Jump to content

பச்சை மிளகாய் - ஜூட் பிரகாஷ்

Recommended Posts

பச்சை மிளகாய்
 
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே போல தான் , சில உணவுப் பண்டங்களிற்குப் பச்சை மிளகாய் சேர்க்காவிட்டால் அந்தப் பண்டத்தையும் குப்பையில் தான் போட வேண்டும்.
 
பச்சை மிளகாய் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது CIMA காலத்தில் நண்பனான ரஜீவ் தான்.
 
சொன்னா நம்பமாட்டீங்க, கொஞ்சமாக பச்சை மிளகாய் வாங்கிட்டு வாடா என்று ரஜீவின் அம்மா சொன்னதைக் கேட்டுக் கொண்டு விடு விடுவென கடைக்குப் போன ரஜீவ் வாங்கி வந்தது இரண்டு கிலோ பச்சை மிளகாய்.
 
என்னுடைய வாழ்க்கையில் மட்டும் இல்லை, உங்கள் வாழ்க்கையிலும் வீட்டுத் தேவைக்கு இரண்டு கிலோ பச்சை மிளகாய் வாங்கிக் கொண்டு வந்த ஒரே விண்ணன் இவராகத்தான் இருப்பார்.
 
பச்சை மிளகாயின் அருமை எங்களில் பலருக்கு தெரிவதில்லை. அதனால் பச்சை மிளகாயை எங்கள் சாப்பாடுகளில் நாங்கள் சேர்ப்பது மிகவும் குறைவாக இருக்கிறது.
 
டின் மீன் சம்பலுக்கு பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டும். சிரிலங்காவில் இ்ருந்து வரும் Jack Mackarel டின் மீனை, அப்படியே பச்சையாக கொட்டி, பச்சை மிளகாயையும் வெங்காயத்தையும் நறு நறுவென நறுக்கிப் போட்டு குழைத்து, பாணோடோ ரொட்டியோடோ சாப்பிட்டால் சும்மா அந்த மாதிரி இருக்கும்.
 
முட்டை பொரியலிற்கும் பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டும். என்னதான் முட்டையோடு இணைந்து வதங்கும் வெங்காயம், முட்டைப் பொரியலைத் தூக்கி தந்தாலும், பச்சை மிளகாய் கடி படாத முட்டைப் பொரியல் கடைசி வரை திறமான முட்டைப் பொரியலாக இருக்கவே முடியாது.
 
பச்சை மிளகாய் எங்கட பண்டைய தமிழர் சமையலில் பயன்படுத்தப்படாத ஒரு திரவியம் என்று அண்ணர் ஒருத்தர் கூறினார்.
 
"அதடாப்பா.. பச்சை மிளகாய் அந்தக் காலத்துல மெக்சிகோவில் இருந்து மொரோக்கோவுக்கால மதுரைக்கு வந்து இங்கால மாந்தோட்டத்தில இறங்கினது” இன்று தென் அமெரிக்காவிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் பச்சை மிளகாய் பயணித்த கதையின் வரலாற்றை அண்ணர் சுருக்கமாக கூறினார்.
 
சீனர்களின் பட்டுப் பாதைக்கு (silk road) எதிர்த் திசையில் நடந்து கொண்டிருந்த பண்டைய உலக வர்த்தகப் பாதையைப் பற்றி அறியும் ஆவலையும் பச்சை மிளகாய் கதை சொன்ன அண்ணர் தூண்டி விட்டார்.
பால் சொதிக்கும் பச்சை மிளகாய் கட்டாயம் இருக்க வேண்டும். வெள்ளை வெளீரென்ற சொதியில், பச்சை மிளகாய் மிதக்கும் அழகே தனி அழகுதான்.
 
பச்சை மிளகாய் போட்ட சொதியோடு, இடியப்பத்தைக் குழைத்துச் சாப்பிடும் போது, வாய்க்குள் வெடிக்கும் பச்சை மிளகாய்க் காரம் தரும் கிக்கை அனுபவியாதவன் எல்லாம் மனிசனே இல்லை.
 
பச்சை மிளகாய் கடிபட வேண்டிய இன்னொரு திரவம் மோர். வெக்கை நாட்களில் உடம்பிற்கு இதமாக மட மடவென மோர் குடிக்கும் போது, மோரோடு சேர்த்து வாய்க்குள் விழும் பச்சை மிளகாய்க்கும் தனிப் பெறுமதி இருக்கும்.
மரவெள்ளிக் கிழங்கை அடுப்பில் வேக வைத்து, கொஞ்சமாக தேங்காய்ப் பாலும் விட்டு, கட்டிக் கறியாக வைக்கும் போது, கடைசியில் உஞ்சூண்டு பச்சை மிளகாய் சேர்த்து விட்டால், மரவெள்ளியின் சுவை வேற.. வேற… வேற ரேஞ்சிற்கு போய் விடும்.
பழஞ் சோறு சாப்பிடுவதென்றால் கட்டாயம் கடிப்பதற்கு பச்சை மிளகாய் இருந்தே ஆக வேண்டும். ஒரு கையில் பச்சை மிளகாயை கடித்துக் கொண்டு, மறுகையில பழஞ் சோற்று உருண்டையை எடுத்து சாப்பிட்ட யுத்த கால நினைவுகளை யாராலும் மறக்கவே முடியாது.
 
பச்சை மிளகாய்க்கு மகுடம் சூட்டுவது அரைத்த பச்சை மிளகாய் சம்பல் தான். பச்சை மிளகாய் சம்பல் என்றால் கட்டாயம் அரைத்த சம்பலாகவே இருக்க வேண்டும், இடிக்கிற வேலைக்கு எல்லாம் போகக் கூடாது.
ஊரில் ஆட்டுக்கல்லில் அரைத்த பச்சை மிளகாய் சம்பலின் சுவையே ஒரு தனி சுவை தான். ஆட்டுக்கல் சம்பலின் தனித்துவமான சுவையை எந்த திறமான கிரைன்டரோ மிக்ஸியோ தரவே முடியாது.
சுடச்சுட சுட்ட உளுந்து வடை யோடு அரைத்த பச்சை மிளகாய் சம்பலைத் தொட்டுச் சாப்பிட்டால், சொர்க்கம் பக்கத்தில் வந்து இருந்து இளையராஜா பாட்டு பாடிக் கொண்டிருக்கும்.
 
பச்சை மிளகாய் ஒரு சுவையூட்டி மட்டுமல்ல, அதனுள் நிறைய ஊட்டச்சத்துக்களும் இருப்பதாக கிட்டடியில் எங்கோ வாசித்தேன்.
 
உடல் எடையைக் குறைக்கவல்ல சமாச்சாரங்கள் எல்லாம் இந்த உறைப்பான பச்சை மிளகாய்க்குள் இருப்பது, உடல் எடையை குறைக்க விரும்பும் அன்பர்களிற்கு நிட்சயம் இனிப்பான செய்தியாகவே இருக்கும்.
பச்சை மிளகாய்: உறைப்பு உணவு விரும்பிகளின் உண்மையான உறவுக்காரன்.
 
Jude Prakash

https://www.facebook.com/jude.prakash.92

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fjude.prakash.92%2Fposts%2F10159646412284136&show_text=true&width=500" width="500" height="275" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் கெனியக்காரனின்  சிறிய சைஸ் பச்சை மிளகாய் இல்லாவிட்டால் சாப்பாடு இறங்காது டொமினிக்கன் பச்சைமிளகாய் என்ற பெயரில் வரும் வஸ்துவை அண்டுவதேயில்லை .

இப்ப இங்கு UK சூப்பர் மார்க்கெட் எல்லாம் ஆப்ரிக்காவில் கெனியா போன்ற இடங்களில்  சொந்த நிலத்தில் விளைவித்த பொருள்கள் சென்ஸ்பரியில் தான் பச்சை மிளகாய் வேறு எங்கும் வாங்குவது கிடையாது பருப்பு பால்கறிக்கு நான்குக்கு மேல் போட்டால் உறைப்பு தாங்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, நிழலி said:

இப்பயும் கிலோகணக்கில்தானோ ?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இங்கும் கெனியக்காரனின்  சிறிய சைஸ் பச்சை மிளகாய் இல்லாவிட்டால் சாப்பாடு இறங்காது டொமினிக்கன் பச்சைமிளகாய் என்ற பெயரில் வரும் வஸ்துவை அண்டுவதேயில்லை .

இப்ப இங்கு UK சூப்பர் மார்க்கெட் எல்லாம் ஆப்ரிக்காவில் கெனியா போன்ற இடங்களில்  சொந்த நிலத்தில் விளைவித்த பொருள்கள் சென்ஸ்பரியில் தான் பச்சை மிளகாய் வேறு எங்கும் வாங்குவது கிடையாது பருப்பு பால்கறிக்கு நான்குக்கு மேல் போட்டால் உறைப்பு தாங்க முடியாது. 

பச்சை மிளகாயில், இத்தனை விதமா?
நாங்கள் எல்லாம்... தமிழ் கடைகளில் வாங்கும்,
சிலோன் பச்சை  மிளகாயை.. பருப்பு கறிக்குள்  போட்டும்,
உறைப்பு... காணாது என்று, ஏங்கும் ஆட்கள்.

கெனியாக் காரனின்... பச்சை  மிளகாய்  படம் இருந்தால், இணைத்து விடுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பெருமாள் said:

இங்கும் கெனியக்காரனின்  சிறிய சைஸ் பச்சை மிளகாய் இல்லாவிட்டால் சாப்பாடு இறங்காது

இதென்ன புதுக்கதையாய் கிடக்கு.....கெனியன் பச்சை மிளகாய்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

கெனியாக் காரனின்... பச்சை  மிளகாய்  படம் இருந்தால், இணைத்து விடுங்களேன்.

Sainsbury&#39;s Finger Chillies 80g | Sainsbury&#39;s

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

Sainsbury&#39;s Finger Chillies 80g | Sainsbury&#39;s

பட இணைப்பிற்கு.... நன்றி பெருமாள். :)
இங்கு... இப்படியான படங்களைப் போட்டு,
மிகக் கடுமையான உறைப்பு... என்று போட்டிருப்பார்கள்.
அதை.. வாங்கி, கறிக்குள்  போட்டால்... இனிக்குது. :grin:

ஒவ்வொரு நாட்டிலும்,  
சமைக்கிற தண்ணியிலும்... வித்தியாசம் இருக்கும் போலை கிடக்குது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

உது எங்கடை ஊர் கொச்சிக்காய் சிறித்தம்பி...:grin:

இங்கிலாந்தில் ஆசியர்  அதிகம் அதனால் சந்தையும் பெரியது பாரிய சூப்பர்மார்கெட்களில் நம்ம ஊர் மிளகாய்த்தூள் தொடக்கம் மைசூர் பருப்பு வரை அடுக்கி வைத்து இருப்பார்கள் அதே போல் நம்ம ஊர் வட்டகத்தரி முதல் கொண்டு பச்சை மிளகாய் வரை தங்களின் சொந்த பார்ம்களில் விளைவித்து இங்கு கொண்டுவந்து விற்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

Sainsbury&#39;s Finger Chillies 80g | Sainsbury&#39;s

உது எங்கடை ஊர் கொச்சிக்காய் சிறித்தம்பி...:grin:

போனவருடம்  கலர் மிளகாயே  இருக்கு என்று கொரனோ  நேரம் தலையில் கட்டி விட்டவர்களும் உண்டு .

சாமி உங்கள் அளவுக்கு அனுபவசாலி அல்ல நீங்க எல்லாம் மிளகாய் தோட்டத்தில் டிகிரி முடித்தவர்கள் கொசுறு இலங்கை விற்பனை அம்பாந்தோட்டைக்கு முதலே உள்ளது இங்குள்ள பேமஸ் மிளகாய் தூள் க்கு உரிய மல்லி கூட பல்கெரியாவில் இருந்துதான் போகுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

Jude Prakash

அட இந்த மனுசனும் எழுதுறாரோ, அது சரி அந்த ரெண்டு கிலோ வெங்காயம்  சாரி மிளகாய் வாங்கியது.எங்கட ரசீவனோ 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு லா சப்பலில் எல்லாவிதமான ப. மிளகாயும் வாங்கலாம்......எனக்கும் எந்த உணவோடும் ப . மிளகாய் வேணும்.......!

http://cdn.shopify.com/s/files/1/1270/2601/products/Glen_Seeds_Heirloom_Chillies_-_Jamaican_Red_1_grande.jpg?v=1481104470

மேலும் இந்த ஆபிரிக்கன் மிளகாய் சரியான உறைப்பு......இதில் இரண்டு மிளகாயோடு உள்ளி 5 பல்லு, 3 மே . கரண்டி ஒலிவ் ஒயில் ,புளி ஒரு சிறு நெல்லிக்காய் அளவு (கரைக்கக் கூடாது), அளவான உப்பும்  சேர்த்து மைய அரைத்து ஒரு சிறிய போத்தலில் வைத்து இருக்கிறேன். தேவையான போது ஒரு அரை தே .கரண்டி  எடுத்து தொட்டுக்கொண்டு சாப்பிட காரம் சிரசில் அடிக்கும்.....!

இந்த மிளகாய் வெட்டும்போது கவனம் நாலு நாகம் கொத்தினதுபோல் கை எரியும் நாள் முழுதும்........!  😎

Jamaican Red Scotch Bonnet - Capsicum Chinense - Chilli Pepper - 10 Se –  Seeds for Africa

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

இந்த ஆபிரிக்கன் மிளகாய் சரியான உறைப்பு......

இந்த மிளகாய் வெட்டும்போது கவனம் நாலு நாகம் கொத்தினதுபோல் கை எரியும் நாள் முழுதும்........!  😎

Jamaican Red Scotch Bonnet - Capsicum Chinense - Chilli Pepper - 10 Se –  Seeds for Africa

இதனை ஜமேக்கன் மிளகாய்- jamaican chilli என்பார்கள்.இதை அரைத்தாலே மூக்கு வாயெல்லாம் எமக்கு மட்டுமல்ல பக்கத்தில் நிற்பவர்களுகும் ஒழுகும்.

உலகத்திலேயே அதிக உறைப்பு தின்பவர்கள் நாங்கள்தான் என்று ஒருகாலம் நினைத்து கொண்டிருந்தேன். ஜமேக்கன் காரர் மேலே சுவியண்ணா சொன்ன மிளகாயுடன் தாய்லாந்து பச்சை மிளகாயையும் கலந்து..

x8400000120-jpg-pagespeed-ic-vk3h-CFFj9-

இடித்து சம்பலாக்கி அதில் உப்பு மிளகு எல்லாம் சேர்த்து  சோஸ் ஒன்று செய்வார்கள் , பொதுவாக தாய்லாந்து மிளகாயே உறைப்பு எண்டால் உறைப்பு உங்கவீட்டு எங்க வீட்டு உறைப்பு இல்ல தாங்க முடியாது,

அதை சிக்கன் விங்சுடன் தொட்டுக்கொள்வது மட்டுமல்லாமல் அள்ளி அள்ளி வேறு தின்பார்கள், ரெஸ்ரோரண்டில் வேலை பார்த்தபோது கண்ணால் கண்ட அனுபவம், அந்த சோசுக்கு பெயரே சூசைட் சோஸ்.suicide sauce.

நம்மில் யாரும் அதில் ஒரு கரண்டி சாப்பிட்டாலே எத்தனை வயசு காரராக இருந்தாலும் ஒரு கிழமைக்கு டயப்பர்-diappers கட்டிக்கொண்டுதான் அலையவேண்டி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

உண்மைதான்

தற்பொழுது எமது இளைய தலைமுறையிடம்  இதை  சாப்பிட்டு காட்டுவதனூடாக 

எங்களைவிட தாங்கள்  உறைப்பை  சாப்பிடுவதாக  காட்டமுனைகிறார்கள்

தாய்லாந்து  உணவகத்தில்  இவ்வாறு ஒருவர் அள்ளி  வாயில்  போட்டு சாப்பிட்டு காட்டியபோது

நான்  வரல  இந்த  வயித்துவெடி  விளையாட்டுக்கு என்று விட்டேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிளகாய் இல்லாத கறிகள், சம்பல் எல்லாம் குப்பைக்குள்தான் போடவேண்டும்.

மிளகாய் அனுபவங்கள் சில இருக்கு.

சின்ன வயதில் எங்கள் மிளகாய்த் தோட்டத்திற்குள்தான் ஒளித்துவிளையாடுவது. பொயிலைத் தோட்டங்களில் ஒளித்துவிளையாடி இலை ஒடிந்து, முதுகு ஒடிய அடிவாங்கியதால் அந்தப் பக்கம் போவதில்லை. மிளகாய்ச் செடியில் இருக்கும் பச்சை மிளகாய் கடித்துச் சாப்பிட்டுப் பழகிவிட்டது. அது “பாலுடன்” இருப்பதால் அதிகம் உறைக்காது.

12 hours ago, நிழலி said:

கொஞ்சமாக பச்சை மிளகாய் வாங்கிட்டு வாடா என்று ரஜீவின் அம்மா சொன்னதைக் கேட்டுக் கொண்டு விடு விடுவென கடைக்குப் போன ரஜீவ் வாங்கி வந்தது இரண்டு கிலோ பச்சை மிளகாய்.

என்னுடைய அனுபவம் இதுக்கு எதிர்.  ஒருநாள் அம்மா மத்தியானச் சமையலில் இருந்தபோது பச்சை மிளகாய் இல்லை என்று என்னை தோட்டத்திற்கு ஓடிப்போய் நாலு பச்சை மிளகாய் ஆய்ந்து வா என்று சொன்னார். நானும் ஓடிப்போய் ஆய்ந்து வந்தேன். எண்ணி நாலு மிளகாய் மட்டும்தான்.😃  சொன்னதைச் செம்மையாகச் செய்ததற்கு பாராட்டு கிடைக்கும் என்று பார்த்தால் திட்டுத்தான் கிடைத்தது!☹️

-

நாங்கள் மிளகாய் சாப்பிடுவதில் சூரர் என்று வேலைத்தளத்தில் தெரியும். என்னுடன் வேலை செய்த ஐரிஸ்காரன் தனது மாமியார் ரினிடாட் நாகா சில்லி வீட்டில் வளர்க்கின்றார், வேண்டுமா என்று கேட்டான். நானும் சரி ரினிடாட் நாகாவையும் ரேஸ்ற் பண்ணிப் பார்ப்போம், கொண்டுவா என்றேன்.  மத்தியானம் லஞ்ச்சுக்கு போனவன் பத்து மிளகாய் கொண்டுவந்தான். நானும் எனது சூரத்தனத்தைக் காட்ட ஒன்றை கடித்து விழுங்காமல் வாயில் கொஞ்ச நேரம் வைத்திருந்தேன். சில நிமிடங்களில் இருதயம் வேகமாக அடித்து, கண்ணில் இருந்து கண்ணீர் வரத்தொடங்கியது. இன்னும் நின்றால் மானம் போய்விடும் என்று கார்ப் பார்க்கிற்கு போனேன். ஆனால் எச்சில் கூட அடுத்த அரை மணிநேரம் விழுங்கமுடியவில்லை. வாய், நாக்கு, தொண்டை எல்லாம் நெருப்பாக எரிந்தது. ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர்தான் ஓரளவு நிலைகொள்ளக்கூடியதாக இருந்தது. அந்த நாகா சில்லி (சுவி ஐயா சொன்னமாதிரி அவை கொத்தும் நாகங்கள்தான்) சமைக்கும்போது பாதி பாதியகாத்தான் பல நாட்கள் பாவித்தேன்!

spacer.png

-

வெஸ்ற் இண்டியன் சில்லி நம்ம கறிகளுக்கு ஒத்துவராது என்பதுதான் எனது பார்வை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூத் ஜோலோகியா: உணவாக சமைத்து சாப்பிட்டால் 'பேய் பிடித்ததை போல' உணர வைக்கும் இந்திய மிளகாய்

  • சரோஜ் சிங்
  • பிபிசி இந்தி செய்தியாளர்
5 மணி நேரங்களுக்கு முன்னர்
மிளகாய் சாபிடுவது போன்ற மாதிரிப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த சம்பவம் 2016 அக்டோபர் மாதம், அதாவது சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்தது.

அமெரிக்காவில் 47 வயதான ஒருவர் பர்கர் சாப்பிட்டார். பர்கரின் சிறப்பு என்னவென்றால், அதில் 'பூத் ஜோலோகியா' என்கிற மிளகாயின் அரவை பூசப்பட்டிருந்தது.

அவர் பர்கரை சாப்பிட்டவுடன், வயிறு மற்றும் மார்பில் ஏற்பட்ட வலியால் தரையில் உருள ஆரம்பித்தார். அவருக்கு வாந்தியும் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உணவுக் குழாயில் ஓர் அங்குலம் அளவுக்கு துளை இருப்பதை மருத்துவர்கள் கண்டனர்.

இந்த சம்பவம் 'தி ஜர்னல் ஆஃப் எமஜென்சி மெடிசின்' என்ற அவசர சிகிச்சை தொடர்பான மருத்துவ சஞ்சிகையிலும், மற்ற ஊடகங்களிலும் வெளியானது.

'பூத் ஜோலோகியா' என்பது ஒரு வகையான மிளகாய். இது வடகிழக்கு இந்தியாவில் விளைகிறது.

இது கிங் மிர்ச்சா (மிளகாய்), ராஜா மிர்ச்சா, நாகா மிர்ச்சா, கோஸ்ட் பெப்பர் (Ghost Pepper) என பல பெயர்களால் அறியப்படுகிறது.

காரத்தில் இதற்கு நிகர் வேறு எதுவுமே இல்லை என்பதால், இது கிங் மிர்ச்சா என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதுதான் மிளகாயின் ராஜா.

இப்போது நாகாலாந்தில் இது அதிக அளவில் பயிரிடப்படுவதால் நாகா மிர்ச்சா என்றும் அழைக்கப்படுகிறது.

பூத் ஜோலோகியா

பட மூலாதாரம்,TWITTER/PIYUSH GOYAL

கோஸ்ட் பெப்பர் அல்லது பூத் ஜோலோகியா என்கிற பெயர் எதற்காக அளிக்கப்பட்டுள்ளது என்றால், அதை சாப்பிட்ட பிறகு, உங்கள் உடலில் பேய் நுழைந்தது போல் கிறுகிறுத்துப்போகுமாம். ஆகையால்தான் இந்த பெயராம்.

இந்த மிளகாயின் பெயர்கள் தொடர்பாக உள்ளூர் மக்கள் சொன்ன விவரங்கள் இவை.

ஆனால் 47 வயதான அமெரிக்கருக்கு என்ன நேர்ந்தது என்பதிலிருந்து , இந்த மிளகாயின் காரத்தன்மைக்கு நிகரில்லை என்று நீங்கள் யூகித்திருக்க முடியும்.

உலகின் மிகவும் காரமான ஐந்து மிளகாய்களில் பூத் ஜோலோகியாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவத்தை இப்போது ஏன் குறிப்பிட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

முதன்முறையாக, நாகாலாந்தில் இருந்து (பறிக்கப்பட்ட நிலையில்) இந்த மிளகாய் இப்போது லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் முதல் தொகுப்பு புதன்கிழமை இந்திய அரசால் அனுப்பப்பட்டது. வெளிநாடுகளுக்கு இது தூள் வடிவில் மட்டுமே முன்பு அனுப்பப்பட்டது.

இந்தத் தகவலை பிரதமர் நரேந்திர மோதியே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்ந்துகொண்ட பிரதமர், 'பூத் ஜோலோகியா'வை ருசித்தவர்களுக்கு மட்டுமே அதன் காரம் பற்றித்தெரியும்.'என்று குறிப்பிட்டுள்ளார்.

பூத் ஜோலோகியாவின் வரலாறு

பூத் ஜோலோகியா

பட மூலாதாரம்,TWITTER/PIYUSH GOYAL

போர்ச்சுகீசியர்கள் தென் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு மிளகாய் கொண்டு வந்ததாக பொதுவாக நம்பப்படுகிறது.

ஆனால் அவர்கள் வருகைக்கு முன்பிருந்தே நாகாலாந்தில் இந்த மிளகாய் இருப்பதால், அது கட்டுக்கதை என நிரூபணமாகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் புஷ்பேஷ் பந்த், உணவு குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

"போர்ச்சுகீசியர்கள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1498இல் இந்தியாவில் கேரளாவை அடைந்து பின்னர் கோவாவில் குடியேறினர்.

பின்னர் இந்தியாவில் அவர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அந்தப் பகுதிகளுக்கெல்லாம் மிளகாய் பரவியது. ஆனால் இந்தியாவின் வடகிழக்கு பகுதியை சென்றடைவது அந்த நேரத்தில் மிகவும் கடினமாக ஒன்றாக இருந்தது. ஆகவே அவர்கள் இந்த மிளகாயுடன் அங்கு சென்றிருக்க வாய்ப்பில்லை."

"போர்ச்சுகீசியர்கள் வருவதற்கு முன்பே இந்தியாவில் காட்டுமிளகாய் அதாவது ராஜா மிர்ச்சா வளர்ந்திருக்கும் என தாவரவியல் வல்லுநர்கள் இன்று ஒருமனதாக தெரிவிக்கின்றனர்," என பிபிசியுடனான உரையாடலில் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், 'பூத் ஜோலோகியா' அதாவது 'கிங் மிர்ச்சா' இந்தியாவின் பழமையான மிளகாய் இனமாகும். ஆனால் இது குறித்து பழைய வரலாற்று புத்தகங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இதற்குப் பின்னால் உள்ள காரணத்தை விளக்கும் புஷ்பேஷ் பந்த், "வடகிழக்கு மாநிலங்களுடனான இந்தியாவின் தொடர்பு முன்பு மிகவும் குறைவாக இருந்தது.

நாகாலாந்து அல்லது வேறு எந்த வடகிழக்கு மாநிலங்களின் நாட்டுப்புற பாடல்களிலும் இது குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் அது அங்குள்ள மக்களின் வாழ்வில் மிகவும் பொதுவான ஒன்றாக இருந்தது," என சுட்டிக்காட்டினார்.

மிளகாயின் புவியியல்

மிளகாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிளகாயை ஆங்கிலத்தில் 'சில்லி' என்று அழைக்கிறார்கள், இது ஒரு மெக்சிக மொழிச் சொல், அதாவது இதன் பொருள் 'பெரிய கேப்சிகம்.'

மிளகாயின் தாவரப்பெயர் 'கேப்சிகம் ஏனம்' (capsicum annuum). பச்சை மிளகாயில், வைட்டமின் ஏ, பி மற்றும் சி ஆகியவை போதுமான அளவில் காணப்படுகின்றன.

இது தவிர, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் இதில் ஏராளமாக உள்ளன. மிளகாயின் வீரியத்திற்கு, அதில் காணப்படும் அல்கலாய்டு ரசாயனமான 'கேப்சைசின்' (ஒலியோரெசின்) தான் காரணம். மிளகாய் பழுக்கும்போது 'கேப்சாண்டின்' காரணமாக சிவப்பு நிறம் ஏற்படுகிறது.

இந்தியா உலகின் மிகப்பெரிய மிளகாய் உற்பத்தியாளர் மட்டுமல்ல, மிகப்பெரிய நுகர்வோர் நாடுகளில் ஒன்றாகும்.

இந்தியாவில் மிளகாய் பல மாநிலங்களில் ஆண்டு முழுவதும் வளர்க்கப்படுகிறது. இதற்காக, 20 முதல் 30 டிகிரி வெப்பநிலை தேவைப்படுகிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வகை மிளகாய்கள் மிகவும் பிரபலமானவை.

இப்போது இந்தப்பட்டியலில் நாகாலாந்து மற்றும் அசாமின் பெயரும் இணைந்துள்ளன.

'ராஜா மிர்ச்சா' நான்கு முதல் ஐந்து அங்குல நீளம் கொண்டது. பச்சை தவிர, சிவப்பு மற்றும் சாக்லேட் நிறத்திலும் உள்ளன. அவை உணவில் மசாலாவாகவும், ஊறுகாய்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மிளகாய் போட்டு சமைக்கப்படும் அசைவ உணவு, மிகவும் சுவையானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இது வடகிழக்கு பிராந்தியங்களில் 'சாஸ்கள் ' தயாரிப்பதிலும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்திய சந்தையில் அதன் விலை கிலோவுக்கு சுமார் 300 ரூபாய் ஆகும். ஆனால் லண்டன் சந்தையில் இது கிலோ 600 ரூபாய்க்கு விற்கப்படும்.

இது தற்போது நாகாலாந்து மற்றும் அசாமில் சிறிய அளவில் வளர்க்கப்படுகிறது, ஆனால் ஏற்றுமதி தொடங்கியதும் உள்ளூர் மக்கள் அதை அதிக அளவில் வளர்ப்பார்கள் என வேளாண் அமைச்சக அதிகாரிகள் கருதுகின்றனர். இதன் காரணமாக, இந்திய அரசு அதன் ஏற்றுமதியில் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த மிளகாய் எவ்வளவு காரமானது?

மிளகாய் சாப்பிடும் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மிளகாயின் காரத்தன்மையை அளக்க ஒரு அளவுகோல் உள்ளது. இந்த அளவு, ஸ்கோவில் ஹீட் யூனிட் (SHU) என்று அழைக்கப்படுகிறது. இந்த அளவீடு, அமெரிக்க மருந்தாளர் வில்பர் ஸ்கோவிலின் பெயரால் அறியப்படுகிறது.

மிளகாயில் உள்ள 'கேப்சைசின்' அடிப்படையில், மிளகாய் எவ்வளவு காரமாக இருக்கிறது என்று முடிவு செய்யப்படுகிறது.

இந்த யூனிட் அளவீட்டில் ராஜா மிர்ச்சா 1 மில்லியன் SHU யூனிட் ஆகும். உலகின் மிக அதிக காரமான மிளகாயின் SHU யூனிட் 2 மில்லியனுக்கும் அதிகம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகெங்கிலும் உள்ள மிகவும் காரமான ஐந்து மிளகாய்களில் 'ராஜா மிர்ச்சா' ஐந்தாவது இடத்தில் உள்ளது.

மிளகாயின் காரத்தில் முதல் இடத்தில் ப்யூர் கேப்சைசின் உள்ளது. இரண்டாவது இடத்தில் - ஸ்டாண்டர்ட் பெப்பர் ஸ்ப்ரே, மூன்றாவது இடத்தில் கரோலினா ரீப்பர் மற்றும் நான்காவது இடத்தில் டிரினிடாட் மோருகா ஸ்கார்பியனும் உள்ளன என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் பிபிசிக்கு அளித்த தகவல் தெரிவிக்கிறது.

இந்திய வீடுகளில் பொதுவாக எத்தனை சிவப்பு மிளகாய் பயன்படுத்தப்படுகிறதோ அந்த அளவிற்கு ராஜா மிர்ச்சா அல்லது மேலே குறிப்பிட்டுள்ள வேறு எந்த மிளகாயையும் பயன்படுத்த முடியாது. இந்த மிளகாயின் ஒரு சிறிய துண்டே உணவில் சேர்க்கப்படுகிறது. இதன் காரணமாக உணவின் சுவை மற்றும் நறுமணம் அதிகரிக்கும் என்று. புஷ்பேஷ் பந்த் குறிப்பிட்டார்.

மிளகாய் மீது உலக மக்களின் பிரியம்

இதுவரை நீங்கள் ராஜா மிளகாயின் கதையை தெரிந்துகொண்டீர்கள். பார்க்கப்போனால், உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் மிளகாயை விரும்புகிறார்கள். இந்திய உணவில் மஞ்சள் மற்றும் மிளகாய் ஆகிய இரண்டுமே பெரும்பாலான காய்கறிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் ஒரு நபர் ஆண்டில் சராசரியாக எத்தனை மிளகாய் சாப்பிடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மிளகாய் சாப்பிடும் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மதிப்பீட்டின்படி, 2018 ஆம் ஆண்டில், ஒவ்வொரு நபரும் சராசரியாக ஐந்து கிலோ மிளகாய் சாப்பிடுகிறார்கள். இந்த புள்ளிவிவரங்கள் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான இன்டெக்ஸ் பாக்ஸிலிருந்து வந்தவை.

சில நாடுகளில் மிளகாய் மேலும் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. துருக்கியில், ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 86.5 கிராம் மிளகாய் உட்கொள்கிறார் அதாவது உலகிலேயே அதிக அளவு மிளகாய் இங்கு உண்ணப்படுகிறது.

மெக்சிகோ அதன் காரமான உணவுக்கு பிரபலமானது என்றாலும், மெக்சிகோவை விட துருக்கியில் அதிக மிளகாய் சாப்பிடப்படுகிறது.

மெக்சிகோவில் ஒரு நபர் ஒரு நாளைக்கு சராசரியாக 50.95 கிராம் மிளகாய் சாப்பிடுகிறார்.

இவை தவிர, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகள் மிளகாயைப் பயன்படுத்துவதில் முன்னணியில் உள்ளன.

மறுபுறம், ஸ்வீடன், ஃபின்லாந்து, நார்வே போன்ற நாடுகளில் மிளகாயின் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளன.

https://www.bbc.com/tamil/india-58031847

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

இங்கு லா சப்பலில் எல்லாவிதமான ப. மிளகாயும் வாங்கலாம்......எனக்கும் எந்த உணவோடும் ப . மிளகாய் வேணும்.......!

http://cdn.shopify.com/s/files/1/1270/2601/products/Glen_Seeds_Heirloom_Chillies_-_Jamaican_Red_1_grande.jpg?v=1481104470

மேலும் இந்த ஆபிரிக்கன் மிளகாய் சரியான உறைப்பு......இதில் இரண்டு மிளகாயோடு உள்ளி 5 பல்லு, 3 மே . கரண்டி ஒலிவ் ஒயில் ,புளி ஒரு சிறு நெல்லிக்காய் அளவு (கரைக்கக் கூடாது), அளவான உப்பும்  சேர்த்து மைய அரைத்து ஒரு சிறிய போத்தலில் வைத்து இருக்கிறேன். தேவையான போது ஒரு அரை தே .கரண்டி  எடுத்து தொட்டுக்கொண்டு சாப்பிட காரம் சிரசில் அடிக்கும்.....!

இந்த மிளகாய் வெட்டும்போது கவனம் நாலு நாகம் கொத்தினதுபோல் கை எரியும் நாள் முழுதும்........!  😎

Jamaican Red Scotch Bonnet - Capsicum Chinense - Chilli Pepper - 10 Se –  Seeds for Africa

நானும் ஒரு வெள்ளைக்கு நாங்கள் எல்லாம் உறைப்பில்லாமல் சாப்பிடவே மாட்டமென்று கதைவிட, அவன் தன்ர வீட்டில வளர்த்த இந்த மிளகாயை கொண்டு வந்து தந்து இதை சுவைத்து பார் என்றான், நானும் வாயில ஒரு கடிதான், கண்ணால் கண்ணீர் ஆறா ஓட தொடங்கிவிட்டது, அவன் சிரித்த சிரிப்புக்கு அளவேயில்லை😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் முன்னம் நாங்கள்தான் உறைப்பு சாப்பிடிறதுல சூரர் எண்டுதான் விறைப்பா இருந்தனான்.

ஒருநாள் ஒரு டிவி நிகழ்சியில் உலகின் உறைப்பான உணவுகளை டேஸ்ட் பண்ணும் நிகழ்ச்சி பார்த்ததில் இரு என்ர கர்வம் எல்லாம் கரைஞ்சு போச்சு🤣.

ஆனால் இங்க பலர் நேரடியாவே அனுபவப்பட்டு இருக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

. நானும் எனது சூரத்தனத்தைக் காட்ட ஒன்றை கடித்து விழுங்காமல் வாயில் கொஞ்ச நேரம் வைத்திருந்தேன். சில நிமிடங்களில் இருதயம் வேகமாக அடித்து, கண்ணில் இருந்து கண்ணீர் வரத்தொடங்கியது. இன்னும் நின்றால் மானம் போய்விடும் என்று கார்ப் பார்க்கிற்கு போனேன். ஆனால் எச்சில் கூட அடுத்த அரை மணிநேரம் விழுங்கமுடியவில்லை. வாய், நாக்கு, தொண்டை எல்லாம் நெருப்பாக எரிந்தது. ஒரு மணித்தியாலத்திற்குப் பின்னர்தான் ஓரளவு நிலைகொள்ளக்கூடியதாக இருந்தது. அந்த நாகா சில்லி (சுவி ஐயா சொன்னமாதிரி அவை கொத்தும் நாகங்கள்தான்) சமைக்கும்போது பாதி பாதியகாத்தான் பல நாட்கள் பாவித்தேன்!

spacer.png

-

வெஸ்ற் இண்டியன் சில்லி நம்ம கறிகளுக்கு ஒத்துவராது என்பதுதான் எனது பார்வை.

முத்தா போகும் எரிந்திருக்குமே.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் நான் சொல்லி இருக்கிறேன் அரை தே .கரண்டி எடுத்து சும்மா தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்........அதுவும் நூடில்ஸ், அவித்த மரவள்ளி கிழங்கு  மற்றும் குஷ் குஷ் சுடன் சாப்பிட சூப்பராய் இருக்கும்.......!   😎

நானும் ஒரு குரூப்பில் ஆபிரிக்கனுடன் வேலை செய்தபோதுதான் இதை சாப்பிடவும் மற்றும் செய்முறையையும் அறிந்து கொண்டேன்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு காலத்திலை உறைப்பு சாப்பிடுறதிலை விண்ணன். ஆனால் இப்ப ஏலாது.மனம் அங்கலாய்த்தாலும் உடம்பு ஓம் படுதில்லை. 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோர் மிளகாய் வத்தல்.

இங்கு  எனக்குத் தெரிந்த தமிழர் ஒருவர்...
மிளகாய் பொரிக்க  முதல், அதனை மிளாகாய்த் தூளில்... 
போட்டு, பிரட்டி எடுத்து விட்டுத்தான் பொரித்து சாப்பிடுகின்றவர். :grin:

Link to comment
Share on other sites

On 31/7/2021 at 00:55, நிழலி said:

பச்சை மிளகாயின் அருமை எங்களில் பலருக்கு தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மோர் மிளகாய் வத்தல்.

இங்கு  எனக்குத் தெரிந்த தமிழர் ஒருவர்...
மிளகாய் பொரிக்க  முதல், அதனை மிளாகாய்த் தூளில்... 
போட்டு, பிரட்டி எடுத்து விட்டுத்தான் பொரித்து சாப்பிடுகின்றவர். :grin:

அந்த உங்களுக்கு தெரிந்த ஒருவர் பெயர் ப,பா வரிசையில் வருமா சிறித்தம்பி? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அந்த உங்களுக்கு தெரிந்த ஒருவர் பெயர் ப,பா வரிசையில் வருமா சிறித்தம்பி? 😁

ஓம் குமாரசாமி அண்ணை. அவரின் பெயர் பிரபா. 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.