Jump to content

"யூலை 14" பிரித்தானியாவில் மாபெரும் ஒன்றுகூடல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இடம்: Trafalgar Square

காலம்: யூலை 14, சனிக்கிழமை

நேரம்: முற்பகல் 11 மணி

இலங்கைத்தீவில் நடைபெற்று வரும் தமிழ் மக்களுக்கெதிரான கொலைகள், கடத்தல்கள்,.. போன்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பாரிய கண்டன ஒன்றுகூடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

இப்பாரிய ஒன்றுகூடலை "பிரித்தானிய தமிழ் கவுன்ஸிலர்களின் அமைப்பு" வேறு சில மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்த ஏற்பாடுகள் செய்யபடுவதாக தெரிகிறது.

இன்று மேற்குலகில் எமது கைகள் கட்டப்பட்டு, வாய்களுக்கு பூட்டுகளும் போடப்பட்ட நிலையில், எம் உறவுகளின் அவலங்களை சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டிக் கேட்கும் வகையில் ஆயிரம் ஆயிரமாய் ஒன்று திரள்வோம்.

இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான இவ் ஒன்றுகூடல் தொடர்பான செய்தியை உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தெரியப்படுத்தி, அவர்களையும் பங்கு கொள்ளச் செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் கேல்விப்பட்டேன். இதற்கான வாகன ஒழுங்குகளும் செய்யப்பட்டு உள்ளன. இதனை பற்றிய விபரங்கள்ளை யாழில் எதிபாருங்கள்.

Link to comment
Share on other sites

லண்டனில் ஜூலை 14 இல் மாபெரும் பேரணி

ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி லண்டனில் எதிர்வரும் எதிர்வரும் சனிக்கிழமை (14.07.07) நடைபெறவுள்ளது.

இக்கண்டனப் பேரணியினை ஒழுங்கு செய்துள்ள பிரித்தானிய நகராட்சி மன்றக்குழுவும் அங்கத்தவர்களும் ஏனைய தமிழ் அமைப்புக்களும் விடுத்துள்ள அறிக்கை:

ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் மனித உரிமை மீறல்ளைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி

காலம்: சனிக்கிழமை (14.07.07)

நேரம்: முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 2.30 மணிவரை

இடம்:

ரவல்கர் சதுக்கம் (Trafalgar Square) - இலண்டன்

(நிலக்கீழ்த் தொடரூந்து நிலையங்கள்: Charing Cross, Leicester Square and Piccadilly Circus)

காலத்தின் தேவை - இது எங்கள் தேசியக் கடமை

வாய் பேசாது இருந்தால்

வந்த இடத்திலும் சொந்த இடம் போலே மனித உரிமை மீறப்பட்டு

நாம் அடக்கப்படுவோம்.

உலகிலேயே அழிக்கப்படுவோம்.

எனவே பெருந் திரளாக வாருங்கள். உங்கள் குடும்பத்தவர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும்

அழைத்து வாருங்கள்.

எமது தொப்புள்க்கொடி உறவுகள் மீதான அழிவைத் தடுத்து நிறுத்துவோம்.

ஒரே அணியிலே நின்று ஒரே குரலிலே உலகிற்கு எடுத்துரைப்போம்!

எமது சுதந்திரத்திற்காக நாம் குரல் கொடுப்பது குற்றமல்ல.

ஒழுங்கமைப்பு: பிரித்தானிய நகராட்சிமன்ற உறுப்பினர்கள் குழுவும் அங்கத்தவர்களும் ஏனைய தமிழ் அமைப்புகளும்.

தொடர்புகளுக்கு:

07812028741/ 07967565477 13 Cambridge Rd, Harrow, HA2 7LA

மின்னஞ்சல்: Tamils4peace@aol.com

-புதினம்

Link to comment
Share on other sites

நெவிக்கேசனிலை விலாசத்தை பிழையாய் அடிச்சு சிவாஜி திரையரங்குகளிலை போய் நிக்காமல்... ஒழுங்கு மரியாதையாய் இங்கிலாந்திலை இருக்கிறவை ஒண்று கூடலுக்கு வந்து சேருங்கோ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் குறைந்தது 10 பேரையாவது கோட்டிக்கொண்டு வரவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய ஐபிசி நிகழ்ச்சியில் திரு கந்தையா ராஜமனோகரன் குறிப்பிட்டதை யாராவது கேட்டீர்களா? இந்த மாபெரும் ஒன்றுகூடலைத் தடுத்து நிறுத்த சிங்களவரும் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களும் கடும் முயற்சி எடுப்பதாக. இலங்கையில்தான் ஜனநாயக முறைப்படி எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாமல் தமிழர்களின் குரல் வளைகளை நசுக்குகிறர்கள் என்றால் லண்டனிலும் இந்தக் கொடுமையா? தொடர்ந்து இலங்கையில் தமிழர்களிற்க்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளியில் எடுத்துரைத்த ஊடகவியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத்தலைவர்கள் எல்லோரையும் கொன்றார்கள். வெளிநாடுகளில் வாழும் ஈழத்தவர்கள் ஒன்றுகூடுவதற்க்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இவர்களின் அநியாயத்துக்கு எல்லையே இல்லையா?

14072007.gif14072007_2.gif

Link to comment
Share on other sites

போராட்டத்தில் தோள் கொடுக்காமையை இங்கே கழுவிக் கொள்வோம். இதைக் கூடச் செய்யவில்லை என்றால் நாங்கள் மனிதர்களாகவே இருக்க மாட்டோம். அனைவரும் அணி திரண்டு ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரமிது.

Link to comment
Share on other sites

நேற்றைய ஐபிசி நிகழ்ச்சியில் திரு கந்தையா ராஜமனோகரன் குறிப்பிட்டதை யாராவது கேட்டீர்களா? இந்த மாபெரும் ஒன்றுகூடலைத் தடுத்து நிறுத்த சிங்களவரும் தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்களும் கடும் முயற்சி எடுப்பதாக. இலங்கையில்தான் ஜனநாயக முறைப்படி எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாமல் தமிழர்களின் குரல் வளைகளை நசுக்குகிறர்கள் என்றால் லண்டனிலும் இந்தக் கொடுமையா? தொடர்ந்து இலங்கையில் தமிழர்களிற்க்கு இழைக்கப்படும் கொடுமைகளை வெளியில் எடுத்துரைத்த ஊடகவியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மதத்தலைவர்கள் எல்லோரையும் கொன்றார்கள். வெளிநாடுகளில் வாழும் ஈழத்தவர்கள் ஒன்றுகூடுவதற்க்கும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். இவர்களின் அநியாயத்துக்கு எல்லையே இல்லையா?

14072007.gif14072007_2.gif

அடக்கு முறைதான் என்ன நடந்தால் எனக்கென்ன, எண்று இருக்கும் மக்களை கிழர்ந்து எழவைக்கும்....!

மக்களின் எழுச்சியை தடுக்க வேண்டுமானால் அம்மக்களின் பலவீனமான தலைமையினால் மட்டும்தான் முடியும்.... அப்படியான நிலைதான் எங்களுக்கு இல்லையே...!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளர்ந்து எழுவது எம் எல்லோருக்கும் நல்லது. சென்ற பொங்குதமிழ் நிகழ்ச்சியின் போது குழப்புவதற்க்கென்றே வந்த இனவிரோதிகள் சிலரை எமது தமிழ் இளைஞர்கள் விரட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இம்முறையும் குழப்ப முனைவார்கள். பொய்யாக சிலவற்றை சோடித்து எம்மீது சேறு பூசவும் வரலாம். அவதானமாக இருந்து வெற்றிகரமாக செய்து முடிப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏறக்குறைய 15000 இற்கும் அதிகமான எம்மவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என இந்த ஒன்றுகூடலின் முக்கிய அமைப்பாளர் தயா இடைக்காடர் தெரிவித்தார். லண்டனிலிருந்து மட்டுமல்லாது ஸ்கொட்லண்ட், வேல்ஸ் போன்ற மிக மிக தூர இடங்களிலிருந்தும் எம்மவர்கள் பலர் பங்கு கொள்ள உள்ளதாக தெரிகிறது.

இன்றைய காலகட்டத்தில் எம்மினத்துக்கு எதிராக நடைபெற்று வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு மட்டும் குரல் கொடுப்பதற்காக மட்டுமன்றி, எம் ஒற்றுமையையும் உலகிற்கு எடுத்துக் காட்டுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் நாளை மாபெரும் கண்டன ஒன்றுகூடல் - பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்வர்

சிறீலங்கா அரசின் மனி உரிமை மீறல்களைக் கண்டித்து லன்டனின் மையப் பகுதியில் நாளை மாபெரும் கண்டன ஒன்றுகூடல் இடம்பெற இருக்கின்றது.

பிரித்தானிய நகராட்சிமன்றக் குழுவும், அதன் உறுப்பினர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்டன ஒன்றுகூடல், றபகல் ஸ்கொயர் (Trafalgar Square) என்ற சதுக்கத்தில் காலை 11.00 மணி முதல் 2.30வரை நடைபெறவுள்ளது. நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள் (Charing Cross, Leicester Square and Piccadilly Circus)

முக்கியமான காலகட்டத்தில் இந்த ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், பிரித்தானியாவிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பொதுமக்கள் இவ்வாறு பல்லாயிரக்கணக்கில் கலந்து கொள்வதன் மூலம், சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை அனைத்துலகின் கவனத்திற்கு கொண்டு வர முடியும் எனவும், தமிழ் மக்களின் வேணவாவை ஒருமித்த குரலில் உலகிற்கு வெளிப்படுத்த முடியும் எனவும் ஆய்வாளர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Charing Cross, Leicester Square and Piccadilly Circus ஆகிய புகையிரத நிலயங்கலே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அண்மையானவை. விழாவிற்கென BUS சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. Alperton Station (HA0)ல் இருந்து 9.55 மணிக்கு ஒரு சேவை உள்ளது. இதனை விட ஏனைய இடங்களில் இருந்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.