Jump to content

தரை & கடல் துணைப்படைகளின் சீருடைகள் - ஆவணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ துணைப்படைகளின் சீருடைகள் பற்றியதாகும்... இதை நான் பிரித்து எழுத அறவே மறந்து போனேன்!  முதலில் துணைப்படைகள் என்றால் என்னவென்று பார்ப்போம். இவர்கள் விடுதலைப்புலிகளை களத்தில் ஆற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஒரு 'சண்டை உருவாக்கம்' ஆகும். இவர்கள் கடல் மற்றும் தரைக்கென தனித்தனிப் பிரிவுகளாக இருந்தனர். இரு பிரிவினரும் வேறுவிதமான சீருடையோடு வேறுவிதமான இலச்சினையினையும் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, துணைப்படைகளின் பிரிவுகள் பற்றிக் காண்போம்

தமிழீழ தேசிய துணைப்படை (ஆ&பெ)

நீலன் துணைப்படை

தமிழீழ கடற் துணைப்படை(ஆ):-

  • தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை:-
  •                   மறவன் துணைப்படை
  •                   திருவடி துணைப்படை
  •                   நாவரசன் துணைப்படை
  •                   ஜோன்சன் துணைப்படை
  • ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்பு துணைப்படை அணி  - இது கடற்புலிகளின் ஆழ்கடல் நடவடிக்கை ஆற்றுதல் அணி ஆகும்

 

சரி, கடைசியாக சீருடைகள் பற்றி அலசுவோம்.

சீருடைகளில் முதலாவதாக கடற்றுணைப்படையினதைப் பற்றிக் காண்போம்.

 

  • தமிழீழ கடற் துணைப்படை:

இவர்கள் நீல நிற டெனிம்(Denim) நீளக்காற்சட்டையும் இளநீல நிற அரைக்கைச் சட்டையும் அணிந்திருந்தனர். தலையில் சோழர் புலி பொறித்திருந்த செண்டாட்டத்(baseball) தொப்பியினை அணிந்திருந்தனர். இடுப்பில் கறுப்பு நிற சாதாரண இடைவாரினை அணிந்திருந்தனர்.

main-qimg-b923d3f0dd6093ca7d6a71e28bbd7de9.jpg

'12–03–2006 அன்று பயிற்சி நிறைவு விழாவின் போது கடற்கரை மணலில் அமர்ந்திருக்கும் ஒஸ்கார்(ஆதிமான்) சிறப்பு துணைப்படை அணியினர் | படிமப்புரவு: Tamilnet.com'

பயிற்சியின் போது கீழக்கண்ட சீருடையினை சிலர் அணிந்திருந்தனர்... (ஒரு கபில நிறக் காற்சட்டையும், நாவல் நிற வட்டக்கழுத்து மேற்சட்டையும்)

தமிழீழ கரையோரக் காவல் துணைப்படை12.jpg

 

 

 

சீருடைகளில் கடைசியாக தரைத் துணைப்படையினதைப் பற்றிக் காண்போம்.

 

  • தமிழீழ தேசியத் துணைப்படை

இவர்கள் தொடுத்த கட்டம்போட்ட சீருடையினை அணிந்திருந்தனர். அதில் அக்கட்டங்கள் உருமறைப்பு நிறங்களைக் கொண்டிருந்தன. 

இத்தேசியத் துணைப்படையினர் 3 விதமான சீருடை அணிந்திருந்தனர். 3 விதத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரிவால் அணியப்பட்டிருக்கலாம் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் நான் கீழே குறிப்பிட்டுள்ள 3 நிறத்திலுமான சீருடையினை அணிந்த மாவீரர் படங்கள் ஏராளம் இணையத்தளங்களில் உள்ளது.

ஒன்று கீழே காட்டப்பட்டுள்ள பச்சை நிறம் கொண்ட சீருடையாகவும்.

main-qimg-db8b78eb8e63862fe256e6bb22cb1aab.jpg

மற்றொன்று கீழே காட்டப்பட்டுள்ள ஒருவித சாம்பல் நிறங்கொண்ட சீருடையாகவும் இருந்தது.

main-qimg-5cf04dc50182663e1079fb64a01f28a9.jpg

 

இவர்கள் இக்கட்டம் போட்ட சீருடையத் தவிர இந்த ஊத்தை நிறச் சீருடையையும் அணிந்திருந்தனர்:

photo379.jpg

 

மேற்கண்ட உருமறைப்பிலான சீருடை அணிந்துள்ள பெண்புலிகள்:-

main-qimg-82636f10a80579c9c18a4c11304c75e0.png

main-qimg-b3286a5cd4a2603a752b0abdcea2e5a0.jpg

main-qimg-532e547945725f3cb43ef276d5ed8de2.jpg

'இரு நிறத்திலான சீருடையும் அணிந்துள்ள இரு வேறு ஆட்கள்'

 

மூன்றாவது சீருடை கீழ்க்கண்ட உருமறைப்பிலானதாக இருந்தது. 

19216.jpg

 

உசாத்துணை:

  • செ.சொ.பே.மு.
  • Tamilnet.com-துணைப்படைப் பெயர்கள் இங்கிருந்தே எடுத்தேன்
  • சீருடைகள் பற்றிய தகவல்கள் திரைப்பிடிப்புகளை வைத்தே சொந்தமாக எழுதினேன்.

படிமப்புரவு

  • aruchuna.com
  • tamilnet.com

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

 
 
Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

தரைத் துணைப்படை வீரர்களின் சீருடை பற்றிய புதிய தகவல் சேர்த்துள்ளேன்.

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.