Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல்


Recommended Posts

 

ரிஷாட் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்தில் இரண்டு அறைகளுக்கு சீல்

 

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில்  பயன்படுத்திய உத்தியோகபூர்வமான வாசஸ்தலத்தில்,   இரண்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள, ரிஷாட்டின்  வீட்டில் பணிப்பெண்களாக பணியாற்றிய சிறுமி உட்பட 11 பேரில், 9 யுவதிகள் இதுவரையிலும் வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர் என விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடலில் சூடுவைத்தமை, தாக்கியமை மற்றும் ஏனைய துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்தமை உள்ளிட்டவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவ்விரு அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தற்போதை அரசாங்கத்தின் கீழ், அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொடுக்கப்பட்டது. எனினும், அவருக்கு கொழும்புக்கு அண்மையில் வீடு இருப்பதனால், அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொதிகளை பொதியிடுவதற்கான மத்திய நிலையமாக அந்த உத்தியோகபூர்வ இல்லம், சில நாள்களுக்கு பயன்படுத்தப்பட்டது.

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ரிஷாட்-பதியுதீன்-பயன்படுத்திய-வாசஸ்தலத்தில்-இரண்டு-அறைகளுக்கு-சீல்/150-277732

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவ்விரு அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அமைச்சர் இதுமாதிரியான உத்தியோகம்தான் பார்த்திருக்கிறார் போல.என்ன மனிசன்டா இந்த மனிசன் என்ர அல்லா .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ரிஷாட் வாசஸ்தலம் எனக்கு வேண்டாம்”

August 2, 2021

spacer.png

ரிஷாட் பதியுதீன், முன்னாள் வர்த்தக அமைச்சராக இருந்தபோது பயன்படுத்திய வாசஸ்தலத்தை, தற்போது பயன்படுத்தும் அமைச்சர் பந்துல குணவர்தன, அந்த வாசஸ்தலத்தை மீண்டும் கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார்.

கொழும்பு-7, மெகென்சி வீதி, 37ஆம் இலக்க இல்லத்தையே ரிசாட் பயன்படுத்தினார். அதனை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது பயன்படுத்துகின்றார். அந்த இல்லத்தையே அமைச்சர் பந்துல குணவர்தன கையளிப்பதற்கு தீர்மானித்துள்ளார் என அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசெம்பர் மாதம் தொடக்கம், ,தற்போதைய வர்த்தக அமைச்சர் பந்துல
குணவர்தனவுக்கு அந்த இல்லத்தை கையளிக்க பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

ஆனால், குறித்த இல்லத்தில், தற்போது சர்ச்சையை தோற்றுவித்துள்ள பல சிறுமிகள்
துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சந்தேகங்கள் வெளிவரம் நிலையில், குறித்த இல்லத்தின் இரண்டு அறைகள் பொலிஸாரால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குறித்த இல்லைத்தை புனரமைப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 12
மில்லின் ரூபாய் பணத்தை செலவு செய்ய, தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் பந்துல குணவர்தன, வறுமை நிலையிலுள்ள சிறுமிகள் குறித்த வீட்டுக்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் பாரதூரமானது என்றார்.

குறித்த உத்தியோகப்பூர்வ இல்லத்தை மீண்டும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்
அமைச்சிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின்
செயலாளர் பத்ரானி ஜயவர்தனவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://globaltamilnews.net/2021/164118

 

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.