Jump to content

காபூலுக்குள் நுழைந்த தலிபான் கிளர்ச்சியாளர்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காபூலுக்குள் நுழைந்த தலிபான் கிளர்ச்சியாளர்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகரை சுற்றி வளைத்து காபூல் மீது தலிபான் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக அந் நாட்டின் உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

பயங்கரவாதிகள் தலைநகருக்குள் அனைத்து பக்கங்களிலிருந்தும் நுழைந்துள்ளதாக அமைச்சகம் சுட்டிக்காட்டுகிறது.

234425302_4166289796800751_4540134645223

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அலுவலகம் டுவிட்டர் பதிவில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள் நிலைமையை "சர்வதேச பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து" கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளது.

காபூலின் பல தொலைதூர பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும் அந்த டுவிட்டர் பதிவு மேலும் வெளிப்படுத்தியுள்ளது.

தலிபான்கள் ஏற்கனவே காபூல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டை எடுத்துள்ளதாகவும், நகரின் மாவட்டங்களில் ஒன்றில் குழுவின் கொடியை உயர்த்தியுள்ளதாகவும் ஒரு தகவல் ஸ்புட்னிக் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளது.

236206088_4166290013467396_1909439923000

அமைதியான மாற்றத்தை எதிர்பார்த்து காபூலில் புயல் வீசக்கூடாது என்று தலிபான் போராளிகள் உத்தரவிட்டுள்ளனர். 

தலிபான்கள் "யாரையும் பழிவாங்க விரும்பவில்லை, காபூல் நிர்வாகத்தில் இராணுவம் மற்றும் சிவில் துறைகளில் பணியாற்றியவர்கள் அனைவரும் மன்னிக்கப்படுகிறார்கள் மற்றும் பாதுகாப்பாக உள்ளனர்.யாரும் பதிலடி கொடுக்கப்பட மாட்டார்கள். அனைவரும் தங்கள் நாட்டில் இருக்க வேண்டும்.  தங்கள் சொந்த இடத்திலும் வீட்டிலும், நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்காதீர்கள் என்றும் கூறியுள்ளனர்.

காபூலுக்குள் தலிபான்கள் நுழைவதற்கு சற்று முன்பு, ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி எல்லைக் கடப்பும், பயங்கரவாதக் குழுவிடம் விழுந்தது. இவ்வாறு, கிளர்ச்சியாளர்கள் இப்போது ஆப்கானிஸ்தானின் அனைத்து எல்லைக் கடப்புகளையும் கட்டுப்படுத்துகின்றனர்.

மசார்-இ-ஷெரீப்பின் வடக்கு கோட்டையைக் கைப்பற்றிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை முக்கிய கிழக்கு நகரமான ஜலாலாபாத்தின் மீது கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர்.

இதற்கிடையில், காபூலை தலிபான்கள் கைப்பற்றும் அபாயம் மிகவும் தெளிவாகிவிட்டதால், அதன் பொதுமக்கள் மற்றும் இராஜதந்திர ஊழியர்களை வெளியேற்ற உதவுவதற்காக அமெரிக்கா சுற்றிவளைக்கப்பட்ட தலைநகருக்கு அதிக வீரர்களை அனுப்பி வைத்தது.

காபூல் தூதரகத்திலிருந்து அமெரிக்கா தமது இராஜதந்திரிகளை ஹெலிகாப்டர் மூலமாக வெளியேற்றியதாக அந் நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரியொருவர் உறுதிபடுத்தியுள்ளார்.

qm-9G0ir.jpg
 
https://www.virakesari.lk/article/111351

Link to comment
Share on other sites

  • Replies 110
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

30 நாள் எடுக்கும் என்றார்களே! 3 நாளில் பிடித்து விடுவார்கள் போல.
பல இடங்களில் சண்டையிடாமலே கைப்பற்றியுள்ளார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரில்லா குழுவாக இருந்ததால், வல்லரசுகளே மண்டியிட்டு ஓட வேண்டிய நிலை.

ஓயாத அலைகளை தொடர்ந்து, வன்னி, துடைத்தெறியப்பட்டு, ஓமந்தை, வவவுனியா எல்லை வரை போன புலிகள், வடக்கே திரும்பி யாழ்பாணத்தையும் பிடித்திருந்தால் கதையே வேற.....

இந்தியாவின் எச்சரிக்கையினை கணக்கில் எடுக்காமல் இருந்திருந்தால்...... இன்று கதை வேறாக இருந்திருக்கும்.

எல்லாம் தலையெழுத்து தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Nathamuni said:

இந்தியாவின் எச்சரிக்கையினை கணக்கில் எடுக்காமல் இருந்திருந்தால்...... இன்று கதை வேறாக இருந்திருக்கும்.

எல்லாம் தலையெழுத்து தான். 

நரிக்குணமுடையோராலும் நரி வேலைகளாலும் நரிகளாலும் வீழ்ந்தது தானே தனித்தமிழீழம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

கொரில்லா குழுவாக இருந்ததால், வல்லரசுகளே மண்டியிட்டு ஓட வேண்டிய நிலை.

ஓயாத அலைகளை தொடர்ந்து, வன்னி, துடைத்தெறியப்பட்டு, ஓமந்தை, வவவுனியா எல்லை வரை போன புலிகள், வடக்கே திரும்பி யாழ்பாணத்தையும் பிடித்திருந்தால் கதையே வேற.....

இந்தியாவின் எச்சரிக்கையினை கணக்கில் எடுக்காமல் இருந்திருந்தால்...... இன்று கதை வேறாக இருந்திருக்கும்.

எல்லாம் தலையெழுத்து தான். 

ஓயாத அலை சண்டையில் நின்றவர் யுத்த நிறுத்த  காலத்தில் வந்தவர் சொன்னது நானும் இதே கேள்வியை கேட்டன்  அதற்கு அண்ணை சொன்னவராம்  அடித்து பிடிப்பது சுலபா இருக்கும் ஆனால் இடத்தை தக்கவைக்க போராளிகள் அதிகம் வேண்டும் அந்த நேரத்தில் போராளிகள் ஐவரின்  வேலையை ஒருவர் செய்திருந்தார்கள் என பாராட்டியும் இருந்தாராம்.

எல்லோரும் சண்டை சண்டை என விலகி வந்துவிட்டு இப்ப வாய் ஊறுகிறோம் நான் உட்பட  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய சாராம்சம்

  1. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டை விட்டுச் சென்று விட்டதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
  2. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை அரசு ஒப்படைப்பது தொடர்பாக அரசுடன் தாலிபன்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
  3. நாடாளுமன்றத்தில் தரமான விவாதங்கள் நடப்பதில்லை. இந்தியத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா குற்றச்சாட்டு
  4. சுதந்திர தினம் - டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம். கடுமையான பாதுகாப்பு
  5. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்படுகிறோம். எல்லாவிதமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயார் என்று தெரிவித்த பி.எஸ்.எஃப். தலைவர் - காரணம் என்ன?
  6. ஆப்கன் தலைநகர் காபூலில் நுழைந்த தாலிபன்கள் - பெரிய எதிர்ப்பு இல்லை என்று தகவல்.

நேரடிச் செய்தி

  1. பிரசுரிக்கப்பட்ட நேரம் 16:4416:44

    பிபிசி நிருபரை நேரலையில் அழைத்துப் பேசிய தாலிபன் செய்தித்தொடர்பாளர்

    பிபிசி செய்தியாளர் யால்டா ஹக்கிம் நேரலையில் செய்தி வழங்கிக் கொண்டிருந்தபோது, அவரது செல்பேசியில் அழைத்துப் பேசியுள்ளார் தாலிபன் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன். 

    "ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களும் பாதுகாப்பாக உள்ளனர்," என்று அவர் தெரிவித்தார். 

    "ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இதை ஒன்றை உறுதிப்படுத்துகிறோம். குறிப்பாக காபூல் நகரவாசிகள், அவர்களின் உடைமைகள், உயிர் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது," என்று அவர் குறிப்பிட்டார். 

    "நாங்கள் இந்த நாட்டு மக்களின் சேவகர்கள்," என்றும் அவர் தெரிவித்தார்.

  • பிரசுரிக்கப்பட்ட நேரம் 16:3716:37

    காபூல் தூதரகத்தில் அமெரிக்க கொடி அகற்றம்

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதர் ரோஸ் வில்சன் தமது தூதரகத்தில் இருந்து வெளியேறி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தூதரகத்துக்கு வந்துள்ளார். 

    முன்னதாக, நகருக்குள் இருந்த தூதரகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்த தூதரகத்தின் கொடிக்கம்பத்தில் இருந்த அமெரிக்க கொடி அகற்றப்பட்டு விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

    https://www.bbc.com/tamil/live/india-58220049

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஓயாத அலை சண்டையில் நின்றவர் யுத்த நிறுத்த  காலத்தில் வந்தவர் சொன்னது நானும் இதே கேள்வியை கேட்டன்  அதற்கு அண்ணை சொன்னவராம்  அடித்து பிடிப்பது சுலபா இருக்கும் ஆனால் இடத்தை தக்கவைக்க போராளிகள் அதிகம் வேண்டும் அந்த நேரத்தில் போராளிகள் ஐவரின்  வேலையை ஒருவர் செய்திருந்தார்கள் என பாராட்டியும் இருந்தாராம்.

எல்லோரும் சண்டை சண்டை என விலகி வந்துவிட்டு இப்ப வாய் ஊறுகிறோம் நான் உட்பட  

புலிகள் தகுந்த சந்தர்ப்பம் கைகூடி வந்தபோது, நழுவ விட்ட சந்தர்ப்பம் அது.

புலிகள் போராட்ட தவறு, மிக அதிக காலம் இழுபட வைத்ததும் அதனால் வந்த மக்கள் சலிப்பும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

புலிகள் தகுந்த சந்தர்ப்பம் கைகூடி வந்தபோது, நழுவ விட்ட சந்தர்ப்பம் அது.

புலிகள் போராட்ட தவறு, மிக அதிக காலம் இழுபட வைத்ததும் அதனால் வந்த மக்கள் சலிப்பும்.

புலிகள் மீது பிழை இல்லை புலிகளின் கைகளில் பிரச்சினையை விட்டு விட்டு நழுவிக்கொண்ட மக்கள் மீதுதான் பிழை  இனி யார் மீதும் பிழை சொல்லியும் எதுவும் நடக்க போவதில்லை இந்த தலிபான் களை பார்த்து ஈழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என கட்டுரைகள் வராமல் இருந்தால் மிகவும் நல்லது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

புலிகள் தகுந்த சந்தர்ப்பம் கைகூடி வந்தபோது, நழுவ விட்ட சந்தர்ப்பம் அது.

புலிகள் போராட்ட தவறு, மிக அதிக காலம் இழுபட வைத்ததும் அதனால் வந்த மக்கள் சலிப்பும்.

ஆப்கான் போராட்டம் எப்ப அண்ணே ஆரம்பிச்சது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஓயாத அலை சண்டையில் நின்றவர் யுத்த நிறுத்த  காலத்தில் வந்தவர் சொன்னது நானும் இதே கேள்வியை கேட்டன்  அதற்கு அண்ணை சொன்னவராம்  அடித்து பிடிப்பது சுலபா இருக்கும் ஆனால் இடத்தை தக்கவைக்க போராளிகள் அதிகம் வேண்டும் அந்த நேரத்தில் போராளிகள் ஐவரின்  வேலையை ஒருவர் செய்திருந்தார்கள் என பாராட்டியும் இருந்தாராம்.

எல்லோரும் சண்டை சண்டை என விலகி வந்துவிட்டு இப்ப வாய் ஊறுகிறோம் நான் உட்பட  

போலித்தமிழ் தேசியவாதிகளுக்கு விளக்கம் சொல்வது உங்கள் நேர விரயம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

புலிகள் மீது பிழை இல்லை புலிகளின் கைகளில் பிரச்சினையை விட்டு விட்டு நழுவிக்கொண்ட மக்கள் மீதுதான் பிழை  இனி யார் மீதும் பிழை சொல்லியும் எதுவும் நடக்க போவதில்லை இந்த தலிபான் களை பார்த்து ஈழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என கட்டுரைகள் வராமல் இருந்தால் மிகவும் நல்லது 

பிழை இந்தியா மீது....

அதே திருகுதாளத்தை இப்போதும் செய்ய நிக்குதே..... சும்மா படுத்துக் கிடந்த காசி ஆனந்தனுக்கு சூம் ரெயினிங் குடுத்து, மக்களால் நிராகிரிக்கப்பட்ட சிவாஜிலிங்கத்தாரையும், அனந்தியையும் வைச்சு யாருக்கு அல்வா கிண்டுது, சீனாக்காரன் உள்ள வந்தாப்பிறகு....

3 hours ago, நந்தன் said:

ஆப்கான் போராட்டம் எப்ப அண்ணே ஆரம்பிச்சது.

கொரில்லா போராட்ட முறைக்கும், கொன்வென்சனல் ஆமிமுறைக்கும் வித்தியாசம் தெரிஞ்சு வாங்கோஅண்ணைகதைப்பம்.

சும்மா விளப்பம் இல்லாம தமிழ் தேசியவாதம் கதைச்சு சிரிப்பு காட்டாமல் போங்கண்ண.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

கொரில்லா போராட்ட முறைக்கும், கொன்வென்சல் ஆமிமுறைக்கும் வித்தியாசம் தெரிஞ்சு வாங்கோஅண்ணைகதைப்பம்.

சும்மா விளப்பம் இல்லாம தமிழ் தேசியவாதம் கதைச்சு சிரிப்பு காட்டாமல் போங்கண்ண

நன்றி கூகுளுக்கா,இல்ல விக்கிபீடியாவுக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:

நன்றி கூகுளுக்கா,இல்ல விக்கிபீடியாவுக்கா

உங்களுக்குத்தான்...... நிஜமான தமிழ் தேசியவாதி எல்லோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணை சண்டை காபூலில் தானே, தனங்கிளப்பில் இல்லைத்தானே, நித்திரையால எழும்பி யாழை பார்த்து கொஞ்சம் குழம்பிப்போனேன். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரில்லா போர்முறையை தாக்குப்பிடிக்க ஏலாமல், இரு வல்லரசுகள் வெளியேற, பின்லாடன் போன்ற பயங்கரவாதம் தலை தூக்க இடமளியோம் என்ற உத்தரவாதத்துடன், தலிபான் பராம்பரிய ராணுவ அரசியல் கட்டமைப்பாகிறது.

பாரம்பரிய ராணுவ அரசை இலகுவாக தகர்தே உள்ளே போனதால், மீண்டும் போகலாம் என, அது குறித்து கவலைப் படாமல் வெளியே வருகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

கொரில்லா குழுவாக இருந்ததால், வல்லரசுகளே மண்டியிட்டு ஓட வேண்டிய நிலை.

ஓயாத அலைகளை தொடர்ந்து, வன்னி, துடைத்தெறியப்பட்டு, ஓமந்தை, வவவுனியா எல்லை வரை போன புலிகள், வடக்கே திரும்பி யாழ்பாணத்தையும் பிடித்திருந்தால் கதையே வேற.....

இந்தியாவின் எச்சரிக்கையினை கணக்கில் எடுக்காமல் இருந்திருந்தால்...... இன்று கதை வேறாக இருந்திருக்கும்.

எல்லாம் தலையெழுத்து தான். 

வடக்கே  திரும்பாமலா  சாவகச்சேரி,நாகர்கோவில் அரியாலை கொழும்புதுறை யாழ்கச்சேரிவரை என அனைத்து பகுதியிலும் முன்னேறினார்கள்?

அப்போதைய போர் சூழலில் வவுனியா பக்கமாக முன்னேறிய புலிகள் ஜோசப் முகாமை தாக்கபோகிறார்கள் என்றும் வவுனியா மக்களை இடம்பெயர அறிவித்திருக்கிறார்கள்,  ஈரபெரியகுளம்,மதவாச்சி பகுதிகளில்கூட ராணுவம் புலிகள் முன்னேற்றத்தை தடுக்க பலமான ராணுவ தடுப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் ஊடகவியலாளர் சிவராம் பிபிசிக்கு பேட்டியளித்திருந்தார். ஆனால் புலிகள் வவுனியா பக்கமான மேலதிக தாக்குதலில் இறங்கவேயில்லை, அவர்கள் முழு கவனமும் வடபகுதிமீதே இருந்தது.

சந்திரிக்கா அரசு இந்திய உதவியை நாடியதாகவும் இந்தியா வடக்கில் உள்ள ராணுவத்தை பாதுகாப்பாக வெளியேற்ற இலங்கைக்கு உதவ விளைந்ததாகவும், படையினர் மட்டும் வெளியேறலாம் ஆயுதங்கள் அப்படியே விட்டுபோட்டு போகோணும் என்பதுதான் புலிகள் விதித்த நிபந்தனை என்றும், அப்போது யாழில் உள்ள பொதுமக்கள் சிலரும் வெளியேற விரும்புகிறார்கள் என்று தகவலளிக்கப்பட்டதாகவும், யார் அந்த பொதுமக்கள் என்று கேட்டபோது ஈபிடிபியும் அதன் ஆதரவாளர்களும் என்று பதிலளிக்கப்பட்டதாகவும் ஓரு மாவீரர் நாளில் அன்ரன் பாலசிங்க உரை நிகழ்த்தினார்.

பல ஆயிரம் போராளிகள் இழப்பின் மத்தியிலும் கைப்பற்றபடமுடியாமல் போன வன்னியின் முகாம்கள் ஆனையிறவு எல்லாம் மிக குறைந்த போராளிகள் இழப்புடன் மீண்டும் கைப்பற்றகூடியதாய் இருந்ததுக்கு பிரதான காரணம் புலிகள் பக்கம் திடீரென அதிகரித்த எறிகணை சூட்டின் வலு.

கைப்பற்றிய இடங்களையெல்லாம் ராணுவம் விட்டுவிட்டு ஓட காரணமே சரமாரியான புலிகளின் எறிகணை தாக்குதல்தான். அதேபோல் புலிகள் கைப்பற்றிய இடங்களை எல்லாம் ராணுவம் மீள கைப்பற்ற காரணம் அவர்கள் பக்கம் அதிகரித்த எறிகணை சூட்டு வலுதான்.

ஆம் என்று மல்ரிபரல் எறிகணை செலுத்திகள் செக்கோவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ராணுவத்தின் கைகளுக்கு வந்து சேர்ந்ததோ அன்றே ராணுவ சமநிலை மாறிபோனது. வெட்டவெளிகளை பின்புலமாக கொண்ட நாகர்கோவில்,முகமாலை பகுதிகளை தவிர்த்து ஏனைய அனைத்து பகுதிகளிலிருந்தும் புலிகள் பின்நோக்கி தள்ளப்பட்டார்கள்.

இறுதிபோரின்போதுகூட பல ஆயிரம்போராளிகள் முன்பு நடந்த போர்களைபோல ராணுவத்தை நெருங்கி போக முடியாமல் , அவர்களை காணாமலே வீமரணம் அடைந்ததற்கு காரணம் மழையென பொழிந்த மல்டி பரல் சூட்டுவலுதான்.

அதன்பின்பு ஓயாத அலைகள் நான்கு தீச்சுவாலையும் முகமாலை பகுதியிலேயே வலுவாக நடந்ததாகவும் ஓயாத அலைகள் மூன்றுபோன்று அவை பாரிய வெற்றியளிக்கவில்லை  என்பதும்தான் சம்பவங்கள்.

நான் சொன்னேன் புலிகள் கேக்கவில்லையென்று ஐயா ஜெயபாலனும் ஓரிடத்தில் அளந்திருந்தார் .போராளிகள் ஆயுதபயிற்சி பெற்ற எல்லைபடைகள் பொதுமக்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வீரர்கள், சில ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட காடுகளில் எப்படி மறைந்திருப்பது கெரில்லா தாக்குதல் செய்வது?

கெரில்லா தாக்குதல் என்றாலே சிறு குழுக்களாய் பிரிந்து செயல்படுவது, பல ஆயிரம் வீரர்கள், பல ஆயிரம் கனரக ஆயுதங்கள் ,விமானங்கள் பெரும் எண்ணிக்கையிலான போராயுதங்கள் கடற்கலங்களை கொண்ட கடல்புலிகள்  இவற்றையெல்லாம் காட்டுக்குள் போய் பதுக்கி வைத்துக்கொண்டு என்ன கெரில்லா தாக்குதல் செய்வது?

அப்படி செய்தாலும் தரை கடல் என எல்லைகளின் கட்டுப்பாட்டை இழந்தால் எங்கிருந்து பல்லாயிரம் போராளிகளுக்கு உணவு மருத்துவம்  உட்பட்ட வளங்கல்களை செய்வது?

முன்னர் சிறிய எண்ணிக்கையில் போராளிகள் இருந்தபோது புலிகள் இயக்கம் கெரில்லா தாக்குதலில் மிரட்டியது அப்போது புலிகளுக்கு இந்தியாவில் தடையிருக்கவில்லை, காயபட்ட போராளிகளை பராமரிக்கவும்,ஆயுதங்கள் வெடிமருந்துகளை கொண்டு வந்து சேர்க்கவும் தமிழகம் பின்புலமாய் இருந்தது. இறுதி போரின்போது அதுவா நிலமை?

ஜெயபாலன் ஐயா கெரில்லா தாக்குதல் செய்ய சொல்லி நான் சொன்னேன் புலிகள் கேட்கவில்லை என்று அளந்துவிட்டைதை பார்த்து நாங்களும் சாத்தியமில்லாத விசயங்களை அலசகூடாது அது எதிர்கால சந்ததிக்கு பகிரப்படும் தவறான தகவலாக போய்விடும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

உங்களுக்குத்தான்...... நிஜமான தமிழ் தேசியவாதி எல்லோ...

நிச்சயமா, எந்த போலி முகத்திரைக்குள்ளும் ஒளிந்து கொள்ளாமல் எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி நடப்பதால்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நந்தன் said:

நிச்சயமா, எந்த போலி முகத்திரைக்குள்ளும் ஒளிந்து கொள்ளாமல் எப்போதும் நெஞ்சை நிமிர்த்தி நடப்பதால்

சும்மா அலம்பறை பண்ணி கமாடி பீஸ் ஆகாதீங்கண்ண.

சுருக்கமாக சொல்வதானால் பாரம்பரிய இராணுவ அரசமைப்பு பலவீனமடையும்.

அதுவே கொரில்லா போர்முறையை கைவிட்ட, அதன் மூலம் இந்திய வல்லரசின் இராணுவத்தை தோற்கடித்த, புலிகளுக்கும் நடந்தது.

இது புரிய தமிழ் தேசியவாதமும் தேவையில்லை, சும்மா கிடக்கிற நெஞ்சை நிமிர்த்தி நடக்கிற பீலாவும் தேவை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

வடக்கே  திரும்பாமலா  சாவகச்சேரி,நாகர்கோவில் அரியாலை கொழும்புதுறை யாழ்கச்சேரிவரை என அனைத்து பகுதியிலும் முன்னேறினார்கள்?

அப்போதைய போர் சூழலில் வவுனியா பக்கமாக முன்னேறிய புலிகள் ஜோசப் முகாமை தாக்கபோகிறார்கள் என்றும் வவுனியா மக்களை இடம்பெயர அறிவித்திருக்கிறார்கள்,  ஈரபெரியகுளம்,மதவாச்சி பகுதிகளில்கூட ராணுவம் புலிகள் முன்னேற்றத்தை தடுக்க பலமான ராணுவ தடுப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் ஊடகவியலாளர் சிவராம் பிபிசிக்கு பேட்டியளித்திருந்தார். ஆனால் புலிகள் வவுனியா பக்கமான மேலதிக தாக்குதலில் இறங்கவேயில்லை, அவர்கள் முழு கவனமும் வடபகுதிமீதே இருந்தது.

சந்திரிக்கா அரசு இந்திய உதவியை நாடியதாகவும் இந்தியா வடக்கில் உள்ள ராணுவத்தை பாதுகாப்பாக வெளியேற்ற இலங்கைக்கு உதவ விளைந்ததாகவும், படையினர் மட்டும் வெளியேறலாம் ஆயுதங்கள் அப்படியே விட்டுபோட்டு போகோணும் என்பதுதான் புலிகள் விதித்த நிபந்தனை என்றும், அப்போது யாழில் உள்ள பொதுமக்கள் சிலரும் வெளியேற விரும்புகிறார்கள் என்று தகவலளிக்கப்பட்டதாகவும், யார் அந்த பொதுமக்கள் என்று கேட்டபோது ஈபிடிபியும் அதன் ஆதரவாளர்களும் என்று பதிலளிக்கப்பட்டதாகவும் ஓரு மாவீரர் நாளில் அன்ரன் பாலசிங்க உரை நிகழ்த்தினார்.

பல ஆயிரம் போராளிகள் இழப்பின் மத்தியிலும் கைப்பற்றபடமுடியாமல் போன வன்னியின் முகாம்கள் ஆனையிறவு எல்லாம் மிக குறைந்த போராளிகள் இழப்புடன் மீண்டும் கைப்பற்றகூடியதாய் இருந்ததுக்கு பிரதான காரணம் புலிகள் பக்கம் திடீரென அதிகரித்த எறிகணை சூட்டின் வலு.

கைப்பற்றிய இடங்களையெல்லாம் ராணுவம் விட்டுவிட்டு ஓட காரணமே சரமாரியான புலிகளின் எறிகணை தாக்குதல்தான். அதேபோல் புலிகள் கைப்பற்றிய இடங்களை எல்லாம் ராணுவம் மீள கைப்பற்ற காரணம் அவர்கள் பக்கம் அதிகரித்த எறிகணை சூட்டு வலுதான்.

ஆம் என்று மல்ரிபரல் எறிகணை செலுத்திகள் செக்கோவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ராணுவத்தின் கைகளுக்கு வந்து சேர்ந்ததோ அன்றே ராணுவ சமநிலை மாறிபோனது. வெட்டவெளிகளை பின்புலமாக கொண்ட நாகர்கோவில்,முகமாலை பகுதிகளை தவிர்த்து ஏனைய அனைத்து பகுதிகளிலிருந்தும் புலிகள் பின்நோக்கி தள்ளப்பட்டார்கள்.

இறுதிபோரின்போதுகூட பல ஆயிரம்போராளிகள் முன்பு நடந்த போர்களைபோல ராணுவத்தை நெருங்கி போக முடியாமல் , அவர்களை காணாமலே வீமரணம் அடைந்ததற்கு காரணம் மழையென பொழிந்த மல்டி பரல் சூட்டுவலுதான்.

அதன்பின்பு ஓயாத அலைகள் நான்கு தீச்சுவாலையும் முகமாலை பகுதியிலேயே வலுவாக நடந்ததாகவும் ஓயாத அலைகள் மூன்றுபோன்று அவை பாரிய வெற்றியளிக்கவில்லை  என்பதும்தான் சம்பவங்கள்.

நான் சொன்னேன் புலிகள் கேக்கவில்லையென்று ஐயா ஜெயபாலனும் ஓரிடத்தில் அளந்திருந்தார் .போராளிகள் ஆயுதபயிற்சி பெற்ற எல்லைபடைகள் பொதுமக்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வீரர்கள், சில ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட காடுகளில் எப்படி மறைந்திருப்பது கெரில்லா தாக்குதல் செய்வது?

கெரில்லா தாக்குதல் என்றாலே சிறு குழுக்களாய் பிரிந்து செயல்படுவது, பல ஆயிரம் வீரர்கள், பல ஆயிரம் கனரக ஆயுதங்கள் ,விமானங்கள் பெரும் எண்ணிக்கையிலான போராயுதங்கள் கடற்கலங்களை கொண்ட கடல்புலிகள்  இவற்றையெல்லாம் காட்டுக்குள் போய் பதுக்கி வைத்துக்கொண்டு என்ன கெரில்லா தாக்குதல் செய்வது?

அப்படி செய்தாலும் தரை கடல் என எல்லைகளின் கட்டுப்பாட்டை இழந்தால் எங்கிருந்து பல்லாயிரம் போராளிகளுக்கு உணவு மருத்துவம்  உட்பட்ட வளங்கல்களை செய்வது?

முன்னர் சிறிய எண்ணிக்கையில் போராளிகள் இருந்தபோது புலிகள் இயக்கம் கெரில்லா தாக்குதலில் மிரட்டியது அப்போது புலிகளுக்கு இந்தியாவில் தடையிருக்கவில்லை, காயபட்ட போராளிகளை பராமரிக்கவும்,ஆயுதங்கள் வெடிமருந்துகளை கொண்டு வந்து சேர்க்கவும் தமிழகம் பின்புலமாய் இருந்தது. இறுதி போரின்போது அதுவா நிலமை?

ஜெயபாலன் ஐயா கெரில்லா தாக்குதல் செய்ய சொல்லி நான் சொன்னேன் புலிகள் கேட்கவில்லை என்று அளந்துவிட்டைதை பார்த்து நாங்களும் சாத்தியமில்லாத விசயங்களை அலசகூடாது அது எதிர்கால சந்ததிக்கு பகிரப்படும் தவறான தகவலாக போய்விடும்..

இதுதான் உண்மை.. மல்ரிப்பரல் மழை.. முன்னேற முன்னம் மல்றிப்பரல் அடிச்சு பலகிலோமீற்றர் நீளமான ஏரியாவை எரிச்சு அழிச்சு அங்க இருந்த பனை தென்னை மரங்கள்தலைமுறிஞ்சு கிடக்க மரங்கள் புல்லுக்கூட எரிஞ்சு போய் கிடக்க அந்த புகைக்கு நடுவிலதான் ஆமி முன்னேறுவான் ஒவ்வொரு வாட்டியும்.. இதுக்குள்ள இயக்கம் எங்க நிக்குறது? இயக்கதின்ர உடம்பென்ன இரும்போ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதுதான் உண்மை.. மல்ரிப்பரல் மழை.. முன்னேற முன்னம் மல்றிப்பரல் அடிச்சு பலகிலோமீற்றர் நீளமான ஏரியாவை எரிச்சு அழிச்சு அங்க இருந்த பனை தென்னை மரங்கள்தலைமுறிஞ்சு கிடக்க மரங்கள் புல்லுக்கூட எரிஞ்சு போய் கிடக்க அந்த புகைக்கு நடுவிலதான் ஆமி முன்னேறுவான் ஒவ்வொரு வாட்டியும்.. இதுக்குள்ள இயக்கம் எங்க நிக்குறது? இயக்கதின்ர உடம்பென்ன இரும்போ..?

உண்மையில் இதன் முழு விபரமும் தலைவருக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் பொதுமக்கள் மற்றும் முக்கிய தளபதிகள் உட்பட அனைவரது  எதிர்பார்ப்பும் வடபகுதி முழுமையாக விழுந்து விடும் என்பது தான். ஏனெனில் களநிலை கல்லால் எறிந்து முன்னேறும் நிலையில் தான் இருந்தது??

தலைவர் ஒருவர் மட்டுமே நிதானமாக தூரநோக்கோடு உத்தரவு தர மறுத்ததாக தான் சொல்லப்பட்டது. 

என்ன காரணம் என்ன அழுத்தம்?? அவர் மட்டுமே அறிவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

வடக்கே  திரும்பாமலா  சாவகச்சேரி,நாகர்கோவில் அரியாலை கொழும்புதுறை யாழ்கச்சேரிவரை என அனைத்து பகுதியிலும் முன்னேறினார்கள்?

அப்போதைய போர் சூழலில் வவுனியா பக்கமாக முன்னேறிய புலிகள் ஜோசப் முகாமை தாக்கபோகிறார்கள் என்றும் வவுனியா மக்களை இடம்பெயர அறிவித்திருக்கிறார்கள்,  ஈரபெரியகுளம்,மதவாச்சி பகுதிகளில்கூட ராணுவம் புலிகள் முன்னேற்றத்தை தடுக்க பலமான ராணுவ தடுப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் ஊடகவியலாளர் சிவராம் பிபிசிக்கு பேட்டியளித்திருந்தார். ஆனால் புலிகள் வவுனியா பக்கமான மேலதிக தாக்குதலில் இறங்கவேயில்லை, அவர்கள் முழு கவனமும் வடபகுதிமீதே இருந்தது.

சந்திரிக்கா அரசு இந்திய உதவியை நாடியதாகவும் இந்தியா வடக்கில் உள்ள ராணுவத்தை பாதுகாப்பாக வெளியேற்ற இலங்கைக்கு உதவ விளைந்ததாகவும், படையினர் மட்டும் வெளியேறலாம் ஆயுதங்கள் அப்படியே விட்டுபோட்டு போகோணும் என்பதுதான் புலிகள் விதித்த நிபந்தனை என்றும், அப்போது யாழில் உள்ள பொதுமக்கள் சிலரும் வெளியேற விரும்புகிறார்கள் என்று தகவலளிக்கப்பட்டதாகவும், யார் அந்த பொதுமக்கள் என்று கேட்டபோது ஈபிடிபியும் அதன் ஆதரவாளர்களும் என்று பதிலளிக்கப்பட்டதாகவும் ஓரு மாவீரர் நாளில் அன்ரன் பாலசிங்க உரை நிகழ்த்தினார்.

பல ஆயிரம் போராளிகள் இழப்பின் மத்தியிலும் கைப்பற்றபடமுடியாமல் போன வன்னியின் முகாம்கள் ஆனையிறவு எல்லாம் மிக குறைந்த போராளிகள் இழப்புடன் மீண்டும் கைப்பற்றகூடியதாய் இருந்ததுக்கு பிரதான காரணம் புலிகள் பக்கம் திடீரென அதிகரித்த எறிகணை சூட்டின் வலு.

கைப்பற்றிய இடங்களையெல்லாம் ராணுவம் விட்டுவிட்டு ஓட காரணமே சரமாரியான புலிகளின் எறிகணை தாக்குதல்தான். அதேபோல் புலிகள் கைப்பற்றிய இடங்களை எல்லாம் ராணுவம் மீள கைப்பற்ற காரணம் அவர்கள் பக்கம் அதிகரித்த எறிகணை சூட்டு வலுதான்.

ஆம் என்று மல்ரிபரல் எறிகணை செலுத்திகள் செக்கோவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் ராணுவத்தின் கைகளுக்கு வந்து சேர்ந்ததோ அன்றே ராணுவ சமநிலை மாறிபோனது. வெட்டவெளிகளை பின்புலமாக கொண்ட நாகர்கோவில்,முகமாலை பகுதிகளை தவிர்த்து ஏனைய அனைத்து பகுதிகளிலிருந்தும் புலிகள் பின்நோக்கி தள்ளப்பட்டார்கள்.

இறுதிபோரின்போதுகூட பல ஆயிரம்போராளிகள் முன்பு நடந்த போர்களைபோல ராணுவத்தை நெருங்கி போக முடியாமல் , அவர்களை காணாமலே வீமரணம் அடைந்ததற்கு காரணம் மழையென பொழிந்த மல்டி பரல் சூட்டுவலுதான்.

அதன்பின்பு ஓயாத அலைகள் நான்கு தீச்சுவாலையும் முகமாலை பகுதியிலேயே வலுவாக நடந்ததாகவும் ஓயாத அலைகள் மூன்றுபோன்று அவை பாரிய வெற்றியளிக்கவில்லை  என்பதும்தான் சம்பவங்கள்.

நான் சொன்னேன் புலிகள் கேக்கவில்லையென்று ஐயா ஜெயபாலனும் ஓரிடத்தில் அளந்திருந்தார் .போராளிகள் ஆயுதபயிற்சி பெற்ற எல்லைபடைகள் பொதுமக்கள் என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வீரர்கள், சில ஆயிரம் கிலோமீட்டர் பரப்பளவைக்கொண்ட காடுகளில் எப்படி மறைந்திருப்பது கெரில்லா தாக்குதல் செய்வது?

கெரில்லா தாக்குதல் என்றாலே சிறு குழுக்களாய் பிரிந்து செயல்படுவது, பல ஆயிரம் வீரர்கள், பல ஆயிரம் கனரக ஆயுதங்கள் ,விமானங்கள் பெரும் எண்ணிக்கையிலான போராயுதங்கள் கடற்கலங்களை கொண்ட கடல்புலிகள்  இவற்றையெல்லாம் காட்டுக்குள் போய் பதுக்கி வைத்துக்கொண்டு என்ன கெரில்லா தாக்குதல் செய்வது?

அப்படி செய்தாலும் தரை கடல் என எல்லைகளின் கட்டுப்பாட்டை இழந்தால் எங்கிருந்து பல்லாயிரம் போராளிகளுக்கு உணவு மருத்துவம்  உட்பட்ட வளங்கல்களை செய்வது?

முன்னர் சிறிய எண்ணிக்கையில் போராளிகள் இருந்தபோது புலிகள் இயக்கம் கெரில்லா தாக்குதலில் மிரட்டியது அப்போது புலிகளுக்கு இந்தியாவில் தடையிருக்கவில்லை, காயபட்ட போராளிகளை பராமரிக்கவும்,ஆயுதங்கள் வெடிமருந்துகளை கொண்டு வந்து சேர்க்கவும் தமிழகம் பின்புலமாய் இருந்தது. இறுதி போரின்போது அதுவா நிலமை?

ஜெயபாலன் ஐயா கெரில்லா தாக்குதல் செய்ய சொல்லி நான் சொன்னேன் புலிகள் கேட்கவில்லை என்று அளந்துவிட்டைதை பார்த்து நாங்களும் சாத்தியமில்லாத விசயங்களை அலசகூடாது அது எதிர்கால சந்ததிக்கு பகிரப்படும் தவறான தகவலாக போய்விடும்..

எனது கருத்து, உங்கள் ஆம் என்று ஆரம்பிக்கும் கருத்து வரை மட்டுமே ஆனது.

அந்த தருணத்தை மட்டுமே நான் சொன்னேன். இந்தியாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் நகர்ந்து இருந்தால் நிலைமையே வேறாக இருந்திருக்கலாம் என்றேன்.

அந்த கணத்தின் பின் ராணுவ சமநிலை மாறியது. 

இந்தகணமே, இன்று நந்தன் அண்ணன் போல, நெஞ்சை நிமிர்த்தி சிங்கள  தேசியவாதம் பேசும் கோத்தா, இராணுவத்தை விட்டு அமெரிக்கா ஓடினதும் நிகழ்ந்தது.

அமெரிக்கா விசா மறுக்கப்பட,அதை வாங்கி கொடுக்கவும் ஒரு தமிழன் தான் கோத்தாவுக்கு தேவைப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

உண்மையில் இதன் முழு விபரமும் தலைவருக்கு மட்டுமே தெரியும். ஏனெனில் பொதுமக்கள் மற்றும் முக்கிய தளபதிகள் உட்பட அனைவரது  எதிர்பார்ப்பும் வடபகுதி முழுமையாக விழுந்து விடும் என்பது தான். ஏனெனில் களநிலை கல்லால் எறிந்து முன்னேறும் நிலையில் தான் இருந்தது??

தலைவர் ஒருவர் மட்டுமே நிதானமாக தூரநோக்கோடு உத்தரவு தர மறுத்ததாக தான் சொல்லப்பட்டது. 

என்ன காரணம் என்ன அழுத்தம்?? அவர் மட்டுமே அறிவார்.

இந்தியா தனது கடற்படையை அனுப்பி சிங்கள இராணுவத்தை மீட்க முயற்சிக்கும் என்ற தகவல்  உள்ளூர் பத்திரிகைகளில் வந்திருந்ததே விசுகர்? ஊகமாக அல்ல, இந்திய அரசின் நிலைப்பாடாக வந்திருந்தது.

இந்த இந்திய இராணுவ மீள்வருகையைத் தவிர்க்கத் தான் கைவிடப் பட்டது, இதில் தலைவருக்கு மட்டும் தெரிந்த உண்மையென்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே களம் புலிகளுக்கு சாதகமாக தான் இருந்தது. சிறீலங்கா பாராளுமன்றத்திலேயே 40ஆயிரம் சவப்பெட்டிகளை தயாராக வைத்திருங்கள் என்று சொல்லும் நிலையில் களம் மட்டும் அல்ல சிறீலங்காவே இருந்தது.

ஆனால் தலைவருக்கு மட்டுமே தெரிந்த நிதானமாக ?? எச்சரிக்கை?? அல்லது வாக்குறுதிகள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே களம் புலிகளுக்கு சாதகமாக தான் இருந்தது. சிறீலங்கா பாராளுமன்றத்திலேயே 40ஆயிரம் சவப்பெட்டிகளை தயாராக வைத்திருங்கள் என்று சொல்லும் நிலையில் களம் மட்டும் அல்ல சிறீலங்காவே இருந்தது.

ஆனால் தலைவருக்கு மட்டுமே தெரிந்த நிதானமாக ?? எச்சரிக்கை?? அல்லது வாக்குறுதிகள்???

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனப் புரியவில்லை! என்ன தான் பலமாக இருந்தாலும், இந்தியாவை திரும்பவும் சீண்டி விட்டு சிங்களவர்கள் பக்கம் தள்ள புலிகள் விரும்பவில்லை!

எனவே கோடு போட்ட இடத்தில் நின்றார்கள், இதில் மாயம்,  மர்மம் என்றெல்லாம் எதுவும் இல்லை! உங்கள் கைரேகை போல தெளிவான விடயம்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.