாக காட்டி கொள்ளவும், பச்சை புள்ளிகள் வாங்கவும் இஸ்லாம் மதம் பற்றி அறிவிலித்தனமாக கருத்துக்களை பகிர்ந்து துவேசத்தை ஊக்குவிக்காதீர்கள். அன்பே சிவம் என்று கூறுவது சைவம். வணக்கம்.

இஸ்லாமைப் பற்றிக் கதைத்தால் தாங்கள் ஏன் பொங்குகிறீர்கள்?😁🤔

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

குரான் ஓர் கடல். எல்லாருக்கும் எல்லாம் தெரியும் என்று இல்லை. குரானில் தேர்ச்சி பெற்றவர்கள் இமான்கள். நீங்கள் அனுப்பிய அரபு வாக்கியத்தின் கருத்தை இமாம் ஒருவரிடம் கேட்டுவிட்டு அதன் அர்த்தத்தை இங்கு பின்னர் பகிர்ந்து கொள்கின்றேன். 

உங்களை மேதாவிகளாக காட்டி கொள்ளவும், பச்சை புள்ளிகள் வாங்கவும் இஸ்லாம் மதம் பற்றி அறிவிலித்தனமாக கருத்துக்களை பகிர்ந்து துவேசத்தை ஊக்குவிக்காதீர்கள். அன்பே சிவம் என்று கூறுவது சைவம். வணக்கம்.

இன்றைய உலகில் எங்கு மதத்தின் பெயரால் அதிக கலவரம் நடக்கின்றது?

 • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

சைவ சமயத்திலை மட்டும் தான் கடவுள்களை  நீ,நான்,அவன்,இவன்,அவள் இவள்,கோவணத்தான் எண்டு சொல்லி உரிமையோடை கும்பிடேலும் சிறித்தம்பி. 😁

இக்கருத்து ஏனைய மதம் சார்ந்தவர்களை தாக்கும் நோக்கோடு எழுதியது அல்ல.

சைவசமயத்தவர்கள் தமது மதத்தை ஒரு வழிபாடாக மட்டுமே வைத்துக்கொண்டிருக்கிறார்களேயொழிய  வீட்டுக்கு வெளியே அதை தலையில் காவி செல்வதில்லை,

நாங்கள் மதத்தை வாழ்க்கையின் ஒரு அங்கமாக பார்க்கிறோமேயொழிய வாழ்க்கையே அதுதான் என்று பார்ப்பதில்லை, அதனால்தான் கடவுளை எமக்கு நெருக்கமானவராக ஆக்கிகொண்டு ஒருமையில் அழைக்கிறோம்.எமது மதம் வழிபாட்டு முறைகளை என்னமோ மர்மதேசம்போலவும் அதை விமர்சிப்பவன் தலையை கொய்ய கத்தி துப்பாக்கி வெடிகுண்டுகளுடன் அலைவதில்லை.

பிற மதத்தவருக்கு ருக்கு அவனுக்கு சம்பந்தமில்லா எமது மதம் பற்றி விளக்கம் சொல்லி கடுப்பேத்துவதில்லை, சிவன் அழைக்கிறார், பிள்ளையார் அழைக்கிறார் சொர்க்கத்துக்கு போக என்னவழி அங்கே என்ன எல்லாம் எங்களுக்கு காத்திருக்குது என்று சொல்லி மற்றவர்களை கடுப்பேற்றுவதில்லை.

அதனால்தான் மதம் மாற்ற அலைபவர்கள் சைவம் தவிர்ந்த வேறு எந்த மதத்தவரினதும் வீடேறி அழைப்பு மணியை அழுத்த முடியாது அதற்கான தைரியம் அவர்களிடம் கிடையாது.

இந்து சமயத்தை சேர்ந்த எவரும் பகவத்கீதையில் இத்தனையாவது பக்கத்தில் இப்படி சொல்லியிருக்கு அப்படி சொல்லியிருக்கு என்று  சொல்லி கழுத்தறுப்பதில்லை.

ஆனால் பகவத்கீதையில் அனைத்துமே சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் அதை நாங்கள் சுட்டிக்காட்டி ஆதாரம்காட்டி பேச விளைவதில்லை, ஏனெனில் அனைத்து மத புனித நூல்களிலும் மனிதன் எப்படி வாழவேண்டும் என்று எல்லாமே சொல்லப்பட்டிருக்கு , ஆனால் ...

அங்கே பார்க்கபடவேண்டிய முக்கிய விஷயம் நாம் அதை முழுவதுமாக கடைப்பிடிக்கிறோமா என்பதே?

நிச்சயமாக எந்த மதத்தை சேர்ந்த மனிதனும் அவனது மத புனித நூல்கள் கூறும் வழிபடி நடக்கவே முடியாது , ஏனென்றால் தவறுகளில் சாராம்சம்தான் சாதாரண மனிதன், அப்புறம் எதுக்கு ஆ,,,ஊ... என்றால் மத நூல்களில் பிரிவுகளை சுட்டிக்காட்டி பேசவேண்டும்?.

இஸ்லாமியர்களில் பல பிரிவினர் உலகத்தில் உள்ள அநியாயம் எல்லாம் பண்ணிவிட்டு எதுக்கெடுத்தாலும் குரானில் அது சொல்லியிருக்கு இது சொல்லியிருக்கு  என்று குரானை பற்றி பிற மதத்தவருக்கு விளக்கம் கொடுப்பார்கள்,

அவர்களிடம் கேட்க தோன்றுவதெல்லாம் குரானில் எல்லாம் சொல்லியிருக்குத்தான் ஆனால் நீங்கள் அதுபடி நடக்கிறீர்களா என்பதே கேள்வி, நடக்க முடியவில்லையென்றால் சக மனிதர்களின் முன்பு மதத்தை காவி திரியாதீர்கள் மனிதர்களாக மட்டுமே உலவுங்கள்.

 • Like 4
 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மதத்தின் பெயரால்  எனையவர்களுக்கு கலவரமோ, ஆர்ப்பாட்டமோ ,அழிவுகளோ, துன்புறுத்தல்களோ செய்யாத இனம் தமிழினம் மட்டுமே.

Link to comment
Share on other sites

19 minutes ago, valavan said:

சைவசமயத்தவர்கள் தமது மதத்தை ஒரு வழிபாடாக மட்டுமே வைத்துக்கொண்டிருக்கிறார்களேயொழிய  வீட்டுக்கு வெளியே அதை தலையில் காவி செல்வதில்லை,

அப்படியா? மசூதிகளை இடித்து இராமர் கோயில் கட்டுபவர்களும், மாட்டிறைச்சி கேட்டான் என்று அடித்து கொல்பவர்களும் சிவனை வழிபடுவதில்லையா? இந்தியா வீட்டுக்கு வெளியேதான் மதவெறியில் கலவரபூமியாகிறது.

14 minutes ago, குமாரசாமி said:

மதத்தின் பெயரால்  எனையவர்களுக்கு கலவரமோ, ஆர்ப்பாட்டமோ ,அழிவுகளோ, துன்புறுத்தல்களோ செய்யாத இனம் தமிழினம் மட்டுமே.

இங்கேயும் அங்கேயுமாக இலங்கையில் நிலைமை மாறிவருகிறது. இந்தியத்தமிழருக்கு மதவெறி குறைவு - பிராமணர்களுக்கு நன்றி 😃

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

இங்கேயும் அங்கேயுமாக இலங்கையில் நிலைமை மாறிவருகிறது. இந்தியத்தமிழருக்கு மதவெறி குறைவு - பிராமணர்களுக்கு நன்றி 😃

இங்கேயும் அங்கேயுமாக வருகின்றது உண்மைதான். அன்றைய காலத்திலும் புலிகள் காலத்திலும் மத பிளவுகள் இருக்கவேயில்லை. எல்லாம் சரி சமமாகவே பார்க்கப்பட்டது. தெருவோர தெய்வ சிலைகள் உட்பட......

என்று புலியெதிர்ப்பு  எனும் போர்வையில் தமிழர்கள் தங்களுக்குள் பிரிந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்களோ அன்று முதல் அவர்களுக்குள் மதம் என்பதையும் தம் பேசு பொருளாக்கி செல்வச்செழிப்போடு வாழ நினைக்கின்றார்கள்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

22 minutes ago, கற்பகதரு said:

அப்படியா? மசூதிகளை இடித்து இராமர் கோயில் கட்டுபவர்களும், மாட்டிறைச்சி கேட்டான் என்று அடித்து கொல்பவர்களும் சிவனை வழிபடுவதில்லையா? இந்தியா வீட்டுக்கு வெளியேதான் மதவெறியில் கலவரபூமியாகிறது.

இந்தியாவில் மட்டுமா உங்களுக்கு அநியாயம் நடக்குதுனு புலம்புகிறீர்கள்?

உலகில் ஏதாவது ஒரு நாட்டை  நல்லநாடு  நல்ல மக்கள் என்று முஸ்லீம்கள் சொல்லியிருக்கிறார்களா? அல்லது அடைக்கலம் தந்த வாழும் நாடுகளுக்கு நன்றியுணர்வு, விசுவாசத்துடன் இருந்திருக்கிறார்களா?

எப்போபார் இன்னும் பத்து வருசத்தில் அவர்கள் வாழும் நாடுகள் இஸ்லாம் நாடாக மாறும், யா அல்லாஹ்,ஜோ அல்லாஹ் என்று கலவரம் செய்தால் உங்கள்மீதான வெறுப்புணர்வு அந்தந்த நாடுகளில் அதிகரிப்பது தவிர்க்கவே முடியாத ஒன்று அதற்கான பொறுப்பை நீங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

உலகம் முழுவதும் எத்தனை இனங்கள் இருக்கிறது மதங்கள் இருக்கிறது, ஏன் முஸ்லீம்கள் மட்டும் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா சீனா இந்தியா இஸ்ரேல் உட்பட உலகின் அனைத்து நாடுகளும் எங்களுக்கு அநியாயம் செய்கிறார்கள் என்று  புலம்புகிறார்கள்?

எல்லோரும் உங்களுக்கு கெட்டவர்களாக தெரிந்தால் நீங்கள்தான் கெட்டவர் என்று அர்த்தம்,

என் மதம்தான் உயர்ந்த மதம், என் மதம்தான் உலகத்தை ஆளும், என் மதத்தை தவிர்ந்தவர்கள் காபிர்கள்,கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற வக்கிர சிந்தனைகளுடன் அலைந்தால் உங்களுக்கான பதிலடியும் மிக மூர்க்கமானதாகவே பிறநாடுகளால், இனங்களால் மேற்கொள்ளப்படும்,

தவறுகள் எங்கேயிருந்து ஆரம்பிக்கின்றன என்று தேட தொடங்குங்கள், அதுக்கும் இஞ்ச பாருங்கோ இதில இப்படி சொல்லியிருக்கு எண்டுகொண்டு குரானின் பிரிவுகளை தூக்கிகொண்டு வராதீர்கள்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

குரான் ஓர் கடல். எல்லாருக்கும் எல்லாம் தெரியும் என்று இல்லை. குரானில் தேர்ச்சி பெற்றவர்கள் இமான்கள். நீங்கள் அனுப்பிய அரபு வாக்கியத்தின் கருத்தை இமாம் ஒருவரிடம் கேட்டுவிட்டு அதன் அர்த்தத்தை இங்கு பின்னர் பகிர்ந்து கொள்கின்றேன். 

உங்களை மேதாவிகளாக காட்டி கொள்ளவும், பச்சை புள்ளிகள் வாங்கவும் இஸ்லாம் மதம் பற்றி அறிவிலித்தனமாக கருத்துக்களை பகிர்ந்து துவேசத்தை ஊக்குவிக்காதீர்கள். அன்பே சிவம் என்று கூறுவது சைவம். வணக்கம்.

இப்போ... நீங்கள், யார்... என்பது புரிந்து விட்டது.
இமான்கள்  என்றால் யார்? 
அவர்கள்,  எந்தப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள்?
அவர்களுக்கு... மட்டும், வித்தியாசமான.. கொம்பு முளைத்திருக்கிறதா?
.
.
ரிஷாத் பதியுதீன் வீட்டில்,... சிறுமி  ஹிஷாலினியின் கொலையை பற்றி...
யாழ். களத்தில்  ஐந்து தலைப்புகள் உள்ளது.
அதில்... உங்கள் கருத்தை காணவில்லையே... ஏன்?
நீங்கள்...  எந்த மதம் என்பதனை.... 
உங்கள், சுயரூபமே ... காட்டிக் கொடுத்து விட்டது. 

அதனால்... தான், முஸ்லீம்களை, உலகமே வெறுக்கின்றது.

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

28 minutes ago, valavan said:

என் மதம்தான் உயர்ந்த மதம், என் மதம்தான் உலகத்தை ஆளும், என் மதத்தை தவிர்ந்தவர்கள் காபிர்கள்,கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற வக்கிர சிந்தனைகளுடன் அலைந்தால் உங்களுக்கான பதிலடியும் மிக மூர்க்கமானதாகவே பிறநாடுகளால், இனங்களால் மேற்கொள்ளப்படும்,

சைவர்களும் இப்படி “மிக மூர்க்கமானதாகவே” இருக்கிறார்கள் என்கிறீர்கள், இல்லையா?

1 hour ago, valavan said:

சைவசமயத்தவர்கள் தமது மதத்தை ஒரு வழிபாடாக மட்டுமே வைத்துக்கொண்டிருக்கிறார்களேயொழிய  வீட்டுக்கு வெளியே அதை தலையில் காவி செல்வதில்லை,

நீங்கள் மேலே எழுதியுள்ளது பொய் என்கிறீர்கள், அப்படித்தானே?

Link to comment
Share on other sites

7 hours ago, நன்னிச் சோழன் said:

இஸ்லாமைப் பற்றிக் கதைத்தால் தாங்கள் ஏன் பொங்குகிறீர்கள்?😁🤔

அது தானே? ஈழத்தமிழர் கூண்டோடு அழிந்தால் ஏன் ஐரோப்பிய யூனியனும், ஜஸ்மின் சூக்காவும், அமெரிக்காவும் கனடாவும் பொங்க வேண்டும்? என்ன உறவு? அந்த கிறீஸ்தவ நாடுகள் இந்த சைவத்தமிழனை எக்கேடு கெட்டும் போ என்று விட்டது நியாயம்தானே, இல்லையா? சைவர்களும் தமிழர்களும் வாழும் இந்தியாவே திரும்பியும் பார்க்காத போது இந்த கிறீஸ்தவர்களுக்கு சைவர்களை காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கவில்லை, இல்லையா நன்னிச்சோழன்? புரிகிறதா ஏன் உலகநாடுகள் ஈழத்தமிழனை அழியவிட்டிருக்கிறது என்று? மற்றவர்களை பற்றி உங்களுக்கு அக்கறையில்லாததால், அவர்களும் உங்களை திரும்பியும் பார்க்கமாட்டார்கள். அழிவது ஒன்றே உங்களுக்கு உள்ள எதிர்காலம்.

இறுதிப்போரின் பின்னர் விடுதலைப்புலிகளின் பல விமானங்கள் எரித்திரியாவில் தரித்து நின்றதாகவும், அவற்றை கைப்பற்ற இலங்கை அரசு ஆட்களை அனுப்பியபோது எரித்திரியா அனுமதி வழங்கவில்லை என்றும் அன்றைய பாதுகாப்பு செயலாளர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். எரித்திரியா முஸ்லிம் நாடு. முஸ்லிம்கள் பற்றிய உங்கள் நிலைப்பாட்டை விபரமாக எழுதுங்கள். அதை மொழிபெயர்த்து எரித்திரியாவக்கு வழங்கி, மீண்டும் ஒருமுறை இலங்கை அரசு விமானங்களை பற்றி கேட்டுப்பார்க்கலாம். தலைவர் மாமா உங்களுக்கு முஸ்லிம் உலகம் பற்றி சொல்லித்தந்ததை எரித்திரியா அறியவேண்டாமா?

Edited by கற்பகதரு
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கற்பகதரு said:

எரித்திரியா முஸ்லிம் நாடு. முஸ்லிம்கள் பற்றிய உங்கள் நிலைப்பாட்டை விபரமாக எழுதுங்கள். அதை மொழிபெயர்த்து எரித்திரியாவக்கு வழங்கி, மீண்டும் ஒருமுறை இலங்கை அரசு விமானங்களை பற்றி கேட்டுப்பார்க்கலாம்.

அண்ணை,

எரித்ரியா முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு இல்லை. 56 வீதமானவர்கள் கிறீஸ்த்தவர்கள், 40 வீதத்திற்கும் குறைவானவர்களே முஸ்லீம்கள். ஆனால், அவர்கள் கிறீஸ்த்தவர்கள் என்றோ முஸ்லீம்கள் என்றோ வேறுபட்டு அடிபட்டது கிடையாது. எதியோப்பிய ஆக்கிரமிப்பிற்கெதிராக ஒன்றாகத்தான் எதிர்கொண்டு போரிட்டு வென்றார்கள். புலிகளுக்கும் எரித்ரியர்களுக்கும் தொடர்பு வந்தமைக்கான காரணம் மதம் அல்ல. புலிகளின் போராட்டத்தை அவர்கள் தார்மீக ரீதியில் ஆதரித்தார்கள். அதனாலேயே இறுதியுத்த காலத்தில் புலிகளின் ஆயுதங்கள் அங்கு செல்வதென்று ஏற்பாடாகியது.

எரித்ரியர்களை முஸ்லீம்கள் என்று நீங்கள் பார்க்கவியலாது. எரித்ரிய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் எதிரிக்கெதிராகப் போராடினார்கள். புலிகளில் பெண்போராளிகள் உருவானதுகூட எரித்ரிய விடுதலைப் போராட்டத்தினைப் பின்பற்றியே என்று நான் நினைக்கிறேன். பெண்களைச் சமமாக குணவியல்பு முஸ்லீம் அடிப்படைவாத நாடுகளில் இல்லை. 

 • Like 2
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கற்பகதரு said:

அது தானே? ஈழத்தமிழர் கூண்டோடு அழிந்தால் ஏன் ஐரோப்பிய யூனியனும், ஜஸ்மின் சூக்காவும், அமெரிக்காவும் கனடாவும் பொங்க வேண்டும்? என்ன உறவு? அந்த கிறீஸ்தவ நாடுகள் இந்த சைவத்தமிழனை எக்கேடு கெட்டும் போ என்று விட்டது நியாயம்தானே, இல்லையா? சைவர்களும் தமிழர்களும் வாழும் இந்தியாவே திரும்பியும் பார்க்காத போது இந்த கிறீஸ்தவர்களுக்கு சைவர்களை காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கவில்லை

அண்ணை,

தமிழர்கள் வேறு மதம் என்பதால்த்தான் கிறீஸ்த்தவ மேற்குலகு கண்டும் காணாமல் இருந்தது என்று நீங்களே கூறிவிட்டு, இறுதியில் இந்துவான இந்தியாவே கைவிட்டது என்கிறீர்கள்? அப்படியானால் நடந்த இனவழிப்பிற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லையென்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்? 

உலக மதங்களில் இஸ்லாம் மதச் சகிப்புத்தன்மையற்ற மதம். கடவுளை நிந்தனை செய்தால் கொலையென்பதை இன்றுவரை செய்துவரும் மதம். மற்றைய மதங்களில் ஒரு குறிப்பிட்ட அளவினரைத் தவிர மத நிந்தனைக்காக மற்றையவர்களை கொல்லும் தன்மை கிடையாது. இங்கு நடந்ததாகக் கூறப்படும் மத நிந்தனையும், அதற்கான எதிர்வினையும் தேவையற்றவை. இரண்டுமே அரசியல் நோக்கங்கள் கொண்டவை. 

நியாயத்தைக் கதைப்போம் என்பவர் தனது இயற்பெயரில் வந்து பின்னர் தனது புதுப்பெயருடன் எழுதுகிறார். மதம் என்பது அவரைப்பொறுத்தவரையில் எந்தளவிற்கு முக்கியமானதென்பது இத்திரியின்மூலம் வெளிப்படுவதுடன் அவரது அடையாளத்தையும் காட்டிவிட்டது. சோழன் சொல்லவிழைந்ததும் இதைத்தான் என்று நினைக்கிறேன்.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நான் நபிகள் நாயகம் பற்றி பேஸ்புக்கில் இழிவாக பதிவு போடவே இல்லை.... கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் ஓர் உன்னதமான அற்புதமான இறைதுதாதர்.

என்னை இனவாதியாக சித்தரித்து அரசியலிலிருந்து ஓரங்கட்ட மேற்கொள்ளப்பட்ட அரசியல் சூழ்ச்சியே

இது. எனக்கும் நபிகள் நாயகம் பற்றிய பதிவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் ஊடக மாநாட்டில் தெரிவித்தார்.

இந்த ஊடக மாநாடு நேற்று (30) பிற்பகல் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அவர் மேலும் கூறியதாவது:

கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் ஓர் உன்னதமான அற்புதமான இறைதுதாதர். அவரை அவமதித்ததாக என்னைத் தொடர்புபடுத்தி முகநூலில் சில பிரகிருதிகள் படுகேவலமாக விமர்சித்து வருகின்றனர்.

போலி முகநூல் பதிவை எனது பெயரில் பதிவிட்டு தூற்ற ஆரம்பித்துள்ளனர். அதையிட்டு கவலைப்படவில்லை.

ஆனால் இறைதூதரின் பெயரைப் பயன்படுத்தி தூற்றுவதையிட்டே கவலையடைகிறேன். வெறும் அரசியலுக்காக அந்த மாமனிதரை கொச்சைப்படுத்த வேண்டாம். எந்த மதமானாலும் எந்த இறைவனாலும் பொதுவெளியில் இவ்வாறு செய்யக் கூடாது.

சுவாமி விபுலாநந்தர் பிறந்த மண்ணில் பிறந்த நாங்கள் என்றும் ஏனைய மதங்களை மதித்து நடப்பவர்கள். மனிதத்தை போற்றுபவர்கள். இன ஐக்கியத்துடன் செயற்படுபவர்கள்.

இன, மதம் கடந்து சேவையாற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவன் நான்.

எனவே தயவுசெய்து யாரும் அரசியலுக்காக தெய்வங்களை இழுத்து விமர்சிப்பதை நிறுத்துங்கள்.

blob:https://www.facebook.com/d47e36cb-7460-43d7-9d69-f5a77ad56340

Link to comment
Share on other sites