Jump to content

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே இருந்து வந்திருக்கின்றேன்’-நேர்காணல் – வ.ஐ.ச.ஜெயபாலன்

%E0%AE%B5.%E0%AE%90.%E0%AE%9A.%E0%AE%9C%

 

கோமகன் : ஓர் தலை சிறந்த கவிஞராகக் கணிக்கப்பட்ட நீங்கள் எதற்காக  சினிமாத்துறையைதேர்வு செய்தீர்கள் ?

வ.ஐ.ச.ஜெயபாலன் : அது ஓர் பெரிய கதை.  இலங்கையில் போராட்டம் மிகவும் சரிவு நிலையை அடைந்து கொண்டுருந்த கால கட்டத்தில்  நான் மிகவும் மனமுடைந்திருந்தேன். இந்த சூழலில் அதாவது 2010-ல்  மிகவும் மனமுடைந்து தற்கொலை மனப்பான்மையில் இருந்தேன். அப்பொழுதுதான் தற்செயலாக வெற்றி மாறன் அழைத்து நடிக்கும்படி சொன்னார். எனக்குத்தயக்கமாக இருந்தது. எனக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாது. வாழ்க்கையில் மனைவியின் முன்பாகவே நடித்து இருக்கின்றேன். எனது தயக்கத்தைப் பார்த்து வெற்றிமாறன் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். இப்படியாகவே நான் நடிக்க வந்தேன். அப்பொழுதும் என்னால் அமைதியாக நடிக்க முடியவில்லை. இரவிரவாக இணையத்தில் இருந்து  செய்திகளைப்பார்த்து எனது இடித்துரைகளை எழுதுவதால் பகலில் படப்பிடிப்புத்தளத்தில் அமைதியிழந்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதில் உதவி இயக்குனராக அக்கரை ப்பற்றைச் சேர்ந்த காசிம் இருந்தார். ஒரு கட்டத்தில் நான் நித்திரை கொள்கின்றேன் இல்லை என்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் எனது இணைய இணைப்பைத் துண்டித்து விட்டார். திரைப்படத்துறையில் நான் நடிக்கா விட்டால் என்னுடன்  இப்பொழுது நீங்கள் கதைத்துக் கொண்டிருக்க மாட்டீர்கள். அவ்வளவு தூரத்திற்கு மனஉளைச்சல்களுடன் அமைதியின்றித் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடனேயே அந்த நாட்களில் இருந்தேன். இத்தகைய புறச்சூழல்களே என்னை திரைப்படத்துறைக்குத் தள்ளியது.

கோமகன் : ஒரு பிரதியை கவிதை என்றும், கவிதை இல்லாதது என்றும் எப்படி வரையறைசெய்யலாம் ? 

..ச: வரையறை செய்வதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் மஹாகவி பாரதியாரின் கவிதைகளையே கவிதை இல்லை என்று கருதப்பட்டு வந்தது. ஏன் பல முன்னணிக் கவிஞர்களது கவிதைகளே கவிதை இல்லையென்று ஒரு காலத்தில் நிராகரிக்கப்பட்டு இருந்தது. என்னைப்  பொறுத்தவரையில் ஒரு பிரதியின் மதிப்பீடு என்பது காலம் சார்ந்தது என்றே சொல்வேன். சமகாலத்திலோ அல்லது முன்னைய காலங்களிலோ நிரக்கரிக்கப்பட்ட கவிதைகள் வருங்காலத்தில் கொண்டாடப்படவும் கூடும். ஆனால் உரைநடையில் சொல்கின்ற உத்திகளுக்கும் கவிதையில் சொல்கின்ற உத்திகளும் உள்ள வேறுபாடுகள் மேலும் இரண்டுக்கும் இடையிலான உருவ மற்றும் மொழி உள்ளடக்க வேறுபாடுகள் போன்றவை கவிதையை இனங்காட்டுவதில் பங்களிக்கின்றன. முக்கியமாக எமது மனமே கவிதையை இனங்காட்டுவதில் முன்னணி வகிக்கின்றது. முக்கியமாக கவிதையென்பது அறிவு சார்ந்தது என்பதனை விட மனம் சார்ந்தது என்றே நான் கருதுகின்றேன். அறிவுப்பூர்வமாக கவிதையை இனங்காண முடியுமோ தெரியவில்லை ஏனெனினில் நான் கவிதை இயலில்  தேர்ந்தவன் அல்ல. கவிதை எழுதுகின்றவன் மட்டுமே. உண்மையில் உங்கள் கேள்வியானது ஒரு விவாதத்திற்குரிய விடயமே. இந்தக்கேள்விக்கான பதிலை கவிஞனான என்னிடம் மட்டும் கேட்காது  மொழியியல் கவிதையியல் துறைசார் வல்லுனர்களிடமும் கேட்டு நீங்கள் இந்தப் பதிலைப்  புரணப்படுத்துமாறு வேண்டுகின்றேன்.

கோமகன் : சொல்லாடல்கள், எண்ணங்கள் நாளாந்தம் மாறக்கூடிய சூழலில் நவீன கவிதைகள் என்ற பகுப்பு அவசியம் எனக் கருதுகின்றீர்களா ? 

..ச: என்னைக் கேட்டால் கவிதைகளுக்கு எல்லைகள் இல்லையென்றே சொல்வேன். கடலுக்கு எல்லைகள் கிடையாது. அதே போல் உலகிற்கும் எல்லைகள் கிடையாது. எல்லைகளை மனிதன் தான் சக மனிதனுக்கு இலகுவாகப் பிரிவதற்காகவும் தெரியப்படுத்துவதற்காகவும் உருவாக்கிக் கொண்டான். ஆக மனிதனே தனது விருப்புகளுக்கும் வசதிகளுக்கும் ஏற்றாற் போல் பகுப்புகளை உருவாக்கிக் கொண்டான். நான் பகுப்புகளுக்கு ஏற்றாற் போல் கவிதைகளை யாத்ததில்லை. ஒரு சிலர் பகுப்புகளுக்கு ஏற்றாற் போல் கவிதை யாத்திருக்கின்றார்கள் தான், மறுப்பதற்கில்லை. ஆனால் பல நல்ல கவிதைகளை தந்த தருகின்ற கவிகள் வளைந்து குனிந்து கவிதைகளை யாப்பதற்குத் தயாராக இல்லை என்பதுதான் யதார்த்தம். மரபுக்கு கவிதையில் உள்ள ஓசை நயம் எதுகை மோனை சமகாலத்தில் இல்லை. சமகாலத்துக்  கவிதைகளின் ஓசை நயங்களைத் தவிர்த்துப் பார்த்தால் அவை வெறும் வசன நடையாகவே உள்ளன. மரபுக்கவிதையில் ஓசை நயம் எதோ ஒருவகையில் தொடரத்தான் செய்கின்றது. அத்துடன் பாடமாக்கத் தக்க வகையிலோ அல்லது நினைவில் நிறுத்தும் படியான சொல்லாட்சிகளோ சமகாலத்துக் கவிதைகளில் பயன்படுத்தப்படுவதில்லை.  கவிதைகள் பற்றிய ஆய்வுகள் வேண்டும் தான் ஆனால் அதை பெரிய அளவுக்கு மூளையைக் கசக்க வேண்டிய அவசியமில்லை என்றே நான் கருதுகின்றேன்.

கோமகன் : போர்க்கால கவிதைகள் குறித்து ?

..ச: உலகின் அனைத்துப் பாகங்களிலுமே போர்கள் நடைபெறும் பொழுது போர்க்கால இலக்கியங்கள் தன்முனைப்புப் பெற்று வந்திருக்கின்றன. இதற்கு ஈழமும் விதிவிலக்கல்ல. எனது ” உயிர்த்தெழுந்த நாட்களில்” சொல்லப்படுகின்ற மாதிரி எல்லாக் காவியங்களுமே தோற்றுப்போனவர்களின் பிரக்ஞைகளில் இருந்தே அதாவது போர் பிரக்ஞைகளில் இருந்தே உன்னதமான காவியங்கள் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. பெரும் போர்கள் நடைபெற்ற நாடுகளில் போர் இலக்கியங்களில் “உருவம்” தொடர்பான பல வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தன. பல விடயங்களைக் குறிப்பாக நேரடியாகச் சொல்ல முடியாத பல விடயங்களை இந்தப் போர் இலக்கியங்கள் பேசியிருக்கின்றன.

ஈழத்துக்கவிதை வரலாற்றில் போர்க்காலக் கவிதைகள் பெரும் செல்வாக்கப் பெற்று இருக்கின்றன. எமது போர்க்காலக் கவிதைகள் கடல்கடந்து தமிழகம் புலம்பெயர் தேசங்கள் அனைத்திலுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. எமது போர்க்காலக் கவிதைகளில் கவிதைகளும் பாடல்களும் போர்காலக்  கோஷங்களும் பாடுபொருளாக இருந்திருக்கின்றன. அத்துடன் போர்க்காலங்களில் போராடிய அனைத்துத் தரப்புப்  போராளிகளின் கவிதைகளில் அவற்றின் தரத்தை விட அவர்களின் ஈடுபாட்டையும் மனவுணர்வுகளையும் முக்கியமாகக் கணிக்கின்றோம். போர்க்காலக்  கவிஞர்களில் பலர் போர்க்களக் கவிஞர்களுடைய கவிதைகளில் இருந்து நிறையக் கற்றுக்கொண்டு இருக்கின்றார்கள். அந்தக் கவிதைகளிலோ இல்லை கதைகளிலோ  தரம் இருக்கின்றதா என்பதனைப்  பார்ப்பதை விடுத்து அதிலுள்ள உண்மைத்தன்மையை சமகாலத்து எழுத்தாளர்கள் பார்த்துக் கற்றுக்கொள்ளல் வேண்டும்.

கோமகன் : ‘போர் இலக்கியம் என்றாலே, மக்களைக்கொல்லுவதற்கு உற்சாகமூட்டுவதும், கொல்லப்பட்ட மக்களுக்கு   இரங்கல் செய்வதும்தானே போரிலக்கியங்களின் வேலை’ என்று கவிஞரும் விமர்சகருமான றியாஸ் குரானா எனக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.  இதுபற்றி.. ?

..ச: போரிலக்கியங்களை நாம் இருவகைப்படுத்தலாம். இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பொழுது ஜெர்மன் பிரான்ஸ் போன்ற நாடுகளில் பாசிஸ்ட்டுகள் பாடிய கவிதைகழும் இருக்கின்றன. அவர்களையும்  பாசிசத்தையும்  எதிர்த்து விடுதலைக்காகப் போராடியவர்களினுடைய கவிதைகளும் போரியல் இலக்கியம் என்ற வகையில் தான் இருக்கின்றன. இவைகள் இரண்டையும் ஒரே தராசில்தான் வைத்துப் பார்க்கப் போகின்றோம் என்று யாராவது கூறினால் அவர்களுக்கு எதோ கோளாறு இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

கோமகன் : உங்கள் முன்னைய கவிதைகளில் இருந்த மூர்க்கம் இப்பொழுது தளர்ந்ததிற்கானகாரணம் என்ன ? 

..ச: சூரியனுடன் பேசுதல் காலத்தில் இருந்து உயிர்த்தெழுந்த நாட்களின் பின்னர் அண்மையில் நாம் அனைவரும் தோற்றத்தின் பின்னரான எனது கவிதைகள் வாசித்தீர்களோ எனக்குத் தெரியவில்லை. குறிப்பாகத் “தோற்றுப் போனவர்களின் பாடல்” படித்திருக்கின்றிர்களா ?

கோமகன் : படித்திருக்கின்றேன். ஆனால் மரணத்தில் வாழ்வோம் காலப்பகுதியில் வெளியாகிய உங்கள்கவிதைகளின் பாடுபொருகளில் உள்ள  இறுக்கம் வாசகருக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையினைக்கொடுக்கின்ற விடயங்கள் போன்றவை சமகாலத்துக் கவிதைகளில் சற்று நெகிழ்வுத்தன்மையைப்  பார்க்க கூடியதாக இருக்கின்றது. அதைத்தான் குறிப்பிட்டேன்.   

..ச: நான் எனது கவிதைகளை நிரூபிப்பது கிடையாது. எனது கவிதைகளில் கோளாறுகள் இருக்கலாம் இருக்கக் கூடும்.  நீங்கள் மரணத்தில் வாழ்வோம் கவிதைத்தொகுப்பு வந்த கால கட்டத்தில் இலங்கையில் இருந்து வெளியாகிய பத்திரிகைக் குறிப்புகளையும் பின்னர் போர்க்களத்தில் வெளியாகிய மற்றும் சமகாலத்தில் வெளியாகிக் கொண்டிருக்கின்ற பத்திரிகை குறிப்புகளையும் கால அட்டவணைப்படுத்திப் பார்த்து விட்டு அதேவேளை வெளியாகிய கவிதைகளையும் மறுவளத்தில் அட்டவணைபடுத்தினீர்களானால் இந்த வேறுபாடுகளை இலகுவாகப் புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகின்றேன். ஒருவேளையில் அவை தொட்டுக்காட்டா விட்டால் அவை எனது தோல்வி என்றே எடுத்துக் கொள்கின்றேன்.

கோமகன் : இலக்கியத்தில் சிற்றிதழ்களின் பங்களிப்பு குறித்து ?

..ச: எங்களுடைய காலத்தில் சிற்றிதழ்கள் இல்லாவிட்டால் இலக்கியமே இல்லை என்ற நிலை இருந்தது அதுதான் எங்களுடைய தளமாக இருந்தது. முக்கியமாக மல்லிகை டொமினிக் ஜீவா அண்ணையை எனது வாழ்வில் மிகப்பெரிய முக்கிய பாத்திரமாகக் கணிப்பதற்கும் இதுதான் முக்கிய காரணம். தன்னுடைய முழுநேரத்தையுமே மல்லிகைக்காக அர்ப்பணித்த மனிதர் அவர்.எண்களைத் துரத்தித் துரத்தி எங்களிடம் படைப்புகளை வாங்கி பிரசுரித்துப் பல்வேறு அவமானங்களையும் தாங்கி மல்லிகையை பொன்விழா வரை கொண்டு சென்று விட்டவர். அவர் மட்டுமல்ல “அலை”  யேசுராசா ,டானியல் அன்ரனி, ராதேயன் போன்றவர்கள் சிற்றிதழ் துறைக்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்கள். போர்காலத்திலும் சிறப்பான போரிலக்கியம் முழுமையாக வீச்சடைவதற்குப்  போரின் முன்னே சிற்றிதழ்களை நடாத்தியவர்கள்தான் முழுமுதற் காரணியாக இருந்திருக்கின்றார்கள்.ஆனால் இதில் துயரமென்னவென்றால் சமகாலத்தவர் யாருமே அவர்களைக் கொண்டாடுவதுமில்லை கண்டு கொள்வதுமில்லை. குறிப்பாக டொமினிக் ஜீவா அண்ணையை அவர் வாழுங்காலத்தில் அவரை உங்களை போன்றவர்கள் எமது இதழியல் மற்றும் பதிப்பக வரலாறுகளை நேர்காணல் மூலம் ஆவணப்படுத்தினால் அது நாம் அவருக்கு கொடுக்கின்ற அதியுச்ச கௌரவம் என எண்ணுகின்றேன்.

கோமகன் : சிற்றிதழ்கள் ஓர் அருகிவரும் இனம் என்ற குற்றச்சாட்டு உண்டு ? 

..ச: சமகாலத்தில் சிற்றிதழ்களுக்கான சூழல் அருகி வருகின்றது என்பது உண்மைதான். ஏறத்தாழ 70/80களில் திருமணமாகாத காலங்களில் இருந்த இளையவர்களால் சிற்றிதழ்களை உருவாக்கி தொடர்ச்சியாக இயங்க முடிந்தது.அதற்குப் பின்னரான கால கட்டங்களில் குறிப்பாக ஈழத்தவருக்கு வாழ்தலே துயரமாகிப் போனது அதில் இருந்து மீட்சி பெற அவர்களுக்கு ஏறத்தாழ 30 வருடங்கள் தேவைப்பட்டன. இந்தகாலகட்டங்களில் சிற்றிதழ்கள் தாமாகவே அருகி விட்டன. இந்தவேளையில் இலத்திரனியல் புரட்சியும் சமாந்தரமாக அசுர வளர்ச்சியடைந்தது. இப்பொழுது இலத்திரனியல் வழியாக இணைய சிற்றிதழ்கள் வெளியாகின்றன ஆனால் இவைகளை நாங்கள் இடைநிலை சிற்றிதழ்களாகவே கருதமுடியும் ‘சிற்றிதழ்கள்’ என்ற பகுப்பினுள் கொண்டுவரமுடியாது.  இருந்தபோதிலும் சமகாலத்தில் வாசிப்பு பழக்கங்கள் முன்னேறுகின்ற சூழலில் பேரிதழ்களுக்கும்  சிற்றிதழ்களுக்கும்  இடைப்பட்ட ‘இடைநிலைசிற்றிதழ்கள்’ உருவாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

கோமகன் : சமகாலத்து  சிற்றிதழ்கள் ஓர் பொறிமுறைக்குள்ளேயே சுழல்கின்றன என்பதைஏற்றுக்கொள்கின்றீர்களா?

..ச: பொறிமுறை என்று நீங்கள் எதனைக் கருதுகின்றீர்கள்?   

கோமகன் : பொறிமுறை என்றால் ‘ஒரே பகுப்புகள்’ சில சிறுகதைகள் , கவிதைகள் , கட்டுரைகள் என்று ஒன்றிற்குள் சுற்றியிருத்தலைக் குறிக்கும்.

..ச: முன்பு எப்படியாக இருந்தது என்று எண்ணுகின்றீர்கள்?

கோமகன் : முன்னைய சிற்றிதழ்கள் அரசியல் ரீதியாகவும் சமூகவியல், இலக்கியம் என்று பல்வேறுவிடயங்களில் வாசகர்களை ஊக்குவித்தது. விவாதக்களங்களை உருவாக்கியது. ஏன் இலக்கியரீதியாகப் பல கோட்பாடுகளை உருவாக்கியது. ஆனால் இன்று இவைகள் அருந்தலாகவேஇருக்கின்றன. 

..ச: நீங்கள் குறிப்பிடுகின்றவை எல்லாம் கடந்த போர்க்காலங்களில் ஆரோக்கியமான போக்குகளைக் கொண்டு வரவில்லை. அது வடமாகாணமாகிலும் சரி தலைநகர் கொழும்பிலும் சரி இறுக்கமான போக்குகளே காணப்பட்டது. அதற்கு முன்னர் பேராசிரியர் கைலாசபதியும் அவருடைய எதிர்தரப்பினரும் நிறைய விவாதங்களில் ஈடுபட்டிருக்கின்றார்கள். கோட்பாடுகள் /கருத்தியல் ரீதியாக விவாதங்கள் அன்று முன்னெடுக்கப்பட்டது என்பது உண்மைதான். இத்தகைய விவாதங்கள் ஒரு போர் போலவே அன்று நடைபெற்றன. இந்தக்  கோட்பாட்டு அலைகளில் நானும் அள்ளுப்பட்டு இருக்கின்றேன். எனது பதின்ம வயதுகளில் அதாவது 72-களில் சாதிய எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து வன்முறையாளனாகவே சித்தரிக்கப் பட்டிருக்கின்றேன்,ஏன் என்னை ‘விசாரணையற்ற கொலை’ க்கு கூட காவல்துறை தேடியது. ஆனால் இன்று கோட்பாடுகள் / கருத்தியல் ரீதியாக முட்டி மோதுவதற்கான சூழல்கள் இன்று இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நீங்கள் குறிப்பிடுகின்றது போல் இன்று அந்த விடயங்கள் பின்தள்ளி போய் விட்டன என்றுதான் எண்ணுகின்றேன். ஆனாலும் இன்றய இலத்திரனியல் வளர்ச்சியில் எந்த ஒரு விடயமும் அதன் உண்மைத்தன்மையும் இன்றுள்ள இளையவர்களுக்கு இலகுபடுத்தப்பட்டுள்ளன என்பதையும் சுட்டிட விரும்புகின்றேன்.

கோமகன் : உங்களுடைய அரசியலானது எங்கிருந்து தொடங்கியது ? 

..ச: எனது தாயார் உடுவில் மகளிர் கல்லூரியில் படித்துக்கொண்டிரும்பொழுது அதாவது 1917-இல் நவம்பர் மாதம் என எண்ணுகின்றேன் மஹாத்மா காந்தி  இலங்கைக்கு வந்த வேளையில் உடுவில் மகளிர் கல்லூரிக்கும் வருகின்றார். அவர் வரும்பொழுது எனது தாயாரும் அவரது தோழிகளும்  அவரை மாலை போட்டு வரவேற்கின்றார்கள். அன்றிலிருந்து எனது தாயார் ஒரு தீவிர காந்தீய சிந்தனைகளுக்குள் உள்வாங்கப்பட்டார். குறிப்பாக சாதிகள் தொடர்பான எனது தாயாரின் பார்வைகள் இங்கு முக்கியமாகின்றது. அவரது இறுதிக்காலம் வரையில் சாதிகளை பாராதும் இழிவு படுத்தாத வகையிலுமே நான் அவரால் வளர்க்கப்பட்டேன். அப்பொழுது இளவாலையில் படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் பாடசாலையில் இருந்து களவாக கொம்யூனிஸ்ட் கட்சி நடாத்தும்சாதி எதிர்ப்பு போராட்டங்களுக்கு சென்று வந்திருக்கின்றேன். பின்னர் வன்னிக்கு செல்லும்பொழுது, குறிப்பாக மல்லாவி வடகாடு மாங்குளம் போன்ற பகுதிகளில் யாராவது சாதி பார்த்தால் அவர்களுடன் சண்டை பிடிப்பது என்று எனது இளமைப்பராயம் சென்றது.  அதிலும் குறிப்பாக மன்னாரில் கச்சேரியில் கடமை புரிந்த ஒரு காவல்துறை அலுவலகரைத் தாக்கியதால் நான் காவல் துறையாலும் தேடப்பட்ட நபராகவே இனம் காணப்பட்டேன். அனறைய காலகட்டத்தில் கொம்யூனிஸ்ட் கட்சியும் வடக்கு தெற்கு மலையகம் முஸ்லீம் இடங்களில் இருந்த புரட்சிகரக்கருத்துள்ளவர்களும் என்னை அரண் போல் காத்தனர். அதேவேளையில் கொம்யூனிஸ்ட் கட்சியின் இனக்கொள்கையை நான் நிராகரித்தேன். வன்னியில் கொம்யூனிஸ்ட் கட்சிக்கு கிளைகள் இல்லாத காரணத்தினால் பல இடதுசாரிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களும் என்னை ஆதரித்தார்கள். இதனாலேயே  பல்வேறு தளங்களில் / கருத்துக்களுடன் ஒன்றிணைந்து பொது நோக்கத்திற்காக வேலை செய்கின்ற பண்பை நான் பெற்றுக்கொண்டேன். போராட்டகாலங்களிலும் எல்லா அமைப்புகளிலும் உள்ள நல்ல சக்திகளை இனம் கண்டு வேலை செய்ததும் அது பற்றி அந்த அமைப்புகள் என்மீது சந்தேகம் கொள்ளாது இருந்ததற்கும் அடிப்படை காரணிகளே நான் எனது இளமைப் பருவத்தில் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் தான்.

கோமகன் : யாழ் பல்கலைகழக மாணவனாக இருந்த பொழுது அது உங்களை கூர்மைப்படுத்தியதா? ஆம் என்றால் எந்தவகையில் ?

..ச: நான் பல்கலைக்கழகம் சென்ற வேளையில் ஏறத்தாழ 60 வீதம் தமிழ் மாணவர்களும் 40 வீதம் சிங்கள மாணவர்களும் இருந்தார்கள். நான் பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த வேளையில் ஒரு மருத்துவரை சாதி பார்த்த காரணத்தினால் செருப்பால் அடித்தேன் அதேவேளையில் ஒரு மக்கள் பணியாளரை சாதி பார்த்த காரணத்தினால் ஓர் அறையினுள் போட்டு பூட்டி தாக்கியதால் நீதிமன்றம் எனக்கு 5 வருடங்கள் சிறை செல்வதற்கு தீர்ப்பெழுத தயாராக இருந்தவேளையில் என் மீது விசாரணைகளை மேற்கொண்டிருந்த காவல் துறையை சேர்ந்த காவலர் ஒருவர் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதை மக்கள் எனக்குத் தெரியப்படுத்திய காரணத்தினால் நான் அந்தக்காவலர் மீது வழக்குப் பதிய முயலும் பொழுது அந்தக்காவலர் என்னுடன் சமாதானத்திற்கு வந்து எனது வழக்கை திசைதிருப்பி நான் சிறை செல்லாது தப்ப வைத்தார். இந்த நிலையில் எனது பல்கலைக்கழக அனுமதிக்கான கால அவகாசம் முடிந்தவிட்டது.  அத்துடன் எனக்கு பொருளாதார ரீதியாக அத்தனை வலு இல்லை. பல்கலைக்கழக விண்ணப்பம் அனுப்புவதற்கான செலவை  இப்பொழுது லண்டனில் வசித்துவருகின்ற ஒடுக்கப்பட்ட மக்கள் சங்கத்தின் தலைவராக இருந்த நடராஜா எனக்கு தந்தார். ஒருவாறாக எனக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது.

எப்படியும் இந்த நான்கு வருடமும் அமைதியாக இருந்து படிக்க வேண்டும் என்று உறுதியுடனேயே பல்கலைக்கழகத்தில் நுழைந்தேன். ஆனால் முதல் நாளே அங்கு நடைபெற்ற பகிடி வதையினால் மிகவும் ஆத்திரமடைந்து பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற முயன்ற பொழுது பேராசிரியர் கைலாசபதி வந்து என்னை தடுத்தார்.

76 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர் தேர்தலில் தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையிலே முறுகல் நிலை ஏற்பட்டது. அப்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் இருந்து மாணவர்கள் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்ததாக எனக்கு சொல்லியிருந்தார்கள்.  தமிழ் முஸ்லீம் மலையகம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பொதுவான மாணவர் தேர்தல் பட்டியலை உருவாக்குவதற்கு முன்னின்று அதற்கு தலைவராக ராஜரட்ணம் என்பவரை தெரிவு செய்தோம். அனால் அவரை மிரட்டி இறுதியில் தலைமை பதவிக்கான தேர்தலில் இருந்து அவர் விலகினார். ஒருவருமே தேர்தலில் நிற்கத்தயங்கிய பொழுது தவிர்க்க முடியாத காரணத்தினால் எனது பெயரைப் போட்டார்கள். 77 ஆம் ஆண்டு கலவர நேரத்தில் நாட்டின் வேறு இடங்களில் இருக்கும் தமிழ் மாணவர்களை பாதுகாப்பாக இங்கு கொண்டு வரவேண்டும் என்று இராணுவ போலீஸ் தரப்பிற்கு நான் கண்டிப்பாக சொல்லியிருந்தேன். யாழ் பல்கலைக்கழகத்தை இட்டுப் பல வதந்திகள் நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பரவியிருந்த வேளையில் எனது தோழர்களாக இருந்த பெரும்பான்மை இணைத்து மாணவர் தலைவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொன்னேன். அதேவேளையில் யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்களை பாதுகாப்பாக அவர்களது இடங்களுக்கு செல்வதற்கு வேண்டிய வழிகளை மேற்கொண்டேன். இப்படியான சூழல்களே என்னைத் தீவிரமான போராட்ட சூழல்களுக்குத் தள்ளியது.

கோமகன் : தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்ப கால கட்டத்தில் இருந்த சூழலுக்கும்சமகாலத்து சூழலுக்கும் இடையில் வேறுபாடுகளை உணருகின்றீர்களா ?

வ.ஐ.ச.ஜெயபாலன்
 

..ச: மாற்றங்களும் சூழல்கழும்  எப்பொழுதும் மாறக்கூடியவைதானே.  ஆனால் சூழல்களின் மாற்றங்களை உணராது இருந்தது நாங்கள் செய்த மாபெரும் தவறு என்று சொல்வேன். புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் உணர மறுக்கின்ற/தவறுகின்ற சூழல் என்னவென்றால்,” தாயகத்தில் போரில் தப்பிப் பிழைத்த பொதுமக்களும் போராளிகளும் இன்று கையறு நிலையில் இருக்கின்றார்கள். அவர்களளது இயல்பு வாழ்க்கை இன்னும் சீரான நிலைக்குத் திரும்பவில்லை. மீள்கட்டுமானப் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே நடைபெறுகின்றன. வெளியிலே இருந்து கிடைக்கின்ற நிதிஉதவிகள் போதுமானதாக இல்லை. நான் ஏலவே சொல்லியவாறு  போராட்ட காலங்களிலும் அதன் பின்னரும் புலம் பெயர் நாடுகளில் சேர்க்கப்பட்ட பல மில்லியன் யூரோக்கள் இன்று பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்தப்பணங்கள் தாமதமின்றி அங்குள்ள மக்களுக்குப் போய் சேரவேண்டும். இதை இந்த நேர்காணல் மூலம் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

வெளிநாடுகளில் இருக்கின்ற போராட்ட சக்திகள் தாயகத்தில் இருக்கின்ற போராட்டத் தலைமைகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்கலாமே தவிர அவர்களது போக்குகளை தீர்மானிப்பவர்களாக இருப்பதற்கு எதுவித அருகதைகளுமற்றவர்கள். மீள் கட்டுமானப் பணிகள் பேதங்கள் பாராது வடக்கு கிழக்கு என்று அனைத்து பிராந்தியங்களிலும் இங்குள்ளவர்களால் முடக்கிவிடப்படல் வேண்டும். தாயகத்தில் இருக்கின்ற மக்கள் தங்களது நோக்கில் சரியாகவே செல்கின்றார்கள். அவர்கள் புலம்பெயர்ந்தவர்களின் எதிர்பார்த்த வேகத்திற்கு செல்லவோ இல்லை அவர்களது நலன் சார்ந்த முன்னெடுப்புகளுக்கோ தயாராக இல்லை என்பதே யதார்த்தம். குறிப்பாக மீண்டும் அகதி அந்தஸ்து கோருவதற்கான முன்னெடுப்புகளை புலம்பெயர் தமிழர்கள் கைவிடவேண்டும். அது மிகவும் பாரதூரமான விழைவுகளை ஏற்படுத்தும். இனியும் தாயாக மக்கள் ஒரு கொடிய போரை சந்திக்கத் தயாராக இல்லை. அவர்கள் தங்கள் சக்திக்குட்பட்ட வேகத்தில் போராட்டத்தை நகர்த்திக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

நான் இதுவரை பேசாத விடயங்களை இந்த நேர்காணலில் பேசவிளைகின்றேன். போர்க்குற்றங்கள் தொடர்பாக பல ராஜதந்திரிகள், ” போர்க்குற்ற விசாரணைகளின் நலன்கள் தாங்கள் தடைசெய்திருந்த இயக்கத்துக்கு மட்டும் செல்லுமானால் தாங்கள் இந்த போர் குற்ற விசாரணைகளில் அக்கறை கொள்ள மாட்டோம்” என்று கூறியிருக்கின்றார்கள். ஆனால் அனைத்துப் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான ஊர்வலங்களிலும் புலிக்கொடியை ஏந்திச்சென்று அதற்கான சூழலை நாமே அழித்துக்கொண்டோம். புலிக்கொடி தொடர்பான மாட்சிமையில் நான் பின்வாங்கவில்லை அனால் அதைத் தேவையில்லாத இடங்களில் பாவித்து போர்க்குற்ற விசாரணைகளின் போக்குகளை நாங்களே மாற்றியமைத்து விட்டோம். புலம் பெயர்ந்த மக்களாகிய நாங்கள் போரையும் தோற்கடித்து போருக்குப் பின்னர் மக்களிற்குக் கிடைக்கக் கூடிய நன்மைகளையும் தடுப்பவர்களாக நாம் இருந்து விடக்கூடாது. இந்தப் போரில் சேர்த்த பணங்களை அபகரிப்பவர்களாக நாங்கள் இருக்கக்கூடாது. மாறாக நாங்கள் சர்வதேச அரசியல் ராஜதந்திர சூழல்களை உணர்ந்து அதற்கேற்ப போராட்டத்தினை மறுசீரமைத்து “இணைப்பாட்சியை” கோரவேண்டியது எமது கடமை. இதையே இந்த நேர்காணலில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கின்றேன்.

கோமகன் : 2010-ல் மிகவும் மனமுடைந்து தற்கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்ததாககுறிப்பிடுகின்றீர்கள். நீங்கள் எந்தவகையில் மனமுடைந்து மனஉளைச்சலுக்கு ஆளானீர்கள்  

..ச: ஜெசிக்குறு தாக்குதல் கால கட்டங்களில் இருந்து வன்னியுடன் நான் பலத்த வாதப் பிரதி வாதங்களுடன் தொடர்பில் இருந்தவன். காடுகளை விட்டு போராளிகளை எடுத்து மரபுசார்  இராணுவ முறைமைகளில்  கட்டியெழுப்புவதை நான் பல காரணங்களுக்காக எதிர்த்தேன். அதில் முக்கிய காரணமாகக்  காடுகளை இழக்கும் பொழுது எதிரிகள் அதற்குள் சுலபமாக நுழைந்து விடுவார்கள். அதன் பின்னர் எவ்வளவுதான் செல்வங்களை குவித்தாலும் படைகளைக் குவித்தாலும் ஆளணிகளைப் பெருப்பிக்க முடியாது.முக்கியமாக நான் ஒரு சிறிய இனம் இதற்காக நாங்கள் சைனாவிலோ இந்தியாவிலோ ஆளணிகளை வாடகைக்கு அமர்த்த முடியாது. எதிரியினால் ஆளணிகளை அதிகரிக்க முடியும். நாம் சிறிய ஆளணிகளுடன் போராட்டத்தை நடாத்தி வருபவர்கள் என்று வன்னிக்குத் தெடர்ந்து அறிவுறுத்தி வந்தேன். அப்பொழுது நான் கடுமையாக வாதப்பிரதி வாங்கலை மேற்கொள்வதற்கு பறந்து பட்ட தளம் அங்கிருந்தது. எனது வாதங்களில் ஒரு சிலவற்றை வன்னி ஒத்துக்கொண்டாலும் புலம்பெயர் நாடுகளில் இருந்த அமைப்புகள் அதற்கு இடைஞ்சலாக இருந்தார்கள். ஏனெனில் அவர்களுக்கு வடகிழக்கு மாகாணங்களிலும் தென்னிலங்கையிலும் இருக்க முடியாது என்ற தோற்றப்பாட்டினைக் கட்டி எழுப்புவதில் தீவிரமாக இருந்தார்கள்.

புலம்பெயர் நாடுகளில் இருந்த அமைப்புகளின் தேசபக்தியை நான் சந்தேகம் கொள்ளவில்லை. இருந்த போதிலும் சர்வதேச நாடுகளில் “அகதி அந்தஸ்து கோருவதற்கான சூழலை தாயகத்தில் ஏற்படுத்துவதில் முனைப்பாக இருந்தார்கள். முக்கியமாக தலைநகர் கொழும்பில் பல தாக்குதல்கள் நடாத்தப்பட வேண்டும் என்பதனை எதிர்த்தேன்.  அந்த தாக்குதல்களில் எம்மிடையே இருக்கின்ற மிகச்சிறந்த வீரர்களை இழக்க நேரிடும் என்றும், தலைநகரில் தாக்குதல்கள் நடாத்தப்பட்டால் தற்கொலை தாக்குதல்களால் ஏலவே கிலி கொண்டுள்ள சர்வதேசம் உலகப் பயங்கரவாதிகள் பட்டியலில் இலகுவாக எம்மை இனத்து விடுவார்கள் என்று நான் சொல்லியிருந்தும் கூட வெளிநாடுகளில் இருந்த அமைப்புகளின் அழுத்தங்களினால்  பல தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. ஏலவே நான் கூறியிருந்த அவர்களது தேசபக்தியில் எனக்கு சந்தேகம் இல்லாவிட்டாலும் தாயகப் போராட்டத்தில் எமது நோக்கங்களும் அவர்களது நோக்கங்களும் முற்றிலும் வேறுபட்டவை. நாங்கள் அவர்களுக்குப் பலிக்கடா ஆவோமானால் இறுதியில் தோல்வி நிட்சயம் என்று பலமுறை வன்னிக்கு இடித்துச் சொன்னேன்.

காடுகளில் இருக்கின்ற கெரில்லா போரியல் முறமையை தொடரும்பொழுது இலங்கையில் இருக்கின்ற காடுகள் அனைத்தும் எங்கள் வசமாகும் ஆனால் மரபுரீதியிலான இராணுவக்கட்டமைப்பைக் கொண்டு வரும் பொழுதும் தலைநகரில் அதிக தாக்குதல்களைக் கொண்டுவரும் பொழுதும் எதிரியினால் அதிகளவு பாதுகாப்பு வலையங்கள் ஏற்படுத்தப்படும். இது எமக்குப் பின்னடைவையே கொண்டுவரும் என்று சொல்லியிருந்தேன். அதே வேளையில் சர்வதேசம் வன்னியை ஒதுக்குவது விட வன்னியே சர்வதேசத்தை ஒதுக்குகின்ற சூழலை கொண்டு வருகின்றது என்றும் சொன்னேன். விடுதலைப்புலிகள் எனது ஆலோசனைகளை ஆமோதித்தாலும்  கஸ்ரோவின் செல்வாக்கை என்னால் உடைக்க முடியவில்லை.  ஒருகட்டத்தில் எனது கருத்துகளால் கஸ்ரோ என்னைக் கொலை செய்யக்கூட முயற்சித்தார் ஆனால் இயக்கம் அதற்கு அனுமதி வழங்கவில்லை.

இந்தச் சூழலில் 2005-ல் சிவராம் கொல்லப்பட்டத்தின் பின்னர்  பலர் பலமுறை எச்சரித்தும் சிவராம் வீட்டிற்குசெல்ல வேண்டும் என்பதற்காகவும் 2006-ல் நான் வன்னிக்குச் சென்றிருந்தேன். அத்துடன் ஒரு பெரும் மழை வந்து ஆறுகள் பெருக்கெடுத்தால் தோல்வியை தவிர்த்திருக்கலாம் ஆனால் இயற்கை எமக்கு மாறாகவே இருந்தது. அத்துடன் சர்வேதேசம் தற்கொலை தாக்குதல்களுக்கு எதிராக இருந்தமை அத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் சர்வதேச ராஜதந்திரிகள் என்னுடன் பேசிய பொழுது, “அன்ரன் பாலசிங்கம் ஒருவரே சமாதானத்தை விரும்புகின்றார் அமைப்பில் இருக்கின்ற ஏனையோர் எல்லோருமே சமாதானத்துக்கு எதிராகவே இருக்கின்றார்கள். நாம் அன்ரன் பாலசிங்கத்திடம் மட்டுமே தொடர்ந்து பேசமுடியும் அல்லாவிட்டால் அவர்களை அழிக்கின்றதைத் தவிர வேறு வழியில்லை” என்று குறிப்பிட்டார்கள். அத்துடன் பாலசிங்கம் தனது இறுதிக்காலத்தில் இதய சுத்தியுடன் நிரந்தரமாக சமாதானம் வரவேண்டும் என்று முனைப்பாக வேலை செய்தார்.

அன்ரன் பாலசிங்கம் இந்தியாவுடன் கூட ஒரு நல்ல உறவுகளை பேணி வந்தார். மேற்குலக ராஜதந்திரிகள் என்னிடம் சொல்லிய முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று விடுதலைப் புலிகள் காலையில் தம்மிடம் சமாதானத்தைப் பேசியவாறே மாலையில் இறுதி யுத்தத்திற்குக் காசு தரும் படி கூட்டம் போட்டு பேசுவார்கள் என்றும் இந்தவிடயங்களை எல்லாம் மேற்குலகம் கவனிக்க முடியாத நிலையில் இந்த மேற்குலகம் இருக்கிறது என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா” என்று அவர்கள் என்னிடம் வினவினார்கள். நான் மீண்டும் சொல்கின்றேன், சர்வதேசப் புலி ஆதரவாளர்களின் தேசபக்தியை நான் சந்தேகிக்கவில்லை ஆனால் அவர்களுடைய முனைப்புகள் எல்லாமே சர்வதேசத்தில் அகதி அந்தஸ்துகோருவதை, ஊக்கிவிப்பதை அடிப்படையாகவே இருந்தன. இதனால் நம் சமாதானப் பேச்சுவார்த்தை மேசையில் பலத்த தோல்வியினைத் தழுவ நேர்ந்தது.

அத்துடன் போராட்டத்தை கெரில்லா யுத்தமாக நடக்க விடாது அமைப்பின் பல திறமையான போராளிகளைக் கொழும்பில் குவிப்பதன் மூலம் ஒரு நேரடியான யுத்தத்தை வலிந்து இழுப்பதினால் எமது வெற்றியை விட நாட்டில் தொடர்ந்து இருக்க முடியாது என்ற தோற்றத்தை நிறுவுவதிலும் சர்வதேச புலி அமைப்புகள் முனைப்பாக நின்றன. இப்படியான தொலைநோக்கற்ற செயற்பாடுகளினாலேயே நாம் தோல்வியைத் தழுவிக்கொண்டோம். நான் இதை அழுத்தம் திருத்தமாக வன்னிக்குச் சொல்லி இருந்தேன். அதிலும் கூட காஸ்ரோ அணியினரை மிஞ்சி என்னால் எதுவுமே மேலதிகமாகக் கூற  முடியவில்லை. அவர்கள் எனக்கு அனுப்பிய பதில்களைப் பாதுகாப்புக்கு காரணங்களுக்காக உங்களுடன் பரிமாற்ற முடியாது. ஆனால் ” அண்ணை நீங்கள் சொல்வதுதான் சரி காஸ்ரோ அணியினர் பல செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றார்கள்” என்று தலைவர் எனக்குப் பதில் அனுப்பியிருந்தார்.

அத்துடன் கையகப்படுத்திய மக்களது பணத்தை நாட்டிற்குக் கொடுக்காது இருப்பதற்காகத்  தொடர்ந்தும் இவர்கள் தீவிரவாதத்தைக் கையில் எடுக்கின்றார்கள் என நான் கருதுகின்றேன். அவர்கள் தமிழ்நாட்டில் எமக்கு ஆதரவு தருபவர்களைக் குளப்பி பிழையாக வழி நடாத்துகின்றார்கள்.  இந்தப்பணத்தை வைத்திருப்பவர்கள் நாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் கொடுக்கப்படாவிட்டால் அவர்களும் அவர்களது சந்ததிகளும் தலைமுறை தலைமுறையாக அழிந்து போக வேண்டும் என்று நான் ஓர் கவிஞனாக, எனது தமிழின் பெயரிலும் கவிதையின் பெயரிலும் முழு அறத்துடன் சபிக்கின்றேன். புலம் பெயர் நாட்டில் வாழுகின்ற இளைய தலை முறையினரே இந்த இரத்தத்தில் தோய்ந்த பணத்தை உங்கள் தாய் தந்தையர் வைத்திருந்தால் அதனை நீங்கள் தொடாது மக்களுக்கே கொடுக்கும் படி உங்கள் தாய் தந்தையர்களை வற்புறுத்துங்கள்.”( இந்த இடத்தில் உணர்ச்சி மேல்லீட்டால் அவரது குரல் உடைந்து தழுதழுக்கின்றது).

கோமகன் : நீங்கள் எதற்காக  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இருந்து விலகினீர்கள் ?

..ச: நான் அனைத்து விடுதலை அமைப்புகளிலும் ஒரு ஆலோசகர் மட்டத்திலேயே பங்களிப்புச் செய்திருக்கின்றேன்.  அவ்வாறே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் என்னை உள்விவகாரங்களில் சேர்த்துக்கொண்டதில்லை. ஆனாலும் கழகத்தில் ராணுவப் புவியியல் தொடர்பாகவும் அரசியல் ராஜதந்திரம் தொடர்பாகவும் வகுப்புகள் நடாத்திக்கொண்டிருந்தேன். அந்தநேரங்களில் அவர்கள், குறிப்பாகச்  சங்கிலி கந்தசாமி என்மீது குற்றச்சாட்டுகளாக வைத்தவை,” நான் பத்மநாபா, பாலகுமார்,சங்கர்ராஜி  போன்றவர்களுடன் நெருக்கமான உறவுகளை வைத்துக்கொண்டு தங்களை மட்டுமே காரசாரமாக விமர்சிக்கின்றேன்” என்பதாகும். ஆனால் நான் எல்லா அமைப்புகளுக்குமே நெருக்கமாக இருந்து அரசியல் வகுப்புகளை நாடாத்தியிருக்கின்றேன்.

நான் இயக்கத்தில் இருந்து முரண்பட்டு வெளியே இருந்த காலத்தில் 1984 ஆம் ஆண்டு பொட்டம்மானை பட்டுக்கோட்டையில் வைத்து தமிழீழ மக்கள் விடுதலைக் கழகதினர் கைது செய்திருந்தார்கள். அன்றிரவே அவரைக் கொல்வதற்கும்  தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும் இயக்க மோதலே உருவாக்கப்போகின்றது என்று  தோழர்கள் அனைவரும் என்னிடம் முறையிடார்கள். நான் எல்லா இடமும் தேடி கிடைக்காத நிலையில் “தொழிலாளர் பாதை” பத்திரிகை நடாத்திக்கொண்டிருந்த கட்சியின் பொருளாளர் மாதவன் மாஸ்ரர்  வீட்டில் முகுந்தன் இருப்பதை அறிந்து அங்கு சென்று முகுந்தனிடம் பலத்த சண்டை போட்டேன். அப்பொழுது சிவாசின்னப்பொடியும் அங்கிருந்தார். அப்பொழுது சங்கிலி என்னிடம் சண்டைக்கு வர முகுந்தன் தடுத்து நான் சொல்வதுதான் சரி என்று சொல்லி பொட்டம்மானை விடுவிக்க உத்தரவு போட்டார். இதேவேளையில் தம்பி தன்னிடம் வரச்சொல்லி சொல்லியிருந்தார்.  ஆனால் நான் கழகத்தைக் கையறு நிலையில் விட்டு விட்டு செல்லவில்லை. காரணம் அப்பொழுது கழகத்தில் உட்படுகொலைகள் உச்சத்தில் இருந்த நேரம். பாரிஸில் இருக்கின்ற தோழர் அசோக் போன்றவர்கள் உட்படுகொலைகளை எதிர்த்து நின்றார்கள் அவர்களுக்கு நான் உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதாலும் நான் கழகத்தை விட்டு பிரியவில்லை. எங்கும் சரி எனது சுதந்திரத்தை நான் விட்டுக்கொடுக்கவில்லை. கழகத்திலும் சரி புலிகளிடமும் சரி விடுதலை தொடர்பாக நான் எனது காட்டமான விமர்சனங்களை வைப்பதற்கு நான் பின்தங்கியதில்லை. அதனால் நான் ஒரு கலகக்கவிஞனாகவே அடையாளப்படுத்தப்பட்டேன்.

கோமகன் : தாரக்கி சிவராம் படுகொலை தொடர்பாகப் பலர் பலவிதமாகச் சொல்கின்றார்கள். உண்மையில் அவருக்கு என்னதான் நடந்தது? 

..ச: 2013 இல் நான் தாயகம் சென்றபொழுது இது தொடர்பாக பல தோழர்களுடன் தொடர்பு கொல்லப் பல சந்தர்ப்பங்கள் இருந்த போதிலும் அதற்கு முன்பே நான் கைது செய்யப்பட்டேன். அதுவும் கோட்டபாயாவின் விசேட பணிப்பின் பேரில் கைது செய்யப்பட்டேன். எனது நண்பன் பாஷிர் சேகு தாவூத் இது பற்றி உசாவிய பொழுது: “நாங்கள் அவரை விடுதலை செய்வதற்கு கைது செய்யவில்லை. அவருடைய காலம் இங்கேயே முடிந்து விட்டது” என்று எகத்தாளமாக அவர் பதில் சொல்லியிருந்தாலும்  பல முஸ்லீம் தோழர்களது குறிப்பாக ஹக்கீம் மற்றும் எரிக் சொல்கெய்ம்  போன்றவர்களது அழுத்தங்களினால் இறுதியில்  நான் நாடுகடத்தப்பட்டேன். பாலகுமாரனை தம்முடன் இணைந்து செயல்படுமாறு கேட்டு அவர் மறுத்ததினால் கொலை செய்யப்பட்டார் என்றும் புதுவை இரத்தினதுரையும் இதே காரணத்தினால் கொலை செய்யப்பட்டார் என்றும் ஒரு ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல் எனக்கு கிடைத்தது. அதை ஊர்ஜிதப்படுத்துவதற்குள் நான் கைது செய்யப்பட்டேன். இந்தக் கைது சம்பவம் இடம்பெறாது இருக்குமானால் பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை மற்றும் தாரக்கி ஆகியோரது மரணம் தொடர்பான தகவல்களை நான் பெற்றிருப்பேன்.

கோமகன் : ஆனால் தாரக்கிதான் கருணா அம்மான் பிரிவதற்கு முக்கிய ராஜதந்திரியாக இருந்துசெயற்பட்டவர் என்று ஒரு கருத்தும் இருக்கின்றதே ……….? 

..ச: இதில் நாங்கள் ஒரு விடயத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்றுங் கூட நாங்கள் குறிப்பாகப் புலம்பெயர் தமிழர்கள் தாயகத்துக்குச் சென்றால் தாயகத்தின் எல்லா பகுதிக்கும் செல்வோம். ஆனால் கிழக்கு மாகாணத்திற்கு செல்வதை நைச்சியமாகத் தவிர்த்து விடுவோம். ஈழம் என்று சொல்வதற்கு எல்லா புலம்பெயர்ந்த தமிழனுக்கும் உருத்து இருக்கின்றதா என்று எனக்குத் தெரியவில்லை. மிக அருந்தலான புலம்பெயர் தமிழர்களே கிழக்கு மாகாணத்திற்கான மீள்கட்டுமானங்களை செய்கின்றார்கள். மற்றவர்கள் கிழக்கு மாகாணத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கிழக்கு மாகாணத்தில் இருந்து இளைஞர்களை கொண்டு வந்து பயிற்சி கொடுத்த பொழுது நானும் தான் எதிர்த்தேன். இதை ஒத்த கருத்தையே சிவராமும் கொண்டிருந்தார். எனக்குத் தெரிந்த வரையில் சிவராம் கருணா அம்மானை ஒன்றிணைப்பதற்குத்தான் பாடுபட்டார். கருணா அம்மான் தலைமையில் கிழக்கு மாகாணத்தின் குரலை வன்னியில் மேலும் ஒலிக்க வைக்க வேண்டும் என்பதே சிவராமின் நோக்கமாக இருந்தது. ஆனால் கருணா அம்மான் பிரிவார் என்று சிவராமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் எனது கைது விவகாரங்களினால் என்னால் இந்த தகவலை நூறு வீதம் உறுதிபட சொல்ல முடியாது.

கோமகன் : உங்களிற்கும் காஸ்ரோவிற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைகளே உங்களைவன்னிப்பகுதிக்கு வர தடை விதித்ததாக ஒரு கதை உண்டு. இது குறித்து?

..ச: முற்று முழுதாக இதனை மறுதலிக்கின்றேன். நான் கொழும்பு வந்தாலே எனது பாதுகாப்பு தொடர்பாக வன்னி பாதுகாப்புத்துறை கவலையடைவது வழமை. பொட்டம்மானை நான் எப்படி விமர்சித்தாலும் எனது பாதுகாப்பு விடயங்களில் கவனமாக இருந்தார். நான் வவுனியாவுக்கு வந்தாலே முகமறியாத பலர் எனது பாதுகாப்பிற்காக பின்தொடர்வதை நான் பலமுறை உணர்ந்தவன்.

புளொட்டில் எனக்கு உயிராபத்து ஏற்பட்ட காலங்களில் என்னை அறியாதவர்கள் எனக்கு பாதுகாப்பு கொடுத்து என்னுடன் பயணம் செய்தவர்களை நான் உணர்ந்திருக்கின்றேன். காஸ்ட்ரோ எனக்கு தீங்கு விளைவிப்பதை தலைமை ஒருபொழுதும் அனுமதித்ததில்லை என்பதே உண்மை. அவ்வாறு தலைமை அனுமதித்திருந்தால் நான்   காஸ்ட்ரோவால் கொல்லப்பட்டிருப்பேன். எனது கடுமையான விமர்சனங்களை வைப்பதற்கும் எனது பாதுகாப்பு தொடர்பாகவும் வன்னித் தலைமை நேர்மையுடனேயே என்னுடன் நடந்து கொண்டது. உதாரணத்திற்கு வன்னிப்  பிராந்தியத்திலேயே நிலாந்தன் தலைமையில் இடம்பெற்ற கவிஞர் கருணாகரனது நூல் வெளியீட்டில் நான் புலிகள் மீது கடுமையான விமர்சனம் வைத்திருந்தேன். அதில் காஸ்ட்ரோவையும் நந்தவனத்தையும் நான் மிகவும் கடுமையான முறையில் விமர்சித்திருந்தேன். புலிகள் மீதான விமர்சனங்களில் நான் இடித்துரைப்பவராகவே நான் இருந்து வந்திருக்கின்றேன். அதாவது நான் பணியாமலும் நேர்மையாகவும் உண்மையைப் பேசுவதற்கான சூழலே வன்னியில் பராமரிக்கப்பட்டது. காஸ்ட்ரோ இயக்கத்தைப் பிழையாக வழிநடாத்துகின்றார் என்ற கருத்து எனக்கு நெடுங்காலமாகவே இருந்து வந்திருக்கின்றது. நான் என்றும் நிமிர்ந்த தலையுடன் ஒரு கவிஞனாகவே வலம் வர விரும்புகின்றேன்.

கோமகன் : ஆரம்ப காலப் போராளியாகிய உங்களுக்குப்  பல மக்களைக் காவு கொடுத்து விட்டு  ஆயுதங்களை மௌனிக்கின்றோம் என்ற விடுதலைப்புலிகளின் அறிவித்தலானது எத்தகையமனஉணர்வினை  ஏற்படுத்தியது 

..ச: தமிழர் விடுதலைப்போராட்டத்தின் தலைமைப்பொறுப்பில் இருந்த விடுதலைப்புலிகள் மரபுவழி ராணுவத்தில் இருந்து கெரில்லா போராட்ட முறைமைக்கு திரும்பாவிடில் எமது போராட்டத்தை வெற்றிப்பாதைக்கு நகர்த்த முடியாது என்று ஆரம்பம் முதலே அவர்களுக்கு சொல்லி வந்தவன் நான். அத்துடன் சர்வதேசத்தை அச்சுறுத்துகின்ற போராட்ட உத்திகளை கைவிட வேண்டும் என்றும் சொல்லியவன் நான். அவ்வாறு கைவிடாவிட்டால் எல்லோரும் ஒருநாள் விடுதலைப்புலிகளை சுற்றிவளைத்து போராட்டத்தை நசுக்கி இருந்த இடமே தெரியாது செய்துவிடுவார்கள் என்றும் அவர்களுக்குச்  சொல்லியிருந்தேன். ஆகவே இதை நான் எதிர்பார்த்துதான் இருந்தேன். நெஞ்சு நிறைந்த துயருடனும் கண்ணீர் முட்டிமோத அப்பொழுது எழுதியதுதான் ‘தோத்தவர்களின் பாடல்’

கோமகன் : தமிழர்தேசிய விடுதலைப்போரை முடிவுக்கு கொண்டுவந்ததில் முக்கியவகிப்பாகத்தைக் கொண்ட இந்தியாவானது சமகாலத்தில் எமது  பிரச்சனையில்  நட்புசக்தியாக  இருக்கும் என்று சொல்பவர்கள் குறித்து ? 

..ச: ராஜதந்திரங்களின் அடிப்படை விதியே மாற்றங்கள் தான். அதாவது , இந்த ராஜதந்திரங்கள் மூன்று   வகைப்படும்.

01 நாங்கள் உலகை மாற்ற வேண்டும்.

02 நாங்கள் உலக ஒழுங்கு மாறும் என்று எதிர்பார்த்து காத்திருப்பது

03 நாங்கள் உலக ஒழுங்குடன் ஒன்றிணைந்து பயணித்து எமது போராட்ட இலக்குகளை வெல்லுதல்

இதனடிப்படையிலேயே இன்று உலக இயக்கம் இருக்கிறது. இதில் மூன்றாவது  வைகையையே மதியுரைஞர் பாலசிங்கம் தனது இறுதிநாட்களில் கொண்டிருந்தார். ஆனால், புலம்பெயர் தமிழர்களாலும் காஸ்ரோவாலும் அவர் தோற்கடிக்கப்பட்டது ஒரு துன்பியல் நிகழ்வு என்றே நான் சொல்வேன். இன்னும் சொல்லப்போனால் எமது போராட்டம் இந்த இழிநிலைக்கு வந்ததற்கான முக்கிய பொறுப்பாளிகள் புலம்பெயர்ந்த தமிழிழர்களில் இருந்த ஒருசில அமைப்புகளும் காஸ்ரோவுமே ஆகும்.

கோமகன் : தமிழர் தரப்பு பலமுறை பொதுவெளிகளில் தம்மை முஸ்லிம்கள் தொடர்பாகசுயவிமர்சனங்களை வைத்த பொழுதும் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து அப்படியான சுயவிமர்சங்கள் வெளியாகியிருந்தததா ?

..ச: உங்கள் கேள்வியில் சிறிய திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என எண்ணுகின்றேன். அதாவது அமைப்பு ரீதியாக சுயவிமர்சனம் மேற்கொள்ளப்பட்டதா என்று வருவதையே விரும்புகின்றேன். தமிழர் தரப்பில் இருந்து அமைப்பு ரீதியாக எந்தவொரு விமர்சனங்களும் வந்திருக்கவில்லை தனிப்பட்டவர்களே  தார்மீகப்பொறுப்பெடுத்து சுயவிமர்சனம் செய்திருக்கின்றார்கள். முஸ்லீம் தரப்பில் இருந்து அமைப்பு ரீதியாக வந்திருக்கின்றது . ஆனால் புறநடையாக 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீகக் கிராமங்கழும் மக்களும் அழிக்கப்பட்டபொழுது தோழர் அஷ்ரப் அதற்கு எதிரான கண்டன அறிக்கை விட்டு விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி கொழும்பில் அஞ்சாத வாசம் இருந்தார். முக்கியமாக இந்த அறிக்கையை எல்லோரும் வாசிக்க வேண்டும். எமது அழுத்தங்களை  இயங்கங்கள் ஓரளவு ஏற்றுக்கொண்டதால் நிலைமைகள் ஓரளவு சீருக்கு வந்தன. சுருங்கக் கூறின் இருபக்கத்திலுமே சீரிய தொடர்பாடல்கள் இல்லாததால் ஒருவர் பக்கத்து நியாயங்கள் மற்றவருக்குத் தெரியாமலே போய் விட்டது. இன்னும் சொல்லப்போனால் அன்றய காலத்தில் ஆட்சி அதிகாரம் படையணிகள் என்று அனைத்து வளங்களையும் கொண்டிருந்த தமிழர் தரப்பு முஸ்லிம்கள் விடயத்தில் நிதியுடனும் நேர்மையுடனும் நடந்து கொண்டதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இந்திய அமைதி காக்கும் படையின் காலத்தில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளைக் காப்பாற்றியதில் பெரும் வகிப்பாகத்தைக் கொண்டிருந்தவர்கள் முஸ்லீம்கள். ஆனால் இந்திய ராணுவம் வெளியேறிய பின்னர் அங்கு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விடுதலைப்புலிகள் பக்கசார்பாகவே நடந்து கொண்டார்கள். இந்தப்போக்கு மிகவும் தவறானதொரு விடயமாகும். இதை நான் வன்னியிலும் இடித்துரைத்திருக்கின்றேன். கிழக்கு மாகாணத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் பிராந்தியங்கள், எமது அழுத்தத்தினால் தலைமையில் இருந்து போன உத்தரவுகளை அமூல்படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.

கோமகன் : உங்களின் ஆதர்சங்கள் யார் ?

..ச: எல்லோரையும் நான் கேள்விக்குட்படுத்தி விமர்சனம் செய்த காரணத்தால் குறிப்பாக யாரையும் சுட்டிட விரும்பவில்லை.

கோமகன் : உங்களுக்கென்று இலக்கிய அரசியல் உண்டா ?

..ச: பெரிதாகக் குறிப்பிடும்படியாக ஏதுமில்லை. ஆனால் என்றும் நேர்மையும் உண்மையும் கலந்த நிமிர்ந்த தலையுடன் ஒரு கலகக் கவிஞனாகவே வலம் வர விரும்புகின்றேன்.

   ஜெயபாலன் பற்றிய சிறுகுறிப்பு : 

வ.ஐ.ச.ஜெயபாலன்ஓவியம் : நளீம்

ஈழத்துக் கவிஞர்களில் சமகாலத்தில் பெரும் சொத்துக்களில் ஒன்றாக விளங்கும் வ ஐ ச ஜெயபாலன் காலத்தில் நாங்கள் வாழ்வது கொடைகளில் ஒன்றாகும். 1944 ஆம் ஆண்டு ஆடி மாதம் 13 ஆம் திகதி உடுவிலில் பிறந்த இவர், எழுத்துப்பரப்பில் ஒரு கலகக்காரக் கவியாகவே அறியப்பட்டிருக்கின்றார். இதுவரையில் : 12 கவிதைத் தொகுப்புகளையும் சில சிறுகதைகளையும் அரசியற் கட்டுரைகளையும் எழுத்துப்பரப்பிற்கு தந்திருக்கின்றார் அவற்றில் ,

சூரியனோடு பேசுதல் (1986)

நமக்கென்றொரு புல்வெளி (1987)

ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987)

ஒரு அகதியின் பாடல் (1991)

வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002)

என்பன ஈழத்துக்கவிதை வெளியில் இவரை முன்நிறுத்தின. இன்று ஒரு திரைப்பட நடிகராக இவர் தமிழக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த ‘ஆடுகளம்’ திரைப்படம்  இந்தியாவின் தேசிய விருது பெற்ற திரைப்படமாகும். நோர்வேயில் வசித்து வந்தாலும் இந்தியாவில் ஈழத்து இலக்கியத்துறையை முன்னெடுத்தவர்களில் ஒருவராக திகழ்வது எமக்குப் பெருமையே .

00000000000000000000000000000

பிற்குறிப்பு : 

இந்த நேர்காணல் 25 சித்திரை 2019-ல் ...ஜெயபாலன் அவர்களுடன் இடம்பெற்ற நேரடிஉரையாடலினை ஒலிப்பதிவு செய்து தட்டச்சு செய்யப்பட்டது.”

கோமகன்-பிரான்ஸ் 

25 சித்திரை 2019

கோமகன்ஓவியம் : பிருந்தாஜினி பிரபாகரன்


 

https://naduweb.com/?p=17475

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலையிலேயே வாசித்து விட்டேன். இங்கே இரண்டு விடயங்கள் நடக்கலாம்:

1. கள்ள மௌனத்துடன் கடந்து போவார்கள்,

2. திரி கலிபோர்னியாக் காட்டுத் தீ போல பல நாட்கள் எரியும்! (மட்டூஸ்: suit up!😎)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

காலையிலேயே வாசித்து விட்டேன். இங்கே இரண்டு விடயங்கள் நடக்கலாம்:

1. கள்ள மௌனத்துடன் கடந்து போவார்கள்,

2. திரி கலிபோர்னியாக் காட்டுத் தீ போல பல நாட்கள் எரியும்! (மட்டூஸ்: suit up!😎)

நமக்கேன் வம்பு கள்ள மெளத்துடன் கடந்து செல்வோம் ஆனாலும் உற்று நோக்கி 900+ idéer på Smileys | emoji tegning, ansigtsudtryk, frække emoji

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கள் எழுதுவதுக்கு முதல் நடுவெப்  காரர் எழுத்துப்பிழை பார்பதில்லையாக்கும் முதலில் தமிழை கொலை பண்ணாமல் எழுதப்பழகுங்கள் . முன்பும் சாத்திரியின் நேர்காணலில் இருந்த எழுத்து பிழையை பார்த்து இங்கு யாழில் இணைக்கும் தரமே இன்றி இருந்தது .சிறிது காலத்தில் கிருபன் இங்கு இணைத்தவர் .

நாங்கள் வேலையில்  இருப்பவர்கள் பல பிழைகளை தெரிந்தே விடுகின்றோம் காரணம் நேரமின்மை . ஒரு தமிழ் இணைய தளத்தை நடாத்துபவர்களும் பொதுகக்கூசில் கரிக்கட்டையால் எழுதுவது போல்  இலக்கணப்பிழையுடனும் .எழுத்து பிழையுடனும் எழுதுவது சரியா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//போர் இலக்கியம் என்றாலே, மக்களைக்கொல்லுவதற்கு உற்சாகமூட்டுவதும், கொல்லப்பட்ட மக்களுக்கு   இரங்கல் செய்வதும்தானே போரிலக்கியங்களின் வேலை’ என்று கவிஞரும் விமர்சகருமான றியாஸ் குரானா எனக்கு வழங்கிய நேர்காணலில்குறிப்பிட்டுள்ளார்.  இதுபற்றி.. ?//

 

இவர் றியாஸ் கொரோனா பாலஸ்தீனத்தில் பிறந்திருந்தால் இல்லை இலங்கையில் முஸ்லீம்களுக்கு ஒரு சுதந்திரப்போராட்டம் நிகழ்ந்தால் இல்லை அரபுநாடுகளில் விடுதலைப்போர்களுக்கு என்றால் முதல் ஆளாக போர் இலக்கியம் படைப்பார்.. தொப்பி பிரட்ட இவர்களுக்கு எல்லாம் சொல்லியா தரவேண்டும்.. தன் மதம் சார்ந்த இனத்திற்கு எந்த ஆபத்தும் இல்லாதவரைக்கும் மற்றைய இனங்களின் சுதந்திரப்போராட்டங்கள் பயங்கரவாத போராட்டம்கள், மற்ற இனங்களின் போர் இலக்கியம்கள் கொலை இலக்கியங்கள்.. பாலஸ்தீனக் கவிஞர்கள் படைப்பது பேர் இலக்கியம்..? பாலஸ்தீனர்கள் நடத்துவது விடுதலைப்போர்..?? இலங்கையில் முஸ்லீம்கள் போராடவேண்டிய நிலை இல்லைத்தான.. போர் இலக்கியம் படைக்கவேண்டிய அவசியமும் இல்லை.. நாம சேஃப்.. அதால நிம்மதியா சொல்லலாம் ஈழத்தமிழர் போர் இலக்கியம் கொலை இலக்கியம் எண்டு...

உலகத்திலேயே மிகப்பயங்கரமான, கொடூரமான உயிரினம் எது என்று என்னய கேட்டால் அடிப்படைவாத முஸ்லீம் என்று சொல்வேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் ஐயா அவர்கள் ஒருகவிஞர் சமூக ஆர்வலர் என்று அறிந்திருக்கிறேன்,

ஆனால் விடுதலைபுலிகளின் போர்முறைமை பற்றி அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பிரதம ராணுவ ஆலோசகராக எப்போதிலிருந்து இருந்தார்  என்பதைதான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.

ஒருபொழுது புலிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக சொல்வார், மறுபொழுதில் முஸ்லீம்கள் சிங்களவர்கள் இந்தியாவுக்காக உருகுவார். கவிஞர் எந்த நிலையில் உறுதியாக இருக்கிறார் என்பது இன்றுவரை புரிந்ததில்லை.

மண்ணுக்கான போரின்போது  உலகில் உள்ளவர்களெல்லாம் புலிகளை வைத்து தமிழரை அடையாளம் கண்டார்கள்.

போர் முடிந்து எமக்காய் போரிட்டவர்கள் போய் முடிந்த பின்னர் சில தமிழர்கள் தங்களை வைத்து புலிகளை அடையாளபடுத்த எத்தனிக்கின்றார்கள்.

புலிகள் என்ற அமைப்பு அதன் ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் தலைமைக்கு மட்டும் சொந்தமல்ல, மண்மீட்புக்காய் அவர்களுடன் தோளோடு தோள் நின்ற பல லட்சம் மக்களுக்கும் சொந்தமானதொன்று . எம் இனத்தின் எதிர்கால இருப்புக்காய்  போர் செய்தார்கள் லட்சியங்களில் தோற்று போய் அவர்கள் போய் முடிந்துவிட்டாலும்,  நாங்கள் இருக்கிறோம் அவர்களை தேவையின்றி தொட்டுக்கொள்வதை சகித்து கொள்ளபோவதில்லை.

விடுதலை அமைப்பு இனத்துக்கான கடமையை ஆற்றமுனைந்து அது முடியாமல் போகவே மெளனமாகிபோனது,

அதேபோல் உங்களை போன்றவர்கள் உறங்கிகொண்டிருக்கும் பல ஆயிரம் ஆத்மாக்களின் கல்லறைகளை தங்கள் சுய தம்பட்டங்களுக்காக கிளறாமல் , பல்லின சமுதாயம் இந்தியா,கவிதை சினிமா இணைய பேட்டி  போன்ற உங்கள் கடமையை மட்டும் கவனித்தாலே போதும் அதுவே இனத்துக்கு நீங்கள் செய்யும் பெரும் தொண்டு என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பெருமாள் said:

கருத்துக்கள் எழுதுவதுக்கு முதல் நடுவெப்  காரர் எழுத்துப்பிழை பார்பதில்லையாக்கும் முதலில் தமிழை கொலை பண்ணாமல் எழுதப்பழகுங்கள் . முன்பும் சாத்திரியின் நேர்காணலில் இருந்த எழுத்து பிழையை பார்த்து இங்கு யாழில் இணைக்கும் தரமே இன்றி இருந்தது .சிறிது காலத்தில் கிருபன் இங்கு இணைத்தவர் .

நாங்கள் வேலையில்  இருப்பவர்கள் பல பிழைகளை தெரிந்தே விடுகின்றோம் காரணம் நேரமின்மை . ஒரு தமிழ் இணைய தளத்தை நடாத்துபவர்களும் பொதுகக்கூசில் கரிக்கட்டையால் எழுதுவது போல்  இலக்கணப்பிழையுடனும் .எழுத்து பிழையுடனும் எழுதுவது சரியா ?

உண்மை, எழுத்துப் பிழைகள் (சாத்திரியினதை விடக் குறைவு தான்!), திருத்த வேண்டும்.

ஆனால், அதற்காக வாசிக்காமல் இருக்கிறீர்கள் என்பதை நம்பக் கடினமாக இருக்கிறது!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

ஜெயபாலன் ஐயா அவர்கள் ஒருகவிஞர் சமூக ஆர்வலர் என்று அறிந்திருக்கிறேன்,

ஆனால் விடுதலைபுலிகளின் போர்முறைமை பற்றி அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பிரதம ராணுவ ஆலோசகராக எப்போதிலிருந்து இருந்தார்  என்பதைதான் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை.

ஒருபொழுது புலிகளுக்கு ஆலோசனை வழங்கியதாக சொல்வார், மறுபொழுதில் முஸ்லீம்கள் சிங்களவர்கள் இந்தியாவுக்காக உருகுவார். கவிஞர் எந்த நிலையில் உறுதியாக இருக்கிறார் என்பது இன்றுவரை புரிந்ததில்லை.

மண்ணுக்கான போரின்போது  உலகில் உள்ளவர்களெல்லாம் புலிகளை வைத்து தமிழரை அடையாளம் கண்டார்கள்.

போர் முடிந்து எமக்காய் போரிட்டவர்கள் போய் முடிந்த பின்னர் சில தமிழர்கள் தங்களை வைத்து புலிகளை அடையாளபடுத்த எத்தனிக்கின்றார்கள்.

புலிகள் என்ற அமைப்பு அதன் ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் தலைமைக்கு மட்டும் சொந்தமல்ல, மண்மீட்புக்காய் அவர்களுடன் தோளோடு தோள் நின்ற பல லட்சம் மக்களுக்கும் சொந்தமானதொன்று . எம் இனத்தின் எதிர்கால இருப்புக்காய்  போர் செய்தார்கள் லட்சியங்களில் தோற்று போய் அவர்கள் போய் முடிந்துவிட்டாலும்,  நாங்கள் இருக்கிறோம் அவர்களை தேவையின்றி தொட்டுக்கொள்வதை சகித்து கொள்ளபோவதில்லை.

விடுதலை அமைப்பு இனத்துக்கான கடமையை ஆற்றமுனைந்து அது முடியாமல் போகவே மெளனமாகிபோனது,

அதேபோல் உங்களை போன்றவர்கள் உறங்கிகொண்டிருக்கும் பல ஆயிரம் ஆத்மாக்களின் கல்லறைகளை தங்கள் சுய தம்பட்டங்களுக்காக கிளறாமல் , பல்லின சமுதாயம் இந்தியா,கவிதை சினிமா இணைய பேட்டி  போன்ற உங்கள் கடமையை மட்டும் கவனித்தாலே போதும் அதுவே இனத்துக்கு நீங்கள் செய்யும் பெரும் தொண்டு என்று நினைக்கிறேன்.

ஜெயபாலன் பற்றிய உங்கள்  கருத்துகளோடு உடன்பாடில்லை. புலிகள் இருந்த போதே, போர்க்காலத்திலும் கூட இப்போது பேட்டியில் இருக்கும் இதே கருத்துகளை அவர்களுக்கு நேரடியாகச் சொல்லி வந்தவர் என்பதை யாழில் பலர் அறிவர். எனவே, சுய தம்பட்டத்திற்காக இந்த நிலை எடுக்கப் படவில்லை.

மேலும், புலிகள் தலைமையின் இராணுவ, அரசியல் தவறுகள் குறைபாடுகளைப் பேசுவது மாவீரர், போராளிகள் தியாகத்தைக் கொச்சைப் படுத்துவதாக ஆகாது! அப்படியொரு கொச்சைப் படுத்தல் நிகழ்வதாக விம்பத்தை ஏற்படுத்தி வைத்திருப்பது தற்போது புலிகளின் வால்களாக தங்கள் இருப்பிற்காக மாறியிருக்கும் ஒரு குழுவினர்! இந்தக் குழுவினரில் ஒரு உப பிரிவினர் தான் சேகரித்த பணத்தை முடக்கி வைத்துக் கொண்டிருக்கிறவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

டோய் இவர் தமிழீழத்தைச் சேர்ந்தவரோ..😳; ஒரு கவிஞரா😳 ... நான் கூட இவ்வளவு நாளும் இவர் திரைப்படத்தில் நடிக்கும் ஒரு நடிகர் என்றல்லவா நினைத்திருந்தேன்😂... இவருக்கு இவ்வளவு பின்னணி இருப்பது இப்போதுதான் தெரியும்.

இவர் தொடர்பாக நான் தேடியபோது ஐயா யாழிலும் உள்ளார்...

@ poet

'----------

கருத்து அடுத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நன்னிச் சோழன் said:

டோய் இவர் தமிழீழத்தைச் சேர்ந்தவரோ..😳; ஒரு கவிஞரா😳 ... நான் கூட இவ்வளவு நாளும் இவர் திரைப்படத்தில் நடிக்கும் ஒரு நடிகர் என்றல்லவா நினைத்திருந்தேன்😂... இவருக்கு இவ்வளவு பின்னணி இருப்பது இப்போதுதான் தெரியும்.

இவர் தொடர்பாக நான் தேடியபோது ஐயா யாழிலும் உள்ளார்...

@ poet

'----------

கருத்து அடுத்து

தம்பி அவர் ஈழத்தின் சொத்து.. எங்கள் தேசத்தின் அற்புதமான கவிஞர்களில் ஒருவர்.. அவர் கவிதைகளின் சுவையில் கள்ளுண்ட வண்டுபோல் கட்டுன்ண்டு கிடந்திருக்கிறேன்.. உதாரணத்துக்கு ஒன்று 👇

அம்மா

போர் நாட்களிலும் கதவடையா நம்
காட்டுவழி வீட்டின் வனதேவதையே
வாழிய அம்மா.
உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து
அன்றுநான் நாட்டிய விதைகள்
வானளாவத் தோகை விரித்த
முன்றிலில் நின்று எனை நினைத்தாயா
தும்மினேன் அம்மா.
அன்றி என்னை வடதுருவத்தில்
மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?

அம்மா
அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள்
நம் முற்றத்து மரங்களில்
மீண்டு வந்து பாடுதாம் உண்மையா?
தம்பி எழுதினான்.
வலியது அம்மா நம்மண்.
கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள்
வானில் ஒலித்த போதெலாம்
உயிர் நடுங்கினையாம்.
நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.

இருளர் சிறுமிகள்
மேற்க்குத் தொடர்ச்சி மலையே அதிர
நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில்
கன்னிமாங்கனி வாடையில் வந்த
கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற
கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே
எங்கள் ஆற்றை எங்கள் காட்டை
உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.

என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை
உன்னை வந்து பார்க்கலையாமே.
போகட்டும் விடம்மா.
அவனும் அவனது
பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல
உன்னைக் காக்க
யானையின் மதநீர் உண்டு செளித்த நம்
காடும் உளதே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
19 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தம்பி அவர் ஈழத்தின் சொத்து.. எங்கள் தேசத்தின் அற்புதமான கவிஞர்களில் ஒருவர்.. அவர் கவிதைகளின் சுவையில் கள்ளுண்ட வண்டுபோல் கட்டுன்ண்டு கிடந்திருக்கிறேன்.. உதாரணத்துக்கு ஒன்று 👇

அம்மா

போர் நாட்களிலும் கதவடையா நம்
காட்டுவழி வீட்டின் வனதேவதையே
வாழிய அம்மா.
உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து
அன்றுநான் நாட்டிய விதைகள்
வானளாவத் தோகை விரித்த
முன்றிலில் நின்று எனை நினைத்தாயா
தும்மினேன் அம்மா.
அன்றி என்னை வடதுருவத்தில்
மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?

அம்மா
அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள்
நம் முற்றத்து மரங்களில்
மீண்டு வந்து பாடுதாம் உண்மையா?
தம்பி எழுதினான்.
வலியது அம்மா நம்மண்.
கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள்
வானில் ஒலித்த போதெலாம்
உயிர் நடுங்கினையாம்.
நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.

இருளர் சிறுமிகள்
மேற்க்குத் தொடர்ச்சி மலையே அதிர
நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில்
கன்னிமாங்கனி வாடையில் வந்த
கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற
கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே
எங்கள் ஆற்றை எங்கள் காட்டை
உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.

என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை
உன்னை வந்து பார்க்கலையாமே.
போகட்டும் விடம்மா.
அவனும் அவனது
பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல
உன்னைக் காக்க
யானையின் மதநீர் உண்டு செளித்த நம்
காடும் உளதே

 

 

நல்ல கவிதை...

அண்ணே, இவர் மாதிரியே இன்னொருவர் உண்டாரல்லோ? 

அந்த பெரியாரின் சீடன் தானென்று ஒருவர் சொல்வாரல்லவா? இவரைப் போலவே வெள்ளைத்தாடியோடு... இருவரும் ஒராளா? இல்லை வேறுவேறா?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

எழுத்துப்பிழை பார்பதில்லையாக்கும்

பல எழுத்துப் பிழைகள் உள்ளன. நீண்ட நேர்காணலில் திருத்தவே நேரம் எடுக்கும் என்பதால் இம்முறை திருத்தவில்லை.

பொயற் ஐயா கஸ்ரோ மீது கடுப்பாக இருந்திருக்கின்றார். அவர் பொட்டம்மானை புளட்காரரிடம் இருந்து காப்பாற்றியதற்கு நன்றி 🙏🏽

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கிருபன் said:

பல எழுத்துப் பிழைகள் உள்ளன. நீண்ட நேர்காணலில் திருத்தவே நேரம் எடுக்கும் என்பதால் இம்முறை திருத்தவில்லை.

பொயற் ஐயா கஸ்ரோ மீது கடுப்பாக இருந்திருக்கின்றார். அவர் பொட்டம்மானை புளட்காரரிடம் இருந்து காப்பாற்றியதற்கு நன்றி 🙏🏽

 

 

எழுத்துப்பிழை திருத்தி இங்கும் இணைக்கும் அளவுக்கு நமக்கு பொறுமை கிடையாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஆனால், அதற்காக வாசிக்காமல் இருக்கிறீர்கள் என்பதை நம்பக் கடினமாக இருக்கிறது!😂

வாசிக்காமல் எழுத்து பிழைகளை  ஞானகண்ணால் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஞானம் வரவில்லை எனக்கு.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

வாசிக்காமல் எழுத்து பிழைகளை  ஞானகண்ணால் கண்டுபிடிக்கும் அளவுக்கு ஞானம் வரவில்லை எனக்கு.🤣

அப்ப வாசித்த விடயத்தைப் பற்றிக் கருத்தொன்றும் இல்லைப் போல! இருக்கோணும் என்று கட்டாயமில்லை, சும்மா கேட்டனான்!

Link to comment
Share on other sites

9 hours ago, Justin said:

அப்ப வாசித்த விடயத்தைப் பற்றிக் கருத்தொன்றும் இல்லைப் போல! இருக்கோணும் என்று கட்டாயமில்லை, சும்மா கேட்டனான்!

கவிஞரின் நேர்காணலில் பல உண்மைகள் உள்ளன. நேர்மையுடன் கருத்து சொல்ல முடியாது. என்ன செய்யலாம்?  அதில் உள்ள எழுத்து பிழைகளை முக்கிய விவாத பொருளாக்கி அவர் கூறிய  உண்மைகளை மறைக்கலாம் என்ற சிறிய நப்பாசை தான். 

கவிஞர் கூறிய சிலவற்றை நினைத்து பார்க்கிறேன். 2002 ல் சமாதான பேச்சுவார்ததை தொடங்கியதும் இங்கு வாழ்ந்த மக்கள் சமாதானத்தில் பாரிய நம்பிக்கை வைத்து மகிழ்சசியடைய அதனால் புலம் பெயர் நாடுகளில் யுத்த நிதியில்  வீழ்சசி வந்தது.  அதுகண்டு இங்குள்ள யுத்த நிதி சேர்ககும் பிரிவினர் அஞ்சினர். அதனால் வன்னியில் இருந்து சமாதான காலத்தை பயன்படுத்தி  இங்கு வந்த புலிகளின்  பிரதிநிதிகள் சமாதானம் சரிவராது யுத்தத்தின் மூலம் தமிழீழத்தை மீட்கும் வல்லமை எம்மிடம் உண்டு,  என்று மக்களை உசுப்பேற்றும் உரைகளை  நிகழ்ததினர். இதற்காக சில தளபதிகளும் பயன்படுத்தப்பட்டனர். யுத்த நிதி தராதவர்களின் உறவுகளை தாயகத்தில் பிடித்து பணயம் வைத்து இங்கு யுத்த நிதி கறந்த சம்பவங்கள் சமாதான காலத்தில் நடந்தது துன்பமான சம்பவங்கள். 

தமிழீழ விடுதலை போராட்டதின் தோல்வியின் காரணங்களில் கவிஞர் கூறிய பல விடயங்களும் ஒரு வரலாற்றில் சேர்ககப்படல் வேண்டும். 

18 hours ago, கிருபன் said:

..ச: ராஜதந்திரங்களின் அடிப்படை விதியே மாற்றங்கள் தான். அதாவது , இந்த ராஜதந்திரங்கள் மூன்று   வகைப்படும்.

01 நாங்கள் உலகை மாற்ற வேண்டும்.

02 நாங்கள் உலக ஒழுங்கு மாறும் என்று எதிர்பார்த்து காத்திருப்பது

03 நாங்கள் உலக ஒழுங்குடன் ஒன்றிணைந்து பயணித்து எமது போராட்ட இலக்குகளை வெல்லுதல்

இதனடிப்படையிலேயே இன்று உலக இயக்கம் இருக்கிறது. இதில் மூன்றாவது  வைகையையே மதியுரைஞர் பாலசிங்கம் தனது இறுதிநாட்களில் கொண்டிருந்தார். ஆனால், புலம்பெயர் தமிழர்களாலும் காஸ்ரோவாலும் அவர் தோற்கடிக்கப்பட்டது ஒரு துன்பியல் நிகழ்வு என்றே நான் சொல்வேன். இன்னும் சொல்லப்போனால் எமது போராட்டம் இந்த இழிநிலைக்கு வந்ததற்கான முக்கிய பொறுப்பாளிகள் புலம்பெயர்ந்த தமிழிழர்களில் இருந்த ஒருசில அமைப்புகளும் காஸ்ரோவுமே ஆகும்.

தெளிவான பார்வை. உண்மையை உறைக்கச் சொன்ன கவிஞருக்கு பாராட்டுக்கள். வீர வரலாறும் ஆயுத களஞ்சியங்களும் மட்டும் தான் தமிழீழ போராட்ட வரலாறு இல்லை.  போராட்டத்தை நாசப்படுத்திய அனைத்து ஆயுத இயக்கங்களின் மோசமான  செயற்பாடுகளும் சேர்ந்தது தான் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு.

இவ்வாறான ஆயுத இயக்கங்களை உருவாக்கியதில் அரசியல்வாதிகளுக்கும் பங்கு உண்டு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

(இவருக்கு இப்படி ஒரு பின்புலம் உள்ளதே எனக்கு இன்றுதான் தெரியும். நீங்கள் தமிழீழம் மீதும் புலிகள் மீதும் கொண்டிருந்த மாட்சிமையினை மதிக்கின்றேன். போற்றுகிறேன்.)

ஆனால் இவருடைய சில கருத்துக்களில் முழு உடன்பாடும், பல  கருத்துக்களில் உடன்பாடில்லாமலும் உண்டு. அதில் ஒன்று முற்றாக கேலிக்குரியதான கருத்து. உடன்பாடில்லாதவற்றை கீழே பட்டியலிட்டு அவை மீதான என்னுடைய மறுப்பறுப்புகளையும்  முன்வைத்திருக்கிறேன். 

😈😈

முதலாவதாக, இந்தையா புலிகளின் போர்முறையைப் பற்றி - மரபுவழி கூடாது; காட்டுவாசிப் போரே சரி😜 - சொல்லியதைப் பார்த்ததும் சட்டென்று சிரிப்பு வந்து விட்டது😂😂

இவர் காட்டுவாசிப் போரே - கரந்தடிப் போர்முறை - புலிகளுக்குச் சரி, நாட்டுவாசிப் போர் - மரபுவழிப் போர்முறை - அவர்களுக்கு ஆகாது எனச் சொல்லியுள்ளார். ஆனால் அது ஏன் ஆகாது என்பதற்கான தகுந்த விளக்கத்தினையும்(இருந்தால்தானே😉), இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அவர் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் இவரின் சமர்க்களம் தொடர்பான கருத்து கேலிக்குரியதாகிறது.

எனவே இந்த கரந்தடிப் போர்முறையினை ஈழத்தீவிற்கு ஏற்ற அனைத்தின் அடிப்படையிலும் அலசுவோம்.

இவர் எம்மின மக்கட்டொகையினை வைத்து கரந்தடிப் போர்முறையே அண்ணாக்களுக்கு சரியெனக் கூறியிருக்கிறார். மக்கள் தொகை அடிப்படையில் நானதை ஏற்கிறேன். நாங்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களே. ஆனால் இந்தக் கரந்தடிப் போர்முறையால் நாம் எவ்வளவு தொலைவு சாதித்திருக்க இயலும்?(இந்தியாக்காரனை மணலாற்றில் உருட்டி எடுத்ததை சிங்களவனோடு ஒப்பிடலாகாது என்பது என் கருத்து. அவன் புவியியல் அமைப்பினை அறியாமல் மோதி மூக்குடைபட்டவன். இவன் எமது தீவினையே சேர்ந்த பகை. இவனிற்கு எமது காடுகளின் புவியியல் அமைப்பு நன்கு தெரியும்.)

அண்ணாக்கள் போரிட்டது - படைத்துறை அகராதியின் படி - நிலத்தினைக் கைப்பற்றுவதற்காகவேயன்றி,  2 & 3 ஈழப்போர் காலத்தில் உலகெங்கும் கரந்தடிப் போர்முறை மூலம் போராடிய கிளர்ச்சி அமைப்புகள்(எ.கா: ஃவார்க், மாவொயிஸ்ற்) போல் அரசுடன் பேச்சு மூலம் தம்மையும் தாம்சார்ந்த இனத்தையும் ஒன்றிணைந்த நாட்டிற்குள்ளான அரசியலில் இணைப்பதற்காக அன்று.

இவர்கள் தனி நாட்டிற்காகப் போராடியதால், நிலத்தனை ஆள்வதற்காக மரபுவழியாக போரிடலாயினர். அதனால்தான் கடற்படையினையும் தரைப்படையினையும் கொண்டிருந்தனர். 'கடலை ஆள்பவன் தரையையும் ஆள்வான்' என்ற நிலைப்பாடு இவர்களுடையது. நீங்கள் அரசோடு உங்களுக்கென அதிகாரம்(மாவொயிஸ்ருக்களின் கொள்கையினை இங்கு கொள்க) வேண்டுவதற்காக போரிட்டால் நிலத்தினை ஆள வேண்டியதில்லை. 

மேலும், அண்ணாக்கள் செய்தது, போர் மூலமாக இயன்றளவு நிலத்தினையும், பின்னர் கிடைக்கும் இடத்தில் நிலைகொண்டு படைவலுச் சமநிலையினை ஏற்படுத்தி, கிடைக்கும் அரசியல் சந்தர்ப்பம் மூலம் தமிழீழமென வரையறுக்கப்பட்ட மிச்ச நிலத்தினையும் பெறக்கூடியளவு பெறுவதாகும். அதில் தம்மால் இயன்றளவு முயன்றனர். சிலகாலம் நிற்கவும் செய்தனர்.

மேலும் நான்காம் ஈழப்போரில் புலிகள் வடக்கில் மரபுவழிப்போரிலும் கிழக்கில் கரந்தடிப் போர்முறையிலும் ஈடுபட்டனர் என்பதை நினைவிற்கொள்க.

ஆனால் புவிசார் அரசியலில் கொள்ளத்தகா கொள்கையான 'தன்னிலத்தில் ஒரிஞ்சிகூட பிறருக்கு குத்தகைக்கும் தரமாட்டேன்' என்ற வீரமிகு பணியாக் கொள்கையினைக் கொண்டிருந்ததால் தோற்றுப்போகலாயினர்.

அடுத்து, இந்தக் கரந்தடிப் போர்முறையால் நாம் எவ்வளவு தொலைவு & காலம் சிங்களவருக்குப் போக்குக்காட்ட முடியும்? எந்தப் போர்முறையாக இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து போரிட உங்களுக்கு வழங்கல் சீராக இருத்தல் தேவை. அதிலும் கரந்தடிப் போர்முறைக்கு கண்டிப்பாக இருத்தல் வேண்டும். 

ஆனால் ஈழத்தீவின் புவியியல் அமைப்பு கரந்தடிப் போர்முறைக்கான ஆயுத வழங்கல்களுக்கு எதிரானது. ஏனெனில் தீவிற்குள் ஆயுதம் வர வேண்டுமெனில் கடல் வழியாகவே உள்வர வேண்டும். (2 & 3 ஈழப்போரில் சிங்களக் கடற்படை வளர்ந்து விட்டதென்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். போதாக்குறைக்கு இந்தியன் வேறு கழுகாக இருப்பான்.). எனவே சுப்பர் டோறாவைத் தாண்டி... நான் சொல்லி விளங்கும் அளவிற்கு வாசகர்களாகிய நீங்கள் இல்லை. ஒரு வேளை தாண்டிவிட்டாலும் எங்கே தரையிறக்குவீர்கள்? நீங்கள் வாங்கி அவனிட்டை கொடுத்ததாகத்தான் முடியும். 

 சரி, நீங்கள் இப்படி எண்ணலாம், சிங்கள பாதாளக் குழுக்களோடு கைகோர்த்து உள்க்கொணரலாமேயென... அவனுவள் கொண்டுவருவது பெரிய சமருக்கானது அன்று. குத்துவெட்டுகள் அளவிற்கானது மட்டுமே. மேலும் அவங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் கட்சி மாறலாம்; காட்டிக்கொடுக்கலாம். நம்பிக்கையற்றவர்கள்! ஆதலால், உங்கள் போராட்ட வாழ்வாதாரத்திற்கான வழங்கலே இல்லாமல் போகும் போது எப்படிப் போரிடுவீர்கள்?

அடுத்து எமது தரப்பில் அக்காக்களும் களமுனையில் நின்றிருந்தனர். அவர்களுக்கு இயற்கையாக சில சிக்கல்கள் உள்ளதால் சிறப்புக் கவனிப்பு தேவை! அதற்கும் வழங்கல் சீராக இருக்க வேண்டும்.

அடுத்து மருத்துவமும், அதற்கான பின்தளமும். காவாலிகள் காலத்தில் தமிழ்நாட்டிற்கு(பின்தளமாக இருந்தது) மருத்துவச் சேவைக்கு சில பேர் சென்றனர். அங்கிருந்து எமது தளங்களுக்கு மருந்துகள் வந்து சேர்ந்தன. பின்னாளில் பின்தளமான தமிழ்நாடு இல்லாமல் போயிட கரந்தடியாக இருந்து காயக்காரரை என்ன செய்வீர்கள்? எங்கே கொண்டுபோவீர்கள்?

அடுத்து, கரந்தடிப் போர்முறையின் இன்னொரு பலவீனம் போராளியின் உற்றார் & உறவினர்கள் இலகுவில் இனங்காணப்பட்டு பகைவரால் கடுமையான உசாவலுக்கும் சித்திரவதைக்கும் உட்படுத்தப்படுவர்(தமிழ்நாட்டில் வீரப்பன் குழு சம்பவங்கள், வட இந்தியாவில் ஒரிசா, மேற்கு வங்காளத்தில் நடைபெறுபவையினை கவனிக்குக). இது பல நாட்கள் தொடரும்போது போராளியினை உளவகையில் பாதிக்கும். அவர் பின்வாங்குவார், களத்திலிருந்து.

அடுத்து, அந்த காட்டுக் கதை... ஒன்றுமில்லாமல் எல்லா(!😳?) காட்டைப் பிடித்து என்ன மரங்களே வெட்டி விற்பது?😜 அதுவும் சிங்கள காட்டுக்குள் போயிருந்து கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?  ஜெயசிக்குறுயில் வந்தவன் ஆயிரம் இரண்டாயிரம் பேரில்லை. 20 ஆயிரம் பேர். எம்மவர் மரபுவழியென்பதால் பின்தளத்திற்கும் ஆள்விட்டு இவ்வளவு கொணர்ந்தான். இதுவே நீங்கள் ஒன்றும் பெரிதாக இல்லாத வெறும் காட்டுவாசி கரந்தடிப்படையாக இருந்திருந்தால் அத்தனை தென்னிலங்கை படைவெறியரையும் கொணர்ந்து மொங்கியிருப்பான். (மேலும், நீங்கள் கரந்தடி என்றால் உங்களிடம் ஆட்பலமும் ஆயுதபலமும் குறைவாக இருக்கும் என்பதை கவனத்திற்கொள்க. எ.கா: இந்தியக் காவாலிகள் காலம்) நீங்கள் காட்டுக்குள்ளே இருக்க... அவன் காட்டைச் சுற்றி அடிக்கொருவன் என்று நிப்பாட்ட... ஒரே பம்பலா இருக்கும்😂. போதாக்குறைக்கு கிபிர் மிக்கென்று.. கடவுளே! 😞 காட்டுக்குள்ளே இருக்கிற ஆட்கள் கொஞ்சக் காலத்தில் காட்டுக்குள்ளையே சமாதி ஆக வேண்டியதுதான்!

-------------------------------------

அடுத்த மறுப்பறுப்பு:-

தென்னிலங்கையில் நடந்த புலனாய்வு & கரும்புலித் தாக்குதல்கள் வெளிநாட்டில் இருந்த புலி அமைப்புகளுக்காகவே நடந்ததாக இவர் சொல்கிறார். 

ஆ..... அப்ப சாள்ஸ் & மொரிஸ் அண்ணையாக்கள் அடிச்சது வெளிநாட்டில் இருப்பவனுக்காகவா? கட்டுநாயக்காவில் விழிமூடினாங்களே அவங்கள்? கொலன்னாவையில் படம் கூட இல்லாமல் கரைந்தார்களே அவங்கள்? ரத்வத்தை மாமாவை எமலோகம் அனுப்பப்போய் செய்திகூட இல்லாமல் மடிந்தார்களே அவங்கள்?

😳😳😳😳
😡😡😡😡

-------------------------------------

 அடுத்த மறுப்பறுப்பு:-

 நீங்கள் தென் தமிழீழத்திலிருந்து போராளிகள் கொண்டு வந்து பயிற்சி கொடுப்பதை எதிர்த்ததாக கூறுகிறீர்கள். அப்படியெனில் தென் தமிழீழம் தமிழீழத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அறுத்து விடுவதைத்தான் விரும்புகிறீர்களோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.

(சமநேரத்தில் இவரின் கிழக்கு தொடர்பான கருத்தினைக் கண்டுவிட்டு கும்மாளத்தின்😁 வால்கள்😜 கூத்தடிக்கக் கூடும்😒😒. முன்னரே வருகை தந்து கொட்டகையும் போட்டு விட்டனர் என்றும் நினைக்கின்றேன்😉)  

---------------- -------------------

அடுத்த மறுப்பறுப்பு:-

அனைத்துலகத்தினை அச்சுறுத்தும் உத்திகளை புலிகள் கையாண்டனர் என இவர் எதைக் குறிக்கின்றார்?... உலகை அச்சுறுத்தும் உத்தியென்றால் என்ன? 
புலியிட்டை அப்படி என்ன இருந்தது? 
 கரும்புலிகளோ? 

------------------------------------

அடுத்த மறுப்பறுப்பு:-

சோனகர் பற்றி ஒரு உருட்டு உருட்டினார் பாருங்கோ... நான் அப்படியே 'shock'( 😲) ஆயிட்டன்😂... (வடிவேல் குரலில் வாசிக்கவும்)

சோனகர் கட்சி சார்பாக நேர்மையாக நடந்தனரா?  புலிகள் பக்கச்சார்பாக நட்ந்து சோனகர்களுக்கு தீங்கு விளைவித்தார்களா? என்னா உருட்டு😂 .. போதுமடா சாமி🙏

இந்தியப் படைக் காலத்தின் பின் கிழக்கில் சோனியால் கொல்லப்பட்ட தமிழன் எத்தனை? தமிழனால் கொல்லப்பட்ட சோனி எத்தனை?

ஆளை விடுங்கோ... 

------------------

 

என்னாமா  ஆலோசனை கொடுத்துள்ளீர்கள்😲😹😹.. 

நீங்கள் தமிழீழத்திற்காய் எழுதிய கவிதைகளுக்கும் நீங்கள் கொடுத்த கொடுக்கின்ற ஆதரவையும் போற்றுகிறேன் பெரியவரே🙏... 

அதற்காகவும், ஆனாலும், இதுபோன்ற பொருளற்ற கருத்துக்களையும், உருட்டுகளையும் தவிர்த்தல் பிற நல்ல (அந்த காசுக் கருத்து தரமானது) கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் என்பது இந்த பொடிப்பயலின் தாழ்மையான கோரிக்கை... 

🕵🧠😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

அப்ப வாசித்த விடயத்தைப் பற்றிக் கருத்தொன்றும் இல்லைப் போல! இருக்கோணும் என்று கட்டாயமில்லை, சும்மா கேட்டனான்!

புலிகளுக்கு வகுப்பு எடுத்தேன் என்கிறார் அந்த கால கட்ட அவரின் அறிக்கைகளை  தேடிக்கொண்டு உள்ளேன் . இங்கு அவரின் கருத்துக்களுக்கு கருத்து வைப்பதாயின் அவரின் சிங்கள நண்பர்கள் முஸ்லிலிம் நண்பர்கள் யார் என்று புரிந்துகொண்டாள் காணும். அத்துடன் பத்து வருடம் போனபின் இப்ப இவர் இப்படி ஒரு கதை சொல்கிறார் அதுவும் தமிழ் எழுத்துப்பிழைகளை பற்றி கவலைப்படாத ஒரு இணையத்தில் .

புலியை சாட்டி பணம் அடித்தவர்களும் ஓரிருமுறை ஊர் போய் வந்தபின் தவறானவர்களினால் நடந்த ஒரு சில ஆதாரமும் இல்லாத கதைகளை சொல்லி தமிழ்மக்கள் புலிகளினால் வஞ்சிக்கபட்டுவிட்டனர் அய்யோ மனிதவுரிமை மீறல் நடந்துள்ளது என்று சொல்லி நாங்கள் வைத்து இருந்த பணத்தை அவர்களுக்கே முழுக்க சிலவளித்து விட்டோம் என்று சொல்லி கணக்கு முடித்தவர்களுக்கு உண்டாம் மேலும் கணக்கு பிரச்சனையில் இருந்து தப்ப  முழுநேர புலி எதிர்ப்பு வாதியாக நடிப்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு என்பதை சமீபத்தில் தெரிந்து கொண்டேன் .

இப்படி இருக்கையில் நான் இங்கு தேடிக்கருத்து வைப்பது நேர விடயம் .அந்த நேரத்துக்கு இனி அங்கு வடகிழக்கில் கொரனோவால் வடகிழக்கில் மறைமுகமாக பாதிக்கப்பட்டு அடுத்தவேளை உணவுக்கு மறுபடியும் யோசிக்கும் நிலைக்கு அங்கிருப்பவர்கள் வரப்போகிறார்கள் அவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பதை சிந்தித்தால் நல்லது என்று நினைக்கிறன் .

விலைவாசி லண்டன் கனடா விலைகளுக்கு  கிட்டவாக வந்துவிட்டது அங்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

புலிகளுக்கு வகுப்பு எடுத்தேன் என்கிறார் அந்த கால கட்ட அவரின் அறிக்கைகளை  தேடிக்கொண்டு உள்ளேன் . இங்கு அவரின் கருத்துக்களுக்கு கருத்து வைப்பதாயின் அவரின் சிங்கள நண்பர்கள் முஸ்லிலிம் நண்பர்கள் யார் என்று புரிந்துகொண்டாள் காணும். அத்துடன் பத்து வருடம் போனபின் இப்ப இவர் இப்படி ஒரு கதை சொல்கிறார் அதுவும் தமிழ் எழுத்துப்பிழைகளை பற்றி கவலைப்படாத ஒரு இணையத்தில் .

புலியை சாட்டி பணம் அடித்தவர்களும் ஓரிருமுறை ஊர் போய் வந்தபின் தவறானவர்களினால் நடந்த ஒரு சில ஆதாரமும் இல்லாத கதைகளை சொல்லி தமிழ்மக்கள் புலிகளினால் வஞ்சிக்கபட்டுவிட்டனர் அய்யோ மனிதவுரிமை மீறல் நடந்துள்ளது என்று சொல்லி நாங்கள் வைத்து இருந்த பணத்தை அவர்களுக்கே முழுக்க சிலவளித்து விட்டோம் என்று சொல்லி கணக்கு முடித்தவர்களுக்கு உண்டாம் மேலும் கணக்கு பிரச்சனையில் இருந்து தப்ப  முழுநேர புலி எதிர்ப்பு வாதியாக நடிப்பவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு என்பதை சமீபத்தில் தெரிந்து கொண்டேன் .

இப்படி இருக்கையில் நான் இங்கு தேடிக்கருத்து வைப்பது நேர விடயம் .அந்த நேரத்துக்கு இனி அங்கு வடகிழக்கில் கொரனோவால் வடகிழக்கில் மறைமுகமாக பாதிக்கப்பட்டு அடுத்தவேளை உணவுக்கு மறுபடியும் யோசிக்கும் நிலைக்கு அங்கிருப்பவர்கள் வரப்போகிறார்கள் அவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்பதை சிந்தித்தால் நல்லது என்று நினைக்கிறன் .

விலைவாசி லண்டன் கனடா விலைகளுக்கு  கிட்டவாக வந்துவிட்டது அங்கு .

நிச்சயமாகத் தேடுங்கள்! யாழிலேயே ஜெயபாலனின் பதிவுகள் இருக்கின்றன. தாயகத்திலிருந்து வந்த வீரகேசரி, தினக்குரல் போன்ற ஊடகங்களிலும் வந்திருக்கின்றன பேட்டிகள். அனேகமாக உங்கள் கண்ணில் தட்டுப் படாதென நினைக்கிறேன் (ஏனெனில், ஜெ.பா 10 வருடம் கழித்துப் பேசுகிறார் என்ற கற்பனையை கண்டு பிடிப்புகள் ஆதரிக்காதல்லவா?)

மற்றது, அந்த புலிகளின் தமிழ் மக்கள் மீதான தவறுகள் - 2008, 2009 இல் நடந்தவை - ஓரிரு முறை ஊர்போய் வந்த ரூறிஸ்ட்களின் கதையல்ல! தமிழ்கவி, கர்ணன் எனப் பிரபலமான உயிர்வாழும் சாட்சிகளும், இங்கே யாழ் உறுப்பினர்களின் முகம் தெரியாத உறவுகளும் இருக்கிறார்கள். மண்ணில் தலையைப் புதைத்துக் கொண்டால் இவை எதுவுமே தெரியாது என்பதும் உண்மை!😜

 

Link to comment
Share on other sites

Quote

அண்ணை நீங்கள் சொல்வதுதான் சரி காஸ்ரோ அணியினர் பல செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றார்கள்” என்று தலைவர் எனக்குப் பதில் அனுப்பியிருந்தார்.

இது ஒரு அவியலாக தான் இருக்கும் என நம்புகிறேன். கவிஞர் புளட்டில் இருந்தும் இவரை அவர்களே நம்புவதில்லை. 

கவிஞர், புலிகள் பதுளை காடுகளை பிடிக்க வேண்டும் என்றும் யாழ்களத்தில் கூறியவர்.🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

மற்றது, அந்த புலிகளின் தமிழ் மக்கள் மீதான தவறுகள் - 2008, 2009 இல் நடந்தவை - ஓரிரு முறை ஊர்போய் வந்த ரூறிஸ்ட்களின் கதையல்ல! தமிழ்கவி, கர்ணன் எனப் பிரபலமான உயிர்வாழும் சாட்சிகளும், இங்கே யாழ் உறுப்பினர்களின் முகம் தெரியாத உறவுகளும் இருக்கிறார்கள். மண்ணில் தலையைப் புதைத்துக் கொண்டால் இவை எதுவுமே தெரியாது என்பதும் உண்மை!😜

அப்படியா ?

7 minutes ago, nunavilan said:

இது ஒரு அவியலாக தான் இருக்கும் என நம்புகிறேன். கவிஞர் புளட்டில் இருந்தும் இவரை அவர்களே நம்புவதில்லை. 

கவிஞர், புலிகள் பதுளை காடுகளை பிடிக்க வேண்டும் என்றும் யாழ்களத்தில் கூறியவர்.🤔

 

சிலரை நேரில் பார்த்தால் கணிப்பிடலாம். ஆளைப்பார்க்காமல்  சிலரின் கட்டுரைகளில் ஒரு பந்தியை வாசித்தாலே தெரியும் எழுதுறது யார் என்று .இங்கு என்ன சொல்வது நாங்கள் அதிர்ஷ்டம் அற்றவர்கள் அவ்வளவுதான் .

Link to comment
Share on other sites

ஒரு தமிழ் பொதுமகனால் எழுதிய அண்மையில் படித்த கவிதைகள்

தமிழீழ விடுதலை என்றார்கள்
பாட்டாளி வர்க்க புரட்சி என்றார்கள்

பெண் விடுதலை என்றார்கள்
சாதி, மத பேதம் இனி இல்லை என்றார்கள்

அனைத்து அடக்கு முறைகளையும்
உடைத்து எறிவோம் என்றார்கள்

தொழிலாளர் உரிமை காப்போம் என்றார்கள்
கம்மியுனிஸம், மாக்ஸிஸம், சோசலிசம்
என்னென்னமோ சொன்னார்கள்

தமிழீழம் தாகம் என்றார்கள்
எங்களுக்கு ஆயுத மோகமில்லை
எதிரி தான் தூக்க வைத்தான் என்றார்கள்
யாருக்கு எதிராகவென்றது தான்  புரியவில்லை?

வங்கிகளெல்லாம் கொள்ளையிட்டார்கள்
ஏழை மக்கள் சேமித்து வைத்த
பணத்தையும், நகைகளையும்

ஆயுத முனையில் தன்னினத்தையே
அடக்குமுறை செய்தார்கள்

உட்கொலை செய்தார்கள், 
வெளிக் கொலை செய்தார்கள்
ஊருக்குள் கொலை செய்தார்கள்

துரோகிகளையும் கொன்றார்கள்
தியாகிகளையும் கொன்றார்கள்

குற்றம் என்று சொல்வதா?
தமிழன் வரலாறு என்று சொல்வதா?

விதியை நோவதா? மதியை கடிவதா?

ஒரு விரல் காட்டி நிற்கிறோம்
உலகம் குற்றவாளியென்று

மீதி மூன்று விரலுக்கும் பதில் 
சொல்ல திராணியற்று!!!

——————

எனது கருத்து
உனக்கு எதிர்க்கருத்து
உனது கருத்து
எனக்கு எதிர்க்கருத்து

நமது கருத்து
அவனுக்கு எதிர்க்கருத்து
அவனது கருத்து 
நமக்கு எதிர்க்கருத்து

உண்மையில் இங்கே
எதிர்க்கருத்து என்று எதுவுமேயில்லை
எல்லா கருத்துமே அவரவர் கருத்து

கருத்தை கருத்தால் மறுதலிக்கலாம்
அல்லது கருதாமல் செல்லலாம்
கருத்திலெடுக்காமலும் விடலாம்

எதிர்க்கருத்தென்று சொல்லியே
நம் இனத்தில் எத்தனை
கல்வியாளர்களும்,
புத்தி ஜீவிகளும்
கொலை செய்யப்பட்டார்கள்

அவரவர் கருத்தினை மதித்திருந்தால்
அளப்பரிய இழப்பை
சந்தித்திராது நம் இனம்…

—————————

வரலாற்றின் முழுமையும் 
யாருக்கும் தெரியாது
ஒவ்வொருவருக்கும்
ஒரு சில தெரியாமல் 
இருக்கலாம்......

எனக்கு நினைவு தெரிந்த
நாளில் தான் தமிழீழம் கேட்டார்கள்
அதுவும் எங்கள் ஊரில்
என் கண்முன்னாலேயே தான்.....

ஆயுதப் போராட்டமும் அதே போல
எனக்கு அறிவு தெரிந்த நாளில்
தான் ஆரம்பிக்கப் பட்டது....

சிவகுமாரன், இன்பம், செல்வம்,
உமாமகேஸ்வரன், பிரபாகரன், சுந்தரம்
சந்ததியார், குட்டிமணி, தக்கதுரை,சபாரத்தினம்,
பரமதேவா, ஒபரோய்தேவன், பத்மநாபா, 
டக்லஸ் தேவானந்தா........

இப்படி பல பேர் ஆயுதப் போராட்டத்தை
முன்னெடுத்தார்கள் ஆனால் எல்லோரும்
ஒன்றாக சேர்ந்து இயங்கவில்லை

பிரிவினையில் தான் எங்கள் விடுதலையின்
ஆரம்பமே........
தலைமைப் போட்டியிலும் தனிமனித வழிபாட்டிலும்
பல உயிர்கள் பலியெடுக்கப் பட்டன
பலி கொடுக்கப் பட்டன ஆரம்பம் முதலே.......

எதிரியோ, துரோகியோ எங்களை வெல்லவில்லை
நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக எங்களை
அழித்துக் கொண்டோம்........

இதை சுட்டிக் காட்டியவர்களையும், அறிவு ஜீவிகளையும்
அழித்துக் கொண்டோம்...

கொல்வதே வீரமெனக் கண்டோம்
கொல்வதால் மட்டுமே வெற்றி கிட்டுமென
நம்பினோம்......

காலத்தின் தீர்ப்புகளுக்கு கட்டுப்பட மறுத்தோம்
வீரம், வீரம் என்று வெறுவாய் சப்புகிறோம்
விவேகம் மறந்தவர்களாய்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, nunavilan said:

இது ஒரு அவியலாக தான் இருக்கும் என நம்புகிறேன். கவிஞர் புளட்டில் இருந்தும் இவரை அவர்களே நம்புவதில்லை. 

கவிஞர், புலிகள் பதுளை காடுகளை பிடிக்க வேண்டும் என்றும் யாழ்களத்தில் கூறியவர்.🤔

 

 

பிடித்த பின்னர் கவிஞர் கரடி🐻 வேட்டைக்குப் போகப் போறார் ஆக்கும்😹

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.