Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வடக்கில் அசத்தும் ஈ பி டி பி யின் "சொர்ணா அக்காக்கள்"


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகத்திற்குத் திரும்பிவிட்டதாகக் கூறிக்கொண்டு வடக்கில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் அரச துணைராணுவக்குழு

தாம் ஜனநாயக வழிக்குத் திரும்பிவிட்டோம் என்று கூறிக்கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டுவரும் ஈ பி டி பி துணைராணுவக் குழுவினரின் இன்னொரு அட்டூழியம் யாழ்ப்பாணத்தில் அண்மையில் அரங்கேறியிருக்கிறது. நடந்த அக்கிரமத்தினைத் தடுக்க துணைராணுவக் குழுவின் தலைமையும் பொலீஸாரும் முயல்வது அப்பட்டமாகத் தெரியும் இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.

இருவாரங்களுக்கு முன்னர்  யாழ்ப்பாணம் கண்ணபுரம் பகுதியில் புறாக்களை வளர்க்கும் இரு வீடுகளுக்கிடையே நடந்த சம்பவம் ஒன்றில், ஒரு வீட்டினரால் வளர்க்கப்பட்ட சில புறாக்கள் இரண்டாவது வீட்டில்ப் போய் தங்க ஆரம்பித்திருக்கின்றன.

இதனையடுத்து இப்புறாக்களுக்கான உரிமைப்பாடும், இப்புறாக்கள் தாமாகவே சென்றனவா அல்லது களவாடப்பட்டனவா என்கிற சர்ச்சையும் கிளம்பியதையடுத்து ஒரு வீட்டிலிருந்து 6 நபர்கள் மற்றைய வீட்டிற்குச் சென்று அங்கிருந்த 3 பேரைத் தாக்கிவிட்டு தப்பியோடியிருக்கின்றனர். இதில் சிக்கல் என்னவென்றால், தாக்கப்பட்ட மூவரும் வடக்கில் இயங்கிவரும் அரச துணைராணுவக் குழுவான ஈ பி டி பி யின் உறுப்பினர்கள் என்பதும், அதிலொருவர் அத்துணை ராணுவக்குழுவின் இணைச் செயலாளர்களில் ஒருவரான "சொர்ணா அக்கா" என்று மக்களால் அச்சப்பட்டு அழைக்கப்படும் லலிதா என்பதும் குறிப்பிடத் தக்கது.

இதனையடுத்து, முதலாவது வீட்டில் வசித்துவந்த 20 வயது இளைஞரை, பிரச்சினையைச் சுமூகமாக பேசித் தீர்க்கலாம் வா என்று அழைத்த லலிதாவும் அவரது துணைராணுவக் குழுவின்  ஆதரவாளர்களும் நடந்த தவறுக்கு  மன்னிப்புக் கேட்டால் உன்னை விட்டுவிடுகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். இதன்படி அவர்களுடன் பேசச் சென்ற 20 வயது சுகந்தன் எனும் இளைஞரை கடுமையாகத் தாக்கத் தொடங்கிய லலிதாவும் அவரது ஆதரவாளர்களும் ஏற்கனவே தாம் கரைத்துவைத்திருந்த மிளகாய்த்தூள் நீரை அவரின் கண்களில் ஊற்றிச் சித்திரவதை செய்திருக்கின்றனர். அதில் ஒருவர் சுகந்தன் தலை முடியையும் சவரம் செய்திருக்கிறார்.

தொடர்ந்தும் துணைராணுவக் குழு பெண்களால் தாக்கப்பட்ட அந்த இளைஞரை காப்பற்ற துணியாது பலரும் திகைத்துப்போய் நிற்க இத்தாக்குதல் தொடர்ந்திருக்கிறது. துணைராணுவக் குழுவினரின் அதிகாரமும், குற்றங்களில் இருந்து விலக்களிப்பும் தமக்கு பாதுகாப்புத் தரும் என்கிற ஆணவத்தில் இந்தப் பெண்கள் குழு மிகவும் வெளிப்படையாகவே இத்தாக்குதலினை நடத்தியிருப்பதுடன், தாம் தாக்குவதையும் பெருமையாக  ஒளிப்படமும் எடுத்திருக்கிறது.

தமிழக சினிமாவான தூள் படத்தில் அரசியல் ரெளடியாக வந்து கொலைகளை நடத்தும் படிப்பறிவற்ற காட்டுமிராண்டிப் பெண் சொர்ணா அக்காவைப் போன்று ஈ பி டி பி துணைராணுவக்குழுவின் பெண்கள் பிரிவும் செயற்பட்டுவருவதனையடுத்து இவர்களை "சொர்ணா அக்காக்கள்" என்று யாழ்ப்பாணத்தில் மக்கள் அழைக்கத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.

நீதித்துறையினதும், காவல்த்துறையினதும் ஆதரவினைப் பெற்றுக்கொண்டு அட்டூழியங்களில் ஈடுபட்டுவரும் இந்தத் துணைராணுவக் குழுவின் பெண்கள் பிரிவு தமது தாக்குதலை பெருமையுடன் சமூகவலைத் தளங்களிலும் பிரச்சாரப்படுத்தியிருக்கிறது. 

தன்மீது நடத்தப்பட்ட அநாகரீகமான தாக்குதலினையடுத்து மனமுடைந்துபோன  சுகந்தன் எனும் அந்த இளைஞர் தனது பிறந்த தினமான ஆடி 27 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

ஆனால், அவர் கொரோணாவினால் உயிரிழந்தார் என்று வைத்திய அறிக்கையினைத் தயாரித்த துணைராணுவக் குழு, அவசர அவசரமாக அவரின் உடலினை தகனமும் செய்திருக்கிறது.

சுகந்தனின் இறப்பினால் ஆத்திரமடைந்திருக்கும்  அவரது உறவினர்களும் நண்பர்களும், அவரின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லையென்றும், அவர்கள் வெளிப்படையாகவே தரவேற்றியிருக்கும் ஒளிப்படங்கள் சாட்சியமாக இருக்கும்பொழுதும், அவர்கள் இதுவரையில் கைதுசெய்யப்படாமலிருப்பது ஏன் என்று கேள்வியெழுப்பியிருக்கின்றனர். 


பலர் பார்த்திருக்க நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது பலராலும் பல கோணங்களில்பதிவுசெய்யப்பட்டபோதும், ஒருவர்கூட இந்த துணைராணுவக் குழு பெண்கள் பிரிவுக்கு எதிராகச் சாட்சி சொல்ல முன்வரவில்லையென்றும், தற்போது சமூக வலைத்தளங்களில் இணைக்கப்பட்டுவந்த இந்த ஒளிப்படங்களை பொலீஸார்  அகற்றி, சாட்சிகளை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

சுகந்தனின் நண்பர்கள், உறவுகளின் தொடர்ச்சியான அழுத்தங்களையடுத்து வேறு வழியின்றி அந்த 6 சொர்ணா அக்காக்களையும் கைதுசெய்த பொலீஸார், டக்கிளஸின் தலையீட்டினையடுத்து உடனடியாகவே விடுதலைசெய்திருப்பதாகவும் தெரியவருகிறது. 

https://www.colombotelegraph.com/index.php/the-epdps-sorna-accahs-precipitate-a-suicide/

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்று அப்பவே சொல்லிட்டாங்கண்ணே. ஒட்டுக்குழு ஒட்டுக்குழு தான். இதுகள் திருந்த வாய்ப்பே இல்லை. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்று அப்பவே சொல்லிட்டாங்கண்ணே. ஒட்டுக்குழு ஒட்டுக்குழு தான். இதுகள் திருந்த வாய்ப்பே இல்லை. 

ஆயுதப்போரட்டம் என்ற சிறுபிள்ளை வேளாண்மையில் வீடுவந்து சேர்ந்ததொன்று இதுதான்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கற்பகதரு said:

ஆயுதப்போரட்டம் என்ற சிறுபிள்ளை வேளாண்மையில் வீடுவந்து சேர்ந்ததொன்று இதுதான்.

ஆயுதப்போராட்டம் மவுனித்து 10 வருடத்துக்கு மேலே நீங்கள்  எப்ப கோமாவில் இருந்து எழும்ப போகிறீர்கள் ?

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

ஆயுதப்போராட்டம் மவுனித்து 10 வருடத்துக்கு மேலே நீங்கள்  எப்ப கோமாவில் இருந்து எழும்ப போகிறீர்கள் ?

 

அவர் முள்ளிவாய்க்காலின்  மகிழ்ச்சியுடன்  காணாமல்  போனவர்  தான் இன்று  வந்திருக்கிறார்

இன்று  என்ன  மகிழ்ச்சியோ  பார்க்கலாம்????

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பெருமாள் said:

ஆயுதப்போராட்டம் மவுனித்து 10 வருடத்துக்கு மேலே நீங்கள்  எப்ப கோமாவில் இருந்து எழும்ப போகிறீர்கள் ?

 

ஆயுதப்போரட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் அழிந்து கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு அவர்கள் பற்றி துளியும் அக்கறையில்லை என்று தெரிகிறது. ஆயுதப்போராட்டத்தில் மற்றவர்களை பலிகொடுத்து உங்களுக்கு தேவையானதை பெற்றுகொண்டதுடன் உங்கள் தேவை நிறைவேறிற்று, இல்லையா?

23 minutes ago, விசுகு said:

அவர் முள்ளிவாய்க்காலின்  மகிழ்ச்சியுடன்  காணாமல்  போனவர்  தான் இன்று  வந்திருக்கிறார்

இன்று  என்ன  மகிழ்ச்சியோ  பார்க்கலாம்????

 

முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் உங்கள் பங்களிப்பை வரலாறு மன்னிக்காது. கருணாவையும் கொண்டுதிரிந்தவர் நீங்கள் என்பதை மறக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கற்பகதரு said:

 

முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் உங்கள் பங்களிப்பை வரலாறு மன்னிக்காது. கருணாவையும் கொண்டுதிரிந்தவர் நீங்கள் என்பதை மறக்காதீர்கள்.

முள்ளிவாய்க்கால் படுகொலையா??

நாங்க  வாங்கிக்கட்டி

காட்டிக்குடுத்து  நீங்க சந்தோசப்பட்ட  இடமில்லையா???

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

முள்ளிவாய்க்கால் படுகொலையா??

நாங்க  வாங்கிக்கட்டி

காட்டிக்குடுத்து  நீங்க சந்தோசப்பட்ட  இடமில்லையா???

விடுதலை பெற்று தருகிறோம் என்று எத்தனை அப்பாவிகளை, குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என்றும் பாராமல் கொலைக்களத்தில் உங்கள் கனவுகளுக்காக பலிகொடுத்திருக்கிறீர்கள்? அதைப்பற்றி சிறுதும் குற்ற உணர்வின்றியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவகையிலும் உதவும் நோக்கமில்லாமலும் அதே பழைய குரூர மிருகமனப்பான்மையுடன் இருக்கும் உங்களைப் போன்றவர்களில் எவரும்  இரக்கப்படப்போவதில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கற்பகதரு said:

விடுதலை பெற்று தருகிறோம் என்று எத்தனை அப்பாவிகளை, குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என்றும் பாராமல் கொலைக்களத்தில் உங்கள் கனவுகளுக்காக பலிகொடுத்திருக்கிறீர்கள்? அதைப்பற்றி சிறுதும் குற்ற உணர்வின்றியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவகையிலும் உதவும் நோக்கமில்லாமலும் அதே பழைய குரூர மிருகமனப்பான்மையுடன் இருக்கும் உங்களைப் போன்றவர்களில் எவரும்  இரக்கப்படப்போவதில்லை.

 

அந்த நேரம்  புலிகளுடன் நின்று  நயவஞ்சகமாக  முதுகில்  குத்தி காட்டிக்கொடுத்தவர் தாங்கள்

உங்கள்  போன்ற துரோகிகள்  தான்  அந்த  மக்களின்  இழப்புக்கு முழுமுழுப்பொறுப்பும்

அதில் உங்களின்  பங்கும்  உண்டு

நான்  அன்றும்  இன்றும் எனது  வருமானத்தில் ஒரு  பகுதியை அந்த  மக்களின்  வாழ்வாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும்  கொடுத்துக்கொண்டிருப்பவன்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, கற்பகதரு said:

ஆயுதப்போரட்டம் என்ற சிறுபிள்ளை வேளாண்மையில் வீடுவந்து சேர்ந்ததொன்று இதுதான்.

அப்படியா.. அப்ப அதே ஆயுதப் போராட்டத்தின் எச்சங்களாக இருக்கும் டக்கிளஸ்.. கருணா.. பிள்ளையான் நடத்தும் ஆயுத துணைக்குழுக்களை முற்றாகக் கலைத்துவிட்டு.. உங்கள் எஜமானர்கள்.. தமது அரசியலை புதுப்பிக்கலாமே...?! இப்ப தானே உங்கள் அதீத அறிவுக்கு எட்டியபடி.. புலி ஆயுதப் பிரச்சனை இல்லையே.. !

எதுக்கு இன்னும் அதே குண்டுச் சட்டிக்குள் குதிரை சவாரி செய்துக்கிட்டு திரியுறீங்க. வேலை வெட்டி இல்லையா... இல்ல எஜமான கூலி கிடைக்காதா..??!

Edited by nedukkalapoovan
 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.