Jump to content

புலிகளின் கண்ணிவெடிப்பிரிவு மற்றும் கள மருத்துவப்பிரிவினரின் சீருடைகள் & கவசங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 


 

இன்று நாம் பார்க்கப்போவது புலிகளின் கண்ணிவெடிப்பிரிவான 'பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவி'னால் அணியப்பட்ட உடற்கவசங்கள் பற்றியே. இவர்களின் இந்தப் பிரிவானது 1999.04.28 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது முற்று முழுதாக பெண் போராளிகளை மட்டுமே கொண்ட பிரிவாகும்(Unit). தனிப்பிரிவாக ஆவதற்கு முன் இது ஏதோவொரு மகளீர் படையணியின்(மாலதி படையணி என்று நினைக்கிறேன்) கீழ் இயங்கியது ஆகும்.

இந்தப் படையணியால் அணியப்பட்ட கவசங்களானவை:-

  • முக்கோண காப்புக் கண்ணாடி
  • தலைச்சீரா & முகவாரணம்(Visor)
  • கவசக் கத்தனம்(Flak Jacket)

இவர்கள் கைக்கவசம் அணிந்ததாக எந்த வகைப் படங்களும் கிடைக்கப்பெறவில்லை. எனவே அணிந்தார்களோ தெரியவில்லை

 


  • முக்கோண காப்புக் கண்ணாடி

2001 முடியும் வரை இச்சீருடையே இவர்களின் உடையாகும். இது ஒரு கடும்பச்சை நிறத்திலான சீருடையாகும்.

main-qimg-9643b1fdba4ba65c35f01b9c12cea59e.jpg

'மேற்கண்டவர் ஒரு ஆண் போரளி. இவர் கண்ணிவெடியை அகற்றும் பணியில் மட்டுமே ஈடுபட்டுள்ளார். இவர் பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவைச் சேர்ந்தவர் .'

 


இனி வருபவை எல்லாம் 2001 இற்குப் பின் அணியப்பட்டவையே!

  • கவசக் கத்தனம் - (Flak Jacket)

உலக நாடுகளால் அணியப்படும் அதே கவசம்தான் இவர்களாலும் அணியப்பட்டது. ஆனால் அதன் உருமறைப்பு புலி உருமறைப்பு அல்லாமல், சிங்கள உருமறைப்பு கொண்டுள்ளது

main-qimg-3617563829dffb8f6b0304abaaaab211.png

'கண்ணிவெடி புதைக்க வரும் போராளிகள் | கண்ணிவெடிக் கத்தனத்தின் முன்பக்கம் & முகவாரணம்'

main-qimg-a5efd0a074a05c80528282f04980ed15.png

' கண்ணிவெடி புதைக்கப் போகும் போராளிகள் | கண்ணிவெடிக் கத்தனத்தின் பின்பக்கம் தெரிகிறது'

  • தலைச்சீரா & முகவாரணம்:

உலக நாடுகளால் அணியப்படும் அதே வடிவ தலைச்சீராதான் இவர்களாலும் அணியப்பட்டது. அதன் நிறம் கறுப்பு ஆகும்

main-qimg-c327a25a0d167bd8a4c36695dac02408.png

'சங்கிலியன் என்னும் கண்ணிவெடியைப் புதைக்கும் போராளிகள் | கண்ணிவெடிக் கத்தனத்தின் முன்பக்கம் தெரிகிறது'

main-qimg-ab5c7ff73a5c4a36f73245b681236485.png

'பொன்னம்மான் 100 என்னும் கண்ணிவெடியைப் புதைக்கும் போராளி | இவர் அணிந்துள்ள தலைச்சீராவின் உச்சிப் பகுதியையும் அதன் முகவாரணத்தையும் கத்தனத்தின் பின்பக்கத்தையும் நோக்கவும்'

 


  • சீருடை:

இவர்கள் வரிப்புலி அணிந்திருந்தாலும் மேற்சட்டையின் கைப்பகுதியானது முழங்கை வரை மட்டுமே நீளமானது ஆகும். இது இவர்களின் கண்ணிவெடி வேலையினில் ஏற்படும் வசதியின்மைகளை தவிர்க்கவே இவ்வாறு கட்டையாக்கப்பட்டது ஆகும்.

main-qimg-fcf21f98680208ead74cb09ceb3ad95d.jpg

'கண்ணிவெடி அகற்றும் பணியில் போராளி'

main-qimg-26afb8656ee787e045f508c73bb9de86.jpg

'கண்ணிவெடி அகற்றும் பணியில் போராளிகள்'

 


  • சிறப்புக் கண்ணிவெடிப்பிரிவு

இவர்கள் கீழ்க்கண்ட கபில(brown) நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர்.

main-qimg-441317a493ae90401e3ad3caeabe5450.png

large_196.jpg.ca32aee31e6f512ce23c3c13825f3780.jpg

 


  • விடுதலைப்புலிகளின் படைய கள மருத்துவப்பிரிவு

இவர்கள் வரியுடுப்பினையே அணிந்திருப்பர்.

சில வேளைகளில் பெண்கள் கீழ்க்கண்ட சீருடையினை அணிந்திருந்தனர்:-

இவர்கள் மேற்சட்டை அணிந்து அதன் மேல் ஒரு அணிந்தும் காலிற்கு நீளக்காற்சட்டையும் அணிந்துள்ளனர். குப்பாயம் வெள்ளை நிறத்திலும், மேற்சட்டை & நீளக்காற்சட்டை சாம்பல் நிறத்திலும் உள்ளது.

main-qimg-d3828bc66ea887368df453eaabf5ea2f.jpg

'பெண் மருத்துவப் போராளிகள் | படிமப்புரவு: fb'

main-qimg-b391b5417143d0c18215fc3c04069f80.jpg

'மட்டக்களப்பு, தொப்பிக்கல்லுக்கு அண்மையாக இருந்த புலிகளின் மருத்துவமனையில் அறுவைச் வைத்தியத்தின்போது | 'படிமப்புரவு: Srilanka guardian'

மேற்கண்ட சீருடை இல்லாமல் அவர்கள் பச்சை வரிப்புலியினையும் அணிந்திருப்பர், கள மருத்துவச் சேவையில்.

உசாத்துணை:

  • செ.சொ.பே.மு.
  • திரைப்பிடிப்புகளை வைத்தே சொந்தமாக எழுதினேன்

படிமப்புரவு

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு(பெ)
      --> சிறப்பு கண்ணிவெடிப் பிரிவு(ஆ&பெ)

ஆகியவற்றின் படிமங்கள் இதனுள் உள்ளது

 

 

Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to புலிகளின் கண்ணிவெடிப்பிரிவு மற்றும் கள மருத்துவப்பிரிவினரின் சீருடைகள் & கவசங்கள்


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.