Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

`துர்காவதி என்னும் சிம்ம சொப்பனம்!' - அறியப்படாத இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் கதை


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

`துர்காவதி என்னும் சிம்ம சொப்பனம்!' - அறியப்படாத இந்தியச் சுதந்திரப் போராட்ட வீராங்கனையின் கதை

துர்காவதி

இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தபோது எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது இந்தப் பெண் சிங்கம்தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் அதிகம் பேசப்படாத ஒரு பெண், துர்காவதி தேவி. குறிப்பாக இந்தியாவில் சுதந்திர வேட்கை உச்சத்தில் இருந்தபோது எதற்கும் அஞ்சாமல் ஆங்கிலேயர் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது இந்தப் பெண் சிங்கம்தான் என்பது பலரும் அறியாத ஒரு தகவல். இவரது அதிரடித் தாக்குதல்களால் ஆட்டம்கண்ட ஆங்கிலேயர்கள் இவரை `தி அக்னி ஆப் இந்தியா’ (The Agni of India) என்றே அழைத்தனர்.

உத்தரப்பிரதேசத்திலுள்ள அலகாபாத் மாவட்டத்தில் 1907-ம் ஆண்டு ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் துர்காவதி தேவி. இவரின் தந்தை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை செய்தவர். துர்காவதியின் தாத்தாவும் பிரிட்டிஷ் அரசில் காவல் அதிகாரியாகப் பணிபுரிந்தார். தந்தையும், தாத்தாவும் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக இருந்தாலும் அவர்களது வழித்தோன்றலான துர்காவதி அப்படி இருக்கவில்லை. சிறுவயதிலிருந்தே விடுதலை தாகம் உள்ளவராக இவர் வளர்ந்தார்.

இவருக்கு 11 வயது ஆகும்போது செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தைச் சேர்ந்த பக்வதி சரண் வோக்ரா என்கிற 15 வயது இளைஞருடன் திருமணம் நடந்தது. துர்காவதியைப் போல பக்வதி சரண் வோக்ராவும் தேச விடுதலை குறித்த பெருங்கனவுடன் இருந்ததைக் கண்டு அவருக்கு மகிழ்ச்சி தாளவில்லை.

பகத்சிங்
 
பகத்சிங்

குறிப்பாக பக்வதி வோக்ரா, மாவீரர் பகத்சிங்கை அடிக்கடி சந்தித்தார். ஆனால் ஒரு பணக்கார வீட்டுப் பையன் இப்படி சுதந்திர தாகம் கொண்டு திரிவதை பலரும் சந்தேகக் கண்கொண்டே பார்த்தனர். `ஒருவேளை இவன் பிரிட்டிஷ் அரசின் கைக்கூலியோ’ என்றும் எண்ணினர். ஒருகட்டத்தில் இவரின் உண்மையான சுதந்திரப் பற்று புரியவர, அதன் பின்னரே பகத்சிங், சந்திரசேகர் ஆஸாத் போன்ற வீரர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஹிந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேஷன் (Hindustan Socialist Republican Association) என்கிற புரட்சி அமைப்பில் இவர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

காலங்கள் மெள்ள நகர்ந்தன. துர்காவதி ஒரு குழந்தைக்குத் தாயானார். துர்காவதிக்கும் பக்வதி சரண் வோக்ராவுக்கும் இடையில் கணவன் - மனைவி என்கிற உறவையும் தாண்டி அற்புதமான ஒரு நட்பு வளர ஆரம்பித்தது. குறிப்பாக கணவரின் சுதந்திரப் போராட்ட முன்னெடுப்புகளை அருகிலிருந்து பார்த்துப் பார்த்து தாமாகவே அந்தப் புரட்சிக் குழுவில் தன்னையும் இணைந்துகொண்டார் துர்காவதி. கணவனும் மனைவியுமாக இணைந்து துப்பாக்கியைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்தனர். முதற்கட்டமாக போராட்டக்காரர்களுக்குத் தேவையான உதவிகளையும், ஒத்துழைப்பையும் கொடுக்க ஆரம்பித்தார் துர்காவதி.

இதன் காரணமாக, ஹிந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிபப்ளிக் அசோஷியேஷன் குழுவில் இருந்த மற்ற உறுப்பினர்கள் துர்காவதியை `துர்கா பாபி', அதாவது துர்கா அண்ணி என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் போராட்டங்களில் துர்காவதியின் பங்கு, நம்மை மெய்சிலிர்க்க வைப்பது. அது பற்றி பார்ப்போம்...

அச்சமின்றி மாறுவேடத்தில் பயணம்!

பிரிட்டிஷ் காவல் அதிகாரி ஜான் சாண்டர்ஸ் என்பவரை கொன்ற பிறகு 1928-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ஆம் நாள் பகத்சிங்கும், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரும் துர்காவதியின் வீட்டிற்குச் சென்றனர். நடந்ததை அறிந்துகொண்ட துர்காவதி பகத்சிங்கை கல்கத்தாவிற்குச் செல்லுமாறு ஆலோசனை வழங்கினார். இதன்படி பகத்சிங் ரயிலில் கல்கத்தாவிற்குப் பயணித்தார். கூடவே அவரின் மனைவி வேடத்தில் துர்காவதியும் அந்த ரயிலில் பயணம் செய்தார். மற்றுமொரு சுதந்திரப் போராட்ட வீரரான ராஜ்குரு இவர்கள் இருவரது சேவகனாகப் பயணப்பட்டார். இதில் வியப்பான செய்தி என்னவென்றால், இவர்கள் பயணித்த அதே ரயிலில் சுமார் 500 காவலர்களும் பயணித்தனர். இத்தனை பேரின் கண்ணிலும் மண்ணைத் தூவிவிட்டு பகத்சிங்கை கல்கத்தாவிற்கு பத்திரமாகக் கொண்டுசேர்த்த துர்காவதியின் நெஞ்சுரம் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது.

சுதந்திரப் போராட்டம்
 
சுதந்திரப் போராட்டம்இந்திய தேசியக்கொடி எத்தனைமுறை மாற்றியமைக்கப்பட்டது என்று தெரியுமா?

வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயிற்சி!

கல்கத்தாவை அடைந்த பகத்சிங், அதுல் கங்குலி, ஜி.என்.தாஸ், பினிந்தர் கோஷ் ஆகிய தனது வங்காள சகாக்களை துர்காவதியுடன் சென்று சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பகத்சிங் உள்ளிட்ட தனது சகாக்களுடன் சேர்ந்து துர்காவதியும் வெடிகுண்டுகள் தயாரிக்கும் பயிற்சியைப் பெற்றார்.

சகாக்களைக் காப்பற்றப் போராட்டம்!

இவை எல்லாவற்றுக்கும் மேலாக பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவருக்கும் ஆங்கிலேய அரசு தூக்குத் தண்டனை விதித்ததும் அதிர்ச்சியடைந்த துர்காவதி தன்னிடமிருந்த நகைகள் அனைத்தையும் மூவாயிரம் ரூபாய்க்கு விற்று அப்பணத்தின் உதவியோடு அவர்களை தூக்குத் தண்டனையிலிருந்து வெளியே கொண்டுவர முயற்சித்தார். பிற விடுதலைப் போராட்ட வீரர்களைச் சந்தித்து உதவி கேட்டும் மன்றாடினார். ஆனால் இவை எதற்கும் செவிசாய்க்காத ஆங்கில அரசு அவர்கள் மூவரையும் தூக்கிலிட்டது.

இச்சம்பவத்தின் ஊடே மற்றுமொரு வேதனையான சம்பவமும் நிகழ்ந்தது. அதாவது தூக்குத் தண்டனை பெற்று பகத்சிங் சிறையில் இருந்தபோது சிறைச்சாலையில் வெடிகுண்டு வீசி பகத்சிங்கை தப்பிக்க வைக்கும் முயற்சியில் துர்காவதியின் கணவர் பக்வதி வோக்ரா இறங்கினார். அதற்காக மாதிரி வெடிகுண்டைத் தயாரித்து அதை லாகூர் நகருக்கு அருகிலிருந்த ராவி நதிக்கரையில் வைத்துச் சோதித்துப் பார்த்தபோது ஏற்பட்ட விபத்தில் பக்வதி வோக்ரா தனது உயிரை இழந்தார்.

 

இது துர்கா பாபிக்குப் பேரிழப்பு என்றாலும் அவர் கலங்கிவிடவில்லை. ஆங்கிலேயரின் வஞ்சத்தால் வீழ்ந்த தனது சகாக்களுக்காவும், வீரர்களைக் காப்பற்றுவதற்காக தனது இன்னுயிரையும் இழந்த கணவருக்காவும் இன்னும் தீவிரமாகப் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டார்.

குறிப்பாக பகத் சிங் மற்றும் சகாக்களைத் தூக்கில் போடக் காரணமாக இருந்த பஞ்சாபின் முன்னாள் கவர்னரான லார்ட் ஹெய்லி என்பவரை பழிவாங்கத் துடித்தார் துர்காவதி. இதற்கான முயற்சியில் இவர் இறங்கியபோது அந்த கவர்னர், தப்பிவிட கவர்னரின் உதவியாளர்கள் துர்காவதியின் தாக்குதலால் காயமடைந்தனர். இதற்காகக் கைது செய்யப்பட்ட துர்காவிற்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைத்தது.

இப்படி இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையே அர்ப்பணித்த துர்காவதி, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் நகரில் ஒரு சாதாரணப் பிரஜை போல இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தார். லக்னோவில் உள்ள புரானா கிலா என்கிற பகுதியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்காக பள்ளி ஒன்றையும் நடத்தினார். இவர் நடத்திவந்த பள்ளி தற்போது `சிட்டி மான்டிசோரி ஸ்கூல்’ (City Montessori School) என்று அழைக்கப்படுகிறது. இவைதவிர தன்னிடமிருந்த நிலத்தையும் சமூகப் பணிகளுக்காகத் தானமளித்துவிட்ட இவர் 1999-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி தனது 92-ம் வயதில் மறைந்தார்.

Indian Flag
 
Indian Flag Image by Pexels from Pixabay

ஆனால் தேச விடுதலைக்காக தனது ஒட்டுமொத்த வாழ்வையே அர்ப்பணித்த இவரது மறைவு குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளிலோ, அல்லது மற்ற செய்தி ஊடகங்களிலோ தனிச்சிறப்புடன் இடம்பெறவில்லை. இவை குறித்து விரிவாகப் பேசப்படவுமில்லை. இவ்வளவு ஏன்? லக்னோ, மும்பை, காசியாபாத் போன்ற நகரங்களில் இவரது நினைவைப் போற்றும் எந்த ஒரு செயலும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதுதான் வேதனையான விஷயமே.

சமையலறை மட்டுமே உலகமாக, கணவனுக்குப் பின்னால் செல்வதை மட்டுமே பாக்கியமாகக் கருதி இந்தியப் பெண்கள் வாழ்ந்த அந்தக் காலகட்டத்தில் கணவரின் சகாவாகப் பயணப்பட்டு, தனது துணிச்சலான, புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் ஆங்கிலேயரை நிலைகுலையவைத்த துர்காவதியின் உத்வேகமூட்டும் வரலாற்றை, இந்தியர்கள் ஒவ்வொருவரும் அறியவேண்டியது அவசியம். இதன் முதற்கட்டமாக இவரது வாழ்க்கையைத் திரைப்படமாக ஆவணப்படுத்தினால் அது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் சென்று சேரும் என்கின்றனர் வரலாற்று அறிஞர்கள்.

எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா?

 • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்கினால் மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப  முடிவதுடன் அரசாங்கம்  எதிர்பார்க்கும் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என தமிழ தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் உண்மைகளை மறைக்கும் வரை,அதிலிருந்து தப்பலாம் என்ற எண்ணத்துடன் செயற்படும்  வரை நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாது. நாடு முழுவதிலும் அனைவருக்கும் பாதுகாப்பு என்ற நிலை இல்லாவிட்டால் அரசாங்கம் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. மக்களைப் பிரித்து இனவாதம் மூலம் வாக்குகளுக்காக செயற்படும் நிலை மாற வேண்டும். அரசாங்கம் தெரிவிக்கும் பொய் தொடர்பில் தற்போது சிங்கள மக்கள் கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் அதிகாரப் பகிர்வு என்றால் என்ன எனத் தெரியாத ஒருவரே தற்போது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றார். அமைச்சர் சரத் வீரசேகரவின் நடவடிக்கைகள் குறித்து வெட்கப்படுகின்றோம். அரசாங்கம் கடந்த எழுபத்தி நான்கு வருடங்கள் பயணித்த பாதையிலிருந்து மாற வேண்டும். அதே பாதையில் தொடர்ந்து பயணித்து பன்மை வாதத்தை உணராத வகையில் நாட்டை உருவாக்க முடியாது . இனப்படுகொலை என்பது வெறுமனே மக்களை கொலை செய்வது மாத்திரமல்ல. 4 இலட்சம் மக்கள் நிர்க்கதியாகி இருந்த நிலையில், 70 ஆயிரம் பேருக்கே  உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்பினீர்கள். யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் 2009 மே 16ஆம் திகதி யுத்த நிறுத்தம் மேற்கொள்ள நானே அன்று மத்தியஸ்தராக இருந்து செயற்பட்டேன். யுத்தத்தை நிறுத்த பசில் ராஜபக்ஷ்விடன் நான் கதைத்தேன். ஆனால் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானிப்பதாக தெரிவித்தார். ஆனால் ஒன்றும் இடம்பெறவில்லை. விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்தத்தை அறிவித்து ஆயுதங்களை கீழே வைத்த பின்னரும் இராணுவத்தினர் தாக்குல் மேற்கொண்டனர். அத்துடன் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்த நிலையிலும் நாடு இன்னும் கட்டி எழுப்பப்படவில்லை. பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 12 வருடங்களில் அரசாங்கம் பெற்றுக் கொண்ட பயன் இதுதான்.  எனவே நாம் சர்வதேச விசாரணை பற்றி பேசினால் அரசாங்கம் ஏன் பயப்பட வேண்டும் என கேட்கின்றேன். தமிழ் மக்கள் எதிரிகள் அல்ல. அவர்களது உரிமைகளையே அவர்கள் கேட்கின்றனர். அவர்கள் அதற்கான அருகதை உடையவர்கள். அதை அரசாங்கம் புரிந்து செயல்படாவிட்டால் ஒருபோதும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றார்.   https://www.virakesari.lk/article/118415
  • இந்த பக்கத்தில் இப்படி அறிவிக்கிறார்கள் அடுத்த பக்கம் அதே கட்சியினர்  உலகின் தொன்மை மிக்க தூங்கா  நகர் மதுரையில்  அவமானகரமான பெண்களுக்கு மட்டும் மதுபான விடுதி திறக்கின்றார்கள் இதுவரை தமிழ்நாட்டு குடிமகன்கள் மது மயக்கம் இனி தமிழ் பெண்களும் வெறியில்  . இந்த மதுக்கடைகளுக்கு சப்பிளை செய்யப்படும் 95 வீத மதுப்போத்தல்கள் அதே கட்சியினரின் ஆலைகளில் தயாரிக்கப்பட்டவை என்பது உங்களுக்கு தெரியாதா ?
  • போகன்வீல் நாட்டு அதிபர் பங்கெடுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் போகன்வில் தேசத்தின் முன்னாள் அதிபர் Hon James Tanis அவர்கள், சிறப்பு அதிதியாக பங்கெடுக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசத்தின் நெருக்கடியும் நாட்டின் மலர்ச்சியும் ( Nation under Threat – State in the Making ) என்பதனை மையப்பொருளாக கொண்டு இடம்பெறுகின்ற அரசவை அமர்வானது, எதிர்வரும் ( 4/5 Dec 2021) சனி, ஞாயிறு ஆகிய இருநாட்களுக்கு இணைவழியே இடம்பெற இருக்கின்றது. சர்வதேச வள அறிஞர்கள் பலரும் பங்கெடுக்க இருக்கின்றனர். பசுபிக் பெருங்கடல் தீவில் சுதந்திர தனிநாட்டு அரசியல் இறைமைக்காக நீண்டகாலமாக போராடி, 2019ம் ஆண்டு முதல் கட்ட பொதுவாக்கெடுப்பொன்றின் மூலம் நியூ பப்புவாக்கினாயாவில் இருந்து பிரிந்து சுதந்திர நாடாவதற்கு தமது அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்திய தேசமாக ‘போகன்வீல்’ இருக்கின்றது. சர்வதேச ஒப்பந்தத்துக்கு அமைய விரைவில் முறையான இரண்டாம் கட்ட பொதுவாக்கெடுப்பினை போகன்வீல் தேசம் எதிர்கொண்டுள்ள நிலையில், அப்பொதுவாக்கெடுப்பினை முன்னெடுப்பவர்களில் ஒருவராக இருக்கும் Hon James Tanis , போகன்வீல் தேசத்தின் அதிபராக பொறுப்பினை வகித்தவர். நியூ பப்புவாகினியாவிடம் இருந்து 2023ம் ஆண்டு நிர்வாக மாற்றம் படிபடிமுறையாக நடைபெற்று, 2027ம் ஆண்டு சுதந்திரமும் இறைமையும் கொண்ட புதியதொரு நாடாக போகன்வீல் இப்பூமிப்பந்தில் அமைய இருக்கின்றது. சுதந்திர நாட்டுக்கான வராற்று தடத்தினை கொண்டு ஒரு தேசத்தின முன்னாள் அதிபர் ஒருவர், சுதந்திரத்துக்கான போராடி வருகின்ற ஈழத்தமிழ் மக்களின் ஜனநாய போராட்ட வடிவதாக திகளுகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் பங்கெடுத்துக் கொள்வது முக்கியமானதொரு நிகழ்வாக அமைந்துள்ளது. தேசிய இனமுரண்பாடுகளும், பொதுவாக்கெடுப்பும் என்ற தொனிப்பொருளில் சிறப்புரையினை வழங்க இருக்கின்ற முன்னாள் அதிபர் அவர்கள், பொதுவாக்கெடுப்பு நோக்கிய செயல்வழிப்பாதையின் தமது அனுபவங்களை, ஈழத்தமிழர்களது பொதுவாக்கெடுப்பு நோக்கிய செயல்வழிப்பாதைக்கு பகிர்ந்து கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது. பேராசிரியர் Prof. Matt Qvortrup, அவர்கள் ஒரு நாட்டை எவ்வாறு உருவாக்குவது ( How to create a state ) தொடர்பிலான தமது புத்தக எழுத்தாக்கத்தினை அடிப்படையாக வைத்து கருத்துரை வழங்க இருக்கின்றார். தமிழ்நாட்டில் இருந்து பேராசிரியர் இராமு மணிவண்ணன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆகியோர் இக்கருத்துரையினை மையப்படுத்தி ஈழத்தமிழர்களின் சுதந்திர நாட்டுக்கான செயல்வழிப்பாதைகள் குறித்த கருத்துக்களை பகிரவுள்ளனர். கனடா ஒன்ராறியோ மாகாண உறுப்பினர் Aris Babikian, MPP, அவர்கள் ‘தமிழ் மக்களின் ,னப்படுகொலைக்கு அங்கீகாரம் பெறும் வழிமுறைகள்’ ( Ways and Means of getting recognition for Tamil Genocide ) தொடர்பில் கருத்துரையினை வழங்க இருக்கின்றார். கனேடிய நடாளுமன்ற உறுப்பினர் Heather McPherson, MP அவர்கள் ‘தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதில் கனடாவின் பங்கு’ தொடர்பில் ( anada’s role in securing Justice for Tamils ) கருத்தரையினை வழங்க இருக்கின்றார். அமெரிக்காவில் இருந்து Steven Schneebaum அவர்கள் ‘அமெரிக்காவில் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான சட்டப்போராட்டம்’ ( Legal Battle against ban on LTTE in US ) தொடர்பில் கருத்துரையினை வழங்க இருக்கின்றார். இதேவேளை Anuradha Mittal அவர்கள் ‘நில அபகரிப்புக்கள் ‘ தொடர்பில் கருத்துரையினை வழங்க இருக்கின்றார். சனிக்கிழமை (4-12-2021) அமெரிக்கா நியு யோர்க் நேரம் 9 மணி முதல் இந்நிகழ்வுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி வழியே இதனை நேரலையாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/153960  
  • லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு அனுமதி! லிபிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியின் மகன் சயீஃப் அல்-இஸ்லாமுக்கு தேர்தல் ஆணையம் விதித்திருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தடையை எதிர்த்து, நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சையிப்பை தகுதி நீக்கம் செய்யும் தேர்தல் ஆணையத்தின் முடிவை இரத்து செய்து, அவர் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கி தீர்ப்பளித்தது. இதனால் கடாபியின் மகன் சையிப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. கடாஃபியின் ஆட்சிக் காலத்தின்போது அரசுக்கு எதிராக கடந்த 2011ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்முறையை ஏவிவிட்ட குற்றத்துக்காக திரிபோலி நீதிமன்றம் சயீஃபுக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மேலும், அவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளது. இந்தச் சூழலில், அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. லிபியாவில் ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் 24ஆம் திகதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஜனவரி 24ஆம் திகதியும் நடைபெற உள்ளது. அங்கு தற்போது முகமது அல் மெனிபி என்பவர் ஜனாதிபதியாக உள்ளார். லிபியாவின் ஜனாதிபதியாக 1969ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை பதவி வகித்தவர் முஅம்மர் அல் கடாபி. 40 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கடாஃபியின் ஆட்சி, கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி முடிவுக்கு வந்தது. அவர் கிளர்ச்சிப்படையினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு, உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து கிளர்ச்சியாளர்களால் சயீஃப் அல்-இஸ்லாம் கைது செய்யப்பட்டார். பின்னர் தொடங்கிய உள்நாட்டுப் போரில் கடாஃபி கொல்லப்பட்டார். சயீஃபை கைது செய்து வைத்திருந்த அபுபக்கர் அல்-சித்திக் என்ற அமைப்பினர் அவரை 2017ஆம் ஆண்டு விடுவித்தனர்.   https://athavannews.com/2021/1254206
  • உங்களின் சிந்தனைகளை  மாற்றுவது நல்லது ஐந்தாம் வகுப்பென்ன அந்த அந்த மாநிலங்களில் அவர்களின் மொழி கட்டாயமாக படிப்பிப்பது அவர்களின் அடிப்படை உரிமை இந்த உண்மை கூட விளங்காமல் அல்லது உங்கள் பார்வையில் மற்ற மொழிக்காரர்கள் மேன்மையானவர்கள் எண்ணம் சிறுவயதிலே பதிந்து இருக்கனும் ஆனபடியால்தான் ஒன்றில் இருந்து ஐந்து மட்டும் தமிழ் கட்டாய பாடமாகினது பெரிதாக தெரிகின்றது . கீழே தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மலையாளம்  Malayalam made compulsory in Kerala schools from classes 1 to 10...... https://english.mathrubhumi.com/news/kerala/malayalam-made-compulsory-in-kerala-schools-from-classes-1-to-10-malayalam-language-learning-1.2797814   அடுத்து தெலுங்கு  AP Makes Telugu Compulsory in Schools: Details Inside https://english.sakshi.com/news/andhrapradesh/ap-makes-telugu-compulsory-schools-details-inside-140546 ஹிந்தி இங்கு ஹிந்தி இல்லாவிட்டால் பட்ட படிப்பு கிடையாது எனும் நிபந்தனையை போட்டு ஹிந்தியை கட்டாயம் ஆக்கியுள்ளார்கள்  https://www.hindustantimes.com/delhi/du-circular-makes-hindi-test-compulsory-for-graduation-degrees/story-6wRYoEUzaVXnXJa6eRqdKI.html#:~:text=Students of Delhi University (DU,a circular said on Thursday.&text=Hindi was not compulsory in,CBCS)%2C implemented last year. என்னசெய்வது கொடிபிடிக்காதே போராடாதே அவர்கள் தருவதை அமைதியாக இருந்து வாங்கிக்கொள்ளுங்கள் நூற்றாண்டு அடிமைகளுக்கு போதிக்கப்பட்ட இலவச விடயம் இலகுவில் மாறாது .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.