Jump to content

ஊருக்கு போய்வந்த தம்பர்..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.eiXSNKM87655jpg.jpg.df3a793a7e63521e845547e22dd63266.jpg

ஊருக்கு  போய்வந்த தம்பர்..!

***********************

ஊருக்கு போனபோது

ஒருபோத்தல் பியர் அடிக்க

பாருக்கு.. (Bar)

போன்னான் பாருங்கோ..

அங்கவந்த  சின்னம் சிறுசு 

பெருசுகள் எல்லாம்

தாள் தாளா எறிஞ்சு-பின்

தண்ணியில குளிச்சு 

 தவளுதுகள்.

ஒரு கூட்டம் உட்காந்து

காசுவந்த கதை சொல்லி

கதைச்சு பெருமைபேசி

கஞ்சா, புகையில என

புகையாக் கக்குதுகள்.

பிச்சைக்காஸ் அனுப்பினான் 

இவனுக்கு 

பின்னால போனவன்

கொட்டிக்குவிக்கிறானாம்

என தான் 

கொடுத்தனுப்பினவன் போல

வெட்டி 

முறிக்கிறான் ஒருத்தன்

விட்டுத்தொலை மச்சான் நீ

மற்றவனுக்கு போன் போடு

வந்தா மலை 

வராட்டி மயிர் என்றான்

மற்றவன்

காச்சல் இருமல்

என்றாலும்

கொஞ்சம் கடும் வருத்தம்

என்று சொல்லு

காஸ்வரும் என்றான் 

என்னொருவன்

இப்படி வெளிநாட்டுக்கசை

வேண்டும் முறைபற்றி 

அடுக்கடுக்காக

அலசி ஆராஞ்சு குடிச்சு

வெறிச்சு.. 

கும்மாளம் போடுதுகள்.

பாருங்கோ.

இங்க பார்த்தா..

வேற்று மொழி இடத்தில

வேற்றுக்கிரக 

வாசிபோல-பலர்

வீசாவுக்கும் அலைஞ்சு 

கொண்டு

இரவு பகலாய் கண்

முளிச்சு

வெய்யிலிலும் குளிரிலும்

சமையல்..

அடுப்பிலும் நெருப்பிலும்

அப்பிள் புடுங்கியும்

ஆர்பயன் புடுங்கியும்

தூசி துடைத்து

துப்பரவுப் பணிசெய்தும்

சுப்பர் மாக்கட்களிலும்

பெற்றோல் நிலையங்களிலும்

பிள்ளைகள்,பெரியவர்கள்

 படும் பாட்டை

எப்படித்தான் இவங்களுக்கு

சொல்லிப்புரியவைப்பேன்.

பாருங்கோ

போராட்டம் முடிஞ்சுது

போரில்லாத புனித பூமி

சொல்ல.. 

நல்லாத்தான் இருக்கு

போதை நிறைச்சு

பாதையை மாத்தினதும்

சிந்தனையை மறக்க

செய்த இந்த உத்தியும்

ஒருவித போர்தானே

பாருங்கோ.

அனால் ஒன்றை மாத்திரம்

உங்களுக்கு.. 

சொல்லுறன்  ஓடி ஓடி 

உழைக்கிற பணத்தை

ஊதாரியாய் 

செலவுசெய்வோர் என

அறிந்தால் 

உன் தாய்க்குகூட

பணம்அனுப்பாதே.

அங்கு பல உயிர்களை

காப்பாற்றலாம்.

 என்று சொல்லி  

ஒரு பெருமூச்சு விட்டார்

தம்பர்.

தொடரும்.. 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பர் உண்மையா ஊருக்கு வந்து போயிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை தொடருட்டும், பசுவூர்க் கோபி…!!!

கவிதை அழகு எனினும் கருப்பொருள் வலிக்கிறது…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல உண்மைகளை புட்டுப்புட்டு வைக்கிறார் தம்பர்.
கவிதை அழகு கோபி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பசுவூர்க்கோபி said:

அனால் ஒன்றை மாத்திரம்

உங்களுக்கு.. 

சொல்லுறன்  ஓடி ஓடி 

உழைக்கிற பணத்தை

ஊதாரியாய் 

செலவுசெய்வோர் என

அறிந்தால் 

உன் தாய்க்குகூட

பணம்அனுப்பாதே.

அங்கு பல உயிர்களை

காப்பாற்றலாம்.

இது தற்போதைய நிலவரம்.. ஆனால் உழைக்கிற பணத்தை ஊதாரியாகவும், ஊரில் வந்து விலாசம் காட்டாமலும் இருக்கவேண்டும் என தம்பர் கூறுவாரா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள நிலமையையும், அங்குள்ள நிலவரத்தையும் சொல்லியிருக்கிறீங்கள், அத்தனையும் ஏற்புடையவைதான் , இருந்தாலும் ...

8 hours ago, பசுவூர்க்கோபி said:

ஊதாரியாய் 

செலவுசெய்வோர் என

அறிந்தால் 

உன் தாய்க்குகூட

பணம்அனுப்பாதே.

வறுமையோடு போராடிய காலம் ஒரு றாத்தல் பாணை ஐஞ்சு பேருக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு நான் சாப்பிட்டுவிட்டன் என்று பொ்ய் சொல்லி வெறும் தேத்தண்ணி குடித்துவிட்டு பலநாள் படுத்த என் தாய் நினைவுக்கு வருகிறா.

காலங்கள் ஓடி வெளிநாடு வந்து காசு கையில் புழங்க தொடங்கியதும் ஆள் இல்லை, போயிட்டா.

பல இரவுகள் காய்ஞ்ச வயிறோடு படுத்த  தாய் இப்போ இருந்திருந்தா  கை நிறைய காசு கொடுத்து ஊதாரிதனமா செலவு செய் என்று சொல்லவேண்டும் என்று அடிக்கடி ஏங்குவேன்.

இனி என் வாழ்நாள் முடியும்வரை தீர்க்கமுடியாத துயர சுமை அது.

மற்றும்படி உங்கள் கவிதை விழிப்புணர்வானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஏராளன் said:

தம்பர் உண்மையா ஊருக்கு வந்து போயிருக்கிறார்.

உண்மைதான் நன்றிகள்.ஏராளன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பர் வந்து பார்த்த மிச்சத்தையும் சொல்லட்டும் ...........!  😁

கருத்துடன் கூறிய கவிதை நன்று கோபி.......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி.

இன்னும் நிறைய இருக்கு எடுத்து விடுங்ககோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2021 at 10:02, புங்கையூரன் said:

கவிதை தொடருட்டும், பசுவூர்க் கோபி…!!!

கவிதை அழகு எனினும் கருப்பொருள் வலிக்கிறது…!

நன்றிகள்  

On 15/8/2021 at 10:56, குமாரசாமி said:

பல உண்மைகளை புட்டுப்புட்டு வைக்கிறார் தம்பர்.
கவிதை அழகு கோபி

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2021 at 15:21, பிரபா சிதம்பரநாதன் said:

இது தற்போதைய நிலவரம்.. ஆனால் உழைக்கிற பணத்தை ஊதாரியாகவும், ஊரில் வந்து விலாசம் காட்டாமலும் இருக்கவேண்டும் என தம்பர் கூறுவாரா? 

நன்றிகள்.
 அடுத்த  பதிவில்  கட்டாயம்  சொல்லுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றிகள் தோழர்..💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2021 at 16:23, valavan said:

இங்குள்ள நிலமையையும், அங்குள்ள நிலவரத்தையும் சொல்லியிருக்கிறீங்கள், அத்தனையும் ஏற்புடையவைதான் , இருந்தாலும் ...

வறுமையோடு போராடிய காலம் ஒரு றாத்தல் பாணை ஐஞ்சு பேருக்கு பகிர்ந்துகொடுத்துவிட்டு நான் சாப்பிட்டுவிட்டன் என்று பொ்ய் சொல்லி வெறும் தேத்தண்ணி குடித்துவிட்டு பலநாள் படுத்த என் தாய் நினைவுக்கு வருகிறா.

காலங்கள் ஓடி வெளிநாடு வந்து காசு கையில் புழங்க தொடங்கியதும் ஆள் இல்லை, போயிட்டா.

பல இரவுகள் காய்ஞ்ச வயிறோடு படுத்த  தாய் இப்போ இருந்திருந்தா  கை நிறைய காசு கொடுத்து ஊதாரிதனமா செலவு செய் என்று சொல்லவேண்டும் என்று அடிக்கடி ஏங்குவேன்.

இனி என் வாழ்நாள் முடியும்வரை தீர்க்கமுடியாத துயர சுமை அது.

மற்றும்படி உங்கள் கவிதை விழிப்புணர்வானது.

உங்களின்  உண்மையான  உணர்வு  வலிதருகிறது.அவர்கள்  ஒரு  போதும்   ஊதாரித்தனமாக செலவு செய்யமாட்டார்கள்..
நன்றிகள் valavan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/8/2021 at 20:51, suvy said:

தம்பர் வந்து பார்த்த மிச்சத்தையும் சொல்லட்டும் ...........!  😁

கருத்துடன் கூறிய கவிதை நன்று கோபி.......!  

 விரைவில் தொடருகின்றேன் நெஞ்சார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/8/2021 at 00:50, நிலாமதி said:

பகிர்வுக்கு நன்றி.

இன்னும் நிறைய இருக்கு எடுத்து விடுங்ககோ .

விரைவில்  எழுதுகிறேன்.  நன்றிகள்  நிலாமதி  அக்கா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.