Jump to content

நல்வழியை... நோக்கி, பயணியுங்கள்- முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி அறிவுரை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நல்வழியை நோக்கி பயணியுங்கள்- முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி அறிவுரை

நல்வழியை... நோக்கி, பயணியுங்கள்- முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி அறிவுரை

தவறான வழியை நோக்கி பயணிக்காமல் நல்வழியை நோக்கி பயணியுங்கள் என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவுரை வழங்கியுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “அரசாங்கத்தினால் பொது மன்னிப்பின் அடிப்படையில் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் சமூகத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் சிறையில் இருக்கும் ஏனையோரையும் விடுவிக்க கூடியதாக இருக்கும்.

எனவே முன்னரைப் போல பிழையான வழிகளில் செல்லாது சரியான பாதை நோக்கி செல்லுங்கள்.

அதாவது நல்லதை சிந்தித்து, சமூகத்தில் உள்ளோர் உங்களை நல்லவர்கள் என்று சொல்லும் அளவுக்கு உங்களது வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள்.

மேலும்  முன்னாள் போராளிகளாகிய உங்களுக்கு எங்களாலான உதவிகளை செய்ய தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1232998

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவாளி.. இனப்படுகொலை சாத்தான் வேதம் ஓதுது.

புலிகளை ஒழிச்ச நமக்கு கொரோனாவை ஒழிக்கிறது பெரிய பிஸ்டா விசயமா என்ற கோசத்துக்கு என்னாச்சுங்கோ.. சாத்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

போர்க்குற்றவாளி.. இனப்படுகொலை சாத்தான் வேதம் ஓதுது.

புலிகளை ஒழிச்ச நமக்கு கொரோனாவை ஒழிக்கிறது பெரிய பிஸ்டா விசயமா என்ற கோசத்துக்கு என்னாச்சுங்கோ.. சாத்தானே. 

அதை மறைக்கத்தான் இந்த வேதம் ஓதல்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

நல்வழியை... நோக்கி, பயணியுங்கள்- முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி அறிவுரை

சிங்களச் சிறிலங்காவிலை தமிழர்களுக்கு நல்வழி எண்டால் வாயை மூடிக்கொண்டு இருங்கோ எண்டு அர்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு

யார்

எதைச்சொல்வது  என்று இல்லாமல் போய்விட்டது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

யாருக்கு

யார்

எதைச்சொல்வது  என்று இல்லாமல் போய்விட்டது???

விசுகர்! அவர்களை நொந்து என்ன பயன்? அவர்கள் தம் இனம் சார்ந்தே இருப்பார்கள்.சொல்லுவார்கள். அவர்கள் தம் பக்கம் நியாயம் வைத்திருப்பார்கள்.செயலிலும் செய்து காட்டுவார்கள். காட்டுகின்றார்கள்.
ஆனால் நம் இன அரசியல்வாதிகளும்,நம் இன பிரமுகர்களும் சிங்களம் சொல்வதற்கு தலையாட்டி சேவகம் செய்யும் போது நாம் என்ன செய்யமுடியும். சர்வதேச நலன்விரும்பிகளால் என்ன செய்ய முடியும்?

 இதுவரை இரா. சம்பந்தனை இன்றுவரை எத்தனை சர்வதேச அதிகாரிகள் சந்தித்திருப்பர்? அதுபற்றி ஏதாவது சொன்னார்களா? அல்லது அறிக்கை விட்டார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறைவாசம் சென்று பொது வாழ்வில் இணையும் எங்கள் உறவுகள் வாழ்வில் அமைதி, சந்தோசம் கிடைக்க கடவுள் அருள் புரியட்டும். 🙏

ஆயுதங்கள் மெளனிக்கபட்டு, போரும் ஓய்ந்து 12 வருடங்கள் கடந்து விட்டன. சிறையில் வாடும் அனைத்து அரசியல்/போர் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்ப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் சொத்துக்குக்காகவோ , கொள்ளையடிக்கவோ கோடிக்கணக்கில் சொத்து சேர்க்கவோ அவர்கள் போராளிகளாயானதில்லை,

ஒரு கொள்கைக்காக போராடினார்கள், வெற்றிபெற முடியவில்லை, போராட்டம் மெளனித்ததும் அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அங்கே தெருதெருவாய் சிங்களவர்கள் பிராணவாயு இன்றியும் வைத்தியசாலைகளில் இடமின்றியும் கொரோனாவால் செத்து மடிந்துகொண்டிருக்கிறார்கள், நாட்டின் கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டிய பொறுப்பிலிருக்கும் இவர் போராளிகளுக்கு வகுப்பெடுத்துக்கொண்டிருக்கிறார்.

காலம் காலமாக தெற்கே ஒரு நெருக்கடியென்றால் அதை திசை திருப்ப புலி பூச்சாண்டி காட்டுவதே சிங்கள ஆட்சியாளர்களின் பொழைப்பா போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

தவறான வழியை நோக்கி பயணிக்காமல் நல்வழியை நோக்கி பயணியுங்கள் என முன்னாள் போராளிகளுக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவுரை வழங்கியுள்ளார்.

நேர் வழியில் செல்லும் இந்த உத்தம புத்திரனை ஏன் சர்வதேசம் வெறுக்கிறது? என்றொருக்கா கேட்டுச் சொல்லுங்கோ இந்தத் தளபதியிடம். அறிவுரை சொல்வதால் மட்டும்  தான் நல்லவன் என்றாகிவிட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளை அரசிடமும் ,ஆமியிடமும்  கையேந்தும் நிலைமைக்கு கொண்டு வந்தது யார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

போராளிகளை அரசிடமும் ,ஆமியிடமும்  கையேந்தும் நிலைமைக்கு கொண்டு வந்தது யார் 

கூத்தமைப்பு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

போராளிகளை அரசிடமும் ,ஆமியிடமும்  கையேந்தும் நிலைமைக்கு கொண்டு வந்தது யார் 

தமிழரின் பலத்தை உடைத்தவர்கள் 

தமிழரின் போராட்டத்தை பயங்கரவாதமாக சர்வதேசமெங்கும் பொய் சொல்லி காட்டிக்கொடுத்த தமிழர்கள்

சிங்களத்தின் பொய்ப் பிரசாரத்தை நம்பிய சர்வதேசம் 

தமிழருக்கு எந்த வித தீர்வையும் தர முயலாத தமிழரை துன்புறுத்தி மட்டுமே வாக்குகளை பெறும் சிங்களம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

எப்பவும் கோழைகள் தாங்கள் விட்ட/ விடுகின்ற பிழைகளை ஏற்றுக் கொள்ளாமல் தோல்விக்கு அடுத்தவரையும் ,வெற்றிக்கு தங்களையும் அடையாளம் காட்டுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

எப்பவும் கோழைகள் தாங்கள் விட்ட/ விடுகின்ற பிழைகளை ஏற்றுக் கொள்ளாமல் தோல்விக்கு அடுத்தவரையும் ,வெற்றிக்கு தங்களையும் அடையாளம் காட்டுவார்கள் 

இந்த பதில் விநாயகமூர்த்திக்கும் பிள்ளையானுக்கும் பொருந்துகின்றதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:

எப்பவும் கோழைகள் தாங்கள் விட்ட/ விடுகின்ற பிழைகளை ஏற்றுக் கொள்ளாமல் தோல்விக்கு அடுத்தவரையும் ,வெற்றிக்கு தங்களையும் அடையாளம் காட்டுவார்கள் 

பச்சோந்திகள் எப்பொழுதும் இடத்தையும் நிறத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இனங்கள் அடிமைப்படுவதற்கும் உலக அமைதி இன்மைக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் இவர்களே காரணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

பச்சோந்திகள் எப்பொழுதும் இடத்தையும் நிறத்தையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இனங்கள் அடிமைப்படுவதற்கும் உலக அமைதி இன்மைக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கும் இவர்களே காரணம் 

இதில் யார் பச்சோந்தி நீங்களா:unsure: 
நான் அன்று தொடக்கம் கருணாவுக்கு பின்னால் தான் நிக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

இதில் யார் பச்சோந்தி நீங்களா:unsure: 
நான் அன்று தொடக்கம் கருணாவுக்கு பின்னால் தான் நிக்கிறேன் 

அப்போ மேலே நீங்கள் குறிப்பிட்ட கோழைகள் நீங்களா?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அப்போ மேலே நீங்கள் குறிப்பிட்ட கோழைகள் நீங்களா?? 

நான் உங்களை மாதிரி தோல்விக்கு அடுத்தவரை குற்றம் சாட்டவில்லை அண்ணா 
திரும்பவும் முதலில் இருந்தா சுத்தம் 😞

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கும்மான் அரசிடம் போய் சேர்ந்தது பிழை என்ன கூறியவர்கள் இன்றும் கும்மானின் பின்னால்….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

நான் உங்களை மாதிரி தோல்விக்கு அடுத்தவரை குற்றம் சாட்டவில்லை அண்ணா 
திரும்பவும் முதலில் இருந்தா சுத்தம் 😞

அப்படியானால் நீங்கள் இன்னொருவருடைய சுயநலம் சார்ந்த பொய்களை மட்டும் நம்புகிறீர்கள் என்று அர்த்தம். அவை உண்மையோ வரலாறோ அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நான் உங்களை மாதிரி தோல்விக்கு அடுத்தவரை குற்றம் சாட்டவில்லை அண்ணா 
திரும்பவும் முதலில் இருந்தா சுத்தம் 😞

நீங்கள் பின்னால் நிற்கும் உங்கள் கருணா அவர்கள் தலைவர் தொடக்கம் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டிய வண்ணமே உள்ளார். ஆனால் தேர்தலில் தோற்று விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

அப்படியானால் நீங்கள் இன்னொருவருடைய சுயநலம் சார்ந்த பொய்களை மட்டும் நம்புகிறீர்கள் என்று அர்த்தம். அவை உண்மையோ வரலாறோ அல்ல.

அப்படி என்றால் நீங்கள் சொல்வது மட்டும் உண்மையோ ,வரலாறோ ஆகி விடுமோ? 
நான் கருணாவை நேரில் பார்த்து வளர்ந்தவள் ...நீங்கள் ,உங்களை போன்றோர் தலைவரையும், போராட்டத்தையும் வெளி நாட்டில் இருந்து தான் பாத்தீர்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து பஞ்சம் வரும் போது பச்சைபுள்ளி இட்டவர்களையும் சேர்த்து திட்டுவது யாழ்களத்தில் ஒரு நோயாக மாறிவிட்டது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்து என்ன பிரயோசனம், 

வளர்ச்சி என்பது தனியே உடலை மட்டும் வளர்த்துக்கொள்வது மட்டுமல்ல…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

நான் கருணாவை நேரில் பார்த்து வளர்ந்தவள் ...

அந்த பாசம் தான் நீதி நியாயங்கள் அவர் செய்த துரோகங்கள் எல்லாவற்றையும் மறைத்து விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.