Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

08.08.1992 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு படைத்த சாதனை வரலாற்றுச் சாதனை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

08.08.1992 அன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு படைத்த சாதனை வரலாற்றுச் சாதனை

08.08.1992 அன்று, வட தமிழீழம்  யாழ் அராலிப் பகுதியில் சிங்களப் படையின் கட்டுப்பாட்டுப் பகுதியுள் வெற்றிகரமாக ஊடுருவிய புலிகளின் சிறப்பு வேவுப் பிரிவு நடத்திய கண்ணிவெடித்தாக்குதலில், சிறீலங்காப் படைத்துறையின்  9 உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.  இவ் வரலாற்றுச் சாதனையை எமது உலகத்தமிழ்மக்களுக்கு  குறிப்பாக இளையோர்களுக்கும்  ஆவணப்படுத்த வேண்டும்  என்கின்ற சிந்தனையில்  தமிழீழ விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடு அன்றைய காலத்தில் பதிவுசெய்துள்ள பதிவை  பெரும்வரலாற்று  பணியில் பயணிக்கு  தமிழீழ ஆவணக்காப்பகம் இன்றைய நாளில் மீள் பதிவு   செய்துள்ளது   


 தமிழீழ விடுதலைப்புலிகளின் சிறப்பு வேவுப்பிரிவு படைத்த சாதனை வரலாற்றுச் சாதனை

 வட பிராந்திய படைத்துறை ஆணைப்பீடம் அழிக்கப்பட்டது

 

எமது இயக்கத்தின் சிறப்பு வேவுப்பிரிவினர் (Special Unit - Military Reconnaissance) துணிச்சலுடன் வைத்த - நுட்பமான கண்ணிக்குள் சிக்கி, வடபிராந்திய அதிஉயர் தளபதிகள் மூவர் உட்பட ஒன்பது உயர்நிலை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 8.8.1992 அன்று, சிங்களப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அராலிப்பகுதியில் இடம்பெற்ற ஒரு கண்ணிவெடித் தாக்குதலில், இச் சிங்களத் தளபதிகள்அழிக்கப்பட்டனர். வடதமிழீழத்தில் நடாத்தப்படும் படையெடுப்புக்களினதும், அதற்கான போர்முறைத்திட்டங்களினதும் சூத்திரதாரிகளாக மிக நீண்டகாலமாக இருந்துவரும் இந்த இராணுவ உயர் தளப திகள் - ஒரே சமயத்தில், ஒன்றாக அழிக்கப்பட்டது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. விடுதலைப் புலிகளின் சிறப்பு வேவுப் பிரிவினர் படைத்தஇவ்வரலாற்றுச் சாதனை, பாரிய அரசியல் - இராணுவ திருப்புமுனை களை ஏற்படுத்தும் என ஊகிக்கப்படுகின்றது. தமிழீழவிடுதலைப்போராட்ட வரலாற்றில் என்றுமில்லாதவாறு சிங்களப் படை ஒரு பேரழிவைச் சந்தித்துள்ளது.

 

தமிழீழ மக்களுக்கெதிரானகுறிப்பாக வடதமிழீழத்திற்கெதிரான - இன அழிப்புப் போரைத் திட்டமிட்டு, வடிவமைத்து, முன்னின்று வழி நடாத்தும் சிங்கள உயர் இராணுவ தளபதிகளுள் முக்கியமானவர்களான, வட பிராந்திய ஆணைத் தளபதி லெப்ரினன்ற் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, யாழ். மாவட்ட தரைப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜயவிமலரத்ன ,வட பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ஜயமகா உட்பட (சாவுக்குப் பின்பு பதவி உயர்த்தப்பட்டவர்கள்) சமர்க்களத்தில் படையினரை நேரடியாக வழி நடாத்தும் லெப்.கேணல் தரத்திலான மூன்று உயர் அதிகாரிகளும், மேஜர் தரத்திலான ஒரு அதிகாரியும், கடற்சண்டைகளை நேரடியாக வழிநடாத் தும் ஒரு லெப்ரினன்ற் கொமடோரும் (சாவுக்குப்பின் பதவி உயர்த்தப்பட்டவர்) ஒரு கடற்படை லெப்ரினன்ற்றும் ஒரே சம்பவத்தில் - ஒன்றாக அழிக்கப்பட்டுள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வீரசாதனையை, எமது இயக்கத்தின் சிறப்பு வேவுப்பிரிவினர் வெற்றிகரமாக நிறைவேற்றி, பாதுகாப்புடன் திரும்பியுள்ள னர். உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள இச்செய்தி, தமிழீழ மக்களுக்கு மகிழ்ச்சியையும் - உத்வேகத்தையும் கொடுத்துள்ளது.

தமிழீழ ஆவணக்காப்பகம் 

 யாழ். குடாநாட்டின் மீது ஒரு பாரிய படையெடுப்புக்கு சிங்களப்படைகள் தங்களைத் தயார் செய்துகொண்டிருந்த வேளையில், சிங்களப்படையின் கோட்டைக்குள் நுழைந்து அவர்கள் மத்தியில் ஒரு பேரழிவை ஏற்படுத்தி, படையெடுப்புத் திட்டத்தைச் சீர்குலைக்க விழைந்த எமது முயற்சி, பெருவெற்றி கண்டுள்ளது. சிங்களதேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இப்பேரழிவு,சிறீலங்கா பாதுகாப்புப் படை யைப் பொறுத்தளவில் என்றுமே ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

ஏனென்றால், இவர்களெல்லோரும் மிக நீண்டகாலப் போர் அனுபவம் மிக்க, மூத்த சிங்களத் தளபதிகளாவர்; படையினரைச் சமர்க்களத்தில் வழிநடாத்தி - சண்டையைத் தொடர்வதில், ஆளுமையும் தேர்ச்சியும் மிக்கவர்களாவர். லெப்ரினன்ற்ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவும், மேஜர் ஜெனரல் விமலரத்னவும், வடபிராந்திய கடற்படை றியர் அட்மிரல் ஜயமகாவும் எமது விடுதலைப் போர் முனைப்புப்பெற்ற காலத்திலிருந்து, வட - கிழக்குப் பகுதியிலேயே இருந்தபடி, புலிகள் இயக்கத்திற்கெதிராகப் போர்புரிந்து,

விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கக் கங்கணங்கட்டியிருந்த சிங்களத் தளபதிகளாவர்.அத்துடன், சிங்கள இராணுவ இயந்திரத்தின் முக்கிய தூண்களாக இவர்கள் இருந்துள்ளார்கள். வட பிராந்தியத்திற்கான சிங்கள கடற்படைத்தளபதிறியர் அட்மிரல்ஜயமகா, உலகின் பல நாடுகளில் சிறப்புப் போர்க்கல்விபயின்ற ஒரு மூத்த தளபதியாவர். இத்துடன், எதிர்பார்க்கப்படும் யாழ்.குடா நாட்டின் மீதான படையெடுப்பில், கடல்கடந்து துருப்பினரைக்குடாநாட்டுக்குள் தரையிறக்கிவிடும் பணிக்கு இவரே தலைமைதாங்க இருந்தார் என்று, 'வெரித்தாஸ் வானொலி குறிப்பிட்டது. சிங்களப் போர்வானின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருந்த இந்தத் தளபதிகளின் இழப்பால், சிங்கள தேசம் ஆடிப்போய் உள்ளது. (நன்றி தமிழீழ ஆவணக்காப்பகம்) - சிங்களப்படை சந்தித்துள்ள இப்பேரிழப்பு, சிறீலங்கா அரசின் இராணுவ இயந்திரத்தில் அடைக்க முடியாத ஒரு வெடிப்பை, ஏற்படுத்தியுள்ளது. 

05-07-92 அன்று இயக்கச்சியில் சுட்டு வீழ்த்தப்பட்டவை - 8 ரக இராட்சத விமானத்தில் இருந்த, வான் படையின் உயர் அதிகாரிகளான ஸ்குவார்டன் லீடர் காசீர், லெப்ரினன்ற்கள் பெர்னாண்டோ , மெண்டிஸ், ஆகியோருடன், வானூர்தி அதி காரிகளான விஜயக்கோன், பிரேமரத்ன, ரத்னாயக்க, சார்ஜன் சில்வா, உட்பட 19 வான்படையினர் கொல்லப்பட்டனர்.கடந்த ஏப்ரில் 28ஆம் திகதி தெல்லிப்பளையை நோக்கி சிங்களப்படைகள் நடாத்திய இராணுவ நடவடிக்கையின் போது, சிறீலங்கா இராணுவத் தின்5ஆவது தரைப்படைப் பிரிவின்துணைத் தளபதி லெப். கேணல் சூரியசேனனாயக்கா, மற்றும் முன்னணி தரைப்படை அதிகாரியான மேஜர் குலசன உட்பட சில இடைநிலை அதிகாரிகளும் கொல்லப்பட்டிருந்தனர். இதே போன்று 9.6.92அன்று பூநகரியில் எமது சிறப்பு வேவுப்பிரிவினர்வைத்த கண்ணிவெடிக்குள் சிக்குண்டு, ஒரு இராணுவ வாகனம்சிதறியது. அதற்குள் இருந்த கடற்படையின் உயர் நிலை அதிகாரியான லெப். கொமடோர்அஞ்சனா திசநாயக்கா, தரைப்படைத் தளபதிகளில் ஒருவரான கேணல் சித்ர - புஞ்சிஹேவா, கப்டன் கருணரத்ன ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல்,

 

UB1OK8XwMYv8Fh5T2xPK.jpg

 

 8.8.1992 அன்று அராலியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில், சிங்களப்படையின் அதிஉயர் தளபதிகளானலெப்ரினன்ற் ஜெனரல் கொப்பேகடுவ, றியர் அட்மிரல் ஜயமகா, மேஜர் ஜெனரல் விமல ரத்ன, லெப்.கேணல்கள் ஆரியரத்ன, பலிப்பான, ஸ்ரீபன் , மேஜர்அல்விஸ், கடற்படை லெப்ரினன்ற் கொமடோர்லங்காதிலக, கடற்படை லெப்ரி னன்ற் விஜயபுர ஆகியோரும் அழிக்கப்பட்டனர்.இந்த வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த கண்ணி வெடித் தாக்குதலுடன், வடபிராந்திய படைத்துறை ஆணைப்பீடம் (Northern Military Command Structure) முற்றாகவே அழிக்கப்பட்டுவிட்டது.

நன்றி 

விடுதலைப்புலிகள்  ஏடு 

 

https://www.thaarakam.com/news/2c50d580-b9ce-425f-8710-94f562fc2c98

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இவர்தான் உந்த அராலி அணிக்கு பொறுப்பாகப் போன மேஜர் ஆதித்தன் அவர்கள்..
தலைவர் மாமாவின் கையால் சிறந்த வேவிற்கான சான்றிதளைப் பெறுகிறார். இவ்வாறு பெற்றவர்களில் இவரே முதலாமவர் ஆவார்.

 

Major Aathiththan.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரைகள் எல்லாம் ஏன் இது அராலியில் நடந்தது என்கிறன?

சம்பவம் நடந்தது வேலணை தீவில் இருக்கும் அராலித்துறைக்கும் (அராலி யாழ் பெரு நிலப்பரப்பு, வலிகாமத்தில் உள்ளது) ஊர்காவற்துறைக்கும் இடையில் அல்லவா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, goshan_che said:

இந்த கட்டுரைகள் எல்லாம் ஏன் இது அராலியில் நடந்தது என்கிறன?

சம்பவம் நடந்தது வேலணை தீவில் இருக்கும் அராலித்துறைக்கும் (அராலி யாழ் பெரு நிலப்பரப்பு, வலிகாமத்தில் உள்ளது) ஊர்காவற்துறைக்கும் இடையில் அல்லவா?

அராலி என்பது அராலித்துறை கடற்பரப்பின் இப்பாலும் அப்பாலும் உள்ளது. யாழ் பண்ணை பாலம் அழிக்கப்பட்ட போது அராலித்துறை தான் தீவகத்திற்கான முக்கிய போக்குவரத்து இடமாக இருந்தது. அந்த வகையில் அராலி என்பது கடற்பரப்பின் அப்பாலும்.. இப்பாலும் அராலி என்றே அழைக்கப்படுகிறது. இது ஆழம் குறைந்த கடற்பகுதி ஆகும். 

Edited by nedukkalapoovan
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதல் நடந்த காலபகுதியில் அது  புலிகளால் ஊடுவ முடியாத பிரதேசம், தன்னைமீறிய அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டதால் கொப்பேகடுவ பிரேமதாசவினால்தான் போட்டு தள்ளப்பட்டார் என்றுஒரு கதையும் பரவலாக தமிழ் மக்களிடையே உலவியது.

 

கொப்பேகடுவ வடமராட்சியை ஒபரேசன் லிபரேசன்மூலம் கைபற்றியவர். பல கிலோ மீட்டருக்கு அப்பால் பாதுகாப்பாக இருந்துகொண்டு வோக்கி டோக்கியில் கட்டளையிடாது  களத்தில் நேரடியாகவே ராணுவத்துடன் நிற்பவர்,பின்வாங்கும் ராணுவத்தை சுட சொல்லி ஒரு அணியை அனுப்பிவைப்பார் என்றும் பேசிகொள்வார்கள், அவர் களத்தில் இறங்கிய தாக்குதல்களில் பெரும்பாலானவை வியதகு வெற்றிகள்...

இப்படி பேசும்போது புலிகளில் ஒருவர் நினைவுக்கு வரவேண்டுமே..

ஆம் அவர் சிங்களவர்களின் பால்ராஜ், சிங்கள ராணுவமும் சிங்களவர்களும் எப்படி மனதுக்குள் பால்ராஜை ஒரு தீரமிகு தளபதியென்று மெச்சினார்களோ அதேபோன்று புலிகளும் போர்முறையில் மரியாதை செய்த தளபதி கொப்பேகடுவ,

அதனால்தால் அராலிதுறையில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கையின்போது அந்த பகுதியில் உள்ள கொப்பேகடுவவின் நினைவு சின்னத்துக்கு சேதம் விளைவிக்ககூடாது என்று தமக்கு கட்டளையிடப்பட்டதாக ஐரோப்பாவின் நான் சந்தித்த ஒரு முன்னாள் போராளிகூறியிருந்தார். அதன் உண்மை பொய் முழு விபரம் அறியேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nedukkalapoovan said:

அராலி என்பது அராலித்துறை கடற்பரப்பின் இப்பாலும் அப்பாலும் உள்ளது. யாழ் பண்ணை பாலம் அழிக்கப்பட்ட போது அராலித்துறை தான் தீவகத்திற்கான முக்கிய போக்குவரத்து இடமாக இருந்தது. அந்த வகையில் அராலி என்பது கடற்பரப்பின் அப்பாலும்.. இப்பாலும் அராலி என்றே அழைக்கப்படுகிறது. இது ஆழம் குறைந்த கடற்பகுதி ஆகும். 

நிச்சயமாக தெரியுமா?

ஏனென்றால்,

நான் முன்னர் பண்ணை பாலம் வழியே போக்குவரத்து இல்லாத சமயம் - அராலிக்கு போய், அங்கிருந்து வள்ளம் மூலம் அராலித்துறை போய் கரம்பன் போயுள்ளேன்.

பண்ணை பாலம் கட்ட முதல் இதுதான் தீவுப்பகுதிக்கு போகும் வழி எனவும், ஒருபக்கம் அராலி ( வலிகாமம்), மறுபக்கம் அராலித்துறை (வேலணை) எனவும் சொல்லபடுவதாக என்னுடன் கூட வந்த நல்ல ஒரு அனுபவசாலி, வயசாளி சொன்னார்.

தவிரவும் வேலணை-ஊர்காவற்றுறை வீதியில் அராலி ரோட் பிரியும் சந்தியில் உள்ள வெள்ளைகாரர் கால கல்லிலால் ஆன sign post ஐயும் காட்டினார் அதில் to Araly எனவும் “அராலிக்கு” எனவும் பொறிக்கபட்டிருந்தது. ஏனைய இடங்கள் “வேலணை” “ஊர்காவற்றுறை” என “க்கு” போடாமல்  பொறிக்கபட்டிருந்தது. அராலி கடல்நீரேரியின் அந்தபக்கம் என்பதாலே அப்படி பொறிக்கபட்டிருப்பதாகவும் சொன்னார். 

நான் மிக சிறு வயதில் இருபகுதி மக்களிடம் நெருக்கமாக பழகியுள்ளேன், அராலித்துறை (தீவகம்), அராலி ( வலிகாமம்) என்றே பேச்சு வழக்கு இருந்ததாக நியாபகம்.

ஆனால் விடுதலைபுலிகள் ஏடு இப்படி ஒரு தவறை விட வாய்ப்பு இல்லை. எனவே நீங்கள் சொல்வது சரியாக இருக்க வேண்டும்.

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

இந்த தாக்குதல் நடந்த காலபகுதியில் அது  புலிகளால் ஊடுவ முடியாத பிரதேசம், தன்னைமீறிய அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டதால் கொப்பேகடுவ பிரேமதாசவினால்தான் போட்டு தள்ளப்பட்டார் என்றுஒரு கதையும் பரவலாக தமிழ் மக்களிடையே உலவியது.

எப்படி விக்ரர் கிட்டரின் ஆக்களினால் கொல்லப்பட்டார் என்று ஒரு கதை உலவியதோ அதுபோல.

கொப்பேகடுவ வடமராட்சியை ஒபரேசன் லிபரேசன்மூலம் கைபற்றியவர். பல கிலோ மீட்டருக்கு அப்பால் பாதுகாப்பாக இருந்துகொண்டு வோக்கி டோக்கியில் கட்டளையிடாது  களத்தில் நேரடியாகவே ராணுவத்துடன் நிற்பவர்,பின்வாங்கும் ராணுவத்தை சுட சொல்லி ஒரு அணியை அனுப்பிவைப்பார் என்றும் பேசிகொள்வார்கள், அவர் களத்தில் இறங்கிய தாக்குதல்களில் பெரும்பாலானவை வியதகு வெற்றிகள்...

இப்படி பேசும்போது புலிகளில் ஒருவர் நினைவுக்கு வரவேண்டுமே..

ஆம் அவர் சிங்களவர்களின் பால்ராஜ், சிங்கள ராணுவமும் சிங்களவர்களும் எப்படி மனதுக்குள் பால்ராஜை ஒரு தீரமிகு தளபதியென்று மெச்சினார்களோ அதேபோன்று புலிகளும் போர்முறையில் மரியாதை செய்த தளபதி கொப்பேகடுவ,

அதனால்தால் அராலிதுறையில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கையின்போது அந்த பகுதியில் உள்ள கொப்பேகடுவவின் நினைவு சின்னத்துக்கு சேதம் விளைவிக்ககூடாது என்று தமக்கு கட்டளையிடப்பட்டதாக ஐரோப்பாவின் நான் சந்தித்த ஒரு முன்னாள் போராளிகூறியிருந்தார். அதன் உண்மை பொய் முழு விபரம் அறியேன்.

சந்திரிகா அமைத்த ஒரு ஜனாதிபதி ஆணைகுழுவும் பிரேமதாச மீதும் இன்னொரு உயர் அதிகாரி மீதும் பழியை போட்டது.

நான் அறிந்தவரையில் இந்த பிரயாணம் போகும் திட்டத்தில் கொப்பேகடுவ இருக்கவில்லை எனவும் முதல்நாள் இரவு விஜய விமலரத்ன சொல்லியே பயணம் தீர்மானிக்கப்பட்டதாயும் சொல்வார்கள்.

தவிரவும் கடல்நீரேரிக்கு அப்பால் இருந்து இலக்கு வைக்கப்படலாம் என்பதாலேயே, மூன்று வாகனங்களில் போனோர் இறங்கி ஒரே வாகனத்தில் ஏறியதாயும், இதுவும் விமலரத்னவின் ஏற்பாடே என்றும் சொல்வார்கள். இல்லாவிடில் அதிகாரிகள் இப்படி ஒரே வாகனத்தில் போவது security protocol ற்கு முரணானதாம்.

புலிகள் இவர்களை எதிர்பார்த்துத்தான் இந்த கண்ணிவெடியை வைத்தார்களா?

அல்லது அராலிதுறைக்கு வரும் ஏதோ ஒரு ஜீப்புக்கு வைத்த குறி இவர்களில் பட்டதா?

இவர்களை எதிர்பார்த்துத்தான் குறிவைக்கப்பட்டது என்றால் - உள்வீட்டு தகவல் புலிகளுக்கு வந்ததா?

அப்படி வந்தாலும் 1992 இல், சடுதியாக இவர்கள் எடுத்த அராலி துறைக்கு போகும் முடிவு, எல்லாரும் ஒரே ஜீப்பில் போகும் முடிவு எப்படி அவ்வளவு விரைவாக எதிர் தரப்பை வந்தடைந்து இருக்கும்?

எல்லாம் விடை தெரியா கேள்விகள்.

 

 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சடுதியாக இவர்கள் எடுத்த அராலி துறைக்கு போகும் முடிவு, எல்லாரும் ஒரே ஜீப்பில் போகும் முடிவு எப்படி அவ்வளவு விரைவாக எதிர் தரப்பை வந்தடைந்து இருக்கும்?

கோசான் கேட்டதுதான் அந்தகாலகட்டத்தில் பலரின் சந்தேகத்திற்குரிய காரணமாகவிருந்தது.

வேவுபுலிகள் பொதுவாக பல மாதங்கள்/வாரங்கள் ஒரு இலக்கை வேவு பார்த்து முடிவில் தாக்குதல் நடத்துவார்கள்,

ஆனால் அந்த சம்பவத்தில் ஏறக்குறைய ஒட்டுமொத்த வடக்கின் ராணுவ கட்டளை, தாக்குதல் தலைமைபீடமே அழிந்து போனது.

இவர்கள் அனைவரும் அடிக்கடி ஒன்றாய் வந்துபோகவும் வேவு பார்க்கப்பட்டு அவர்கள் அழித்தொழிக்கப்பட  வாய்ப்பே  இல்லையென்பதும்தான் அப்போதைய விவாத பொருளாய் இருந்தது.

எது எப்படியாக இருந்திருந்தாலும் அந்தகாலகட்டத்தில் அது ஒரு மகிழ்ச்சியான தரமான சம்பவம்தான்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • 2 months later...
 • கருத்துக்கள உறவுகள்+

அராலியில் கண்ணிவெடி புதைப்பதற்கான வேவுப் பணியில் ஈடுபட்டு வெவ்வேறு சம்பவங்களில், வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு இடங்களில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகள்

 

"தூங்கிக் கிடந்த 
உள்ளங்கள் யாவும்
துள்ளி எழுந்தது பார்"

 

இவ்வண்ணாக்களது உடல்கள் கூட எமக்கு கிடைக்கவில்லை!

 

Araali heroes.jpg

 

தகவல்: களத்தில் 27/11/1992 பக்- 14
இவர்கள் செய்த பணிகள் இவ்விதழில் பதியப்பட்டுள்ளது.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.