Jump to content

மௌனமான யுகங்கள்- தோழி

Recommended Posts

மௌனமான யுகங்கள்

இன்பமான அதிர்ச்சியோடு தான் இந்த நாள் ஆரம்பித்தது, இன்னொரு புதிருக்கு விடை தரப்போவதும் தெரியாமலே!  எதிர்பாராத விதமாக இன்று காலையில், அவசர அவசரமாக, எண்ணி ஒரு சில ஊழியர்களை மட்டும், அவர்கள் கடின உழைப்பை அங்கீகரித்து, பணி உயர்வு குறித்துப் பேச வேண்டும் என,  முகாமைத்துவ அதிகாரி தனது அலுவலகத்துக்கு வருமாறு பணித்திருந்தார். அந்த ஒரு சிலரில் அவனும் ஒருவராக இருந்தான். அழைக்கப்பட்ட அனைவருமே நேர்மையான, கடின உழைப்பை விரும்புகின்ற ஊழியர்களாக இருந்தது அங்கு தொழில் புரிகின்ற அனைவருக்கும் தெளிவாகவே தெரிந்தாலும் எப்படி இவர்களைத் தெரிவு செய்தார்கள், யார் இவர்களைக்  கண்காணித்தார்கள், எப்படி இது சாத்தியமாயிற்று  என்பதெல்லாம் தெரியாத, புரியாத  புதிராகவே இருந்தது.

கிறிஸ் தனது உழைப்புக்கு தகுந்த ஊதியம் தனக்கு கிடைத்து வந்ததை ஒரு வரமாகவே நினைத்து, அந்தத் தொழிற்சாலை உழைப்பை எப்போதுமே உயர்வாக எண்ணிஉழைப்பவன். இன்று அதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது. தந்தையில்லாத, அவனது குடும்பத்தின் வறுமையைப் போக்கி, ஓரளவுக்கு அவர்களை வாழ்க்கையில் முன்னுக்கு கொண்டு வந்ததற்கு அவனது நேர்மையான, கடின உழைப்பே  காரணம் எனலாம். 

இதோ, ஒவ்வொருவராக அலுவலகத்துள் அழைக்கப்பட்டனர். அவனது பெயர் அழைக்கப்பட்டபோது மகிழ்ச்சியை மீறிய ஒரு  படபடப்புடன் அவன் உள்ளே போன போது,  அவனது முகாமைத்துவ அதிகாரி அவனது கைகளைக் குலுக்கி, அவனுக்கு வாழ்த்து தெரிவித்தபடியே அவனது பணி உயர்வையும், ஊதிய உயர்வையும் அவனுக்கு அறிவித்தார். அதனை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் தோரணையில் அவனுக்கு ஒரு கடிதமும் கையளிக்கப்பட்டது.  சொல்ல வந்த வார்த்தைகள் தடுமாற, ஒருவாறு  சமாளித்து நன்றி கூறியவன் கண்களில்,  அப்போது தான் அந்த மேசையும் அதிலிருந்த உணவுகளின் மீதியும் தென்பட்டு அதிர்ச்சியை ஊட்டியது.    அதிர்ச்சிக்கு காரணமான அந்த மீந்து போன உணவும், நீல நிறப் கைப்பிடிகளைக்  கொண்ட உணவு வெட்டுக்கருவிகளும்  அவனுக்குப் பல கேள்விகளுக்கு விடையளித்தது.  அவனது நினைவுகள் பின்னோக்கி நகர்ந்து, அவனுக்குள் தேங்கியிருந்த பல வினாக்களுக்கு விடை சொல்லத் தொடங்கின.

பரந்து விரிந்திருந்த அந்த பச்சைப் பசேலென்ற திடலிலிருந்து கோடை காலப் பருவக்காற்று மழைச் சாரலைத் தன்னுடன் சேர்த்து இழுத்து வரப்பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்ததது. அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தொழிற்சாலைக்  கட்டடத்தின் கதவுகளைக்   கோடை கால வெப்பநிலையை சமப்படுத்துவதற்காய் திறந்து வைத்திருந்தனர்.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை செழிப்பாய் வளர்த்து,  அழகாய் வெட்டப்பட்டிருந்த புற்களும் அதன் எல்லைகளில் பரவலாய் வேரூன்றியிருந்த விலோ மரங்களும் (Willow trees )ஆஷ் மரங்களும் (Ash trees) அப்பிள் (apple), செரி (Cherry)  மரங்களும், இன்னும் பல வேலியோரத்து பூஞ்செடிகளும் கொடிகளும்  கோடையின் அழகை மேலும் பசுமையாக்கிக் கொண்டிருந்தன.  அது மட்டுமல்லாது வெறும் கற்களும் கட்டடங்களுமாய் இருக்கும் அந்த செயற்கைத் திடலுக்கு அந்த இயற்கை நிழலும் செழித்து, அடர்த்தியாய் வளர்ந்த மரங்களும் அந்த இடத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு வித ஈர்ப்பை  வழங்கிக் கொண்டிருந்தது. இவை எல்லாமே அந்தத் தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரியின் தன்னலமற்ற, இயற்கையை நேசிக்கும் கைகளால் நடப்பட்டு பராமரிக்கப்பட்டதால் விளைந்த சொர்க்கம் என அவனுடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயதுக்காரர் கூறியிருந்தார்.

அவனுக்கு அப்போது மதிய இடைவேளை, அது வெறும் கண் துடைப்புக்கான ஓய்வு என்று தான் எடுத்துக் கொள்ளுவான் அவன். அவனோடு வேலை செய்யும் மற்ற தொழிலாளிகள் சாப்பாடு, ஓய்வு, அரட்டை, புகை பிடித்தல் என தமது நாற்பது  நிமிட  இடைவேளையை மிகுந்த களைப்புடன் கழிக்க அவன் மட்டும் அந்த தொழிற்சாலைக் கட்டடத்தைக் கடந்து, ஏகாந்தமாக அந்த புல்வெளியைச் சுற்றி நடப்பது வழமையாகிப் போனது. தன்  கண்ணில் படும் குப்பை கூளங்களை அக்கறையுடன் அகற்றிக் குப்பைத் தொட்டிகளில் போடுவான். அப்படியே நடந்து போய் அப்பிள் மரங்களிலிருந்து விழுந்திருக்கும் அப்பிள்களை அகற்றி, அவற்றை தனியாக அவற்றுக்கென இருக்கும் தொட்டியில் போட்டு விட்டு, ஏனைய மரங்களின் நிழலையும் ரம்மியத்தையும் ரசித்து விட்டு,  திரும்ப ஒரு சுற்றில் நடந்து போன கையோடு தனது மதிய உணவை அவன் அருந்துவது வழக்கம். அதைத் தொடர்ந்து ஒரு ஐந்து அல்லது ஏழு நிமிடங்களில் தொழிற்சாலையின் மணி ஒன்று ஓங்கி ஒலித்து, மதிய இடைவேளை முடிந்ததை எல்லோருடைய காதுகளுக்கும் எட்ட வைக்கும். 

அன்றும் அப்பிடித்தான், சற்றே ஈரப்பிடிப்புடன் அவன் முகத்தைத் தழுவிச் சென்ற காற்றை நீளமாக உள் இழுத்து வெளியே விட்டபடி எட்டி அடியெடுத்து வைத்த போது, அவனுக்கு வேலைப்பளுவால் வந்திருந்த களைப்பு காணாமல் போனது போல் உணர்ந்தான்.

களை மறந்து, பாட்டைக் கேட்டபடி  நடந்து போகும் போது தான் திடீரென அந்த,  முக மலர்ச்சியோடு தன்னை நோக்கி நடந்து வந்த இளம் பெண்ணை  இவன் கவனித்தான்.  இவளை முன்னெப்போதும் பார்த்ததில்லையே என யோசித்து முடிக்க முன்னரே அவளுடைய  கைகள் இவனை நோக்கி இயல்பாய், நட்புடன்  நீண்டன.

"எனக்குப் பெயர் ஹனா, நான் இத்தொழிற்சாலையின் கணக்கு எழுதும் பகுதியில் ஆரம்ப நிலைத் தொழிலாளி. இனி அங்கு வேலைகள் குறைந்து விட்டன, உனது பகுதிக்கு எனக்கு மாற்றலாகியுள்ளது."

தன்னை அறிமுகம் செய்யும் போதே அவனுடன் கைகளைக் குலுக்கிக் கொண்ட ஹனாவை  இவன் திகைப்போடு பார்த்தான். அவள்  உடல் மொழியும் பேசுகின்ற விதமும் அவளுக்கு  ஒரு அலாதியான கவர்ச்சியைக் கொடுத்திருந்தது மட்டுமல்ல, மிக மிடுக்கான ஒரு இராணுவ வீராங்கனை போன்ற அவளது தோற்றம் அவனுக்கு அவளை முதன் முறை பார்த்த போதே ஈர்ப்பொன்றையும்  ஏற்படுத்தியது.  அலாதியான துள்ளலுடன், ஒருவித மிடுக்குடன் தன்னருகே நடந்து வந்தவளுடன் தன்னை அறிமுகம் செய்யத் தடுமாறிப் போனான் அவன்.

"எனக்குப் பெயர் கிறிஸ், நான் நீங்கள் வேலை செய்ய வந்திருக்கும் தொழிற்சாலையின் மருத்துவப் பொருட்களை உற்பத்தி செய்யும் பகுதியில் கடந்த ஒரு வருடமாக வேலை பார்க்கிறேன்." மேற்கொண்டு வேறு என்ன சொல்வதெனத் தெரியாமல் புன்னகைத்தவனைப் பார்த்து அவள் கேள்வி ஒன்றை வீசினாள்.

"நானும் என்னுடைய பகுதியிலிருந்து  இந்த பழமரத் தோட்டங்கள் வரைக்கும் மதிய இடைவேளையின் போது நடந்து வருவதுண்டு, நான் உன்னை ஒரு போதும் முன்பு பார்த்ததே இல்லையே. என்னைப் பார்த்ததும் ஒளிந்து கொண்டாயா?"

கலகலத்துச் சிரித்துக் கொண்டவளை இவன் பரவசத்துடன் பார்த்தான். ஒருவரைப் பார்த்த முதல் முறையிலேயே இப்படி இயல்பாய் கலகலத்து பேச எப்படி முடிகிறது இவளால் என எண்ணிக் கொண்டான்.

******************************************************************************************************

அதன் பின் வந்த நாட்களில் அவனுடைய தொழிற் சுத்தமும் நேர்த்தியும், சுறுசுறுப்பும் அவளுக்கும் பிடித்ததோ என்னவோ அவனை சந்திப்பதிலும் பேசுவதிலும் ஒரு விதமான ஆர்வத்தை வெளிப்டையாக அவள் காட்டியது அவனுக்கு சில நேரங்களில் கூச்சத்தையும் ஏற்படுத்தியது. தன்னுடைய பகுதிக்கு அவள் புதிதாக இருப்பதால் வேலை பழகுவதில் அவளுக்கிருந்த ஆர்வம் காரணமாக இருக்கலாம் என அவன் எண்ணினாலும் அவனது தோழர், தோழிகள் அவள் இல்லாத போது அவனைக் கிண்டல் அடிக்கத் தொடங்கியிருந்தனர்.

அவனோடு வேலை செய்தவர்களில் பெரும்பான்மையானோர் அந்தத் தொழிற்சாலையில் பல்லாண்டு காலமாக வேலை செய்வதாகக் கூறியிருந்தார்கள். தற்போதுள்ள  தலைமை நிர்வாக அதிகாரி,   மிக இளம் வயதில், கடந்த ஆண்டில் அவரது தந்தையின் திடீர் மரணத்தோடு பதவிக்கு வந்தவர். புதியவர் ஒரு ஆண் என்பதைத் தவிர எவருக்கும் அவர் முகம் தெரியாத ஒன்றாகவே இருந்தது.  அவருக்குக் கீழ் பதவியில் இருந்தவர்கள் மூலமாகவே சகல கட்டளைகளும், வழிமுறைகளும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன.  தொழிற்சாலை முகாமைத்துவம், அதன் தலைவனை இழந்ததோடு பலத்த ஆட்டம் கண்டிருந்தது.  தலைவனை இழந்த கப்பலாக, தொழிற்சாலை திக்குத் திசை தெரியாமல் அலைபாய,  நிர்வாகத் தேவையில் அவர்  தந்தையோடு ஒட்டி உறவாடிய பலர் அவரது மறைவை சாதகமாக்கி, சுயநலத்தோடு, தமது பொருளாதாரத் தேவையை நிறைவு செய்து கொண்டனர். கடை நிலை ஊழியர்களில்க் கூட பல சோம்பேறிகள் இந்த நிலையை தமக்கு சாதகமாக்கிக் கொண்டனர். தொழிற்சாலையின் உற்பத்தி கணிசமான அளவில் சரியத் தொடங்கிய வேளையில் தான் கிறிஸ் வேலையில் சேர்ந்திருந்தான்.  

பழைய நிர்வாக அதிகாரி உயிரோடிருந்த காலப்பகுதியில்,  அவர் இருந்தவரை தனது குடும்ப அங்கத்தவர்கள் அனைவரையும் அவர்களது பாதுகாப்பு கருதி திரை மறைவிலேயே வைத்திருந்தார் என அவன் அறிந்திருந்தான்.  இருந்தாலும் அவர் இதைப்போல இன்னும் பல தொழிற்சாலைகளில் நேர்மையாக வேலை செய்த தொழிலாளிகளை இனம் கண்டு,  அத்தொழிலாளிகளையும் அவர்கள் குடும்பங்களையும் அன்போடு ஆதரித்தவர் எனவும் சக தொழிலாளிகள் பேசிக் கொண்டனர்.

கிறிஸ் வேலையில் சேர்ந்த சிறிய காலப்பகுதியிலேயே தன்  வேலையைத் திறம்பட பழகி, தனக்குப் பின் வந்து சேர்ந்தவர்களுக்கும் தொழிற்பயிற்சி அளிக்கும் அளவுக்கு முன்னேறியிருந்தான்.  அவனது குடும்பத்திற்கான பொருளாதாரத் தேவையை நிறைவு செய்யும் பொறுப்பும் அவனுக்கு இருந்தது.

"இன்று மதிய இடைவேளையில் உன்னோடு சேர்ந்து உணவு அருந்த வரலாமா?" ஹனா மிகுந்த ஆர்வத்தோடு கேட்ட போது கிறிஸ்ஸுக்கு  சம்மதம் தெரிவிப்பதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. மனதெல்லாம் இனிமையாய் ஓர் உணர்வு தேனாய் வடிந்தது போல் இருந்தது.

"அதற்கென்ன வரலாமே!" கிறிஸ் பதில் கொடுத்திருந்தான். 

அவள் வரும் போது  மதிய இடைவேளையில் அவன் வழமை போல தனியாக மரங்களின் நிழலில் இருக்கப் போவதை நினைத்து அவளைச் சந்திக்கப் போகும்  ஒரு  ஆவலும், இனிமையான ஒரு    படபடப்பும் மனதில் தோன்றியதை அவனால் இனம் காண முடிந்தது.

இப்படியே பல மதிய இடைவெளிகள் ஒன்றாகக் கழிந்த போது அவளது பல தனிப்பட்ட, நுணுக்கமான,  சுகாதாரமான உணவுப் பழக்கங்களை கிறிஸ் அறிந்து கொண்டான். பச்சைக் காய்கறிகளுடன் (salad ) ஒரு சிறிய மாமிசத் துண்டு அல்லது மீன் போன்றவற்றை உணவாகப்  பயன்படுத்துவதும்,  ஸ்ரோபெரிகளைக் கழுவி, அவற்றை இரண்டாகப் பிளந்து, பின் single cream எனும் நுரைத்த பால் கலவையை அதன் மேல் படர விட்டு முள்ளுக்கரண்டியால் ஒவ்வொன்றாக ரசித்துச்  சாப்பிடுவதும், அன்று பிடுங்கிய புதினா இலைகளை தேனீருக்குப் பதில் பாவிப்பதும் அவளது வழக்கம் என்பதையும் அறிந்து கொண்டான். சாப்பிட்ட பின்னர் அதிமதுரத்தால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை மட்டும்  ( liquorice) உள் எடுப்பதும்   என   ஹனா மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவளாக இருந்தது, அவளை  கிறிஸ் மேலும் விரும்புவதற்கு காரணமாயின. தனது தந்தை தனது அந்திம காலம் வரை பாவித்த ஒரு நீல நிறப்பிடி கொண்ட கத்தியும் நீல நிற முள்ளுக்கரண்டியும் தனக்கு மிகப் பிடிக்கும் என, அவள் அவற்றைத் தன் உணவுப் பெட்டியில் எப்போதுமே வைத்திருப்பாள்.

சாதாரண ஆங்கிலேயப் பெண்களுக்கில்லாத ஒரு ஒலிவ் நிறமும், பழுப்பு (Hazel )நிறக்கண்களும்  அவளுக்கொரு தனி அழகைக் கொடுத்ததாகவே அவன் நினைத்துக் கொண்டான். அது மட்டுமல்லாமல் அவள், மதிய இடைவேளைகளில் அவனுடன் வெளியே நடக்கும் போதெல்லாம், காலநிலை கருதியோ என்னவோ   தன் கண்களைத் தவிர, தன்  முகத்தை அழகிய பருத்தியினாலான, இளம் வெளிர் நீல துணிகளினால் மறைத்துக் கொண்டாள்.  எவ்வளவு தான் வேலைப் பளு தாக்கினாலும் தனது உணவு, உடற்பயிற்சி போன்றவற்றால் அவள் தன்னையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்வாக வைத்திருக்க விரும்புவாள்.       

அதற்கு மேல் கிரீஸுக்கு ஹனாவைப் புரிந்து கொள்ள முடியாதபடி எதுவோ தடுத்துக் கொண்டே தான் இருந்தது. அவளது கவனம் முழுவதும் வேலையிலும், தன்னோடு வேலை பார்பவர்களுடன் பேச முடிந்த வேளைகளில் பேசி, அவர்களைப் பற்றி நல்ல முறையில் அறிந்து கொள்வதிலுமே இருந்ததை அவன் கவனிக்கத் தவறவில்லை.  என்னதான் அவனுடன் சிரித்துப் பேசினாலும், ஒரு எல்லைக்கு மேல் அவள் அவனுடன் நெருக்கமாகவில்லை. அவனுக்குத்தான் அவள் மீதிருந்த அன்பு அதற்குள்ளாக பேரன்பாகியிருந்தது.  

ஹனா அவனது பகுதிக்கு மாற்றலாகி வந்த காலப்பகுதியில், சோம்பேறி மன்னர்கள் பலர், உற்பத்தி குறைவு, ஊதியச் செலவுக்குத் தேவையான வருமானம் பற்றாமை போன்ற தொழிற்சாலை விதிகளைக் காரணமாக்கி  வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.  புதிய ஊழியர்கள் வேலைக்கமர்த்தப்பட கிறிஸ் அவர்களைத் திறம்பட பயிற்றுவித்ததில் , சில மாதங்களில் தொழிற்சாலையின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. அவனுக்கு உதவியாக இன்னும் ஒரு சிலரும் வேலைக்கமர்த்தப்பட்டனர்.

சில ஆண்டுகளின் முன்னர் பழைய நிறுவனர் உயிரோடிருந்த காலத்தில் சுவாச நோய்களைக் கட்டுப்படுத்தும் இயற்கை மூலப்பொருட்கள்  கொண்ட மருந்துகளையும் அவற்றை  பாதுகாப்பதற்கான மேலுறைகளையும் தயாரிப்பதில் பெயர் எடுத்த தொழிற்சாலை அது.  ஹனாவும் திறம்பட இயங்கி, பல அனுகூலங்கள் ஏற்பட்டதில் தொழிற்சாலையின் நீண்ட கால நற்பெயர் மீண்டும் இப்போது   தக்க வைக்கப்பட்டது.

ஒரு நாள் வழமை போல தன்னுடன் மதிய இடைவேளைக்கு உணவருந்த வந்தவளது நடவடிக்கைகள் சிறிது விசித்திரமானதாக இருந்ததை அவன் உணர்ந்தான். 

"நான் நாளையிலிருந்து வேலைக்கு வரப்போவதில்லை, எனது குடும்பத்தில் அவசரத் தேவை ஒன்று தோன்றியுள்ளது. அதை நான் தான் சரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன். மீண்டும் வேலைக்கு வருவதா இல்லையா என முடிவு செய்யவில்லை. உன்னுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!"

மிகத்திடமாகப் பேசியவளை கிறிஸ் சொல்வதறியாது வெறித்துப் பார்க்கையில், ஹனா சட்டென எழும்பி அவனைப் பார்த்தபடியே அவனிடமிருந்து விலகிச் சென்றாள். சொல்லத் துடித்த வார்த்தைகளும் சொல்லப்படாமலே அவன் நெஞ்சில் புதைந்து போயின. ஹனாவைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவன் அவளைப் பற்றி அறிந்து  கொள்ள முடிந்து தோற்றுப் போனான்.

அவள் போய் நெடு நேரமாகியும் அவள் எப்போதும் பாவிக்கும்,   அந்த இயற்கை மூலப்பொருட்களால் செய்த அந்த மிக மிருதுவான வாசனைதிரவியம் மட்டும் அவனை விட்டுப் போகாமல்,  அவன் சுவாசத்தில் ஒன்றாகக்  கலந்து கொண்டது. அந்த தனித்துவமான வாசனையை அவன் இனி நுகரப்போவதில்லை. அன்று  தான் அவன் ஹனாவை இறுதியாகப் பார்த்தது.

இப்போது மிகவும் துப்பரவாக , பளிச்சென்றிருந்த அந்த அலுவலகத்தின் மூலையிலிருந்த மேசையில் , யாரோ கிரீஸும் அவனது முகாமைத்துவ அதிகாரியும்  வருவது தெரிந்து அவசர அவசரமாக உணவு அருந்திய குறையில் உணவைப் பாதியில் விட்டுவிட்டு, மறைந்து விட்ட தோரணை தெரிந்தது. இன்னுமொரு சிறியதோர் அறையினுள்ளே போய் அறைக்கதவை தாளிடும் வசதி வாய்ந்த அலுவலகம் அது. அங்கு  மேலதிகாரிகள் போய் வருவதை அவன் முன்பொரு தடவை பார்த்திருக்கிறான்.

மேசை மேல் விடப்பட்ட மீந்து போன உணவை இன்னுமொருமுறை அவன் கண்கள் விரைவாக  மீண்டும் ஒருமுறை மொய்த்தன. அங்கு ஒரு தட்டில் ஸ்ரோபெரி பழங்கள் பாதியாக வெட்டப்பட்டு, நுரைத்த பால் (single cream) விடப்பட்டிருக்க இன்னுமொரு தட்டில் பச்சை மரக்கறிகளும் வறுத்த மாமிசத்துண்டுகளும் வைக்கப்பட்டிருந்தன.  புதினா இலைகள் அந்த தேனீர் குவளையுள் மிதந்து கொண்டிருந்தன. அவனுக்கு மிகப்பரிச்சயமான அந்த நீல நிறப்பிடி கொண்ட கத்தியும் நீல நிற முள்ளுக்கரண்டியும் அந்த உணவுத்தட்டில் உணவை அருந்தி முடித்த களைப்புடன், கழுவுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தன.  உணவை அருந்தியவரின் நாற்காலியில் வெளிர் நீல பருத்தியினால்  நெய்த ஒரு முகப்போர்வைத் துண்டு ஒன்று அனாயாசமாய் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தது.  போதாக்குறைக்கு அதிமதுர இனிப்புகள் நிரம்பிய ஒரு பளிங்கு வகைக் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட புட்டி ஒன்றும் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது. 

அவன் நாசியில் மீண்டும் ஒருமுறை அந்த தனித்தன்மையுடன் கூடிய இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட வாசனைத் திரவியம் நுழைந்து, அவன் இதயத்தில் ஒரு கீறலைத் தந்தது. 

கிரிஸ் தனது பணி உயர்வுக்கான கடிதத்தை இறுகப் பிடித்தபடி ஹனாவுடைய அருகாமை தந்த  உணர்வுகளின் கலவையில் குளித்தபடியே  வெளியேறினான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அழகான வர்ணனை . தெளிவான  விளக்கம் சுவையான  கதை  .👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தோழி said:

அழகான கதை. கிறிஸ்சின் மனநிலை எப்படி இருக்கும்? 

பதவி உயர்வு கிடைத்த சந்தோசமா?

நட்பு தொலைந்து போன சோகமா? 

நல்லெண்ணதிலேனும், ஏமாற்றபட்ட விரக்தியா?

ஹனாவின் இனிப்பு மட்டும் அல்ல, மனித வாழ்வும் அதிமதுரம்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய கதைகள் வித்தியாசமானவை.. எதிர்பாராத நிகழ்வுகளுடன் முடிவடைகிறது..

மனிதர்களின் மனங்கள் மிகவும் விசித்திரமானவை.. அவற்றை உங்களுடைய அனேகமான கதைகள் பிரதிபலிக்கிறது.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரம்.....அதிமதுரம் அசத்துறீங்கள் தோழி ......கதை மனசுக்குள் வீணை வாசிக்குது.....தொடருங்கள் .......!   🌹

Link to comment
Share on other sites

On 15/8/2021 at 14:35, பிரபா சிதம்பரநாதன் said:

உங்களுடைய கதைகள் வித்தியாசமானவை.. எதிர்பாராத நிகழ்வுகளுடன் முடிவடைகிறது..

மனிதர்களின் மனங்கள் மிகவும் விசித்திரமானவை.. அவற்றை உங்களுடைய அனேகமான கதைகள் பிரதிபலிக்கிறது.. 

உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் என் எழுத்தைச் சிறப்பிக்கும். நன்றி ! 

On 16/8/2021 at 09:58, suvy said:

மதுரம்.....அதிமதுரம் அசத்துறீங்கள் தோழி ......கதை மனசுக்குள் வீணை வாசிக்குது.....தொடருங்கள் .......!   🌹

ஏதோ என்னால் முடிந்தது , இயன்றவரை சரியான தமிழ்ப் பதங்களை பாவிக்க விழைகிறேன். அன்பும் நன்றியும்!

On 12/8/2021 at 18:04, goshan_che said:

அழகான கதை. கிறிஸ்சின் மனநிலை எப்படி இருக்கும்? 

பதவி உயர்வு கிடைத்த சந்தோசமா?

நட்பு தொலைந்து போன சோகமா? 

நல்லெண்ணதிலேனும், ஏமாற்றபட்ட விரக்தியா?

ஹனாவின் இனிப்பு மட்டும் அல்ல, மனித வாழ்வும் அதிமதுரம்தான். 

உண்மைதான். மனித மனங்களும் அவற்றின் உணர்வுகளும் விசித்திரமானவை. காதலைக் கடந்த கடமைகளும், கடமைகளைக் கடந்த காதலும் உண்டு. நன்றி !நன்றி !

On 12/8/2021 at 17:04, நிலாமதி said:

 அழகான வர்ணனை . தெளிவான  விளக்கம் சுவையான  கதை  .👏

சின்னதாய் ஒரு அழகான விமர்சனம்! நன்றி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வதற்கு நன்றிகள்..💐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.