Jump to content

சிம்பு படத்தலைப்பும் இலங்கையில் எழுந்த மனக்குமுறலும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பு படத்தலைப்பும் இலங்கையில் எழுந்த மனக்குமுறலும்!

 
spacer.png

ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் பெயர், பிப்ரவரி 25,2021 அன்று 'நதிகளிலே நீராடும் சூரியன்' என்று அதிகாரப்பூவமாக அறிவிக்கப்பட்டது. இது சிம்புவின் 47 ஆவது படம் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

இந்தப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றார்

நேற்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இயக்குனர் கௌதம்மேனன் நடிகர் சிம்பு கூட்டணி முதன்முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இணைந்தனர்.

அந்தப் படம் வெற்றிபெற்றதால் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா படத்தில் மீண்டும் இணைந்தனர். வணிகரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் ரசிகர்களின் பாராட்டை பெற்றது

இந்நிலையில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்பு நடிக்கும் 47வது படமாக உருவாகும் இப்படத்தின் மாற்றப்பட்ட தலைப்பு, முதல் பார்வை நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்திற்கு வெந்து தணிந்தது காடு என்கிற பெயருடன் முதல் பார்வை வெளியிடப்பட்டது. அதில் சிம்பு பின்னால் காடுகள் பற்றி எரிந்துகொண்டிருக்கும், அதிலிருந்து தப்பியது போன்று மிகவும் சிறு பையனாக கையில் நீண்ட கழியுடன் லுங்கி - சட்டையுடன் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார். இந்த போஸ்டருக்கு சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால் அவர்கள் இதை சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கியுள்ளனர்.

அதேநேரம், இந்த தலைப்பு சம்பந்தமாக இலங்கையில் இருந்து அதிருப்தியும் மனக்குமுறலுடன், இதே பெயரில் படம் ஒன்றை தயாரித்து முடித்து இருக்கும் இயக்குநர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

தமிழீழத்தில் இருந்து கடும்போராட்டங்களுக்கு மத்தியில் திரைப்படங்கள் உருவாக்கி வரும் இயக்குநர் மதிசுதா, தான் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு என்ன பாதிப்பு என்பதை விளக்கும் அவருடைய பதிவு….

நானும் கெளதம் மேனனும் பயன்படுத்திக் கொண்ட ஒரே திரைப்படத் தலைப்பும் முடங்கிப் போன என் திரைப்படமும்…

1) எங்களுக்கென்றொரு சினிமா தேவையில்லை

2) மக்கள் இருக்கும் நிலையில் சினிமாவெல்லாம் ஒரு கேடா போன்ற எதிர் நிலைப்பாடுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்காமல் கடந்து செல்வது ஆரோக்கியமாகும்.

ஒரு ஆலமரத்தின் கீழ் முளைக்கத் துடிக்கும் அருகம் புல்லாக சின்ன சின்ன விடயத்துக்கும் போராடிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

A) தென்னிந்திய சினிமாவின் ஊடக ஆக்கிரமிப்புக்களால் எம் மக்களிடம் எம் படைப்புக்களை கொண்டு சேர்க்க ஒரு புறம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

B ) தயாரிப்பாளர் என்று எவருமே இல்லாத இடத்தில் ஒவ்வொருவரிடமும் சிறுக சிறுக 1000 ஆயிரமாக சேர்த்து, இருக்கும் காசுக்கு ஏற்ப இருக்கும் வளத்தை வைத்து தான் ஒரு படைப்பை செய்து முடிக்க வேண்டியுள்ளது.

C) இந்தக் கனவோடு பயணிக்கும் ஒவ்வொருத்தனும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பலவற்றை துறந்து தான் தியாக மனத்துடன் உழைத்துக் கொண்டிருக்கின்றான்.

இது சில உதாரணங்களே, இந்நிலையில் ஒரு உண்மையான கலைஞனாக இன்னொரு படைப்பாளியின் படைப்புக்கும் உழைப்புக்கும் உள்ள உரிமைக்கு சின்ன அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கலாம். தன் மொழியில் உள்ள ஒரு தலைப்பை முதன் முதலாக ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தும் ஒரு உரிமை கூட தன் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவனுக்கு இல்லையா ?

இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனது திரைப்படத்தலைப்பான “வெந்து தணிந்தது காடு” என்பதை பகிரங்கப்படுத்தியிருந்தேன். பலமாதங்களுக்கு முன் திட்டமிட்ட இத்தலைப்பை பட வேலைகளை முடித்த பின் அறிவிப்போம் என்ற நிலைப்பாட்டில் படத்தை கையில் வைத்துக் கொண்டே அறிவித்தோம்.

“மூடப்பட்ட பங்கர்களுக்குள் தான் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன” என்ற மூலக் கருவைக் கொண்ட இத்திரைப்படத்துக்கு தயாரிப்பாளரே கிடைக்காத நிலையில் 111 பேரிடம் இருந்து சேகரித்த பணத்தைக் கொண்டு ஐ போன் மூலம் உருவாக்கியிருந்தோம்.

இன்றைய நாள் , கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படம் அதே பெயரில் வெளியாகியிருக்கின்றது.

1) பாரதியாரின் கவிதை தானே யாரும் அதை வைக்கலாம் என கருத்துப்பட சிலரது எதிர்வாதங்களைக் கண்டேன்

அக்கருத்தை நான் மறுக்கவில்லை. ஆனால் அதே தலைப்பை எந்த வகைப் படைப்புக்கு முதல் முதல் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற விடயமும் கணக்கில் எடுக்கப்படும். நான் தலைப்பிட முன் தேடிய வகை இப்பெயரில் கவிதை நூல் ஒன்று மட்டுமே இருந்தது. திரைப்படம் எதுவும் இருக்கவில்லை.

ஒரு திரைப்பட தயாரிப்புக் குழுவின் முக்கிய வேலைகளில் ஒன்றாக தலைப்புகளை ஆய்வு செய்தலும் அடங்கும். அவ்வகையில் பல இந்திய ஊடகங்களிலும் வெளியாகியிருந்த எமது திரைப்படத்தின் தலைப்பை அறிந்திருக்கவில்லை என்பதற்கு சந்தர்ப்பமே இல்லை. நிச்சயம் கூகுலிலாவது ஒரு தடவை தேடிப் பார்த்திருப்பார்கள்.

அவர்களது பணபலம், விளம்பர பலம் , ஸ்டார் வேல்யூ ஆகியவற்றின் மூலம் இச் சிறிய படைப்பு மறைக்கப்பட்டு விடும் என கருதியுமிருக்கலாம்.

2) இரண்டு வெவ்வேறுபட்ட நாடுகள் தானே இதைக் கணக்கெடுக்க தேவையில்லை என்ற கருத்துக்கான பதில்.

இலங்கையில் பணம் கொடுத்து வாங்கக் கூடிய ஓடிடிகள் இல்லாத நிலையில் இந்தியாவை மையப்படுத்திய ஓடிடிகளுக்கு மட்டுமே விற்க முடியும்.

எமது படம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் அப்பட பதிவிருப்பதால் அங்கு இப்படைப்பை விற்பதில் பெரும் சிக்கல் ஒன்று உள்ளது

ஏற்கனவே இத் திரைப்படத்துக்கு வியாபார விடயம் பேசிக் கொண்டிருந்த இரண்டு பெரிய நிறுவனங்களும் (பெயர் குறிப்பிட முடியவில்லை) இத்தலைப்பால் இப்படைப்பில் ஏற்படும் தாக்கம் குறித்து பதில் தர 3 நாள் அவகாசம் கேட்டுள்ளன. பெரும்பாலும் இத் தலைப்பில் ஒரு படைப்பு முதலே வருவதை விரும்பமாட்டார்கள்.

ஏதோ , என் மூன்றரை வருட ஒட்டு மொத்த கனவும், உழைப்பும், காத்திருப்பும் ஒரு சம்பவத்தால் சுக்கு நூறக்கப்பட்டு விட்டதை நான் முழுமையாக உணர்கின்றேன்.

வழமை போல இந்தப் படைப்பை ஓட்டுவதற்கு தற்போது தியேட்டர்களும் இல்லை. படத்துக்கு தேடி வந்த யூடியூப்காரர்களும் தமது சேனலுக்கு தாருங்கள் வரும் பணத்தில் 50% தருகிறோம் என்ற வியாபார கணக்கோடு வரிசையிடுகின்றார்கள்.

என்னசெய்வது, சிறுபுன்னகையுடன் இந்த விக்கிரமாதித்தன் வேதாளத்திடம் இருந்து ஈழ சினிமாவை பறித்துக் கொண்டு பயணப்பட்டுக் கொண்டே இருப்பான். இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.


https://minnambalam.com/entertainment/2021/08/07/6/simbu-movie-title-changed

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட தலைப்பை விடுவோம் ...ஈழத்து படைப்புக்களை உருவாக்குவதற்கு புலம் பேர் பணக்காரர்கள் உதவலாமே !..முக்கியமாய் புலிகளின் காசை சுருட்டியோர் ,தாம் இன்னும் புலி தான் என்று சொல்பவர்கள் இவருக்கு கட்டாயம் உதவ வேண்டும் ...இவருடைய அண்ணா இன்னும் உள்ளே தான் இருக்கிறார் ...அதுக்காகவாவது, சிறந்த படைப்பை ஈழத்திலிருந்து உருவாக்க  உதவுங்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூங்கியது காணும் எழும்புங்கோ…

இதே யாழ் களத்தினூடாக பலர் உதவியுள்ளனர்.

மதிசுதா விட்ட தவறு, தென்னிந்தியாவில் சந்தைப்படுத்தும் எண்ணம் இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே பதிவு செய்து இருக்கவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

தூங்கியது காணும் எழும்புங்கோ…

இதே யாழ் களத்தினூடாக பலர் உதவியுள்ளனர்.

மதிசுதா விட்ட தவறு, தென்னிந்தியாவில் சந்தைப்படுத்தும் எண்ணம் இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே பதிவு செய்து இருக்கவேண்டும். 

நான் எழுதியது தரமான திரைப்படம் எடுப்பதற்கு உதவி செய்ய சொல்லி அதாவது அந்த படத்தை தயாரிக்க உதவுங்கள் 
 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2021 at 05:57, MEERA said:

தூங்கியது காணும் எழும்புங்கோ…

இதே யாழ் களத்தினூடாக பலர் உதவியுள்ளனர்.

மதிசுதா விட்ட தவறு, தென்னிந்தியாவில் சந்தைப்படுத்தும் எண்ணம் இருந்திருந்தால் ஆரம்பத்திலேயே பதிவு செய்து இருக்கவேண்டும். 

 

படத்தை ஐபோனில் எடுப்பதாய் ஏதோ செய்தி பார்த்தேன். மொபைல் படத்தை தென்னிந்திய திரை அரங்கில் காண்பிக்கவோ அல்லது சந்தைப்படுத்தவோ முடியுமா?

உண்மையில் இவருக்கு இதே பெயரில் தமிழ் சினிமா படம் வருவது தனது வெளியீட்டை பிரபலப்படுத்த நல்லதொரு வாய்ப்பு. 

வெந்து தணிந்தது காடு என பலரும் யூரியூப், கூகிழில் தேடல் செய்யும்போது மதிசுதாவின் படைப்பும் வெளிக்காட்டப்படவும், சிறிய துண்டு பட்ஜெட் மெகா பட்ஜெட் திரைப்படம் ஆகியவற்றுக்கான பாரிய இடைவெளியை, அவற்றின் தரத்தை, கூறப்படும் செய்தியை, வேறுபாட்டை ரசிகர் பார்க்கவும் வாய்ப்பு ஏற்படும்.

நான் மதிசுதா நிலையில் நின்றால், சட்ட சிக்கல் ஏற்படாத பட்சத்தில் வெந்து தணிந்தது காடு எனும் அதே திரை தலைப்பிலேயே படத்தை வெளியீடு செய்வேன்.

ஒரே தலைப்பில் வெவ்வேறு விடயங்கள் வருவது எல்லாம் புதிது இல்லை. பல தமிழ் சினிமா படங்களின் தலைப்புக்களில் பல குறும்படங்கள், சின்னத்திரை சீரியல்கள் எல்லாம் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் படங்களுக்கு ஒரே பெயர் வைக்கப் படுவது சில சமயம் நடக்கத் தான் செய்கிறது. அண்மையில் யாழ் கள உறவு ஒருவர் தன் சகோதரர் "கூட்டாளி" என்ற பெயரில் ஒரு படம் எடுத்து வெளியிட்டதாகச் சொன்னார். அதே பெயரில் ஒரு தென்னிந்தியப் படமும் வந்திருக்கிறது 2018 இல். எனவே இதில் சட்டப் பிரச்சினை இருக்காதென நினைக்கிறேன் 

("வெந்து தணிந்தது காடு" என்ற வரி பாரதியாருக்குச் சொந்தமான வரிகள் என்று நினைக்கிறேன் - அவர் காப்புரிமை கேட்டு வழக்குத் தொடுக்கப் போவதில்லை!)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/8/2021 at 17:48, ரதி said:

பட தலைப்பை விடுவோம் ...ஈழத்து படைப்புக்களை உருவாக்குவதற்கு புலம் பேர் பணக்காரர்கள் உதவலாமே !..முக்கியமாய் புலிகளின் காசை சுருட்டியோர் ,தாம் இன்னும் புலி தான் என்று சொல்பவர்கள் இவருக்கு கட்டாயம் உதவ வேண்டும் ...இவருடைய அண்ணா இன்னும் உள்ளே தான் இருக்கிறார் ...அதுக்காகவாவது, சிறந்த படைப்பை ஈழத்திலிருந்து உருவாக்க  உதவுங்கள் 
 

https://yarl.com/forum3/topic/232174-10-டொலர்-அல்லது-1000-ரூபாவால்-ஒன்றால்-எமக்கான-சினிமா-ஒன்றை-கண்டடையலாம்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.