Jump to content

வெளி நாட்டு, வாழ் இலங்கையர்களிடம்... உதவி கோரிய, இராஜாங்க அமைச்சர்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு எப்படி நிதி சேர்ந்தது என்று புலிகளுக்கு தெரியும் ...கடைசியில் விட்டுட்டு ஓடேக்குள்ள எந்தெந்த  மரத்துக்குள்ள எவ்வளவு புதைச்சது என்று புதைச்ச போராளிகளுக்கு தெரியும் ...எனக்கு பாடம் எடுக்காமல் போய் அவரவர் வேலையை பாருங்கோ ...புதைச்ச காசை எடுத்து தான் அந்த மக்களுக்கு றோட்டாவது போட்டு கொடுக்கிறான்.

வெளிநாட்டு புலி வால்கள் மனசாட்சியே இல்லாமல் அமுக்கின மாதிரி அவர்கள் அமுக்கவில்லை ..வெளிநாட்டில் அமுக்கின காசை எல்லாம் சேர்த்தால் மகிந்தா சகோதரர்களிடம் இருப்பதை விட  மும் மடங்கு வரும் 

20 hours ago, குமாரசாமி said:

 நீங்கள் லக்ஷ்மன் கதிர்காமர் பக்கத்து வீடு போல.....😂

14 hours ago, பெருமாள் said:

யாழில் இது வியாதி எந்த ஆதாரமும் இல்லாமல் புலிகள் மேல் கல்லெறிவது வெட்டு விழாமல் அந்த புலிகளுக்கு எதிரான கருத்து யாழில் இருப்பது எழுதியவருக்கு உள்ளுக்குள் சந்தோசம் ஆக்கும் .

உங்கள் இருவருக்கும் விடிஞ்ச பிறகு ,மற்றவர் தட்டி எழுப்பின பிறகு தான் தெளிஞ்சதாக்கும் .😉
 
 • Confused 1
Link to comment
Share on other sites

 • Replies 116
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

vasee

அந்த ஒளிப்பதிவில்  B இன் Credit default  நிகழ்தகவு 1-4 வீதம், 8% அளவினை எட்டினாலே ஆபத்து என கூறுகிறார், தற்சமயம் இலங்கையின் அளவு 27% என்று புளூம்பேர்க் இணையத்தளம் கூறுகிறது. இதுவரைக்கும் இலங்கை அ

Kadancha

மிகவும் பிந்திய பதிவுகளில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.  imf இன் SDR விளைவுகளை பின்பு பார்போம், ஏனெனில், SDR ஐ  உடனடியாக பாவிக்க முடியாது.   விஜேவர்த்தனே இந்த முழு பேட்டியையும் கவனமா கேட்டீர்களா? குறி

nochchi

இந்தச் செய்தியைப்பார்த்தபோது நானும் இப்படித்தான் யோசித்தேன்.  சிங்கள இனவாதம் தமிழினத்தினது அனைத்து  முயற்சிகளையும், அது போராயினும் சரி, சமாதானமாயினும் சரி இனவாத்தினூடாகத் தோற்கடித்தே வருகின்றது.

10 hours ago, ஏராளன் said:

இலங்கையில் இருந்து வங்கிகள் ஊடாக இவ்வளவு பணம் அனுப்பமுடியாது என்று நினைக்கிறேன். உண்டியல் மூலம் அனுப்பி இருக்கலாம்.

இங்கிருந்து கொழும்பில் இருக்கும் ஒருவருக்கு அனுப்பப்பட்டு அதன்பிறகே சென்று இருக்கிறது. ஒரு வேளை அவர் அப்படி அனுப்பி இருக்கலாம். பண விடயங்கள் சொல்ல மாட்டார்கள் முழுமையாக 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

தெரியாமல் கதைக்க கூடாது.

சுனாமி பணம், மற்ற நாடுகள் மற்றும் உதவி நிறுவனங்கள் அளித்தது,  புலிகளுக்கு போகவில்லை.

சில உதவி நிறுவங்கள், சில பொருட்களாக புலிகளின் இடத்துக்கு கொண்டு சென்று சேர்த்து இருக்கலாம், ஆனால் பணம் அல்ல. 

புலிகளிடம் சென்றது, புலிகள் தாமாக சேர்த்தது, மற்றும் விரும்பிய மக்களின் பங்களிப்பு. அது ஒரு போதும் நிறுவனமயப்பட்ட உதவியை மிஞ்சி இருக்க முடியாது.  

சுனாமி பணம், சிலவேளை, கருணாவிற்கு கொடுக்கப்பட்டு இருக்கலாம்.

தொண்டு நிறுவனங்கள் அந்தந்த நாட்டு அரசாங்கத்தை மீறி செயற்பட முடியாது ....மக்களுக்கு உதவி செய்வதற்கும் மகிந்த அரசுக்கு கணிசமான லஞ்சம் கொடுத்த்தார்கள் .
புலிகளும் அந்த நேரம் வன்னியில் ஆட்சி செய்தனர் ...அவர்களுக்கு ஒரு சதமும் கொடுபடாமல் நேரடியாய் தொண்டு நிறுவனங்கள் செயற்பட்டன என்று சொல்லி உங்களை நீங்களே ஏமாத்திக் கொள்ளுங்கோ.
மகிந்தா சகோதரர்களிடம் எக்கசக்க பணம் இருக்கு ...அரைவாசி உலக நாடுகளிடம் இருந்து அபிவிருத்தி அது,இது என்று ஆட்டையை போட்டது ...மிச்சம் புலிகளிடம் இருந்தும் ,தமிழர்களிடம் இருந்தும் புடுங்கினது.உங்களால ஒன்றும் செய்ய முடியாது...இப்படியே வேடிக்கை பார்த்து புலம்பிக் கொண்டு இருக்க வேண்டியதான்  
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தொண்டு நிறுவனங்கள் அந்தந்த நாட்டு அரசாங்கத்தை மீறி செயற்பட முடியாது ....மக்களுக்கு உதவி செய்வதற்கும் மகிந்த அரசுக்கு கணிசமான லஞ்சம் கொடுத்த்தார்கள் .
புலிகளும் அந்த நேரம் வன்னியில் ஆட்சி செய்தனர் ...அவர்களுக்கு ஒரு சதமும் கொடுபடாமல் நேரடியாய் தொண்டு நிறுவனங்கள் செயற்பட்டன என்று சொல்லி உங்களை நீங்களே ஏமாத்திக் கொள்ளுங்கோ.

நீங்கள் சொன்னது பணம். அதுவும்  சுனாமிக்கு சிங்கள அரசுக்கு வந்த பணம், புலிகளுக்கு கொடுத்தது.

நாங்கள் ஒரு போதும் ஏமாறவும் இல்லை, ஏமாற்றவும் இல்லை.

பொருட்கள்  என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். எவ்வளவு பொருட்கள்  கொடுக்க முடியும்?

நீங்கள் தெரியாமல் கைது விட்டு, இப்பொது என்ன்னிடம்  நியாயப்படுத்த வேண்டாம்,  பின்பு அதை தொண்டு நிறுவனர் புலிகள் பிரதேசத்தில் வேலை செய்ய புலிகளுக்கு கொடுத்த  பணம் என்று திரிப்பது. 

தேவை இல்லாத, சாத்தியம் அற்ற கதைகள். 

பணம் என்பது வங்கித்துறையால் மட்டுமே மாற முடியும், அப்படி இல்லாத இடங்களில் (இப்போதும்) தொண்டு நிறுவனகள் பொருட்களாவே கொடுக்க முடியும் (மிக சமீப உதாரணம்  சிரியா). 

ஏனெனில், புலிகலின் வங்கி என்பது அவர்களோடு, ஒரு தொடர்பும் இல்லாதது.

அப்படி இருந்தாலும் நேரடியாக செய்ய முடியாது, தொண்டு நிறுவங்கள் சர்வதேச அடிப்படையில் audit செய்யப்படுவவை, புலிகளை, அமெரிக்கா தடை காரணமாக, நேரடியாக ஒரு போதும் (வசதி இருந்தால் கூட) கொடுக்க முடியாது.  

சிங்கள வாங்கி துறை, அதாவது சிங்கள அரசுக்கு கொடுப்பதன் வழியாக, இதை தடுத்து விட்டது சிங்கள அரசு. 

இவ்வளவு ஏன், சமாதானம் வசதி செய்வதற்கு வந்த நோர்வே கூட புலிகளுக்கு பணம் கொடுக்க முடியவில்லை.

பொருட்களே கொடுக்க முடிந்தது.
 
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உங்கள் இருவருக்கும் விடிஞ்ச பிறகு ,மற்றவர் தட்டி எழுப்பின பிறகு தான் தெளிஞ்சதாக்கும் .😉

ஓமோம்...நீங்கள் கிழக்கின் விடியலை நோக்கி.....🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புலிகள் புதைத்ததை எடுத்து றோட்டு போட்டார்கள். வெளிநாடுகளிடமிருந்து அபிவிருத்தி என்று வாங்கி றோட்டு போட்டார்கள். 

றோட்டு அமெரிக்காவிற்கா போட்டிருக்கு???

அதைவிட மகிந்த & கோவின் அரைவாசி பணம் புலிகளினதும் தமிழர்களினதும்.

அப்பாடா….

சிலவேளை

@ரதி  எண்ணிப் பார்த்திருப்பாவோ🤔🤔🤔

33-D24219-4-B70-4-E7-B-890-F-82689-DA114
6-AC5-DA5-D-C2-DF-48-AC-B3-F0-ACB5-A421-

சிறீலங்காவின் தற்போதைய நிலை….

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

@ ஏராளன், பிரபா சிதம்பரனாதன், கோசான், தனிகாட்டுராஜா நன்றி.

இது ஒரு செவிவழிக்கதை, முன்பொரு காலத்தில் இலங்கையில் உள்ள ஒரு வங்கி ( இலங்கை வங்கி அல்லது மக்கள் வங்கியாகவிருக்கலாம்), திவாலாகப்போவதாக மக்கள் கருதினார்கள், மக்கள் தமது வைப்பிலுள்ள பணத்தை எடுப்பதற்கு முண்டியடித்தார்கள்.

பொதுவாக வங்கிகள் தமது முழுப்பெறுமதியில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பாதுகாப்பு வைப்பாகப்பேணுவார்கள் (இலங்கையில் 5% இருகலாம்) மிகுதி சொத்துகளை 80% திரவ முதலீடாகவும் (மிக சொற்ப வருமானம் அல்லது வருமானமே அற்ற) 20% திண்ம முதலீடுகளில் முதலிடுவார்கள் (அதிக வருமானம் ஆனால் அவசரத்திற்கு உடனடியாக பணத்தை பெற முடியாது). 

அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் தமது வைப்பு பணத்தினை மீட்டால், வங்கி திவாலாகி விடும், அதனால் வங்கி ஒரு திட்டத்தினை அமுல்படுத்தியது, அனைத்து பணத்தினையும் சில்லறையாக மாற்றி வைத்துக்கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு அதனை வழங்கியது இதனால் மிகத்தாமதம் ஏற்பட்டதாம் மக்கள் நீண்ட நேரமாக கியூவில் நிற்கவேண்டி ஏற்பட்டது இது நாள்கள் நிடித்த போது ஒரு காலகட்டத்தின் பின் மக்கள் வங்கி எப்படியும் பணத்தை கொடுத்துவிடும் என்று நம்பி பணத்தினை எடுப்பதை நிறுத்திவிட்ட்டார்களாம்.

இன்று இலங்கை கடன் வாங்கி வட்டி கட்டுகிறது, பொருளாதார ஊடகங்கள் இலங்கை எப்போது credit default ஆகும் என அரூடம் கூறுகின்றன. இந்தநிலையில் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் மட்டுப்படுத்தப்படும், இலங்கை பொருளாதார சரிவு தானாகவே ஏற்படலாம், அரசு துணிகரமான முடிவுகளை எடுக்காவிட்டால் இது தவிர்க்க முடியாமல் போகலாம்.

1900 - 1929 (குத்து மதிப்பான காலம்) காலப்பகுதியில் அமெரிக்காவில் பெருமளவான முதலீட்டு செலவினால், பண நெருக்கடி ஏற்பட்டது 1905 - 1907 ( இடைப்பட்ட காலப்பகுதியாகவிருக்கலாம்) பங்குச்சந்தை சரிவு ஏற்படும் நிலை உருவாகியது, JP மோர்கன் வங்கிகளுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தாராம் உங்கள் பாதுகாப்பு வைப்புகளை கடனாக வழங்குங்கள் என்று ஆரம்பத்தில் வங்கிகள் அது பாதுகாப்பு இருப்பு அவசரத்தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என முரண்டு பிடிக்க அதற்கு JP மோர்கன் சொன்னாராம் அதனால்தான் கூறுகிறேன்.

அதன் மூலம் பங்கு சந்தை சரிவை JP மோர்கன் தடுத்தார் என கூறப்படுகிறது, ஆனால் 1929 பங்கு சந்தை சரிவு ஏற்பட்டது, அதே போல் நாட்டின் வைப்பிலிருந்த தங்கத்தினை விற்குமாறு அரசுக்கு ஆலோசனை வழங்கி நாட்டை பொருளாதார நெருககடியில் இருந்து மீட்டார் என்று  கூறப்படுகிறது.

 • Like 2
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

புலிகள் புதைத்ததை எடுத்து றோட்டு போட்டார்கள். வெளிநாடுகளிடமிருந்து அபிவிருத்தி என்று வாங்கி றோட்டு போட்டார்கள். 

றோட்டு அமெரிக்காவிற்கா போட்டிருக்கு???

அதைவிட மகிந்த & கோவின் அரைவாசி பணம் புலிகளினதும் தமிழர்களினதும்.

அப்பாடா….

சிலவேளை

@ரதி  எண்ணிப் பார்த்திருப்பாவோ🤔🤔🤔

33-D24219-4-B70-4-E7-B-890-F-82689-DA114
6-AC5-DA5-D-C2-DF-48-AC-B3-F0-ACB5-A421-

சிறீலங்காவின் தற்போதைய நிலை….

நான் சொன்னால் நீங்கள் நம்பவேணும். ஏன், எப்பிடியெண்டெல்லாம் கேள்வி கேட்கப்படாது மீரா.

தலைவரும், தளபதிகளும் இயக்கத்தின்ர காசையெல்லாம் களவெடுத்துக்கொண்டு குடும்பங்களை மலேசியாவுக்கால லண்டனுக்கு  அனுப்பிப் போட்டு தாங்களும் லண்டனுக்குப் போலிப் பாஸ்போட்டில போக இருந்தவையாம். இதைக் கருணா அம்மான் பாத்துப்போட்டுத்தான் மகிந்த மாமாவிட்ட போட்டுக் குடுத்தவராம். 

அண்டைக்கு புலிகள் மரத்துக்குக் கீழ புதைச்சுவைச்ச பணமெல்லாம் பெரிய மரமா வளந்து இப்பக் காசு காசாக் காய்ச்சுக் கொட்டுதாம். அதிலதான் மகிந்த மாமாவும், கோத்தா மாமாவும் காசு புடுங்கி ரோட்டுப் போட்டவையள். உந்தக் காசில கருணா அம்மான் ஒரு சதமெண்டாலும் எடுக்கேல்லையெண்டு என்னட்டைச் சொன்னவர் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன்!

 • Haha 2
Link to comment
Share on other sites

இலங்கையிலிருந்து தனிநபர்கள் பணத்தை  officially வெளிநாட்டிற்கு அனுப்பமுடியாது என்பது உண்மையாக தான் இருக்க வேண்டும். [பல நாடுகளில் உள்ள முறை தான்] வெளிநாட்டில் இருந்து இலங்கையில் வீடு காணி விற்கும் தமிழர்கள் வேறு முறையால் தான் பணத்தை எடுப்பிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

இன்று இலங்கை கடன் வாங்கி வட்டி கட்டுகிறது, பொருளாதார ஊடகங்கள் இலங்கை எப்போது credit default ஆகும் என அரூடம் கூறுகின்றன. இந்தநிலையில் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் மட்டுப்படுத்தப்படும், இலங்கை பொருளாதார சரிவு தானாகவே ஏற்படலாம், அரசு துணிகரமான முடிவுகளை எடுக்காவிட்டால் இது தவிர்க்க முடியாமல் போகலாம்.

சிங்களம் இவ்வளவு கூலாக இருபதற்கு காரணம் , ஒன்றில் சீன, அல்லது ஹிந்தியை.

சீனாவை விட, கிந்தியா, சிங்களத்திற்கு மிகவும் கடன் பட்டதாக, சிங்களத்தின் நினைப்பு இருக்கிறது.

2009 இல் சோனியா, IMF இ வெருட்ட  முடிந்தது, ஏனெனில் US ஐ பல நாடுகள் 2008 -2009 நெருக்கடியால்  எதிர்த்தன. US ஆல் IMF ஐ நிறுத்த முடியவில்லை.

2016 இல், IMF ரணிலின் நடிப்பு நல்லாட்சியை வைத்து, US  சம்மதத்துடன் கொடுத்தது. ரணில் அதற்கு பிரதி உபகாரமாக , சீனவை உள்ளே இழுத்து விட்டார்.    

இப்பொது, கிந்தியவள் IMF ஐ  வெருட்டவும்  முடியாது, ஒரு நாடும் கிமந்தியாவுக்கு அகடவு அளிக்காது. மற்றும் US அதிகாரம் பண்ணைக் கூடிய நிலையில் உள்ளது.

உ.ம்.ஏப்ரலில், கிந்தியாவின் பொருளாதார வலய கடடற்பரப்பை US navy, எதையும் கிந்தியவுக்கு தெரிவிக்காது     ஊடறுத்து சென்றது. அதை பகிரங்கமாக அறிவித்தது.

கிந்தியாவுக்கு, சினமும், ஆத்திரமும் வந்தாலும், அடக்கி கூட வாசிக்கமல்  விட்டது.

இது, US இன் ஓர் சமிக்ஞை, அதாவது எல்லா விடயத்திலும், இந்த பிராந்தியத்தில் கிந்தியவை கேட்டு அதன் அமோதிப்புடன்  US நடக்காது என்பதற்கு.   
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இவர் சொல்வதை புரிவதற்கு, பொருளியலியலில் ஓர் சிறப்பு தேர்ச்சியும் தேவை இல்லை. 
கேட்டு நீங்களே தெரிந்து கொள்ளலலாம்.

இங்கு சிலர், இவரை விட கோதாவும், தாங்களும் அனுபவத்தில் கூடியவர்கள் என்று எண்ணி எழுதிக்கிறார்கள். அவர்களும், விருப்பம் இருந்தால், இதை கேட்டு, தமது நிலையை எடை போடலாம்.

அனால், கோதாவுக்கும், அவர்கள் என் கோத்த இருக்க வேண்டும் என்று விருப்புகிறர்கள் என்பதற்கு வேறு காரணங்கள் இருக்கிறது. 

 • Like 2
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

நல்ல ஒரு ஒளிப்பதிவு, பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள பெற்றோலியத்தின் நிலை இலங்கையில் எவ்வாறு உள்ளது? ஏறத்தாழ 1/2 பில்லியன் டாலர் பெறுமதியான பெற்றோலிய இறக்குமதியில் ஏதாவது கட்டுப்பாட்டினை அரசு விதித்துள்ளதா? எதிர்காலத்தில் பெற்றோலின் விலை தங்கம் போல் உயருமா? 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையிலிருந்து தனிநபர்கள் பணத்தை  officially வெளிநாட்டிற்கு அனுப்பமுடியாது என்பது உண்மையாக தான் இருக்க வேண்டும். [பல நாடுகளில் உள்ள முறை தான்] வெளிநாட்டில் இருந்து இலங்கையில் வீடு காணி விற்கும் தமிழர்கள் வேறு முறையால் தான் பணத்தை எடுப்பிக்கின்றனர்.

ஆம். முன்பே இலங்கையில் இருந்து உத்தியோக பூர்வமாக பணத்தை எடுக்க, மத்திய வங்கியின் அனுமதி பெற வேண்டும். ஜூலை 2021 இல் இருந்து இதை இன்னும் இறுக்கியுள்ளார்கள்.

https://www.reuters.com/article/sri-lanka-cenbank-forex-idUSL3N2EN2G6

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kadancha said:

சிங்களம் இவ்வளவு கூலாக இருபதற்கு காரணம் , ஒன்றில் சீன, அல்லது ஹிந்தியை.

சீனாவை விட, கிந்தியா, சிங்களத்திற்கு மிகவும் கடன் பட்டதாக, சிங்களத்தின் நினைப்பு இருக்கிறது.

2009 இல் சோனியா, IMF இ வெருட்ட  முடிந்தது, ஏனெனில் US ஐ பல நாடுகள் 2008 -2009 நெருக்கடியால்  எதிர்த்தன. US ஆல் IMF ஐ நிறுத்த முடியவில்லை.

2016 இல், IMF ரணிலின் நடிப்பு நல்லாட்சியை வைத்து, US  சம்மதத்துடன் கொடுத்தது. ரணில் அதற்கு பிரதி உபகாரமாக , சீனவை உள்ளே இழுத்து விட்டார்.    

இப்பொது, கிந்தியவள் IMF ஐ  வெருட்டவும்  முடியாது, ஒரு நாடும் கிமந்தியாவுக்கு அகடவு அளிக்காது. மற்றும் US அதிகாரம் பண்ணைக் கூடிய நிலையில் உள்ளது.

உ.ம்.ஏப்ரலில், கிந்தியாவின் பொருளாதார வலய கடடற்பரப்பை US navy, எதையும் கிந்தியவுக்கு தெரிவிக்காது     ஊடறுத்து சென்றது. அதை பகிரங்கமாக அறிவித்தது.

கிந்தியாவுக்கு, சினமும், ஆத்திரமும் வந்தாலும், அடக்கி கூட வாசிக்கமல்  விட்டது.

இது, US இன் ஓர் சமிக்ஞை, அதாவது எல்லா விடயத்திலும், இந்த பிராந்தியத்தில் கிந்தியவை கேட்டு அதன் அமோதிப்புடன்  US நடக்காது என்பதற்கு.   
 
https://www.dailymirror.lk/latest_news/SL-receives-US-780-million-in-SDR-from-IMF/342-218919
 
இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் யூ எஸ்  அளவான நிதியை ஐ எம் எப். இன்று  ஒதுக்கி உள்ளது. 

இலங்கை பெரும் கடன் நெருக்கடியில் உள்ளது. ஆனால் திவாலாகும் நிலையில் உள்ளதா? நான் அப்படி நினைக்கவில்லை.

3 hours ago, vasee said:

நல்ல ஒரு ஒளிப்பதிவு, பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள பெற்றோலியத்தின் நிலை இலங்கையில் எவ்வாறு உள்ளது? ஏறத்தாழ 1/2 பில்லியன் டாலர் பெறுமதியான பெற்றோலிய இறக்குமதியில் ஏதாவது கட்டுப்பாட்டினை அரசு விதித்துள்ளதா? எதிர்காலத்தில் பெற்றோலின் விலை தங்கம் போல் உயருமா? 

பெற்றோலிய இறக்குமதியில் அரசு ஏலவே நேரடியாகவும், மறைமுகமாகவும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது என நினைக்கிறேன்.

அதனால்தான் எரிவாயு விலை கூடி - ஒன்லைனில் விறகு விற்கும் நிலை வந்துள்ளது. ஒரு கட்டு விறகு வாங்கினால், உமி அடுப்பு இலவசம் என்று ஒரு விளம்பரமும் பார்த்தேன்.

பெற்றோலை குறுகிய கால அடிப்படையில் ஈரானிடம் இருந்து தேயிலைக்கு பண்டமாற்று மற்றும் கடன் அடிப்படையில் பெற முயலக்கூடும். ஆனால் அமெரிக்காவின் ஈரான் மீதான தடைகள் குறுக்கே நிற்கும்.

கஜானா காலி என்றால் - கப்பல்கள் பெற்றோலை இறக்காது. இப்போதே காசை டாலரில் டிரான்ஸ்பர் பண்ணிய பின்பே எண்ணையை இறக்குகிறார்களாம்.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

https://www.dailymirror.lk/latest_news/SL-receives-US-780-million-in-SDR-from-IMF/342-218919
 
இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் யூ எஸ்  அளவான நிதியை ஐ எம் எப். இன்று  ஒதுக்கி உள்ளது. 

இலங்கை பெரும் கடன் நெருக்கடியில் உள்ளது. ஆனால் திவாலாகும் நிலையில் உள்ளதா? நான் அப்படி நினைக்கவில்லை.

தை பற்றியும் விஜேவர்த்தனே பேட்டியில்   இருக்கிறது.

SDR என்பது பரிவர்த்தனை செய்யக் கூடிய  கரன்சி  அல்ல. 

அது IMF ஆல் உருவாக்கப்படும் (Supra national) special drawing rights, கடனை ஓர் நாட்டுக்கு இழுத்து, பெற்றுக் கொள்ளும் வசதி ஆகும்.  

SDR ஐ  டாலர் இற்கு அல்லது வேறு நாணயத்திடற்கு மாற்ற வேண்டும். அனால் வட்டி மிகவும் குறைவகையால், ஒருவரும் இப்போதைய நிலையில் ஆயத்தம் இல்லை, US கூட, US இற்கு வேறு (அரசியல்) காரணங்களும் இருக்கலாம்.  

SDR ஆல் IMF இடம் கொடுக்க வேண்டிய கடன் என்றால் நேரடியாக பாவிக்கலாம்  

நான் நினைக்கிறேன், IMF ஓர் கோடி காட்டி இருக்கிறது இதன் மூலம்.  

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 23/8/2021 at 03:37, ஈழப்பிரியன் said:

எமது போராட்டமே றோட்டுக்கும் மின்சாரத்துக்கு மானதே.

அது தான் கிடைச்சிட்டுதில்லை.

எதை கேட்டு ஈழத்தமிழர் போராடினார்களோ.......அதையெல்லாம் மறக்கடிக்கப்பட்டு இன்று அபிவிருத்தி.....அபிவிருத்தி எனும் சொல்லுடன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்றால் பாருங்கள் யாரவர்கள் என்று??????? 
இன்று வீதி புனரமைப்பையும் மின்சார இணைப்பையும் தமிழர் பிரச்சனையாக மாற்றி விட்டார்கள்.

சிங்களக்கொடி தூக்கும் குத்துக்கரணங்கள்தான் ஈழத்தமிழனுக்கான சாபக்கேடு.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இலங்கை பெரும் கடன் நெருக்கடியில் உள்ளது. ஆனால் திவாலாகும் நிலையில் உள்ளதா? நான் அப்படி நினைக்கவில்லை.

இலங்கை திவாலாவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன, இலங்கையின் Credit rating CCC  ஆகத்தரப்படுத்தியுள்ளார்கள், அதாவது Credit default முன்னதான நிலை.இந்த வகையான தரநிலையில் சில ஆபிரிக்க நாடுகள் உள்ளன. 

Credit rating B கீழ் இருப்பவை Credit default ஆகப்போகின்ற நிலை

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

விரைவில் இலங்கை SD தரத்துக்கு ஆகும் என நினைக்கிறீர்களா? 

எனக்கு என்னமோ இப்படி ஆக விடமாட்டார்கள் என்றே படுகிறது.

அப்படியே ஆனாலும் பரோட்டா சூரியின் கணக்கு போல, எல்லாவற்றையும் (bonds) அறவிட முடியா கடனாக சொல்லிவிட்டு, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாதா?

சர்வதேச சந்தையில் இலங்கையின் பிணை முறிகளுக்கு கோரல் இருக்காது.

ஆனால் வெனிசுலாவும் காலத்தை ஓட்டுதுதானே?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாடுகளின் பல்வேறு வகையான அமைவிடம் இயற்கை வளம் போன்றவை வங்குரோத்து போகும் நேரத்தை தீர்மானித்தாலும் இறுதி போரில் நின்ற நாடுகளுக்கு வகிபாகம் கொடுக்கப்படணும் என்பதில் அவர்கள் குறியாக நிக்கிறார்கள் வங்குரோத்து நீங்கள்  சொல்வது போல் போகவிடமாட்டார்கள் ஆனால் குறைந்தபட்சம் போர் வெற்றி கொண்டாடிய காலப்பகுதிகளில் இருந்த பொருளாதார வசந்தகாலம் இனி லங்காவில் கிடையாது கிடைக்கவும் விடமாட்டார்கள் ஏனென்றால் வந்த ஒட்டகங்களுக்கு தெரியும் இனி ஒரு பொருளாதார சுபீட்சம் ஏற்பட்டால் முதலாவதாய் திறத்த படுபவர்கள் அவர்களாக இருப்பார்கள் பத்து  வருடங்களுக்கு பின்  வரப்போன பிரச்சனை கொரனோ வால்  வேளைக்கே  வந்துவிட்டது இந்த சந்தர்ப்பத்தை வந்த ஒட்டகங்கள் தவற விடமாட்டார்கள் சோ இனி லங்காவில் நெருக்கடி நிலைதான் இப்பவே பத்தாயிரம் பவுன்ஸ் ஊருக்கு அனுப்ப இருக்கு என்று மெயின் உண்டியல் ஆட்களிடம் கேட்டு பாருங்கள் இன்றைய ரேட் ஐ விட 30லிருந்து 60 ரூபா வரை கூட தருவதுக்கு டீல் பேசுவார்கள் அவர்களிடம் உள்ள நம்பிக்கை இங்கு லங்கா கொடி பிடிப்பவர்களிடம் கிடையாது .🤣

 • Like 1
 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

விரைவில் இலங்கை SD தரத்துக்கு ஆகும் என நினைக்கிறீர்களா? 

எனக்கு என்னமோ இப்படி ஆக விடமாட்டார்கள் என்றே படுகிறது.

அப்படியே ஆனாலும் பரோட்டா சூரியின் கணக்கு போல, எல்லாவற்றையும் (bonds) அறவிட முடியா கடனாக சொல்லிவிட்டு, மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாதா?

சர்வதேச சந்தையில் இலங்கையின் பிணை முறிகளுக்கு கோரல் இருக்காது.

ஆனால் வெனிசுலாவும் காலத்தை ஓட்டுதுதானே?

அந்த ஒளிப்பதிவில்  B இன் Credit default  நிகழ்தகவு 1-4 வீதம், 8% அளவினை எட்டினாலே ஆபத்து என கூறுகிறார், தற்சமயம் இலங்கையின் அளவு 27% என்று புளூம்பேர்க் இணையத்தளம் கூறுகிறது.

இதுவரைக்கும் இலங்கை அத்தியாவசியங்களை நிரல்படுத்தவில்லை, ஒன்றில் அரசிற்கு நிலமையின் தீவிரம் புரியவில்லை அல்லது ஏதாவது திட்டம் அரசிடம் இருக்கலாம்.

அந்நிய செலாவணி நிலுவை என்பது ஏற்றுமதி (பொருள்கள் சேவைகள்) இறக்குமதி, தேறிய உல்லாசப்பிரயாணம் மற்றும் கல்வி சேவைகள் ஆகியவற்றின்நிலுவை ஆகும். இலங்கை அரிசியைக்கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது, கொரோனா பாதிப்பினால் உல்லாசப்பிரயாணமும் பாதிக்கப்பட்டுள்ளது, இலங்கைக்கு எவ்வாறு அந்நிய செலாவணி வரும் வெறும் செலவு மட்டுமுள்ளது. 

ஐ எம் எப் கடன் தீர்வல்ல, அது இலங்கைக்கு கால அவகாசத்தை மட்டுமே கொடுக்கும். 

இப்போது இலங்கை கடன் வாங்கி வட்டி கட்டுகிறது, ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரித்து கடன் செலுத்த முடியாமல் போகும் (Credit default), அதன் பின் இலங்கை கடனை திருப்பிக்கொடுக்காது. 

அரசின் வரவு செலவுத்திட்டத்தில் பாதிப்பு ஏற்படும். (வருமான இடைவெளியை வெளிநாட்டு உள்நாட்டுக்கடன் ஈடு கட்ட முடியாது)

அரசு செலவுகள் பல, அரசியல்வாதிகளின் ஊழல் நோக்கத்திற்காக செய்யப்படும் தேவையற்ற செலவுகள் உதாரணமாக கடற்கரை கிராமம் ஒன்றில் நீச்சல் குளம் கட்டுவது.பொதுவாக மொத்த தேசிய உற்பத்தியில் 7% மேலான அரசின் செலவுள்ள நாடு உருப்படாது என்பார்கள் இலங்கை 20%, மொத்த தேசிய உற்பத்தியில் கால் பங்கை அரசே செலவே விழுங்கிவிடும். 

அரசின் முதலீட்டு செலவுகள் குறைய வருமானம்  ஈட்ட முடியாத தொழில்த்துறைக்கு முக்கியமான வீதிப்புனரமைப்பு போன்ற அடிப்படை கட்டுமானப்பணிகள் தடைப்பட்டு ஒரு சங்கிலித்தொடர் பாதிப்பை நாட்டிற்கு  ஏற்படுத்தலாம்

 • Like 7
 • Thanks 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

விரிவான பதிலுக்கு நன்றி. உங்களதும், கடஞ்சாவினதும், பெருமாளினதும் பதில்கள் எனது இது பற்றிய எண்ணத்தில் மாற்றத்தை ஏற்படுத்துயுள்ளது.

நான் நினைத்ததை விட பாரதூரமான சிக்கலில் இலங்கை இருப்பதாகவே படுகிறது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

விரைவில் இலங்கை SD தரத்துக்கு ஆகும் என நினைக்கிறீர்களா? 

11 hours ago, vasee said:

இப்போது இலங்கை கடன் வாங்கி வட்டி கட்டுகிறது, ஒரு கட்டத்தில் கடன் சுமை அதிகரித்து கடன் செலுத்த முடியாமல் போகும் (Credit default), அதன் பின் இலங்கை கடனை திருப்பிக்கொடுக்காது. 

மிகவும் பிந்திய பதிவுகளில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.  imf இன் SDR விளைவுகளை பின்பு பார்போம், ஏனெனில், SDR ஐ  உடனடியாக பாவிக்க முடியாது.  

விஜேவர்த்தனே இந்த முழு பேட்டியையும் கவனமா கேட்டீர்களா? குறிப்பாக,  அந்த உரையாடலில், 36 - 40 நிமிட நேர இடைவெளியில்.

விஜேவர்த்தனே சொல்வதின் படி ஏற்கனவே உத்தியோகபூர்வ முறையில் (உத்தியோக பற்றற்ற அறிவிப்பால்)  SD ஆகி விட்டது என்று நினைக்கிறன்.

இதை இங்கு எல்லோருக்குமாக சற்று விளக்கமாக எழுதுகிறேன்.

இங்கே, அவ்வப்போது சொல்லி இருக்கிறேன், சிங்கள அரசின்  மத்திய வங்கி அதன் மீது இருக்கும் உண்மையான கடன் தொகையை  மறைக்கிறது என்று.

இப்பொது சிங்கள அரசின்  மத்திய வங்கி, மறைக்கப்பட்டது என்ற கடன் தொகையயை, written  off பண்ணி இருக்கிறது, நகைப்பபிலும் கேவலமான கணக்கியல்  பதிவின் மூலம். 

அதை எப்படி என்று விஜேவர்த்தனே விளக்குகிறார் அந்த உரையாடலில், 36 - 40 நிமிட நேர இடைவெளியில்.

முதலில் தனிமனித உதாரணத்தை வைத்து சுருக்கமாக சொல்கிறேன். பின்பு விஜேவர்த்தனே சொல்வதை சுருக்கமாக சொல்கிறேன்.

 £200, 000 வங்கியில் (lender or creditor) இருந்து  கடன் எடுத்து தனி நபர் ஒருவர் (debtor) வீடு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். 2 வருடங்களின் பின் வீட்டின் விலை (கேள்வி) £100,000 க்கு குறைந்து விடுகிறது. அப்போது கடன் எடுத்தவர், கடன் எடுத்த மொத்த தொகையான £200, 000 இல் £10, 000 கடனை கட்டி முடித்து இருக்கிறார் என்றும்  வைத்துக் கொள்வோம். கடன் எடுத்தவருக்கு  (debtor) நிலுவையில் இருக்கும் கடன் இப்பொது, £190, 000. 

கடன் எடுத்து வீடு வாங்கியவர் (debtor) சொல்ல்கிறார், வீட்டின் £100,000 க்கே விலை போகும் (கேள்வி உள்ளதால் ) என்பதால்,  கடன் எடுத்தவரன் (debtor) நிலுவையில் இருக்கும் கடன்   £100, 000 மட்டுமே . 

இந்த கணக்கியல் , வங்கிக்கே (lender) சரியும் பொருத்தமானதும்.. ஏனெனில், வங்கியின் (lender) இன் பார்வையில் இப்பொது அறவிடக் கூடியது (வீட்டை கடனாளியிடம் இருந்து எடுத்து விற்றபத்தின் மூலம்)   £100, 000 மட்டுமே. அதாவது, கடன் கொடுத்தவருக்கான கடன் பத்திரத்தை  (loan instrument) , வங்கி (lender), அந்தப loan instrument ஐ வாங்க விரும்பும் வேறு எந்த (சட்ட அங்கீகாரமுள்ள) நிறுவனத்திற்கு £100, 000 க்கு மேல் விற்க முடியாது.      

கடன் எடுத்தவர் (debtor) இந்த கணக்கியலை (தனி நபர் ஆக) சொன்னால், கடன் எடுத்தவர் பகுதியாக கடன் பொறுப்பில் இஇருந்து வழுவி (default ) விட்டார்.   

சிங்கள அரசின் மத்திய வங்கியும் இந்த அடிப்படையிலான கணக்கியல்  விளக்கத்தையே  தான் வாங்கிய கடனுக்கு (international sovereign bonds) சொல்கிறது.  அதாவது, கடனாளியான (debtor) சிங்கள அரசு, கடன் கொடுப்பவரின் (lender அல்லது creditor ) கணக்கியலை சொல்கிறது. 

அதாவது,  சிங்கள அரசின் international sovereign bonds இன் கடன் எடுக்கும் போது இருந்த கடன் முறியின்  விலை விலை (மதிப்பு, face value,), $14.5 பில்லியன், இது ஏறத்தாழ கடன் வாங்கிய தொகைக்கு சமனாக அல்லது சற்று  மதிப்பு கூடாவாக இருக்கும் (கூடவாயின் அந்த தொகை கடனாக எடுக்கப்பட்டு இருக்கலாம்). கடன் எடுக்கும் போது face value ஐ, நிதி சந்தைகளே தீர்மானிப்பதால், கடன் எடுக்கும் போது face value உம், market value உம்  வேறுபாடு இருக்க முடியாது.

இப்பொது, சிங்கள அரசின்  இறைமை கடன்  தராதரம் (sovereign credit rating) குறைந்துள்ளதால், அதே கடன் முறியின் மதிப்பு $7.5 billion  (இற்கு குறைந்துள்ளதாக) நிதி சந்தைகள் மதிக்கின்றன.  அதாவது, கடன் எடுக்கும் போது அந்தக் கடன் முறிக்கு இருந்த கேள்வி (demand) இப்போது ஏறத்தாழ பாதியாக குறைந்து விட்டது (தனி நபர் உதாரணத்தில் வீட்டின் கேள்வி, பெறுமதி  £100, 000 க்கு குறைந்தது போல). ஆனால், கடனாக  பெறப்பட்ட தொகை, அதாவது நிலுவையில் இருக்கும் கடன் இப்போதும் $14.5 பில்லியன்.

சொறி சிங்களத்தின் மத்திய  வாங்கி சொல்கிறது, அதே கடன் முறியின் மதிப்பு $7.5 billion இற்கு  சந்தையில் குறைந்துள்ளதால் (தனி   நபர் உதாரணத்தில் வீட்டின் கேள்வி, பெறுமதி  £100, 000 க்கு குறைந்து இருப்பது போல), சிங்கள அரசின் நிலுவையில்  உள்ள கடன் தொகையும்   $7.5 billion !!!!

அதாவது, கடனாளியான (debtor) சிங்கள அரசு, கடன் கொடுத்தவரின்(lender அல்லது creditor ) கணக்கியலை பதிவிட்டு, ஏறத்தாழ $7 billion ஐ நிலுவையில் உள்ள கடன் இல் இருந்து நீக்கி விட்டது (written off).

இப்படி சொறி  சிங்கள அரசின் சொறி மத்திய வங்கி பகிரங்கமாக செய்யம் போது, 

  1) நிதி (மற்றும் ஏனைய ) சந்தைகள் எல்லாமே பூட்டப்பட்டு விட்டது   சொறி  சிங்கள அரசுக்கு.
    
  2) வேறு நாடுகள் கொடுத்தாலும், (சீன போல) வேறு பிணைகள் இல்லாமல் கொடுக்காது. 

  3) இனி, IMF வந்தாலும்,  முதலில் இந்த $14.5 billion ஐ எவ்வாறு தீர்ப்பது  என்பதே பிரச்சனை. IMF, 
சந்தையையும், தனியார் நிறுவனங்களுக்கும் பக்க சார்பாக நடப்பதாக குற்றசாட்டு இருந்தாலும், சொறி சிங்களம் செய்ததால், IMF சந்தைகளையும்,   தனியார் நிறுவனங்களையும் கடனை தள்ளி  போடுமாறு கேட்க முடியாது.

இவை எல்லாவற்றிலும் மிகப் பெரிய தாக்கம், எல்லா சந்தைகளும் (markets), தனியார் நிறுவனங்களும்  சொறி மத்திய வங்கி மீது கொண்டுள்ள  மதிப்பையும் (credibility), நம்பிக்கையையும் (trust) இழந்து விட்டன.

அதனால் சொறி சிங்கள அரசாலோ அல்லது மத்திய வங்கியாலோ நிலைமைகளை வாயால் சொல்லி சமாளிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.

முன்பு, சந்தைகளையும்  (markets), தனியார் நிறுவனங்களையும், சொறி மத்திய வங்கி  வலி நடத்த கூடியதாக இருந்தது.

இனி, சந்தைகளும் (markets), தனியார் நிறுவனங்களும் சொறி சிங்கள அரசையும், மத்திய வங்கியையும் வழி நடத்தும்.
   
இப்போதுள்ள கறுப்பு சந்தையே இதன் யதார்த்தம், அதாவது விலைகட்டுப்பாடுகள் இருப்பது தெரிந்தும், கருப்பு சந்தை பகிரங்கமாக அதை புறக்கணித்து, விலைகளை நிர்ணயிக்கிறது, அதற்கு கேள்வியும் (demand) இருக்கிறது.   

 • Like 5
 • Thanks 1
Link to comment
Share on other sites

12 hours ago, vasee said:

இதுவரைக்கும் இலங்கை அத்தியாவசியங்களை நிரல்படுத்தவில்லை, ஒன்றில் அரசிற்கு நிலமையின் தீவிரம் புரியவில்லை அல்லது ஏதாவது திட்டம் அரசிடம் இருக்கலாம்.

2018 இல் 2.3 மில்லியன் உல்லாசப்பயணிகள் இலங்கைக்குள் நுளைந்தார்கள். இதில் தமிழர்களே கணிசமானவர்கள்.

வெள்ளைக்காரர் விமானம் விடுதி என்று ஆகக் குறைந்து 1700 $ அளவில் ஒருவருக்குச் செலவளிக்கிறார். விமானம் தவிர்த்துப் பார்த்தால் குறைந்தது உள்நாட்டுக்கு இலவசமாகக் கொண்டு செல்லும் அந்நியச் செலாவணி குறைந்தது 1000 $. ஒரு வருட வருமானம் 2.3 பில்லியன் $. உண்மையில் இத் தொகை இதைவிட அதிகமாக இருக்க வேண்டும்.

இன்னும் 6 மாதம் பொறுங்கோ, இலங்கையின் வருட வட்டியை நாங்கள் கட்டி முடிக்கிறோம். 🤣

 • Like 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kadancha said:

மிகவும் பிந்திய பதிவுகளில் இருந்தே ஆரம்பிக்கிறேன்.  imf இன் SDR விளைவுகளை பின்பு பார்போம், ஏனெனில், SDR ஐ  உடனடியாக பாவிக்க முடியாது.  

விஜேவர்த்தனே இந்த முழு பேட்டியையும் கவனமா கேட்டீர்களா? குறிப்பாக,  அந்த உரையாடலில், 36 - 40 நிமிட நேர இடைவெளியில்.

விஜேவர்த்தனே சொல்வதின் படி ஏற்கனவே உத்தியோகபூர்வ முறையில் (உத்தியோக பற்றற்ற அறிவிப்பால்)  SD ஆகி விட்டது என்று நினைக்கிறன்.

இதை இங்கு எல்லோருக்குமாக சற்று விளக்கமாக எழுதுகிறேன்.

இங்கே, அவ்வப்போது சொல்லி இருக்கிறேன், சிங்கள அரசின்  மத்திய வங்கி அதன் மீது இருக்கும் உண்மையான கடன் தொகையை  மறைக்கிறது என்று.

இப்பொது சிங்கள அரசின்  மத்திய வங்கி, மறைக்கப்பட்டது என்ற கடன் தொகையயை, written  off பண்ணி இருக்கிறது, நகைப்பபிலும் கேவலமான கணக்கியல்  பதிவின் மூலம். 

அதை எப்படி என்று விஜேவர்த்தனே விளக்குகிறார் அந்த உரையாடலில், 36 - 40 நிமிட நேர இடைவெளியில்.

முதலில் தனிமனித உதாரணத்தை வைத்து சுருக்கமாக சொல்கிறேன். பின்பு விஜேவர்த்தனே சொல்வதை சுருக்கமாக சொல்கிறேன்.

 £200, 000 வங்கியில் (lender or creditor) இருந்து  கடன் எடுத்து தனி நபர் ஒருவர் (debtor) வீடு வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். 2 வருடங்களின் பின் வீட்டின் விலை (கேள்வி) £100,000 க்கு குறைந்து விடுகிறது. அப்போது கடன் எடுத்தவர், கடன் எடுத்த மொத்த தொகையான £200, 000 இல் £10, 000 கடனை கட்டி முடித்து இருக்கிறார் என்றும்  வைத்துக் கொள்வோம். கடன் எடுத்தவருக்கு  (debtor) நிலுவையில் இருக்கும் கடன் இப்பொது, £190, 000. 

கடன் எடுத்து வீடு வாங்கியவர் (debtor) சொல்ல்கிறார், வீட்டின் £100,000 க்கே விலை போகும் (கேள்வி உள்ளதால் ) என்பதால்,  கடன் எடுத்தவரன் (debtor) நிலுவையில் இருக்கும் கடன்   £100, 000 மட்டுமே . 

இந்த கணக்கியல் , வங்கிக்கே (lender) சரியும் பொருத்தமானதும்.. ஏனெனில், வங்கியின் (lender) இன் பார்வையில் இப்பொது அறவிடக் கூடியது (வீட்டை கடனாளியிடம் இருந்து எடுத்து விற்றபத்தின் மூலம்)   £100, 000 மட்டுமே. அதாவது, கடன் கொடுத்தவருக்கான கடன் பத்திரத்தை  (loan instrument) , வங்கி (lender), அந்தப loan instrument ஐ வாங்க விரும்பும் வேறு எந்த (சட்ட அங்கீகாரமுள்ள) நிறுவனத்திற்கு £100, 000 க்கு மேல் விற்க முடியாது.      

கடன் எடுத்தவர் (debtor) இந்த கணக்கியலை (தனி நபர் ஆக) சொன்னால், கடன் எடுத்தவர் பகுதியாக கடன் பொறுப்பில் இஇருந்து வழுவி (default ) விட்டார்.   

சிங்கள அரசின் மத்திய வங்கியும் இந்த அடிப்படையிலான கணக்கியல்  விளக்கத்தையே  தான் வாங்கிய கடனுக்கு (international sovereign bonds) சொல்கிறது.  அதாவது, கடனாளியான (debtor) சிங்கள அரசு, கடன் கொடுப்பவரின் (lender அல்லது creditor ) கணக்கியலை சொல்கிறது. 

அதாவது,  சிங்கள அரசின் international sovereign bonds இன் கடன் எடுக்கும் போது இருந்த கடன் முறியின்  விலை விலை (மதிப்பு, face value,), $14.5 பில்லியன், இது ஏறத்தாழ கடன் வாங்கிய தொகைக்கு சமனாக அல்லது சற்று  மதிப்பு கூடாவாக இருக்கும் (கூடவாயின் அந்த தொகை கடனாக எடுக்கப்பட்டு இருக்கலாம்). கடன் எடுக்கும் போது face value ஐ, நிதி சந்தைகளே தீர்மானிப்பதால், கடன் எடுக்கும் போது face value உம், market value உம்  வேறுபாடு இருக்க முடியாது.

இப்பொது, சிங்கள அரசின்  இறைமை கடன்  தராதரம் (sovereign credit rating) குறைந்துள்ளதால், அதே கடன் முறியின் மதிப்பு $7.5 billion  (இற்கு குறைந்துள்ளதாக) நிதி சந்தைகள் மதிக்கின்றன.  அதாவது, கடன் எடுக்கும் போது அந்தக் கடன் முறிக்கு இருந்த கேள்வி (demand) இப்போது ஏறத்தாழ பாதியாக குறைந்து விட்டது (தனி நபர் உதாரணத்தில் வீட்டின் கேள்வி, பெறுமதி  £100, 000 க்கு குறைந்தது போல). ஆனால், கடனாக  பெறப்பட்ட தொகை, அதாவது நிலுவையில் இருக்கும் கடன் இப்போதும் $14.5 பில்லியன்.

சொறி சிங்களத்தின் மத்திய  வாங்கி சொல்கிறது, அதே கடன் முறியின் மதிப்பு $7.5 billion இற்கு  சந்தையில் குறைந்துள்ளதால் (தனி   நபர் உதாரணத்தில் வீட்டின் கேள்வி, பெறுமதி  £100, 000 க்கு குறைந்து இருப்பது போல), சிங்கள அரசின் நிலுவையில்  உள்ள கடன் தொகையும்   $7.5 billion !!!!

அதாவது, கடனாளியான (debtor) சிங்கள அரசு, கடன் கொடுத்தவரின்(lender அல்லது creditor ) கணக்கியலை பதிவிட்டு, ஏறத்தாழ $7 billion ஐ நிலுவையில் உள்ள கடன் இல் இருந்து நீக்கி விட்டது (written off).

இப்படி சொறி  சிங்கள அரசின் சொறி மத்திய வங்கி பகிரங்கமாக செய்யம் போது, 

  1) நிதி (மற்றும் ஏனைய ) சந்தைகள் எல்லாமே பூட்டப்பட்டு விட்டது   சொறி  சிங்கள அரசுக்கு.
    
  2) வேறு நாடுகள் கொடுத்தாலும், (சீன போல) வேறு பிணைகள் இல்லாமல் கொடுக்காது. 

  3) இனி, IMF வந்தாலும்,  முதலில் இந்த $14.5 billion ஐ எவ்வாறு தீர்ப்பது  என்பதே பிரச்சனை. IMF, 
சந்தையையும், தனியார் நிறுவனங்களுக்கும் பக்க சார்பாக நடப்பதாக குற்றசாட்டு இருந்தாலும், சொறி சிங்களம் செய்ததால், IMF சந்தைகளையும்,   தனியார் நிறுவனங்களையும் கடனை தள்ளி  போடுமாறு கேட்க முடியாது.

இவை எல்லாவற்றிலும் மிகப் பெரிய தாக்கம், எல்லா சந்தைகளும் (markets), தனியார் நிறுவனங்களும்  சொறி மத்திய வங்கி மீது கொண்டுள்ள  மதிப்பையும் (credibility), நம்பிக்கையையும் (trust) இழந்து விட்டன.

அதனால் சொறி சிங்கள அரசாலோ அல்லது மத்திய வங்கியாலோ நிலைமைகளை வாயால் சொல்லி சமாளிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.

முன்பு, சந்தைகளையும்  (markets), தனியார் நிறுவனங்களையும், சொறி மத்திய வங்கி  வலி நடத்த கூடியதாக இருந்தது.

இனி, சந்தைகளும் (markets), தனியார் நிறுவனங்களும் சொறி சிங்கள அரசையும், மத்திய வங்கியையும் வழி நடத்தும்.
   
இப்போதுள்ள கறுப்பு சந்தையே இதன் யதார்த்தம், அதாவது விலைகட்டுப்பாடுகள் இருப்பது தெரிந்தும், கருப்பு சந்தை பகிரங்கமாக அதை புறக்கணித்து, விலைகளை நிர்ணயிக்கிறது, அதற்கு கேள்வியும் (demand) இருக்கிறது.   

தெளிவாக விளக்கியமைக்கு நன்றி. தனி நபர் உதாரணம் மேலும் தெளிவாக்கியது.

ஆகவே நான் மேலே சொன்னது போல அறவிடமுடியா கடன் என 7.5 பில்லியனை இலங்கை ஏற்கனவே தள்ளுபடிகாக்கி விட்டது என நான் விளங்கி கொள்கிறேன். இது சரிதானே?

இது இலங்கையின் நம்பகதன்மையை பாதித்தமையால் இனி யாரும் தனியார், வங்கிகள் இலங்கை பிணைகளை வாங்க முன் வரமாட்டர்கள். ஆகவே இலங்கை இனி கடன் வெளி சந்தையில் எடுக்க முடியாது?

இதே போல் மீதியையும் இலங்கை “ஸ்வாகா” சொல்லி முழு கடனுக்கு கையை விரித்தாலும் - இப்போ இருக்கும் நிலைதான் ? ( சந்தையில் கடன் எடுப்பதை பொறுத்தவரை). 

இதே நிலைதான் முதலீடுகளுக்கும்.

ஆனால் நாடுகளுக்கு இடையான கொடுக்கல் வாங்கல் தொடரும்.

இலங்கையை மட்டும் அல்ல வேறு எந்த ஒரு நாட்டையும் கடனில் தாழ வைக்க முடியாது என நான் நினைகிறேன்.

எப்படி? 👇

இப்படி எல்லா கடன்களையும் right off பண்ணி விட்டு, கொரோனா கட்டுக்குள் வந்தபின், வரும் வியாபார, அந்நிய செலாவணி, இதர பண வரத்தை வைத்து இலங்கை ஒரு clean start எடுக்க முடியும் அல்லவா?

உங்கள் தனியார் உதாரணத்தை எடுத்தால் கூட bankruptcy ஆகிய பின், பழைய கடன் சுமைகள் எல்லாம் ஒழிய, 5-10 வருடத்தில் புதிய credit record உடன் மீள சந்தைக்கு வர முடியும். பல சர்வதேச தமிழ் வர்தக புள்ளிகளை கூட உதாரணம் காட்ட முடியும்.

அதில்லாமல், தனி நபர் சொத்துகள் போல அன்றி, இலங்கையின் வளங்கள் அசையாதன, இராணுவ படை எடுப்பின்றி பறிக்க பட முடியாதன.

ஆகவே கடன் கொடுத்தவர்களுக்கு நாமத்தை போட்டு விட்டு, கொரோனா தணிந்த பின் உள்ளே வரும் அந்நிய செலாவணி, நாடுகளின் முதலீடு, நாடுகள் கொடுக்கும் கடன், aid இவற்றுடன் ஒரு கொஞ்ச காலத்தை ஓட்டி பின் மீள வரமுடியும் அல்லவா?

அப்படி வந்தால் அப்போ மீள சந்தையில் கடன் கொடுப்பார்கள், ஏனென்றால் அதுதான் முதளாலிதுவத்தின் குணவியல்பு.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

ஆகவே நான் மேலே சொன்னது போல அறவிடமுடியா கடன் என 7.5 பில்லியனை இலங்கை ஏற்கனவே தள்ளுபடிகாக்கி விட்டது என நான் விளங்கி கொள்கிறேன். இது சரிதானே?

அனால், இவை ஒன்றையும் கடன் கொடுத்தவர்கலால் நிர்ணயிக்கப்பட்டு, சிங்கள அரசால் செய்யப்படவில்லை.  

எழுந்தாமானமாக, மத்திய வங்கியால் செய்யப்பட்டு உள்ளது.

உண்மையில் கடன் கொடுத்தவர், கொடுத்தக கடனை சிங்களம் திருப்பி தர வேண்டியதில்லை என்பதை தீர்மானித்து  இருந்தால், நிலுவையில் இருக்கும் கடனின் தொகையை  குறைத்து பதிந்து , அதற்கு ஒத்த இரண்டாம் பதிவாக (double entry), அரசின் வருமானப் பதிவில் அதே அளவால் கூடி இருக்க வேண்டும். இதை, சொறி சிங்கள மத்திய வங்கி செய்யத் தயாரில்லை. 

அதே வேளையில், ஜூலை 27 இல் ஒருபகுதி கடனை தீர்க்கும் போது,  நிலுவையில் உண்மையாக இருக்கும் கடன் எடுத்த தொகையையே, அதாவது face value இலேயே  தீர்த்தது. 

இன்னொன்றையும் சொறி மத்திய வங்கி செய்துள்ளது. அதாவது, நாட்டுக்கு உள்ளே இருப்பவர்களால் (இதில் வங்கிகளும், கம்பனிகளும், தனியாரும் இருக்கலாம்)  வாங்கப்பட்டு இருக்கும்  ISB (international sovereign bonds) ஐ, அரசுக்குள்ள  உள்நாட்டு கடன் என்றும் பதிவிட்டு உள்ளது. இதை மனதில் வைத்தே, July 27 தீர்த்த கடனில், Ajith Cabraal சொல்லி இருந்தார், தீர்த்ததில் 200 million  USD மீண்டும் திருப்பி நாட்டுக்கு வரும் என்று. ISB, US dollar இல் இருப்பதால், இப்போதைய இக்கட்டான நிலையில் இது தவறான நிதி வழிநடத்தல். ஏனெனில், இப்போதைய இக்கட்டான நிலையில், உள்நாட்டில் உள்ளர்வர்கள் கூட dollar கிடைத்தவுடன் வெளி நாட்டுக்கே அனுப்புபவார்கள்.       

அது உண்மை, ஏனெனில், Ajith Cabraal  சொன்னது  போல நடக்கவில்லை, கையிருப்பில் உள்ள dolars உம் கூடவில்லை (200 million  USD வந்து இருந்தால் கூடி இருக்கும்). 

ஒரு பயனுள்ள விளைவுகளும் இல்லாமல், மதிப்பையும்,  நம்பிக்கையையும் மத்திய வங்கி இழந்ததே நிகர  விளைவு. 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.