Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புலிகளிடம் இருந்து இதுவரை மீட்கப்பட்ட ஆயுதங்கள் – சிறிலங்கா படைத்தரப்புத் தகவல் | வெள்ளி, 12 நவம்பர், 2010


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

https://aaivuu.wordpress.com/2010/11/13/விடுதலைப்-புலிகளிடம்-இரு/

---------------------

 

விடுதலைப் புலிகளிடம் இருந்து இதுவரையில் 21 நீண்டதூர வீச்சுக் கொண்ட தெறோச்சிகளும்(Howitzer), சுமார் 800 பல்வேறு வகையான கணையெக்கிகளும்(Mortar) கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக படை வட்டாரங்களில் இருந்து பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ‘ஐலன்ட்‘ நாளிதழ் தகவல் வெளியிடுகையில், புலிகளிடம் கைப்பற்றப்பட்ட தெறோச்சிகளில்(Howitzer) ஆறு 152 மி.மீ வகையைச் சேர்ந்தவையாகும். ஒன்பது 130 மீ.மீ தெறோச்சிகளும், ஆறு 122 மி.மீ தெறோச்சிகளும், இரண்டு 85மி.மீ தெறோச்சிகளும் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன. இவையனைத்தும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை.

புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கணையெக்கிகளில்(Mortar) 120 மி.மீ கணையெக்கிகள் – 57, 82 மி.மீ கணையெக்கிகள் – 38, 81மி.மீ கணையெக்கிகள் – 147, 60மி.மீ கணையெக்கிகள் – 487, கொமாண்டோ கணையெக்கிகள் – 65 ஆகியனவும் அடங்கியுள்ளன. அத்துடன், ஆறு குழல்களைக் கொண்ட பல்குழல் உந்துகணை செலுத்திகள் மூன்றும், 14 பின்னுதைப்பற்ற சுடுகலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

2002ம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குப் பின்னர் பெருந்தொகையான ஆயுதங்களைப் புலிகள் பல்வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை சீனத் தயாரிப்பான தெறோச்சிகளும் கணையெக்கிகளும் என்று புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போர் முடிவுக்கு வந்து 16 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் சிறியளவிலான ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்பட்டு வருகின்றன. புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும்பாலான கனவகை ஆயுதங்கள் போரின் இறுதி ஐந்து மாதங்களில் ஏ9 வீதிக்கு கிழக்குப் பக்கத்திலேயே மீட்கப்பட்டன.

படையத் தலைமையகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மீட்கப்பட்ட ஆயுதங்களில்; வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் - 21, எரியமுக்க(Thermobaric) ஆயுதங்கள் – 55, 40 மி.மீ கைக்குண்டு செலுத்திகள் – 253, ஏவுகணை செலுத்திகள் - 14, 23மி.மீ தெறுவேயங்கள்(Cannon) – 07, 12.7மி.மீ கனவகை சுடுகலன்கள் - 96, பன்நோக்கு இயந்திரச் சுடுகலன்கள் – 273, வகை- 56 துமுக்கிகள்(Rifles) - 14,232, ஏ.கே.47 துமுக்கிகள் – 103, எம்16 துமுக்கிகள் – 63, குறிசூட்டுத் துமுக்கிகள் – 34, 9மி.மீ கைச்சுடுகலன்கள் – 441, மைக்ரோ கைச்சுடுகலன்கள் – 167, 14.5மி.மீ மூட்டப்பட்ட வானூர்தி எதிர்ப்பு சுடுகலன்கள்(Mounted AAA) – 25, வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் – 08, வகை-56 முதன்மை சமர் தகரிகள் – 02, 152மி.மீ, 130மி.மீ, 122மி.மீ, 120 மி.மீ தெறோச்சி குண்டுகள் – 3964, வானூர்திகுண்டுகள் – 1143, அமுக்கவெடிகள்(Claymore) - 7069, கைக்குண்டுகள் – 35,315, வெடிக்கவைக்கும் கருவிகள் – 61,788, புலிகள தயாரிப்பு வெடிபொருட்கள் – 4517 ஆகியனவும் அடங்கியுள்ளன. 

இதைவிட புலிகளின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுகளின் நடவடிக்கைகளுக்கான மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 167 மைக்ரோ கைச்சுடுலன்களுடன் கூடிய 377 வெடியுடைகள், 6265 கிலோ எடையுள்ள சி – 4 வெடிமருந்து, 42,188 கிலோ எடையுள்ள ரி.என்.ரி வெடி மருந்து, 3186 கிலோ ஜெலிக்நைற் , 40 தற்கொலை இடுப்புப் பட்டிகள் உள்ளிட்ட பல பொருட்களும் அடங்கியுள்ளன. இவை படைத்துறை, பொருளாதார, அரசியல் இலக்குகள் மீதான தாக்குதல்களை நடத்தும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன . இவற்றில் 1368 கிலோ ரி.என்.ரி வெடி மருந்து சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டது. இரண்டு கைச்சுடுகலன்கள் உள்ளிட்ட 21 சுடுகலன்களில் ஒலியடக்கி பொருத்தப்பட்டிருந்தன. 20 கரும்புலிப் படகுகள், 13 சேதமடைந்த கடற்புலிகளின் படகுகள், 228 வெளியிணைப்பு இயந்திரங்கள், 11 இஸ்ரேலிய மினியுசி சுடுகலன்கள் உள்ளிட்ட 279 வகையான பொருட்களை படைத்துறை கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை, புலிகள் பல்வேறு இந்திய வழங்குனர்கள் ஊடாகவே வெடிபொருட்களை வாங்கியுள்ளதாகவும் படைத்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன!

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

புலிகளிடம் இருந்து இதுவரை மீட்கப்பட்ட ஆயுதங்கள்

அது சரி, கைப்பற்றப்பட்ட இந்த ஆயுதங்களை எப்படிக் கையாழுவது என்பதை அறிந்து கொள்வதற்கு விடுதலைப் புலிகள் இன்று இல்லையே.😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
On 3/8/2021 at 15:26, Paanch said:

அது சரி, கைப்பற்றப்பட்ட இந்த ஆயுதங்களை எப்படிக் கையாழுவது என்பதை அறிந்து கொள்வதற்கு விடுதலைப் புலிகள் இன்று இல்லையே.😭

இவையெல்லாம் பெரிய ஆயுதங்கள் இல்லை அண்ணை... பொதுவாக ஏல்லா இயக்கங்களிடமும் இருப்பவையே! இவற்றைப் பயன்படுத்த (தெறோச்சிகள் தவிர்த்து) பெரிய ஆய்த அறிவெல்லாம் தேவையில்லை!

 

 

 

 

------------------------------------
வாசகர்களே!

மேலே உள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயுதங்கள்(தெறோச்சிகள் தவிர்த்து), பொதுவாக எல்லா இயக்கங்களிடமும் இருக்கும் ஆயுதங்களே. அப்படிப்பாட்டவற்றின் பட்டியலை மட்டுமே சிங்கள தேசம் வெளியிட்டுள்ளது. இது தவிபு பயன்படுத்தியவற்றின் ஒரு 75 வீதம் கூட இல்லை. தவிபு பயன்படுத்திய பெரும்பாலான ஆயுதங்கள்(25 விழுக்காட்டிற்கு மேல்) குறிப்பிடப்படவில்லை. 

  கைப்பற்றிய ஆயுதங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்பதற்காக மட்டுமே இதனை வெளியிட்டுள்ளது... அதாவது ஒரு கண்துடைப்பிற்காக. அவ்வளவே!

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நன்னிச் சோழன் said:

இவையெல்லாம் பெரிய ஆயுதங்கள் இல்லை அண்ணை... பொதுவாக ஏல்லா இயக்கங்களிடமும் இருப்பவையே! இவற்றைப் பயன்படுத்த (தெறோச்சிகள் தவிர்த்து) பெரிய ஆய்த அறிவெல்லாம் தேவையில்லை!

உள்ளதை உள்ளபடியே சொல்லும் கண்ணாடிபோல் கள உறவு நன்னிச் சோழனை அறிகிறேன்.🤗

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, Paanch said:

உள்ளதை உள்ளபடியே சொல்லும் கண்ணாடிபோல் கள உறவு நன்னிச் சோழனை அறிகிறேன்.🤗

நன்றி

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.