Jump to content

சிறுநீரகக் கல் அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும்

Recommended Posts

தக்காளி பழத்தை விதையுடன் சேர்த்து சாலட்டில் உபயோகிப்பதாலும், கறிசமைக்க பயன்படுத்துவதாலும்   சிறுநீரகக்கல் வரலாமென்பது உண்மையா!!

 • Like 1
Link to comment
Share on other sites

 • Replies 84
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Justin

சிறு நீரகக் கல் பற்றிய பல செய்திகள் பயனுள்ள தகவல்கள் பகிரப் பட்டிருக்கின்றன. இது பற்றிய மேலும் சில தகவல்களைப் பார்க்கலாம்: 1. சிறு நீரகக் கல்லின் அடிப்படை செறிவான சிறுநீர்: கீழேயுள்ள படத்தை முழுவ

குமாரசாமி

சொன்னால் நம்ப மாட்டியள் கடந்த 25 வருடங்களாக தினசரி நான் குடிக்கும் தண்ணீர் அளவு இரண்டரை லீட்டர் தண்ணீர். காரணம் நான் எடுக்கும் மாத்திரைகளும் செய்யும் தொழிலுமாகும். இருந்தும் சிறு நீரகத்தில் கல்லு

குமாரசாமி

விளக்கங்கள் முடிய மயக்க மருந்து ஏற்றும் டாக்குத்தர் வந்தார். அவரும் தன் பங்குக்கிற்கு பல விளக்கங்களை தந்தார்.. எல்லாம் முடிய மாலை ஆறு மணியளவில் எனது கிட்னியை நோக்கி DJ செலுத்தப்பட்டது.அது கிட்டத்தட்ட

 • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, புங்கையூரன் said:

ஊரில் உங்கள் கிணற்றுத் தண்ணீரையும், உங்கள் சிறு நீரகக் கல்லையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விடை கிடைக்கலாம்..!

எனது ஊர் தண்ணீர் தெளிந்த நீர். நிலம் தெரியும்.
கல்லின் நிறம் கறுப்பு 😀

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2021 at 02:21, குமாரசாமி said:

பியர் ரின் காலியானதால் மிகுதி இன்னொருநாள் தொடரும். :cool:

 அப்போது சிறுநீரக கல்லுக்கும் இன்னொரு வலிக்குமான தொடர்பை சொல்கிறேன். :)

எனக்கு நீண்ட காலமாக இடுப்பு வலி/நாரிப்பிடிப்பு  இருந்தது. இது இளமைக்காலங்களிலிருந்து(20,25) என்று கூட சொல்லலாம். இடுப்பு வலியால் நான் இருக்குமிடத்தில் போகாத வைத்திய நிலையங்களே இல்லை. பல ஸ்கேன் உட்பட MRT வரைக்கும் போய் வந்துள்ளேன். MRTயில் கூட முதுகுதண்டில் கொஞ்ச வளைவு உள்ளதாகவும் அதற்காக சத்திரசிச்சை ஏதும் தேவையில்லை எனவும் கூறினார்கள்.வலி வரும் நேரங்களில் அவ்வப்போது வலி நிவாரண மாத்திரைகளும் மசாஜ்களும் போதுமானது என கூறி விட்டார்கள். சரி இதுதான் என் வாழ்க்கை என என்னை நானே சுதகரித்துக்கொண்டு என் வாழ்க்கையை தொடர்ந்தேன்.அவ்வப்போது நாரிப்பிடிப்பு வர வைத்தியரிடம் சென்று தைலங்களும் மாத்திரைகளும் வாங்குவதே தொடர்கதையாக இருந்தது.

இடுப்பு வலியால் எனது படுக்கையை கூட பலமுறை மாற்றியுள்ளேன். நான் படுக்கும் மெத்தையின் விலை 1500 ஈரோ வரைக்கும் இருந்துள்ளது.எனது இடுப்பு வலியால் வீட்டு சோபா மற்றும் நான் இருக்கும் கதிரைகளை கூட மாற்றியிருக்கின்றேன்.நான் பாவிக்கும் சப்பாத்துக்கள் கூட இடுப்பு வலிகாரர்களுக்கான சாப்பாத்துக்களையே வாங்கி பாவித்தேன். அதிக நேரம் நின்று வேலை செய்வதால் தான் இடுப்பு வலி என நினைத்து நின்று வேலை செய்பவர்களுக்கான சப்பாத்துக்களையே வாங்கி பாவித்தேன்.

இருந்தும் என் அவ்வப்போது வரும் இடுப்பு வலியில் எவ்வித மாற்றமும் இல்லை.

சிறு வயதில் நாவல்பழம் புடுங்க மரத்தின் மேல் ஏறி கொப்பு தாவி ஏறும் போது கீழே இடுப்படி பட விழுந்ததின் காரணம்தான் எனக்கு நானே நினைத்து இனி இதுதான் என் வாழ்க்கை என முடிவுக்கு வந்து விட்டேன்.

கண் கூசுவதால் ஒரு சிறிய இடை வேளை....🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

கண் கூசுவதால் ஒரு சிறிய இடை வேளை....🤣

பல வருடங்களுக்கு மேலாக இருந்த இடுப்புவலி சிறுநீரக கல் எடுத்தபின் நீங்கி விட்டதாக தெரிகின்றது.நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. இருந்தாலும் இப்போதைய நிலமையில் முன்னர் இருந்த இடுப்பு வலி இல்லை என தோன்றுகின்றது. நாளைய பொழுது எப்படியிருக்கும் என யாரறிவார்.

நான் இங்கே எழுதியது பலருக்குபிரயோசனப்படும் என நினைக்கின்றேன். எனது ஒரு சிறிய அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கின்றேன்.விளாவரியாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக  சொல்லி முடித்திருக்கின்றேன்.

நான் எழுதியதை விரும்பி வாசித்தவர்களுக்கு நன்றி. ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். நான் எழுத தவறியதை எழுத உதவியாக இருக்கும்.

நன்றியுடன் கலந்த வணக்கங்கள்.🙏

 • Like 3
 • Thanks 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

இடுப்பு வலி போனது மகிழ்ச்சி தான்..! இருந்தாலும் எங்கயோ தட்டப் பல்லு விழுந்தது மாதிரிக் கிடக்குது..! 😊

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எனது ஊர் தண்ணீர் தெளிந்த நீர். நிலம் தெரியும்.
கல்லின் நிறம் கறுப்பு 😀

வவுனியா பக்கம் தண்ணீர் குடித்தால் சிலருக்கு சலகடுப்பு ஏற்படுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.

1 hour ago, குமாரசாமி said:

எனக்கு நீண்ட காலமாக இடுப்பு வலி/நாரிப்பிடிப்பு  இருந்தது. இது இளமைக்காலங்களிலிருந்து(20,25) என்று கூட சொல்லலாம்.

ஓஓஓ அதுவா

விந்து விட்டார்
நொந்து கெட்டார்.

1 hour ago, குமாரசாமி said:

பல வருடங்களுக்கு மேலாக இருந்த இடுப்புவலி சிறுநீரக கல் எடுத்தபின் நீங்கி விட்டதாக தெரிகின்றது.நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. இருந்தாலும் இப்போதைய நிலமையில் முன்னர் இருந்த இடுப்பு வலி இல்லை என தோன்றுகின்றது. நாளைய பொழுது எப்படியிருக்கும் என யாரறிவார்.

நான் இங்கே எழுதியது பலருக்குபிரயோசனப்படும் என நினைக்கின்றேன். எனது ஒரு சிறிய அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கின்றேன்.விளாவரியாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக  சொல்லி முடித்திருக்கின்றேன்.

நான் எழுதியதை விரும்பி வாசித்தவர்களுக்கு நன்றி. ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். நான் எழுத தவறியதை எழுத உதவியாக இருக்கும்.

நன்றியுடன் கலந்த வணக்கங்கள்.🙏

பலருக்கு பேதி கொடுத்திருக்கிறீர்கள்.

நன்றி வணக்கம்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

இடுப்பு வலி போனது மகிழ்ச்சி தான்..! இருந்தாலும் எங்கயோ தட்டப் பல்லு விழுந்தது மாதிரிக் கிடக்குது..! 😊

வெர்லி(யால) பாயேக்க விழுந்ததில நாரி நொந்துபோச்செண்டத மாத்தி நாக்கூசாம பொய் சொல்லுறார் குசாமியர்.

🤪

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

வெர்லி(யால) பாயேக்க விழுந்ததில நாரி நொந்துபோச்செண்டத மாத்தி நாக்கூசாம பொய் சொல்லுறார் குசாமியர்.

🤪

இவனுகளோட கூட்டு வைச்சிக்கிட்டு மனிசன் படுற பாடு இருக்கே சொல்லி வேலையில்ல...😁

Bild

நான் பவ்வியமாய் வாழ்பவன்:cool:

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

பல வருடங்களுக்கு மேலாக இருந்த இடுப்புவலி சிறுநீரக கல் எடுத்தபின் நீங்கி விட்டதாக தெரிகின்றது.நான் இன்னும் முடிவெடுக்கவில்லை. இருந்தாலும் இப்போதைய நிலமையில் முன்னர் இருந்த இடுப்பு வலி இல்லை என தோன்றுகின்றது. நாளைய பொழுது எப்படியிருக்கும் என யாரறிவார்.

நான் இங்கே எழுதியது பலருக்குபிரயோசனப்படும் என நினைக்கின்றேன். எனது ஒரு சிறிய அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கின்றேன்.விளாவரியாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக  சொல்லி முடித்திருக்கின்றேன்.

நான் எழுதியதை விரும்பி வாசித்தவர்களுக்கு நன்றி. ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். நான் எழுத தவறியதை எழுத உதவியாக இருக்கும்.

நன்றியுடன் கலந்த வணக்கங்கள்.🙏

ஐ ஹாவ் எ கொஸ்டீன் யுவர் ஆனர்,

இந்த இடுப்பு வலி எண்டு நீங்கள் சொல்வது சயாடிக்காவையா? (முன்னர் ஒரு தரம் அக்குபங்சர் திரியில் இதனால் அவதிபடுவதாக சொன்ன நியாபகம்).

எனக்கும் சயாடிக்கா போல் வலிக்கும் (self diagnosis தான்) - இடைகிடை பேக் சைடில் இருந்து, தொடை முழங்கால் வரை நோகும். அநேகமா பெயின் கில்லர் தேவைப்படாது. சிலசமயம் தாங்க முடியாது போனால் எடுப்பேன். ஒரு பக்கம் மாறி, மறு பக்கம் வரும். பிறகு தானாக நிற்கும்.

Manual காரில் அடிக்கடி கியர் மாத்தி ஓடினால் சுகம் ஆகுவது போல் ஒரு பீலிங்.

இதைத்தான் நீங்களும் சொல்கிறீர்களா? அல்லது வேற வகை நோவா?

On 21/12/2021 at 14:57, Justin said:

சரி, உங்களுக்கு மருந்துகளால் தான் கல் வந்தது என்ற சந்தேகம் தலை தூக்கி விட்டது என நினைக்கிறேன்.

மருத்துவர் சொன்னது போல, அப்படி கல் உருவாக்கும் சில மருந்துகள் உண்டு, ஆனால் இரத்த அழுத்த மாத்திரை, கொழுப்புக் குறைக்கும்/நீரிழிவு மருந்துகளில் அந்தப் பக்க விளைவு இல்லை, அவர் சொன்னது சரியானதே! 

பின் வரும் நான்கு வகையான கற்களில் எந்த வகை என்று உங்கள் அறிக்கையில் இருக்கிறதா என்று ஒரு தடவை பார்த்துச் சொல்ல முடியுமா? (கல் வகையை வைத்து என்ன நடந்திருக்கிறது என ஓரளவு புரிந்து கொள்ளலாம்):

1. ஒக்சலேற் -oxalate (மிக அதிகமானோருக்கு வருவது)
2. யூறேற் -Urate (இரண்டாவது மிக அதிகமாக வரும் கல்)
3. ஸ்ருவைற்-Struvite  (மிக அரிது)
4. சிஸ்ரின் - Cystine (மிக அரிது)

அண்ணா,

பொதுவாக எந்த வகை மருந்துகள் இந்த கல்லை உருவாக்கும்?

Edited by goshan_che
Link to comment
Share on other sites

47 minutes ago, goshan_che said:

அண்ணா,

பொதுவாக எந்த வகை மருந்துகள் இந்த கல்லை உருவாக்கும்?

கோசான், பொதுவாக எங்கள் சிறு நீரகத்தில் வடிகட்டலைப் பாதிக்கும் மருந்துகள் சிறு நீரைச் செறிவாக்கி ( கற்களை உருவாக்கும் ஆபத்தைக் கூட்டும் (ஆனால், தண்ணீரை போதியளவு குடித்து hydration ஐப் பேணினால் இந்த ஆபத்தையும் குறைக்கலாம்). இப்படிக் கல் தரும் மருந்து வகைகள் சில:

 1. சிறுநீர் கழிப்பூக்கிகள்(diuretics): இவை சிறு நீர் கழிவதை அதிகரிக்கும் மருந்துகள்.

  உதாரணம்: furosemide 

2. வேறு சில மருந்துகள், சிறு நீரின் அமில காரத்தன்மையை (pH) மாற்றுவதால் கல் உருவாகும் நிலைமையை அதிகரிப்பவை: 

உதாரணம்: சில வலிப்பு எதிர்ப்பான் மருந்துகள் (anti-epileptics): Topiramate, acetazolamide, Zonisamide

3.  சில மருந்துகள் , எங்கள் ஈரலினால் சுத்திகரிக்கப் படும்போது உருவாகும் பக்க விளைவுப் பொருட்கள் சிறு நீரில் செறிவானால், அந்தப் பக்க விளைவுப் பொருட்களே கற்களை உருவாக்கும்:

சில உதாரணங்கள்:

சிப்றோ வகை நுண்ணுயிர் கொல்லிகள் (ciprofloxacin) 

சல்பா வகை நுண்ணுயிர் கொல்லிகள் (sulfamethoxazole) 

இந்தினாவிர் (Indinavir) என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து (எச்.ஐ.வி நோயாளிகளில் பாவிப்பது)

ஆனால், இந்த மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளாக சிறுநீரகக் கல் இருப்பதால், மருந்தைத் தரும் போதே உங்களுக்கு இது பற்றிய எச்சரிக்கையையும் தருவார்கள்: தண்ணீர் நன்கு குடிக்க வேண்டும், வேறு சிறு நீரக வடிகட்டலைப் பாதிக்கும் மருந்துகளோடு சேர்த்து எடுக்கக் கூடாது, போன்ற ஆலோசனைகள் தரப்படும்!

 • Like 6
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

எனது ஊர் தண்ணீர் தெளிந்த நீர். நிலம் தெரியும்.
கல்லின் நிறம் கறுப்பு 😀

எல்லாம் சரி, சுடுதண்ணி வைச்சால் கேற்றிலில் கல்சியம் படியிறதா? இல்லையா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Justin said:

நன்றி அண்ணா🙏🏾🙏🏾🙏🏾

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

நான் இங்கே எழுதியது பலருக்குபிரயோசனப்படும் என நினைக்கின்றேன். எனது ஒரு சிறிய அனுபவத்தை இங்கே பகிர்ந்திருக்கின்றேன்.விளாவரியாக இல்லாவிட்டாலும் சுருக்கமாக  சொல்லி முடித்திருக்கின்றேன்.

நன்றி கு.சா. ஐயா! மிகவும் பிரயோசனமான பதிவு. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எனக்கும் சயாடிக்கா போல் வலிக்கும் (self diagnosis தான்) - இடைகிடை பேக் சைடில் இருந்து, தொடை முழங்கால் வரை நோகும்.

எனக்கு sciatica மூன்று வருடங்களுக்கு முன்னர் மோசமாக இருந்தது. தினமும் 3 மணி நேரம் காரில் பயணிப்பதும், வேலையில் தொடர்ந்து இருப்பதும் வரக் காரணமானது என்று நினைக்கின்றேன். இடுப்புவலி பெரிதாக இருக்கவில்லை. ஆனால் ஒரு பக்கக் காலில், தொடையில் விறைப்பு வந்தது.

பிஸியோவிடம் போனால் சில பயிற்சிகளைச் செய்யச் சொன்னார். 24 kg kettlebell (நோமலாக டெட்வெயிற் தூக்கப் பாவிப்பது) ஐ வாங்கி இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு முன்னும் பின்னுமாக (கால்களுக்கிடையாக) ஸ்விங் பண்ணச் சொன்னார்.  ஒற்றைக் கையால் மாறி மாறி உயர்த்தச் சொன்னார். 24kg ஐ 30 தரம் தூக்கிச் சுழற்ற சாப்பிட்டதெல்லாம் செமிச்சுவிடும்!

அது உதவியதோ அல்லது எனது வேகநடை உதவியதோ, அல்லது வீக்கெண்ட் ஸூமில் செய்யும் ஃபிற்னெஸ் + யோகா (மாஸ்ரர் பின்னி பெடல் எடுத்த்துவிடுவார்)உதவியதோ, அல்லது கார்ப்பயணம் இல்லாமல் வீட்டில் இருந்து வேலை செய்வது உதவியதோ, அல்லது எல்லாம் சேர்ந்து உதவியதோ தெரியாது. இப்போது சியாட்டிகா இல்லை. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிரயோசனமான பதிவு கு.சா......மிகவும் நன்றி, கவனமாக இருங்கள்......!   👍

பல ஆலோசனைகள் தந்த ஜஸ்டினுக்கும் மிகவும் நன்றி .....!  👍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஐ ஹாவ் எ கொஸ்டீன் யுவர் ஆனர்,

கோடு, கச்சேரி பொலிஸ் ஸ்ரேசன் எண்டு அலைஞ்சால் உந்த வசனம் பக்கெண்டு வரும் 🤣

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

 ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். நான் எழுத தவறியதை எழுத உதவியாக இருக்கும்.

நன்றியுடன் கலந்த வணக்கங்கள்.🙏

போதும்..போதும்.. இதுக்கு மேல வேணாம் சாமி..🙏... மரணபயத்த காட்டிட்டீங்க..😂😂

Edited by பாலபத்ர ஓணாண்டி
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இந்த இடுப்பு வலி எண்டு நீங்கள் சொல்வது சயாடிக்காவையா? (முன்னர் ஒரு தரம் அக்குபங்சர் திரியில் இதனால் அவதிபடுவதாக சொன்ன நியாபகம்).

எனக்கும் சயாடிக்கா போல் வலிக்கும் (self diagnosis தான்) - இடைகிடை பேக் சைடில் இருந்து, தொடை முழங்கால் வரை நோகும். அநேகமா பெயின் கில்லர் தேவைப்படாது. சிலசமயம் தாங்க முடியாது போனால் எடுப்பேன். ஒரு பக்கம் மாறி, மறு பக்கம் வரும். பிறகு தானாக நிற்கும்.

Manual காரில் அடிக்கடி கியர் மாத்தி ஓடினால் சுகம் ஆகுவது போல் ஒரு பீலிங்.

இதைத்தான் நீங்களும் சொல்கிறீர்களா? அல்லது வேற வகை நோவா?

எனக்கு முழங்கால் பிரச்சனையால் தான் கால் முழுவதும் பிரச்சனை இருக்கின்றது.

ஆனால் எனக்கு நிரந்தர இடுப்புவலி ஒன்று இருந்தது.....அது தற்போது இல்லை. 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2021 at 14:27, பாலபத்ர ஓணாண்டி said:

வேணாம் சாமி.. இதுக்கு மேல வேணாம்..🙏... மரணபயத்த காட்டிட்டீங்க..😂😂

என்னட்டை இன்னும் கேஸ் இருக்கு அவுட்டு விடட்டா? ஒண்டு இருதயம் மற்றது இரண்டு முழங்கால் சில்லு....😎 வசதி எப்பிடி?

எல்லாம் இந்த பாழாய்ப்போன வேலையாலை வந்தது.🤣

 • Sad 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எனக்கு sciatica மூன்று வருடங்களுக்கு முன்னர் மோசமாக இருந்தது. தினமும் 3 மணி நேரம் காரில் பயணிப்பதும், வேலையில் தொடர்ந்து இருப்பதும் வரக் காரணமானது என்று நினைக்கின்றேன். இடுப்புவலி பெரிதாக இருக்கவில்லை. ஆனால் ஒரு பக்கக் காலில், தொடையில் விறைப்பு வந்தது.

பிஸியோவிடம் போனால் சில பயிற்சிகளைச் செய்யச் சொன்னார். 24 kg kettlebell (நோமலாக டெட்வெயிற் தூக்கப் பாவிப்பது) ஐ வாங்கி இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு முன்னும் பின்னுமாக (கால்களுக்கிடையாக) ஸ்விங் பண்ணச் சொன்னார்.  ஒற்றைக் கையால் மாறி மாறி உயர்த்தச் சொன்னார். 24kg ஐ 30 தரம் தூக்கிச் சுழற்ற சாப்பிட்டதெல்லாம் செமிச்சுவிடும்!

அது உதவியதோ அல்லது எனது வேகநடை உதவியதோ, அல்லது வீக்கெண்ட் ஸூமில் செய்யும் ஃபிற்னெஸ் + யோகா (மாஸ்ரர் பின்னி பெடல் எடுத்த்துவிடுவார்)உதவியதோ, அல்லது கார்ப்பயணம் இல்லாமல் வீட்டில் இருந்து வேலை செய்வது உதவியதோ, அல்லது எல்லாம் சேர்ந்து உதவியதோ தெரியாது. இப்போது சியாட்டிகா இல்லை. 

நன்றி ஜி. 

உதுகளை கொஞ்சம் டிரை பண்ணி பார்க்கலாம்தான் - ஆனால் யாழில் எழுதிற நேரம் குறைஞ்சிடும் எண்டு யோசிக்கிறன்😜.

45 minutes ago, குமாரசாமி said:

எனக்கு முழங்கால் பிரச்சனையால் தான் கால் முழுவதும் பிரச்சனை இருக்கின்றது.

ஆனால் எனக்கு நிரந்தர இடுப்புவலி ஒன்று இருந்தது.....அது தற்போது இல்லை. 😁

நன்றி அண்ணை,

எப்படியோ இரெண்டு நோய்கள் ஒரே நேரத்தில் மாறீட்டு - சந்தோசம்தானே.

1 hour ago, குமாரசாமி said:

கோடு, கச்சேரி பொலிஸ் ஸ்ரேசன் எண்டு அலைஞ்சால் உந்த வசனம் பக்கெண்டு வரும் 🤣

ஐயோ அண்ணை,

இது கெளரவம், விதி, சட்டம் ஓர் இருட்டறை, கனம் கோட்டார் அவர்களே இப்படியான படங்களை பார்த்ததால் வந்த பாதிப்பு🤣.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

எல்லாம் சரி, சுடுதண்ணி வைச்சால் கேற்றிலில் கல்சியம் படியிறதா? இல்லையா?

நான் பிறந்த இடத்திலும் தண்ணியில் கல்சியம் இல்லை.....கேத்திலில் கல்சியம் படியாது.அதே போல் யேர்மனியில் நான் வாழும் இடத்தில் குழாய் தண்ணீர் நேரடியாக கொதிக்க வைக்காமலே குடிக்கலாம்.மலையூற்று தண்ணீர்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

... ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். நான் எழுத தவறியதை எழுத உதவியாக இருக்கும்.

நன்றியுடன் கலந்த வணக்கங்கள்.🙏

அனுபவ பகிர்விற்கு மிக்க நன்றி கு.சா.🙏

எனக்கு ஒரு சம்சயம்..

கேட்டால், பரிமளம் அம்மணி கோவிக்குமே அஞ்சுகிறேன்..! 🤔

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

அனுபவ பகிர்விற்கு மிக்க நன்றி கு.சா.🙏

எனக்கு ஒரு சம்சயம்..

கேட்டால், பரிமளம் அம்மணி கோவிக்குமே அஞ்சுகிறேன்..! 🤔

அஞ்சாமல்/வெட்கப்படாமல் கேளுங்கள். கேளுங்கள் தரப்படும்.:cool:
கவனிக்க...
பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும். 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அஞ்சாமல்/வெட்கப்படாமல் கேளுங்கள். கேளுங்கள் தரப்படும்.:cool:
கவனிக்க...
பானையில் இருப்பதுதான் அகப்பையில் வரும். 😁

வெட்கப்பட ஒன்னுமே இல்லை..

சில நாட்கள் போகட்டும், அம்மணியிடமே கேட்டு தெரிந்து கொள்கிறேன்..! 😍

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கோடு, கச்சேரி பொலிஸ் ஸ்ரேசன் எண்டு அலைஞ்சால் உந்த வசனம் பக்கெண்டு வரும் 🤣

கோசான் கோட்டில தான் வேலை என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?

Link to comment
Share on other sites

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.