Jump to content

'நாளொன்றுக்கு 200 - 300 பேர் வரை மரணிக்கலாம்': அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாடு..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்படீருக்கு..யாழ்ப்பாணத்திலை வாத்திமார் ஊர்வலம் நடத்தீனம்...இது எங்கை போய் முடியப்போகுதோ..

Link to comment
Share on other sites

  • Replies 82
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

நெடுக்கு, இதன் அடிப்படையில் பார்த்தால் அஸ்ரா செனிக்காவை விட சினோபார்ம் (Sinopharm) 3.1 வீதம் மாத்திரமே  வினைத்திறன் குறைவானதாக இருக்கின்றது. எனவே இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லையல்லவா? அத்துடன் சினோபார்ம் இற்கு குறிப்பிட்டுச் சொல்லும்படி பின் விளைவுகளும் இல்லை. சேமிப்பதும் இலகு. ஆனால் இரண்டாவது டோசையும் போட்டால் மட்டுமே 79 வீதம் வினைத்திறன் கிடைக்கும்.

இருக்கிறது. சினோபாம்.. போடக் கூடிய வயதெல்லையை கவனியுங்கள். 18 - 60 தான் சரியான அங்கீகரிப்பட்ட வயதெல்லை. ஆனால்.. அப்படியா போடப்படுகிறது வடக்குக் கிழக்கில்..??!  மேலும் ஒரு தடுப்பூசியால் வரும் கொரோனா எதிர்ப்பு அஸ்ரா செனிக்காவில் அதிகம்.. ஒட்டுமொத்த சதவீதமும் அதிகம்.  மேலும் அதிகம் பாவிக்கப்பட்ட பக்கவிளைவுகள் அவதானிக்கப்பட்ட தடுப்பூசிகள் என்று பார்த்தால் பைசர்.. அஸ்ரா செனிக்கா முன்னணியில். சினோபாம்.. ஒப்பீட்டளவில் சிறிய சனத்தொகைக்கே வழங்கப்பட்டிருக்குது.. விளைவுகள் அவதானிக்கப்பட்டிருக்குது. 

எனவே எது.. அதிக வினைத்திறன் என்று நோக்கும் போது..சினோபாமை பிரேரிக்க தயங்கத்தான் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nedukkalapoovan said:

கிழக்கில் பைசர் போட்டவர்களையும் தெரியும்...கொழும்பில் இருப்பவர்களில்  சினோபாம் போட்டவர்களும் இருக்கிறார்கள்.
சிங்கள பகுதிகளில் தரமான ஊசிகள் போடப்படுகுது என்றால் ஏன் அங்கு இறப்பு வீதம் அதிகமாய் இருக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nochchi said:

அடிக்கடி வரமுடியவில்லை. நன்றி.

அரசியலில் சிறந்த நடிகனுக்குப் போட்டி வைத்தால் ரணில் முதலிடத்தைப் பெறுவார். நான் எதிர்பது மாதிரி எதிர்ப்பேன் நீங்கள் சிங்களத்தை வளப்படுத்துங்கள் என்பதே இவரது சூழ்ச்சி. இனப்படுகொலையாடிய படைகளுக்கு வெள்ளையடிக்கும் வேலை. அதோடு பரியாருமாருக்கும் தட்டுப்பாடோ தெரியவில்லை. 

ஏராளன் அவர்களிடம் ஒரு வினா. எப்படியிருக்கிறது தடுப்பூசி போடும் வேகம். எத்தனைவீதம் பேருக்குப் போட்டிருப்பார்கள் என்று அறியமுடியுமா?

நன்றி

நான் போட்ட நாளில் 333 நபர்கள் போட்டவர்கள். மக்கள் தடுப்பூசி போடுகிறார்கள். இங்க இப்ப 30 வயதிற்கு மேற்பட்டோரிற்கே தடுப்பூசி போடப்படுகிறது.
எங்களது பிரதேச செயலகப்பிரிவில் 26000 பேரில் 24000 பேரிற்கு ஊசி போடப்பட்டதாக ஒரு தகவல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  களத்தில் Johnson & Johnson vaccine போட்டுக்கொண்டவர்கள் யாரவது இருக்கிறீர்களா?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே விளங்க நினைப்பவன் இணைத்த தகவலின் படி சினோபாம் தற்போது உலக ரீதியில் மூன்றாவது அதிக புளக்கத்தில் இருக்கும் தடுப்பூசி. 18- 60 வயதுப் பிரிவினரில் 78% பாதுகாப்பை தொற்றிலிருந்து தருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தடுப்பூசி ஆய்வு அமைப்பு SAGE மே மாதமே முடிவை வெளியிட்டு அங்கீகாரமும் வழங்கி விட்டது.
கோவிஷீல்ட் (அஸ்ட்ரா செனக்கா) ஒரு டோஸ் டெல்ரா வைரசிடமிருந்து  பாதுகாப்புத் தருகிறது என அஸ்ட்ரா செனக்கா கனேடிய கள ஆய்வுகளை வைத்துச் சொல்லியிருக்கிறது, எனவே அந்த வகையில் கொவிஷீல்ட் சிறந்தது என்பது உண்மை. ஆனால், சினோபாம் இது போன்ற ஆய்வுகளைச் செய்திருக்கிறதா என்பது தெரியவில்லை.

தற்போதைய நிலையில், எந்தத் தடுப்பூசி கிடைக்கிறதோ அவற்றை முழுமையாக மக்கள் எடுத்துக் கொள்ள ஊக்குவிப்பதே மக்களைக் காக்க ஒரே வழி.  எல்லாமே அவசர கால அனுமதி (EUA) கொண்ட ஊசிகள் - இதற்குள் சீனா, சிங்களவர் மீதான கோபத்தை இங்கே போட்டுக் குழப்பிக் கொள்வது உரிய செயலல்ல!   

சினோபாம் என்பது போலியோ, றேபிஸ் போன்ற பழைய தடுப்பூசிகளின் முறையில் தயாரிக்கப் பட்ட தடுப்பூசி - மேலதிக தகவல்களை தேடி அறிந்து கொள்ளுங்கள்:   

https://www.nytimes.com/interactive/2020/health/sinopharm-covid-19-vaccine.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

கிழக்கில் பைசர் போட்டவர்களையும் தெரியும்...கொழும்பில் இருப்பவர்களில்  சினோபாம் போட்டவர்களும் இருக்கிறார்கள்.
சிங்கள பகுதிகளில் தரமான ஊசிகள் போடப்படுகுது என்றால் ஏன் அங்கு இறப்பு வீதம் அதிகமாய் இருக்கு?

வடக்குக் கிழக்கில் மக்களுக்கு அதிகம் போடப்படுவது சினோபாம் தான். பைசர்.. அரச சார்பு.. இராணுவ ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கு இராணுவக் கையிருப்பில் வைத்துப் போடப்படுகிறது.

சிங்கள மக்கள் மத்தியில் தொற்று அதிகம் என்பதாலும்.. சிங்கள அரசு.. சிங்கள மக்கள் மீது அதீத இராணுவக் கெடிபிடிகளை பிரயோக்காததாலும் மக்கள்.. சுய சுகாதாரப் பாதுகாப்பின்றி.. இயல்பு வாழ்க்கை வாழ முனைவதால்.. தொற்று அதிகரிக்கிறது.. அதுவே மரணங்களை அதிகரிக்கிறது.

ஆனால்.. வடக்குக் கிழக்கை விட.. தென்னிலங்கையில்.. சினோபாமை விட மற்றைய கூடிய வினைத்திறனான தடுப்பூசிகளை மக்கள் இலகுவாக போட முடிகிறது. ஏன் அந்த நிலை வடக்குக் கிழக்கு மக்களுக்கு இல்லை என்பது தான் கேள்வி.

மேலும் சினோபாம் 18-60 வயதெல்லைக்குள் தான் போட பிரேரிக்கப்பட்டும்.. வடக்குக் கிழக்கில் வயது மூத்த சமூகத்தினருக்கு ஏன் போடப்படுகிறது..???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

நான் போட்ட நாளில் 333 நபர்கள் போட்டவர்கள். மக்கள் தடுப்பூசி போடுகிறார்கள். இங்க இப்ப 30 வயதிற்கு மேற்பட்டோரிற்கே தடுப்பூசி போடப்படுகிறது.
எங்களது பிரதேச செயலகப்பிரிவில் 26000 பேரில் 24000 பேரிற்கு ஊசி போடப்பட்டதாக ஒரு தகவல்.

தங்களின் தகவல்களுக்கு நன்றி ஏராளன். நீங்களும் பாதுகாப்பாக இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nedukkalapoovan said:

வடக்குக் கிழக்கில் மக்களுக்கு அதிகம் போடப்படுவது சினோபாம் தான். பைசர்.. அரச சார்பு.. இராணுவ ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கு இராணுவக் கையிருப்பில் வைத்துப் போடப்படுகிறது.

சிங்கள மக்கள் மத்தியில் தொற்று அதிகம் என்பதாலும்.. சிங்கள அரசு.. சிங்கள மக்கள் மீது அதீத இராணுவக் கெடிபிடிகளை பிரயோக்காததாலும் மக்கள்.. சுய சுகாதாரப் பாதுகாப்பின்றி.. இயல்பு வாழ்க்கை வாழ முனைவதால்.. தொற்று அதிகரிக்கிறது.. அதுவே மரணங்களை அதிகரிக்கிறது.

ஆனால்.. வடக்குக் கிழக்கை விட.. தென்னிலங்கையில்.. சினோபாமை விட மற்றைய கூடிய வினைத்திறனான தடுப்பூசிகளை மக்கள் இலகுவாக போட முடிகிறது. ஏன் அந்த நிலை வடக்குக் கிழக்கு மக்களுக்கு இல்லை என்பது தான் கேள்வி.

மேலும் சினோபாம் 18-60 வயதெல்லைக்குள் தான் போட பிரேரிக்கப்பட்டும்.. வடக்குக் கிழக்கில் வயது மூத்த சமூகத்தினருக்கு ஏன் போடப்படுகிறது..???! 

நெடுக்கர் ,நீங்களே சொல்லி விட்டீர்கள் ஊசி போட்டாலும் சமூக இடைவெளி ,மாஸ்க் அணிதல் முக்கியம் என்று , அவற்றின் மூலமே கட்டுப்படுத்தலாம்...அப்படி இருக்கும் போது இப்பத்தைய சூழ்நிலையில் கிடைக்கின்ற எந்த ஊசியையாவது போட்டு கொரோனாவை கட்டுப்படுத்தட்டுமே!
இந்த ஊசி போட்டு அதன் ஒவ்வாமையால் மக்கள் அதிகமாய் இறந்தால் தான்  குறித்து கவலைப்பட வேண்டும்.
மேலும்,உங்களை போல மருத்துவ துறை சார்ந்தவர்கள் ,புலம் பெயர் தேசத்தில் இருப்பவர்கள் பொறுப்பாக பதில் எழுத வேண்டும் ....இங்கேயிருந்து கொண்டு அஸ்ராவும்,பைசரும் போட்டு விட்டு அங்கேயிருப்பவர்களை சினோபாம் போடாதே என்று தூண்டி விடக் கூடாது ...உண்மையிலேயே அந்த மக்கள் மீது அக்கறை இருந்தால் அஸ்ரா, பைசர் வேண்டி அனுப்புங்கோ.
இலங்கையில் 80% ஆன மக்களுக்கு சினோபாம் தான் போடப்படுகின்றது ...ஒன்று அந்த மக்களுக்கு நீங்கள் உதவி  செய்யுங்கோ அல்லது எந்த ஊசியையாவது போட்டு அந்த மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ளட்டும் என்று விடுங்கோ ...அவர்களை இங்கேயிருந்து கொண்டு குழப்ப வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக நண்பர் கூறினவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஏராளன் said:

மன்னார் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக நண்பர் கூறினவர்

தமிழர்களுக்கு சினோபார்மும் சிங்களவர்களுக்கு பைசரும் என்று இங்கே சொன்னார்களே 😂

[கொழும்பில் எனது உறவினர்  வேலைசெய்யும் சிங்களவர்களுடன் சினோபார்ம் தான் போட்டு கொண்டார்.]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நெடுக்கர் ,நீங்களே சொல்லி விட்டீர்கள் ஊசி போட்டாலும் சமூக இடைவெளி ,மாஸ்க் அணிதல் முக்கியம் என்று , அவற்றின் மூலமே கட்டுப்படுத்தலாம்...அப்படி இருக்கும் போது இப்பத்தைய சூழ்நிலையில் கிடைக்கின்ற எந்த ஊசியையாவது போட்டு கொரோனாவை கட்டுப்படுத்தட்டுமே!
இந்த ஊசி போட்டு அதன் ஒவ்வாமையால் மக்கள் அதிகமாய் இறந்தால் தான்  குறித்து கவலைப்பட வேண்டும்.
மேலும்,உங்களை போல மருத்துவ துறை சார்ந்தவர்கள் ,புலம் பெயர் தேசத்தில் இருப்பவர்கள் பொறுப்பாக பதில் எழுத வேண்டும் ....இங்கேயிருந்து கொண்டு அஸ்ராவும்,பைசரும் போட்டு விட்டு அங்கேயிருப்பவர்களை சினோபாம் போடாதே என்று தூண்டி விடக் கூடாது ...உண்மையிலேயே அந்த மக்கள் மீது அக்கறை இருந்தால் அஸ்ரா, பைசர் வேண்டி அனுப்புங்கோ.
இலங்கையில் 80% ஆன மக்களுக்கு சினோபாம் தான் போடப்படுகின்றது ...ஒன்று அந்த மக்களுக்கு நீங்கள் உதவி  செய்யுங்கோ அல்லது எந்த ஊசியையாவது போட்டு அந்த மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ளட்டும் என்று விடுங்கோ ...அவர்களை இங்கேயிருந்து கொண்டு குழப்ப வேண்டாம் .

நன்றாக சொன்னீர்கள் ரதி..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

மன்னார் மாவட்டத்திற்கு ஒரு தொகுதி பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக நண்பர் கூறினவர்.

மன்னார் மாவட்டத்திற்கு என 20 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி, மன்னார் பிரதேசச் செயலாளர் உட்பட சுகாதாரத் துறையினர் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

https://tamilwin.com/article/first-step-leadership-vaccinating-the-pfizer-covid-1625903924

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன் ஹொப்கின்ஸ் கண்காணிப்புத் தரவுகளின் படி, இலங்கையில் நேற்றைய ஒரு நாள் மரணங்கள் 118.

இலங்கையில் இன்றைக்கு முதலாவது ஊசி போடும் ஒருவர் - போடப் படும் ஊசி வகையைப் பொறுத்து - 5 அல்லது 6 வாரங்களின் பின்னர் தான் முற்றான பாதுகாப்பைப் பெறுவார். எனவே அடுத்த 5 வாரங்களின்  பின்னர் தான் தடுப்பூசிகளின் நல்விளைவுகள் இலங்கையில் தெரியவரும் - மரணங்களும், தொற்றுகளும் குறைய ஆரம்பிக்கும்!

அது வரை நாளாந்த மரணங்கள் அதிகரிக்கும்.

குறைக்க ஒரே வழி - வீடுகளில் இருக்கக் கூடியோர் வீடுகளில் முடங்கியிருப்பதே! வேலைக்குப் போக வேண்டியோர் முகக் கவசம், கைச்சுத்தம் போன்றவற்றை நம்பியிருக்க வேண்டியது தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

நெடுக்கர் ,நீங்களே சொல்லி விட்டீர்கள் ஊசி போட்டாலும் சமூக இடைவெளி ,மாஸ்க் அணிதல் முக்கியம் என்று , அவற்றின் மூலமே கட்டுப்படுத்தலாம்...அப்படி இருக்கும் போது இப்பத்தைய சூழ்நிலையில் கிடைக்கின்ற எந்த ஊசியையாவது போட்டு கொரோனாவை கட்டுப்படுத்தட்டுமே!
இந்த ஊசி போட்டு அதன் ஒவ்வாமையால் மக்கள் அதிகமாய் இறந்தால் தான்  குறித்து கவலைப்பட வேண்டும்.
மேலும்,உங்களை போல மருத்துவ துறை சார்ந்தவர்கள் ,புலம் பெயர் தேசத்தில் இருப்பவர்கள் பொறுப்பாக பதில் எழுத வேண்டும் ....இங்கேயிருந்து கொண்டு அஸ்ராவும்,பைசரும் போட்டு விட்டு அங்கேயிருப்பவர்களை சினோபாம் போடாதே என்று தூண்டி விடக் கூடாது ...உண்மையிலேயே அந்த மக்கள் மீது அக்கறை இருந்தால் அஸ்ரா, பைசர் வேண்டி அனுப்புங்கோ.
இலங்கையில் 80% ஆன மக்களுக்கு சினோபாம் தான் போடப்படுகின்றது ...ஒன்று அந்த மக்களுக்கு நீங்கள் உதவி  செய்யுங்கோ அல்லது எந்த ஊசியையாவது போட்டு அந்த மக்கள் தங்களை காப்பாற்றி கொள்ளட்டும் என்று விடுங்கோ ...அவர்களை இங்கேயிருந்து கொண்டு குழப்ப வேண்டாம் .

அப்ப அங்க உள்ள அப்பு ஆச்சிமார் எல்லாம் ஒவ்வாத மருந்தை போட்டு சாகட்டும். நாங்கள் ஒவ்வும் மருந்தை போட்டிட்டு யாழில சிங்களவனுக்கு ஒத்தூதுவம்.

ஏன் புலிகளை அழிச்ச எமக்கு கொரோனாவை அழிக்கிறது பெரிய வேலை இல்லை என்று வெட்டி வீரம் பேசிக்கிட்டு இருந்த காலங்களில்.. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை செய்திருக்கலாமே.

சிங்கப்பூர்.. நியூசிலாந்து.. அவுஸி.. போன்ற நாடுகளை உதாரணமாகக் கொண்டு.. உருப்படியான வேலைத்திட்டங்களை அந்தக் கால இடைவெளியில் முன்னெடுத்திருந்தால்.. இப்ப இப்படி அரையும் குறையுமான ஊசிகளைப் போட்டு சனத்தை கொரோனாவுக்கு மேலதிகமாகச் சாகடிக்கனுன்னு வந்திருக்காதே.

ஒருபோதும் உங்களுக்கு நியாயமாகச் சிந்திக்க வராதா..??!

உங்கள் கருத்துக்கு லைக் போட்ட அந்த 3 பேருக்கும் சினோபாம் போடுவம் வாங்கோ என்றால் விழுந்தடிச்சு ஓடுவினம். 

சினோபாமை உலக சுகாதார ஸ்தாபனமே அவசரகால தடுப்பூசின்னு தற்காலிகமான அங்கீகாரத்தையே வழங்கி இருந்தது.  குறிப்பாக 60 வயதுக்கு மேலானவர்களுக்கு போடும் போது கூடிய கண்காணிப்பையும் கோரியே நிற்கிறது. சொறீலங்காவில் அப்படியா நடக்குது.

சும்மா சிங்களவனுக்கு வக்காளத்துக்கு வாங்கனும் என்பதற்காக சொந்த மக்களை பலியிடக் கூடாது. 

WHO lists additional COVID-19 vaccine for emergency use and issues interim policy recommendations.

Few older adults (over 60 years) were enrolled in clinical trials, so efficacy could not be estimated in this age group. WHO therefore recommends that countries using the vaccine in older age groups conduct safety and effectiveness monitoring to make the recommendation more robust.

https://www.who.int/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

. அவுஸி.. போன்ற நாடுகளை உதாரணமாகக் கொண்டு..

இன்று அவுஸ்ரேலியாவில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை.. ஏழாவது கிழமையாக NSW lockdown..

AstraZeneca பற்றி இங்கே பயமுறுத்தி வைத்திருப்பதால் எல்லோரும் Pfizerதான் போடுவோம் என இருக்கிறார்கள்.. பாதிக்கப்பட்டுள்ளது நடுத்தர மற்றும் வறிய மக்களே.. 

அவுஸ்ரேலியா முன்னேறிய நாடு எனக்கூறினாலும் இங்கே உள்ள அரசாங்கம் இந்த தடுப்பு ஊசி விடயத்தில் எத்தனை பிழைகள் விட்டது என்பதை இங்குள்ளவர்கள் அறிவார்கள்.. 

போதாக்குறைக்கு தடுப்பு ஊசி போடமாட்டோம்.. lockdown எதிர்த்து ஊர்வலம் கூட வைத்திருக்கிறார்கள் இந்த முன்னேறிய நாட்டில் வாழும் மக்கள்..ஊசியும் போடுகிறார்கள் இல்லை, lockdown restrictions ஒழுங்காக கடைப்பிடிக்கிறார்களும் இல்லை.. இந்த நிலையில் அவுஸ்ரேலியா ஒரு பிழையான உதாரணம்..

மேலும், நீங்கள் ஒன்றை கவனத்தில் கொண்டால் மிகவும் நல்லது..

இன்றைய நிலையில், இலங்கையில் இருக்கும் அதுவும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்பவர்களின் உரிமை, சுதந்திரம் எந்த நிலையில் உள்ளது என்பதையும், சும்மாவே விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், தடுப்பு ஊசி போடுவதில் தயக்கம் உள்ள இடத்தில் அது சரியில்லை.. இது பிழை.. எங்களுக்கு AstraZeneca அல்லது Pfizerஅதன் வேண்டும் என்றால் தரவிருக்கும் ஊசியை கூட தராமல் போகும் அரசாங்கமே உள்ளது..

ஒவ்வொரு முறையும் நான் எனது தந்தையுடனும் தங்கையுடனும் கதைக்கும் பொழுது  “ இங்கே தரும் ஊசியை தானே போட முடியும்” என  அவர்கள் கூறும் பொழுது அவர்களின் குரலில் இருக்கும் இயலாமையை என்னால் உணரமுடியும்.. அந்த சமயத்தில் நான் அவர்களிடம் இந்த ஊசி சரியில்லை என கூறமுடியுமா?

எங்களின் அரசியல் தலைவர்களும் சரியில்லாது இருக்கும் பொழுது மக்கள் தங்களுக்கு கிடைக்கும் வசதிவாய்ப்புக்களிற்கேற்பவே நடக்கமுடியும்..

எத்தனை விழிப்புணர்வு நடவடிக்கைகளை செய்தும் என்ன இந்த மாமாங்கம் கோவிலில் நடந்தது என்ன? ஆலய நிர்வாகம் சரியான முறையில் நடந்திருந்தால் இந்த நிலமை வந்திருக்குமா? நல்லூரில் நாளை திருவிழாவிற்கு உபயகாரர் மட்டுமே கோயில் உட்பிரகாரத்திற்கு செல்லமுடியும்.. ஏன் இந்த மாதிரி ஒரு செயலை மாமாங்கம் செய்ய முடியவில்லை.. 

இப்படியெல்லாம் நடக்கும் பொழுது இந்த ஊசி சரியில்லை வினைத்திறன் இல்லாத ஒன்று என கூறி ஊசி போடவருபவர்களையும் தடுப்பது சரியா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஏமாற்றகரமான விடயம் என்னவென்றால் தடுப்பூசிகளின் வகைகள் பற்றி இங்கே கிளப்பப் படும் பீதிகள் வலுவான விஞ்ஞான அடிப்படைகள் அற்றவை! அரசியல் நோக்கங்களுக்காக விஞ்ஞானத் தரவுகளை தெரிவு (cherry-pick) செய்து எடுத்து ஆயுதமாக்குகிற வேலை நடக்கிறது!

உதாரணமாக: அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியில் இருக்கும் பெருமளவிலான டி.என்.ஏ காரணமாகத் தான் ஒரு மில்லியனில் நால்வருக்கு (இது மருத்துவ ரீதியில் அரிதான எண்ணிக்கை) குருதிக் கட்டி நிலை (VITT) ஏற்படுவதாக ஒரு வலுவான தியரி இருக்கிறது. வலுவிழக்கச் செய்யப் பட்ட சார்ஸ் கோவி 2 வைரசுகளால் உருவாக்கப் பட்ட சினோபாம் தடுப்பூசியில் டி.என்.ஏ இல்லை - ஏற்கனவே பயன்பாட்டிலிருக்கும் போலியோ தடுப்பூசிகள் போல சினோபாம் பாதுகாப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். Ideally, நிறுவ வேண்டியது அவசியம், ஆனால் அஸ்ட்ரா செனக்காவை விட குருதிக் கட்டிகள் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் சினோபாமில் குறைவு என உயிரியல் அடிப்படையில் எதிர்வுகூறலாம்!

இதையெல்லாம் மக்களுக்கு நுணுக்கமாக விளக்க வேண்டியதில்லை, குறைந்த பட்சம் ஒருவர் தனக்குத்   தெரிந்த விஞ்ஞானத்தை அரசியல் ஆயுதமாக மலினப் படுத்தாமல் இருந்தாலே போதும் - மக்கள் பிழைத்துக் கொள்வர்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

அதே!! என்னைப்பொறுத்தவரையில் சைனோபார்ம் மற்றய தடுப்பூசிகளுக்கு  ஒப்பானதே.  அமெரிக்கா, பிரித்தானியா சார்ந்த பெரிய மருந்து நிறுவனங்கள் அது சீன தயாரிப்பு என்பதால் அதை முடக்கப்பார்க்கின்றன. 

வைரஸை அனுப்பியவனுக்கு தெரியாதா எந்த தடுப்பூசி சரிவரும் என்று!!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Eppothum Thamizhan said:

அதே!! என்னைப்பொறுத்தவரையில் சைனோபார்ம் மற்றய தடுப்பூசிகளுக்கு  ஒப்பானதே.  அமெரிக்கா, பிரித்தானியா சார்ந்த பெரிய மருந்து நிறுவனங்கள் அது சீன தயாரிப்பு என்பதால் அதை முடக்கப்பார்க்கின்றன. 

உங்கள் கருத்தில் உண்மை இருக்கலாம்.

வைரஸை அனுப்பியவனுக்கு தெரியாதா எந்த தடுப்பூசி சரிவரும் என்று!!😜

இதை சொல்லி தான் மனச தேற்ற வேண்டி இருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்று அவுஸ்ரேலியாவில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை.. ஏழாவது கிழமையாக NSW lockdown..

AstraZeneca பற்றி இங்கே பயமுறுத்தி வைத்திருப்பதால் எல்லோரும் Pfizerதான் போடுவோம் என இருக்கிறார்கள்.. பாதிக்கப்பட்டுள்ளது நடுத்தர மற்றும் வறிய மக்களே.. 

அவுஸ்ரேலியா முன்னேறிய நாடு எனக்கூறினாலும் இங்கே உள்ள அரசாங்கம் இந்த தடுப்பு ஊசி விடயத்தில் எத்தனை பிழைகள் விட்டது என்பதை இங்குள்ளவர்கள் அறிவார்கள்.. 

போதாக்குறைக்கு தடுப்பு ஊசி போடமாட்டோம்.. lockdown எதிர்த்து ஊர்வலம் கூட வைத்திருக்கிறார்கள் இந்த முன்னேறிய நாட்டில் வாழும் மக்கள்..ஊசியும் போடுகிறார்கள் இல்லை, lockdown restrictions ஒழுங்காக கடைப்பிடிக்கிறார்களும் இல்லை.. இந்த நிலையில் அவுஸ்ரேலியா ஒரு பிழையான உதாரணம்..

மேலும், நீங்கள் ஒன்றை கவனத்தில் கொண்டால் மிகவும் நல்லது..

இன்றைய நிலையில், இலங்கையில் இருக்கும் அதுவும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்பவர்களின் உரிமை, சுதந்திரம் எந்த நிலையில் உள்ளது என்பதையும், சும்மாவே விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், தடுப்பு ஊசி போடுவதில் தயக்கம் உள்ள இடத்தில் அது சரியில்லை.. இது பிழை.. எங்களுக்கு AstraZeneca அல்லது Pfizerஅதன் வேண்டும் என்றால் தரவிருக்கும் ஊசியை கூட தராமல் போகும் அரசாங்கமே உள்ளது..

ஒவ்வொரு முறையும் நான் எனது தந்தையுடனும் தங்கையுடனும் கதைக்கும் பொழுது  “ இங்கே தரும் ஊசியை தானே போட முடியும்” என  அவர்கள் கூறும் பொழுது அவர்களின் குரலில் இருக்கும் இயலாமையை என்னால் உணரமுடியும்.. அந்த சமயத்தில் நான் அவர்களிடம் இந்த ஊசி சரியில்லை என கூறமுடியுமா?

எங்களின் அரசியல் தலைவர்களும் சரியில்லாது இருக்கும் பொழுது மக்கள் தங்களுக்கு கிடைக்கும் வசதிவாய்ப்புக்களிற்கேற்பவே நடக்கமுடியும்..

எத்தனை விழிப்புணர்வு நடவடிக்கைகளை செய்தும் என்ன இந்த மாமாங்கம் கோவிலில் நடந்தது என்ன? ஆலய நிர்வாகம் சரியான முறையில் நடந்திருந்தால் இந்த நிலமை வந்திருக்குமா? நல்லூரில் நாளை திருவிழாவிற்கு உபயகாரர் மட்டுமே கோயில் உட்பிரகாரத்திற்கு செல்லமுடியும்.. ஏன் இந்த மாதிரி ஒரு செயலை மாமாங்கம் செய்ய முடியவில்லை.. 

இப்படியெல்லாம் நடக்கும் பொழுது இந்த ஊசி சரியில்லை வினைத்திறன் இல்லாத ஒன்று என கூறி ஊசி போடவருபவர்களையும் தடுப்பது சரியா? 

நீங்கள் தகவலை சரியாக உள்வாங்கவில்லை.

சினோபாம்.. எல்லா வயதினருக்கும் ஏற்புடையதா.. என்பதே கேள்வி..?!

அதனை ஒவ்வாத வயதினருக்கு போடும் போது ஏற்படும் விளைவுகளுக்கு யார் பொறுப்பு..?!

சும்மா இருந்த ஒருவர் அண்மையில் சினோபாம் போட்டு இரண்டே நாளில்.. இதயத்தாக்கிற்கு உள்ளானார். இதன் பின்னணி பற்றி யாரும் ஆராய்வதில்லை.. சொறீலங்காவில் . இப்படி பல சம்பவங்கள் இதுவரை கேட்டாயிற்று. எதற்கும் யாரும் விஞ்ஞான ரீதியாகவோ.. மருத்துவ ரீதியாகவே ஆராய்ந்து பதில் சொல்லுறாங்கள் இல்லை.

மாறாக.. எடு எடு என்று வற்புறுத்தினம்.

அவுஸி சிறந்த உதாரணமாகக் காட்டப்பட்டதற்கு அது அலை 1 அலை 2 இல் நாட்டைக் கையாண்ட விதம் தான். பின்னர் வெளிநாட்டுப் பயணிகளை வருகையால் அங்கும்.. தொற்றுக்கள் அதிகரித்துள்ளன.

வளர்ந்த நாடோ.. வளர்ந்து வரும் நாடோ மக்களை சரியாக அறிவுறுத்தவும் வழிகாட்டவும் வேண்டும். மக்களின் கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை முன் வைத்தால்.. மக்கள் சரிவர விளங்கி நடந்து கொள்வார்கள். ஒரு சிலர் விதிவிலக்காக நடந்து கொள்வதை கடும் சட்ட நடவடிக்கையால் தடுக்கலாம்.

மக்களுக்கு மருத்துவ ரீதியாக.. விஞ்ஞான ரீதியாக திருப்திகரமான பதில் அளிக்கப்பட்டால்.. நிச்சயம் மக்கள் நம்பிக்கையோடு ஊசிகளைப் போடுவார்கள். மாறாக மக்கள் மத்தியில் அச்சம் தரவல்ல.. நிகழ்வுகள் நிகழின் மக்கள் ஊசிகளை நிராகரிக்கவே செய்வர். அதன் பின் அதனை அவர்கள் மீது திணிக்க முடியாது. கூடாது. இதுதான் எங்கள் நிலைப்பாடு. பெரும்பாலான மக்களின் நிலைப்பாடும் இதே. 

Link to comment
Share on other sites

18 minutes ago, nedukkalapoovan said:

நெடுக்ஸ்,

மேலே யாருக்கு எந்த ஊசி அவசியம் என்பது பற்றித் தெளிவாக விளங்கப்படுத்தப்படுள்ளது. இது பற்றி மேலும் இத் திரியில் விவாதிக்க எதுவுமில்லை என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, இணையவன் said:

நெடுக்ஸ்,

மேலே யாருக்கு எந்த ஊசி அவசியம் என்பது பற்றித் தெளிவாக விளங்கப்படுத்தப்படுள்ளது. இது பற்றி மேலும் இத் திரியில் விவாதிக்க எதுவுமில்லை என்று நினைக்கிறேன்.

எந்த விளக்கத்தை நல்ல விளக்கம் என்று சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். யாழில் ஒரு சிலரை முன்னிலைப்படுத்தி பக்கச்சார்ப்பான கருத்தியல் நிலைப்பாட்டை நோக்கி கொண்டு செல்வதை மக்களின் நலன் கருதி தவிர்க்கலாமே. மக்களுக்கு தமது உடலுக்குள் செலுத்தப்படுவது குறித்து அறியவும் தெரிவு செய்யவும் முழு உரிமை உண்டு. அதனை மேற்கு நாடுகள் எல்லாமே முன்னிலைப்படுத்துவதைக் காணலாம். எதையும் மக்களிடம் கட்டாயப்படுத்தவில்லை. திணிக்கவில்லை. யாழும் அதனை செய்ய வேண்டும்.. மாறாக ஒரு தலைப்பட்சமான சிலரின் நிலைப்பாட்டை.. திணிக்க விளையக் கூடாது. 

எல்லா வழிமுறைகளிலும் நன்மை தீமை உண்டு. ஆனால்.. எதில் அதிகம் பாதிப்பு.. யாருக்கு அதை எப்படி தவிர்ப்பது என்பதுதான் கேள்வி இன்று. 

Coronavirus: South Africa rolls out vaccination programme - BBC News

figure2

https://www.nature.com/articles/s41392-020-00352-y

AstraZeneca (AZN)-Oxford Covid-19 Vaccine Delivers. Here's What We Know -  Bloomberg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்று அவுஸ்ரேலியாவில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை.. ஏழாவது கிழமையாக NSW lockdown..

AstraZeneca பற்றி இங்கே பயமுறுத்தி வைத்திருப்பதால் எல்லோரும் Pfizerதான் போடுவோம் என இருக்கிறார்கள்.. பாதிக்கப்பட்டுள்ளது நடுத்தர மற்றும் வறிய மக்களே.. 

அவுஸ்ரேலியா முன்னேறிய நாடு எனக்கூறினாலும் இங்கே உள்ள அரசாங்கம் இந்த தடுப்பு ஊசி விடயத்தில் எத்தனை பிழைகள் விட்டது என்பதை இங்குள்ளவர்கள் அறிவார்கள்............

நீங்கள் எவ்வளவு விளக்கமாக பொறுமையாக எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள். அவர்களோ சிங்களவர்கள் மீதுள்ள கோவத்தில் கோவிட் தடுப்பூசி பற்றி வேண்டும் என்றே தவறாக திரித்து பரப்புகிறார்கள். இதனால் பாதிப்பு இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தான்.
ஜஸ்டின் அண்ணா சொல்லும் போது நாள் ஒன்றுக்கு 118 இருந்த  கொவிட்தொற்று இறப்பு இப்போது 154 ஆக கூடியள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்று அவுஸ்ரேலியாவில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை.. ஏழாவது கிழமையாக NSW lockdown..

AstraZeneca பற்றி இங்கே பயமுறுத்தி வைத்திருப்பதால் எல்லோரும் Pfizerதான் போடுவோம் என இருக்கிறார்கள்.. பாதிக்கப்பட்டுள்ளது நடுத்தர மற்றும் வறிய மக்களே.. 

உலகமே கோரோனா கெடுபிடியில் லொக்டவுண் அது இது என திண்டாடிக்கொண்டிருக்கும் போது அவுஸ்ரேலியாவில் மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் திறந்தவெளி இசை நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் அமர்க்களமாகவே நடந்தது. உல்லாச பயணங்களிலும் எவ்வித கட்டுப்பாடுகள் இல்லை.ஏனைய நாடுகள் அதிசயமாகவே பார்த்தனர். அதன் பலனை இன்று அனுபவிக்கின்றனர். தாய் நாடும் இதற்கு தகும்.

 தடுப்பூசி போட்டாலும் வழமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் பாதுகாப்பாக இருக்கும் படிதான் ஜேர்மனியில் அறிவுறுத்துகின்றார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.