Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

பனம்பழஞ் சூப்பி - ஜூட் பிரகாஷ்

Recommended Posts

பனம்பழஞ் சூப்பி
 
யாழ்ப்பாணத்திலிருந்து தம்பி செந்தூரன் தபாலில் அனுப்பிய பொதி நேற்று பத்திரமாக மெல்பேர்ண் வந்தடைந்தது.
மறந்தும் மறவாத மண்ணின் வாசனையை தாங்கிவந்த அந்தப் பொதிக்குள், பருத்தித்துறை வடை, வல்வெட்டித்துறை வடகம், பருத்தித்துறை பப்படம், வல்வெட்டித்துறை எள்ளுப்பா, கன்னாதிட்டி மோர் மிளகாய், பனங் குட்டான் இவற்றோடு கற்பகம் நிறுவனம் தயாரிக்கும் பனம் சொக்கலேட்டும் (Palm Chocolate) இருந்தது. அடுத்த முறை பினாட்டும் புளுக்கொடியலும் அனுப்பச் சொல்லோணும்.
 
கிட்டத்தட்ட அந்தக் கால புளூட்டோ டொபியை ஞாபகப்படுத்திய பனம் சொக்கலேட்டை வாயில் போட்டு கடிக்கும் போது, ஏனோ சிறுவயதில் சூப்பிய சுட்ட பனம்பழத்தின் ஞாபகம் வந்து தொலைத்தது.
 
ஒவ்வொரு முறை யாழ்ப்பாணம் போகும் போதும், தவறவிடும் இரண்டு விடயங்களில் ஒன்று இந்த பனம் பழம் சூப்புவது, மற்றது பருத்தித்துறை ஓடக்கரை வீதியில் அப்பம் சாப்பிடுவதும் தான்.
 
யாழ்ப்பாணத்தில் பனம் பழஞ் சூப்பிய நாட்களை மீண்டும் இரை மீட்ட, இன்று மத்தியானம், யாழ்ப்பாணத்தில் இருக்கும் நண்பன் டாக்குத்தர் கோபிஷங்கருக்கு அழைப்பெடுத்தேன்.
 
“மச்சான்.. பிஸியா இருக்குறியா?”
 
“ஓமடா.. இன்றைக்கு theatre நாள்.. ஒரு ஒபரஷேனை முடிச்சிட்டு.. அடுத்ததுக்கு wait பண்ணுறன்.. சொல்லு”
“உனக்கு முந்தி பனம் பழம் சூப்பின ஞாபகம் இருக்கா?”
பேந்தென்ன…..
 
யாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களிற்கான ஓய்வறையில் இருந்து கொண்டு, அடுத்த அறுவை சிகிச்சைக்கு ஓட முதல், டாக்குத்தர் கோபி பனம்பழக் கதை சொல்லத் தொடங்க, அந்தக் காலத்தில் பனம் பழம் சூப்பிய நாட்கள் மனத்திரையில் மீண்டும் விரியத் தொடங்கியது.
 
“மரத்தால விழுந்த பனம் பழத்தை காலம்பறயே போய் பொறுக்கிடோணும், இல்லாட்டி பழத்துக்குள் கொசு, வண்டு பூந்திடும். பனம் பழங்களால தான் ஊரில கொசு சீஸன் களைகட்டுறது.
 
ராத்திரியே பனம் பழம் விழும் சத்தம் “பொதக்…பொதக்” என்று கேட்கும். அப்பவே எத்தனை பழங்கள் பனம் பத்தைக்குள் விழுந்திருக்கு என்று ஓரளவு கணக்கு போட்டிடலாம்.நல்ல காத்துக்கு பனங்கீற்று உராசும் சத்தம் பயங்கரமாத் தான் கேட்கும். தென்னங் கீற்று மாதிரி பனங்கீற்றில் தென்றல் வந்து மோதாது.
 
“தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும்.. என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும்” என்று பாட்டு எழுதேக்க பனங்கீ்ற்றை விட்டிட்டு தென்னங்கீற்று என்று எழுதினது அதால தான்.
 
பன மரத்தால விழும் போதே பனம் பழத்தை சுத்தியிருக்கிற அந்த கறுப்பு நார் பழத்தில் இருந்து வெடித்து சாதுவா கழறத் தொடங்கிடும்.
 
நார் வெடித்து சிதறிய பனம் பழத்தை அப்படியே கொண்டு போய், தணலில சுடப் போடோணும்.
தணலில சுட்டுச் சாப்பிடுறது யாழ்ப்பாண சமையலின் ஒரு தனித்துவமான முறைமை, அதை சுட்டுச் சாப்பிடுறது என்று சொல்லுறவ.
 
சுட்டுச் சாப்பிடுறதுக்கும் ஒரு முறை இருக்கு, கண்டபாட்டுக்கு கண்டதையும் சுடுறேல்ல. இராசவள்ளிக் கிழங்கை தணலுக்க உள்ளே போட்டுச் சுடுறது.
 
பனம் பழத்தை அப்படி சுடுறேல்ல. பனம் பழத்தை தணலுக்கு மேல போட்டு சுடோணும். ஒவ்வொரு பக்கமாக உருட்டி பிரட்டி தணலுக்கு மேல வைத்து தான் பனம் பழத்தைச் சுடுறது.
 
பனம் பழம் பின்னேர சூரியனின் நிறத்திற்கு வரும் வரை தணலில் சுடோணும். பனம் பழம் தங்கம் மாதிரி தகதகக்காது. கருக்கலில் மறையும் சூரியனின் நிறத்திற்கு வந்திட்டுது என்றால் சிங்கன் பதத்திற்கு வந்திட்டார் என்று அர்த்தம்.
பனம் பழத்தை தணலுக்கால எடுத்து, உச்சியில ஓங்கி ஒரு குத்து குத்தினா, சுத்தவர சூடா இருக்கிற நார், நைஸா கழறத் தொடங்குவார்.
 
நாரை கையால இழுத்தும் பல்லால பிய்த்தும் பிடுங்கி எடுத்தால், சுடச் சுட பனம் பழம் இரண்டு கைகளிலும் தவழும்.
சுட்ட பனம் பழத்தை ஒரு கையால பிடிக்க ஏலாது. அதை சூப்பச் சூப்ப நார் நாரா வரும். அதோட முகம் கை எண்டு எல்லா இடமும் பனம்பழச் சாறு பிரட்டிச் சாப்பிடுறது உண்மையான சம்பிரதாயம்.
 
பனங்கொட்டையைச் சுற்றி இருக்கிற பனஞ்சாறை அப்படியே சூப்பி உறிஞ்சத் தொடங்க, கையால பனஞ்சாறு வடியும்.
மாங்காய் சாறு மாதிரி கையெல்லாம் வழிஞ்சோடாமல், பனம் பழச்சாறு கைக்குள்ளேயே தேங்கி, சின்னி விரலால வடிஞ்சு முழங்கை வரை வடியும்.
 
முழங்கை வரை வடிஞ்ச பனஞ்சாறை நாக்கால அப்படியே வழித்துக் கொண்டு வந்து, திரும்ப பனம் பழத்தை அடைவதில் தான் பனம்பழஞ் சூப்பும் அனுபவம் முழுமையடையும்.
 
பனம் பழம் சூப்பின கையின்டை மணம் மூன்று நாலு நாளைக்கு நிக்கும் எண்டும் சொல்லிறவை.
 
பனம் பழத்தை எந்த மனுசராலும் முழுசாக உறிஞ்சி சாப்பிட ஏலாது. பனம் பழத்தை முழுசா உறிஞ்சி சாப்பிட மாடுகளால் மட்டுமே ஏலும்.
 
அதால தான் “மாடு சூப்பிய பனம்பழம்” என்ற சொல்லாடல் வழக்கில் வந்தது.”என்று கமுக்கமாக, ஆனால் நிறைவாக, கற்பனையில் மீண்டும் என்னை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு போய், பனம் பழஞ் சூப்ப வைத்து விட்டு, டாக்குத்தர் அடுத்த அறுவை சிகிச்சைக்கு பறந்தோடினார்.
 
ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்
 • Like 10
 • Thanks 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • Replies 66
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

 • கருத்துக்கள உறவுகள்

முகம் எல்லாம் பனம் பழம் அப்பி சாப்பிடுவது சின்ன வயதில் ஓகே ஆனால் இந்த ஏழு கழுதை வயசில் சரி வருமா யூட்🤣.

இதனால்தானோ என்னவோ முன்பும் பெரிய ஆக்கள் பனம் பழம் சாப்பிட்டு நான் காணவில்லை.

வளவை முழுக்க கூட்டி, குப்பைக்குள் பனம் பழத்தை போட்டு எரித்து, சுடுவதும் உண்டு.

பனங்காய் சூப்பி எண்டு மட்டகளப்பில் பகிடி பண்ணுவதும் உண்டு.

வல்வெட்டிதுறை எள்ளுபா பற்றி இன்னொரு திரியில் எழுதி இருந்தேன் 😋.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிழலி.

பனங்காய் பணியாரம் பினாட்டு இரண்டுமே கெடுவில் சாப்பிடுவேன்.

2017 இல் ஊர் போனபோது நல்லூரடியில் உள்ள கற்பகதருவில் பினாட்டுக்காக ஒவ்வொரு நாளும் கடை ஏறி இறங்கினேன்.

நாளைநாளை என்ற கடைக்காரன்  5-6 நாள் தொடர்ந்து போக கடைசியில் சாமான் இப்போதைக்கு வராது என்று கைவிரித்துவிட்டார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இணைப்புக்கு நன்றி நிழலி.

பனங்காய் பணியாரம் பினாட்டு இரண்டுமே கெடுவில் சாப்பிடுவேன்.

2017 இல் ஊர் போனபோது நல்லூரடியில் உள்ள கற்பகதருவில் பினாட்டுக்காக ஒவ்வொரு நாளும் கடை ஏறி இறங்கினேன்.

நாளைநாளை என்ற கடைக்காரன்  5-6 நாள் தொடர்ந்து போக கடைசியில் சாமான் இப்போதைக்கு வராது என்று கைவிரித்துவிட்டார்.

அண்ணை, 

சாவச்சேரி அல்லது சுன்னாகம் சந்தைகளில் இனி தேடிப்பாருங்கள். 

அல்லது கற்பகத்தின் மெயின் ஒபிஸ் மானிப்பாயில் உள்ளது. அங்கே போனால் புது ஸ்டொக் எடுக்கலாம். பனம் பியரும் உண்டு. 

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அண்ணை, 

சாவச்சேரி அல்லது சுன்னாகம் சந்தைகளில் இனி தேடிப்பாருங்கள். 

அல்லது கற்பகத்தின் மெயின் ஒபிஸ் மானிப்பாயில் உள்ளது. அங்கே போனால் புது ஸ்டொக் எடுக்கலாம். பனம் பியரும் உண்டு. 

தகவலுக்கு நன்றி கோசான்.

போத்தலில் வரும் பனம்கழி வாங்கி சுட்டுப் பார்த்தேன்.ஊரில் உள்ள சுவை இல்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி கோசான்.

போத்தலில் வரும் பனம்கழி வாங்கி சுட்டுப் பார்த்தேன்.ஊரில் உள்ள சுவை இல்லை.

பிரான்ஸ்,லண்டன்,கனடா கடையளிலை கட்டாயம் பனங்காய் இருக்குமெண்டு நினைக்கிறன். இந்த நாடுகளிலை இருக்கிற சகோதரங்கள் தகவல் சொன்னால் நல்லாயிருக்கும்....

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

முகம் எல்லாம் பனம் பழம் அப்பி சாப்பிடுவது சின்ன வயதில் ஓகே ஆனால் இந்த ஏழு கழுதை வயசில் சரி வருமா யூட்🤣.

நீங்கள் என் அப்பா பனம்பழம் சாப்பிடுவதைக் கண்டு இருக்க வேண்டும்... சின்ன பிள்ளைகள் தோற்றுவிடும் 

44 minutes ago, குமாரசாமி said:

பிரான்ஸ்,லண்டன்,கனடா கடையளிலை கட்டாயம் பனங்காய் இருக்குமெண்டு நினைக்கிறன். இந்த நாடுகளிலை இருக்கிற சகோதரங்கள் தகவல் சொன்னால் நல்லாயிருக்கும்....

கனடாவில் சில தமிழ் கடைகளில் அடிக்கடி கண்டுள்ளேன். முக்கியமாக நாவல் பழம் கூட விற்கும் எஸ்.பி.இம்போர்ட்டர்ஸ் எனும் கடையில்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

பனங்காய் சூப்பியதில்லை, பனங்காய் பணியாரம் தான் சாப்பிட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

முகம் எல்லாம் பனம் பழம் அப்பி சாப்பிடுவது சின்ன வயதில் ஓகே ஆனால் இந்த ஏழு கழுதை வயசில் சரி வருமா யூட்🤣.

இதனால்தானோ என்னவோ முன்பும் பெரிய ஆக்கள் பனம் பழம் சாப்பிட்டு நான் காணவில்லை.

வளவை முழுக்க கூட்டி, குப்பைக்குள் பனம் பழத்தை போட்டு எரித்து, சுடுவதும் உண்டு.

பனங்காய் சூப்பி எண்டு மட்டகளப்பில் பகிடி பண்ணுவதும் உண்டு.

வல்வெட்டிதுறை எள்ளுபா பற்றி இன்னொரு திரியில் எழுதி இருந்தேன் 😋.

முழுதும் பனங்கொட்டை சூப்பிகளா இருக்கு கிழக்கில் தணலில் வாட்டி வதைப்பது கிடையாது  பழம் விழுந்தால் ஆளாளுக்கு பிரிச்சு சூப்புவதுதான் நாரை உரித்த பிறகு அதெல்லாம் ஒரு காலம் 

பக்கத்து வளவில் சீனிப்பனை என்பார்கள் ஒரு பனை இனம் தோல் மஞ்சளா இருக்கும் கறுப்பு கிடையாது  இன்றும் 4 பனங்காய் விழுந்து கிடந்த்து பணியாரத்துக்கு சித்தியிடம் கொடுத்து விட்டேன். தற்போது பனை சீசன் நம்ம யூட் அண்ணையே யூட் பிரகாஷ் ( கற்பகதரு)

நாளை அந்த பனம்பழத்தின் படங்களை இணைக்கிறேன் .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பிரான்ஸ்,லண்டன்,கனடா கடையளிலை கட்டாயம் பனங்காய் இருக்குமெண்டு நினைக்கிறன். இந்த நாடுகளிலை இருக்கிற சகோதரங்கள் தகவல் சொன்னால் நல்லாயிருக்கும்....

எப்போதாவது இருந்துட்டு பனங்காய் கண்டுள்ளேன். ஆனால் பனாட்டு உள்ளிட்ட இதர சாமன்கள் எப்போதும் கிடைக்கும்.

@பெருமாள்சரிதானே?

22 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது பனை சீசன் நம்ம யூட் அண்ணையே யூட் பிரகாஷ் ( கற்பகதரு).

இல்லை வேற வேற ஆக்கள். ஒருவர் விஞ்ஞானத்துறை மற்றவர் கணக்கியல். வயதும் வித்தியாசம். வாழும் நாடுகளும்.

1 hour ago, நிழலி said:

நீங்கள் என் அப்பா பனம்பழம் சாப்பிடுவதைக் கண்டு இருக்க வேண்டும்... சின்ன பிள்ளைகள் தோற்றுவிடும் 

❤️

 • Like 1
Link to comment
Share on other sites

27 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம யூட் அண்ணையே யூட் பிரகாஷ் ( கற்பகதரு)

இல்லை.

முள்ளிவாய்க்கால் முடிவை எல்லாம் ரசிக்கின்றவன் இல்லை என் நண்பன் ஜூட் பிரகாஷ்

 • Like 4
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டுக்கு அண்மையில் அதிகமாக பன மரங்கள் இல்லை, இருந்ததே ஒரு பத்து பதினைஞ்சு மரம் இருக்கும்.அதிகாலையில் பனம் தின்னும்  பழ ஆசையில் அதை  பொறுக்க வீட்டில் உள்ளவர்களுடன் ரோச் அடிக்கும் டிப்பார்மெண்டை பொறுப்பெடுத்து  கொண்டு அவர்களுடன் கூட போன நினைவுண்டு.

சிலர் பழபுளி தண்ணியில் பனம்பழத்தை முக்கி பினைஞ்சு சாப்பிட்டதா ஞாபகம். அதிகாலையில் பொறுக்க போகிறவர்களின் தலையில் பனங்காய் விழுந்த சம்பவங்களும் உண்டு, எங்கட அன்ரி ஒரு ஆளுக்கு விழுந்து கோமாவுக்கு போய் பிறகு மீண்டு வந்தவ ஆனால் பிறகு குரல் இயக்குனர் விசு ரேஞ்சுக்கு மாறிவிட்டது, இன்றுவரை அவவுக்கு அதே குரல்தான்.

நான் ஒருநாள் பெரிய ஆக்களோட பனங்காய் பொறுக்கபோய் ரோச் லைற் அடிச்சதில தங்க நிறத்தில தக தக எண்டு பாம்பு மினுங்கிச்சுது, அதுதான் கடைசி அந்தபக்கம் போனது, பனங்காயைவிட உயிர் முக்கியம்ல.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருக்கலில தலையில் முக்காடு போல கோணிச்சாக்கை போட்டுகொண்டு மழை பெஞ்சால் என்ன பனி பெஞ்சால் என்ன  ஆச்சியுடன் கையில் அரிக்கன் லாம்பும் தூக்கிக் கொண்டு எங்கட பனங்காணிகளுக்குள் போய் பனம்பழங்கள் காவோலைகள் குப்பைகள், சாணிகள்  எல்லாம் பொறுக்கி ......... ம்......எல்லா ஞாபகமும் வந்து தொலைக்குது.......!  😇

பகிர்வுக்கு நன்றி நிழலி .......!

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம யூட் அண்ணையே யூட் பிரகாஷ் ( கற்பகதரு)

இல்லை.

முள்ளிவாய்க்கால் முடிவை எல்லாம் ரசிக்கின்றவன் இல்லை என் நண்பன் ஜூட் பிரகாஷ்

நிழலி 
இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

எப்போதாவது இருந்துட்டு பனங்காய் கண்டுள்ளேன். ஆனால் பனாட்டு உள்ளிட்ட இதர சாமன்கள் எப்போதும் கிடைக்கும்.

ஒரு பனங்காய் பார்சல்லை  அமெரிக்காவுக்கு   அனுப்ப எவ்வளவு காசு வரும்? 🤣

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முழுதும் பனங்கொட்டை சூப்பிகளா இருக்கு

ஒரு கிராமம்.
அந்த கிராம வெளிப்புறம் ஒரே பனங்காடு.
அதில் அரைப்பங்கு என்னுடையது.
பனங்கொட்டை தொடக்கம் வடலி வளர்ந்து காவோலை விழும் வரைக்கும் ஆயிரம் கதைகள் இருக்கு ராசன்.

கற்பகதரு ஒரு சரித்திரம்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

பிரான்ஸ்,லண்டன்,கனடா கடையளிலை கட்டாயம் பனங்காய் இருக்குமெண்டு நினைக்கிறன். இந்த நாடுகளிலை இருக்கிற சகோதரங்கள் தகவல் சொன்னால் நல்லாயிருக்கும்....

யோவ் பெரிசு
ஜேர்மனியில் இல்லையோ?

செய்து பார்க்கலையோ?அல்லது சரிவரல்லையோ?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

சுட்ட பனம்பழத்தைப் பழப்புளித் தண்ணியில் தோய்த்துச் சூப்பிய அந்நாள் ஞாபகத்திற்கு, நிழலி அவர்களின் பதிவு என்னைக் கொண்டு சென்றதுமட்டும் அல்லாது, யாழ்கள உறவுகள் சிலருக்கு எங்கள் பனை ஒரு கற்பகதரு என்றும், அதன் மகத்துவம் தெரியாதிருப்பதும் தெரியவந்தது, கற்பகதரு பற்றிப் பாரிசில் இருந்து யோகன் என்பவர் அன்று தந்த ஆக்கத்தை இங்கு தருகிறேன்.   

ஈழத் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, இந்தப் பனை மரத்தை அதன் முழுப் பயன் கருதி “கற்பகதரு” என்பர். போர்ச்சூழலிலும், பல தழிழர்களின் வாழ்வாதாரமாகத் திகழும், பனையின் பயன் பற்றி எமது இளைய தலைமுறையில் அறியாதிருக்கும் சிலர் அறிய பகிர்வதே இப்பதிவின் நோக்கம்.

இளையோர் மாத்திரமன்றி நகர்ப்புற வாழ்வோடு தம்மை இணைத்துக்கொண்ட சில 50 க் கடந்தவர்கள் கூட அறியப் பல பனை பற்றிய தகவல்கள் உள்ளதாலும் பலவற்றை மறக்கக் கூடிய சூழ்நிலையில் வாழும் எல்லோருக்குமுரிய மீட்டலாக  இது அமைகிறது.

குருத்து:- பனை தறிக்கும் போதோ, ஓர் வடலியை வெட்டிப் பிளந்தோ மரத்தின் வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகள் குருத்து என்பர். இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும்.

கள் :- பூம்பாளையைச் சீவிக் கள் இறக்குவார்கள். முட்டிக்குள் சுண்ணாம்பிட்டு சேகரித்த   கள்ளைக் கருப்பணியென்பர், தென்னிந்தியாவில் பதநீர் என்பர். சூட்டு உடம்புக்காரர் பதநீரைக்   காலையில் அளவுடன் குடிப்பது நல்லதென்பர். சுண்ணாம்பு இடாதிருக்கும் கள்ளானது சிறிது நேரத்தில் நொதித்துப் போவதால் சற்றுப் புளிப்பு இருக்கும், இதைக் குடித்தால் வெறிக்கும். அளவுடன் குடித்தால் தீங்கற்ற பானம்.

கள் கள்

பனங்கட்டி:- இதைப் பனைவெல்லம், பனங்கருப்பட்டி எனவும் கூறுவர். கருப்பணியைப் பதமாக வற்றக் காச்சிப் பெறும் இனிப்புப் பொருள் இது. இதைச் சீனிக்குப் பதில் பாவிக்கும் பழக்கம் உண்டு. ஆயுள் வேத வைத்தியத்தில் தேனுடன் உட்கொள்ளும் மருந்துகளுக்கு தேன் கிடைக்காத போது இதைச் சேர்க்கும்படி வைத்தியர்கள் கூறுவார்கள். சலரோகமுள்ளவர்கள் கூட சிறிது பாவிக்கலாம். ஈழத்தில் பருத்தித்துறை இதன் தயாரிப்பிலும் செய்பாங்கிலும் பிரபலம். 

பனங்கட்டி
 
நுங்கு:- பனங்காயின் இளம் பருவத்தில் முற்றாத விதையை வெட்டி அதன் உட்பகுதியை உண்பர். மிக இனிமையான உணவு. 

நுங்கு
 
பனம்பழம்:- இதைச் சுட்டு, சற்றுப் புளிக்கரைசலில் தோய்த்துச் சாப்பிட்ட அருமையாக இருக்கும். பசியும் அடங்கும்.

பனம்பழம் பனம்பழம்
 
பனங்காய்ப் பணியாரம்:- பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமை மாவும் சேர்த்து கொதிக்கும் எண்ணெயில் பாக்களவு உருண்டைகளாக உருட்டிப் போட்டுப் பொரித்தெடுப்பது. மிக்க வாசமாகவும் சுவையாகவும் இருக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்தவிதமான விசேட பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.
பனங்காய்ப் பணியாரம்
 
பனாட்டு:- பனம்பழக்களியை பாயில் ஊற்றி வெய்யிலில் காயவைத்துத் தட்டுத்தட்டாக வெட்டி மடித்து, ஓலை உமலில் கட்டி அடுப்படிப் பறனில் புகைபடக் கூடியதாகக் கட்டி வருடக்கணக்கில் வைத்து உண்ணக்கூடிய பனம் பண்டம். தேங்காய்ச் சொட்டுடன் உண்பதற்கு மிக அருமையாக இருக்கும். அதிகமாக இதனைக் காலை, மாலை உணவுடன் உண்பார்கள்.
பனாட்டு
 
சீக்காய்:- இது நொங்கு முற்றி வரும் செங்காய்ப்பதம். இதன் தோலைச் சீவி, மஞ்சள் சதைப் பகுதியை தட்டுத்தட்டாக அரிந்து சப்பிடலாம். அதனுள் இருக்கும் சாற்றை உறிஞ்ச அதன்சுவை  ஆகா சொல்ல வார்த்தைகள் இல்லை.
சீக்காய்
 
பூரான்:- பனம் விதையைக், கிழங்கிற்காகப் பாத்தி போட்டு அவை முளைத்துவரும் நேரத்தில்  அதன் பூரான் மாத்திரம் முதிர்ந்துவிடும். அந்த விதையைப் பிளந்து உள்ளிருக்கும் பூரானை உண்ண மிகுந்த சுவையாக இருக்கும். முளை முதிர்ந்துவிட்டால் உள்ளே பூரான் இறுக்கமாக இராது. இதைச் “சிதவல்” என்பர். நீர்த்தன்மையுடன் சுவை குன்றியிருக்கும்.
பூரான்
 
ஒடியல்:- “நாராய் நாராய் செங்கால் நாராய்-பனம்படு கிழங்கின் பிளந்தன்ன வாய்” என உவமை கொண்ட இக்கிழங்கை இரண்டாகப் கிழித்துக் காயவைத்துப் பெறுவதைப் ஒடியல் என்பர். அவித்துக் காயவைத்தால் புளுக்கொடியல் என்பர் அதனை அப்படியே முறித்து உண்ணலாம். ஒடியலை இடித்து அரித்து எடுக்கும் மாவுடன் முருங்கையிலை சேர்த்துப் பிட்டு அவிப்பர். கறியுடனோ, சீனி, சக்கரையுடனோ சாப்பிடலாம். அன்றைய தமிழரின் பாரம்பரிய உணவிது.
 
அடுத்து இம்மாவில் தயாரிக்கப்படும் முக்கிய உணவு கூழ். இதில் சைவக்கூழ், மச்சக்கூழ் எனக் காச்சுவார்கள். ஒடியல்மாவுடன் மிளகாய், உள்ளி, மிளகு, புளி, உப்பு கரைசல், உழுந்து, பயறு, மரவள்ளிக்கிழங்கு, பூசணிக்காய், ஈரப்பலாக்காய், பலாக்கொட்டை, அவரைக்காய், முல்லை, முசுட்டை,  முருங்கைக் கீரை சேர்த்துக் காச்சுவதுண்டு,  தேங்காய்ச் சொட்டும் சேர்த்தால் அருமையாக இருக்கும். இது ஒரு நிறையுணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கானது. இத்துடன் மீன், நண்டு, கணவாய், இறால், திருக்கை, மட்டிச்சதை சேர்த்துச் சமைப்பது மச்சக்கூழ். இது மச்சப் பிரியர்களுக்கு. முல்லைத்தீவு சார்ந்த இடங்களில் இத்துடன் மான், மரை வத்தல் இறைச்சியும் சிறிது சேர்ப்பர். இது தடிமனுக்கு நல்ல கைவைத்தியம். 
ஒடியல்
 
அவித்த கிழங்கு:- இதை மாலை நேரச்சிற்றுண்டியாக உண்பர். கிழங்குக்காலத்தில் இலங்கையில் சகல இனமக்கள் வீட்டிலும் உண்பர்.
அவித்த கிழங்கு
 
கிழங்குத் துவையல்:- அவித்த நன்கு தும்பு வார்ந்து எடுத்த கிழங்குத் துண்டுகளுடன் பச்சைமிளகாய், உள்ளி, மிளகு, உப்பு, வெங்காயம் சேர்த்திடித்து உருண்டையாக்கி உண்பர். செமிபாட்டை இலகுவாக்கி சிறுவர்கூடச் சாப்பிடக் கூடியது. மிக வாசமாகவும், சுவையானதும் கூட.
 
புழுக்கொடியல்:- அவித்த கிழங்கை நன்கு தும்புவார்ந்து இரண்டாகப் பிளந்து நன்கு வெயிலில்  காயவைப்பது. இதை நீளமாகவும், வட்டமாகவும் சீவிக் காயவிடுவதுமுண்டு. அதைச் சீவலொடியல் என்பர். மாலை நேரச்சாப்பாடு, தேங்காச்சொட்டுடன் பிரமாதமாகக் கூட்டுச் சேரும். பலவருடம் பாதுகாக்கக் கூடியது. இதனை இடித்துவரும் மாவுக்கு தேங்காய்த் துருவல், சீனி, சர்க்கரை, பனங்கட்டி சேர்த்து சிறுவர்களுக்கும் பல்லுச் சப்பமுடியாத முதியவர்களுக்கும் கொடுப்பர். அண்றைய நாட்களில் பற்கள் பலமாக வருவதற்கும் இதைக் கடித்துச் சாப்பிடுவார்கள்.

சுவடி:- ஆதிகாலத்தில், எழுது பொருளாகப் பனையோலைச் சுவடிகளே பயன்படுத்தப்பட்டது. இன்றும் பல சங்க இலக்கியங்கள் பலையோலைச்சுவடியாக பல நூலகங்களில் உண்டு. யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது தேடக்கிடைக்காத பல சுவடுகள் எரிந்தன. பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கு குற்றிடுவதில்லை. காரணம் ஓலையில் எழுத்தாணியால் குற்றிட்டால் கிழிந்துவிடுமென்பதால் குற்றுத் தவிர்க்கப்பட்டதென்பர்.
சுவடி சுவடி
 
கால்நடை உணவு:- புல் அருகியுள்ள காலங்களில் பச்சோலை வெட்டிக் கிழித்து மாமு ஆட்டிற்கு உணவாக போடுவர்.

கால்நடை உணவு

கூரை:- ஓட்டுப் பாவனை வருமுன் இல்லங்கள் பனையோலை, தென்னங்கிடுகு, வைக்கோல் என்பவற்றால் வேயப்பட்டது. வெப்பவலையமான எங்கள் பிரதேசங்களில் இக்கூரைகள் மிகுந்த சுவாத்தியமாக அமைந்த தென்பதை அவற்றில் வாழ்ந்து அனுபவித்தோர் இன்றும் கூறக்கேட்கலாம். பனையோலைக் கூரை அதில் தேர்ந்தோராலே நேர்த்தியாக வேயக்கூடியது.
கூரை
 
வேலியடைத்தல்:- அன்றைய கதியால் வேலிகளுக்கு முகமறைப்பாகவும், பாதுகாப்பாகவும், பனையோலையோ, தென்னங்கிடுகோ கொண்டு மறைத்தடைக்கும் வழக்கம் உண்டு. இவை செலவு குறைந்தது. கதியாலுக்குப் பதில் பனைமட்டையும் வேலியடைக்க உபயோகிப்பர்.

வேலியடைத்தல் வேலியடைத்தல்

பன்ன வேலை:- இது பனையோலை குறிப்பாகக் குருத்தோலை, நார், ஈர்க்கு, மட்டை என்பவற்றைக் கொண்டு வீட்டுக்குத் தேவையான பாவனைப் பொருட்களான பெட்டி, கடகம், சுளகு, பாய், நீற்றுப்பெட்டி, தடுக்கு, குட்டான், உமல், தொன்னை, வட்டில், விசிறி, தொப்பி, கிலிகிலுப்பை என்பவற்றை இழைப்பதாகும். ஈழத்தில் அன்றைய பெண்கள் பங்கேற்கும் முக்கிய குடிசைக் கைத்தொழில்.
பன்ன வேலை பன்ன வேலை
 
அடுக்குப் பெட்டி:- இன்றைய அடுக்கு அலுமினியம், எவர் சில்வர்ச் சட்டிகள் போல், அன்று அடுக்குப் பெட்டிகள் 1/2′ முதல் 1 1/2′ விட்டம் வரை சுமார் 1/2′ உயரத்தில் ஒன்றினுள் ஒன்று வைக்கக் கூடியதாக இழைக்கப்பட்டவை. ஒரு அடுக்கில் 5 முதல் 10 பெட்டிகள் இருக்கும்…பலவித தேவைகளுக்கும் அவற்றின் அளவுக்கேற்ப பயன்படுத்துவர். நல்ல இளங்குருத்தோலையில் இழைத்தவை அதிகம் நனையவிடாமலோ, அல்லது காயவிடாமலோ நிழலில் பாவித்தால் 15 வருடங்கள் கூடப் பழுதுபடாமல் இருப்பவையும் உண்டு.

அடுக்குப் பெட்டி

அஞ்சறைப் பெட்டி(ஐந்தறைப்பெட்டி):- சுமார் 8″- 10″ , நீள அகலமுள்ள சற்சதுரவடிவான பெட்டி, இருஅடுக்கு அமைப்பாக இருக்கும் முதல் அடுக்கு, பெட்டியின் 1/2 வாசி உயரத்துடன் 4 அறைகளாகப் பிரித்திருப்பார்கள். கீழ்த் தட்டுஅப்படியே இருக்கும் மேல்தட்டு தனியே எடுத்து கீழ்த்தட்டுள் உள்ளவற்றை எடுக்கலாம். அன்றைய நாட்களில் சந்தை வியாபாரிகள் சில்லறைக் காசுகள் வைக்க இதனைப் பாவித்தனர். சமையலறையிலும், பலசரக்குப் பெட்டியாகவும், ஆயுள் வேத வைத்தியர்கள் மருந்து காவும் பெட்டியாகவும், பாவித்தார்கள். இதை 9 அறையுடனும் இழைப்பர். இன்று காட்சிக்குக் கூட ஒன்று கிடைக்குமோ! தெரியவில்லை.

கொட்டைப்பெட்டி:-இதை வெற்றிலை பாக்கு, புகையிலை பாவிப்பவர்கள். அதைப் பத்திரமாக வைப்பதற்கு உபயோகிப்பர். இது ஒன்றினுள் ஒன்றை வைக்கக் கூடிய வகையில் 3 அல்லது 4 தட்டையான அமைப்புடைய வாய்திறந்த அமைப்பில், தனியான மூடியுடன் கூடியது. இடுப்பில் செருகக் கூடிய தட்டையாகவும், சிறிய அமைப்பிலும் நிறவோலைகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும்.
கொட்டைப்பெட்டி
 
மூடு பெட்டி:- சாதாரண பல அளவுப்பெட்டிகளுக்கு பொருத்தமான மூடியும் இழைத்து, மூடியில் பனையீர்க்கால் வசதியாகத் திறந்து மூடக் கைபிடியும் வைத்திருப்பார்கள்.

வட்டில்:-பழையகாலங்களில் பயணங்களுக்கு, வேலைக்குச் செல்வோர் சாப்பாடு எடுத்துச் செல்ல பாவித்த சிறிய பெட்டி. நல்ல இளங்குருத்தோலையில் மிக நெருக்கமாக இழைத்தது. இலகுவில் இறுக்கம் குறைந்த கறிகள் வெளியேறாது. கழுவிக் கழுவிப் பல காலம் பாவிப்பர்.

சுளகு:- பனையீர்க்காலும், மட்டையாலும் பின்னுவது. அரைச் செவ்வக வடிவில் புடைப்பதற்கும், வட்டவடிவில் உணவுப்பொருட்களைக் காயவைப்பதற்கும் பல அளவுகளில் முடைவார்கள்.
சுளகு
 
கடகம்:- பனையோலை நார் கொண்டிழைப்பது, சாதாரண பனையோலைப் பெட்டிக்கும் கடகத்துக்கும் உள்ள வித்தியாசம் கடகத்துக்கு வெளிப்பாகம் நாரால் இழைத்து வாய்ப்பகுதிக்கு பலத்திற்காக தடிப்பான நார் பொருத்தியிருப்பார்கள். பாவனையிலும் கடகத்தின் உபயோகத்துக்கு சாதாரண பெட்டியைப் பாவித்தால் பிய்ந்து விடும். உ+ம்- மண், கல் அள்ளுதல். சும்மாடு என்பது பாரமான பொருட்களைத் தலையில் காவும் போது அழுத்தாமல் மென்மையாக இருக்க பழைய துணி, சால்வை, முந்தானைச் சேலை போன்றவற்றால் உடன் செய்வது. அதாவது வட்டவடிவமாக ஒரு சாண் விட்ட அளவில் சுருட்டுவது. இதை துணிவகையிலேயே செய்வர். தலைக்கு மெத்தென இருப்பதே நோக்கமும் தேவையும். 

கடகம்
பட்டை:- இளங்குருத்தோலையில் செய்வர். இது தோட்டத்துப் பயிர்களுக்குத் தண்ணீர் தண்ணீர் ஊற்றவும். கிணற்றில் இருந்து நீர் அள்ளவும் பாவிப்பர். சுமார் 1 கலன் கொள்ளக் கூடியவையும் செய்வர்.
பட்டை
திருகணை:- கழிவு ஈர்க்கை ஒரு சாண் விட்டமுள்ள வட்டமாகச் சுற்றி, அதற்கு முறுக்கிய ஈர்க்கால், மேற்சுற்றுச் சுற்றுவர். பனை, சட்டி, குடம் உருளாமல் இருக்க உபயோகிப்பர்.
திருகணை
 
உறி:-திருகணைக்கு 3, 4 ஈர்க்கில் பின்னிய சுமார் 3′ நீளமான தொடுப்பு (கயிறு போல்) தொங்குப்படி அமைத்து சாப்பாட்டுப் பொருட்களை பூனை, நாயிடமிருந்து பாதுகாக்கப் பாவித்தார்கள். (வெண்ணெய் உண்ணும் கண்ணன் படத்தில் பார்த்திருப்பீர்கள்)
உறி
 
உமல்:-பலையோலையில் இழைப்பது. இன்றைய பசுமதி அரிசிப்பை போல் இருக்கும். அன்று பொருள் காவப் பாவித்தார்கள். 

பிளா:-உடன் தேவைக்குப் பச்சையோலையிலும் பல காலப் பாவனைக்கு குருத்தோலையிலும் அரை முட்டைவடிவில் அமைப்பது. கிராமக் கோவில்களில் சித்திரைக் கஞ்சிக்கும் வயல் வேலை செய்யும் போது சாப்பிடவும் பாவிப்பர். சுடு சாப்பாடு பச்சையோலையை வேகவைக்கும் போது வரும் வாசமே! அருமையாக இருக்கும். குருத்தோலைப் பிளா கள்ளுத் தவறணைகளில் வைத்திருப்பர்.
பிளா
 
தொன்னை:-பனையோலையில் உடன் பாவனைக்கு இழைக்கப்படும்;சிறு பெட்டிகள்; வழிபாடுகளுக்குப் பாவிப்பது. இந்தோனேசியா,தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகளிலும் வழிபாட்டில் இத் தொன்னைகள் முக்கிய இடம் வகுக்கின்றன.

பறி:-மீனவர்கள் பிடித்த மீனைக் கரைக்குக் கொண்டுவர பாவித்த ஒடுங்கிய வாயுடைய பைபோன்ற அமைப்புடையது.

நீற்றுப்பெட்டி:-பனையோலை,ஈர்க்குக் கொண்டிழைக்கப்படும் கூம்புவடிவுடையது;இதை உணவுப்பண்டங்களை அவிக்க, திரவப் பதார்த்தங்களை வடிக்க உபயோகிப்பர்.

நீற்றுப்பெட்டி

பாய்கள்:- படுக்க உபயோகிக்கும் 5’x7′ பாய்கள், சூடடிக்கப் பாவிக்கும், பந்தலுக்கு விரிக்கும் 20’x 25′ களப்பாய்கள், பந்திக்கு விரிக்கும் 2’x30′பந்திப்பாய், பிற்கூறிய இரண்டும் முற்றாகப் பாவனையற்று விட்டது. முற்றலோலையில் பனாட்டுப் போட பனாட்டுப் பாயுமுண்டு. ஒரு தடவையே பாவிப்பர்.

பாய்கள்

தடுக்கு:-பிறந்த குழந்தைகளைக் கிடத்தப் பாவிக்கும் 3’x3′; சிறு பாய், குறிப்பாக எண்ணெய் பூசிக் காலை இளஞ் சூரியக் குளியலுக்குப் பிள்ளையை இதில் கிடத்துவார்கள்.

தட்டி:-அன்றைய வீடுகளுக்கு, பாய், மட்டை, சலாகை கொண்டு செய்யப்படும் மறைப்பு.

குட்டான்:-பனையோலையில் இழைக்கப்படும். பொதியாக்கக் கொள்கலன். இதைப் பனங்கட்டிப் பொதியாக்கத்துக்குப் பயன்படுத்துவார்கள்.3″x6″ முதல் 1/2″x1″ அளவில் கூடச் செய்வார்கள்.

குட்டான்

நெட்டி:-அளவாக வெட்டிய பனையோலை; கரண்டிகள் போல் சுடு களி உண்ணப் பயன்படுத்துவர்.

விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை:- முழு வடலி ஓலையில் விசிறி செய்வார்கள். வார்ந்த ஓலையால் தொப்பி சிறுவர் விளையாடக் கிலுகிகுப்பை இழைப்பார்கள்.

தொப்பி விசிறி

விளக்குமாறு:- கழிவு ஈர்க்கினால் செய்யப்படும். அன்றைய சமையலறை இருந்து கூட்ட இச்சிறிய விளக்குமாறு மிக உதவியது.

விளக்குமாறு

வாழ்விடங்கள்:-வீடு, முதலான கட்டிடங்களின் கூரைகளின் மரப்பகுதிகளான வளை, தீராந்தி, பாவுமரம், சலாகை என யாவும் பனைமரத்தைத் தறித்து, அளவாக வெட்டிச் சீவி எடுப்பார்கள். 40′ நீளமானமரத்தில் சுமார் 25′ வைரமான பகுதியாக பாவுமரமாகவும் ஏனையபகுதில் சுமார் 10′ வைரம் குறைந்த பகுதி சலாகை யாக்கப்படும்.

துலா:- ஓர் முழுமரத்தின் வைரப்பகுதில், துலாச்செய்து அன்று, கிணற்றில் தண்ணீர் அள்ளினர். நீர் இறைப்பு இயந்திர வருகையின் பின் படிப்படியாக வழக்கொழிந்து போய்விட்டது.

துலா

இறங்கு துறைகள்:- குறிப்பாக தீவுப்பகுதிகளில் இறங்கு துறைகள் கல்லாலும் மண்ணாலும் அமைத்தபோதும், அதன் படகுகள் முட்டும் நுனிப்பகுதி பனைமரத்தாலானதாகவே காணக்கூடியதாக இருந்தது. காரணம் ஏனைய மரங்களிலும் பனைவைரம் உப்புநீரில் உழுத்துப்போகும் தன்மை மிகக் குறைந்தது. அதனால் நீண்ட காலம் பயனில் இருக்கக் கூடியது.

வண்டில் துலா:-வண்டிலின் அடிப்பாகத்திலமைந்துள்ள நீண்ட நுகத்தடி பொருத்தும் பகுதி. இதுவும் பனை வைரத்திலேயே அமைப்பார்கள் அதன் உறுதிக்காக.

தேர் சப்பறம்:- கோவில் கட்டுத் தேர், சப்பறத்தின் சகடைக்கு மேற்பகுதி அடிப் பனை வைரங்களாலே செய்யப்பட்டவை, பாவித்தபின் கழட்டி வைப்பர், அவற்ருக்கு வயதெல்லை இல்லை. நிழலில் இருப்பதால் பலகாலம் பாவனையில் இருக்கும். நெருப்புத் தவிர வேறு எதிரி இல்லாதது.

பிள்ளைத் தண்டு:- இதுவும் கோவில்களில் விக்கிரகங்களை விழாக்காலத்தில் திருவாசியுடன் கூடியருப்பில் வைத்து வாகனங்களுக்கோ தேருக்கொ சுமந்து வரும் சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள பனை வைரத்தில் உருளையாகச் சீவப்பட்டது. சுமார் 200கிலோ நிறை தாங்கக் கூடியது. எந்தக் கோவிலிலும் குறைந்தது ஒரு சோடியாவது இருக்கும்.

மரக்குத்திகள்:-அன்று பாரமான பொருட்களை இடம் பெயர்க்க உருளையாக பனைமரத் துண்டுகள் பாவிப்பர்.

மரவேலை:- குறிப்பாக ஆணிக்குப் பதிலாக பொருத்துக்களுக்குச் சீவிய பனைவைரம் பாவிக்கப்பட்டது.

கொட்டுப்பனை:- எங்கள் நாட்டுப் பச்சைக்கிளிகளும், மைனாக்களும் தம் பாதுகாப்பான வாழ்விடங்களாகத் தேர்வு செய்தது. இக் கொட்டுப்பனைகளே!!!(இறந்த பனைகள்)

விறகு:- பனையின் சகல பாகங்களும் விறகாகப் பாவிக்கப்படும். ஓலை, மட்டை, பன்னாடை, கொக்கரை, பாளை, மூரி, ஊமல், பழுதடைந்தமரம்  யாவும் எரிக்க உதவும். எரிபொருட் செலவைக் குறைத்தது.

பசளை:- பனையோலை முதல் அத்தனை பனைக்கழிவுகளும் உழுத்தால் நல்ல இயற்கைப் பசளையே! சுற்றுச் சூழலுக்கு எந்த மாசும் ஏற்படுத்தாதது. விவசாயத்தில் ஈழத்தில் பெரும் பங்கேற்றது. பனைக் கழிவுகள்.

 • Like 9
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

யோவ் பெரிசு
ஜேர்மனியில் இல்லையோ?

செய்து பார்க்கலையோ?அல்லது சரிவரல்லையோ?

ஜேர்மனியிலை  பனங்காய் இன்னும் என்ரை காந்தக்கண்ணுக்கு  சிக்கவேயில்லை....பனங்கிழங்கு விக்கிறாங்கள் நாய் பேய் விலை

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

நன்றி பாஞ்ச் ஐயா.

இந்த லிஸ்டில் இன்னொன்றையும் சேர்க்கலாம். 

யுத்த காலத்தில் மக்கள் தமது பதுங்கு குழிகளின் கூரையாகவும். போராளிகுழுக்கள், இராணுவம் தமது காவலரகளின் சுவராகவும் பனையை பாவித்தனர்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

நன்றி பாஞ்ச் ஐயா.

இந்த லிஸ்டில் இன்னொன்றையும் சேர்க்கலாம். 

யுத்த காலத்தில் மக்கள் தமது பதுங்கு குழிகளின் கூரையாகவும். போராளிகுழுக்கள், இராணுவம் தமது காவலரகளின் சுவராகவும் பனையை பாவித்தனர்.

அவசரத்துக்கு சுழல் கக்கூசாகவும் 😁

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இந்த லிஸ்டில் இன்னொன்றையும் சேர்க்கலாம். 

யுத்த காலத்தில் மக்கள் தமது பதுங்கு குழிகளின் கூரையாகவும். போராளிகுழுக்கள், இராணுவம் தமது காவலரகளின் சுவராகவும் பனையை பாவித்தனர்.

யோகன் அவர்களின் ஆக்கத்தைப் பிரதிபண்ணிப் பதியும்போது சில எழுத்துக்களை இயன்றளவு சரிசெய்யவும் முயன்றுள்ளேன். உங்கள் சிந்தனையில் உதித்தவையும் ஞாபகம் வந்தது. ஆனாலும் பனைகளைத் தறித்து அழிப்பதை ஊக்குவிக்கக்கூடாது என்ற எண்ணமும் ஏற்பட்டது. எங்கள் தமிழ்படை தறித்தது பாதிப்பைத் தரவில்லை, அவர்கள் தறித்த குற்றத்திற்கு ஈடாக ஈழத்தில் 5இலட்சம் பனை மரங்களை நாட்டும் முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் சிங்களப்படை ஒன்றைக்கூட நாட்ட முன்வந்ததாக அறிந்ததில்லை. 

4 hours ago, நந்தன் said:

அவசரத்துக்கு சுழல் கக்கூசாகவும் 😁

உண்மைதான்! ஆனாலும் பனைக்குப் பின்னால் இருக்கும்போது தலையில் பனங்காய் வீழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களும் ஞாபகத்திற்கு வந்தனர். 😲

(சுற்றுலாப் பயனி ஒருவர் ஈழத்தில் உலாவியபோது, அதிகாலையில் பனைகளுக்குப் பின்னால் சில தலைகள் தெரிந்ததைக் கண்டு "அது என்ன செய்கிறார்கள்" என்று கேட்டுள்ளார், பயனியின் வழிகாட்டியாக வந்தவருக்கு அவமானமாகப் போய்விட்டது. "அது அவர்கள் அதிகாலையில் சூரியக்குளியல் எடுக்கிறார்கள்" என்று சொல்லிச் சமாளித்தாராம்.) 

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

ஒரு கிராமம்.
அந்த கிராம வெளிப்புறம் ஒரே பனங்காடு.
அதில் அரைப்பங்கு என்னுடையது.
பனங்கொட்டை தொடக்கம் வடலி வளர்ந்து காவோலை விழும் வரைக்கும் ஆயிரம் கதைகள் இருக்கு ராசன்.

கற்பகதரு ஒரு சரித்திரம்.

No description available.No description available.No description available.No description available.

இந்த கறுப்பு நார் உள்ள பழத்தை விட மிக இனிப்பானது அந்த மஞ்சள் நிறத்திலான பழம்  அதனால் காலையில் எடுத்துப்போக கன பேர் வருவார்கள்

@satan பழம் வேண்டுமா என்ன? பிரான்ஸ் பழம் 😂😅😆

Edited by தனிக்காட்டு ராஜா
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

No description available.No description available.No description available.No description available.

இந்த கறுப்பு நார் உள்ள பழத்தை விட மிக இனிப்பானது அந்த மஞ்சள் நிறத்திலான பழம்  அதனால் காலையில் எடுத்துப்போக கன பேர் வருவார்கள்

@satan பழம் வேண்டுமா என்ன? பிரான்ஸ் பழம் 😂😅😆

இது நீங்கள் சுட்ட பனம்பழமா ....யாரிடம்.....!  😂

(நீங்கள் எங்கே  அதிகாலையில் பனங்காட்டுக்கு போகமாட்டியல் என்ற நம்பிக்கைதான்).

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
  • சந்தோசம். இதே போல் ஏனையவர்களும் விடுதலை பெற வேண்டும்.
  • மிக்க மகிழ்ச்சி. இவர் அப்பாவி அனியாயமாக தன் இளமைகால‌த்தை சிறையில் கழித்தவர்.  புலிகளின் திட்டத்தில் இவர் அனியாயமாக மாட்டுப்படவர். 
  • கொழும்பு-03 அலரிமாளிகைக்கு முன்பாக இருக்கும் பேரவாவிக்குள் தள்ளிவிடப்பட்ட உறுப்பினர்களில் மூவர், பிரேத ஊர்தியில் ஏறி,  மறைந்துகொண்டு வீடுகளுக்குச் சென்றிருந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.   அலரிமாளிகைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த “மைனா கோ கம”, காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த “ கோட்டா கோ கம” ஆகியவற்றின் மீது, மே.9 ஆம் திகதியன்று தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தப்பட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல்களில் பலர் பேர வாவிக்குள் தள்ளிவிடப்பட்டனர்.   அதில்,கம்பஹா மாவட்டத்தில் உள்ள பிரதேச சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரும் அடங்கியிருந்தவர்கள். அவர்களே, பிரேத ஊர்தியில் ஏறி, மறைந்திருந்து வீடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.   அந்த மூவருடன் மற்றுமொருவரையும் பிடித்து கடுமையாக தர்ம அடிக்கொடுத்தவர்கள், ஏனையோருடன் அந்த நால்வரையும் பேர வாவிக்குள் தள்ளிவிட்டனர். அவர்கள் வாவிக்குள் நீண்ட நேரம் தத்தளித்துகொண்டிருந்தனர்.   ஒருமாதிரி கரையேறிய அந்த நால்வரும், மறைவான இடமொன்றில் மூன்று நாட்களாக மறைந்திருந்துள்ளனர். அதன்பின்னர், பிரதேச சபை உறுப்பினர்களில் ஒருவர், கம்பஹா மாவட்டத்திலுள்ள சவப்பெட்டி தயாரிக்கும் தன்னுடைய நண்பனுக்கு அழைப்பை எடுத்து விடயத்தை தெளிவுப்படுத்தியுள்ளனர்.   அத்துடன் பாதுகாப்பாக வீடுகளுக்கு திரும்புவதற்காக பிரேத ஊர்தியொன்றை  அனுப்பிவைக்குமாறு கேட்டுள்ளார். தப்பிச் செல்வதற்கு மாற்று வழிகளே இல்லையென்றும் தெரிவித்துள்ளார்.   நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்க, நால்வரை ஏற்றிச்செல்லக்கூடிய பிரேத ஊர்தியை , அவர்கள் மறைந்திருந்த இடத்துக்கு அனுப்பிவைத்துள்ளார்.   அதில் ஏறிக்கொண்ட நால்வரும் கொழும்பிலிருந்து இரவு வேளையில் புறப்பட்டு, தங்களுடைய வீடுகளுக்கு இருட்டில் சென்றுள்ளனர். எனினும், தங்களுடைய வீடுகளுக்கு பிரேத ஊர்தி வருவதை கண்ட குடும்பஸ்தினர் அச்சத்தில் இருந்தனர்.   பிரதேச சபை உறுப்பினர்கள் மூவரும் பிரேத ஊர்தியில் ஏறி, மறைந்திருந்து வீடுகளுக்கு திரும்பிய விவகாரம் அக்கம் பக்கத்தினரின் காதுகளுக்குச் சென்றமையால் அந்த இரகசியம் அம்பலமானது.  https://www.madawalaenews.com/2022/05/blog-post_63.html
  • விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துகிறார்கள் கூச்சலிட்டவாறு ஒடி வந்து பயமுறுத்திய 7 பேர் கைது. விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்து, அம்பாறை- நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டவாறு ஒடி வந்து கிராமவாசிகளை பயமுறுத்திய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பக்கிஎல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   “ புலிகள் எம்மை வெட்டுகின்றனர்” என கூக்குரலிட்டவாறு சிலர் ஒடி வருவதை அவதானித்த மின் வேலியைப் பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு தரப்பினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பக்கிஎல்ல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.   அத்துடன் 119 என்ற அவசர பிரிவினருக்கும் அறிவித்துள்ளனர்.   இதற்கமைய, அம்பாறை மற்றும் அரன்தலாவ பொலிஸ் விசேட பிரிவினர், இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.   இதன்போது சந்தேகநபர்கள் வருகைத் தந்த மோட்டார் சைக்கிள், 3 சைக்கிள்கள் மற்றும் ஓட்டோவொன்று என்பன அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.   அத்துடன் சந்தேகநபர்கள் 7 பேரும் திவுலான காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். https://www.madawalaenews.com/2022/05/i-7.html
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.