Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழீழ கடற்படையான கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் அட்மிரல் சூசையுடனான நேர்காணல்| 22 October 2006


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

சேர்ப்பர்(Admiral) சூசை அவர்களின் இந்த நேர்காணலிலிருந்து தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் பற்றிய அறியாத, அறிந்து மறந்துபோன விடையங்களை அறியலாம். இதை தமிழீழ வரலாறு அறிய விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

 

EN0B65rWsAUOzUB.jpg

 

-------------------------------------------------------------------------------------

 

1. உலக விடுதலை போராட்டங்களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப்பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் சக்திவாய்ந்த அதி நவீனமான ஒரு கடற்படை கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இந்த சிந்தனை மற்றும் பலம் எங்கிருந்து பிறந்தன?

உலக வரலாற்று நூல்களையும், வரலாற்று நாவல்களையும் வாசித்தறிந்த தலைவரின் மனதில் சோழனின் கடற்படை இடம் பிடித்துக் கொள்கிறது(பண்டைய தமிழ் மன்னர்கள் யாவரும் கடற்படையை வைத்திருந்த போது பலம் வாய்ந்த கடற்படையாக சோழர் கடற்படையே) எனவே எம் நாட்டின் நிலையினைச் சிந்தித்த பொழுது ஒரு புறம் வலிமைபெற்றல் தான் எமது விடுதலை பூரணமாகும் என்ற உண்மையை உணர்கிறார் தலைவர். எனவே தமிழீழம் என்பது தனியே தரையை மாத்திரம் மீட்டெடுப்பதால் சூழவுள்ள கடலையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதானால் எம்மிடம் பலம் வாய்ந்த ஒரு கடற்படை உருவாக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவர் மனதில் எழுகிறது. அத்துடன் போராட்ட ஆரம்ப கட்டத்தில் போராட்ட தளம் தமிழகமாகவும் போராட்டக் களம் தமிழீழம் என்றும் இருக்கும்போது எமக்கு இரு நாடுகளுக்குமிடையே கடற்போக்குவரத்து அவசியம் என்ற தேவையும் எழுகிறது. எனவே, 1984 இல் கடற்புறா என்ற அமைப்பை உருவாக்குகிறார். மேலும் பிறநாடுகளுடனான வாணிபத் தொடர்புதான் எமக்கு வலுச் சேர்க்கும் என்பதை உணர்ந்து கப்பலை வாங்கி பன்னாட்டு வாணிபத்தில் ஈடுபட வைக்கிறார். இந்த வகையில் தூரநோக்குடனான தலைவரின் சிந்தனையும் போராட்டத்தின் தேவையும் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்கும் பலத்தை அவருக்குக் கொடுக்கிறது.

 

2. நிலத்தில் நின்று போராடும் தரைப்படைக்கும் கடலில் நின்று போராடும் கடற்புலிகளுக்குமான வேறுபாட்டை குறிப்பிடுவீர்களா?

தரைப்படை, கடற்படைக்குமான வேறுபாடு எனும் போது இது கையிற்கும், காலுக்குமுள்ள வேறுபாடு என்ன என்பது போலத்தான் அன்மையும். ஏனெனில் இரண்டும் வெவ்வேறானவை இரண்டிலும் சண்டைகள் என்ற பொது அம்சத்தை, அதாவது கடற்சண்டைக்கும் தரைச்சண்டையொன்றிற்குமான வேறுபாடு என்று பார்ப்போமானால், தரைச்சண்டையானது நீண்டகாலத்தைக் கொண்ட அதில் ஈடுபடுபவர்கள் தத்தமது தன் கடமைகளைச் செய்வதற்குக் கூட பிறிதொரு அணியால் மாற்றீடு செய்யப்படும் வரை காத்திருக்க வேண்டும். எதிரியின் காப்பரண் அருகே நகரும் போது கனவகை ஆயுதங்களைக் கூட காவிச் சென்றே சண்டையிட வேண்டிய நிலை. அதே வேளை வானூர்தி தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க காப்பு எடுக்க முடியும்.

கடற்சண்டை குறுகிய நேரச் சண்டையாகும். ஒரு சில சண்டைகள் தவிர ஏனையவை மணித்தியாலத்திற்கு உட்பட்ட சண்டைகளே. ஆனால் அந்த நேரம் அதிலுள்ள ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளை விரைவாகவும் நேர்த்தியாகவும் செய்யவேண்டியது அவசியமாகும். தாக்குதலுக்கான 'காப்பு' என்ற சொல்லிற்கே இடமிருக்காது.

தரைச்சண்டையில் முன்நகரும் போது காறமுற்றவர், ஆயுதம் என்பவற்றை நகர்த்துவது சண்டையிடும் போராளிகளே. அவர்களை பின்னணியில் நிற்கும் ஊர்தியில் ஏற்றும் வரை காவிச் செல்ல வேண்டும். கடற் சண்டையில் படகு கரைதிரும்பும் போது காயமுற்றவர் ஆயுதம் என்பன படகுடன் வரும். மற்றும் எமது தரைத்தாக்குதலணியினரின் பணிகள் எதிரியுடன் சண்டையிடல், பிடித்த பிரதேசத்தைப் பாதுகாத்தல், பின் தளத்திலிருந்து அவர்களுக்கான விநியோகம் என்றவாறு அமையும்.

கடற்புலிகளைப் பொறுத்தவரை கடற்கரையோரத்தைப் பாதுகாத்தல், கிழக்கிற்கும் வடக்கிற்கும் போராளிகளை இடம் நகர்த்தல், அதன்போது எதிரியுடன் சண்டையிட்டு வெற்றிகரமாக அப்போராளிகளை உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்தல், இவையெல்லாவற்றிற்கும் மேலாக போராட்டத்திற்குத் தேவையான ஆயுத வெடிபொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களைக் (தொ.தொடர்பு கருவிகள், இயந்திரங்கள், படகுகள்) கொண்டுவந்து சேர்த்தல் என்பனவாகும். மேலும் எமது படகுகளைக் கடலில் தரித்து வைத்திருக்க முடியாது, தேவையின் போது கடலில் இறக்கத்தக்கதாகவும் எதிரியின் வான்கலங்களின் கண்காணிப்பிலிருந்து பாதுகாத்து வைத்திருப்பதாகவும் எனப் பரந்து செல்கிறது.

 

3. தமிழீழக் கடற்பரப்பில் நடந்த சண்டைகளை நீங்கள் நேரில் நின்று வழி நடத்திருக்கிறீர்கள் கடற்போர் அனுபவங்களை பெற்ற மிகப்பெரிய தளபதி நீங்கள் உலக வரலாற்றில் கடற் சண்டை பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் ஆய்வுகள் வியந்து நிற்கின்றன அந்த சண்டைகளை பற்றிய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வீர்களா?

கடற்புலிகள் பிரிவை ஆரம்பித்த பொழுது எமது பணி புதிய போராளிகளை பயிற்சிக்குக் கொண்டு செல்லும் பயிற்சி பெற்றவர்களை தமிழீழம் கொண்டு வருதலும் மற்றும் தேவையான வெடிபொருட்களையும் கொண்டு வருதலும் காயமுற்றவர்களைச் சிகிச்சைக்கென இந்தியா கொண்டு செல்லும் என்றே இருந்தது இக்காலகட்டத்தில் தான் நாம் ஓட்டிகளையும் பின் எமது போராளிகளை ஓட்டிகளாகவும் பயன்படுத்தினோம். இக்காலப்பகுதியில் எம்மிடம் ஆள், படகு, ஆயுதம், வெடிபொருள் வளங்கள் மட்டுப்படுப்படுத்தப் பட்டதாகவே இருந்தது. எதிரியின் பாரிய கலங்களுடன் எதிர்த்துப் போரிட முடியவில்லை. எனவே எதிரியின் கண்ணில் படாதவாறு எம் பயணம் தொடர்ந்தது. எதிரியின் பார்வையில் சிக்கினால் அங்கு உயிரிழப்புத்தான். எனவே எதிரியைக் கண்டு ஓடுபவர்களாகவே இருந்தோம். எனவே எதிரியன் கலங்களுக்கு போக்குக் காட்டிவிட்டு ஓடித்தப்பிய சம்பவமாக 19.6.1983 சம்பவத்தைக் கொள்ளலாம். கப்டன் பழனி, கப்டன் ரகுவப்பா உட்பட 6 போராளிகள் எஸ்.எல்.ஆர் உட்பட சிறுவகை ஆயுதங்களும் வெடிபொருட்களும் கொண்டு தமிழீழம் திரும்பிக் கொண்டிருக்கையில் வானத்தில் வட்டமிட்ட உலங்கு வானூர்தியின் பார்வையிலிருந்து தப்ப முடியாதென எண்ணுகையில் உலங்கு வானூர்தி தாக்கத் தொடங்குகிறது.

ஓடித்தப்பக் கூட வழியற்ற நிலையில் தம்மிடமிருந்த எஸ்.எல்.ஆர் ரைபிள்கள் மூலம் உலங்கு வானூர்தியை நோக்கிச் சுடுகின்றனர். குறி தவறவில்லை. உலங்கு வானூர்தி புகைத்த வண்ணம் திரும்பிச் செல்கிறது. அதேவேளை எதிரியின் கடற்கலங்கள் தாக்கத் தொடங்கவே படகு திரும்பிச் செல்கிறது.

இக்காலப்பகுதியில் சிறிலங்கா கடற்கலங்கள் வடக்குப்பிராந்திய கடலெங்கும் சுற்றுக்காவல் செல்வதுடன் கரையோரமெங்கும் தாக்குதல் நடத்துவதும் மீனவர்கள் மீது தாக்குதல் என அட்டூழியங்கள் புரிந்து வந்த காலம்.

தமிழரின் கடலில் சிங்களக் கடற்கலங்கள் எக்காளமிடுவதைத் தடுக்கவென தலைவர் திட்டம் தீட்டுகிறார். மில்லர் நெல்லியடியில் கொடுத்த அடியிலும் பாடம் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு வல்வைக் கடலிலும் பாடம் புகட்ட எண்ணினார் தலைவர் அவர்கள். 07.10.1990 அன்று வல்வைக் கடலிலே ஆதிக்கம் செய்து வந்த கட்டளைக் கப்பல்களில் ஒன்றான 'எடித்தாரா' மீது இலக்கு வைக்கப்பட்டது. மேஐர் காந்தரூபன், கப்டன் கொலினஸ், கப்டன் வினோத் என்ற 3 கடற்கரும்புலிகள் புதிய சகாப்தத்தைக் கடலில் தொடக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து 5.4.1991 அன்று 'அபிதா' மீது தாக்குதலைக் கடற்கரும்புலிகளான கப்டன் ஜெயந்தன், கப்டன் சிதம்பரம் செய்து நின்றனர்.

இந்நிலையில் தீவகம் முற்றுமுழுதாக சிறிலங்கா அரசபடைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தமையனால் தீவகக் கடலில் அவர்கள் அட்டகாசம் புரிந்தனர்.

இதேவேளை கடற்புலிகள், கடற்புறாவாகிப் பின் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் எனும் புதிய பெயர் சூட்டபட்டது. அதே போல் புதிய போராளிகளும் கடற்புலிகள் அணிக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டு புதிய உத்வேகம் கொண்டது. கண்ணிவெடித் தாக்குதல்கள் இடம்பெற்றன. 22.09.1991 இல் தீவகக் கடலில் சீகாட் படகு சிதைக்கப்பட்டது. பின்னர் முதன் முதல் நேரடிக் கடல் தாக்குதலாக 02.10.1991 வள்ளத் தாக்குதல் இடம்பெற்றது. இதிலேயே முதன் முதல் ஏகே எல்.எம்.ஜி என்ற ஆயுதம் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

பூநகரியை அரச படையினர் கைப்பற்றி முகாம் அமைத்துக் கொள்கின்றனர். யாழ் நகரிலுள்ளோருக்கான ஆனையிறவக் பாதையும் தடை. மக்கள் பூநகரி-சங்குப்பிட்டி பாதையூடாக பயணத்தை மேற்கொள்கின்றனர். தாம் திட்டமிட்டபடி நடக்கவில்லை, இடர் மிகுந்த பாதையிலும் மக்கள் தம் பயணத்தை தொடர்ந்ததை பொறுத்துக் கொள்ளாத அரசபடைகள் ஆனையிறவிலிருந்தும் பூநகரிக்கு சுற்றுக்காவல் என்ற பெயரில் சென்று பூநகரி-சங்குப்பிட்டி ஊடாகப் பயணம் செய்த மக்களை வெட்டியும், சுட்டும் கொலை செய்தனர்.

மக்களின் பயணத்திற்கு பாதுகாப்பளிக்கும் பணியும் கடற்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. கடற்புலிகளின் முதற் தாக்குதற் தளபதி லெப்.கேணல் சாள்சின் தலைமையில் பாதுகாப்புப் பணி தொடர்கிறது. பயணம் செய்யும் மக்களைத் தாக்க வந்த கடற்படையினரும் கடற்புலிகளும் சமர் புரிய மக்கள் தம் பயணம் தொடர்கிறது.

இவ்வேளையிலே எமது தரப்பிலும் லெப்.கேணல் சாள்ஸ், லெப். மகான், கப்டன் வேந்தன், கப்டன் சாஜகான், லெப். மணியரசன், லெப். சேகர், மேஐர் அழகன் என போராளிகள் வீரச்சாவடைய - எங்கெல்லாம் எமக்குத் தடை வருகிறதோ அவற்றைத்தம் உயிராயுதத்தால் தவிடுபொடியாக்கும் எம் இனிய கரும்புலிகளின் சேவை இடம் பெறுகின்றது.

அந்த வகையில் 26.08.1993 அன்று கப்டன் மதன் எ பற்றிக், மேஐர் நிலவன் எ வரதன் ஆகிய கடற்கரும்புலிகள் இரு நீரூந்த விசைப்படகை அழித்துக் காவியமாகின்றனர்.

மேலும், கப்டன் சிவா, லெப். பூபாலன், 2ம் லெப். சுரந்திரன் என இவ்வாறாக மக்கள் காப்புப்பணியிலே கிளாலியில் நாம் இழந்த மாவீரர் தொகை கரும்புலித் தாக்குதலில் பின் நிறுத்தப்படுகிறது.

வடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்கலங்கள் சுதந்திரமாக நடமாடுவதை தடுக்கவெண்ணி 29.08.1993 அன்று கப்டன் மணியரசன், மேஐர் புகழரசன் ஆகியோர் சுப்பர் டோறாவைத் தகர்த்து வீரகாவியமாகின்றனர்.

தொடர்ந்து 11.11.1993 தவளைத் தாக்குதலிலும் கடற்புலிகள் பங்காற்றினர். இத் தாக்குதலிலும் 28 கடற்புலிகள் காவியமாகினர். கண்ணிவெடி, கரும்புலி இடித்தல் என செயலாற்றி வந்த நாம் 16.08.1994 மேலும் வளர்ச்சியடைந்து நீரடி நீச்சல் அணியினரின் உதவியுடன் A 516 கட்டளை கண்காணிப்புக் கப்பல் மற்றும் இழுவைப்படகு என்பவற்றைக் காங்கேசன் துறைமுகத்தில் மூழ்கடித்தோம்.

இதில் முதற் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி காவியமானாள்.

தீவகக் கடல், மாதகற்கடல், வடமறாட்சிப் பகுதிக்கடல், கிளாலி நீரேரி என விரிவடைந்த எமது களம் மேற்குப் பகுதிக்கும் விரிக்கப்படுகிறது. கடலரக்கன் என்று வருணிக்கப்படும் 'சாகரவத்தனா' என்ற கப்பல் எமக்கு இலக்காகிறது. து.சு.ஜெயவர்த்தனா காலத்தில் கொள்வனவு செய்யப்பட்டு பெயரிடப்பட்ட ஆழ்கடல் சுற்றுக்காவல் கலங்கள் இரண்டில் ஒன்று சாகரவர்த்தனா(மற்றையது ஜெயசாகர. இக்கப்பல் தான் 26.3.2006 அன்று வெடித்துச் சிதறிய டோறாவுடன் கொழும்பிலிருந்து வந்து சுற்றுக்காவலில் ஈடுபட்ட கலம்)

தனியே இடிப்பதன் மூலம் மாத்திரம் அவ்வகையான பெரிய கடற்கலங்களைத் தகர்ப்பது கடினம் என்பது எமக்கு எடித்தாரா, அபிதா முன்னைய (1990,1991) தாக்குதல்கள் கற்றுத் தந்த அனுபவம் எனவே நீரடிநீச்சல் அணியினரதும், இடியன் படகுகளினதும் துணைகொண்டு இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

1996 காலப் பகுதி 25.01.1995 எமது படகு ஒன்று 7 பேருடன் கிழக்கு மாகாண விநியோகம் செய்து விட்டு திரும்புகையில் இயந்திரக் கோளாறு காரணமாக கற்குடாவில் கரையொதுங்குகிறது. அவ்வாறு வந்த காலம் தம்மைத் தாக்க வந்ததென்று அரசபடைகள் கூறி படகையும், அதிலுள்ளவர்களையும் கைது செய்கின்றனர். தொடர்பு கிடைக்காமையால் கிழக்கு மாகாண தளபதியுடன் தொடர்பு கொள்ள அவர் படகையும் பொருட்களையும் ஒப்படைத்து சரணடையுமாறு கூற எம்மவர் அதன்படி ஒழுகினன். எவ்வளவு முயன்றும் படகையோ, பொருட்களையோ மீளத் தரவில்லை. கடற்புலிகளின் மரபில் இப்படியொரு செயல் இதுவரை நடைபெறவில்லை. ஏன் அப்படிச் செய்தீர்கள் எனக் கூறி எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வா செய்ய வேண்டாமெனக் கூறிப்பட்டது. இது நிகழ்ந்த சில வாரங்களில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இங்கு குறிப்பிடத்தக்கது. (1987 யுத்தநிறுத்த காலத்திலும் எங்கள் தளபதிகள் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட கடலில் கைது செய்யப்பட்டனர். 1995 இலும் எமது படகுகள் பொருட்கள் போர்நிறுத்த உடன்பாட்டை லெப்.கேணல் திருவடி 30 புதிய போராளிகளை ஏற்றிக் கொண்டு கிழக்கு மாகாணத்திலிருந்து வரும்போது திருமலைக்கு நேரே கடற்படை வழிமறித்து படகைத் திருப்பி துறைமுகப் பகுதிக்குள் வருமாறு கட்டளையிட்டது. சென்ற வாரம் படகையும் பொருட்களையும் எம்மவர் கொடுத்து விட்டு வந்ததை அறிந்தவன் படகையும் போராளிகளையும் ஒப்படைக்க விரும்புவானா? படகுகளை அழித்துக் கொள்ளவும் விரும்பவில்லை, ஏனெனில் 30 புதிய போராளிகள். எனவே அவர்களுக்குப் பணிந்தது போல் போக்குக்காட்டிவிட்டு படகையும் போராளிகளையும் பக்குவமாக கரைசேர்கிறான், அந்த தளபதி. இவ்வாறாக நிலைமையை உணர்ந்து துணிவுடன் செயலாற்றிய மாவீரர்களே இன்றைய எம் வளர்ச்சியின் அடிக்கற்கள்.

சந்திரிக்காவுடனான பேச்சுக்கள் பயனற்றவை என்பது உறுதிப்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகிக் கொள்வதாக உத்தியோக பூர்வமாக அறிவித்த பின் திருமலைத் துறைமுகத்திலேயே நீரடி நீச்சல் அணியைச் சேர்ந்த 4 கடற்புலிகள் ரணசுறு, சூரயா கப்பலைத் தகர்த்துக் கடலோடு கரைந்தார்கள்.

மேலும், எம் போராட்டத்திற்கு வளம் சேர்த்தல் பணியின் போது சிறிலங்காக் கடற்படையினர் வழிமறித்த வேளைகளில் அவற்றைத் தாக்கியழித்து, சண்டையிட்டு எமது விநியோகப் படகுகளை பாதுகாத்த சமர்கள் ஏராளம்.

எங்கும் எம்மால் தாக்கிட முடியும் என்ற கருத்தை எதிரிக்குக் கூறிய கொழும்புத் துறைமுக தாக்குதல், எந்த அரணுக்குள் நுழைந்தும் எம்மால் தாக்க முடியுமென்பதை உணர்த்திய தாக்குதல் ஆகும். யாழ்ப்பாணத்தை விட்டுவந்தும் புலிகள் பலம் குறைந்து விட்டார்கள் என்று கூறிய காலத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இதுவாகும்.

எமது கடற் போக்குவரத்திற்குத் தடையாகவும் மக்களின் தொழில் செய்வாற்கு குறிப்பாக கடற்தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் விவசாயிகளுக்கு இடையூறாகவும் இருந்த முல்லைப் படைத்தளம் விடுதலைப் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டது. ஓயாத அலை-1 எனப் பெயரிடப்பட்ட இத் தாக்குதலில் கடற்புலிகளின் படகுகள் கடலில் அணிவகுத்து நின்று கடலில் வரும் உதவிகளைத் தடுத்து நிறுத்தினர். ரணவிரு என்ற கப்பலைத் தகர்த்ததுடன் சிறிலங்கா வான்படை மற்றும் கடற்படையினரின் தாக்குதலுக்கு முகம் கொடுத்தவாறு பாதுகாப்பு வழங்கி நின்றனர்.

ஓயாத அலைகள் ஒன்று, பின் மூன்றாகி ஒட்டிசுட்டான் இராணுவத்தை ஓமந்தை வரை ஓடஓட விரட்டியாயிற்று. அடுத்து தலைவர் அவர்களின் இலக்கு ஆனையிறவு என்றாயிற்று. தோல்வியில் இருந்து கற்று அதனையே வெற்றியாக மாற்றிடும் எம் தலைவர் திட்டமிடுகிறார். ஆம் 1991 இல் ஆனையிறவை வெற்றி கொள்ள முடியமைக்கான காரணம் வெற்றிலைக்கேணியில் எதிரி தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு எமது முற்றுகை உடைத்தெறியப்பட்டமையே. எனவே இம்முறை அவ்வாறே நாமும் தரையிறக்கம் செய்து சுற்றிவளைத்துத் தாக்குவது என முடிவாகிறது. 13 கிமீ கரைத் தொடர்பின்றி குடாரப்பைத் தாண்டி மாமுனையில் தரையிறக்க முடிவெடுக்கப்படுகிறது. எதிரியின் டோறாக்களுடன் எமது சண்டைப் படகுகள் மோத, தாளையடி வெற்றிலைக்கேணியில் இருந்த கடற்படையினரின் தாக்குதலைச் சமாளித்தவண்ணம் தரையிறக்கம் 26.03.2000, இரவு 8:45இற்கு இடம் பெறுகிறது. அதனைத் தொடர்ந்து தரையிலும் எமது அணியினர் தாக்குதல் தொடுத்து கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி, தாளையடி முகாம்களைத் தகர்த்த வண்ணம் முன்னேறுகின்றனர்.

வெற்றிபெற முடியாதது என வெளிநாட்டு வல்லுநர்களாலும் பரிந்துரைக்கப்பட ஆனையிறவுப் படைத்தளத்தில் புலிக்கொடி ஏற்றப்படுகிறது.

இவ்வாறாக முதலாம் கட்ட ஈழப்போரில் எமது பணி விநியோகம், போராளிகள் இடமாற்றம் என அமைந்தது. இரண்டாம் கட்ட ஈழப்போர்க் காலத்தில் எதிரிக்கு கடலிலும் கரும்புலித் தாக்குதல் நடைபெறும் என்பதை உணர்த்தியதோடு கடற்கண்ணித் தாக்குதல்களும் என கடற்புலிகள் தாக்குதலிலும் ஈடுபடத் தொடங்கினார். மூன்றாம் கட்ட ஈழப்போரில் மேற்கூறப்பட்டவற்றுடன் முகாம் தகர்ப்புத் தாக்குதலுக்கு தாக்குதலணியினரை குறித்த இடங்களில் தரையிறக்கம் செய்தல் எனப் பரந்து நின்றது.

மேற்கூறப்பட்ட காலங்களிலெல்லாம் கடற்தொழிலாளர்கள் எமக்குப் பக்கபலமாக பின்தள உதவிகளைச் செய்து நின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எழுச்சி மக்களே கடலிலும் எம்முடன் ஆயுத மேந்திப் போராடும் நிலைக்கு மக்களை தள்ளிவிட்டிருக்கிறது எனலாம். கடற்புகளின் துணைப்படை அணியும் கடற்புலிகளுடன் கைகோர்த்து தலைவரின் ஆணையை எதிர்பார்த்து நிற்கிறது.

 

4. கடல் பற்றிய அறிவு கடற்புலிகளிடம் நிறைந்துபோய்க் காணப்படுகிறது. சிறிலங்காக் கடற்படைக்கு எதிராக நிறைய பாதுகாப்புச் செயற்பாடுகளைச் செய்திருக்கிறீர்கள். 1983 இலிருந்து மிக வேகமாக வளர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அதி நவீன ஆயுதங்களையும், படகுகளையும் வைத்திருக்கிறீர்கள். இந்திய கடற்படைக்கு நிகரான சிறிலங்காவின் கடற்படையை எதிர்கொள்ளும் பலத்தை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?

எதிரியின் சூடுகள் நிறுத்தப்பட்டாலே எமது கலம் பாதுகாக்கப்படும். எனவே எதிரி எம்மை வீழ்த்துவதன்முன் நாம் எதிரியை நிலைகுலையச் செய்வதென்பதே சண்டையில் வெற்றியின் தாற்பரியம். அந்த வகையில் காப்பெதுவும் எடுக்க முடியாத வெட்டவெளிக் கடலில் எதிரி வீழ்த்தப் படாவிட்டால் அவனது சன்னம் எம்மைத் துளைக்கலாம். எனவே குறிதவராக சூடு, சந்தர்ப்பத்திற்கேற்ப படகை உரிய முறையல் ஓடிக்கொடுத்தல், எதிரியின் இலக்குகள் பற்றிய தெளிவான அறிவு, எல்லாவற்றையும் விட வேகமான நகர்வும், முடிவெடுத்தல் திறனும் மற்றும் இயங்குநிலைத் தடைகளை இலகுவில் இனங்கண்டு விரைவில் திருத்தம் திறன் எனப் பல இதில் அடங்குகின்றன.

இந்த வகையில் இவற்றில் திறம்படப் போராளிகள் இயங்க வேண்டுமென்பதற்காக அவற்றிற்கான பயிற்சிகள், ஊக்குவிப்புகள், தவறுகளை இனங்கண்டு அவை திரும்பச் செய்யப்படாதவாறான அறிவுறுத்தல்கள் எனக் கூறிக் கொள்ளலாம். மேற்கூறப்படும் இந்த செயற்பாடுகள் அநேகம் உறுதிப்படுத்தல்கள் அண்ணையின் நேரடிக் கண்காணிப்பில் இடம் பெறுவதுண்டு. இதுவே எங்கள் மிகப் பெரிய பலம். மேலம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடனான சரியான வழிநடத்தல் என்று கூறிக் கொள்ளலாம். இவற்றுடன் அண்ணை சொன்னதைச் செய்தே முடிக்க வேண்டும் என்ற பற்றுறுதியுடன் களமாடும் எம் கடற்புலி வீரரின் அசையாத உறுதி. மற்றும் ஒரு கலத்தைத் தாக்கி வந்து கூறும்போது அது செய்தால் வீரமல்ல. அதைவிட அழிக்கப்பட வேண்டிய இலக்கு இருக்கிறது அதை அழித்தாலே வெற்றி என இலக்கைப் படிப்படியாக உயர்த்திச் செல்லும் தலைவரின் அணுகுமுறை. இதற்கு உதாரணமாகச் சொல்வதானால் 26.08.1993 கிளாலிக் கடல் நீரேரியில் கடற்கரும்புலித் தாக்குதலின் மூலம் 'வோட்டர் ஜெற்' இரண்டைத் தாக்கியழித்த பின் அண்ணையைச் சந்திக்கிறேன். அப்பொழுது அண்ணை சொல்கிறார், வோட்டர் ஜெற் அடித்தால் காணாது டோறா மூழ்கடிக்க வேண்டும் என்று. 29.08.1993 இல் சுப்பர் டோறா அடித்தபோது டோறா அடித்தது சரி, வீரயாவை அடியுங்கள் பார்ப்பம் என. மெல்ல மெல்ல இலக்கை உயர்த்திச் செல்வதன்மூலம் பலம் வாய்ந்த எதிரியுடன் எதிர்த்துத் தாக்கும் எமது திறனை வளர்த்த பெருமை அண்ணனையே சாரும் என்றால் மிகையன்று.

 

5. கடலில் பல நீச்சல் பிரிவுகளைத் தாங்கள் உருவாக்கி வைத்திருப்பதாகத் தகவல்கள் பல தெரிவிக்கின்றன. நீச்சல் பிரிவின் மிக நீளமான கடலில் நீந்திச் சென்று தாக்குதல்களை நிகழ்த்த வல்லவர்கள் எனவும் குறிப்பிடுகிறார்கள்.

உண்மை.

அதிசயிக்கத் தக்க வகையில் பல சந்தர்ப்பங்களில் எம் போராளிகள் நீந்திக் கரைசேர்ந்த சம்பவங்கள் உண்டு. 1986 இல் படகு விபத்தொன்றில் கடலில் மண்டைதீவிலிருந்து அடித்த தேடொளி வெளிச்சத்தில் பிரிந்து சென்று போராளி மறு நாள் நீந்திக் கரைசேர்ந்தமை கடற்புலிகளுக்கும், தலைவருக்கும் வெளிச்சம். 28.08.1992 கடற்புலிகள் எதிரியின் கலமான வோட்டர் ஜெற்றைச் சேதமெதுவுமின்றி கொண்டு வந்து சேர்த்தார்கள் என்பது யாவரும் அறிய முடிந்தது.

கரும்புலித் தாக்குதல்களில் பல நீச்சல் திறமையினாலே சாதிக்கப்பட்டவையாகும். அந்த வகையில் 15.8.1994 இரவுப் பொழுது. ஊர் உறங்கிவிட்டது. இலட்சிய உறுதியில் இரும்பாகி எதிரிக் கப்பலின் முடிவே தம் வெற்றியாகக் கொண்ட மீன் குஞ்சுகள் வைக்கப்பட வேண்டிய வெடிகுண்டுடன் நீந்துகின்றன. ஆம் பெரிய வெடியோசை உலகமே அதிசயித்து நிற்கிறது. முதற் பெண் கடற்கரும்புலி காவியமாக மற்றைய மீன் நீந்திச் சென்றதை மற்றவர்கள் அறிந்திடவில்லை. இவ்வாறாக 19.09.1994 கற்பிட்டிக் கடற்பரப்பிலும் எமது மீன்களின் செயற்பாடு பற்றி தலைவருக்கும் எங்களுக்கும் மட்டும் தெரிகிறது. ஆனால் சாகரவர்த்தனா கப்பல் மூழ்கடிக்கப்பட்டு அதன் கப்டன் பொயகொட கைது செய்தமையும், கடற்கரும்புலிகள் நால்வரும் காவியமான கதை உலகறிந்தது.

இவ்வாறாக அநேகமான கரும்புலித் தாக்குதல்களிலும் எமது போராளிகளின் நீச்சல் திறமையே எம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்கிறது.

இங்கு மேலுமொரு சம்பவத்தைக் குறிப்பிடுவது பொருத்தமானது என நினைக்கிறேன். 16.07.1995 புலிபாய்ச்சல் நடவடிக்கையின் ஓரம்சமாக காங்கேசன் துறைமுகத்தில் தாக்குதல் இடம்பெறுகிறது. கரும்புலிப்படகு இடிக்கமுன் வெடிபிடித்தமையால் அதனைக் கைவிட்டு நீந்தும்படி கடற்கரும்புலிகள் இருவருக்கும் கட்டளை இடுகின்றேன். உடன் தனக்குக் கரும்புலிக்கான சந்தர்ப்பம் தரவேண்டுமென்ற வேண்டுகோளுடன் கடலில் குதிக்கிறாள் செவ்வானம். இரவு விடிந்து விட்டது. எதிரி இருவரை உயிருடன் பிடித்துவிட்டேன் என எக்காளமிடுகிறான்.

திசைபார்த்து நீந்தி வருவாள் என எதிர்பார்த்த செவ்வானம் வரவில்லை. விதையாகிப் போனவர்கள் பட்டியலில் சேர்க்க மனமின்றி சேர்க்கப்படுகிறது. மறுநாள் வீரச்சாவு நிகழ்வுகள் இடம்பெற ஆயத்தங்கள் நடைபெறுகின்றன. அதிகாலை மயிலியதனை முகாமினருக்கு ஓர் ஆச்சரியம். வீரச்சாவடைந்து விட்டான் என இருந்த செவ்வானம் தள்ளாடியபடி கடற்கரையில்... நிஜமா? நினைவா? சந்தேகத்துடன் கடற்கரை நோக்கி ஓடுகிறார்கள் போராளிகள். ஆம். நிழலல்ல. நிஜம்தான். செய்தி எங்கும் அறிவிக்கப்படுகிறது. தனது மகளின் வித்துடல் வரக்கூடுமோ கரையொதுங்குமோ? தருவார்களோ? என எதிர்பார்த்த பெற்றோர் முன் செவ்வானம்!

ஆம், 24 மணி நேரம் கடலில் நீந்தி இலங்கை வான்படை, கடற்படையினருக்குப் போக்குக் காட்டி காட்டி சரியான திசையில் நீந்திக் கரைசேருகிறாள் செவ்வானம். இதே போல் சுண்டிக்குளத்தில் எமது நிலையத் தாக்குதலுக்கான பழிவாங்கல் தாக்குதல். 07.10.1999 இல் எதிரியின் டோறா படகைத் தாக்கி, அதிலேறி, அதிலிருந்த 20 மிமீ குழல் கழற்ற, பாதுகாப்பிற்கு வந்த டோறா தாக்கத் தொடங்க, அந்த இரும்புக் குழலுடன் நீந்தி எம் படகேறி அதைக் கொண்டு வந்து சேர்க்கிறான் எம் துணைத் தளபதியான லெப்.கேணல் நிரோயன்.

'உப்பில் உறைந்த உதிரங்கள்' படம் எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கும்.

ஆம், உண்மைச் சம்பத்தையே படமாக்கப்பட்டுள்ளது. காயமுற்ற நிலையில் கிளாலியில் எதிரியின் முகாமருகே காயமுற்ற விழுந்த போராளி மறுநாள் நீந்தி எம் கரையேறி இன்று வரை போராளியாகக் கடமையாற்றுகிறான். இவ்வாறு நீச்சல் திறமையின்றேல் நாம் இன்று முன்னேறியிருக்கவே முடியாது. இந்த நீச்சல் திறமையினை வளர்க்கவே வருடாவருடம் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல் போட்டிகளும் உள்ளடக்கப்பட்டு, வெற்றி பெற்றோருக்குப் பரிசளித்து ஊக்குவிக்கிறார் தலைவர் அவர்கள்.

 

6. 1983ம் ஆண்டு காலப்பகுதியில் 'ஓட்டிகள்" என அழைக்கப்படுபவர்கள் கடற் புலிகளுடன் இணைந்து செயற்பட்டிருந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை பற்றியும் அவர்களுடைய கடற் பயணங்கள் பற்றியும் எங்களுக்குக் கூறுவீர்களா?

வடமராட்சியின் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த மீனவர்கள். இவர்கள் இந்திய இலங்கை வணிகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள். இவர்கள் தமது படகுகளிலேயே தம்பயணங்களை மேற்கொண்டனர். நாமும் தமிழகம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டபொழுது நாம் அவர்களை நாடி எம்மை கூட்டிச் செல்லுமாறு கேட்டு அவர்களின் உதவியுடன் சென்று வந்தோம். எமக்குத் தேவையான பொருட்களை மற்றும் போராளிகளை இடம் மாற்றுவதில் எமக்குக் கைகொடுத்தவர்கள் இவர்கள். அவர்கள் பயன்படுத்திய சிறிய படகுகளே அப்பொழுது எம் பயணத்திற்கான படகுகள். வேகமும் குறைவு. எனவே தான் எதிரி கண்ணில் பட்டால் திரும்பி வருவது மிகக்குறைவு. எமது பொருட்களைக் கொண்டு வரும் வழியில் எதிரியினால் அவர்கள் மடிவதைப் பொறுக்காது எமது பயணத்தைப் போராளிகளைக் கொண்டே நடத்த முடிவெடுத்த தலைவர் அவர்கள் 1985 இன் பின் கடற்புலிகளின் படகுகளே இப் பணியில் ஈடுபட்டன.

 

7. ஆசியாவினுடைய மிகப்பெரிய பலமாகத் திகழும் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தைப் புலிகள் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என சில சக்திகள் அச்சம் கொண்டிருக்கின்றன. கடற்புலிகளுக்குத் தங்களுடைய பலம் பற்றித் தெரியும். அவர்களுக்கு மக்கள் பலம் இருக்கிறது. இந்து சமுத்திரப் பிராந்தியத்திலுள்ள இந்தத் திருகோணமலைத் துறைமுகம் பற்றி நெப்பொலியன் கூட அறிந்திருக்கிறார். அவர் கூட இத் துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசியிருக்கிறார். நீங்கள் இத்துறைமுகம் பற்றிய வரலாறுகளையும், முக்கியத்துவங்களையும் எமக்கு விரிவாகக் கூறுவீர்களா?

கடற்கலங்கள் நிறுத்தப்படும்போது காற்றினாலும், கடலலைகளாலும் பாதிக்கப்படாமலிருக்கவே துறைமுகங்களில் கட்டப்படுகின்றன. சிறிய படகுகளாயின் கட்டுப்படுத்த கடலிலே நீர்த்தடைகள் எனப்படும் (water break) கட்டப்படுகின்றது.

அந்த வகையில் கொழும்பு, காங்கேசன் துறை என்பவற்றில் இவ்வாறான நீர்த்தடைகளைக் காணலாம். ஆனால் திருக்கோணமலைத் துறைமுகமானது இயற்கையாகவே இந்த பாதுகாப்பினைக் கொண்டுள்ளது. இதுவே இதன் சிறப்பம்சமாகும்.

இந்த வகையில் திருமலைத் துறைமுகம் உட்துறைமுகப்பகுதி, வெளித் துறைமுகப்பகுதி என வகைப்படுத்தப்படக் கூடியதாயும் வருடம் முழுவதும் கடற்கலங்களைப் பாதுகாப்பாக விடக்கூடியதான இயற்கை அமைப்பை கொண்டிருப்பதையும் காணலாம். இந்த அம்சம் காரணமாகவே ஐரோப்பியர் இதனைத் தமது படையக் கேந்திர மையமாக வைத்திருந்துள்ளனர். அத்துடன் தென்னாசியப் பிராந்தியங்களிலுள்ள துறைமுகங்களில் சிறந்த இயற்கைத் துறைமுகமான இதன் அமைவிடமும் இதற்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.

இந்து சமுத்திரத்தினூடாகப் பயணம் செய்யும் கப்பல்கள் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்லக் கூடியதான ஒரு துறைமுகமாக இது விளங்குகிறது.

வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும், பெரிய கலங்களை உட்கொண்டு செல்லக்கூடியதான ஆழத்தையும் கொண்டிருப்பதன் காரணமாகவே இது பாதுகாப்புப் படையின் கலங்கள் பாதுகாப்பாக விடப்படும் இடமாக உள்ளது.

இதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் இந்து சமுத்திரத்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமென்பதன் காரணமாகவே 1948.02.04 இல் இலங்கைக்குச் சுதந்திரம் கொடுத்த போதும் பிரித்தானிய கடற்படை அதிகாரிகள் (எச்.எம்.எஸ் கை பிளையர் - HMS Highflyer) என்ற இந்தத் துறைமுகத்தை 15.10.1957 இல் தான் இலங்கையிடம் ஒப்படைத்தனர்.

சிறிலங்காக் கடற்படையின் நடவடிக்கைத் தலைமையகமும் இங்குதான் உள்ளது. கப்பல்கட்டும் நிறுவனமும், கடற்படைப் பயிற்சிக் கல்லூரியும் இங்குண்டு. அத்துடன் கடற்படையின் அதிவேகப் பீரங்கிப் படகு அணியும், அதிவேகத் தாக்குதல் அணியின் கலங்களும் இங்குதான் நிறுத்தப்படுகின்றன.

 

8. கடல்பற்றிய ஒரு கல்விக்கான பாடசாலையொன்றை நீங்கள் எதிர்காலத்தில் நிறுவுவீர்களா?

நிச்சயமாக ஏன் தற்பொழுதுகூட அடிப்படை படைத்துறைப் பயிற்சியை முடித்து வரும் போராளிகளுக்கு எமது பிரிவில் சோக்கப்பட்டவுடன் லெப்.கேணல் நிரோஜன் ஆரம்பக் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் கடல்சார் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பே வேலைகளுக்கெனப் பிரித்து விடப்படுகின்றனர். 1992 இல் ஆசிர் கடற்படைப் பயிற்சிக் கல்லூரி,பின் லெப் கேணல் நரேஸ் தொழில் நுட்பக் கல்லூரி, லெப்.கேணல் பெத்தா அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி, ஏன் இன்று கட்டளை அதிகாரிகளாகக் கடமையாற்றும் பலர் கடற்புலிகளின் கடற்படைப் படைத்துறைப் பள்ளியில் பயின்று வந்தவர்களே.

இந்த வகையில் ஆயுதம், இயந்திரம், படகோட்டம், வழிகாட்டலும் தொலைத் தொடர்பும் எனக் காலத்திற்குக் காலம் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு பயிற்றப்படுகின்றன. இவற்றின் பரிணாம வளர்ச்சியாக நிச்சயமாக 'கடற்படை கல்லூரி' வரும் என்பதை இங்கு கூறி வைக்க விரும்புகிறேன்.

 

9. ஆழிப்பேரலை போன்ற பேரழிவுகளை முன்கூட்டியே அறியும் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் வண்ணமான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறீர்களா?

ஆம். தலைவர் அவர்கள் இதற்கான முயற்சியினை மேற்கொண்டு வருகிறார்.(கிளிநொச்சியில் அறிவியல் நகரில் 'வானிலை ஆராய்ச்சி மையம்')

 

10. எமது கடல் மாசடைந்து வருகிறதாக ஒரு செய்திக்குறிப்பின் மூலம் அறிந்தேன், கடல் மாசடைவதற்கான காரணங்கள் எவை? கடல் மாசடைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுத்து வருகிறீர்கள்?

  1. வைத்தியசாலைக் கழிவுகள் சந்தைக் கழிவுகள் போன்றன கடலில் கொட்டப்படுதல்.
  2. கடற்கலங்கள் அழிக்கப்படுதலின் போது அவையும் கடலிலேயே விடப்படுகின்றன.
  3. அல்சீனியா என்ற தாவரம் வளர்ந்து சிறு மீன்கள், இறால் உற்பத்தியைத் தடை செய்தல்.

ஆழிப்பேரலை மூலம் இந்தோனேசியா போன்ற இடங்களிலிருந்து வந்த பெருமரங்கள், கழிவுப்பொருட்கள் என்பன அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அல்சீனியா என்ற தாவரத்தை ஓய்வு நேரங்களில் சமாசம் மூலம் மக்கள் பிடுங்கி அகற்றும் பணியிலும் ஈடுபட்டுள்ளர்.

 

11. உலக விடுதலைப் போராட்டங்களை வழிநடத்திய தலைவர்களுடன் ஒப்பீட்டுப் பேசுவதற்கு உரியவரான எமது தேசியத் தலைவரோடு அருகில் நின்று பல போர்க் களங்களைக் கண்ட நீங்கள் எமது தேசியத் தலைவருடைய ஆளுமைகள் பற்றிப் பேசமுடியுமா?

வாசிப்பதில் முக்கிய கவனம் செலுத்துபவரான தலைவர் அவர்கள் சுதந்திரப் போராட்ட வரலாறுகள், கடற்புறா போன்ற வரலாற்று நாவல்களை வாசித்த பொழுது கடாரம் வென்ற சோழனின் கடற்போர் பற்றிய பகுதி அவரை மிகவும் ஈர்த்துள்ளது.

எமது தமிழீழம் ஒரு புறம் சிறிலங்காவினாலும் ஏனைய பகுதிகள் கடலாலும் சூழப்பட்டே காணப்படுகின்றது. தரையில் எவ்வளவு வலிமை இருந்தாலும் கடலில் நின்று தாக்கும் எதிரிக்கு முகம் கொடுக்க மற்றும் பிற நாட்டுத் தொடர்புகளுக்கு கடலில் நாம் பலம் பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்கிறார். மேலும் ஆரம்பத்தில் எமது போராட்டத் தளம் தமிழகத்திலும், போராட்டக்களம் தமிழீழத்திலும் என இருக்கும் போதும் கடற் பயணம், எதிரியைத் தாக்குதல் என்பன பறறிய தேவையை நன்குணர்ந்து 1984 இல் கடற்புலிகள் என்ற அமைப்பை உருவாக்குகின்றார். இங்கு நாம் தலைவரின் தூரநோக்குடைய சிந்தனையைச் செயற்பாட்டை நோக்கக்கூடியதாக உள்ளது. அதாவது 1984 இல் கடற்புலிகள் என ஆரம்பிக்கும் பொழுதே கடலில் எதிரியை வெல்ல நீரடி நீச்சல் அணியின் தேவையை உணர்ந்து அக்காலப்பகுதியிலேயே நீரடி நீச்சல் அணிக்கான ஒரு பயிற்சியை ஆரம்பித்து அவர்கள் அதில் திறமை பெற வேண்டும் என வலியுறுத்தி விடுகின்றார். எமது வெற்றிகளுக்கு பல இடங்களில் கை கொடுத்து நிற்கும் இப்பிரிவின் தேவையை அக்காலத்தில் உருவாக்க நினைத்தார் தலைவரவர்கள். மற்றும் எமது கடற்கலங்களின் தேவையை நிறைவு செய்ய நாமே எமது படகுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்குடன் படகுக் கட்டுமானப் பிரிவு உருவாக்கப்பட்டு படகுகள் உருவாக்கப்பட்டன.

இவற்றை விட பிரதேச வாணிபத் தொடர்புகள் எமக்கு பல வழிகளில் கை கொடுக்கும் என நினைத்து 1985ல் கப்பல் வாங்கி பன்னாட்டு தொடர்பை உருவாக்கினார். கரந்தடிப் போராளிகளாக மிகக் குறைந்த தொகையினராக இந்த போதும் எதிர்காலத் தேவைகள் கருதி உபபிரிவுகளை உருவாக்கி நின்ற தலைவரின் சிந்தனைத்தினை செயற்படுத்தலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

போராட்டங்கள் மக்கள் மயப்படுத்தப்பட்டவையாகும் போதே வெற்றியெமக்கு என்பதில் அசையாத உறுதிகொண்ட தலைவர் அவர்கள், கடற்புலிகள் பிரிவு உருவாக்கப்பட்டபின் கடற்புலிகளுக்கும், மக்களுக்குமான தொடர்பு வலுப்பெற வேண்டுமென்பதை உணர்ந்து கடற்புலிகளுக்கெனத் தனியாக அரசியற் பிரிவொன்றை 1991 இல் உருவாக்கி நின்றார். 

1992.08.26 அன்று அண்ணையைச் சந்தித்து 28.08.1992 மண்டைதீவுக்கடலில் கட்டிநிற்கும் ஒரு வோட்டர் ஜெற்றைத் தகர்க்க முடிவெடுத்ததைக் கூறினேன். அப்பொழுது 'ஏன்ரப்பா கிட்டப்போய் தகர்க்கிறதை விட இழுத்து வரலாமே' என்று அண்ணா கேட்டார்.

அதன்பின் தான் நாம் அதனை இழுத்து வந்து குருநகர் மக்களின் உதவியுடன் கரையேற்றினோம். கடற்புலிகள் மக்களுடன் நன்கு பழகி இருக்கவேண்டுமென்றும் என்ற அண்ணனின் சிந்தனையின் பலனை நன்று உணர்ந்த சந்தர்ப்பம் இதுவாகும்.

1992 காலப்பகுதி கடற்புலிகள் மகளீரணி உருவாக்கல் பற்றி அண்ணை கூறி, லெப்.கேணல் நளாயினி தலைமையில் 30 பேர் கொண்ட அணி தரப்பட்டது. இவர்களால் முடியுமா? என்ற எனது வியப்பு அண்ணனின் கூற்றிற்கு மறு கதை கதைக்காமல் மனதிற்குள் சங்கமமாகின்றது. நீச்சல் பயிற்சி தொடங்குகிறது. ஒரு கடல்மைல் நீந்தி முடித்தால் ஜிப்சி வாகனத்தை தருகிறேன் எனக் கூறினேன். 10 நாட்களில் அவர்கள் நீந்தி முடித்து ஜிப்சியைத் தமதாக்கிக் கொள்ள அண்ணனின் நம்பிக்கையையும், இவர்களின் செயற்றிறனையும் கண்டு எம் கை வலுப்பெற்றதை உணர்ந்தேன்.

எதிரியின் கலத்தை அழிப்பதைவிட அதைக் கைப்பற்றுவதே மேல் என்ற அண்ணனின் முன்னைய கருத்தே பூநகரிச் சமரில் ஐந்து நீருந்து விசைப்படகுகளை நாம் கைப்பற்றிக் கொண்டு வர வழிவகுத்தது.

1996 ஆண்டு மாசி நடுப்பகுதி எமது கப்பல் 70 கடல் மைலில் வந்து கொண்டிருந்தது. இந்திய இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் எமது கப்பலை மறித்து நிற்கின்றன. அண்ணை சொல்கிறார், படகில எங்கடை ஆக்களை அனுப்பி மாலுமிகளை மீட்டெடு எனக் கூறுகிறார். எனக்கு சந்தேகம். சிறிய படகில் இரு நாட்டுக் கடற்படைக்கிடையில் சென்று ஆக்களை மாற்றி வருவது சாத்தியமா? அண்ணை சொல்கிறார். அனுப்பினேன். மாலுமிகள் பக்குவமாகக் கரை வந்து சேர்ந்தனர்.

எம் போராளிகள் கப்பலைக் கொண்டு வந்து சேர்க்கக் கடுமையாக முயற்சித்தும், இறுதியில் கிபிர் தாக்குதலில் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. முடியும் என்ற நம்பிக்கையுடனான செயற்பாடே வெற்றிக்கு வழி என்ற அண்ணனின் கொள்கையை அனுபவத்தில் உணர்ந்து அடுத்த நோக்கினைப் பற்றிப் பார்ப்போம்.

1991 ம் ஆண்டு ஆனையிறவுத்தளம் முற்றுகையிடப்பட்டு எம்வசம் வீழ இருந்த நிலையில் வெற்றிலைக்கேணியில் தரையிறக்கம் செய்யப்பட்டு எமது முற்றுகை முறியடிக்கப்பட்டது. எனவே அதே பாணியில் ஆனையிறவைக் கைப்பற்ற வேண்டுமென முடிவெடுத்த தலைவர் குடாரப்புவில் தரையிறக்கிக் கண்டிவீதியை ஊடறுத்து இத்தாவில் பகுதியில் நிலைகொண்டு எதிரியைத் தாக்குவதென முடிவெடுக்கிறார். திட்டத்தை அண்ணை என்னிடம் சொல்ல, என்னிடமிருந்த எரிபொருள் கொண்டுபோய் இறக்க மட்டும் தான் போதுமானது என்பதை அண்ணையிடம் கூறினேன்.

தரையிறக்கப்பட இருந்த அணியினருடன் அண்ணை கதைக்கும்போது இரண்டாம் உலகப்போரில் நடந்த தரையிறக்கத்தின்போது அவர்களின் தளபதி தரையிறக்கம் செய்யப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களை எரித்தமை பற்றிக் குறிப்பிட்டு, நான் எமது படகுகளை எரிக்க மாட்டேன் எனக் குறிப்பிட்டு, மீளப் படகுகளில் ஏற்றி எடுக்க மாட்டேன் வெற்றி பெறுவதே முடிவு என்பதை அவர்களுக்கு உணர்த்தினார்.

அதை விளங்கிக் கொண்ட தாக்குதல் அணியினரும் ஆனையிறவைக் கைப்பற்றி கண்டிவீதியால் தான் வருவம் என உறுதியளித்தது அதை நிறைவேற்றினர். போராளிகளின் மன உறுதியை வளர்த்து அவர்களது ஆற்றலை வெளிக் கொணர்ந்த விதம் எம்மை வியக்க வைத்தது.

இழப்புக்களையும் துன்பங்களையும் கண்டு துவண்டு விடும் மனம் தலைவரிடம் இல்லை, மாறாக துன்பத்தைத் தந்தவனுக்கே அதனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தத்துவத்தை கொண்ட மனமே உள்ளது.

ஒரு முறை மூன்று படகுகளையும் 30 போராளிகளையும் நாம் இழக்கிறோம். அந்த இழப்பு எம்மை நிலை குலையச்செய்கிறது. அந்த மனச் சோர்புடன் தலைவரிடம் நடந்ததைப் போய்க் கூறிய போது தலைவர் சொல்கிறார் "இஞ்சை வா, முதல் அவன்ர மூன்று டோறாவையும் அதில இருக்கிற கடற்படைகளையும் அழி. அதுக்கு என்ன வேணுமோ கேள் நான் உடனே தாறன்" என்று இழப்புக்குள்ள இருந்து எங்கள தட்டிக் கொடுத்து, தானும் அந்த அந்த இழப்புக்குள்ளையே ஆட்கொண்டு விடாத மன உறுதியையும் காணக் கூடியதாய் இருந்தது.

ஒவ்வொரு ஆயுதங்களிலும் அவரவருக்குச் சிறப்புத்தேர்ச்சி வேண்டும் என்பதில் தலைவர் அக்கறை கொண்டிருந்தவர் என்பதை விளக்க ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறன். ஒரு முறை தலைவர் ஆர்.பி.ஜி. அனுப்பியிருந்தவர். அதை புலேந்தி அம்மான் ஆட்கள் புல்மோட்டையில வைச்சு ராங் ஒன்றை அடிக்க, அதுல ராங் வெடிக்கேல்லை, அது முளைச்சிற்று எங்கோ போயிற்று. அப்ப எல்லோரும் முடிவெடுத்தனர், அந்த ஆயுதம் பயனளிக்காது எண்டு. அப்படியே வைச்சிற்றினம். தலைவர் சொல்லி அனுப்புறார், "மண்ணை நிறைச்சுப்போட்டு பூச்சாடியா கவுட்டு வைக்கட்டாம்" என்று பேசிப் போட்டு ஆயுதத்தைக் கொண்டு வருமாறு சொல்லிவிட அதைக் கொண்டு போய்க் கொடுக்கிறம். அப்ப அண்ணை சொல்லுறார் "ஆயுதங்களைக் கொடுத்தா ஸ்ராண்ட் போட்டு அடுக்கி வைக்கிறது. ஏதும் எண்டால் அதத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் அடிச்சுப்போட்டுத் திரும்பவும் ஸ்ராண்டில வைக்கிறது. அந்த ஆயுதத்தால 100 மீற்றரிலோ 200 மீற்றரிலோ சுட்டுப் பாக்கிறது இல்லை".

நான் வடமராட்சியில இருக்கேக்க எனக்குக் கீழ இருந்த ஓராள் தலைவருக்குப் போய்ச் சொல்கிறார் "ஆமி சுடச்சுட வாறான்" என்று. அப்ப தலைவர் கேட்கிறார் "சுடச்சுட வாறான் என்றால் அவன் என்ன பிளட் புறூவா போட்டிருக்கிறான்" என்று அந்தப் போராளியைக் கேட்கிறார். உண்மையிலேயே அதற்குச் சரியான காரணம் வந்து சரியான முறையில் சூட்டுத் தேர்வு செய்து இவன்தான் இந்த ஆயுதத்திற்கு கைதேர்ந்தவர் என்று நாங்க விடேல்ல என்பதாகும். அண்ணை நாட்டுக்கு வந்து பிறகுதான் அவரவருக்கென்று பயிற்சிகள் வழங்கப்பட்டு அவரவருக்கென்று தேர்ந்து ஆயுதங்கள் வழங்கப்பட்டது. தலைவர் இதைச் செய்த பின் எல்லா ஆயுதங்களுமே நல்ல வெற்றிய எங்களுக்கு தந்தன.

தவறு விடும் போராளிகளைத் தண்டிப்பதிலும் தலைவர் கையாளும் விதம் ஒரு தனித்துவமானது. ஒரு முறை தவறு செய்தவர் மீண்டும் அப்பிழையை விட வைக்காது. வடமராட்சியில ஒபறேசன் லிபரேசன் நடவடிக்கையில் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் எஞ்சிய போராளிகளைக் கூட்டிக்கொண்டு தென்மராட்சிக்குப் போய் தலைவரைச் சந்திக்கிரன். அப்பொழுது தலைவர் சொல்கிறார் "வடமராட்சிய விட்டிட்டு வந்து தென்மராட்சியில நிர்வாகம் நடத்தலாம் எண்டு நினைக்காதை, அது அழகில்லை. ஒன்றில வடமராட்சிய பிடி, இல்லையெண்டால் அந்த முயற்சியில வீரச்சாவடை. அப்பதான் புதிய பரம்பரை ஒன்று எங்கட போராட்டத் முன்னெடுக்கும்" என்ற தலைவரின் அந்தக் கட்டளை பின்னாளில் பல வெற்றிகளுக்கு காரணமாயிருந்தது.

1998 காலப்பகுதி எமது அரசியல் ஆலோசகர் பாலா அண்ணா கடும் சிறுநீரக பாதிப்பிற்குள்ளாகியிருந்தார். சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்ப சிறிலங்கா அரசு அனுமதிக்கவில்லை எனவே கடலால் அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது. பயணம் ஆரம்பமாகும் நேரமும் வந்தது, நானும் கூடச்சென்று அனுப்பிவிட்டு வருவதாக இருந்தது. அப்பொழுது தலைவர் தனது கட்டளைமையத்திற்கு தளபதியை அனுப்பி நிலைமையை உடனுக்குடன் தனக்கு அறிவிக்கும் படி கூறிவிட்டு வழமையாக நடவடிக்கை நேரங்களில் நான் நிற்கும் இடத்தில் தான் வந்து நின்று எங்களது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டு நான் திரும்பி வரும்வரை அவ்விடத்திலேயே நின்றார். தலைவரின் இந்தச் செயற்பாட்டில் அவரது கடமையுணர்வு, பற்றுணர்வு என்பதை அறியக் கூடியதாய் இருந்தது

ஒரு வட்டத்திற்குள் இருந்த பெண்களை ஆண்களுக்கு நிகராக களத்தில் இறக்கி மாபெரும் சமூகப் புரசிலை நடத்திக் காட்டியமைக்கு இன்றுமொரு சம்பவத்தை எடுத்துக் கூறலாம். 5 பிள்ளைகளின் தாயொருவர் சிறப்பாக ஒரே சண்டைக்கான பயிற்சியில், மகனும் தாயும் பயிற்சி எடுத்தும் பின் கடற் சண்டையொன்றில் அத்தாய் 50 கலிபருடன் வீரகாவியமானதையும் எடுத்துக் கொள்ளலாம்.

வளர்த்து வரக் கூடியவர்களை அவ்வத்துறைகளில் வளர்க்க வேண்டும் என்ற பண்பை தலைவரின் செயற்பாட்டில் காணலாம். 1990ம் ஆண்டு நான் வடமராட்சிக்குப் பொறுப்பாக இருந்த போது தலைவர் என்னை அழைத்து மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு போராளியை என்னிடம் தந்து, அவரை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவை என்றார். அன்று தூரநோக்கோடு அவரை அனுப்பி கல்விகற்க வைத்தமையால் இன்று அந்தப் போராளி வைத்தியத்துறையில் வல்லுனராக போராளிகளுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் சேவை செய்யும் வைத்திய கலாநிதியாக மாறி நிற்கின்றார்.

 

நேர்கண்டவர்கள்: எரிமலை மாதயிதழ் குழுமம்

- ஓகத்து 2006 எரிமலை மாதயிதழிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரை

 

--------------------------------------------------------------------------------------------------------

 

  • எழுத்தாக்கம்:

                     (https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/061022soosai.htm)

  • எழுத்துப்பிழை திருத்தம் & வடிவமைத்தல்:

                     நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

மேற்குறிப்பிடப்பட்டுள்ள 'வோட்டர் ஜெற்' என்ற படகு இதுதான். 

இச்சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவம்தான் 'நீருந்து விசைப்படகு' என்பதாகும். இப்படகு இங்கிலாந்தின் உள்நாட்டுத் தயாரிப்பாகும். இதற்கு அவர்கள் இட்ட பட்டப்பெயரே 'வோட்டர் ஜெற்' என்பதாகும். சிங்களத்திலும் அஃதே பெயராகும்.

கடற்புலிகளிடம் இதுபோன்று நான்கு (பூநகரியிலிருந்து 3, மண்டைதீவில் இருந்து ஒன்று) இருந்தது. புலிகளிடம் சேர்ந்த இவ்வகுப்பின் முதலாவது படகிற்கு சூட்டிய பெயர் 'பாமா' என்பதாகும். அதைக் கைப்பற்றிக் கொணர்ந்த இள பேரரையர்(Lt. Col) பாமா அவர்களின் நினைவாய்.

 

 

67279506_835850550141956_8595709407457705984_n.jpg

''ஓயாத அலைகள் - 1 இல் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் கரைசேர்க்கப் படுகின்றன''

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இப்படகினில்(வோட்டர் ஜெற்) கடற்புலிகள் ZPU-4 14.5 மிமீ  சுடுகலனை பூட்டியபடிதான் ஆனையிறவுச் சமரில் பங்கேற்றனர் என்பது உச்சபல தகவல்! 

💪

 

இந்தப் படத்தை வெளியிட பொறுத்த தருணத்திற்காக காத்திருந்தேன்!

இதுவே சரியான தருணம்...

 

கீழ்வரும் வோட்டர் ஜெற்றின் முதன்மைச் சுடுகலனாய் இருப்பதுவே ZPU-4 ஆகும்

 

(திரைப்பிடிப்பு. சிதிலமடைந்த படம்தான்😥... )

 

Sea Tigers 'Water Jet' boat with ZPU-4 during the 'Kudaarappu Landing' ,.jpg

 

Sea Tigers 'Water Jet' boat with ZPU-4 during the 'Kudaarappu Landing'.jpg

 

கீழ்வரும் படத்தில் சுடுகுழல் தெரியவில்லை{சூரிய ஒளியின் எதிரொளிப்பில் அது மறைந்துவிட்டது(மெல்லியது என்பதால்)}. ஆனால் குழல் பொருத்தும் அந்த 4 இடம் மட்டும் தனியாக தெரிகிறது. 

Sea Tigers 'Water Jet' boat with ZPU-4 during the 'Kudaarappu Landing' ..jpg

 

 

திரைப்பிடிப்புகள் யாவும் 'ஆனையிறவு மீட்புச் சமர்' என்ற 49 நிமிடங்கள் ஓடக்கூடிய புலிகளின் வரலாற்று நிகழ்படத்தில் இருந்து பிடிக்கப்பட்டதாகும். @19.20 நிமிடத்தில் 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இதுதான் ஆனந்தபுரத்தில் புலிகளிடமிருந்து சிங்களம் கைப்பற்றிய சி.பி.யு.-4 வானூர்தி எதிர்ப்புச் சுடுகலன் (ZPU-4 AAA)

 

சுடுகலன் மேலே மந்திகள்:

இச்சுடுகலனில் சுடுகுழல்கள் பொருத்தப்படவில்லை. இதே நிலையிலான தோற்றத்தினைத்தான் மேலுள்ள மூன்றாவது படத்திலும் நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் அது மோசமான நிகழ்படத்தில் இருந்து எடுத்தமையினால் அவ்வாறு தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அதில் சுடுகுழல் பூட்டப்பட்டுள்ளது. சூரிய ஒளியின் எதிரொளிப்பில் அது மறைந்துவிட்டது(மெல்லியது என்பதால்).

IMG_0065 copy.jpg

 

சுடுகுழல் பொருத்தப்பட்டு முழுமையடைந்த நிலையில்:

LTTE ZPU- 4 that was captured in the battle of Aananthapuram.png

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ கடற்படையான கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் அட்மிரல் சூசையுடனான செவ்வி | 22 October 2006
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

கடைசியாக நிகழ்படத்தோடு கூடிய ஓர் தாயகப் பாடல்:

 

'தாயகப் பாடகர்' எஸ் ஜி சாந்தன் அவர்களின் குரலில்

 

ஆனையிறவில் மேனி தடவி: https://eelam.tv/watch/ஆன-ய-றவ-ல-ம-ன-தடவ-aanaiyiravil-meeni-thadavi-original-version-elephantpass-victory-song_9A1oTREri6Mn2NC.html

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • நன்னிச் சோழன் changed the title to தமிழீழ கடற்படையான கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் அட்மிரல் சூசையுடனான நேர்காணல்| 22 October 2006

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

    • By நன்னிச் சோழன்
      'நம் வரலாற்றை
      நாமே எழுதுவோம்'
      ------------------------
      எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற கடற்புலிகளின் நிழற்படங்கள்(Photos) & படிமங்கள்(Images) & திரைப்பிடிப்புகள்(screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன்.. விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்;சேமித்துக்கொள்ளுங்கள்.
       
      குறிப்பு: கீழுள்ள எந்தப் படிமமும் மீளிணைக்கப்படவில்லை  
      புலிகள் காலத்து தமிழீழக் கடற்படையான கடற்புலிகளின் இலச்சினை:-

       
       
      கடற்புலிகளின் முதன்மைத் தாக்குதல் கடற்கலங்கள் மிராஜ் வகைக் கலங்கள் ஆகும். இதனுள் பிரசாந்த், மதன் என இரு வகுப்புக் கடற்கலங்கள் இருந்ததாக நானறிகிறேன். இதைத் தவிர தல்ராஜ் வகை என்று மற்றொன்று இருந்ததாக நோர்வேயியன் மொழியில் எழுதப்பட்ட ஒரு கடற்புலிகள் பற்றிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு அந்த தல்ராஜ் பற்றி ஒன்றும் தெரியாது... தல்ராஜையும் மிராஜையும் கீழே குழப்பியடித்திருந்தால் என்னை மன்னித்து அருளுமாறு வாசகரிடம் கேட்டுக் கொள்கிறேன்...
      உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் அது பற்றிய தகவல் கொடுத்துதவுங்கள்... வெறும் கடற்கலப் பெயர் மட்டுமே எதிர்பார்கிறேன். வேறேதும் இல்லை. பெயர் தவிர அறிந்தோரிடம் நானேதும் யாசிக்கவில்லை.
       
      என்னைத் கொடர்பு கொள்ள யாழிலோ இல்லை கோராவிலோ(https://www.quora.com/profile/நன்னிச்-சோழன்-Nanni-Chozhan) அணுகுங்கள்.
       
       
      நானெழுதிய மிராஜ் கலங்கள் தொடர்பான ஒரு ஆவணம்
       
       
      கடற்கரும்புலிகளின் முதலாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' first badge and logo. Wored only in 2000. 

       

      கடற்கரும்புலிகளின் இரண்டாவது வில்லை & இலச்சினை | Tamil Eelam 'Sea Black Tigers' second badge and logo. Wored from 2001- end of LTTE era.

       
       
       
       
       இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
       
       
    • By நன்னிச் சோழன்
      "தோற்றிடேல், மீறி 
      தோற்றிடினும் வரலாறின்றி சாகேல்!"
      -நன்னிச் சோழன்
       
      எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….! This document is solely made for an educational purpose only.  
      இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் கடற்படையால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. ஈழத்தமிழரின் கடற்படையான கடற்புலிகள் அலுவலர் சீருடை(Officer uniform) மற்றும் கடற்கலவர் சீருடை(Sailor uniform) ஆகிய இரண்டையும் அணிந்திருந்தனர் என்பது எல்லோரும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
      சரி இனி நாம் விதயத்திற்குள் போவோம். முதலில் ஒன்றினை உங்களிற்குச் சொல்ல விரும்புகிறேன். இங்கே நான் கூறியிருக்கும் தொப்பிகள் பற்றிய தகவல்களை எல்லாம் மிக விரிவாக முதல் மடலத்தில் ஏற்கனவே கூறிவிட்டேன். அதைக் காண இங்கே சொடுக்கவும்:
       
       
      விடுதலைப் புலிகளின் சீருடைகள் பற்றி:- விடுதலைப் புலிகளின் முதன்மைச் சீருடையினை வரிப்புலி என்றும் வரியுடை(சேர்த்தே எழுதுதல் வேண்டும்) என்றும் அழைப்பர். நிறங்களை முன்னொட்டாக சேர்த்து வழங்கும் போது...
      நீல வரி பச்சை வரி கறுப்பு வரி அதில் இருக்கும் அந்தக் கோடுகளை வரி என்று விளிப்பர்.
      வரியின் உட்புறத்தில் இந்நிறங்கள் ஏதும் தெரியாது. அதில் வரியில் உள்ள மூன்று நிறங்களில் எது மெல்லிய நிறமாக உள்ளதோ அதுவே உள்நிறமாக இருக்கும். அந்த சீருடையினை அணியும் போது படங்கு விரிப்பினை அணிவது போன்ற கனத்தை உணர்வீர்கள்.
      இடது கையின் தோள்மூட்டிற்கு கீழே புயந் தொடங்கும் இடத்தில் 3 தூவல்(pen) வைப்பதற்கு ஏற்ப குழல் போன்று 3 குதைகள்(loop) இருக்கும். அவற்றின் கீழ்ப்பகுதி அடைக்கப்பட்டிருக்கும். தோளில் தோள் மணைக்கான(shoulder board) துண்டங்கள் இருக்கும். தோள் தொடங்கும் இடத்திற்கு அருகில் தோள் மணை துணிக்கு குறுக்காக ஒரு துண்டமானது (small piece of cloth) தோள் மணையோடு பொம்மிக்கொண்டு நிற்பதாக தைக்கப்பட்டிருக்கும்.(தெளிவிற்கு கீழே உள்ள பிரசாந்தன் அண்ணாவின் படத்தை காண்க) இது பெரும்பாலானோரின் வரிப்புலியில் இருந்தது. ஆனால் வரிச்சீருடை அல்லாத ஏனைய சீருடைகளில் எப்பொழுதும் இருந்தது. அதுவும் 2002 ஆம் ஆண்டிற்குப் பின் எவருடைய சீருடையிலும் இல்லை.
      குப்பி & தகடு வெளியில் தெரியாது. மேற்சட்டையால் ஏற்படும் மறைப்பால் உள்ளிருக்கும். மேற்சட்டையின் முன்புறத்தில் படைத்துறைச் சீருடைக்கு இருக்கும் நான்கு பக்குகள்(pocket) இருக்கும். அதாவது மேலே வலம்-இடமாக இரண்டும் கீழே வலம்-இடமாக இரண்டும் இருக்கும். கையின் முடித்தலானது சாதாரண நீளக்கைச் சட்டைக்கு இருக்கும் முடிதல் போன்று இருக்கும்.
      நீளக் காற்சட்டைக்கு, மேற்பக்கத்தின் இரு கால்களிற்கும் சாதாரண நீளக் காற்சட்டைக்கு இருப்பது போன்ற பக்குகளும் முழங்காலிற்கு சற்று மேலே படைத்துறை சீருடைக்கு இருப்பது போன்ற இரு பக்குகளும் இருக்கும். நீளக் காற்சட்டையின் பின்புறத்தின் இருகுண்டியிலும் இரு பக்குகள் இருந்தன. காலின் முடித்தலானது உலகளாவிய படைத்துறைக்கு இருப்பது போன்ற தெறி கொண்ட கொச்சுத்துண்டு வைத்து தைக்கப்பட்டிருக்கும்.
      பெண்கள் சீருடையினை அணிந்து இடைவாரினை அணியும் போது மேற்சட்டையினை வெளியில் விட்டு அதன் மேற்றான் இடைவாரினை அணிவர். அந்த இடைவாரானாது பச்சை நிறத்திலோ அல்லது கறுப்பு நிறத்திலோ இருக்கும். ஆண்கள் சீருடையினை உள்ளுடுத்திய பின்னர் சாதாரணமாக இடைவார் அணிவது போன்று இடைவாரினை அணிவர்.

      'கடற்புலி வீரர் 2002 இற்கு முந்தைய சீருடையில் | படிமப்புரவு: fb & tharaakam'
       
      முதலில் கடற்புலிகளில் இருந்து தொடங்குவோம்.

      'இடமிருந்து வலமாக : கடற்படை அலுவலர்; கடற்கரும்புலிகள்; கடற்கலவர் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு '
      பயிற்சி சீருடை: ஆண்களும் பெண்களும் 'Navy நீல' நிறத்திலான ஒரு உடையினை [அரைக்கைச்சட்டை & காற்சட்டை(ஆண்களின் காற்சட்டை பெண்களை விட கட்டையானது)] அணிந்து பயிற்சி எடுத்தனர்.

      'பெண் கடற்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு '

      'பெண் கடற்புலிகள் | படிமப்புரவு: திரைப்பிடிப்பு'
       
      1990–1992/3 வரையிலான கடற்கலவர் சீருடை: இதுதான் கடற்புலிகளின் முதலாவது சீருடை. இது ஒரு ஊத்தை நிறம் அல்லது ஒரு விதமான வெள்ளை நிறம் ஆகும்.

      'இதில் உள்ள வீரர்கள் அணிந்துள்ளதே முதலாவது சீருடை ஆகும்.'



       
      1992/1993 - 1995 வரையிலான கடற்கலவர் சீருடை: ஆண்களும் பெண்களும் கீழக்கண்ட நிறத்திலும் பாங்கத்திலுமான(pattern) சீருடை அணிந்திருந்தனர். இவர்களும் தொப்பியும் சீருடையின் அதே உருமறைப்பைக் கொண்டதாக இருந்தது.


      'கடற்புலி போராளி ஒருவர் இச்சீருடையில் உள்ளதை நோக்குக'
       
      1995 - 2002 வரையிலான நீல வரிப்புலி பற்றி:- (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்)
      வரியில் இருந்த நிறங்களாவன:
      RGB - (182,185,216) - வெளுறிய பின்புல நிறம் RGB - (67,89,136) - Yale blue ஆகத் தெரிவது RGB - (77,78,124) - Navy blue ஆகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் தடித்த கோடுகளாகும்!
       
      1995 - 2002 வரையிலான கடற்கலவர் சீருடை:- இவர்கள் நீல நிற வரிப்புலி அணிந்திருந்தனர். கழுத்தைச் சுற்றி தோள் மேல் இருக்கும் படையாக கடற்படையின் கடற்கலவர் அணியும் ஒரு நீல நிற வட்ட வடிவ துணியினை அணிந்திருந்தனர். இது சாம கடற்படை(Midnight navy) நீல நிறத்தில் உள்ளது. அது தலையினை உள்ளுடுத்துவதன் மூலம் தோள் மேல் அணியப்படும். இதை அணிந்த பின் நோக்கும் போது பின்பக்கமும் முன்பக்கமுமாக அரைநிலவு வடிவில் இருக்கும். அதில் முன்பக்கம் கொஞ்சமாகவும் பின்பக்கம் அதிகமாகவும்(முதுகு வரை நீள்கிறது) அந்த அரைநிலவு வடிவம் இருக்கும்.இதன் ஓரங்களில் இரு வெள்ளை நிறக் கோடுகள் உள்ளன. அவை குறிக்கும் பொருளினை அறியமுடியவில்லை.
      இவர்கள் இடுப்பில் அணிந்திருந்த இடைவாரானது அதே நீல வரிப்புலி உருமறைப்போடு இருந்தது.

      ' படிமப்புரவு: திரைப்பிடிப்பு'
      1992/1993- 2002 வரையிலான கடற்படை அலுவலர் சீருடை(Navy Officer Uniform) :- இவர்கள் அந்த தோளைச் சுற்றி நிற்கும் துணியினை அணியார். நீல நிற வரிப்புலியினை மட்டுமே அணிவர்.

      'கடற்புலிகளின் தாக்குதல் கட்டளையாளர்கள் | இவர்கள் அந்த துணி அணியவில்லை | படிமப்புரவு: திரைப்பிடிப்பு'

      'கடற்புலிகளின் சேர்ப்பன்(Admiral) சூசை | | படிமப்புரவு: Tharakam'
       
      2002 இல் கடற்படை அலுவர் சீருடை இச்சீருடையில் இள நீல நிறம் அதிகமாக இருந்ததால்(வானினை குறிப்பதால்), இதில் இருந்த கடுநீல நிறம் போன்ற நீல நிறமானது நீக்கப்பட்டு மேலும் சில மாற்றல்களோடு பின்னாளில் எழுந்த வான்புலிகளின் சீருடையாக்கப்பட்டது.
       

      'கடற்புலிகளிர் சேர்ப்பன்(Admiral) சூசை | படிமப்புரவு: Aruchuna.com'
       
      2003 இல் கடற்படை அலுவர் சீருடை வரியில் இருந்த நிறங்களாவன:
      (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். யாராவது மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்)
      RGB - (105,146,174) - பின்புல இளநீலம் RGB- (68,82,108) - சாதாரண நீலமாகத் தெரிவது RGB - (48,97,155) - கடுநீலமாகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் மெல்லிய கோடுகளாகும். அதே நேரம் பின்புல நிறமான இளநீலம் போன்ற நிறமே வெகு அதிகமாக இருந்தது.
      இது மிகக் குறுகிய காலம் பயன்படுத்தபட்டு அதன் பிறகு மாற்றப்பட்டு விட்டது

      '25–11–2003 அன்று பாரச்சவம்(heavy weapons) கொண்டு அணிநடையில் ஈடுபடும் கடற்புலிகளின் கடல் அலுவலர்கள் | படிமப்புரவு: Aruchuna.com'
       
      2004 - 2009(18–05–2009) வரையிலான கடற்படை அலுவர் சீருடை வரியில் இருந்த நிறங்களாவன:
      (நிறங் கண்டுபிடிக்கும் செயலியை வைத்தே இவற்றை கண்டுபிடித்தேன். யாராவது மேலும் செம்மைப் படுத்தல் வேண்டும்)
      RGB - (105,146,174) - பின்புல இளநீலம் RGB- (68,82,108) - சாதாரண நீலமாகத் தெரிவது RGB - (48,97,155) - கடுநீலமாகத் தெரிவது இதில் இருந்த வரிக்கோடுகள் எல்லாம் தடித்த கோடுகளாகும்!

      'கடற்புலிகளின் சேர்ப்பன்(Admiral) சூசையும் கடற்புலிகளின் மன்னார் மாவட்ட கட்டளையாளர் லெப்.கேணல் பகலவன் அவர்களும் | படிமப்புரவு: Aruchuna'
       
      2001–2009(18–05–2009) வரையிலான கடற்கலவர் சீருடை:- இவர்கள் வெள்ளை நிற நீளக்காற்சட்டையும் வெள்ளை நிற மேற்சட்டையும் அணிந்திருந்தனர். மேற்சட்டையின் அடிப்பக்க விளிம்பு RGB (48;97;155) என்னும் கடுநீல நிற ஓரத்தைக் கொண்டிருந்தது. இடுப்பில் எல்லோரும் வெள்ளை நிற இடைவாரினை அணிந்க்டிருந்தனர். ஆண்கள் மேற்சட்டையினை உள்விடாமல் வெளியில் விட்டிருந்தனர், பெண்களைப் போல. கடற்கலவரின் மேற்சட்டைக்கு கழுத்துப்பட்டை(collar) உள்ளது
      கடற்கலவரின் அதிகாரிகள் வீரர்களிடம் இருந்து வேறுபட்டு சுண்டு(bill) கொண்ட கடற்கலவர் சதுரக்கவி(sailor square rig) அணிந்திருந்தனர். கடற்கலவர்கள் தோள் மேல் சுற்றி நிற்குமாறு Scarf போன்ற RGB (48;97;155) என்னும் நிறத்திலான பளபளக்கக்கூடிய ஒரு துணியினை அணிந்திருந்தனர். அதன் ஓரத்தில் வெள்ளை நிறத்திலான மூன்று கோடுகள் இருந்தன. இந்த துணியானது முன்பக்கம் முக்கோண வடிவிலும் பின்பக்கம் சதுர வடிவிலுமாக உடல் மேல் நின்றது, அணிந்த பின். இதன் முன்பக்க முக்கோணம் சமச்சீராக வெட்டப்பட்டு அதில் திறத்தல் இருக்கிறது. மேலும கழுத்தைச் சுற்றிவர இருந்த திறத்தல்(opening) வட்ட வடிவுடையதாக இருந்தது.

      ''படைத்தகையில்(parade) ஈடுபடும் கடற்கலவர் | படிமப்புரவு: Aruchuna.com''

      'படை மரியாதையை ஏற்கும் தலைவர் 2002 | படிமப்புரவு: Aruchuna.com'
      ஆனால் கடற்புலிகள் கடற்சமரின் போது கடற்கலவர் சீருடையினையோ இல்லை கடற்படை அலுவலர் சீருடையினையோ அணியார். மாறாக குடிமை(civil) உடையினை அணிந்து கடற்சமராடுவர்.
      வழங்கல் பிரிவு(!?): கடற்புலிகள் இச்சீருடையினை அணிந்து வழங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவர்.
      இதில் இந்த கடுநீல நிறம் போன்ற சீருடை அணிந்துள்ள பெண்களை நோக்குக. இவர்கள் வழங்கல் அணியினர். இவர்களின் காற்சட்டையும் மேற்சட்டையும் தொடுக்கப்பட்டுள்ளது. மேற்சட்டை Hoodie ஆக உள்ளது.

      'இந்துமதி என்னும் கலப்பெயர் படகை கடலினுள் தள்ளும் கடற்புலிகள் | படிமப்புரவு: Aruchuna.com'

      'தெந்தமிழீழத்திற்கான வழங்கல் ஒன்றின் போது ஆண்கலவர் இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக. | படிமப்புரவு: Tamilnet.com'
      மேலே பெண்கள் அணிந்துள்ளது ஈரமாகி விட்டதால் வேறொரு நிறத்தில் உள்ளது. ஆண்கள் அணிந்துள்ளதே ஈரமாகத இச்சீருடையின் நிறமாகும்.
      இச்சீருடை அணிந்தோர் தேவை ஏற்படும் போது நல்ல சண்டையாளர்களாகவும் மாறினர்!

      'கடற்புலி போராளி'

      'மிராஜ் வகையின் மதன் வகுப்பு சண்டைப்படகு. இப்படகில் உள்ள கடற்கலவரை நோக்குக. அவர்கள் நான் மேற்குறிப்பிட்ட வழங்கல் சீருடையினை அணிந்துள்ளதை நோக்குக'
       
      படகு கட்டுமானம்: மங்கை & டேவிட் இப்பிரிவைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கீழ்க்கண்ட நிறத்திலான சீருடை அணிந்திருந்தனர். இச்சீருஅடை பழுப்பு நிறத்தில் இருந்தது; தலையில் அதே நிறத்திலான சுற்றுக்காவல் கவியும் அணிந்திருந்தனர். இவர்களின் சீருடையின் மேலாடையும் கீழாடையும் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

      இவர்களில் பெண்புலிகளின் தலைமயிர்ப் பாணி கொஞ்சம் வேறுபாடானது, ஏனைய படையணி/படை/பிரிவு-களிலிருந்து. ஏனெனில், இவர்கள் பிறரைப் போலல்லாமல் தங்கள் தலைமயிரினை பின்னால் எடுத்து கொண்டை போட்டிருந்தனர்.
       
      -----------------------------------------
      -----------------------------------------
      கூடுதல் செய்திகள்:
      வான்புலிகளின் சீருடை & வானுர்திகள் - ஆவணம்:
      -----------------------------------------
      -----------------------------------------
       
       
      உசாத்துணை:
      செ.சொ.பே.மு. கிடைத்த படங்களை வைத்தே எழுதினேன் ஆக்கம் & வெளியீடு
      நன்னிச் சோழன்
       
       
    • By நன்னிச் சோழன்
      "தோற்றிடேல், மீறி 
      தோற்றிடினும் வரலாறின்றி சாகேல்!"
      -நன்னிச் சோழன்
       
      எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!  

      'முல்லைத்தீவுக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் டோறாவை இடிக்க நெருங்கும் கடற்கரும்புலிகளின் இடியன்'
       
      எல்லா(hello)...
      வணக்கம் …/\… தோழர்களே!
      இன்று நாம் பார்க்கப்போவது கடற்கரும்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றியே... இவர்கள் ஈழத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் ஓர் படைப் பிரிவினர் ஆவர். இந்தக் கடற்கரும்புலிகள் இருவகைப் படுவார்கள்.
      நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் - இவர்கள் ஓர் கடற் தற்கொடைப் படையினர் ஆவர். இவர்கள் தம் படகில் வெடிமருந்தினை நிரப்பி, அப்படகினை ஓட்டிச்சென்று, எதிரியின் கலத்தின் மீது மோதி வெடிக்கச் செய்து, அதை அழித்து தாமும் அழிந்துபோவார்கள். அப்படகிற்கு குண்டுப்படகு என்று பெயர். இவர்கள் ஆண்களிற்குத் தனியாக பெண்களிற்குத் தனியாக என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருந்தனர். செவ்வானம் கடற்கரும்புலிகள் அணி புகழரசன் கடற்கரும்புலிகள் அணி நீரடி நீச்சல் கரும்புலிகள் (நீர்முழுகிகள்)- இவர்களும் ஓர் கடற் தற்கொடைப் படையினர் தாம். இவர்கள் நீரிற்கு அடியாற் நீந்திச் சென்று சென்று எதிரியின் கலத்தின் அடிப்பாகத்தில் குண்டினைப் பொருத்திவிட்டு அது அசைந்துவிடாதபடி பிடித்துக் கொண்டு நிற்பார்கள். அக்குண்டு நேரக் கணிப்பி பொருத்தியதாகவும் இருக்கும்; சிலவேளை உடனே வெடிப்பதாகவும் இருக்கும். குறித்த நேரம் வந்ததும் அக்குண்டு வெடித்து பொருத்தப்பட்டிருந்த கப்பலும் அழிய தாமும் அழிந்துபோவார்கள். சில வேளைகளில் இவர்களின் இலக்கிற்கு சிறிது தூரம் வரை கடற்புலிகளின் கலங்களில் ஏற்றிச் செல்லப்பட்டு எட்டத்தில் இறக்கிவிடப்படுவதும் உண்டு. இந்த நீர்முழுகிகளும் இரண்டு பிரிவாக இருந்தனர், ஆண்களிற்குத் தனியாக பெண்களிற்குத் தனியாக என்று. அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 வரை அங்கயற்கண்ணி நீரடித் தாக்குதற் பிரிவு என அழைக்கப்பட்டு வந்து அதன் பின்னர், 96 வரை 'அங்கயற்கண்ணி விசேட நீரடி நீச்சல் பிரிவு' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 96-இல் இருந்து அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு என அழைக்கப்படலாயிற்று. ) கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு → (இப்பிரிவானது 1995 வரை சுலோயன் நீரடித் தாக்குதற் பிரிவு என அழைக்கப்பட்டு வந்து அதன் பின்னர், 96 வரை 'சுலோயன் விசேட நீரடி நீச்சல் பிரிவு ' என அழைக்கப்பட்டு, அதன் பின்னர் 96-இல் இருந்து சுலோயன் நீரடி நீச்சல் பிரிவு என அழைக்கப்படலாயிற்று. சுலோயன் என்று இருந்த இதன் பெயர், 2008 இல் இருந்து கங்கை அமரன் என்று பெயர் மாற்றமடைந்தது)  
      கடற்கரும்புலிகள் (முந்தைய இலச்சினை) - 2000
       
      கடற்கரும்புலிகள் (பிந்தைய இலச்சினை) - 2001-2009 end
       
      இக்கட்டுரையில் நாம் இவர்களால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றி காணப் போகிறோம். சரி வாருங்கள் இனி கட்டுரைக்குள் போவோம்..
      இவர்களிடம் இருந்த கலங்களின் எண்ணிக்கை
      கலங்கள் - தேவைப்படும் போது கலங்களை உண்டாக்குவார்கள். ஓரிரண்டு எப்போதும் இருப்பில் வைத்துக் கொள்வார்கள். நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (Diver propulsion device) - 20+ மன்னியக்க சத்தி மடவைப் பலகை (manually powered paddle board)- 6+ தாழ் மட்ட கலங்கள் (low planning vessel)= 5–10 மிக நொவ்விய கல (Very slender vessel) = 4–6 மாந்த ஏவரி(Human Torpedo) = 1/2 இப்படி அலைமேற்செல்லும் கரும்புலிக் கடற்கலங்களை குண்டுப்படகு/ கரும்புலிப் படகு என்று அழைப்பார்கள். புலிகளிடம் மொத்தம் 13 விதமான குண்டுப்படகுகள் இருந்ததாக அறியப்படுகிறது.
      இந்த கரும்புலிக் கலங்களின் அணியத்தின் முனையில் பொதுவாக ஒரு 2/ 4/ 5/ 6 அழுத்த உருகிழை(pressure fuse) பொருத்தப்பட்டிருக்கும். இவைதான் எதிரியின் கலத்தோடு இடியன்கள் மோதும் போது அவற்றின் அணியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சக்கையை(வெடிபொருள்) உயிர்பித்து வெடிக்க வைக்கும் இயற்றினங்கள்(instrument) ஆகும். இதனால் எதிரியின் கடற்கலன் சுக்குநூறாகவோ அ இரண்டாகப் பிளந்தோ அ அதன் அடியில் பெரும் ஓட்டை விழுந்தோ கடலினுட் மூழ்கும். ஒருவேளை கரும்புலித்தாக்குதலில் அந்தக் கலன் தப்பினாலும் அதற்கு ஏற்பட்ட பெரும்சேதத்தினைப் பயன்படுத்தி சண்டைவண்டிகள் அக்கலத்தினை தாட்டுவிடும்(will sink).
      இது தவிர இவர்கள் கட்டுரமங்கள், மன்னியக்க ஆற்றல் மடவைப் பலகை (manually powered paddle board) போன்றவற்றையும் தற்கொடைத் தாக்குதலிற்குப் பயன்படுத்தினார்கள். இதில் குறிப்பிடத் தக்கது இவர்களின் மாந்த ஏவரிகள்(Human Torpedos) தாம். இவற்றினை இவர்கள் பயனுறுத்தினார்களா என்பது பற்றிய செய்திகள் அறியில்லை.
      இனி இக்கலங்களிற்கான கலப்பெயர்களைப் பார்ப்போம்:
      கரும்புலிக் கலங்கள்: இடியன் வகுப்பு: தணிகை (முதலாவது இடியனின் கலப்பெயர்) குட்டி மிராஜ் வகுப்பு: செம்பிறை வெள்ளை வகுப்பு: தீக்கதிர், வாமன், தர்சன் திரிக்கா வகுப்பு: முத்துமணி டிங்கி வகுப்பு: தியாகன் குருவி வகுப்பு: குமரப்பா, புலேந்திரன், அப்துல்லா அமுதன் (வகை பெயர் தெரியவில்லை) இசைமாறன் (வகை பெயர் தெரியவில்லை) மாந்த ஏவரி(Human Torpedo): MS-380 சரி இனி இந்த அலைமேற்செல்லும் கலங்கள் பற்றிக் காண்போம். அதற்கு முன்னர் இந்தக் கடற்கலங்களின் நீள அகலத்தினைப் பற்றி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இவை பற்றி நான் கீழே எழுதியிருப்பதெல்லாம் இதோ இந்தக் கொழுவியில் இருந்து எடுக்கப்பட்டவையே. இது சிங்களவரால் வெளியிடப்பட்டது ஆகும்.
      முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow கடையால் - stern உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அல்லது கடற்கலன் - sea vessel சத்தார் = a cornered angle ஓடு = shell கூடு = hull கவர் - prong  
      — இடியன் வகுப்புக் கலன் (Idiyan class craft)
      நீளம் = 18' அகலம்= 10' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 250 HP/ 2x200HP நிறம் = உருமறைப்பு வேகம் = 50–55 kts கலவர் = 2 எடை = 45-kilotone தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x LMG (முன்) முதன் முதலில் உண்டாக்கப்பட்டது: 1995 முதலில் நாம் பார்க்கப்போவது பரவலாக கரவுக்கலன்(stealth vrssel) என்று அறியப்பட்ட கடற்கரும்புலிக் கலத்தினைப் பற்றித்தான். இவையே புலிகளின் முதன்மையான கரும்புலிக் கலங்களாகும். இவ்வகைக் கலங்கள் சிறியவகை கலங்கள் ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்திருப்பது போன்ற தோற்றம் கொண்டதால் ஆமையோடு என அழைக்கப்படலாயினது. இதில் 2 விதம் உண்டு.
      இந்த கடற்கலன்களின் பக்கவாட்டில் உள்ள உள்ள இறகு போன்ற அமைப்பானது இவற்றின் அணியத்தினை(bow) வேக ஓட்டத்தின் போது மேலே தூக்க உதவியது. இதனால் இவற்றின் வேகம் நன்கு அதிகரிக்கப்பட்டது. மேலும் இவற்றின் கரவு அமைப்பானது எதிரியின் கதுவீ கண்ணில் மண்ணைத் தூவியது எனலாம். ஆனால் இவற்றால் அகச்சிவப்பு கரணங்களின் (infrared device) கண்களில் இருந்து தப்ப இயலாது.. அதில் இவற்றின் உருவம் தென்பட்டுவிடும். ஆனால் இவற்றைக் குறிவைத்துச் சுடுவது என்பது மிகவும் இயலாத ஒரு காரியம். அவ்வளவு வேகமாய்க் கடலில் ஓடும்; ஓட்டுவார்கள் கரும்புலிகள்.
      இப்படகு எவ்வாறு உண்டாக்கப்பட்டது என்று இக்கொழுவியில்(link) விளக்கியிருக்கிறார்கள்:தமிழீழ விடுதலைப்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு குறித்த பார்வை …
      இந்த வகைக் கலங்கள் கதுவீ(Radar) திரையில் இப்படித்தான் தெரியும்.. கண்ணில் படுவதே அரிது:

      முன்பக்கத்தில் உள்ள அசாதாரண சட்டகம்(frame) ஆனது இக்கலத்தினை ஏனைய கலங்களின் கண்களிலில் இருந்து தென்படாமல் விலக்குகிறது . மேலும், சட்டகம் மற்றும் ஓடு(shell) ஆகிய இரண்டிற்குமான தந்திரிகை(wire) கலங்களின் உடல் வழியாக திரிக்கப்படாமல்(threaded) பக்கவோரம்(gunwale) மீது செல்கிறது.

      'ஆமையோடு வகைக் கரும்புலிக் கலனில் உள்ள அழுத்த உருகிழை'
      → இந்த இடியன் வகைக் கலங்கள் சிறப்பு நடவடிக்கைகளின் போது போராளிகளின் போக்குவரவிற்கு பயன்படுத்தப்பட்டது.
      விதம் 1:
      இவ்விதக் கலங்கள் தான் முதன் முதலில் இவ்வகையில் விளைவிக்கப்பட்டவை ஆகும். இவைதான் அதிகளவில் விளைவிக்கப்பட்ட கலங்களும் ஆகும். இந்தக் கடற்கலத்தின் இரு மருங்கிலும் இருக்கும் அந்த இறகு போன்ற உறுப்பில் பீகே சுடுகலன் பூட்டி தமிழரின் சிறப்புப்படைகள் களம் புகுந்தன.



      'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை'

      'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை'

      'மூலைப்பார்வை'
      விதம் 2 :

       
      விதப் பெயர் தெரியாக் கடற்கலம் வேறுபாடான இடியன் வகுப்புக் கடற்கலத்தின் தோற்றத்தினை ஒத்த கடற்கலம்.
      இதன் அணியத்தில் ஆட்கள் ஏறி அமர்ந்திருக்கலாம்!



      'நீரினில் பாயும் கடற்கலம்'

      'கடையால்'
       
      — குட்டிமிராஜ் வகுப்புக் கலன் (kutti-miraj class craft)
      இவற்றிற்கு இரன்டு கவர்கள்(prong) மட்டுமே உண்டு. அதிலிருந்து செல்லும் சக்கைக்கான தந்திரிகையானது(wire), அணியத்தின் மேற்புறத்தால் சென்று சன்னத் தடுப்பு கட்டமைப்பில் ஓட்டையிட்டு உட்செல்கிறது.
      நீளம் = 26' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி = 1 x 85 HP நிறம் = உருமறைப்பு வேகம் = 30–35 kts கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 01 x LMG (முன்) Facebook - இருந்து எடுக்கப்பட்ட செய்தி:
      "கடற்புலிகளின் படகோட்டி பயிலுனர்களுக்காக விசேடமாக தயாரிக்கப்பட்ட பயிற்சிப்படகு. இக்கலங்களில் மூன்று இருக்கைகள் உள்ளன. (முன்னால் ஒன்று, பின்னால் இரண்டு).
      ஆழ்கடல் வினியோக நடவடிக்கைக்காக தொடக்ககாலத்தில் பயன்படுத்திவந்த 'மிராஜ்' எனும் படகின் வடிவமைப்பை ஒத்த சிறிய வகைப் படகாக எம்மால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இப்படகை குட்டிமிராஜ் எனும் பெயர் சூட்டி அழைத்தோம்.
      கடற்கரும்புலிகளுக்கான படகோட்டி பயிற்சிக்கும்,பயிற்சிக்காக கடலில் மிதக்கவிடப்படும் எதிரியின் படகுபோன்ற மிதவைமீதும் இப்படகால் துல்லியமாக நடுச்சாம இருளில் மோதிப் பார்த்து தாக்குதலுக்கான ஒத்திகைகளை மேற்கொள்வதற்கும் இப்படகு பெரும் உதவியாக இருந்தது.
      இப்படகின் மூலம் சிறந்த திறமைமிக்க படகோட்டிகளை உருவாக்கும் பயிற்சிகளை,
      → இள பேரரையன் (லெப் கேணல்) நிசாந்தன்,
      → இள பேரரையன்(லெப் கேணல்) எழிற்கண்ணன்.
      → இள பேரரையன்(லெப் கேணல்) பழனி,
      → இள பேரரையன்(லெப் கேணல்) தன்ராஜ்,
      ஆகிய கடற்புலிகளின் கட்டளையாளர்கள்(Commanders) வழங்கியிருந்தனர்."
      பின்னர் இறுதிப்போரின் கடைசிக்காலங்களில் இவையும் எதிரியின் கலங்களை மூழ்கடிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டன.
      1)

      'தோல்வியுற்ற கடற்சமரின் முடிவாய் சிங்களத்தால் கைப்பற்றப்பட்டபோது'

      'இதன் இரு கவர்கள்'
      2)

      'பயிற்சியின் போது'
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இவ்வகைக் கலங்கள் இவை எல்லாம் தாழ் தோற்றுருவ கலங்கள் (low profile vessel) ஆகும். இதில் 2 விதம் உண்டு.
      உயரம் = 2.0 (type 2) வெளியிணைப்பு மின்னோடி:- விதம் - 1(சிறியது) = 1x <150HP உள்ளிணைப்பு மின்னோடி:- விதம் - 2(பெரியது) = 1x <150HP நிறம் = உருமறைப்பு, சாம்பல் கலவர் = 1/2 வேகம் - 30 kts ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் விதம் 1:
      1)இதன் அணியத்தில் சுடுகலனிற்கான தண்டு உள்ளது.

      மேற்கண்ட கலத்தின் மீகாமன் அறை:

      2)

      விதம் 2: 1.

      மேற்கண்ட கலத்தின் கடையால் :

      2)

      3)

      மேற்கண்ட கலத்தின் பின் பகுதி:

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இவ்வகைக் கலங்கள் இவை எல்லாம் தாழ் மட்ட கலங்கள் (low planing vessel) ஆகும். இவை 30 அடி நீளமும் 3.5 அடி உயரமும் கொண்டவையாகும்.
      வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP(mercury) 1)


      'ஓட்டியிருக்கை'

      'கடையால் (பக்கவாட்டுப் பார்வை)'

      'நடுப்பக்கம் (பக்கவாட்டுப் பார்வை)'

      அணியம்(பக்கவாட்டுப் பார்வை)

      'கடையால்'


      'கடையால்'
      2)


      அணியம்'

      'ஓட்டியிருக்கை'


      'கடையால்'
       
      — கிபிர் வகுப்புக் கலன் (kfir class Craft)
      இவ்வகைக் கலங்கள் கரும்புலிக் கலங்கள் ஆகும். இவற்றால் 1.5 தொன் அளவிலான வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும்
      நீளம் = 30’ அகலம்= 9½’ வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP நிறம் = உருமறைப்பு வேகம் = 45–53 kts கலவர் = 2 தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x GPMG/ LMG
      'பக்கவாட்டுத் தோற்றம்'

      'சத்தார் தோற்றம்'

      'கடையால், கழுகு சத்தார் பார்வை'

      'கடையால்'
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      நீளம் = 26’ அகலம் = 7 ½’ உள்ளிணைப்பு மின்னோடி = 2 x X HP நிறம் = சாம்பல் கலவர் = 2 + தொலைத்தொடர்பு = VHF 1)

      'படத்தில் முன்னே உள்ளதுதான் கரும்புலிக்கலன்.. பின்னால் தெரிவது தாழ்தோற்றுருவ மிக நொவ்வு கலன் (LPV- VSV)'

      'பக்கவாட்டுத் தோற்றம்'
      2)

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இது மிக நொவ்விய கல (Very slender vessel) வகையைச் சேர்ந்த ஒரு கரும்புலிக் கலனாகும்.
      வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200Hp நிறம் = சாம்பல், பச்சை கலவர் = 1/2 1)

      2)




       
      — வெள்ளை வகுப்புக் கலன் (Vellai class crafts)
      வெள்ளை நிற மோல்டால் செய்யப்பட்டதால் வெள்ளை என்றே இவ் வகை கலங்களை அழைக்கலாயினர். இவ்வகைக் கலங்கள் கடற்புலிகளின் தொடக்க காலத்தில் சண்டைக் கலங்களாக பயன்படுத்தப்பட்டவை ஆகும். பின்னாளில் முராஜ், தல்ராஜ் வகைக் கலங்கள் சண்டைக்கு வந்ததால் இவை கரும்புலிக் கலங்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்பது என் துணிபு . இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும். அணியத்தின் மேற்பகுதியில் 6 கவர்கள் நீண்டுகொண்டிருக்கும். இவையே சக்கைக்கான இயங்கு சக்தியை வழங்குகின்றன.
      நீளம் = 42' அகலம்= 12' வெளியிணைப்பு மின்னோடி = 3 x 200Hp நிறம் = உருமறைப்பு, வெள்ளை கலவர் = 2/3/4 வேகம் = 45kts தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 1x.50/ 1xFN MAG(முன்), 1xPK LMG (பின் ), 01 x RPG புவிநிலை காட்டி பொருத்தப்பட்டுள்ளது இவற்றால் 5தொன் அளவிலான பொருட்களைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக் கலங்களாக களத்தில் ஆடிய போது 1.5 தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்சென்றன.

      வெள்ளா வகையின் முதலாவாது கலம் இதுதான்:-

      இதன் உட்புறம் இப்படி இருக்கும்:-

      இதிலிருந்த சிச்சிறு குறைகள் எல்லாம் களையப்பட்டு செந்தரப்படுத்தப்பட்டு பல படகுகள் கீழ்க்கண்ட வடிவில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன:-
      1)

      'சிறீலங்காப் படைகளால் கைப்பற்ற்ப்பட்ட கரும்புலிக் கலன்
      2)

      3)

      'பக்கவாட்டுக் காட்சி'

      'மேற்கண்ட கலத்தின் அணிய மேலோட்டின் தோற்றம் (கீழிருந்து மேல்நோக்கிய பார்வை)'

      'கலத்தின் கடையால்'

      'பின்னிருந்து முன்னோக்கிய காட்சி'
      இந்த வெள்ளை வகுப்புக் கலங்கள் முதலில் தாக்குதல் கலங்களாக பயன்படுத்தப்பட்டதாக நான் முன்னர் கூறினேன் அல்லாவா. அப்போது புலிகளிடம் இருந்த இரு கலங்களின் பெயர் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அவை ஆவன:
      நெடுமாறன், டீசல்  
      — குருவி வகுப்புக் கலன் : (kuruvi class craft)
      இவ்வகைக் கலங்கள் 1995 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலப்பகுதியில் கிளாலி நீரேரியில் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டன. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட கலங்களின் பெயர்களாவன (எனக்குக் கிடைத்தவரை) - குமரப்பா, புலேந்திரன் - என்பதாகும். இக்கலங்களில் கடற்கரும்புலிகளான மேயர் வரதன்/நிலவன் உம் சேர்வைக்காரர்(கப்டன்) மதன் உம் முறையே உயிராயுதமாகிச் சென்றனர்.
      நீளம் = 18' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி= 1 x 150HP நிறம் = உருமறைப்பு வேகம் = 35 kts கலவர் = 1 ஆய்தம் = 1xRPG & 1x.50cal /1x7.52mm pk
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இவை எல்லாம் ஒரு தாழ் தோற்றுருவ கல (LPV) வகையினைச் சேர்ந்த கரும்புலிக் கலங்களாகும்.
      கலவர் = 1 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP

      'ஓட்டியிருக்கை'

      'முன்பகுதிப் பார்வை' | அணியத்திற்குள் இருப்பது தெறோச்சி எறிகணை (howitzer shell).. இதுவே இக்கலத்தின் சக்கையாகும்(explosive content).


      'பின்பகுதி'
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாகவும் சரக்குக் காவிக் கலங்களாகவும் பயன்படுத்தப்பட்டன
      வெளியிணைப்பு மின்னோடி = 2x 200hp நிறம் = நீலம், பச்சை தொலைத்தொடர்பு = VHF கலவர் = 2 1)கரும்புலிக் கலங்களாக
      இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும்.

      'படிமப்புரவு: இன்சுராகிறாம்'

      'அண்மையாக்கப்பட்ட கடையால் & ஓட்டியிருக்கை'
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் இரண்டு கவர்(prong) முனை போன்ற கட்டமைப்பு வெளியில் நீண்டபடியிருக்கும்.
      வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP நிறம் = வண்ணமயம் கலவர் = 1/2
      மேற்கண்ட கலத்தின் அணியம்:-

       
      2)இவற்றின் ஒரு சிலதின் மீகாமன் அறைக்கு கூடு போன்ற கட்டமைப்பு போடப்பட்டிருக்கிறது. அந்த கூட்டின் இருபக்கத்திலும் சன்னல் உள்ளது. முன்பக்கத்தின் அடிபகுதியில் ஒரு சதுர வடிவ ஓட்டை போன்ற கட்டமைப்பு உள்ளது. அணியத்தில் சரக்கறையும் உண்டு.

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இது கட்டைப்படகு (dinghi class craft) வகை புளு ஸ்ரார் வகுப்பு கலன் ஆகும். இவை தாக்குதல் கலங்களாக காவிகளாக இடியன்களாக எனப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
       
      இருப்பில் இருந்தவை: 100 - 120 (சிங்களம் கொடுத்த புலனம்) நீளம் = 18.9' அகலம் = 4.10' உயரம் = 3' தொலைத்தொடர்பு = VHF கலவர் = 1/2 வெளியிணைப்பு மின்னோடி = 1x 85HP நிறம் = வெவ்வேறு நிறங்கள் வேகம் - 25- 30 kts இடியன்களாக…..
      ஆய்தம் = சிறிய சுடுகலன்கள் கலவர் = 1/2 தொலைத்தொடர்பு = VHF/ GA antenna 1)

      2)இக்கலத்தின் பெயர் தியாகன் என்பதாகும்.

      3)

      4)

      'புளூஸ்ராரில் போகும் கரும்புலி வீரன்'
      5)


       
      — திரிக்கா வகுப்புக் கலன் (thirikka class craft)
      இவ்வகைக் கலங்கள் சரக்குக் காவ அல்லது ஆட்காவப் பயன்படுத்தப்பட்டன. கரும்புலிக் கலங்களாகவும் தாக்குதல்களின் போதும் சில வேளைகளில் பயன்படுவதுண்டு.
      நீளம் = விதம் - 45' விதம் - 35 ' அகலம்= 9 1/2' உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு கலவர் = 4–5 (தாக்குதலின் போது), 10–15(ஆட்காவுதலின் போது) தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 40-45 kts எடை = 45-kilotonne ஆய்தம் = 14.7 mm / .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் வகுப்பு 1(I) இது கரும்புலிக் கலனாகும். இக்கலங்களால் 1.5தொன் அளவு பொருட்களைக் காவிச் செல்ல இயலும். இவற்றின் அணியத்தின் கீழ் பகுதியில் ஒரு கவர் வெளியில் நீண்டபடியிருக்கும்.

      வகுப்பு 1(II) மேற்கண்ட வகுப்பு 1 வடிவம் தான் இது.. இதற்கும் சன்னத் தடுப்பு கட்டமைப்பு உண்டு. . இதன் பொறி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒரு பெட்டி போன்ற கவசம் கட்டப்பட்டுள்ளது.. இக்கலங்களால் 1.5தொன் அளவு வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும். இவை கரும்புலிக்கலங்களாகவும் தாக்குதலுக்கும் பயன்படுத்தப்பட்டன.
      உள்ளிணைப்பு மின்னோடி = 2 ஆய்தம் = 1x .50mm 1) கரும்புலிக்கலங்களாக…






      'சக்கை வைக்கும் உட்பகுதி'


      'உ.மி. வைக்கும் பின்புறம்'

      'பொறி உள்ள பின் பகுதி'


      'ஓட்டியின் இருக்கை'

      'திரிக்கா வகைக் கரும்புலிக் கலனில் உள்ள கவர்கள் '
       
      கட்டுமரங்களையும் கரும்புலித்தாக்குதலுக்கு பயன்படுத்துவார்கள். அவற்றில் 5 குதிரை வலு கொண்ட வெளியிணைப்பு மின்னோடிகள் இருந்தன.  
      புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றி அறிய இக்கொழுவியினைச் சொடுக்கவும்…
      சரி, இனி நீரடிக் கலங்கள் பற்றிக் காண்போம்.. கடற்புலிகள் திரையோடும் கடற்கலங்களை மட்டுமல்லாது நீரடிக் கலங்களையும் உருவாக்கியிருந்தனர் என்பது நாமறிந்தது.. இது பற்றி சென்ற விடையினில் நான் விரிவாக எழுதியிருந்தேன்.. இப்போது அவர்கள் பயன்படுத்திய நீர்மூழ்கிகள் என்னும் சொல்லினுள் அடங்காத கடற்கலங்கள் பற்றிப் பார்க்கப்போகிறோம்... இவை மிகவும் வேறுபாடான பற்பல வடிவுகளைக் கொண்டிருந்தன.. இவற்றின் வடிவங்கள் மலைக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் எந்தவொரு வளங்கள் அற்ற இடத்தில் இயங்கிய ஒரு இயக்கம் இப்படியெல்லாம் உருவாக்கியது ஆச்சரியத்தின் உச்சமே!
      மிதக்கும் நீர்முழுகி இலக்கிய ஏவரி(diver aimed floating torpedo) இதில் புலிகள் பல்வேறு வகையினை உருவாக்கியிருந்தார்கள். அவற்றின் வகைப் பெயர்க் குறிப்புகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.
      1)
      வெளியிணைப்பு மின்னோடி = 1x 15Hp கலவர் = 1

      'மிதக்கும் நீர்முழுகி இலக்கு ஏவரியுடன் ஒரு நீர்முழுகி கரும்புலி '

      'மிதக்கும் நீர்முழுகி இலக்கு ஏவரியுடன் ஒரு நீர்முழுகி கரும்புலி'
      2)
      இருபுறமும் இரு உருளைவடிவ குழாய்கள், நடுவில் வெடிமருந்து நிரப்பப்பட்ட குழாய் என்பன உலோகமற்ற பொருளினால் இணைக்கப்பட்டுள்ளது.
      வெளியிணைப்பு மின்னோடி= 1x 15Hp கலவர் = 1



      3)இது சோதனைப் பதிப்பாக உருவாக்கப்பட்டிருந்த கலமாகும்.


      'பக்கவாட்டுப் பார்வை'

      'மேலிருந்து சத்தார்ப்பார்வை'
      மேற்கண்ட கலத்தின் பின்பகுதி:

       
      — மன்னியக்க சத்தி மடவைப் பலகை (manually powered paddle board)
      கடற்புலிகள் ஒற்றலுக்கும் ஊடுருவலுக்கும் இவற்றைப் பயன்படுத்தினார்கள். சிலது கரும்புலி கரணங்கள்(device) என்று விவரிக்கப்பட்ட்டாலும் இவை வெடிபொருட்களை நேரடியாக இலக்குக்கு கொண்டு செல்லவும் பயன்பட்டிருக்கலாம்.

      'இப்படத்தில் 6 வகையான மன்னியக்க சத்தி மடவைப் பலகைகள் காட்டப்பட்டுள்ளன'
      1.

      2.


      'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார் சிறீலங்காத் தரைப்படை வீரன்'
      3.

      4.

      'எவ்வாறு இதன் இயக்கம் இருந்திருக்கும் என்று போலச்செய்கிறார், சிறீலங்காத் தரைப்படை வீரன்'

      5.


      'இந்த வளைந்த கம்பி போன்று இருப்பதுதான் ஓட்டியிருக்கை'
       
      நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்(diver propulsion device): 1) உள்ளூரில் உருவாக்கப்பட்ட நீர்முழுகி பிலிறுந்தக் கரணம். ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel)


      'சுக்கான் (மேலிருந்த பார்வை)'
      2)
      கடற்புலிகளின் நீரடி நீச்சல் அணிகளான கங்கை அமரன் & அங்கயற்கண்ணி அணிகள் பழைய உருசியா (Russia) உண்டாக்கிய(made) படைத்துறைத் தர கருவிகளான மீளுயிர்ப்பி(Re-breather) மற்றும் நீர்முழுகி பிலிறுந்தக் கரணம் (diver propulsion device) உள்ளிட்ட சிறிய அளவிலான கருவிகளைக் கொண்டிருந்தனர்.

      'நிழற்படத்தின் முன்னால் இருப்பது உருசிய உருவாக்க நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்; பின்னால் இருப்பது IDA71 மீளுயிர்ப்பி'

      'உருசியா உண்டாக்கிய (russian made) நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் மேற்பகுதி | பின்னால் இருப்பது 'IDA71 மீளுயிர்ப்பி'

      'உருசிய உண்டாக்கிய நீர்முழுகி பிலிறுந்தக் கரணத்தின் அடிப்பகுதி'
      3) APOLLO AV-1 நீர்முழுகி பிலிறுந்தக் கரணம்

       
      நீர்முழுகி உடைகள் & அணிகலங்கள்
      சிறிய(சாம்பல், & மஞ்சள்) பெரிய(இளநீலம் ) ஒக்சியென் உருளைகள்(oxygen cylinders)
      இரண்டு பெரிய ஒக்சியென் உருளைகளை பக்கவாட்டிலும் ஒரு மீளுயிர்ப்பியை நடுவிலும் கொண்ட ஓர் கரணம். இது என்னவென்று எனக்கு சரியாகத் தெரியவில்லை.. இதை ஒருவர் தன்னந்தனியாக முதுகில் காவிச் செல்லலாம்.




      'IDA71 மீளுயிர்ப்பி'

      'IDA71 மீளுயிர்ப்பி'

      மீளுயிர்ப்பிக்குள் இருக்கும் ஒக்சியென் குடுவை, சீரியக்கி(regulator) , counter lung, scrubber canisters .

      மீளுயிர்ப்பி அணிந்த ஓர் சராசரி நீர்முழுகியின் தோற்றம் (கடற்புலிகளிடம் நீலம் மற்றும் கறுப்பில் நீர்முழுகி உடை இருந்தது)

      'கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர் நீருக்குள் செல்கின்றனர்'

      'நீரினுள் மிதக்கும் கடற்புலிகளின் நீர்முழுகி பிரிவினர்'

      'தூவிகள் (fins)'

      'IDA-71 முகமூடி'

      'நீர்முழுகிகளால் அணியப்படும் உடைகள்'

      'நீரடி நீச்சல் முட்டுகள் (gears)'

      'AQUACOM STX-101 மேற்பரப்பு நிலைய தொடர்புப் பகுதி (surface station communication unit)'

      'BAUER mariner 200 காற்று அமுக்கி(air compressor)'

      மற்றுமொரு விதமான நீர்முழுகி உடை. சிறீலங்கா இராணுவ வீரரின் வயிற்றில் உள்ள அந்த பைக்குள்தான் ஒக்சியென் குடுவை உள்ளது.


      'இந்த ஒக்சியென் குடுவைதான் அந்த செம்மஞ்சள் நிற பைக்குள் இருந்தது'
       
      இடிப்பதற்கு சில மணிதுளிகள் முன்...
      நீர்மேல் தாக்குதற் கரும்புலிகள் தம் கடற்கலத்தால் எதிரியின் கடற்கலத்தோடு மோத முன்
      என்று முழங்கி, அதன் பின்னர்
      என்று முழங்கி மோதி வெடிப்பார்கள்.
       
      உசாத்துணை:
      Facebook https://www.morebooks.de/store/gb/book/asymmetric-warfare-at-sea/isbn/978-3-659-86575-6 http://galledialogue.lk/assets/template/research_papers/2011/Prof_Rohan_Gunaratna.pdf களத்தில் - இதழ் விடுதலைப் புலிகள் -இதழ் படிமப்புரவு:
      - இங்கிருந்துதான் இதனை பிரித்தெடுத்துள்ளேன். ஆதலால் தனியா பிரித்தெடுக்க முடியவில்லை. மறந்து விட்டேன்  
      ஆக்கம் & வெளியீடு:
      நன்னிச் சோழன்
    • By நன்னிச் சோழன்
      "தோற்றிடேல், மீறி 
      தோற்றிடினும் வரலாறின்றி சாகேல்!"
      -நன்னிச் சோழன்
       

       
      எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் எவர் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை.. இவை தமிழினத்தின் வரலற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்….!  
      எல்லா(hello)...
      வணக்கம்…/\… தோழர்களே!
      கடந்த 15 நாட்களாய் வலைத்தளங்கள் முழுவதும் துளாவியாய்ந்து ஒருவழியாய் இந்த ஆய்வு விடையினை முடித்து விட்டேன்..
      வாசகர்களே! ஏதேனும் பிழை இருந்தால் உடனே சுட்டிக்காட்ட தவற வேண்டாம்.. கடற்புலிகளோ இல்லை அவர்களை அறிந்தவர்களோ யாரேனும் இதைப் வாசிக்க நேர்ந்தால் இதில் உள்ள தவறுகளை உடனே சுட்டிக்காட்டுங்கள்; திருத்திக்கொள்ள அணியமாய் உள்ளேன். எமது வரலாற்றை எழுத உதவி செய்யுங்கள்.../\...
      முக்கிய சொற்கள்:- கதுவீ = RADAR கலவர் = crew அணியம் - bow உருமறைப்பு = camouflage வெளியிணைப்பு மின்னோடி= out board motor அ = அல்லது கடற்கலன் - sea vessel சத்தார் = a cornered angle ஓடு = shell கூடு = hull கவர் - prong  
      சரி வாருங்கள் இனி கட்டுரைக்குள் போவோம்..
      இது என்னுடைய கடற்கலங்கள் பற்றிய இரண்டாவது ஆய்வு விடை (முதலாவது)…. போன கடற்கலங்கள் பற்றிய விடையில் பண்டைய தமிழர்களால் உருவோட்டப்பட்ட(sail) கலங்களை பற்றிப் எழுதியிருந்தேன்; வாசித்திருந்தீர்கள்.. இவ்விடையில் நாம் ஈழத்தீவில் வாழும் தமிழர்களுக்கென்று தனிநாடு (தமிழீழம்) கேட்டுப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்படையான கடற்புலிகளால் (தமிழீழக் கடற்படை என்று அவர்களால் குறிக்கப்பட்டது) போரில் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள் பற்றி விரிவாகப் பார்க்கப்போகிறோம்..
      கடற்புலிகளின் மொத்த எண்ணிக்கை: 2000 - 3000 2004 ஆம் அண்டு வரை(கார்த்திகை வரை) வீரச்சாவடைந்தோர் - 1066 பேர் இவர்களால் கடற்சமர்களின் போது ஆடப் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்:
      மிராஜ் & தல்ராஜ் வகுப்புப் படகுகள் - 30–35 குமுதன் என்ற டோறா தோற்றப் படகு - 2 வோட்டர் ஜெட் படகுகள் - 4 நீர்த் தாரைகள் (water jets) - எண்ணிக்கை அறியில்லை போக்குவரவுப் படகுகள் (transport boats)- 20+ தொலையியக்கி கட்டுப்படுத்தி படகு (remote control boat)-1 (படம் கிடைக்கப்பெறவில்லை) கட்டைப்படகு (Dinghy) - 115+ சரக்குப் படகுகள் (cargo boats)- 25+ ஏனைய ஆடியிழைப் படகுகள்(சகடம், திரிக்கா, சூடை, வெள்ளை,… ) - 75+ (மேற்கண்ட பற்றியத்திற்கு ஆதாரம்: சிங்களத்தால் வெளியிடப்பட்ட "humanitarian(!?) operation factual analysis")
      உப்பயானம் (Inflatable boat) - 10+ குருவி வகுப்புக் கலன் (Kuruvi class craft) - 10–15 சுப்பர் சொனிக் வகுப்புக் கலன் (Super Sonic class craft) = 15–20 புலிகளால் பயன்படுத்தப்பட்ட இக்கடற்கலங்கள் எல்லாம் ஆடியிழைகளால் (fiber glass) ஆனவை.. ஆகையாலத்தான் இவை யூதரின் டோராக்களைப் (mk-III) போல அதிவேகமாக கடலில் ஓடின... ஏன் டோராக்களையே கடலில் துரத்தும் அளவிற்கு வேகம் பெற்றிருந்தன.. இக்கடற்கலங்களை கட்டுவதற்கு புலிகளிடம் 2 பிரிவுகள் இருந்தன. அவையாவன, மங்கை & டேவிட் படகு கட்டுமானம் என்பவையே.. கடற்புலிகள் தங்களின் இந்தக் கலங்களை வண்டி என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள். அதில், சமருக்குச் செல்லும் கலங்களிற்கு சண்டை வண்டி என்று அடைமொழியிட்டிருந்தனர். இவர்கள் தங்கள் கடற்கலங்களில் KOEN, FURNOCO, JRC, JMA, TOKIMEC , Garmin & Ray Marine ஆகிய கதுவீகளைப் பயன்படுத்தியிருந்தார்கள். (இவற்றில் எந்தக் கலத்தில் எதனைப் பயன்படுத்தினார்கள் என்பது தெரியாததால் அவற்றின் வடிவங்களை மட்டும் கீழே கொடுத்திருக்கிறேன்..)
      கடற்புலிகளின் கடற்கலங்கள் பல்வேறு வகையாக இருந்தாலும் அவர்கள் தங்களின் ஒவ்வொரு கடற்கலங்களுக்கும் தனித்தனிப் பெயர்களைச் சூட்டியிருந்தனர்.. அவை அவர்களின் அமைப்பில் இருந்து வீரச்சாவினை தழுவிய போராளிகளின் பெயர்களை தாங்கி இருந்தன.. அவ்வாறு இருந்த பெயர்களை என்னால் இயன்றளவு தேடிச் சேகரித்துள்ளேன்.. அவையாவன,
      சூடை வகுப்புக் கலங்கள்: சுதர்சன், மது, கருவிழி தாழ் தோற்றுவக் கலன்(LPV): ஊடுருவி- 200G-01 அரை நீர்மூழ்கி: சதீஸ், கோகுலன்-2, கோகுலன்-24, கோகுலன்-45 திரிக்கா வகுப்புக் கலங்கள்: ராகினி, சித்திரா, முத்துமணி, இலங்கேஸ்வரன் குருவி வகுப்புக் கலங்கள்: ஜீவன், 004 நளன், ஜெயந்தன், [குமரப்பா, புலேந்திரன் (இவையிரண்டும் பின்னாளில் குண்டுப்படகாகி விட்டன)] சுப்பர் சொனிக் கலங்கள் ஜெயந்தன், சிதம்பரம் தாங்கி(Tanker) படகு: பழனி, மகேஸ்வரி லுசான் வகுப்பு கலன்: நீ-004, பாமா சகடம் வகுப்பு கலன்: திரு கி. கண்ணன், நெடுமாறன் வகை பெயர் அறியா ஒரே வகையைச் சேர்ந்த கலங்களின் பெயர்கள்: அன்புமாறன், ஓவியா, ரகு, செங்கண்ணன் வகை பெயர் அறியா ஒரே வகையைச் சேர்ந்த கலத்தின் பெயர் : பரணி வினியோக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்ட அதிவேகப் படகுகள் : வினோத், தர்மன்  
      இந்தப் பாடல் கடற்புலிகள் படகு தள்ளும் போது பாடும் 'ஏலேலோ' மாதிரியான ஓர் பாடல்.. இப்பாடல் அவர்களின் ஓர் திரைப்படத்தில்(கடலோரக் காற்று) இருந்து எடுக்கப்பட்டதாகும்.. இதை திரைப்படத்திற்காகப் பாடினார்களா இல்லை உண்மையிலே பாடுவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.. இருந்தாலும் கொடுக்கிறேன்.. இது உறுதிப்படுத்தப்படாத செய்தி! (கவிப்படகு வழிமறிக்க
      டோரா சுக்குநூறு….)
      கடற்புலி டோரா
      கரும்புலி வெடிக்கும் ..... (கவிப்)
      கடற்புலி மோத
      கரும்புலி வெடிக்கும் .... (கவிப்)
      கடற்புலி மோத
      இந்தா ஒண்டு, இந்தா ரண்டு, இந்தா மூண்டு.... ஏஏஏ…
       
      மேலும் வாசிக்க: 
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      புலிகள் இதனைச் சோதனைப் பதிப்பாக உருவாக்கியிருக்கிறார்கள்
      கலவர் = 1 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP

      மேற்கண்ட கலத்தின் உட்பகுதி:

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இக்கலங்கள் கரும்புலிக் கலங்களாகவும் சரக்குக் காவிக் கலங்களாகவும் பயன்படுத்தப்பட்டன
      வெளியிணைப்பு மின்னோடி = 2x 200hp நிறம் = நீலம், பச்சை தொலைத்தொடர்பு = VHF கலவர் = 2 1)கரும்புலிக் கலங்களாக
      2)சரக்குக் காவிகளாக
      கலவர் = தேவைக்கேற்ப
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      மேலே நீங்கள் கண்ட கடற்கலங்களின் சிறிய வகை போல உள்ளது இக்கடற்கலன்.
      வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP நிறம் = பச்சை
      மேற்கண்ட கலத்தின் உட்பகுதி:

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இது கட்டைப்படகு வகைக் (dinghi class craft) புளு ஸ்ரார் வகுப்பு கலன் ஆகும். இவை தாக்குதல் கலங்களாக, காவிகளாக, இடியன்களாக எனப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
      இருப்பில் இருந்தவை: 100 - 120 (சிங்களம் கொடுத்த புலனம்) நீளம் = 18.9' அகலம் = 4.10' உயரம் = 3' தொலைத்தொடர்பு = VHF கலவர் = 1/2 வெளியிணைப்பு மின்னோடி = 1x 85HP / சில வேளைகளில் 1x40 HP நிறம் = வெவ்வேறு நிறங்கள் வேகம் - 25- 30 kts தாக்குதல் கலங்களாக…. ஆய்தம் = 1x ZPU -1/ 1x 7.62 GPMG
      கலவர் = 3/4
      தொலைத்தொடர்பு = VHF
      1)

      மேற்கண்ட கலத்தினில் இருப்பவர் கடற்புலி அல்ல.. இவர் சிறீலங்காக் கடற்படையின் கலவர்.
      2)

      'கலத்தினில் கடற்புலிகள் '
      3) &4)

      'கலங்களில் கடற்புலிகள் '
      5)


      'மேலே தெரியும் ஆறு கலங்களும் சண்டைக் கலங்களே.. ஆறிலும் சுடுகலன் பூட்டுவதற்கான தலா ஒரு தண்டு இருந்தது. இவை சுண்டிக்குளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டவை ஆகும்.'

      'இதில் சுடுகலன் பூட்டுவதற்கான இரண்டு தண்டுகள் இருந்தன. இது சுண்டிக்குளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும்.'
      காவிகளாக….. ஆய்தம் = சிறிய சுடுகலன்கள்
      1)ஆட்காவி

      2)சரக்குகாவி

      2)


      'கடற்புலிகளின் நாச்சிக்குடா கடற்படைத்தளத்தில் சிறீலங்கா தரைப்படையால் கைப்பற்றப்பட்ட புலிகளின் படகுகள்'
      — திரிக்கா வகுப்புக் கலன் (thirikka class craft)
      இவ்வகைக் கலங்கள் சரக்குக் காவ அல்லது ஆட்காவப் பயன்படுத்தப்பட்டன. கரும்புலிக் கலங்களாகவும் தாக்குதல்களின் போதும் சில வேளைகளில் பயன்படுவதுண்டு.
      நீளம் = 45' அகலம்= 9 1/2' உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 4 x 200 HP நிறம் = உருமறைப்பு, கறுப்பு கலவர் = 4–5 (தாக்குதலின் போது), 10–15(ஆட்காவுதலின் போது) தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் வேகம் : 40-45 kts எடை = 45-kilotonne ஆய்தம் = 14.7 mm / .50 முன் / பின் , சிறியளவிலான ஆய்தங்கள் 1)

      2)


      3)

      வகுப்பு 1(II) மேற்கண்ட வகுப்பு 1 வடிவம் தான் இது.. ஆனால் இதன் பொறி வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு ஒரு பெட்டி போன்ற கவசம் கட்டப்பட்டுள்ளது.. எனவே, இது உள்ளிணைப்பு மின்னோடி(IBM) கொண்ட படகாகும். இதே போல இருந்த மற்றொரு படகு இடியனாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு உள்ளிணைப்பு மின்னோடிகள்(IBM) இருந்தது அறியப்பட்டுள்ளது.

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை:-
      பார்ப்பதற்கு திரிக்கா வகையைச் சேர்ந்ததாக தோன்றினாலும் இதன் கடையால் தோற்றத்தால் அதனினின்று வேறுபடுகிறது. திரிக்காவை விட பெரிதாக நல்ல உய்ரமாக உள்ளது. கடையாலில் இரு சுடுகலன்கள் பூட்டுவதற்கேற்ப இரு தண்டுகள் உள்ளன.
      வட்டு வரைக்குமான உயரம்: 5.6' - 5.8

      மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது

      மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது

      மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது


      'மேலே உள்ள கலத்தின் மேல் உள்ள கோபுரம் போன்றதுதான் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது'

      'மேற்கண்ட கலத்தின் உட்புறத்தோற்றம்'
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை:-
      இதுவும் கடற்புலிகளின் ஒருவகையான படையேற்பாட்டுக் கலம்தான்.

      மேலே உள்ளது தான் கீழேயும் உள்ளது

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இவை அதிவேக தாக்குதல் கலங்களாகும்.
      வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200 HP நிறம் = உருமறைப்பு (கறுப்பு& மஞ்சள்) ஆய்தம் = 14.5 mm ZPU-1, 1x 7.62mm GPMG கலவர் = 6 இக்கலத்தின் கலப்பெயர் பரணி ஆகும்

      'அணியம், பக்கவாட்டுத் தோற்றம்'

      'கடையால்'
      2)

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இவ்வகைக் கலங்கள் வழங்கல் கலங்கள் ஆகும்.
      நீளம் = 42' அகலம்= 12' வெளியிணைப்பு மின்னோடி= 3 x 200 நிறம் = உருமறைப்பு கலவர் = 07 வேகம் = 30–35kts தொலைத்தொடர்பு = VHF கதுவீ = வட்டு வடிவம் உயரம் = 3.4' ஆய்தம் = 01 x 20 mm(முன்); 01 x 12.7mm (பின் ); 01 x RPG ; 01 x PK(பின்) 1)

      2)

      3) இக்கலத்தின் பெயர்: அன்புமாறன்


      ''அன்புமாறன்' கலத்தின் அடிப்பகுதி'
      4)இக்கலத்தின் பெயர்: ஓவியா


      'கலத்தின் கடையால்'

      'கலத்தில் பின்னிருந்து முன்னோக்கிய தோற்றம்'
      5) & 6) இதே போல இருந்த மற்றைய இரு படகுகளின் பெயர்: ரகு & செங்கண்ணன்
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இவ்வகைக் கலங்கள் வழங்கல் கலங்கள் ஆகும்.
      1)

      2)

       
      — சூடை வகுப்பு கலன் ( Sudai class craft )
      இவ்வகைக் கலங்கள் தாக்குதல் கலங்கள் ஆகும். இவைதான் புலிகளால் முராஜ் வகைத் தாக்குதல் கலங்களிற்கு அடுத்த இடத்தில் வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டவையாகும். இவை புலிகளிடம் 15- 20 ஆவது இருந்திருக்கலாம் என்று கணிக்கிறேன். இதன் கலக்கூடு பிரசாந்த் வகுப்பைப் போன்றே இருந்தாலும், இவற்றின் பக்கவோரத்தின் மேற்புறமானது இலேசாக உட்புறமாக வளைக்கப்பட்டிருக்கிறது.
      நீளம் = 35.8' அகலம் = 8.9' உயரம் = 5' வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250 HP நிறம் = கறுப்பு, சாம்பல் கலவர் = 6-8 வேகம் = 40–42 kts எடை = 10-kilo tonne கதுவீ =வட்டு வடிவம் தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = ZU-23 mm/20mm (முன்), 1x GPMG(பின்), 1x12.7mm(பின்), 1xRPG 1)

      2)



      3)

      'சூடை கலத்தின் தோற்றம்'

      'கலத்தின் கடையால்'
      4.இவற்றின் ஒருசிலவற்றின் மீகாமன் இருப்பிடத்திற்கு கூடும் போடப்பட்டிருந்தது

      5) & 6)

       
      — சகடம் வகுப்புக் கலன்(Sahadam Class craft)
      இவை பார்ப்பதற்கு சூடை வகை போன்று தென்பட்டாலும் இவை அவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. இவை போக்குவரத்திற்கும் வழங்கலிற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒன்றினது கலப்பெயர் **திரு கி.கண்ணன்** ஆகும்
      வெளியிணைப்பு மின்னோடி = 3x200Hp நிறம் = பச்சை, சாம்பல், உருமறைப்பு வேகம் = 30kts (புலனம் கிடைத்த இடம்: கடற்புலிகளின் சேர்ப்பர்(அட்மிரல்) சூசை வழங்கிய நேர்காணல்) கலவர் = தேவைக்கேற்ப தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = 20mm / .50cal M2 Browning(முன்), Pk (பின்), 1xRPG 1)

      'முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆய்தங்கள் கடல் வழியாக கொண்டுவந்து தரையிறக்கப்படுகின்றன'
      → இதன் பெயர் திரு.கி கண்ணன் என்பதாகும்


      2)

      3)மற்றொரு கலத்தின் பெயர் நெடுமாறன் என்பதாகும். இதைவிடவும் இன்னும் பல கலங்கள் புலிகளிடம் இருந்தன.
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இதன் கலப்பெயர் அதன் கலவோட்டில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் தெளிவாகத் தெரியவில்லை.
      இக்கலமானது மேலே உள்ள கலத்தைப் போலவே பார்வைக்கு தோன்றினாலும், அதனினின்று முற்றிலுமாக வேறுபட்டது. மேற்கண்ட கலத்திலிருந்து இக்கலத்தின் - பக்கவோரங்கள் மிகவும் சிறியவை; மீகாமனறை மிகவும் உயர்ந்தது; அணியப் பக்கவோரங்களில் கட்டைகள் உள்ளன; பிடிகம்பிகள் இதற்கில்லை - ஆகியன வேறுபடுகின்றன என்பதை நினைவில் கொள்க.
      1)

      'இவ்வகைக் கலத்தின் முழுப்படம்'


       

      கடையால்
       
      மிராஜ் (Wave Rider) மற்றும் தல்ராஜ் வகைப் படகுகள்:  
       
      குமுதன் டோறா வகுப்புக் கடற்கலன் :  
      — வோட்டர் ஜெட் சுற்றுக்காவல் படகுகள் (Water Jet patrol boat)
      இவை சிறீலங்காக் கடற்படையிடம் இருந்து விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டவையாகும்
      நிறம் = உருமறைப்பு தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் =1x 12.7mm(பின்), 1x 12.7/20mm(முன்) கலவர் = 8–12 கதுவீ = இல்லை வெளியிணைப்பு மின்னோடி = 3 x 200 HP 1)இங்கே நீங்கள் கீழே பார்க்கும் கலத்தின் பெயர் : {ச _(இது ஒரு மெய்யெழுத்து) _ _ } ஆக மொத்தம் நான்கு எழுத்துக்கள் உள்ளன.

      2) கலத்தின் பெயர் நீ-004/ பாமா


      3) இக்கலத்தின் பெயர் தெரியவில்லை

      'முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட ஆய்தங்கள் கடல் வழியாக கொண்டுவந்து தரையிறக்கப்படுகின்றன'
      4) இதன் முன்புறத்தில் முதன்மைச் சுடுகலம் தவிர இருபக்கவாட்டிற்கும் இரு இயந்திரச் சுடுகலன்கள்(7.62 மி.மீ) பொருத்தப்பட்டிருந்தன.

       
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இது Air duplication craft ஆகும். இவ்வகைக் கலங்கள் சரக்குக்காவிக் கலங்கள் ஆகும். இக்கலங்கள் பெரிய கப்பல்களில் இருந்து ஊர்திகளை கரைக்குக் கொண்டுவரப் பயன்பட்டன.
      நீளம் = 42' அகலம்= 16' வெளியிணைப்பு மின்னோடி = 2 x 200 HP நிறம் = உருமறைப்பு, பச்சை கலவர் = 4 வேகம் = 30 kts தொலைத்தொடர்பு = VHF ஆய்தம் = சிறியளவிலான ஆய்தங்கள்


       
      — குருவி வகுப்புக் கலன் : (kuruvi class craft)
      இவ்வகைக் கலங்கள் ஆட்காவி அ சுற்றுக்காவல் கலங்களாகும்.
      நீளம் = 18' அகலம்= 9' வெளியிணைப்பு மின்னோடி= 1 x 150HP நிறம் = உருமறைப்பு வேகம் = 35 kts கலவர் = சுற்றுக்காவல் - 3/4 ஆட்காவி - பணியைப் பொறுத்து ஆய்தம் = 1xRPG & 1x.50cal /1x7.52mm pk 1)

      2)

      3)&4)

      5)இது இரட்டை வெளியிணைப்புப் பொறி கொண்ட படகாகும்

      6) இப்படகிற்கு மீகாமன் இருக்குமிடத்திற்கு சாளரம் போல ஆடி(glass) பூட்டப்பட்டுள்ளது.

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      1)


      'வலப்பக்கத்தில் உள்ள கடற்கலன்தான் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் வகையைச் சேர்ந்தது '
      2)

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      முன்பகுதியில் சரக்கறைகள் இருக்கின்றது.
      கலவர் = 6 ஆய்தம் = 1x.50cal/14.5mm single barrel(முன்), 1xpk/lmg(பின் இடது மூலை) & 1xRPG(தனியாள்) 1)


      2)

      3)

      4)

       
      — சுப்பர் சோனிக் வகுப்புப் படகுகள் (Super Sonic class boats)
      இவை புலிகளின் தாக்குதல் கலங்களாகவும் சுற்றுக்காவல் கலங்களாகவும் பயன்படுத்தப்பட்ட படகுகளாகும். இவற்றில் புலிகளிடம் இரு விதம் இருந்தது.
      நீளம் = 16 அடி 26 அடி (ஒரு சில படகுகளில் கதுவீ(RADAR) இருந்தது) ஆய்தம்: 16 அடி = .50 mm (முன்) 26 அடி = .50 mm/ 20 mm (முன்) , PKGPMG(பின்) கலவர் 16 அடி = 3 26 அடி = 6 வேகம்: 16 அடி = 20–25kts 26 அடி = 30–35kts வெளியிணைப்பு மின்னோடி: 16 அடி = 1 x 200 HP 26 அடி = 2 x 200 HP தொலைத்தொடர்பு = VHF நிறம் = உருமறைப்பு, பச்சை, நீலம், கறுப்பு இப்படகின் இப்போதைய உலகளாவிய பெயர்: செட்ரிக் வகுப்பு சுற்றுக்காவல் கலன் (cedrik class patrol boat) பழைய பெயர் = அம்புப் படகு (arrow boat) இப்படகின் வரலாறு மிகவும் சுவையானது.. தன்துரையை அழிக்க தானே துணைபோன பெருமை இப்படகினைச் சேரும். அதாவது ஈழக் கடற்போரியல் வரலாற்றில் கடற்புலிகள்தான் முதற் தடவையாக 16 அடி நீளக் கலன்களை உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். பின்னர், அதனை கைப்பற்றி கொண்ட சிறிலங்கா அரசாங்கமானது அதன் வலுவைப் பயன்படுத்தி புலிகளுடனான கடற்போரில் பெரும் திருப்பங்களை விளைவித்தது எனலாம்… ஆனால் இன்று சிங்கள அரசாங்கமானதோ அதனைத் தானே முதன்முதலில் புதுப்புனைந்ததாக(invent) உலகரங்கில் கூசாமல் பறைகிறது... சரி அப்படியென்றால் இது எப்படி சிங்களப் படைகளின் கைகளுக்குப் போனது? .. சுருக்கமாகப் பார்த்து விடுவோம், வாருங்கள்…
      https://globalecco.org/ctx-v1n1/lashkar-e-taiba?p_p_auth=KcgCT0Hx&p_p_id=101&p_p_lifecycle=0&p_p_state=maximized&p_p_mode=view&_101_struts_action=%2Fasset_publisher%2Fview_content&_101_assetEntryId=611601&_101_type=content&_101_urlTitle=learning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers&redirect=https%3A%2F%2Fglobalecco.org%2Flearning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers%3Fp_p_id%3D3%26p_p_lifecycle%3D0%26p_p_state%3Dmaximized%26p_p_mode%3Dview%26_3_keywords%3Dsea%2Btigers%26_3_struts_action%3D%252Fsearch%252Fsearch%26_3_redirect%3D%252Flearning-from-our-enemies-sri-lankan-naval-special-warfare-against-the-sea-tigers
      இதில் இப்போது 18 அடி, 23 அடி என்று மேலும் இரண்டு புதிய விதங்கள் உருவாக்கப்பட்டு விட்டன. இதன் இப்போதைய பெயர் செட்ரிக் சுற்றுக்காவல் கலன் ஆகும் (பழைய அதிகாரியின் பெயரால்…)
      ஆக மக்களே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள், இங்கு யார் புதுபுனைவர்கள் என்று! சொந்தமாக உருவாக்கியதாகவே கூசாமல் பரப்புமை...!.. ம்..
      மக்களே, போரில் இரிபுநாட்டின் செல்வத்தையெல்லாம் வாகைநாடு சூறையாடுவது பரவலானது.. ஆனால் இதுகால் வரை சொந்தமாக ஒன்றினையும் உருவாக்காமல் தோற்றவனிடம் இருந்து ஊரறிந்த ஒன்றினை எடுத்துவிட்டு அதைப் புதுப்னைந்தவனே நான்தான் என்று முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கும் வாகைநாட்டை என்னவென்று விளிப்பது?
      ஆதாரங்கள் பின்வருமாறு: எனக்குக் கிடைத்த புலனங்கள் அடிப்படையில் இவையெல்லாம் 2006 ஆம் காலப்பகுதிக்கு முன்பாக எடுக்கப்பட்ட நிழற்படங்கள் என்று உறுதியளிக்கிறேன்…
      1)

      'கடற்புலிகளின் 16 அடி நீளக் கலன் | தவளை நடவடிக்கையின் போது'
      2)

      'சம்பூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் படகு | இக்கலத்தில் கதுவீ பூட்டப்பட்டுள்ளதைக் காண்க'
       
      3)

      'கடற்புலிகளின் 16 அடி நீளக் கலங்கள்'
      மேற்படத்தினை நன்றாகப் பார்த்துவிட்டு அப்படியே கீழே சிங்களத்தின் படகினைப் பாருங்கள். படியெடுக்கும் இயந்திரத்தில் (photocopy machine) போட்டு எடுத்தது என்று மட்டும் நினைக்க வேண்டாம் …./\…

      'சிங்களக் கடற்படையின் சிறப்பு படகு சதள(SBS) 16' அம்புப் படகு' | படிமப்புரவு : Sri Lanka "Arrow" RAB it was designed... - The Boats of Warboats ..., Facebook
      அடுத்து கடற்புலிகளின் 26 அடி நீளக் கலங்கலையும் சிங்களவரின் 23 அடி நீளக் கலங்களையும் காண்போம்.
      இந்த 16 அடி அம்புப் படகுகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமே 23 அடிக் அம்புக் கலங்களாகும்.

      'சிங்களக் கடற்படையின் சிறப்பு படகு சதள(SBS) 23' அம்புப் படகு |
      படிமப்புரவு: RP Defense - Overblog'
      1)
      மேற்படத்தினை நன்றாகப் பார்த்துவிட்டு அப்படியே கீழே கடற்புலிகளின் கலத்தினைப் பாருங்கள். கீழ்கண்டது கடற்புலிகளின் 26 அடி நீளக் கலமாகும். இக்கலன் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெருகல் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகும். படம் மட்டக்களப்பில் எடுக்கப்பட்டதாகும்.

      'இக்கலத்தினை நன்கு உத்துப் பாருங்கள். முன்னால் பின்னால் சுடுகலன்கள் பூட்டுவதற்கு ஏற்ற தண்டுகள் வெள்ளை நிறத்தில் தெரிகின்றன'
      2)
      கீழ்கண்டது கடற்புலிகளின் 26 அடி நீளக் கலமாகும். இக்கலத்தின் பெயர் அதன் கூட்டில்(hul) எழுதப்பட்டுள்ளது.. ஆனால் கட்புலனாகவில்லை. இது 2000 ஆண்டிற்கு முன்னரான காலப் பகுதியில் எடுக்கப்பட்ட படமாகும்.

      3)

      4)

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இதுவும் கடற்புலிகளிடம் இருந்த ஒரு வகைக் கலன்.
      நீளம்: 17.3 அடி அகலம் : 3 அடி கலவர் : 1–2 வேகம்: 25–30 kts வெளியிணைப்பு மின்னோடி = 1 x 150 HP




       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இது அதிவேக முச்சோங்கு (high speed trimaran) வகையைச் சேர்ந்த கடற்புலிகளின் கலமாகும். இவ்வகையிற்குப் புலிகள் பெயர் சூட்டினார்களா என்பது தெரியவில்லை. இதன் கலக்கூடு(hull) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.. இதனால் கடலில் நல்ல வேகமாக உருவோட முடியும்..
      வெளியிணைப்பு மின்னோடி = 3 x X 1.

      'அணியம்'

      'கடையால்'
      2.
      இதன் கூடு(hull) மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது..
      வெளியிணைப்பு மின்னோடி = 1 x X
      'கடையால் மூலைப் பார்வை'

      'அணியத்தோற்றம், இழுவையில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது'
       

      'அணியத் தோற்றம்'

      'பக்கவாட்டுத் தோற்றம்'

      'கடையால் தோற்றம்'
       
      இஃது இரட்டை கூடு கொண்ட ஓர் கடற்கலனாகும்.
      வெளியிணைப்பு மின்னோடி = 1 x X
      மேலே உள்ளது தான் கீழே உள்ளது:-

      'பின்பகுதி'

      'அணியம்'
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இது ஒற்றை இருக்கை கொண்ட , முக்கூட்டினை உடைய ஒரு சரக்குக் காவிக் கலனாகும். இதுவும் முக்கூட்டினை(tri hull) உடைய படகாகும்.
      வெளியிணைப்பு மின்னோடி = 2 x 250HP வேகம் = 40–50 kts கலவர் = பணியைப் பொறுத்து
      'பின்னிருந்த பார்வை'

      முன்னிருந்த பார்வை'

      பக்கவாட்டுப் பார்வை

      மேல்நோக்கிய அடிப்புறப் பார்வை

      கலத்தின் அணியம்

      கலத்தின் அணியம்

      பக்கவாட்டு சத்தார் பார்வை

      மேலிருந்து பின்புறச் சத்தார் பார்வை

      பின்புறப் பார்வை

      பின்புற சத்தார் பார்வை


      ஓட்டியிருக்கை

      முன்பகுதி உட்புறம்

      மேலிருந்து சத்தார் ஓட்டியிருக்கைப் பார்வை

      நடுப்பகுதி உட்புறம்

      'நடுப்பகுதி உட்புறம்'
       
      — ஆழ்கடல் மீன்பிடிப் படகு
      முன்னொரு காலத்தில் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் பெரும் அச்சுறுத்தலாக இருந்துள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடித் தொழிலுக்கு செல்பவர்களை படுகொலை செய்தும் கைது செய்து காணாமல் போகவும் செய்துள்ளனர். இதன் காரணமாக அந்த காலத்தில் மீனவர் தொழில் செய்வதில் பெரும் பின்னடைவைச் சந்தித்தித்திருந்தனர்.
      பொதுமக்கள் சந்தைகளில் அதிக விலை கொடுத்தும் மீன்களை பெற்றுகொள்ள முடியாதிருந்தது. அதனால் சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடற்புலிகள் பொதுமக்களின் நலன் கருதி பெரிய கடற்கலங்களில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து மிகக்குறைந்த விலையில் மீனவர்கள் ஊடாக பொதுமக்களுக்கு மீன்களை வழங்கினர் . அவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக விடுதலைப் புலிகள் பயன்படுததிய கடற்கலங்கள்தான் இவையாகும்.
      வகை: படகு 1)

      2)
      கலப்பெயர்: அன்னை வேளாங்கண்ணி


      3)

      4)
      இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது.

      'வெளிப்புறம்'

      'உட்புறம்'

      'வெளிப்புறம்'
      வகை: வள்ளம் 1)கலப்பெயர்: அந்தோணி.

      வகை: பாதை நீளம்: 30அடி
      இவ்வகைக் கலங்கள் புலிகளிடம் 5 இருந்தது.
      1) & 2)

      3) & 4)

      5)
      இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது.

      'இக்கலத்தில் சிறீலங்கா தரைப்படை வீரன் ஒருவர் ஏறி நிற்கிறார்'

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை:

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை:
      இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்டது ஆகும்.
      நீளம்: 80+ அடி
      'மேற்கண்ட படம் என்னால் உருவாக்கப்பட்ட படம் ஆகும்'
       

      'உட்பகுதி' படகினில் ஓர் சிறீலங்கா தரைப்படை வீரன் ஏறி நிற்கிறார்.. அவரை வைத்து கடற்கலத்தின் நீள அகலத்தினை எடை போட்டுக்கொளுங்கள், எவ்வளவு பெரியது என்று!

      'வெளிப்புறம்' கலத்தினை தொட்டபடி நிற்பவர் சிறீலங்கா இராணுவ வீரன்.

      'வெளிப்புறம் | கலத்தினை தொட்டபடி நிற்பவர் சிறீலங்கா இராணுவ வீரன் ஆவார்'
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை:
      இது பாதி கட்டப்பட்ட நிலையில் சிறீலங்காக் தரைப்படைகளால் கைப்பற்றபட்டு விட்டது.

      'பின்பக்க மூலையில் இருந்து முன்னோக்கிய பார்வை'

      'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய சத்தார் பார்வை'
       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      பார்ப்பதற்கு ஆட்காவிக் கடற்கலன் போன்று உள்ளது... இதே போன்று 2 கடற்கலங்கள் சிறீலங்காத் தரைப்படைகளால் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்தது.
      1)

       

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இக்கலத்தினைப் பற்றிய மேலதிக குறிப்புகள் ஏதும் தெரியவில்லை
       

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      படகு வகையைச் சேர்ந்த புலிகளின் ஓர் கடற்கலன்..
      கதுவீ = வட்டு வடிவம் ஆய்தம் = 2x 7.62 mm

      'பின்பக்கத்தில் இருந்து முன்னோக்கிய பார்வை... படத்தின் முன்னே தண்டு போல நிமிர்ந்து நிற்பது சுடுகலன் தாங்கி.. பின்னால் தெரிவது கதுவீ' '

      'முதலில் தெரிவது சுடுகலன் தாங்கி.. அதற்குப் பின்னால் தெரிவது கதுவீ''

      'படகில் இருந்த இரும்புச் சட்டகத்தில் மேலே உள்ளது போன்ற இரும்பு உருளைகள் பொருத்தப்பட்டிருந்தன.. பயன் தெரியவில்லை'
       
      இது ஒரு வலிப்பு படகு(rowing boat). இதன் பின்பகுதியில் துடுப்புடன் அமர்ந்திருப்பவர் கடற்கரும்புலி லெப்.கேணல். நாளாயினி. முன்பகுதியில் அமர்ந்திருப்பவர் யார் என்று தெரியவில்லை. இவர்கள் இருவரையும் சுற்றி 4 நீர்முழுகி வீரிகள் (women diver) உள்ளனர்.

       
      — உப்பயானம் (Inflatable boat) / இறப்பர் படகு (Rubber boat)
      இக்கலங்களுக்கு புலிகள் எப்பெயரும் சூட்டவில்லை. இது ஆட்காவுதலுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
      நீளம் : 15'- 17' கலவர் : தேவையைப் பொறுத்து வெளியிணைப்பு மின்னோடி = 1 x <150 HP நிறம் = சிவப்பு, நீலம், சாம்பல்


       
      — மிதவைகள் (floaters)
      இந்த உப்பயானத்தில் அமர்ந்திருப்பவர்கள் கடற்சிறுத்தைகள் (sea leopard commandos) ஆவர். இவர்களின் கையில் இருப்பது ஒரு மிதவை ஆகும். இதனுள் ஆய்தங்கள் வைக்கப்பட்டிருக்கும்.. மேலும் இதைப் பயன்படுத்தி நீரினிலும் மிதந்து நகர்வார்கள்.

      2)
      கீழே நீங்கள் பச்சை நிறத்தில் பார்ப்பது ஒரு காற்று நிரப்பப்பட்ட ஒரு வகையான மிதவை.. அருகில் நின்று ஆர்.பீ.ஜி -ஆல் அடிப்பவர் ஒரு கடற்சிறுத்தை வீரர் ஆவர். இந்த காற்று நிரப்பப்பட்ட பையானது நீள்சதுர வடிவிலானது ஆகும்.

       

       
      3)
      கலத்தின் மீகாமன் அறையில் செம்மஞ்சள் நிறத்தில் தொங்கிகொண்டிருப்பது இன்னொரு வகையான மிதவையே

       
      — புலிகள் சூட்டிய வகை பெயர் தெரியவில்லை
      இவை எல்லாம் ஒரு தாழ் மட்ட கடற்கல (Low planing Vessel) வகையினைச் சேர்ந்த கலங்களாகும். இவற்றின் வடிவத்தை வைத்துப் பார்க்கும் போது இவை ஊடுருவல் கலங்களாக(infiltration crafts) இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இக்கலங்களில் இருக்கை போன்று ஒன்று நடுவில் உள்ளது.
      கலவர் = 1–2 வெளியிணைப்பு மின்னோடி = 1 x X HP ஆய்தம் = GPMG 7.62mm (முன்) 1.

      2.

      பின்பக்கத் தோற்றம்:


      'அடிப்புறம்'
      3.


      'சத்தார் பக்க வாட்டுத் தோற்றம்'
       
      தாரைச்-சறுக்கு (Jetski): 1)

      3) இது எறிகணை(shell) வீச்சில் சிதைந்துவிட்டது.

       
      water scooter: 1)

      2)

       
      மிதக்கும் பாலம்:- இது காலியான பெற்ரோல் கலன்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். அவற்றை ஒன்றாகப் பிணைத்து அதன் மேல் நன்கு வலமான மரப்பலகைகள்(முதிரை போன்ற) போடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.


       
      கடற்புலிகளின் கலன் சோதனை இடம்.
      நீளம்: 100 அடி உயரம்: 10 அடி

      கலையரசன் நீச்சல் தடாகம் இது கடற்புலிகளின் சுழியோடிகள் கடலில் பயிற்சி எடுப்பதற்கு முன்னர் பயிற்றுவிக்கப்படும் இடமாகும். இது 83 அடி நீளமும் 23 அடி அகலமும் கொண்டதாகும்.







      அது பற்றிய ஒரு நிகழ்படம்(video)  
       
      கீழ்கண்ட இந்த இழுவைகளில்தான்(trailer) புலிகள் தங்களின் படகுகளை ஏற்றி வைப்பார்கள்.. தேவை வரும்போது இவற்றினை உழவு இயந்திரங்களில் கட்டி கரைக்கு இழுத்துச் செல்வார்கள். பின்னர் அங்கு உள்ள ஓர் ஊர்தி ஒன்றின் மூலம் கரையில் உள்ள மண்ணை தோண்டி அதன் மூலம் கலத்தினைக் கடலினுள் இறக்கிவிடுவார்கள்.. அந்த இறக்கும் ஊபின்புறத்தில் ஓர் கயிறு கட்டி அக்கயிற்றினை பினால் ஓர் ஊர்திக்கு கட்டிவிடுவார்காள். இதன் மூலம் அந்த தள்ளி இறக்கும் ஊர்தி கடலினுட் விழுந்தாலும் அதை கரையில் பிணைக்கப்பட்டுள்ள ஊர்தியைப் பயன்படுத்தி அதை உள்ளிழுத்து விடலாம்
      'கடலினுட் கலத்தினை இறக்கும் அந்த ஊர்தி'

      'அந்த ஊர்தி' அருகில் அமர்ந்திருப்பவர் சிங்கள ஊடகவியலாளர்.

      'படகுகாவிகள் எ இழுவைகள்'

      'படகுகாவி எ இழுவை'
       
      இதுவும் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஊர்தியே. இதன் பயன்பாடு என்னவென்று எனக்குத் தெரியவில்லை!

       
      இறுதியாக……………..
      'கடல் தன்னில் அலைமீது
      கவிபாடி விளையாடி
      புவியாளச் சென்றவரே! - உங்கள்
      உடலின்றி உயிரின்றி
      ஒளியோடு ஒலிகேட்டு
      எமை ஏங்க வைத்தவரே!'
      — கடற்புலிகளின் குறுவெட்டிலிருந்து…
       
       
      உசாத்துணை:
      https://eelam.tv/ - ஈழத்தமிழர்களின் யூடியுப் போன்றதொன்று Commentary #77) Sundayobserver.lk - Sri Lanka கடலோரக்காற்று - திரைப்படம் உப்பில் உறைந்த உதிரங்கள் - திரைப்படம் http://galledialogue.lk/assets/template/research_papers/2011/Prof_Rohan_Gunaratna.pdf EelamView (EelamView) Sea Tigers of the LTTE | Richard Pendavingh) The Island (The Island) (Learning from Our Enemies: Sri Lankan Naval Special Warfare against the Sea Tigers) http://boatswainslocker.com/customer/boloin/customerpages/jetbriefs/HJ_JB427_Sri_Lankan_Patrol_Fleet.pdf Lost Victory (Lost Victory) http://www.fak.dk/en/news/magazine/Documents/ISSUE%2002,%20VOLUME%2002/Whither_the_Hybrid_Threat.pdf புலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…! (https://eelavarkural.wordpress.com/2017/06/03/sea-tigers/) LTTE Suicide Boat Found (LTTE Suicide Boat Found) https://www.researchgate.net/figure/Text-accompanying-the-swimming-pool-Source-Author-photo-2013_fig4_276886367) புலிகளின் படகுத்தொழில்நுட்பத்தை களவாடிய சிங்கள அரசு.!! வெளிவரும் உண்மைகள் (https://www.vivasaayi.com/2016/08/real-sea-battalion.html?m=0) தமிழீழக் கடற்புலிகள்...! | வெளிச்சவீடு (http://www.velichaveedu.com/28219-5-a/) புலிகள் - எரித்ரியா தொடர்புக்கு நோர்வே அரசு உதவியுள்ளதா? (புலிகள் - எரித்ரியா தொடர்புக்கு நோர்வே அரசு உதவியுள்ளதா?) H I Sutton - Covert Shores (H I Sutton - Covert Shores) IDA71 - Wikipedia (IDA71 - Wikipedia) Stealth boats, mini subs of the LTTE(with janes video) (Stealth boats, mini subs of the LTTE(with janes video)) The last ‘Ad­mi­ral’ from http://H.M.Cy.S. Coastal Forces (The last ‘Ad­mi­ral’ from H.M.Cy.S. Coastal Forces) Dossier on weapons of ltte- pdf புலிகளின் மக்கள் சேவைப்படகு போர் காயங்களுடன் அனாதரவாக கிடக்கின்றது!. கடற்படையினரின் கட்டுப்பாட்டு வளாகத்தில் விடுதலைப் புலிகளின் தோணிகள் Sea Tigers – Wikipedia கடற்சிறுத்தை பெண்புலி நாதினி. | ஒருபேப்பர் http://galledialogue.lk/assets/template/research_papers/2011/Prof_Rohan_Gunaratna.pdf - திரிக்கா கலம் பற்றிய செய்திகள் யாவும் இங்கிருந்தே எடுக்கப்பட்டவை ஆகும். படிமப்புரவு(image courtesy)
      பெருமளவான படிமங்கள் YouTube இருந்து உருவாக்கப்பட்டவை ஆகும் Galledialogue 2019 http://eelamaravar.com Mapio.net IDA71 - Wikipedia தமிழீழக் கடற்புலிகள்...! | வெளிச்சவீடு TripAdvisor JVP NEWS - Tamil News, Tamil News, Lankasri, Tamil web news, Tamilcnn Richard Pendavingh ResearchGate Getty Images Wikimedia Commons H I Sutton - Covert Shores YouTube SBS and RABS breaking new grounds Thuppahi's Blog - WordPress.com: Create aFree Website or Blog (http://WordPress.com) Photography Unit of Liberation Tigers (http://aruchuna.com) Eelam Archives on Twitter https://twitter.com/EelamArchives/status/1254396048505798661/photo/1) Getty Images Home (https://www.uyirpu.com/) Steemit (http://steemit.com) LankaWeb News Eela Malar Pulikalin Kural - Pulikalin Kural (http://pulikalinkural.com) https://www.army.lk/ (https://www.army.lk/) http://tiger.javon.us (http://tiger.javon.us) Web Page Under Construction (http://TamilNation.com) EelamView (EelamView) Aruchuna (Photography Unit of Liberation Tigers) Enjoy free comfortable tools to publish, exchange, and share any kind of ocuments online! Explore Sri Lanka (Emerging Out Of The Shadows) Lakdasun Trip Reports Archive Navy Museum - Trincomalee (Navy Museum - Trincomalee) Al Jazeera http://HISutton.com (http://HISutton.com) Sri Lanka: Sea battle (Sri Lanka: Sea battle) Two more LTTE Suicide Boats &amp; Three Vehicles Found (http://WikimediaCommons.com) (no title) Sri Lanka Navy Museum - Captured LTTE Boats) (https://puliveeram.wordpress.com/2018/12/12/ltte-made-weapons/#jp-carousel-37657) http://Flickr.com (http://Flickr.com) EagleSpeak (EagleSpeak) http://www.shunya.net/Pictures/SriLanka/Vanni-East/Vanni-East.htm)) This is what they used. The LTTE of Sri Lanka - One of the worlds most brutal terrorist groups. H I Sutton - Covert Shores) Log In or Sign Up LTTE smuggling of diesel and cement foiled in Pesalai கடற்புலிகளின் முகாம் கண்டுபிடிப்பு: சிறிய நீர்மூழ்கிகள், படகுகள் மீட்பு. http://www.வேர்கள்.com தமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அதிசயிக்க வைத்த எங்கள் தலைவர் http://flickr.com - kumaran satha ரூபபாகிணி தொலைக்காட்சி - சிங்களம் TamilNet  
       
      ஆக்கம் & வெளியீடு
      நன்னிச் சோழன்
    • By நன்னிச் சோழன்
      "தோற்றிடேல், மீறி 
      தோற்றிடினும் வரலாறின்றி சாகேல்!"
      -நன்னிச் சோழன்
       
      எல்லா(hello)...
      வாங்கோ! வாங்கோ !
      வணக்கம்...
      என்னென்டு சொன்னால் இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. 
       
      இதனை நான் 'H I Sutton'-இல் வெளியாகிய கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றிய சில தகவல்களை தழுவியே எழுதினேன்.
       
      கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா?
      இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை..
      புலிகளால் கட்டப்பட்டவையில் பெரும்பாலானவை மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலன்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-submarines) மற்றும் ஒற்றை நீரடி வளிவழங்கி நீர்மூழ்கிகள் (one snorkel submarine) ஆகும்... இவற்றினை புலிகள் போரில் கையாண்டிருந்தார்களா என்பது உறுதியாகத் தெரியவில்லை.. ஆனால் புலிகள் இவற்றைப் பயன்படுத்தி பொருட்களை தருவித்திருந்தனர் என்பது மட்டும் உறுதி. 2008இல் நடத்தப்பட்ட ஓர் கரும்புலித் தாக்குதலில் தாழ் தோற்றுருவ கலன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது…
       
       
      நான் இங்கே நீர்மூழ்கி என்று பலர் கண்டு குழம்பும் புலிகளின் கலன்களைப் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்; படங்களை இணைத்துள்ளேன்.. ஏனைய கலன்களைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை!
       
       
      சரி, முதலில் ஆம் என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம்.
      நீர்மூழ்கிகள் (submarine): பொதுவாக மெய்யான நீர்மூழ்கிகள் என்பவை அரை-நீர்மூழ்கிகள் மற்றும் தாழ் தோற்றுருவ கலன்களை விட கட்டுவது, பராமரிப்பது மற்றும் பணியாற்றுவது மிகவும் கடினம். எதிரொலிக்கருவி(sonar) மற்றும் ஏவரிகள்(torpedoes) உதவியின்றி அவைகளின் தந்திரோபாய நன்மைகளும் மிகவும் குறைவாகவே உள்ளன, எனவே கடற்புலிகள் அவற்றைக் கட்டுவதில் பெரியளவில் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. ஆகவேதான் அவர்கள் ஒப்பீட்டளவில் சில நீர்மூழ்கிகளைக் கட்டினார்கள், அவை குறைந்தபட்சம் ஒரு நீரடி வளிவழங்கியாவது (snorkel) மேற்பரப்பை எட்டி முழுமையாக நீரில் மூழ்கும் திறன் கொண்டதாக இருந்தது.
      ஆனாலும் அவர்கள் 2 மெய்யான இயங்குநிலை நீர்மூழ்கிகளைக் கட்டியிருந்தார்கள். அத்தோடு மேலும் மூன்று நீர்மூழ்கிகளும் கிடைக்கப்பெற்றது.. ஆனால் அது இயங்குநிலை நீர்மூழ்கியா என்பதைப் பற்றிய புலனங்கள் ஏதும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.. புலிகளால் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஏனைய இரண்டு பெரிய வகை நீர்மூழ்கிகளும் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கியதால் முடிக்கப்படாமல் விடப்பட்டிருந்தன, இதனால் அவற்றின் இறுதிவடிவம் எவ்வாறு இருந்திருக்க முடியும் என்பதை எம்மால் ஊகிக்க முடியவில்லை.. போர் இன்னும் கொஞ்ச நாட்கள் நீடித்திருக்குமானால் புலிகளின் இந்தப் புதிய நீரடி போரியல் முறையையும் நாம் அறிந்திருக்கலாம்.
       
      1) &2)
      கீழே உள்ள இரு மெய்யான நீர்மூழ்கிகளும் தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்டதாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாக (travel) முடியும். ஆகையால் இது இராணுவ வேலைகளுக்கு பயன்படுத்தப்பட இயலாது. ஆனால் இவையே புலிகளால் பின்னாளில் கட்டப்பட்ட நீர்மூழ்கிகள் போன்ற மெச்சத்தக்க கலன்களின் கட்டுமானத்திற்கு வித்திட்டவையாகும்.
      'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட நீர்மூழ்கிகள் '


      'மேலே pink நிறத்தில் உள்ள நீர்மூழ்கியின் உட்புறம்'

      'தாய்லாந்தில் இருந்த புலிகளின் கடற்தளம்'
      3)
      இரும்பாலான இந்நீர்மூழ்கி ஆனது டிசம்பர் மாதம் 1995 ஆம் வல்வெட்டித்துறையில் வைத்து சிறிலங்கா தரைப்படையினரால் கைப்பற்றப்பட்டது .. இதில் 1- மட்டுமே செலவாகலாம்.. (travel) அளவு (அடியில்): 18.7 x 3.5 X 4.5



      'மேற்கண்டதின் பின் புறம்'
      4)
      புலிகளால் இது வரைக்கும் முழுமையாக் கட்டப்பட்ட ஒரே ஒரு நீர்மூழ்கி: புலிகளால் கட்டப்பட்ட முதல் செயல்படும் மெய்யான நீரில் மூழ்கக்கூடியவற்றில் ஒன்று . இது ஓராள் செலவாகக் கூடிய நீர்மூழ்கியாகும். புறம்போக்கி குழாயின் அளவு மற்றும் பற்றாக்குறை இது மின்கலம் மூலம் இயக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.



      'உயர் பின்பக்க பார்வை'
       
      5)பெப். 27 . 2009 அன்று சிறிலங்காத் தரைப்படைகளால் கைப்பற்றப்பட்ட மற்றுமொரு நீர்மூழ்கி. இந்தச் செய்தியை யூரியூப்பில் இருந்து எடுத்தேன்.

      'கடற்கலத்தின் முன்பக்கம்' | படிமப்புரவு: இப்படம் என்னால் தொகுக்கப்பட்டது ஆகும்.. 3 படங்களை ஒன்றிணைத்தே இப்படத்தினை உருவாக்கினேன்..

      தலைப்பகுதி

      தலைப்பகுதி

      தலைப்பகுதி

      'பக்கவாட்டுப் பகுதியில் அந்த இராணுவ அதிகாரி ஏதோ ஒன்றினைபற்றிச் சுழற்றிக்கொண்டு இருக்கிறார்'

      பின்பக்கம்

      பின்பக்கம்

      'பின்பகுதி.. அருகில் உடைந்து விழுந்திருப்பது தான் நீங்கள் மேலே கண்ட அந்த திட்டுப்போன்ற பகுதி'


      'சுழலி'

      'சுக்கான் உடன் கூடிய சுழலி'
      6)
      கீழ்க்கண்ட நீர்மூழ்கி எலும்புக்கூடானது பாதியே முற்றாக கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இது முற்றிலும் கட்டி முடிக்கப்படாமையால் இது பற்றிய புலனங்கள் ஒன்றும் கிடைக்கபெறவில்லை.. ஆனால் இதில் உள்ள பெருமளவான உலத்தப்பட்ட (welded) எஃகு பட்டைகளை(steel plates) வைத்துப் பார்க்கும் போது இதனால் அதிக அளவு ஆழம் செல்ல முடியாது என்பது உற்றது (fact) ஆகும். இது முற்றிலும் முடிக்கப்படாமையால் இது எவ்வாறு இருந்திருக்கும் என்று அறுதியிட்டு கூற இயலாது. ஆனால் இது கட்டி முடிக்கப்பட்டிருந்தால் இதுவே புலிகளின் முதலாவது பெரிய முழுஇயக்கம் கொண்ட நீர்மூழ்கி ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை... அவ்வளவு சிறப்பாக இதன் எஃகு பட்டைகள் உலத்தப்பட்டிருந்தன. நீளம்: 30அடி (10m) இக்கலத்தால் 1360 kg வெடிமருந்தினைக் காவிச்செல்ல இயலும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


       
      7)
      மற்றொரு நீர்மூழ்கியின் கட்டி முடிக்கப்படாத எலும்புக்கூடு. சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டவைகளிலே இதுதான் மிகப்பெரியது ஆகும். நீளம்: 360 அடி உயரம் : 10 அடி


      8 )
      கடற்புலிகளால் பாதியிலேயே விட்டுவிடப்பட்ட மற்றுமோர் நீர்மூழ்கிக்கான உதிரிப்பாகங்கள்.

       
       
      சரி,இனி இல்லை என்ற செப்புதலுக்கான புலனங்களைப் பார்ப்போம். மேலே நான் கூறியதைப் போல நீர்முழ்கிகள் கட்டுவது அவ்வளவு இலகு இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட புலிகள் அவற்றிற்கு ஈடாக இவற்றினைக் கட்டினார்கள்.
      தாழ் தோற்றுருவ கலம் (low profile vessel): தாழ் தோற்றுருவ கலன்கள் நீரில் மிகக் தாழ்வாக ஓட வடிவமைக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட முழு மேலோடும் (hull) நீரில் மூழ்கியுள்ளன, ஆனால் மேல்தளம் மட்டும் மேற்பரப்புக்கு மேலே தெரியும். இதன்மூலம் கதுவீகளின் கண்ணில் மண்ணைத் தூவுவதுடன் அவற்றைக் கண்டறிவதையும் கடினமாக்குகிறது, மேலும் இதனைச் சுடுவதும் கடினமான காரியம் ஆகும். இருப்பினும் இவ்வகைக் கலன்கள் வேகத்தில் கொஞ்சம் குறைவே, ஏனெனில் வேகமான படகுகளுடன் ஒப்பிடும்போது இவற்றின் இயந்திரம் தண்ணீரின் மேற்பரப்புக்குக் கொஞ்சம் கீழ்வழியாக அதிகமாக உந்தி தள்ள வேண்டும்.. ஆனால் படகுகள் அலைமேலே மேலோடினை தூக்கிக்கொண்டு வேகமாக உந்தி ஓடும்.
      இது 2 வெளியிணைப்பு மின்னோடியைக் (out board motor) கொண்டது! வட்டு வரைக்குமான உயரம் : 5.0' - 5.3' 1)




      'இந்த இரண்டு கொளுக்கிகள் போன்று இருப்பவைக்கு முன்னால்த்தான் கதுவீ (radar) பொருத்தப்படிருந்தது'


      'படத்தின், முன்புறத்தில் திறந்த நிலையில் இருக்கும் அறையினுள்தான் மீகாமன் இருப்பார்….. பின்புறத்தினுள் தெரியும் அந்த இரு அறைகளுக்குள்தான் பண்டங்கள் வைக்கப்படும்'

      'மீகாமன் அறையினுள் இறங்கி நிற்கும் ஓர் சிறீலங்காத் தரைப்படை வீரன்'

      'கலத்தின் பின்புறத்தின் மேற்பகுதி'

      'கலத்தின் பின்பகுதி'
      மேற்கண்ட கடற்கலனின் முழு நிகழ்படத்தினையும் காண:  
       
       
      2) இது தான் புலிகளின் முதலாவது தாழ் தோற்றுருவக் கலனாக இருந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.

      3)
      மிக நொவ்வு கலத்தின்(VSP) மேலோட்டு(hull) வடிவம் கொண்ட ஓர் தாழ் தோற்றுருவ கலம்.. இதுதான் கடற்புலிகளால் கட்டப்பட்டதிலேயே மிகவும் சீரிய மேம்படுத்தப்பட்ட வடிவம் கொண்ட தா.தோ.க ஆகும். பார்த்துப் பார்த்து செதுக்கியிருகிறார்கள்!
      இது உள்ளிணைப்பு மின்னோடியைக் (inboard motor) கொண்டது!
      படிமப்புரவு :H I Sutton
      மேற்கண்ட கலனின் பல்வேறுபக்க தோற்றங்கள்:




      'பின்பகுதி'
       
       
      தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலம் (low profile very slender vessel): 1)



       
      2)
      நீளம்: 30 அடி



       
       
      அரை நீர்மூழ்கிகள் (semi submarine) : தாழ் தோற்றுருவ கருத்தாய்வுகளை ஒரு படி மேலே கொண்டு, நீரில் பாதியளவு மூழ்கக்கூடிய / கிட்டத்தட்ட முற்றிலும் நீரில் மூழ்கும் கலன்களே இந்த அரை நீர்மூழ்கிகள் ஆகும். இருப்பினும், செலுத்தறை(cock pit), காற்று உட்கொள்ளல் (air intakes) மற்றும் இயந்திர புறம்போக்கி(engine exhaust) பொதுவாக மேற்பரப்புக்கு மேலே இருக்கும். தா.தோ.க (LPV) விட இவை மிகவும் வலுவாக கட்டப்பட வேண்டும், மிக விரிவான பதிப்புகள் நீரடி வளிவழங்கிகளைத் தவிர முற்றிலும் நீரில் மூழ்கி இயங்குகின்றன - இவை ‘நீரடி வளிவழங்கி நீர்மூழ்கி’ (snorkel submarine) என்றும் அழைக்கப்படுகின்றன.
      இக்கலங்களை எதிரொலிக்கருவி மூலமோ இல்லை கதுவீ மூலமோ கண்டறிவது கடினமாகும்.
      கீழே நீங்கள் பார்ப்பவை அனைத்தும் எஃகால் ஆனவை
      1)
      நீளம்: 7.3m அகலம்: 1.2m உயரம் : 5.6' - 6' இதற்குள் ஓரிருக்கை மட்டுமே இருந்தது








      'ஓட்டியிருக்கை'
      2)
      கீழ்க்கண்ட வகை நீர்மூழ்கியில் கதுவீ(radar) பூட்டப்படிருந்தது.. அத்துடன் உள்ளே ஒட்சியன் குடுவையும் இருந்தது. இதால் 15 பேர் வரை காவிச்செல்ல இயலும். இந்தக் கலம் ஆனது சரளையுடன்(ballast) வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் செலுத்துநெறிக்கு(navigation) உதவ ஒரு புவி நிலை காட்டியையும் கொண்டிருந்தது. நீளம்: 47 அடி
      அகலம்: 8 அடி
      உயரம் : 7 அடி
      வளி வழங்கியின் உயரம் உயரம் : 6' - 6.2-
      இதற்கான ஆற்றல் வழங்குவது உந்தியுடன் கூடிய உள்ளிருக்கும் பொறியாகும்.
      பொறியின் ஆற்றல்: 400–800 HP


      'முன்பக்கத்திலிருந்து சத்தார் பார்வை'


      'மேற்புறத் தோற்றம்'

      'முன்புறத் தோற்றம்'




      'உட்புறத் தோற்றங்கள்'


      'ஓட்டியிடம் & steering wheel'

      எப்படி ஓட்டுவார்கள் என்று விளக்குகிறார் ஓர் சிங்களத் தரைப்படை வீரர்'

      'பின்பகுதி (தெரிவது சுழலி ); அருகில் சிங்கள இராணுவ வீரர்கள் உள்ளனர்.'

      'சுழலி '
      3)
      இக்கலமானது கோகுலன்-45 ஐ விடச் சிறியது.
      நீளம்: 5.4 m அகலம்: 1.5 m

      4)
      கீழ்க்கண்ட கலனானது இதேபோன்ற (மேலே தா.தோ.க இல் கடைசியாக நான் காட்டியுள்ளது) புதுமையான எஃகு தாழ் தோற்றுருவ கலனுடன் நெருக்கமாக தொடர்புடையது, மேலும் இவை ஒரே வடிவமைப்பாளரால் ஒரு சோடியாக கட்டப்பட்டிருக்கலாம். இருப்பினும் முன்னோக்கி உள்ள செலுத்தறையானது பாய்விறக்க (dive) துடுப்புகளை இருபுறமும் கொண்டு ஆழம் மற்றும் பாய்விறக்கத்தை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. செலுத்தறை நீர்காப்புக் கொண்டது அல்ல, ஆனால் கூரையில் ஒரு அணுகல் புழைவாயில்(access hatch) கொண்டுள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இத ஒரு ஈர-நீர்மூழ்கி (wet-submarine) என்பதற்கான சில அறிகுறிகள் தென்படுகின்றன, ஆக இதன் குழுவினர் பாய்விறக்க உடை அணிய வேண்டும்.
      இருப்பினும், மேலோட்டு(hull) வடிவத்தை வைத்துப் பார்க்கும் போது பெரும்பாலான நேரங்களில் செலுத்தறையுடன்(cockpit) குறைந்தபட்சம் ஓரளவு மேற்பரப்புக்கு மேலே செலவழிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
      நீளம் : 8m உயரம் : 4.2'







      'மேற்கண்ட நான்கு புகைப்படங்களும் ஓட்டுநர் இருக்கும் உள்ளிடம் தொடர்பானவை'
      5) புதைக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பிறிதொன்று:

      இனி நீங்கள் கீழே பார்ப்பவை அனைத்தும் கண்ணாடியிழைகளால் (fibre glass) ஆனவை
      6)
      இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்(travel).


      'உட்புறத் தோற்றம்'
      7)
      நீளம்: 4.30m அகலம்: 1.20m உயரம்:1.18m இந்த நீமூழ்கியின் பெயர் 'கோகுலன்-2 ' என்பதாகும். இது 1993 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் இந்திய காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

      'மேற்கண்ட கடற்புலிகளின் அரை நீர்மூழ்கியானது கோயம்புத்தூரில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது'
      8 )
      கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்டுகிறது. இதால் 10 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். 

      'முன்னிருந்து சத்தார் பார்வை'

      'மேலிருந்த பார்வை'

      'பின்னிருந்து சத்தார் பார்வை'

      'பக்கவாட்டுப் பார்வை'

      'நடுப்பகுதியை கீழிருந்து மேனோகிய பார்வை'

      'பின்பகுதிப் பார்வை'
       
      9)
      கீழ்க்கண்ட அரை நீர்மூழ்கி மூலம் புலிகள் பண்டங்களைத் தருவித்திருக்கலாம என்று நம்பப்டுகிறது. இதால் 5 தொன் அளவிலான பொருட்களை காவ இயலும். இது இரண்டு பகுதிகளாக கட்டப்பட்டு பின்னர் ஒட்டப்பட்டுளது, முக்கிய சேரல் கிடைமட்டமாக பக்கங்களில் தெரிகிறது இயங்கும். நீளம் : 25.5 அடி உயரம் : 5 அடி அகலம் : 9.5 அடி

      'மேற்கண்டதின் பின் புறம்'

      'மேற்கண்டதின் நீரடி வளி வழங்கி(snorkel)'
       
      அடைக்கப்பட்ட மாந்த ஏவரிகள் (enclosed human torpedoes): முதலில் மாந்த ஏவரிகளை விளக்குகிறேன்.. இதில் புலிகளிடம் பல வகைகள் இருந்தாலும் பார்ப்பதற்கு நீர்மூழ்கிகள் போல இருப்பவைப் பற்றி மட்டும் இங்கே கொடுக்கிறேன். இவை கடற்புலிகளிடம் இருந்த அலைமேற் செலவாகும் கரும்புலிகளால் உருவோட்டப்படும்(sail) கலன்களைப் போல இவை நீரடியில் உருவோட்டப்படும் ஏவரிகள் ஆகும்.
      இது ஒரு கைடென்(kaiten) வகுப்பு ஏவரியாகும். இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்.


      'உள்ளிருந்து முன்னோக்கிய பார்வை'


      'உட்பகுதி'
       
      2) இது ஒரு கைரென்(kaiten) வகுப்பு ஏவரியாகும்.
      இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்



       
       
      தாழ் தோற்றுரு அடைக்கப்பட்ட மாந்த ஏவரி(low profile enclosed human torpedo): 1)
      இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்



      'பின்பகுதி'
      2)
      இதில் ஒருவர் மட்டுமே செலவாகலாம்

      படத்தில் முன்னால் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி.
       
      3) இடது புறத்தில் உள்ளது தாழ் தோற்றுருவ மிக நொவ்வு கலம் (Low profile Very slender vessel); வலப்புறத்தில் உள்ளதுதான் தாழ் தோற்றுருவ மாந்த ஏவரி.



       
       
      கூடுதல் செய்திகள்:  
      உசாத்துணை :
      H I Sutton Sundayobserver.lk - Sri Lanka Colombo Dockyard - Wikipedia Cedric-class patrol boat - Wikipedia Sea Tigers of the LTTE | Richard Pendavingh Very Slender Vessel - Wikipedia ltte wepons dossier படிமப்புரவு
      ஒரு சில படங்கள் என்னுடைய கணினியின் துணைகொண்டு வடிவமைக்கப்பட்டது H I Sutton - Covert Shores http://quora.com Sri Lanka Brief All You Need to Know BEFORE You Go - Updated 2020 (Trincomalee, Sri Lanka) - Tripadvisor (Tamil Tigers Deserted Homemade Submarine Yard Sri Lanka: Operational Mini Submarine of LTTE Found Vanni and Nilaveli, Sri Lanka Flickr FIRST EVER LTTE OPERATIONAL SUBMARINE TAKEN OUT FROM VELLAMULLIVAIKKAL SEA Getty Images Emerging Out Of The Shadows Flickr Sri Lanka: Interesting LTTE Boats Captured This is what they used. The LTTE of Sri Lanka - One of the worlds most brutal terrorist groups. Sri Lanka Army Captures Boat Building Facility of Terrorists Explore Sri Lanka Twitter. It's what's happening. ReviewGuru Steemit ரூபபாகிணி தொலைக்காட்சி https://www.jvpnews.com/srilanka/04/198644  
      ஆக்கம் & வெளியீடு
      நன்னிச் சோழன்
  • Topics

  • Posts

    • அமெரிக்க நிறுவனதுடனான ஒப்பந்தம்: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இடையே கடுமையான மோதல் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் மோதல் எழுந்துள்ளது. அமைச்சர்களான விமல், கம்மன்பில, வாசுதேவ உள்ளிட்டவர்கள் இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளது. அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடது முன்னணி, லங்கா சம சமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி ஆகியன ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி, அரசாங்க கூட்டணியில் உள்ள 10 கட்சிகளின் தலைவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மூன்று பக்கம் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடிதத்தில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் எரிவாயு விநியோக ஏகபோகம் ஒரு நிறுவனத்திற்கு மாற்றுவது குறித்த கவலைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் கோரப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தரப்பினர் கடந்த வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் அலரிமாளிகளில் மேற்கொண்ட கலந்துரையாடல் தோல்வியில் முடிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241291
    • காணாமல் போனவர்கள்... படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார்- செல்வம் காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்க முடியுமென தெரிவித்ததன் ஊடாக, அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான விளக்கத்தினை எங்களால் சொல்ல முடியும். எமது இயக்கத்துக்கும் வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றையும் காரணங்களையும் சொல்லமுடியும். தமிழ் மக்களின் விடுதலைக்காக துப்பாக்கி எந்தி போராடியவர்கள் நாம். இப்போதும் மக்களின் விடுதலைக்காக போராடவேண்டும் என்ற சிந்தனையே எமக்குள்ளது. தனிப்பட்ட முறையில் மாறி மாறி கருத்துக்களை சொல்வதால் மக்கள் வெறுப்படைகின்றனர். நாம் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்ற விடயத்தினை கடந்த தேர்தல் மூலம் மக்கள் எமக்கு உணர்த்தியுள்ளனர். எனவே எமது தலைவர்கள் விட்டுச்சென்ற பணியினை தொடர்ந்து முன்னெடுப்போம். இதேவேளை ஜிஎஸ்பி பிளஷ் வரிச்சலுகையினை பெற்றுகொள்ளவதற்கான யுக்தியாகவே  ஜனாதிபதியின் ஐ.நா உரையை பார்கின்றேன். இலங்கையில் வாழும் அனைத்து இனமும் சமம் என்று அவர் தெரிவித்தார். ஆனால் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து அடிக்கடி ஒரு விடயத்தை அவர் குறிப்பிட்டு வருகின்றார். தான் சிங்கள மக்களின் வாக்குகளாலேயே வெற்றிபெற்றேன் என்றார். மேலும், தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகள் இராணுவ பிரசன்னம், உயிரிழந்தவர்களை நினைவுகூரக் கூட முடியாத இக்கட்டான நிலையில் தமிழினம் இருக்கின்றது. எனவே, இனங்கள் அனைத்தும் சமன் என்று தெரிவிப்பதை ஏற்கமுடியாது. அது உண்மைக்கு புறம்பானது. காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்க முடியும் என தெரிவித்ததன் ஊடாக அவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அவர் ஏற்றுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241280
    • இரண்டு தடுப்பூசிகளையும்... வழங்கிய நாடுகளின், பட்டியலில் 5 ஆவது இடத்தில் இலங்கை இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் 5 ஆவது இடத்தில் இலங்கை இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொத்மலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “உலகில் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்துக்கு வந்துள்ளது. நிதி நெருக்கடி இருந்தாலும் கூட சுகாதார அமைச்சினால், அமைச்சரவையில் முன்வைக்கப்படும் பத்திரங்கள் நிராகரிக்கப்படுவதில்லை. மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதால்தான் இவ்வாறு நடைபெறுகின்றது. நாட்டை மூடுமாறு சிலர் கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு மாதம் அரசாங்க சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால் நாட்கூலி பெறுபவர்களின் நிலைமை? அத்துடன், நாடு தற்போது வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241309
    • எமது வாக்குச் சாவடியில்... 08:02´வது  நிமிடமளவில்,  இரண்டாவது வாக்கை மகனும், மூன்றாவது வாக்கை  நானும் செலுத்தி விட்டு வந்துள்ளேன்.  முதலாவதாக, ஒரு கிழவி... வாக்கு போட்டவர். வாக்கு சாவடியில்... எம் மூன்று பேரைத் தவிர,  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, வேறு ஒரு ஆட்களையும் காணவில்லை.   ஞாயிற்ருக்  கிழமை... சனம், நல்ல நித்திரை கொள்கிறார்கள் போலுள்ளது. வழமையாக  பத்து  மணிக்குப் பிறகு தான்.. ஆட்கள் மெல்ல, மெல்ல  வருவார்கள்.  நாங்கள், எங்கள் தாத்தா காலத்திலிருந்து... பரம்பரை பரம்பரையாக....  CDU க்குத்தான் வாக்கு போடுகிறனாங்கள். இந்த முறை... SPD க்கு வாக்குப் போட்டுள்ளோம். தேர்தல் வாக்குச்  சாவடியிலிருந்து... ✍️ யாழ்.கள  நிருபர்... தமிழ் சிறி.  🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.