Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

'நாளொன்றுக்கு 200 - 300 பேர் வரை மரணிக்கலாம்': அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாடு..!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

 

(பி.பி.சி - சிங்கள சேவை)
இனியேனும் முறையாக செயற்படாது வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முற்படாவிட்டால்,  நாளொன்றில் சுமார் 200 தொடக்கம் 300 வரையிலானோர் உயிரிழக்கும் நிலை ஏற்படும். அடுத்து வரும் இரு வாரங்களில் கொவிட் தொற்றில் நாளொன்றில் உயிரிழப்பவர்களின்  எண்ணிக்கை 150 ஆக அமையும் என தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Capture.JPG

90 வீதம் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படகூடும் என்பதை தரவுகள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பேராசிரியர் சுனெத் அகம்பொடி தெரிவித்துள்ளார். அத்தோடு, ஏற்பட கூடிய அந்த மரண எண்ணிக்கையை தடுக்க நாம் இன்னும் தாமதமாகக் கூடாதென அவர் மேலும் தெரிவித்தார்.

Capture1.JPG

நாளொன்றுக்கு 200 - 300 மரணங்கள்?

துரித மற்றும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டம் நாட்டில் முன்னெடுக்கப்பட்டாலும், ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆகும்போது, கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 80 தொடக்கம் 90 வரையில் அமையும் என ஆகஸ்ட் முதலாம் திகதியே பேராசிரியர் சுனெத் அகம்பொடி எச்சரித்திருந்தார்.

எனவே மரணங்களை தடுப்பதற்கு உரிய பொறிமுறை ஒன்று அவசரமாக உருவாக்கப்பட வேண்டும். தொற்றாளர்களை வைத்தியசாலைகளில் அனுமதித்தல் , வீடுகளில் தங்க வைத்து சிகிச்சை அளித்தல் மற்றும் அவசர சேவை உள்ளடங்களாக சிறப்பு பொறிமுறையொன்றின் தேவை உள்ளது.

மறுப்புறம் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறியது போன்று, இந்தியாவில் ஏற்பட்டது போன்று ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டால் தொற்றாளர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படலாம்.  எனவே தொற்று பரவுவதை உடன் தடுக்கப்பட வேண்டும்.

பொருளாதாரமா ? உயிர்களா?
பொருளாதார  நெருக்கடிகளை  அவதானிக்கும் போது நெருக்கடிகள் காணப்பட்டாலும் கொவிட் தொற்றால் ஏற்பட கூடிய  மரணங்களை தடுப்பது கடினமாகும் என பேராசிரியர் சுனெத் அகம்பெடி பி.பி.சி சேவைக்கு சுட்டிக்காட்டினார். உயிரிழப்புகள் ஏற்பட்ட பின்னர் நடவடிக்கை எடுப்பதா ? அல்லது தற்போதே செயற்படுவதா என்பது இங்கு முக்கியமாகின்றது.

நாட்டை இன்றிலிருந்து இருவாரம் முடக்கினாலும், இன்னும் இருவாரம் கடந்து முடக்கினாலும் ஏற்பட கூடிய விளைவுகள் ஒன்றுதான். ஆனால் உயிரிழப்புகள் அவ்வாறு அல்ல என குறிப்பிட்ட பேராசிரியர் சுனெத் அகம்பெடி ,சில கேள்விகளுக்கு நேரடியாக பதில்களை வழங்கினார்.

இலங்கையின் இன்றைய நிலை ?
கொவிட் தொற்று இலங்கையில் ஆரம்பமான காலத்தின் மிக ஆபத்தான காலக்கட்டத்தில் நாம் இன்று உள்ளோம். இந்நிலை மேலும் பயங்கரமானதாக அமையும். டெல்டா தொற்று ஏற்பட்ட பின்னரே இந்த நிலைமை இலங்கைக்கும் ஏனைய நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது.

ஆபத்தான நிலைமை ஏற்பட காரணம் என்ன ?
இந்தியா , அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஏற்பட்ட நிலைமைகளில் நாம் கற்றுக்கொள்ள வில்லை. சுகாதார துறையின்வீழச்சியை அண்மித்த நிலையிலேயே இலங்கை உள்ளது. தொற்று நோய் ஏற்பட்டு கட்டுப்பாட்டை மீறி பரவும் போது ஏற்படும் உயிராபத்துகள் அதிகமாகும்.  

தற்போது செய்ய வேண்டியது என்ன ?
எம்மால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்தாலும் தற்போதைய நிலைமையில் மரணங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். கட்டுப்படுத்த முடியாத நிலையில்,தொற்று தீவிரமடையும். தடுப்பூசியின் ஊடாக தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது ஒரு மாயையாகும்.

பொதுவாக தடுப்பூசியின் ஊடாக மரணங்களை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தாலும் தொற்றை கட்டுப்படுத்த முடியாது . இரு கட்ட தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்கள் மூலமும் கொவிட் தொற்று பரவுகின்றது.

15 வீதமானவர்களுக்கு இரு கட்ட தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தற்போது பரவும் கொவிட் தொற்றை அடுத்த இரு மாதத்திற்கு கட்டுப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லை.  

 

தடுப்பூசி வழங்குவதை துரிதப்படுத்துவது போதுமானதா?

நாட்டில் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் தடுப்பூசி வழங்குதல் விஞ்ஞான ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றதா ? என்ற சந்தேகம் உள்ளது. எவ்வாறாயினும் மரணங்களை தடுக்க வேண்டுமாயின், அந்த அவதான நிலை யாருக்கு உள்ளது என்பதை கண்டறிய வேண்டும்.

வயோதிபர்கள் மற்றும் வேறு நோய்கள் உள்ளவர்களுக்கே அச்சுறுத்தல்கள் அதிகமாக உள்ளன. சைனோபாம் முதலாவது தடுப்பூசி வழங்கியதற்காக எவ்வித பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை. இரண்டாவது சைனோபாம் தடுப்பூசியை பெற்று இருவாரங்கள் கடந்த பின்னர் ஓரளவு பாதுகாப்பு கிடைக்கும்.

அஸ்ட்ராசெனிகா அல்லது இந்தியாவின் கொவிட்சீல் முதல் கட்ட தடுப்பூசிகளிலேயே பாதுகாப்பு கிடைக்கின்றது. அதே போன்று தான் பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளும் முதல் கட்டத்திலேயே பாதுகாப்பை வழங்க கூடியது. எனவே அவதானம் மிக்கவர்களுக்கு அஸ்ட்ரா செனிகா , கொவிட்சீல்,பைசர் மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனையவர்களுக்கு தேவைகளுக்கு ஏற்ப சைனோபாம் தடுப்பூசியை வழங்கலாம். இதனூடாக ஏற்பட கூடிய மரணங்களை ஓரளவு தடுக்கலாம் என தெரிவித்தார்.

'நாளொன்றுக்கு 200 - 300 பேர் வரை மரணிக்கலாம்': அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாடு..! | Virakesari.lk

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • Replies 82
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

பிரபா சிதம்பரநாதன்

இன்று அவுஸ்ரேலியாவில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை.. ஏழாவது கிழமையாக NSW lockdown.. AstraZeneca பற்றி இங்கே பயமுறுத்தி வைத்திருப்பதால் எல்லோரும் Pfizerதான் போடுவோம் என இருக்கிறார்கள்.

Justin

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஏமாற்றகரமான விடயம் என்னவென்றால் தடுப்பூசிகளின் வகைகள் பற்றி இங்கே கிளப்பப் படும் பீதிகள் வலுவான விஞ்ஞான அடிப்படைகள் அற்றவை! அரசியல் நோக்கங்களுக்காக விஞ்ஞானத் தரவுக

ரதி

நெடுக்கர் ,நீங்களே சொல்லி விட்டீர்கள் ஊசி போட்டாலும் சமூக இடைவெளி ,மாஸ்க் அணிதல் முக்கியம் என்று , அவற்றின் மூலமே கட்டுப்படுத்தலாம்...அப்படி இருக்கும் போது இப்பத்தைய சூழ்நிலையில் கிடைக்கின்ற எந்த ஊசிய

 • கருத்துக்கள உறவுகள்

சைனோபாம் தடுப்பூசி கொடுக்கப்படுகின்றது என்று உறவுகள் மூலம் அறிந்தேன். சில இடங்களில் பைஸரும் வழங்கப்படுகின்றதாம். கொழும்பில் உள்ளவர்கள் விருப்பமான வகை ஊசியை தாம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்கள்.

நாம் எமது உறவுகள் தடுப்பூசி பெறுவதையும், சமூக இடைவெளியை பேணுதல், கை சவர்க்காரம் போட்டு கழுவுதல், முக கவசம் அணிதல் போன்ற விடயங்களையும் தொடர்ந்து பெற்றுக்கொள்ளவும், கடைப்பிடிக்கவும் ஊக்குவிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

//தற்போது செய்ய வேண்டியது என்ன ?//

ஒண்டும் செய்யவேண்டாம் நாங்கள் கூட்டமாய் இருந்து முக்கோட மூக்கை தேச்சு அன்னதானம் சாப்பிடவும் எங்கட பேரில நடக்கிற திருவிழாக்களுக்கு நாங்கள் வெளிநாட்டுக்காசு திமிரை காட்ட சிலவழிக்கிறதுக்கு ஏத்தமாதிரி கோயிலுவல திறந்து கும்மி அடிக்கவிட்டா போதும் எங்களுக்கு..

 

 

Edited by பாலபத்ர ஓணாண்டி
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

//தற்போது செய்ய வேண்டியது என்ன ?//

ஒண்டும் செய்யவேண்டாம் நாங்கள் கூட்டமாய் இருந்து முக்கோட மூக்கை தேச்சு அன்னதானம் சாப்பிடவும் எங்கட பேரில நடக்கிற திருவிழாக்களுக்கு நாங்கள் வெளிநாட்டுக்காசு திமிரை காட்ட சிலவழிக்கிறதுக்கு ஏத்தமாதிரி கோயிலுவல திறந்து கும்மி அடிக்கவிட்டா போதும் எங்களுக்கு..

 

 

அரசு தானே கட்டுப்பாட்டை கொண்டுவரவேணும்! 150 பேர் ஒன்று கூட அனுமதிப்பது யார்?!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

எனவே அவதானம் மிக்கவர்களுக்கு அஸ்ட்ரா செனிகா , கொவிட்சீல்,பைசர் மற்றும் மொடர்னா ஆகிய தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனையவர்களுக்கு தேவைகளுக்கு ஏற்ப சைனோபாம் தடுப்பூசியை வழங்கலாம். இதனூடாக ஏற்பட கூடிய மரணங்களை ஓரளவு தடுக்கலாம் என தெரிவித்தார்

 

3 hours ago, பிழம்பு said:

வயோதிபர்கள் மற்றும் வேறு நோய்கள் உள்ளவர்களுக்கே அச்சுறுத்தல்கள் அதிகமாக உள்ளன. சைனோபாம் முதலாவது தடுப்பூசி வழங்கியதற்காக எவ்வித பாதுகாப்பும் கிடைக்கப்போவதில்லை.

இதைத்தானே இங்கு யாழில் நாங்களும் எழுதினோம்... இந்த சினோபாமை வாங்கும் போதே.. சீனா வழங்கும் போதே. வினைத்திறன் குறைந்த தடுப்பூசிகளால் என்ன பயன்.. என்ன தடுப்பூசியை யார் போடனும் என்பதை எல்லாம் வரையறறுக்கும் படி.

ஆனால் வடக்கு கிழக்கிற்கு சினோபாம் தான் அனுப்பி வைப்பு. அதுவும் இராணுவ மேற்பார்வையின் கீழ் போடப்படுகுது. இதில வடக்கு அமைச்சர் தன் சொந்த அரசியல் வேறு,

இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும்.. அவரவரின் உடல்நிலைக்கும்.. தேவைக்கும் ஏற்ப தடுப்பூசிகள் விஞ்ஞான பூர்வமாக.. மருத்துவ ரீதியாக அணுகப்பட்டு வழங்கப்படனுமே தவிர.. சொறீலங்கா அரசின் தேவைகள்.. அதன் வால்பிடிகளின் தேவைக்கு ஏற்ப மக்களிடம்.. தடுப்பூசிகளை திணிப்பதானது.. தொற்றையோ.. நோய் பரவலையோ.. அவல மரணங்களையோ தடுக்காது. 

கோத்தா.. மகிந்த அரசு.. தன்னை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் உள்ளதே அன்றி நாட்டை சுகாதார ரீதியிலும்.. பொருண்மிய ரீதியிலும் அபாயக்கட்டடத்துக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது.

இந்த நாட்டை இராணுவத் திமிர் பிடித்தவர்களிடம் இருந்து மீட்டு.. வைத்தியத்துறையினரின் கையிலும் அறிவுஜீவிகளின் கையிலும் கையளிப்பதே மக்களையும் நாட்டையும் பாதுகாக்க உதவும்.

புலிகளை வென்ற எமக்கு கொரனாவை வெல்வது பெரிய வேலை அல்ல.. என்று இறுமாப்புக் கதைப்பதை ரசித்துக் கொண்டிருந்தவர்களும்.. இந்த நிலைக்குப் பொறுப்பாவர். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாளொன்றுக்கு 200, 300 பேர் இறக்கும் நிலை வடக்கு கிழக்கில் ஏற்பட்டால் தமிழர் பகுதி கதை முடிஞ்சுது எண்டு நினைக்க வேண்டியதுதான். 

வடகிழக்கு தாயக பகுதி மக்கள் போதிய முன்னெச்சரிக்கை தற்பாதுகாப்புடன் இருப்பது அவசியம், நிலமை கைமீறி போய்விட்டால் பின்பு மீண்டும் ஒரு வரலாற்று பேரழிவுதான்.

அதற்காக இலங்கையின் பிறபகுதி மக்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று கூற வரவில்லை, அவர்களில் உண்மையான அக்கறை எடுக்க அவர்களின் அரசு இருக்கு ,வெளிநாட்டு உதவிகள் இருக்கு, கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை அப்படியே சிங்கள பகுதிக்கு மட்டுமே திருப்பிவிடும் சிங்கள அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள்.

நமக்கு நாம் மட்டுமே இருக்கிறோம்.

சிங்கள ஆட்சியாளர்கள்  பெயருக்குத்தான் ஒருங்கிணைந்த இலங்கை என்கிறார்கள் மனசுக்குள் அவர்களுக்கு வடக்கு கிழக்கு என்றைக்கும் அந்நிய நிலம்தான்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

//தற்போது செய்ய வேண்டியது என்ன ?//

ஒண்டும் செய்யவேண்டாம் நாங்கள் கூட்டமாய் இருந்து முக்கோட மூக்கை தேச்சு அன்னதானம் சாப்பிடவும் எங்கட பேரில நடக்கிற திருவிழாக்களுக்கு நாங்கள் வெளிநாட்டுக்காசு திமிரை காட்ட சிலவழிக்கிறதுக்கு ஏத்தமாதிரி கோயிலுவல திறந்து கும்மி அடிக்கவிட்டா போதும் எங்களுக்கு..

 

 

கொரோனா சிங்களப்பகுதிகளிலை துண்டறவே இல்லையா? அல்லது அவர்கள் ஒழுங்காய் நல்ல பிள்ளைகளாய் இருக்கிறார்களா?

தமிழ் பகுதிகளில் உள்ள கோவில்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றமையையும் கவனத்தில் எடுக்கவும்.

Link to comment
Share on other sites

5 minutes ago, குமாரசாமி said:

கொரோனா சிங்களப்பகுதிகளிலை துண்டறவே இல்லையா? அல்லது அவர்கள் ஒழுங்காய் நல்ல பிள்ளைகளாய் இருக்கிறார்களா?

தமிழ் பகுதிகளில் உள்ள கோவில்கள் படிப்படியாக மூடப்பட்டு வருகின்றமையையும் கவனத்தில் எடுக்கவும்.

அங்குதான் மிக தீவிரமாக பரவுகின்றது. றாகம பகுதிகளில் தகனச்சாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டும் உள்ளது.

கோவில்களை பூட்ட சொல்லலாம், ஆனால் பெளத்த விகாரைகளை பூட்டச் சொன்னால் கோத்தா அரசே கவிண்டு விடும். தலதா மாளிகை, பொலனறுவ ரஜமகா விகாரை எல்லாம் பூட்டச் சொல்ல முடியாது.

 • Like 2
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அது மட்டுமல்ல phiயினர் தாம் சார்ந்த மதத்தினரையும் இனத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் நடைபெறுகிறது. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
48 minutes ago, MEERA said:

அது மட்டுமல்ல phiயினர் தாம் சார்ந்த மதத்தினரையும் இனத்தையும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் நடைபெறுகிறது. 

இன்னொரு திரியிலும் வ(ல)ம்புரியின் மொட்டைகடிதாசி செய்தியை இணைத்து இதே கருத்தை எழுதி இருந்தீர்கள் மீரா.

கிறிஸ்தவ பிஎச்ஐ சொல்வதால் அவர் மதகுரோதமாக செயல்படுவதாக எழுந்தமானமாக சொல்ல முடியாது.

அப்படி அவர் மதவாதமாக நடந்தாலும் கூட

சுனாமி…

இறுதி போர்….

இவற்றில் நிகழ்ந்த இன அழிப்புக்கு நிகரான அழிவை கொரோனாவால் நாம் வட கிழக்கில் சந்திக்க வாய்ப்புள்ளது.

கொடுக்கபடுவது மிகவும் நலிவான ஊசி.

ஊசி போட்டோருக்கே நிச்சயமற்ற நிலை.

PHI யின் குலம் கோத்திரம் பாராமல் நாமாக கோயிலை பூட்ட வேண்டிய தருணம் இது.

 

 

பிகு:

முன்னர் நான் ஒரு வரலாற்று ஆசிரியரிடம் கேட்டேன். நாம்தான் ஆதி குடிகள் என்றால் - ஏன் இலங்கையில் அத்தனை பகுதிகளில் இருந்தும் அழிந்து போய் - வட கிழக்கில் மட்டும் எஞ்சினோம். எப்படி சிங்களவர் பெரும்பான்மையாக மாறினர் என.

அப்போ அவர் சொன்ன காரணங்களில் ஒன்று தொற்று நோய். எதோ ஒரு தொற்று அல்லது மலேரியாவால் தமிழர் அழிய அந்த இடத்தை உருவாகி கொண்டிருந்த சிங்கள இனம் நிரப்பி இருக்கலாம் என.

இலங்கையில் கூட அனுராதபுரம் கைவிடபட மலேரியா ஒரு காரணம் என்பார்கள்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

இன்னொரு திரியிலும் வ(ல)ம்புரியின் மொட்டைகடிதாசி செய்தியை இணைத்து இதே கருத்தை எழுதி இருந்தீர்கள் மீரா.

கிறிஸ்தவ பிஎச்ஐ சொல்வதால் அவர் மதகுரோதமாக செயல்படுவதாக எழுந்தமானமாக சொல்ல முடியாது.

அப்படி அவர் மதவாதமாக நடந்தாலும் கூட

சுனாமி…

இறுதி போர்….

இவற்றில் நிகழ்ந்த இன அழிப்புக்கு நிகரான அழிவை கொரோனாவால் நாம் வட கிழக்கில் சந்திக்க வாய்ப்புள்ளது.

கொடுக்கபடுவது மிகவும் நலிவான ஊசி.

ஊசி போட்டோருக்கே நிச்சயமற்ற நிலை.

PHI யின் குலம் கோத்திரம் பாராமல் நாமாக கோயிலை பூட்ட வேண்டிய தருணம் இது.

 

 

பிகு:

முன்னர் நான் ஒரு வரலாற்று ஆசிரியரிடம் கேட்டேன். நாம்தான் ஆதி குடிகள் என்றால் - ஏன் இலங்கையில் அத்தனை பகுதிகளில் இருந்தும் அழிந்து போய் - வட கிழக்கில் மட்டும் எஞ்சினோம். எப்படி சிங்களவர் பெரும்பான்மையாக மாறினர் என.

அப்போ அவர் சொன்ன காரணங்களில் ஒன்று தொற்று நோய். எதோ ஒரு தொற்று அல்லது மலேரியாவால் தமிழர் அழிய அந்த இடத்தை உருவாகி கொண்டிருந்த சிங்கள இனம் நிரப்பி இருக்கலாம் என.

இலங்கையில் கூட அனுராதபுரம் கைவிடபட மலேரியா ஒரு காரணம் என்பார்கள்.

அந்த திரியில் நான் எழுதியது “ ஏற்கனவே தெரிந்தது”

இதிலிருந்து நீங்கள் பல விடயங்களை விளங்கி இருக்கிறீர்கள்.

ஊசி விடயம்

முழுச்சிங்கள பகுதிகளில் Pfizer, தனித் தமிழ் பகுதிகளில் சீனத் தயாரிப்பு. கொழும்பு போன்ற மூன்று இனங்களும் உள்ள பகுதிகளில் பன்சலை ஊடாக சிங்களவர்களுக்கு Pfizer.

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, MEERA said:

ஊசி விடயம்

முழுச்சிங்கள பகுதிகளில் Pfizer, தனித் தமிழ் பகுதிகளில் சீனத் தயாரிப்பு. கொழும்பு போன்ற மூன்று இனங்களும் உள்ள பகுதிகளில் பன்சலை ஊடாக சிங்களவர்களுக்கு Pfizer.

 

 

இப்படி செய்யாவிட்டால்தானே வியப்பு?

கிடைக்கும் எல்லா வழிகளிலும் நம் இருப்பை குறைப்பது இன்று நேற்று நடப்பதல்லவே?

ஆகவே நாம் இன்னும் அவதானமாக அல்லவா இருக்க வேண்டும்?

கும்பலாக போய் மாமங்க குளத்தில் இறங்கினால்…அவர்கள் வேலை அல்லவா இலகுவாகும்?

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் இனவாதச்சிந்னையானது பெருந்தொற்றுத் தடுப்பு மற்றும் காப்பு நடவடிக்கையிலும் காட்டப்படுவதானது முழுநாட்டுக்குமே ஆபத்தானதென்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். மருத்துவத்தில் இனவாதம் ஆபத்தான சிந்தனையாகும். 

தமிழ் அரசியல்வாதிகள் இந்த விடயங்களை அனைத்துலக தரப்புகளான உலக சுகாதார நிறுவனம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற உலக அமைப்புகளோடு தொடர்புகளை ஏற்படுத்தித் தமிழ் மக்களின் நிலையைத் தெளிவுபடுத்தித் தடுப்பூசியைத் தமிழர் தாயகப்பகுதிகளில் போடுவதற்கான முயற்சிகளை ஏன் செய்ய முயலாதிருக்கின்றார்கள். சிங்களத்தை விமர்சிக்கும் வேலை மட்டுமா இவர்களுடையது?

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

சிங்களத்தின் இனவாதச்சிந்னையானது பெருந்தொற்றுத் தடுப்பு மற்றும் காப்பு நடவடிக்கையிலும் காட்டப்படுவதானது முழுநாட்டுக்குமே ஆபத்தானதென்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும். மருத்துவத்தில் இனவாதம் ஆபத்தான சிந்தனையாகும். 

தமிழ் அரசியல்வாதிகள் இந்த விடயங்களை அனைத்துலக தரப்புகளான உலக சுகாதார நிறுவனம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற உலக அமைப்புகளோடு தொடர்புகளை ஏற்படுத்தித் தமிழ் மக்களின் நிலையைத் தெளிவுபடுத்தித் தடுப்பூசியைத் தமிழர் தாயகப்பகுதிகளில் போடுவதற்கான முயற்சிகளை ஏன் செய்ய முயலாதிருக்கின்றார்கள். சிங்களத்தை விமர்சிக்கும் வேலை மட்டுமா இவர்களுடையது?

இதைவிட ஊசி போடுவது ராணுவமாம் ரணில் ஏற்கமுடியாது என்று  குதிக்கிறார் .

பரியாரி மாருக்கு தட்டுபாடாக்கும்  சொறிலங்காவில் .

நொச்சியார்  அடிக்கடி காணமால் போவது போல் உள்ளது கண்டதில்  சந்தோசம் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒண்டும் செய்யவேண்டாம் நாங்கள் கூட்டமாய் இருந்து முக்கோட மூக்கை தேச்சு அன்னதானம் சாப்பிடவும் எங்கட பேரில நடக்கிற திருவிழாக்களுக்கு நாங்கள் வெளிநாட்டுக்காசு திமிரை காட்ட சிலவழிக்கிறதுக்கு ஏத்தமாதிரி கோயிலுவல திறந்து கும்மி அடிக்கவிட்டா போதும் எங்களுக்கு..

நான் இங்கே வாசித்ததில் பெளத்த விகாரைகளுக்கு கட்டுபாடுகள் இல்லை எதற்காக இந்துக்களின் கோவில்களுக்கு மட்டும் கட்டுபாடுகள்? அன்னதானம் கொடுக்க முடியாது என்று தானே குமுறுகிறார்கள் .கோவிட் பரவலை பற்றி கவலை இல்லை.☹️

 • Sad 1
Link to comment
Share on other sites

எம்மை நாம் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும்
கோவிட் பற்றி  போதிய அறிவு இல்லாதவர்கள் தான் கூட்டம் கூடுகிறார்கள். குறிப்பாக வேரியன் மிக வேகமாக பரவுகிறது.

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

இதைவிட ஊசி போடுவது ராணுவமாம் ரணில் ஏற்கமுடியாது என்று  குதிக்கிறார் .

பரியாரி மாருக்கு தட்டுபாடாக்கும்  சொறிலங்காவில் .

நொச்சியார்  அடிக்கடி காணமால் போவது போல் உள்ளது கண்டதில்  சந்தோசம் .

எனக்கும் அவங்கள் தான் போட்டவங்கள், தாதிய வந்து போட சொல்ல முடியாதே!

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nedukkalapoovan said:

 

இதைத்தானே இங்கு யாழில் நாங்களும் எழுதினோம்... இந்த சினோபாமை வாங்கும் போதே.. சீனா வழங்கும் போதே. வினைத்திறன் குறைந்த தடுப்பூசிகளால் என்ன பயன்.. என்ன தடுப்பூசியை யார் போடனும் என்பதை எல்லாம் வரையறறுக்கும் படி.

ஆனால் வடக்கு கிழக்கிற்கு சினோபாம் தான் அனுப்பி வைப்பு.

நெடுக்ஸ், Sinopharm vaccine இன் வினைத்திறனும் நம்பகத்தன்மையும் Astrazeneca vaccine ஐ விட சிறந்ததாமே!!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

நான் இங்கே வாசித்ததில் பெளத்த விகாரைகளுக்கு கட்டுபாடுகள் இல்லை எதற்காக இந்துக்களின் கோவில்களுக்கு மட்டும் கட்டுபாடுகள்? அன்னதானம் கொடுக்க முடியாது என்று தானே குமுறுகிறார்கள் .கோவிட் பரவலை பற்றி கவலை இல்லை.☹️

என்ன நீங்கள் அனியாயத்துக்கு அப்பாவியாக இருக்குறீங்கள.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

இதைவிட ஊசி போடுவது ராணுவமாம் ரணில் ஏற்கமுடியாது என்று  குதிக்கிறார் .

பரியாரி மாருக்கு தட்டுபாடாக்கும்  சொறிலங்காவில் .

நொச்சியார்  அடிக்கடி காணமால் போவது போல் உள்ளது கண்டதில்  சந்தோசம் .

அடிக்கடி வரமுடியவில்லை. நன்றி.

அரசியலில் சிறந்த நடிகனுக்குப் போட்டி வைத்தால் ரணில் முதலிடத்தைப் பெறுவார். நான் எதிர்பது மாதிரி எதிர்ப்பேன் நீங்கள் சிங்களத்தை வளப்படுத்துங்கள் என்பதே இவரது சூழ்ச்சி. இனப்படுகொலையாடிய படைகளுக்கு வெள்ளையடிக்கும் வேலை. அதோடு பரியாருமாருக்கும் தட்டுப்பாடோ தெரியவில்லை. 

7 hours ago, ஏராளன் said:

எனக்கும் அவங்கள் தான் போட்டவங்கள், தாதிய வந்து போட சொல்ல முடியாதே!

ஏராளன் அவர்களிடம் ஒரு வினா. எப்படியிருக்கிறது தடுப்பூசி போடும் வேகம். எத்தனைவீதம் பேருக்குப் போட்டிருப்பார்கள் என்று அறியமுடியுமா?

நன்றி

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

நெடுக்ஸ், Sinopharm vaccine இன் வினைத்திறனும் நம்பகத்தன்மையும் Astrazeneca vaccine ஐ விட சிறந்ததாமே!!

எந்த அடிப்படையில் இதைச் சொல்லுறீங்க..

Covid vaccine tracker: How's my country and the rest of the world doing? - BBC News

 

Sinopharm: Chinese Covid vaccine gets WHO emergency approval - BBC News

COVID-19 VACCINES - Vejthani Hospital | JCI Accredited International Hospital in Bangkok, Thailand.

 • Thanks 2
Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

எந்த அடிப்படையில் இதைச் சொல்லுறீங்க..

 

 

COVID-19 VACCINES - Vejthani Hospital | JCI Accredited International Hospital in Bangkok, Thailand.

நெடுக்கு, இதன் அடிப்படையில் பார்த்தால் அஸ்ரா செனிக்காவை விட சினோபார்ம் (Sinopharm) 3.1 வீதம் மாத்திரமே  வினைத்திறன் குறைவானதாக இருக்கின்றது. எனவே இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லையல்லவா? அத்துடன் சினோபார்ம் இற்கு குறிப்பிட்டுச் சொல்லும்படி பின் விளைவுகளும் இல்லை. சேமிப்பதும் இலகு. ஆனால் இரண்டாவது டோசையும் போட்டால் மட்டுமே 79 வீதம் வினைத்திறன் கிடைக்கும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு எதை எப்போது எங்கு பேச வேண்டும் என்ற நல்ல யோசனை இருப்பதில்லை
இருப்பதை பெற்று தங்களைக் காப்பாற்றுவதே முதல் கடமை என்ற நிலையில் இன்றைய உலகம் இருக்கின்றது

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

’டெல்டா குண்டு` வெடித்துச் சிதறலாம்

நாட்டின் முன்னால் வெடிப்பதற்கு தயாராக `டெல்டா குண்டு` உள்ளது என்றும் மக்கள் கவனமாக இல்லாவிட்டால் அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இந்த டெல்டா வெடிகுண்டு இந்தியா மற்றும் இந்தோனேசியாவில் வெடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். குண்டை அழிவடையச் செய்வதா, இல்லையா என்ற முடிவு மக்களின் கைகளில் உள்ளது என்றும், மக்கள் தங்கள் பயணங்களை கட்டுப்படுத்தாமல், சரியான சுகாதார வழிமுறைகளை பின்பற்றாவிட்டால், வெடிகுண்டு அவர்களின்
வீடுகளை சென்றடையும் என்றும் அவர் எச்சரித்தார்.

கொரோனா தடுப்பூசி உடனடியாக பெறப்பட வேண்டும் என்பதால் கொரோனா இறப்பைத் தடுக்க அனைத்து மக்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அருகில் கிடைக்கும் எந்த தடுப்பூசியையும்
பெற்றுக்கொள்வது முக்கியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தடுப்பூசிகளைப் பெறும் போது மக்கள் சுகாதார விதிமுறைகளைக் கடைபிடிக்க
வேண்டும் என்றும் இல்லையென்றால், தடுப்பூசி கொத்தணிகள் உருவாகும்
அபாயம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விற்றமின் “சி” நிறைந்த பழங்களை
சாப்பிடுவது முக்கியம் என்றும் விற்றமின் சியை தினமும் மாத்திரைகளாக
எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த இஞ்சி, கொத்தமல்லியை ஒரு
நாளைக்கு மூன்று முறை சீனி இல்லாமல் குடிப்பது முக்கியம் என்று அவர்
தெரிவித்தார்.

Tamilmirror Online || ’டெல்டா குண்டு` வெடித்துச் சிதறலாம்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்


எந்த கோவிட் தடுப்பூசி உலகில் அதிகம் போடப்டுகின்றது என்பதின் புதிய தரவு இதுவாகும்.

_119840168_vaccines_by_country_9aug-nc.p

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இயக்கத்தில் மிக முக்கிய பொறுப்பான அரசியல் துறை பொறுப்பாளரின் மின்னஞ்சல் முகவரியின் கடவு ச்சொல் கண்டவர்களுக்கெல்லாம் தெரியும் அளவுக்கு பாதுகாப்பற்றதாக இருந்ததானது எவ்வளவு மோசமான அரசியல் பேதமை. 
  • ஸ்மார்ட்போனில் தங்கம்: பழைய போன்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பிரிட்டன் நாணய ஆலை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES   படக்குறிப்பு, உலகில் ஐந்தில் ஒரு பகுதி மின்கழிவுகளே மறுசுழற்சிக்கு வருகின்றன பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் இருந்து மதிப்பு மிக்க உலோகமான தங்கத்தைப் பிரித்தெடுக்க முடிவு செய்திருக்கிறது பிரிட்டனின் அரசு நாணய ஆலை. பிரிட்டன் அரச குடும்பத்தின் கீழ் இயங்கும் ராயல் மின்ட் எனப்படும் அரசின் நாணய தயாரிப்பு நிறுவனம் மின்னணுக் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி செய்யும் இத்தகைய தொழில்நுட்பத்தை முதன் முதலாகப் பயன்படுத்த இருக்கிறது. மின்னணு கழிவுகளில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவான அளவே மறு சுழற்சி செய்யப்படுவதாக மதிப்பிடப்படுகிறது. "இந்த தொழில்நுட்பம் உலகின் மிகப்பெரிய சுற்றுச் சூழல் சவால்களில் ஒன்றின் மீது உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று ராயல் மின்டின் தலைமைச் செயல் அதிகாரி ஆன்னி ஜெசோப் கூறினார். ரூ.745 கோடி மதிப்புள்ள நீலக்கல் தொகுப்பு: வீட்டின் பின்புறம் தற்செயலாக கிடைத்தது காங்கோ தங்க மலை: அள்ள அள்ள தங்கம், ஆனந்தத்தில் மக்கள் - என்ன சொல்கிறது அரசு? மின்னணுக் கருவிகளின் மின்சுற்று அட்டைகளில் (circuit boards) இருந்து 99 சதவிகிதம் தங்கத்தைப் பிரித்தெடுக்க கனடாவின் தொடங்கு நிறுவனமான எக்சைருடன் ராயல் மின்ட ஒப்பந்தம் செய்திருக்கிறது தேர்ந்தெடுக்கப்பட்ட விலையுயர்ந்த உலோகங்களை மின்சுற்று அட்டைகளில் இருந்து வேதியியல் தொழில்நுட்பம் நொடிகளில் பிரித்தெடுக்கிறது என்று ராயல் மின்ட் கூறுகிறது 2021 ஆம் ஆண்டில் தூக்கி எறியப்பட்ட மின்னணு மற்றும் மின் சாதனங்கள் 5.7 கோடி டன்களுக்கு மேல் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம்,ROYAL SOCIETY OF CHEMISTRY   படக்குறிப்பு, ஸ்மார்ட்போன்களில் சுமார் 30 வெவ்வேறு தனிமங்கள் உள்ளன, அவற்றில் சில பூமியில் காலியாகிக் கொண்டிருக்கிறது. இந்தச் சிக்கலை எதிர்கொள்ள எதுவும் செய்யவில்லை என்றால், 2030 க்குள் மின்னணு கழிவுகள் 7.4 கோடி டன்களை எட்டும். அதாவது ஒரு தசாப்தத்தில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று ராயல் மின்ட் கூறுகிறது. உயர் வெப்பநிலையில் உருக்குவதற்குப் பதிலாக, இந்தத் திட்டத்தின்படி ரொண்டா சினான் டாப்பில் உள்ள ராயல் மின்ட் ஆலையில் அறை வெப்பநிலையிலேயே விலைமதிப்பற்ற உலோகங்கள் பிரிக்கப்பட இருக்கின்றன. ராயல் மின்ட் நாணய ஆலையில் இந்தத் தொடழில்நுட்பத்தின் தொடக்கநிலைப் பயன்பாடு மூலமாக ஏற்கெனவே 999.9 தூய்மையான தங்கம் பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதே தொழில்நுட்பம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால், பல்லேடியம், வெள்ளி மற்றும் தாமிரம் போன்ற உலோகங்களையும் பிரித்தெடுக்க முடியும். மின்னணு கழிவுகளைக் குறைப்பதிலும், மதிப்புமிக்க உலோகங்களைக் மீட்பதிலும், புதிய திறன்களை வளர்ப்பதிலும் இந்தத் தொழில்நுட்பம் மிகப்பெரிய சாத்தியமான ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்று மின்டின் ஜெசோப் கூறினார். இந்த வேதியல் தொழில்நுட்பம் "புரட்சிகரமானது" என்று நாணய ஆலையின் தலைமைய வளர்ச்சி அதிகாரி ஷான் மில்லார்ட் கூறிகிறார். "இது ராயல் மின்ட் மற்றும் கழிவுகளே இல்லாத சுற்றுப் பொருளாதாரத்துக்கு பெரும் ஆற்றலை வழங்குகிறது. பூமியின் மதிப்புமிக்க வளங்களை மீண்டும் பயன்படுத்த உதவுகிறது. பிரிட்டனில் புதிய திறன்களை உருவாக்குகிறது" https://www.bbc.com/tamil/science-58982005
  • சரி இன்னுமொரு விடையம் கிரிப்டோவில் காசு போட்டால் போட்டது போட்டதுதான்  அது யூ எஸ் டி டியில் வரவு வைக்கப்பட்டிருக்கும் அதைக் காசாக்கவேண்டுமானால் யாருக்காவது யூ எஸ் டி ரியை விற்கவேண்டும் அதைவிட ஒரு நல்ல விடையம் இருக்கு Revolut bank கில்  ஒரு கணக்கைத் திறந்து அதற்கு நீங்கள் வேண்டிய கரன்சியில் உங்களது USDTயை மாற்றலாம்.பிரச்சனப்பிடவேண்டியதில்லை. அபரா, SHIBA/USDT வை நான் ஆரம்பத்தில் வாங்கி அது 0.00005400 வரை ஏறியது நல்ல காசு பாத்திட்டேன் இப்போ அது இறங்குமுகம். ஆனால் பைனான்ஸ் இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு. முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது சீபா இனு ஆறு இல்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை. ஆனால் "bainance" இணையத்தளத்தி காசு சம்பாதிச்சுக்கொடுக்கும் காயிஙளில் முதல் பத்து இடத்தில் இப்போதும் இருக்கு. முட்டாள்தனமாக நான் பணம் சம்பாதிக்க முற்பட்டு பத்து மில்லியன் காயிஙளாக இருந்த எனது SHIBA/USDT ஆறு  மில்லியனுக்குக் குறைந்துவிட்டது. இனிமே தொட்டுப்பார்க்கும் எண்ணம் இல்லை. சரி விடையத்துக்கு வருகிறேன்  பைனான்ஸ்சில் இப்போது இலாபமீட்டும் காயின் எனப் பட்டியலிடுவார்கள் அதில் இருபத்து நாலு மணிநேர உயர்வு / தாழ்வு என வரும் அதைக்கவனித்தால் மெழுகுதிரி இடையில் நின்றால் கவனமாக முதலீடு செய்து ஓரிரு மணி நேரத்திலோ நிமிடக்கணக்கிலோ வித்துக் காசு பாக்கலாம் ஆனால் ஆக அடிமட்டத்திலிருந்து திடீரென உயரும் காயினில் முதலீடு செய்யவேண்டாம். அடிச்சுக்கொண்டு போயிடும். இப்போ NU/USDT எனும் காயின் சிலநேரம் ஏறும்போல இருக்கு ஆனால் அவதானம்.  TRX/USDT இப்போது ஏறுது விருப்பமானால் வித்துக்காசு பாக்கலாம்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.