Jump to content

போர், சண்டை இரண்டுக்கும் என்ன வேறுபாடு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

main-qimg-3673f423743c726c8b0f13b76bb3ed37

மிக எளிது..

  • குறு விளக்கம்:-

போர்(war) என்பது பல சமர்களின் தொகுப்பு ஆகும். இந்தப் போரானது பல மாதங்களுக்கோ அல்லது பல ஆண்டுகளிற்கோ நீடிக்கலாம். இந்த மாதங்கள் அல்லது ஆண்டுகளில் இரு தரப்பிற்கு இடையில் நடக்கும் மோதல்கள்(clash)(வாளாலோ, கத்தியாலோ, தருக்கத்தாலோ) சமர்(battle) எனப்படும். இந்த சமர்களில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் எதிராளிகளுடன் மோதுவதைக் குறிக்க சண்டை(fight) என்னுஞ் சொல் கையாளப்படுகிறது.

 


  • நெடிய விளக்கம்:-
  1. போர்(war) - போர் என்பது சண்டைகளுக்கெல்லாம் அடிப்படையான ஒரு அரசியற் செயல்பாட்டு வடிவமாகும். ஒரு குறிப்பிட்ட அ வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் நடைபெறும் பல சமர்களின் தொகுப்பு. இதன் தாக்கம் பல ஆண்டுகளிற்கு இருக்கும். இந்தப் போரானது, குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கல்கள் நிறுத்தமாகவோ அல்லது இரு அரசியல் கட்சிகளிற்கு இடையில் நடைபெறும் தகராறாகவோ அல்லது பனிப்போராகவோ இருக்கலாம். வெறும் கொல்லும் சமர்க் களத்தை மட்டும் குறித்தது அன்று.
    1. எ.கா:
      1. ஈழப்போர்- 1 (1990- 1995 வரை) - பின்னாளில் வரையறுக்கப்பட்ட காலம்.
      2. இரண்டாம் உலகப்போர் (1939 - 1945) - குறிப்பிட்ட காலம்
      3. ஐ.மா. அமெரிக்கா(USA) - ஈரான் இடையிலான போர் - வழங்கல் நிறுத்தம், அரசியல் சச்சரவுகள்….
  2. சமர்(Battle) - இந்தப் போரினுள் தனித் தனியாக பல்வேறு இடங்களில் நடைபெறும் சண்டைகள் சமர் எனப்படும். இதன் முடிவு உடனே தெரிந்து விடும்.
    1. எ.கா:
      1. இரண்டாம் உலகப்போர்: நோர்மண்டி தரையிறக்கமும் அதனோடான சமரும், பெர்லின் சமர், அட்லான்டிக் சமர் போன்றவை
      2. இரு அரசியல் கட்சிகளிற்கு இடையிலான தேர்தல்/அரசியல் சமர்
    2. இந்தச் சமரானது ஊடறுப்புச் சமர், முறியடிப்புச் சமர், வழிமறிப்புச் சமர், தடுத்து நிறுத்தல் சமர் என தற்காலத்தில் பல வகைப்படும்.
  3. சண்டை(Fight) - இருவர் [உயர்திணை(இரு மாந்தர்)] அல்லது இரண்டு [அஃறிணை(இரு தகரி(Tank) நேருக்கு நேர்), அல்லது இரு உயர்திணைக் கூட்டம்(இந்திய - பாகிஸ்தான்)] சமரினுள் மோதிக்கொள்வது சண்டை எனப்படும். மேலும், ஒருவர், தான் பங்கேற்ற சமரில் எப்படி ஆடினான் என்று விரிக்கும் இடத்திலும், இந்த சண்டை என்னும் சொல்லினைப் பயன்படுத்துவார்.
    1. சமராடியோன், சமர் முடிந்து வெளியில் வந்து சமர் பற்றி கலந்துரையாடும் போது "நான் நல்லா சண்டை புடிச்சனான்" என்றுதான் உரைப்பார்களே ஒழிய, "நான் நல்லா சமர் ஆடினான்" என்று உரையார்.
    2. டிரம்ப் - பைடன் அரசியல் இடையிலான அரசியல் மோதல் சண்டை ஆகும்
    3. இந்தச் சொல்லானது, சிலவேளைகளில் மிகச் சிறிய சமர்களைக்(small battle) குறிக்கவும் பயன்படுத்தப் படுவதுண்டு. அதாவது,
      1. எதிரியின் ஒரே ஒரு காவலரணைத் தாக்கியதையோ அல்லது தாக்கிவிட்டு ஓடும்(hit and run) சமர்களையோ குறிக்கும்.
  4. அடிபாடு(Combat) - இது சமர், சண்டை ஆகிய இரண்டையும் ஒருசேர நேரடியாக் குறிக்கும் சொல்லானாலும், மற்றொரு பொருளையும் தன்னகத்தே கொண்டுள்ளதால் அதனின்று வேறுபடுகிறது. அப்பொருள் யாதெனில் 'ஆய்தங்கள் ஏந்தி நடைபெறும் சமர்/சண்டை இல் வெற்றிக்காக போராடுகை ' என்பதாகும்.
    1. எ.கா: -
      1. வடகொரியா - தென்கொரியா இடையில் நடைபெறுபவை
      2. குர்திஸ்தான் விடுதலைக்கான அடிபாடு
      3. தமிழர் - சிங்களவர் இடையில் ஈழத்தில் நடைபெறுபவை
      4. பாலஸ்தீனத்தின் இஸ்ரேல் உடனாக நடைபெறுபவை
    2. என இது நீண்டு செல்லும்.

 


இந்த போர், சமர்களில் பல வகையுண்டு.. அவற்றைப் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்:

படைத்துறையில்(Military) பயன்படுத்தப்படும் தமிழ் கலைச்சொற்கள் யாவை? கேள்விக்கு நன்னிச் சோழன் (Nanni Chozhan)-இன் பதில்


 

உசாத்துணை:

  • பட்டறிவு

படிமப்புரவு

  • சொந்தமாக உருவாக்கியது

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.