Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

ஆப்கானிஸ்தான் அகதிகளை, வரவேற்க தயாராகும் பிரித்தானியா!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தான் அகதிகளை வரவேற்க தயாராகும் பிரித்தானியா!

ஆப்கானிஸ்தான் அகதிகளை, வரவேற்க தயாராகும் பிரித்தானியா!

ஆப்கானிஸ்தான் அகதிகளை வரவேற்க பிரித்தானியா தயாராகி வருவதாக வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மீள்குடியேற்றத் திட்டம், பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மிகவும் தேவைப்படும் மக்கள் பிரித்தானியா வருவதை நோக்கமாகக் கொண்டது.

இதுகுறித்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கான சிறந்த ஏற்பாட்டை பிரித்தானியா கவனித்து வருகின்றது. முழு விபரங்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.

எத்தனை அகதிகள் வர முடியும் என்பதை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், பிரித்தானியா ஒரு பெரிய மனம் கொண்ட நாடு.

பிரித்தானியா எப்போதும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடுபவர்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக இருந்த நாடு. புகலிடம் மிகவும் முக்கியமானது’ என கூறினார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் தலைநகர் காபூலின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பிறகு இந்த செய்தி வெளிவந்துள்ளது.

https://athavannews.com/2021/1234812

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நன்றாக சொந்த செலவில் சூனியம் வைக்கினம் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நன்றாக சொந்த செலவில் சூனியம் வைக்கினம் 

அரசியல்வாதிகள் தாம் பைடனுடன் சேர்ந்து விசயத்தை சொதப்பியதை மறைக்க இந்த நாடகம்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

83 ஆண்டு இனகலவரம் நடக்கும் பொழுது  கொழும்பிலிருந்து சனம் யாழ்ப்பாணத்துக்கு வர....யாழ்ப்பாணத்திலிருந்து சில சனம் கொழும்புக்கு வந்து கனடா போனவையள் தமிழனின்ட தில் .....தில்லோ.. தில்....
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

83 ஆண்டு இனகலவரம் நடக்கும் பொழுது  கொழும்பிலிருந்து சனம் யாழ்ப்பாணத்துக்கு வர....யாழ்ப்பாணத்திலிருந்து சில சனம் கொழும்புக்கு வந்து கனடா போனவையள் தமிழனின்ட தில் .....தில்லோ.. தில்....
 
அப்ப அவுஸ்ரேலியாவுக்கும் போனவையள் எண்டு கேள்விப்பட்டனான் 😀

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முதல் வெடி சத்தத்திற்கு ஒப‌ன் விசாவில் வந்த தமிழர்களும் உண்டு

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அரசியல்வாதிகள் தாம் பைடனுடன் சேர்ந்து விசயத்தை சொதப்பியதை மறைக்க இந்த நாடகம்.

ஆப்கானிஸ்தான் படைவிலகல் விசயம்  டொனால்ட் ரம்ப் காலத்திலையே தொடக்கியாச்சு எல்லோ?
அதோடை ஜேர்மனியிலை இருக்கிற படையையும் தூக்கப்போறம் எண்டு வெருட்டினவர். இப்ப அதை கை விட்டாச்சாம்.....அமெரிக்கப்படைகள் போகப் போகுது எண்டவுடனை ஜேர்மனியும் கொஞ்சம் பயப்பிட்டது 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

🤣 ஆர் கண்டது வெளிகிட்ட கையோட AfD காரர் Bundestag க்குக பூரவும் கூடும்🤣.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

10 hours ago, தமிழ் சிறி said:

ஆப்கானிஸ்தான் அகதிகளை, வரவேற்க தயாராகும் பிரித்தானியா!

பிரித்தானியா போன்று கனடா பிரதமரும்கூட 20000 ஆப்கான் அகதிகளுக்கு புகலிடம் வழங்க இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

ஒருவகையில் தலிவான்களின் எதிர்கால உலகமயத்தாக்குதல்களுக்கு இவைகூட உறுதுணையாக அமையலாம்.வேலி ஓணான் வேட்டிக்கு உள்ளே.

 • Sad 1
Link to comment
Share on other sites

பிரான்சும் தன் பங்குக்கு அகதிகளை உள்வாங்கப் போகிறது.

இந்த நாடுகள் அகதிகளை உள்வாங்குவது ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களுக்குள் ஒருநாள் தாம் தலையிடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் என்பதாலாக இருக்கலாம். ஐநாவில் தீர்மானங்கள், பொருளாதாரத்தடை, மனித உரிமை அழுத்தங்கள், இராணுவ நடவடிக்கை போன்றவற்றைப் பிரயோகிப்பதற்கான உரிமையை இவ்வாறான அகதிகள் வருகை உருவாக்கிக் கொடுக்கும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாம் மத்த்துக்குமான புனித போர் இன்னும் ஒரு ஐம்பது வருடத்தில் எதிர்பார்க்கலாம் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

20 ஆயிரத்தை உத்தியோகபூர்வமா எடுப்பினம்.. எனி பிரான்ஸ் கடலால கடத்தி விடுறது.. காரில வாறது.. கென்ரயினரில வாறது.. எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சுப் பார்த்தால்.. ஆப்கானிஸ்தானும்.. சிரியா லெவலுக்கு காய வாய்ப்புள்ளது. சிரியாவுக்கு மில்லியன் கணக்கில் திறந்துவிட்ட ஜேர்மனி.. ஆப்கானிஸ்தான் விசயத்தில் அடக்கி வாசிக்கிறது. காரணம்.. ஏலவே அங்க மில்லியனுக்கு கிட்ட வந்திட்டுதுகள். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

ஆப்கானிஸ்தான் அகதிகளை வரவேற்க பிரித்தானியா தயாராகி வருவதாக வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார்.

அகதிகளை வரவேற்று பாதுகாக்கும் அதேவேளை, அகதியாக ஆக்குபவர்களுக்கு ஆயுதங்களும் வழங்கிப் பொருளையும் தேடும் பலே கில்லாடி அரசுகளில் பிரித்தானியாவும் ஒன்று.😲

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

🤣 ஆர் கண்டது வெளிகிட்ட கையோட AfD காரர் Bundestag க்குக பூரவும் கூடும்🤣.

இப்ப பெரிய லெக்சன் வருதெல்லோ.....அதுதான் ஆப்கானிஸ்தான் விசயத்திலை ஜேர்மனி  அடக்கி வாசிக்குது.சிரியாக்காரரை அள்ளி அள்ளி ஆப்கானிஸ்தான்காரரையும் எடுப்பினமாய் இருந்தால் வாற லெக்சனிலை Afd  பெரும்பான்மை ஆட்சி அமைக்கும் 😁

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, இணையவன் said:

பிரான்சும் தன் பங்குக்கு அகதிகளை உள்வாங்கப் போகிறது.

இந்த நாடுகள் அகதிகளை உள்வாங்குவது ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களுக்குள் ஒருநாள் தாம் தலையிடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் என்பதாலாக இருக்கலாம். ஐநாவில் தீர்மானங்கள், பொருளாதாரத்தடை, மனித உரிமை அழுத்தங்கள், இராணுவ நடவடிக்கை போன்றவற்றைப் பிரயோகிப்பதற்கான உரிமையை இவ்வாறான அகதிகள் வருகை உருவாக்கிக் கொடுக்கும்.

இப்ப எங்களை (புலம்பெயர்ந்த தமிழர்களை) வைத்து சிறிலங்காவுக்கு வெறுட்டுவது மாதிரியோ ஐ.நா சபை மனித உரிமை மீறல் ....ஆப்கான் டயஸ்பரா...வைத்து சீன் போடுவாங்கள் என்று சொல்லுறீயள்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 18/8/2021 at 13:07, colomban said:

முதல் வெடி சத்தத்திற்கு ஒப‌ன் விசாவில் வந்த தமிழர்களும் உண்டு

தேசபக்தி உள்ள தாங்கள் கட்டாரில் இருந்து ஊருக்கு சென்று காத்தான்குடியில் ஆப்கானிஸ்தான் அகதிகளை குடியேற்றலாமே? 😎

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தேசபக்தி உள்ள தாங்கள் கட்டாரில் இருந்து ஊருக்கு சென்று காத்தான்குடியில் ஆப்கானிஸ்தான் அகதிகளை குடியேற்றலாமே? 😎

 ஒரு சின்ன திருத்தம் காத்தான் குடியில் உள்ள ஆட் களை ஏன் ஆப்கானில் குடியேற்றவும்   செய்யலாம் தானே தலிபான் ஆட்சி நல்ல ஆட்சி , பெண்கள் அப்போதுதான் நாகரீகமாக திரிவார்களாம் , சமுதாயத்தில் சீர் கேடுகள் நடக்காதாம் என இங்கினைக்கு உருட்டுறானுகள் சாமி என்ன செய்ய லாம் ஆனா அங்க போங்கடா என்றால் போமாட்டானுகள் பிடறியில் அது அடிபட ஓடுவானுகள் 

On 18/8/2021 at 20:49, இணையவன் said:

பிரான்சும் தன் பங்குக்கு அகதிகளை உள்வாங்கப் போகிறது.

இந்த நாடுகள் அகதிகளை உள்வாங்குவது ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களுக்குள் ஒருநாள் தாம் தலையிடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் என்பதாலாக இருக்கலாம். ஐநாவில் தீர்மானங்கள், பொருளாதாரத்தடை, மனித உரிமை அழுத்தங்கள், இராணுவ நடவடிக்கை போன்றவற்றைப் பிரயோகிப்பதற்கான உரிமையை இவ்வாறான அகதிகள் வருகை உருவாக்கிக் கொடுக்கும்.

அப்படியானால் உலக நாடுகள் முழுவதும் நம்மவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களுக்கும் , பேரணிகளுக்கும் என்ன நடந்தது இணையவன் எல்லாம் வெற்றி ஒன்றே தீர்மானிக்கிறது அங்கரிப்பதா அல்லது அடி(ழி)த்து  ஒளிப்பதா என 

 • Like 3
 • Thanks 1
Link to comment
Share on other sites

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படியானால் உலக நாடுகள் முழுவதும் நம்மவர்கள் செய்த ஆர்ப்பாட்டங்களுக்கும் , பேரணிகளுக்கும் என்ன நடந்தது இணையவன் எல்லாம் வெற்றி ஒன்றே தீர்மானிக்கிறது அங்கரிப்பதா அல்லது அடி(ழி)த்து  ஒளிப்பதா என 

பேரணிகள் இலங்கை அரசின் செயற்பாடுகளை வெளிக்கொண்டு வர மட்டுமே உதவும். வேறு பயன் இல்லை.

அகதிகளை அனுப்பிய எல்லா நாடுகளின் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும் ? தமது அரசியல் பொருளாதார நோக்கங்களைக் கொண்ட நாடுகள் மீது மட்டும்தான் அகதிகளைக் காரணம் காட்டி அழுத்தம் கொடுக்கலாம். இலங்கையில் தற்போது தமிழர்களிடம் என்ன உள்ளது ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, இணையவன் said:

இலங்கையில் தமிழர்களிடம் இனி இழக்க ஒன்றும் இல்லை உயிரை தவிர 

இனி வரும் காலங்கள் எமக்கு மிகவும் சோதனையாக இருக்கப்ப்போகிறது காரணம் பொருட் கள் இல்லை , பொருட் கள் தட்டுப்பாடு , பணம் இல்லை , பொருட் கள் அதிக விலை இதை தமிழ்மக்கள் முதல் சிங்கள மக்களும் அனுபவிக்கப்போகிறார்கள் என தோன்றுகிறது .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 18/8/2021 at 17:19, இணையவன் said:

பிரான்சும் தன் பங்குக்கு அகதிகளை உள்வாங்கப் போகிறது.

இந்த நாடுகள் அகதிகளை உள்வாங்குவது ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்களுக்குள் ஒருநாள் தாம் தலையிடுவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் என்பதாலாக இருக்கலாம். ஐநாவில் தீர்மானங்கள், பொருளாதாரத்தடை, மனித உரிமை அழுத்தங்கள், இராணுவ நடவடிக்கை போன்றவற்றைப் பிரயோகிப்பதற்கான உரிமையை இவ்வாறான அகதிகள் வருகை உருவாக்கிக் கொடுக்கும்.

உண்மை. எதிர்காலத் தலையீட்டுக்கான நகர்வேயன்றி இது மக்கள் மீதான அக்கறையல்ல. 

Link to comment
Share on other sites

48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கையில் தமிழர்களிடம் இனி இழக்க ஒன்றும் இல்லை உயிரை தவிர 

இனி வரும் காலங்கள் எமக்கு மிகவும் சோதனையாக இருக்கப்ப்போகிறது காரணம் பொருட் கள் இல்லை , பொருட் கள் தட்டுப்பாடு , பணம் இல்லை , பொருட் கள் அதிக விலை இதை தமிழ்மக்கள் முதல் சிங்கள மக்களும் அனுபவிக்கப்போகிறார்கள் என தோன்றுகிறது .

புலம்பெயர்ந்த தமிழர்கள் பொருளாதார ரீதியாக வடகிழக்கை முன்னேற்றம் செய்வதன் மூலமும் பாதுகாப்பான முறையில் முதலீடுகளைச் செய்வதன் மூலமும் மீண்டும் தமிழர்களுக்கான சம பலத்தை மீண்டும் உருவாக்க முடியும். ஆனால் அதற்கான அரசியல் பலம் வடகிழக்கில் உருவாக வேண்டும். அதுவரை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த ஏதாவது செய்யலாம். 

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, இணையவன் said:

புலம்பெயர்ந்த தமிழர்கள் பொருளாதார ரீதியாக வடகிழக்கை முன்னேற்றம் செய்வதன் மூலமும் பாதுகாப்பான முறையில் முதலீடுகளைச் செய்வதன் மூலமும் மீண்டும் தமிழர்களுக்கான சம பலத்தை மீண்டும் உருவாக்க முடியும். ஆனால் அதற்கான அரசியல் பலம் வடகிழக்கில் உருவாக வேண்டும். அதுவரை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த ஏதாவது செய்யலாம். 

ம் சாத்தியம் தான் ஆனால் போர் முடிந்து 11 வருடங்கள் பேசி பேசியே நகர்கிறது இணையவன்  அரசு மிகப்பெரிய தடை  என உணர முடிகிறது இருந்தாலும் நமது மக்கள் போராடியே வாழ்கிறார்கள் இன்னும் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

மீள்குடியேற்றும் திட்டத்தில் எதிர்வரும் ஆண்டுகளில் 20,000 ஆப்கான் அகதிகளுக்கு வீடுகள்!

மீள்குடியேற்றும் திட்டத்தில்... எதிர்வரும் ஆண்டுகளில், 20,000 ஆப்கான் அகதிகளுக்கு வீடுகள்!

காபூலின் கட்டுப்பாட்டை தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் பிரித்தானியாவில் குடியமர்த்தப்படுவார்கள் என்று பிரித்தானியா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் குடிமக்களை மீள்குடியேற்றும் திட்டத்தில் எதிர்வரும் ஆண்டுகளில் 20,000 பேருக்கு வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

பெண்கள், சிறுமிகள், மத மற்றும் பிற சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உட்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

வேல்ஸ் உள்ளூர் அரசாங்க சங்கத்தின் தலைவர் ஆண்ட்ரூ மோர்கன், ‘வேல்ஸில் உள்ள உள்ளூர் சபைகள் தங்கள் பங்கை வகிக்க வேண்டும்’ என கூறினார்.

சமூக நீதி அமைச்சர் ஜேன் ஹட், ‘வேல்ஸ் அரசாங்கம் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிரித்தானிய அமைச்சர்களுடன் இணைந்து வீடுகளை வழங்குவதற்கு மிகவும் கடினமாக உழைக்கிறது’

ஆனால், ஏற்பாடுகளைச் செய்வதற்கு பிரித்தானியா அரசாங்கத்திடமிருந்து கூடுதல் நிதி தேவைப்படும்’ என கூறினார்.

https://athavannews.com/2021/1235371

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாருடைய வரிப்பணத்தில் அவர்களுக்கு வீடுகள் கொடுப்பார்கள் ?...வருபவர்கள் வேலைக்கு போவார்களா ?...நேர்மையாய் உழைப்பவர்களுக்கு ஒன்றும் மிஞ்சாது ...இப்படி வருபவர்கள் அதிஷ்டசாலிகள்😉 

 • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.