Jump to content

'நாளொன்றுக்கு 200 - 300 பேர் வரை மரணிக்கலாம்': அபாய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நாடு..!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் குடுத்த ஊசிய தமிழன் போட்டா இங்க இருக்குர கவரிமான் கூட்டத்தோட மானம் போயிடுமாம்.. முயலுக்கு மூனுகால் குருப்போட கட்டை வேகனுங்ரதுக்காக ஊர்ல இருக்குரதுங்க கவட்டைய வேக வச்சுக்கணுமாம்.. இவனுங்கள உட ரத்தம் ஏத்தாமலே சாகிற பெந்தகோஸ் குருப்பு பருவால போல.. அவன் தான் மட்டும்தான் சாகுரான்.. இவனுங்க மத்தவனை எல்லோ சாக சொல்லுரானுவ..🤦‍♀️🤦‍♀️

 • Like 2
Link to comment
Share on other sites

 • Replies 82
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

பிரபா சிதம்பரநாதன்

இன்று அவுஸ்ரேலியாவில் என்ன நடக்கிறது என உங்களுக்கு தெரியவில்லை.. ஏழாவது கிழமையாக NSW lockdown.. AstraZeneca பற்றி இங்கே பயமுறுத்தி வைத்திருப்பதால் எல்லோரும் Pfizerதான் போடுவோம் என இருக்கிறார்கள்.

Justin

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஏமாற்றகரமான விடயம் என்னவென்றால் தடுப்பூசிகளின் வகைகள் பற்றி இங்கே கிளப்பப் படும் பீதிகள் வலுவான விஞ்ஞான அடிப்படைகள் அற்றவை! அரசியல் நோக்கங்களுக்காக விஞ்ஞானத் தரவுக

ரதி

நெடுக்கர் ,நீங்களே சொல்லி விட்டீர்கள் ஊசி போட்டாலும் சமூக இடைவெளி ,மாஸ்க் அணிதல் முக்கியம் என்று , அவற்றின் மூலமே கட்டுப்படுத்தலாம்...அப்படி இருக்கும் போது இப்பத்தைய சூழ்நிலையில் கிடைக்கின்ற எந்த ஊசிய

 • கருத்துக்கள உறவுகள்

Kein Anzeichen" für Corona-Ansteckung bei Test-Konzert in Spanien - Berliner Morgenpost

அவுஸ்ரேலிய கொரோனா அவலம் 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சிங்களவன் குடுத்த ஊசிய தமிழன் போட்டா இங்க இருக்குர கவரிமான் கூட்டத்தோட மானம் போயிடுமாம்.. முயலுக்கு மூனுகால் குருப்போட கட்டை வேகனுங்ரதுக்காக ஊர்ல இருக்குரதுங்க கவட்டைய வேக வச்சுக்கணுமாம்.. இவனுங்கள உட ரத்தம் ஏத்தாமலே சாகிற பெந்தகோஸ் குருப்பு பருவால போல.. அவன் தான் மட்டும்தான் சாகுரான்.. இவனுங்க மத்தவனை எல்லோ சாக சொல்லுரானுவ..🤦‍♀️🤦‍♀️

இங்கே யாரும் யாரையும் சாக பிரார்த்திக்கவில்லை. இன துவேசமும் எமக்கில்லை. தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம் அவ்வளவுதான்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பணக்காரநாடுகளால் அனுமதிக்கப்படாத கொரோனா தடுப்பூசிகள் மூன்றாம் உலக நாடுகளை சென்றடைகின்றன. 
 
இதற்கு ஆதாரம்,போட்டோ எக்ஸ்சறாக்கள் கேட்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இங்கே யாரும் யாரையும் சாக பிரார்த்திக்கவில்லை. இன துவேசமும் எமக்கில்லை. தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம் அவ்வளவுதான்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பணக்காரநாடுகளால் அனுமதிக்கப்படாத கொரோனா தடுப்பூசிகள் மூன்றாம் உலக நாடுகளை சென்றடைகின்றன. 
 
இதற்கு ஆதாரம்,போட்டோ எக்ஸ்சறாக்கள் கேட்க வேண்டாம்.

ஒன்னும் அவசரம் இல்ல மெதுவா பொறுமையா நம்ப எல்லோருக்கும் புடிச்ச ஒரு  ஊசி ஏரியாக்கு வரட்டும்..அதுவரைக்கும் நம்ப மோடி ஜீ செஞ்சது போல கொரோனோவை லைட் அடிச்சு தகரத்துல தட்டி வெருட்டி வச்சிருப்பம்...  👍

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒன்னும் அவசரம் இல்ல மெதுவா பொறுமையா நம்ப எல்லோருக்கும் புடிச்ச ஒரு  ஊசி ஏரியாக்கு வரட்டும்..அதுவரைக்கும் நம்ப மோடி ஜீ செஞ்சது போல கொரோனோவை லைட் அடிச்சு தகரத்துல தட்டி வெருட்டி வச்சிருப்பம்...  👍

நான் சொல்வதெல்லாம் உண்மை.

இன்று ஒரு இளம் தமிழ் வைத்தியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.ஜேர்மனியில் 20 வருடங்கள் வைத்தியராக பணிபுரிகின்றார். பல விடயங்களை பகிர்ந்து கொண்டோம். அதில் கொரோன விடயம் வரும் போது பல சொந்த அனுபவங்களை சொன்னார். கொரோன நோயாளிகளும் அவர்கள் படும் அவஸ்தைகள் பற்றியும் நிறைய சொன்னார். அதில் அவர் சொல்லிய சாரம்சம் இன்று உலாவும்  கொரோனா தடுப்பூசிகள் யாவும் ஒரு பரீட்சார்த்தமே. இதில் யாருமே வீரம் பேசமுடியாது. முறையான மருந்து வர இன்னும் சில வருடங்கள் செல்லலாம். அது வரைக்கும் வெளித்தொடர்புகள் கொண்டாட்டங்கள் கேளிக்கைகளை தவிர்த்து சுற்று பயணங்கள் இல்லாமல் எவ்வளவு பாதுகாப்பாக இருக்க முடியுமோ அவ்வளவிற்கு பாதுகாப்பாக இருங்கள் என்பதே.

பி.கு:-  இதற்கு ஆதாரம்,புகைப்படங்கள்,ஒளிப்பதிவுகள்,ஒலிப்பதிவுகள் எதனையும் எதிர்பார்க்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

இங்கு சைனாபாம் ஊசியைத்தான் சிங்களப்பகுதிகளிலையும் போடுகிறார்கள். அப்படியான தரம் குறைந்த ஊசியை ஏன் சிங்கள மக்களுக்கும் போடவேண்டும். 

காசு உள்ளவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல இருப்பவர்கள் பணம் கொடுத்து அந்தந்த நாடுகள் உள்வர அனுமதி அளித்திருக்கும் ஊசியை ஏற்றிக்கொள்கிறார்கள்.  நான் கூட சைனாபாம் என்பதை விட கிழக்கில் போடப்பட்ட ஊசிகள் அனைத்தும் சைனாபாம் தான். மக்கள் வாழ்கிறார்கள் ஆனால் வெளிநாட்டில் கூட ஊசி போட்டவர்கள் தொற்றினால் இறந்து போவதை செய்திகள் சொல்கின்றன 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

மக்கள் வாழ்கிறார்கள் ஆனால் வெளிநாட்டில் கூட ஊசி போட்டவர்கள் தொற்றினால் இறந்து போவதை செய்திகள் சொல்கின்றன 

நம்மடை கூட்டம் தானும் படுக்கமாட்டினம் தள்ளியும் படுக்கமாட்டினம் என்பது தெரியாதா மச்சி , எந்த ஊசியை ஏற்றினாலும் கொழுப்பெடுத்து ஆடி கொரோனவை தூக்கிக்கொண்டால் சங்கூதி ,பரிகாரம் செய்யவேண்டிவருமென்பது தான் கொரோன அம்மன் சொல்லும் பால பாடம், அவனெடுக்கும் பிச்சைக்கு ஊசியென்ற ஒன்றையாவது கண்ணில் காட்டுறானே என்று சந்தோஷப்படும், இவர்கள் வக்கணையாக பைசரையும், மொடர்னாவையும், அஸ்ட்ராவையும் ஏத்திப்போட்டு அரசியல் அலசல் அலசுவது போல அலம்பதான் சரி, ஒரு காலத்தில் இப்படித்தான் விஸ்கி கிளாஸுடன் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டிருந்து  புலத்தில் போராட்டம் எப்படி நடத்தவேணும் என்று தலைவருக்கே வகுப்பெடுத்த கேங்ஸ் தூக்கி கடாசிவிட்டு அடுத்தவேலையை பாருங்கோ          

 • Like 4
Link to comment
Share on other sites

ஒரு அக்கா தனது தம்பி குடும்பம் கொழும்பில் சினோ பார்ம் தடுப்பூசி போட்டுள்ளார்கள் பாவங்கள் என்று ஏதோ விஷ ஊசி போட்ட மாதிரி  சொல்லி மிகவும் கவலைபட்டா. நான் இதை மற்றவர்களுக்கு சொன்ன போது அவா தன்னிடம் இல்லாத ஆடம்பர சாமான்கள் எல்லாம் கொழும்பில் தம்பியும் மனைவியும் வைத்திருக்கிறர்கள் என்று சொல்லி இதுவரை பொறாமைபட்டவா இப்போ போலி கண்ணீர் வடிக்கிறா என்றார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இங்கு சைனாபாம் ஊசியைத்தான் சிங்களப்பகுதிகளிலையும் போடுகிறார்கள். அப்படியான தரம் குறைந்த ஊசியை ஏன் சிங்கள மக்களுக்கும் போடவேண்டும். 

சைனாபாம் தடுப்பூசி 70 வீதம் செய்ல்திறன் உடையது எனவும் ஃபைசர் 99 வீதம் செயல் திறன் உடையது எனவும் இங்கு கூறினார்கள்.

 இதற்கு ஆதாரம் தரப்பட மாட்டாது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இங்கே யாரும் யாரையும் சாக பிரார்த்திக்கவில்லை. இன துவேசமும் எமக்கில்லை. தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம் அவ்வளவுதான்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பணக்காரநாடுகளால் அனுமதிக்கப்படாத கொரோனா தடுப்பூசிகள் மூன்றாம் உலக நாடுகளை சென்றடைகின்றன. 
 
இதற்கு ஆதாரம்,போட்டோ எக்ஸ்சறாக்கள் கேட்க வேண்டாம்.

42 minutes ago, குமாரசாமி said:

சைனாபாம் தடுப்பூசி 70 வீதம் செய்ல்திறன் உடையது எனவும் ஃபைசர் 99 வீதம் செயல் திறன் உடையது எனவும் இங்கு கூறினார்கள்.

 இதற்கு ஆதாரம் தரப்பட மாட்டாது.

என்னால சத்தியமா முடியல்ல அண்ணா😂 ...முடிவாய் அங்கிருப்பவர்களை என்ன தான்  செய்ய சொல்கிறீர்கள்? சினோபாம்  போட வேண்டாம் ...பைசர் தரச் சொல்லி போராட சொல்கிறீர்களா?
எனக்குத் தெரிந்த சிங்கள பெண் கொழும்பில் இருக்கிறார் ...மொறட்டுவை பக்கம் ....நேற்று சினோபாம் தான் தனக்கு போடப்  பட்டது என்றும் ,அவவின் கணவரும் ,அவரது பெற்றோர்களுக்கும் கோவிட் சீட் 2 மாசத்திற்கு முந்தி போடப்பட்டது என்றும் சொன்னா.
ஊசி அங்கு சிங்களம்,தமிழ் என்று பிரித்து கொடுக்கவில்லை 
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, ரதி said:

என்னால சத்தியமா முடியல்ல அண்ணா😂 ...முடிவாய் அங்கிருப்பவர்களை என்ன தான்  செய்ய சொல்கிறீர்கள்? சினோபாம்  போட வேண்டாம் ...பைசர் தரச் சொல்லி போராட சொல்கிறீர்களா?

எதையும் செய்யச்சொல்லவில்லை. நடக்கும் செய்தி/நிகழ்வுகளையே சொன்னேன். :cool:

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இங்கே யாரும் யாரையும் சாக பிரார்த்திக்கவில்லை. இன துவேசமும் எமக்கில்லை. தவறுகளை சுட்டிக்காட்டுகின்றோம் அவ்வளவுதான்.

ஏற்கனவே தயாரிக்கப்பட்டு பணக்காரநாடுகளால் அனுமதிக்கப்படாத கொரோனா தடுப்பூசிகள் மூன்றாம் உலக நாடுகளை சென்றடைகின்றன. 
 
இதற்கு ஆதாரம்,போட்டோ எக்ஸ்சறாக்கள் கேட்க வேண்டாம்.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை அமெரிக்கர்களுக்கு செலுத்தாமல் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை போல என்று சொல்ல வாறியள்போல ??🤪

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை அமெரிக்கர்களுக்கு செலுத்தாமல் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை போல என்று சொல்ல வாறியள்போல ??🤪

அமெரிக்காவில் இல்லை. இது ஒகேபோர்ட்டில் உருவாக்கப்பட்டது. நானும் குத்திக்கொண்டேன்.

இப்ப மாஸ்க் எல்லாம் போடாமல் வீறாப்பாக திரிகின்றேன் (தனியத்தான்😂)

சினோபார்ம் ஒரு பில்லியனுக்கு மேல் சீனாவில் குத்தி இருக்கின்றார்கள். அங்கு தொற்றும் இறப்பும் குறைவு. 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

அமெரிக்காவில் இல்லை. இது ஒகேபோர்ட்டில் உருவாக்கப்பட்டது. நானும் குத்திக்கொண்டேன்.

இப்ப மாஸ்க் எல்லாம் போடாமல் வீறாப்பாக திரிகின்றேன் (தனியத்தான்😂)

நானும் அஸ்ட்ராசெனெகா தான் போட்டுக்கொண்டேன்

சிலர் தாங்கள் பைசர் போட்டதாக பீத்திக்கொண்டார்கள்

எனக்கு சிரிப்புத்தான் வரும்

எது நல்லது  என்று ஆண்டவனுக்கே  வெளிச்சம்  என்ற நிலை  தான்  இன்றுவரை???

பிரித்தானியாவில் அஸ்ட்ராசெனெகா போட்டவர்கள்  தான் அதிகம்.

பிரித்தானியாவில் அஸ்ட்ராசெனெகா போட்டவர்களுக்கு ஆபத்து  குறைவாக  இருப்பதாகவே தகவல்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கிருபன் said:

அமெரிக்காவில் இல்லை. இது ஒகேபோர்ட்டில் உருவாக்கப்பட்டது. நானும் குத்திக்கொண்டேன்.

இப்ப மாஸ்க் எல்லாம் போடாமல் வீறாப்பாக திரிகின்றேன் (தனியத்தான்😂)

சினோபார்ம் ஒரு பில்லியனுக்கு மேல் சீனாவில் குத்தி இருக்கின்றார்கள். அங்கு தொற்றும் இறப்பும் குறைவு. 

கிருபன் ஜோ பைடன் சொன்னதை கேட்கவில்லை போல இருக்கிது. அவர்கள் அமெரிக்காவில் தயாரித்த அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை ஏற்றுமதிசெய்யப்போகிறார்களாம். ஏனென்றால் அது CDA ஆல் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லையாம்!!

Link to comment
Share on other sites

6 hours ago, குமாரசாமி said:

சைனாபாம் தடுப்பூசி 70 வீதம் செய்ல்திறன் உடையது எனவும் ஃபைசர் 99 வீதம் செயல் திறன் உடையது எனவும் இங்கு கூறினார்கள்.

 இதற்கு ஆதாரம் தரப்பட மாட்டாது.

உயிர் பயம் உள்ளவர்கள் ஊசி எது கொடுத்தாலும் போட வரிசையாக உள்ளார்கள் கிடைப்பதை பெற்று உயிர் வாழ்ந்தால் போதுமென நினைக்கிறார்கள் இதில் சைனா என்ன , அமெரிக்க என்ன 

7 hours ago, அக்னியஷ்த்ரா said:

நம்மடை கூட்டம் தானும் படுக்கமாட்டினம் தள்ளியும் படுக்கமாட்டினம் என்பது தெரியாதா மச்சி , எந்த ஊசியை ஏற்றினாலும் கொழுப்பெடுத்து ஆடி கொரோனவை தூக்கிக்கொண்டால் சங்கூதி ,பரிகாரம் செய்யவேண்டிவருமென்பது தான் கொரோன அம்மன் சொல்லும் பால பாடம், அவனெடுக்கும் பிச்சைக்கு ஊசியென்ற ஒன்றையாவது கண்ணில் காட்டுறானே என்று சந்தோஷப்படும், இவர்கள் வக்கணையாக பைசரையும், மொடர்னாவையும், அஸ்ட்ராவையும் ஏத்திப்போட்டு அரசியல் அலசல் அலசுவது போல அலம்பதான் சரி, ஒரு காலத்தில் இப்படித்தான் விஸ்கி கிளாஸுடன் காலுக்கு மேல் கால் போட்டுக்கொண்டிருந்து  புலத்தில் போராட்டம் எப்படி நடத்தவேணும் என்று தலைவருக்கே வகுப்பெடுத்த கேங்ஸ் தூக்கி கடாசிவிட்டு அடுத்தவேலையை பாருங்கோ          

அவர்களுக்கும் அக்கறைதான் மச்சி என்ன செய்வது இலங்கை பிச்சை எடுத்து ஊசாவது தருதே இந்த அபாய சூழ்நிலையில் என்று போடு நகர்கிறோம் . 
இல்ங்கையில் சுகாதாரம் வெளிநாடுகள் போல் பேணமாட்டார்கள் எல்லா இன மக்களும் அதனால் அழிவு கொஞ்சம் அதிகமாகத்தான்  இருக்கும் போல எண்ணத்தோன்றுகிறது 

Link to comment
Share on other sites

16 minutes ago, Eppothum Thamizhan said:

கிருபன் ஜோ பைடன் சொன்னதை கேட்கவில்லை போல இருக்கிது. அவர்கள் அமெரிக்காவில் தயாரித்த அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை ஏற்றுமதிசெய்யப்போகிறார்களாம். ஏனென்றால் அது CDA ஆல் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லையாம்!!

அஸ்ட்ரா செனக்கா ஒரு சுவீடிஷ்-பிரித்தானிய கம்பனி. ஆனால், இதன் உற்பத்தித் தொழிற்சாலை அமெரிக்காவில் இருக்கிறது. இங்கே தடுப்பூசி உற்பத்தி செய்தாலும் பாவனைக்கு அனுமதியில்லை.

அனுமதி கிடைக்காமைக்கு பிரதான காரணம்: அமெரிக்க/அமெரிக்க ஜேர்மன் கூட்டுத் தயாரிப்பான மொடெர்னா, பைசர், ஜோன்சன் அன்ட் ஜொன்சன் போன்றவையின் சந்தை வாய்ப்பைப் பாதுகாக்கும் உள் நோக்கம்!

ஆனால், வெளியே சொல்லப் பட்ட காரணம்: FDA இற்கு அனுமதிக்காக முதலில் விண்ணப்பித்த போது தங்கள் efficacy data வில் சில தவறுகளை விட்டு விட்டார்கள். மீளவும் சரியான தரவுகளோடு விண்ணப்பித்தார்கள் - ஆனால் பயனர்களின் நம்பிக்கை பாதிக்கப் படலாம் என்று கிடப்பில் போட்டு விட்டார்கள்.

அமெரிக்காவிற்கு மேலுமொரு தடுப்பூசி தேவையில்லை என பைடன் நிர்வாகமும் இதை மீள உயிர்ப்பிக்க முயலவில்லை.

மற்றபடி AZ யின் தடுப்பூசி பாதுகாப்பும், வினைத்திறனும் மிக்கது!

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

என்னோடு வேலை பார்க்கும் ஒரு சிங்கள தம்பதி தமக்கு   இலங்கையிலிருந்து பகிரப்படும் காணொளிகளை அப்பப்போ காட்டுவார்கள், அவர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்வார்கள்.

ஒரு காணொளியில் வைத்திய சாலையில் போய் வர இடமின்றி எங்கு பார்த்தாலும் கொரோனா நோயாளிகளை வெறும் தரையில் பாயை விரிச்சு படுக்க வைத்திருக்கிறார்கள், எங்கு பார்த்தாலும் முனகல் சத்தம், அவர்களை சுற்றி சில உறவுகள்கூட கொரோனா விழிப்புணர்வின்றி அழுது கொண்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களூடாக அவர்களின் சக சிங்கள உறவுகள் பகிர்ந்த தகவல்படி இன்று இலங்கையில் உள்ள கொரோனா நிலவரம் முற்றுமுழுதாக இருட்டடிப்பு பண்ணப்பட்ட செய்திகள் என்றும் ., இழப்புக்கள் இலங்கை அரசு அறிவிப்பதைவிட மிக அதிகம் என்றும், கிராமபுற சிங்களவர்கள் பல லட்சம் பேர் ஏற குறைய வருமானமின்றி பட்டி சாவு நிலையை நெருங்கியிருப்பதாகவும்,

அதனால்தான் எவ்வளவு நெருக்கடியானபோதும் நாட்டை முழு அளவில் முடக்க நிலைக்கு கொண்டுவர ராஜபக்ச குடும்பம் விரும்பவைல்லை என்றும் சொனார்கள்.

அவர்கள் சொன்னதில் உண்மை இருக்கலாம்.

ராஜபக்ச என்ற குடும்ப அரசியலின் பலமே  கிராம புற சிங்களவர்களை தமிழருக்குஎதிராய் உசுப்பேத்திவிட்டு நகரத்தில் அவர்கள் சொகுசாய் வாழ்வதுதானே.

கொரோனா விசயத்தில் அந்த ராஜதந்திரம் எடுபடுமா? 

பல லட்சம் கிராமபுற சிங்களவர்கள்  கொரோனா முடக்க நிலையினால்  பசி பட்டினியில் வாடுவதாகவும், ஊடகங்கள் அதை மறைப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்.

நான் கேட்டேன்  புலம்பெயர் சிங்கள மக்கள் ஏன் ஒன்றிணைந்து தாயகத்தில் கஷ்டபடும் சிங்களவர்களுக்கு உதவகூடாது என்று?

அப்படி ஒன்று இருக்கா என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தார்கள், நான் பேசாமல் போய்விட்டேன்.

பின்புதான் யோசித்தேன் நானும் அவர்கள் இனம்தான், பிரபாகரன் என்ற ஒற்றை புள்ளி வளர்ந்த்துவிட்ட நல்ல குணங்களினால்தான் இன்றும் ஒரு சிலர் எம் தாயக மக்களை நினைவு கொண்டு ஏதாவது செய்கிறோம், இல்லையென்றால், தமிழர்களும் சிங்களவர்கள்தான்.

 • Like 5
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

இலங்கையரசு, மக்கள் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் கோரானா தடுப்பூசியினைப்போட்டு நாட்டை வெளினாட்டு உல்லாசப்பயணத்திற்காகத்திறந்து விடும், ஏற்கனவே நாடு வரலாறு காணாத மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது, கோவிட் இறப்பை வெளியிட்டால் வெளினாட்டவர்கள் வரமாட்டார்கள் அதற்காக உண்மையை மூடி மறைக்கலாம். இலங்கையரசுக்கு கோவிட்டை விட நாட்டின் பொருளாதார நெருக்கடிதான் அதிக தொல்லையான விடயமாகவுள்ளது. இலங்கைக்கு கோவிட் அரசன், பொருளாதாரம் தெய்வம், நின்று கொல்லும்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

இலங்கையரசுக்கு கோவிட்டை விட நாட்டின் பொருளாதார நெருக்கடிதான் அதிக தொல்லையான விடயமாகவுள்ளது. இலங்கைக்கு கோவிட் அரசன், பொருளாதாரம் தெய்வம், நின்று கொல்லும்.

அது எப்படி மண்டையில் சுட்டியலால் அடிச்சதுமாதிரி இப்படி சொல்கிறீர்கள்?

இது புரியாமால்தான் பலபேர்  யாழில் தமக்கு தெரிந்த விஞ்ஞான அறிவை வைத்து பலருக்கு வகுப்பெடுக்கிறார்கள்...

இலங்கைக்கு கோவிட் அரசன், பொருளாதாரம் தெய்வம், நின்று கொல்லும். அற்புதமான வரிகள்.

எனக்கு புரிந்தவரை ...

பலர் இங்கே இலங்கையின் விஞ்ஞான தடுப்பூசிகள் பற்றி எல்லைகள் கடந்து  கோப்பி குடிச்சுக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டபடி விமர்சிக்கின்றனர்..

பொதுவாகவே அறிவியல் மேதாவிகள்  தமது பாதுகாப்பை பக்காவாக வைத்துக்கொண்டே பிறருக்கு வகுப்பெடுப்பார்கள்.

இங்கே கள உறுப்பினர் ஜஸ்டின் கூறியது நினைவு வருகிறது..எமக்கு தெரிந்த விஞ்ஞான அறிவை பலரை பலவீனபடுத்த பயன்படுத்தாதீர்கள்...

அற்புதம்!!!

 • Like 2
Link to comment
Share on other sites

1 hour ago, valavan said:

பலர் இங்கே இலங்கையின் விஞ்ஞான தடுப்பூசிகள் பற்றி எல்லைகள் கடந்து  கோப்பி குடிச்சுக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டபடி விமர்சிக்கின்றனர்..

பொதுவாகவே அறிவியல் மேதாவிகள்  தமது பாதுகாப்பை பக்காவாக வைத்துக்கொண்டே பிறருக்கு வகுப்பெடுப்பார்கள்.

அப்படியே சரியாகச் சொன்னீர்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

பொதுவாகவே அறிவியல் மேதாவிகள்  தமது பாதுகாப்பை பக்காவாக வைத்துக்கொண்டே பிறருக்கு வகுப்பெடுப்பார்கள்.

இங்கே கள உறுப்பினர் ஜஸ்டின் கூறியது நினைவு வருகிறது..எமக்கு தெரிந்த விஞ்ஞான அறிவை பலரை பலவீனபடுத்த பயன்படுத்தாதீர்கள்...

அற்புதம்!!!

நான் இங்கே ஜேர்மனிய மொழி வானொலி மற்றும் தொலைக்காட்சி பத்திரிகை செய்திகளை வைத்தே கருத்தெழுதுகின்றேன்.

நானாக செய்திகளை தயாரிக்கவில்லை. அந்தளவிற்கு அறிவுமில்லை...

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நான் இங்கே ஜேர்மனிய மொழி வானொலி மற்றும் தொலைக்காட்சி பத்திரிகை செய்திகளை வைத்தே கருத்தெழுதுகின்றேன்.

நானாக செய்திகளை தயாரிக்கவில்லை. அந்தளவிற்கு அறிவுமில்லை...

என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

மனசாலும் நினைவாலும் இனத்துக்கு உதவியயர்களில் சாந்தி உடையார் விசுகு அணியில் உள்ளவர்களில்  நீங்களும் ஒன்று...

பிறருக்கு உதவும் உயர் குணம் கொண்ட குமாரசுவாமியண்ணா பக்கமே என் தராசு எப்போதும் நிற்கும், இனம் பற்றியதான என் விமர்சனங்கள் குமாரசுவாமியண்ணாவை எப்போதும் விமர்சிக்காது,

ஏன் இப்படி என்னை காயபடுத்துறீங்கள்?

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அமெரிக்கா குறித்து தெரியாது. பிரிட்டனை பொறுத்த வரை, மருந்தை தயாரித்தது, oxford பல்கலைக்கழக விண்ஞானிகள். மருந்தை அதிவிரைவாக வணிக ரீதியில் சந்தைக்கு கொண்டு வர, தகுந்த கட்டமைப்பினை கொண்ட  astra zeneka வணிக நிறுவனம் சேர்ந்து கொண்டது. இதுவே எனது புரிதல், தவறானால் திருத்தவும்.

https://www.astrazeneca.com/media-centre/press-releases/2020/astrazeneca-and-oxford-university-announce-landmark-agreement-for-covid-19-vaccine.html

****

.....But while the majority of batches have been produced in the UK, there are three batches of the AstraZeneca vaccine produced by the Serum Institute of India, with these made and manufactured under the name ‘Covishield’ in India.

https://www.scotsman.com/health/what-are-the-indian-astrazeneca-vaccine-batch-numbers-and-how-to-check-them-will-eu-countries-like-portugal-accept-covishield-3294722

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

அது எப்படி மண்டையில் சுட்டியலால் அடிச்சதுமாதிரி இப்படி சொல்கிறீர்கள்?

இது புரியாமால்தான் பலபேர்  யாழில் தமக்கு தெரிந்த விஞ்ஞான அறிவை வைத்து பலருக்கு வகுப்பெடுக்கிறார்கள்...

இலங்கைக்கு கோவிட் அரசன், பொருளாதாரம் தெய்வம், நின்று கொல்லும். அற்புதமான வரிகள்.

எனக்கு புரிந்தவரை ...

பலர் இங்கே இலங்கையின் விஞ்ஞான தடுப்பூசிகள் பற்றி எல்லைகள் கடந்து  கோப்பி குடிச்சுக்கொண்டு டிவி பார்த்துக்கொண்டபடி விமர்சிக்கின்றனர்..

பொதுவாகவே அறிவியல் மேதாவிகள்  தமது பாதுகாப்பை பக்காவாக வைத்துக்கொண்டே பிறருக்கு வகுப்பெடுப்பார்கள்.

இங்கே கள உறுப்பினர் ஜஸ்டின் கூறியது நினைவு வருகிறது..எமக்கு தெரிந்த விஞ்ஞான அறிவை பலரை பலவீனபடுத்த பயன்படுத்தாதீர்கள்...

அற்புதம்!!!

நீங்கள் கூறுவது மிகவும் சரி, தடுப்பூசிகள் அனைத்தும் உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன,எனது புரிதலின்படி தடுப்பூசியில்லாமல் கோவிட்டை எதிர்கொள்வது கடினம் இது எனது சொந்த புரிதல் மட்டுமே, ஆலோசனை கூறுவதற்கு துறைசார் கல்வியறிவில்லை, ஆனால் இணைய தேடலில் நான் அறிந்தவரை கோவிட் தடுப்பூசிகளை 4 வகைகளாகப்பிரிக்கிறார்கள் ஆனால் எனது புரிதலில் அடிப்படையில் இரண்டு வகைதான்
1. வலுவிழந்த கோவிட் கிருமியை உடலில் செலுத்துவது
2.கோவிட் வைரசின் மூலக்கூறை 3 வழிகளில் செலுத்துவது (viral vector, mrna, protein subunit)

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.