Jump to content

தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக... காபூலில், பெண்கள் போராட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக காபூலில் பெண்கள் போராட்டம்!

தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக... காபூலில், பெண்கள் போராட்டம்!

தலிபான்கள் ஆட்சிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்தனர்.

‘நாங்கள் எல்லாம் ஆப்கானிஸ்தானிய பெண்கள்’ என்று எழுதப்பட்ட பதாதைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியிருப்பதால், பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றும் அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

இதேவேளை, தலிபான்களிடம் சரணடையப் போவதில்லை என ஆப்கானிஸ்தானின் துணை ஜனாதிபதியாக இருந்த அம்ருல்லா சலேஹ் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1235073

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம் – மூவர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போராட்டம் – மூவர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் தலிபான்களுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைநகா் காபூலுக்கு 150 கி.மீ. தொலைவில் உள்ள ஜலாலாபாத் நகரை அண்மையில் கைப்பற்றிய தலிபான்களுக்கு எதிராக பொதுமக்கள் நேற்று (புதன்கிழமை) போராட்டம் நடத்தினா்.

அதன் ஒரு பகுதியாக, அந்த நகரின் முக்கியப் பகுதியான பாஷ்டுனிஸ்தான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டிருந்த தலிபான்களின் கொடியை அகற்றி, ஆப்கன் தேசியக் கொடியை போராட்டக்காரா்கள் ஏற்றினா்.

இதன்போது ஆா்ப்பாட்டக்காரா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 போ் உயிரிழந்ததாகவும் ஏராளமானவா்கள் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற போது அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தலிபான்கள் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் மக்கள் போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1235159

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மத ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும் என்று தலிபான்கள் சொல்லியுள்ளார்கள்.
முன்பு இந்து கிறிஸ்தவ மதசட்டபடியா பெண்களிடம் நடந்து கொண்டார்கள் ? ஷரியா சட்டத்திற்கு உட்பட்டு என்றால் பெண்கள் நிலை அவ்வளவு தான் 🥵

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

Bild

ஒரு பயலும் போமாட்டான்  போட்டு தள்ளிடுவானுகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு பயலும் போமாட்டான்  போட்டு தள்ளிடுவானுகள் 

இன்றிருக்கும் தலிபான்கள் 20 வருடங்களுக்கு முந்திய கடுமையான போக்காளர்கள் இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.எதிர்வு கூற முடியாமல் எங்கேயோ ஏதோ ஒரு சுட்சும நாடகம் ஆரம்பிக்கின்றது. போகப்போகத்தான் எல்லாம் தெரியும்.

Link to comment
Share on other sites

 

எங்கெல்லாம் ஷரியா சட்டம் கடைப்பிக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாக தான் நடத்தப்படுகின்றார்கள். இந்துக்களின் சனாதன தர்மமும் முஸ்லிங்களின் ஷரியாவும் கொழுக்கட்டையும் மோதகமும் மாதிரி தான்.

தாலிபான்களின் ஆட்சியின் கீழ் பெண்களின் பரிணாம வளர்ச்சி. 

May be an image of 7 people and headscarf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா மத அடிப்படைவாதிகளும் சந்திக்கும் ஒற்றை புள்ளி பெண்ணடிமைத்தனம்.

இன்றைக்கும் ஆப்கானிஸ்தான் கொடிகளை கொண்டு பெண்கள் இன்னும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

Bild

ஒரு மாதத்துக்கு... 20 லட்சம் ரூபாயா...
அப்பிடி எண்டால், போய் பிரச்சாரம் பண்ணி விட்டு, 
காசை... சுளையாக, வாங்கிக் கொண்டு... திரும்பி வரலாம் என யோசிக்கின்றேன். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஒரு மாதத்துக்கு... 20 லட்சம் ரூபாயா...
அப்பிடி எண்டால், போய் பிரச்சாரம் பண்ணி விட்டு, 
காசை... சுளையாக, வாங்கிக் கொண்டு... திரும்பி வரலாம் என யோசிக்கின்றேன். :grin:

காசு வரும் ஆள் வருவது சந்தேகமே எதுக்கும் ஒன்றுக்கு ஆயிரம் தடவை யோசியுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

காசு வரும் ஆள் வருவது சந்தேகமே எதுக்கும் ஒன்றுக்கு ஆயிரம் தடவை யோசியுங்கள்

பாடி கூட, கிடைக்காதா. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

பாடி கூட, கிடைக்காதா. 🤣

 வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

6 hours ago, தமிழ் சிறி said:

ஒரு மாதத்துக்கு... 20 லட்சம் ரூபாயா...
அப்பிடி எண்டால், போய் பிரச்சாரம் பண்ணி விட்டு, 
காசை... சுளையாக, வாங்கிக் கொண்டு... திரும்பி வரலாம் என யோசிக்கின்றேன். :grin:

May be an image of 4 people, beard, people sitting and text that says 'இயேசு வருகிறார்! ஆப்கானிஸ்தானுக்கு வரச் சொல்றா மாப்ள.'

என்ன ரெடியா

அந்தாள் இருக்கும் இடத்தில் உங்களை சாடையா நினச்சு பார்த்தன் சிறி அண்ணை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

Bild

 

இப்படியான மீம்ஸ்களை போட்டு ஏன் ஓர் குறித்த மத நம்பிக்கையுடைய மக்களை புண்படுத்த வேண்டும்?
அவர்கள் இறைவன் அவர்கள் நம்பிக்கை. இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு போய்வரும் முஸ்லீம்களிம் இப்படி அல்லாவை பற்றி அவதூறாக ஏதும் கூற முடியுமா? அல்லது நாளை போயா தினம் பிக்குகளிடம் இந்த கேள்வியை கேட்க முடியுமா? ஆகஸ்டில் திருவிழா நடக்கும் நல்லூர் கந்தனிடம் கேட்டால் ஆப்கானை காப்பானா?

எல்லாம் ஒரே குட்டையுல் ஊறிய மட்டைகள்

தவறான மத கலவரதத்தை தூண்டும் இந்த பதிவு தூக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

 வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

May be an image of 4 people, beard, people sitting and text that says 'இயேசு வருகிறார்! ஆப்கானிஸ்தானுக்கு வரச் சொல்றா மாப்ள.'

என்ன ரெடியா

அந்தாள் இருக்கும் இடத்தில் உங்களை சாடையா நினச்சு பார்த்தன் சிறி அண்ணை 

இயேசு திரும்பி வரேக்க தெரியும் எல்லாரிண்ட வண்டவாளங்களும் தண்டவாளம் ஏறும்! மோகன் அண்ணண கவனமா இருக்க சொல்லுங்க!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

 

இப்படியான மீம்ஸ்களை போட்டு ஏன் ஓர் குறித்த மத நம்பிக்கையுடைய மக்களை புண்படுத்த வேண்டும்?
அவர்கள் இறைவன் அவர்கள் நம்பிக்கை. இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாவிற்கு போய்வரும் முஸ்லீம்களிம் இப்படி அல்லாவை பற்றி அவதூறாக ஏதும் கூற முடியுமா? அல்லது நாளை போயா தினம் பிக்குகளிடம் இந்த கேள்வியை கேட்க முடியுமா? ஆகஸ்டில் திருவிழா நடக்கும் நல்லூர் கந்தனிடம் கேட்டால் ஆப்கானை காப்பானா?

எல்லாம் ஒரே குட்டையுல் ஊறிய மட்டைகள்

தவறான மத கலவரதத்தை தூண்டும் இந்த பதிவு தூக்கப்பட வேண்டும்.

இங்கே யாழ்களத்தில் மதங்களை இழிவுபடுத்தும் எழுத்துக்களும் கருத்துக்களும் பட இணைப்புகளும் வந்த போது என்ன கோமாவிலா இருந்தீர்கள்? 🤣

மத நம்பிக்கை உள்ளவர்கள் மூடர் கூட்டங்கள் என விளிக்கும் போது வராத கோள்வம் இப்போது ஏன் கலம்பர்? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இங்கே யாழ்களத்தில் மதங்களை இழிவுபடுத்தும் எழுத்துக்களும் கருத்துக்களும் பட இணைப்புகளும் வந்த போது என்ன கோமாவிலா இருந்தீர்கள்? 🤣

மத நம்பிக்கை உள்ளவர்கள் மூடர் கூட்டங்கள் என விளிக்கும் போது வராத கோள்வம் இப்போது ஏன் கலம்பர்? :grin:

குமாராசாமி அண்ணை… சிலவேளை அந்தப் பதிவுகளை, கொழும்பான் வாசிக்காமல் இருந்திருக்கலாம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி ஒரு 15 பக்கங்களை தாண்டி ஓடும் என நினைக்கிறன். 

Time to invest with your commemts (sense) 😑 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

குமாராசாமி அண்ணை… சிலவேளை அந்தப் பதிவுகளை, கொழும்பான் வாசிக்காமல் இருந்திருக்கலாம். 🤣

ஓம் சிறித்தம்பி. நானும் பிறகுதான் யோசிச்சு பாத்தன். அவர் வாசிக்காமல் இருந்திருக்கலாம்.
கொழும்பான் மனதை மதம் சம்பந்தமாக நோகடித்து விட்டேனா? 😷

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா ஒன்று யேசு வருகிறார் என சொன்னால் - தலிபான்கள் அவ்வளவு கோபம் எல்லாம் பட மாட்டார்கள்.

உங்களை ஒரு பக்கமாக கூட்டிப்போய், “தம்பி அவர் பெயர் யேசு அல்ல, அவர் பெயர் ஈசா நபி. அவர் மீண்டும் வரும் போது அவர் பெயர் இமாம் மஹ்தி”. என்று சொல்லுவார்கள்.

சின்னவயதில், அம்புலிமாமாவும் படிப்போம். பாலமித்திரா, ரத்னபாலாவும் படிப்போம். ஒரே கதை கொஞ்ச கொஞ்ச வித்தியாசமாய் 3 புத்தகத்திலும் வரும்.

ஆனால் யாவும் கற்பனை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

ஓம் சிறித்தம்பி. நானும் பிறகுதான் யோசிச்சு பாத்தன். அவர் வாசிக்காமல் இருந்திருக்கலாம்.
கொழும்பான் மனதை மதம் சம்பந்தமாக நோகடித்து விட்டேனா? 😷

குமாரசாமி அண்ணை... 
கொழும்பான்,  மத சம்பந்தமான விடயங்களில், மிக நாணயமான... நல்ல மனிதர். :)  😎
நீங்கள், தான்... அவரின் மனதை, மிகவும் புண் படுத்தி விட்டீர்கள். :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

ஆனா ஒன்று யேசு வருகிறார் என சொன்னால் - தலிபான்கள் அவ்வளவு கோபம் எல்லாம் பட மாட்டார்கள்.

உங்களை ஒரு பக்கமாக கூட்டிப்போய், “தம்பி அவர் பெயர் யேசு அல்ல, அவர் பெயர் ஈசா நபி. அவர் மீண்டும் வரும் போது அவர் பெயர் இமாம் மஹ்தி”. என்று சொல்லுவார்கள்.

சின்னவயதில், அம்புலிமாமாவும் படிப்போம். பாலமித்திரா, ரத்னபாலாவும் படிப்போம். ஒரே கதை கொஞ்ச கொஞ்ச வித்தியாசமாய் 3 புத்தகத்திலும் வரும்.

ஆனால் யாவும் கற்பனை🤣.

May be an image of 4 people, beard, people sitting and text that says 'இயேசு வருகிறார்! ஆப்கானிஸ்தானுக்கு வரச் சொல்றா மாப்ள.'

கோசான்....  
இயேசு வருகிறார்... என்ற குரலை கேட்டதுமே...
நம்ம பய புள்ளைங்க, அமெரிக்கனின்.. 
நவீன, புட்டுக் குழலை... தூக்கி வைத்திருக்கிறார்கள்,
அந்தப் படத்தில் உள்ள... கருணைப்  பார்வையை, பாருங்கள்.  💖 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 4 people, beard, people sitting and text that says 'இயேசு வருகிறார்! ஆப்கானிஸ்தானுக்கு வரச் சொல்றா மாப்ள.'

கோசான்....  
இயேசு வருகிறார்... என்ற குரலை கேட்டதுமே...
நம்ம பய புள்ளைங்க, அமெரிக்கனின்.. 
நவீன, புட்டுக் குழலை... தூக்கி வைத்திருக்கிறார்கள்,
அந்தப் படத்தில் உள்ள... கருணைப்  பார்வையை, பாருங்கள்.  💖 😍

தாடிக்குள் ஈரம் …

எ பிலிம் பை பாரதிராஜா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

தாடிக்குள் ஈரம் …

எ பிலிம் பை பாரதிராஜா🤣

ரசித்து... சிரித்த, பகிடி இது. :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தாடிக்குள் ஈரம் …

எ பிலிம் பை பாரதிராஜா🤣

நல்ல ரைமிங்கான பகிடி .......கோஷான் .......!   👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.