Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சமூகத் தலைவர் சிலை தகர்ப்பு,பெண் ஆளுநர் கடத்தல், தலிபான்கள் வெறியாட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமூகத் தலைவர் சிலை தகர்ப்பு,பெண் ஆளுநர் கடத்தல், தலிபான்கள் வெறியாட்டம்!

ஹசாரா சமூகத் தலைவர் மஸாரியின் சிலை தகர்ப்பு பெண் ஆளுநரும் கடத்தல் தலிபான்கள் வெறியாட்டம்.

ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஹசாரா சமூகத்தின் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை வெடிவைத்து தலிபான்கள் தகர்த்துள்ளனர்.

கடந்த முறை ஆப்கானைக் கைப்பற்றியபோது, பாமியானில் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த, நூற்றாண்டுகள் பழமையான புத்தர் சிலைகளை வெடிவைத்து தலிபான்கள் தகர்த்து அழித்தனர். இந்த முறை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஹசாரா இனத்தின் தலைவரின் சிலையை தலிபான்கள் தகர்த்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் மலைப்பகுதியில் வாழும் இனத்தவர்கள் ஹசாராக்கள் அல்லது ஹசாராஜத் என்று அழைக்கப்படுகின்றனர். 13ஆம் நூற்றாண்டில் மங்கோலிய வம்சத்தை உருவாக்கிய செங்கிஸ்கான் வழித்தோன்றல்கள் ஹசாராக்கள் என்று வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த ஹசாரா இனத்தின் தலைவராக இருந்த அப்துல் அலி மஸாரி கடந்த 1995ஆம் ஆண்டில் தலிபான்களால் தூக்கிலிடப்பட்டார்.

இதன் பின்னர் அப்துல் அலியின் மிகப்பெரிய சிலை பாமியான் நகரில் மக்களால் நிறுவப்பட்டது. ஹசாரா இனத்தவரின் மீதான வெறுப்பால், ஹசாரா இன மக்களை தொடர்ந்து தலிபான்கள் துன்புறுத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது மஸாரியின் சிலை தலிபான்களால் தகர்க்கப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆர்வலர் சலீம் ஜாவித் இது தொடர்பில் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘பாமியான் நகரில் உள்ள ஹசாரா இனத் தலைவர் அப்துல் அலி மஸாரியின் சிலையை தலிபான்கள் தகர்த்துள்ளனர். கடந்த முறை ஆட்சியின்போது அப்துல் அலியை தூக்கிலிட்டு புத்தர் சிலைகளை உடைத்து, வரலாற்று சுவடுகளை தலிபான்கள் அழித்தனர். இதுதான் தலிபான்கள் கூடுதலான மன்னிப்பா?’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஹசாரா இனத்தவர்கள் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களில் ஆளுநர்களாக பெண்கள் பதவியில் உள்ளனர். அதில் சாஹர்ஹிந்த் மாவட்ட ஆளுநர் சலிமா மஸாரியை தலிபான்கள் சிறைப்படுத்தி வைத்துள்ளனர்.
 

https://newuthayan.com/சமூகத்-தலைவர்-சிலை-தகர்ப/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறமென்ன சிங்கனுகள் ஜும்மா (வெள்ளிக்கிழமை) முடிஞ்சதும் முடியாததுமா தொடங்கீட்டானுகள்!

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.