Jump to content

இது உண்மையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு பழைய வீடியோதான் இருந்தாலும் இப்போதான் கவனித்தேன். யாழில் யாரும் முன்பு இணைத்தார்களோ தெரியாது.

நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டால் உண்மையாகவே இப்படி ஆகுமா? 

சிறுவனின் நிலையை பார்த்தபோது பகீர் என்றது, ஆனாலும் போலி காட்சியமைப்புக்கள் லட்சக்கணக்கில் உலவும் இணைய உலகில் இந்த காணொலி சோடிக்கப்பட்டதா என்றொரு சந்தேகமும் வந்தது, நிச்சயமாக ஒரு நோய் வாய்ப்பட்ட சிறுவனை கேலி செய்யும் கெட்ட நோக்கம் கிடையாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, valavan said:

இது ஒரு பழைய வீடியோதான் இருந்தாலும் இப்போதான் கவனித்தேன். யாழில் யாரும் முன்பு இணைத்தார்களோ தெரியாது.

நாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டால் உண்மையாகவே இப்படி ஆகுமா? 

சிறுவனின் நிலையை பார்த்தபோது பகீர் என்றது, ஆனாலும் போலி காட்சியமைப்புக்கள் லட்சக்கணக்கில் உலவும் இணைய உலகில் இந்த காணொலி சோடிக்கப்பட்டதா என்றொரு சந்தேகமும் வந்தது, நிச்சயமாக ஒரு நோய் வாய்ப்பட்ட சிறுவனை கேலி செய்யும் கெட்ட நோக்கம் கிடையாது.

 

https://www.vikatan.com/health/news/134634-rabies-types-symptoms-causes

இந்த காணொளியை நான் பார்க்க விரும்பவில்லை. ஆனால் இந்த நோயின் முடிவு கட்டத்தில் ஹைடிரோ போளியா எனும் நீரை வெறுக்கும்/பயப்படும் நிலை வரும் என்பது தெரியும். 

 

ரேபிஸ் பயங்கரம்

எச்சரிக்கை

‘‘நாய்க்கடி என்பது சாதாரண சுகாதார பிரச்னையில்லை. அது மோசமான விளைவுகளை உண்டாக்கக் கூடியது. குறிப்பாக Rabies என்று அழைக்கப்படுகிற வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அது மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்து உடையதாக மாறிவிடும்’’ என்கிறார் பொதுநல மருத்துவரான ராமகுரு. இந்த நோய் குறித்து அவரிடம் மேலும் விளக்கமாகக் கேட்டோம்.
http://kungumam.co.in/Doctor_images/2019/20191101/6.jpgரேபிஸ் என்பதற்கு லத்தீன் மொழியில் கிறுக்கு(Madness) என்று அர்த்தம். Lyssa என்பதற்கு கிரேக்க மொழியில் வன்முறை(Rage) என்று அர்த்தம். Rabhas என்பதற்கு சமஸ்கிருத மொழியில் வன்முறை, வெறி (Violent) என்ற அர்த்தம் உள்ளது. ரேபிஸ் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பாகவே அறியப்பட்ட ஒரு நோய். மெசபடோமியா நாகரிகத்தின்போது இதுபற்றி எழுதப்பட்டுள்ளது. 
http://kungumam.co.in/Doctor_images/2019/20191101/6a.jpgஅப்போது நாயின் நாக்கை அறுத்துள்ளார்கள். மேலும் நாயையும், மனிதனையும் கொன்றுள்ளார்கள். முதன்முதலில் Girolamo Fracastoro என்ற இத்தாலிய மருத்துவர்தான் ரேபிஸ் ஒரு கொடூரமான சாவு விளைவிக்கும் நோய் என்று தெரிவித்தார். Louis Pasteur என்ற பிரான்ஸ் நாட்டு மருத்துவர் 1885-ல் ரேபிஸ் நோய் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார். 

நோய் பரப்பும் காரணிகள்

மனிதனுக்கு நாயின் மூலமாக ரேபிஸ் நோய் 95 % பரவுகிறது. மற்ற பாலூட்டி விலங்கினங்கள் மூலமாகவும் இந்த நோய் உண்டாகிறது. குரங்கு, பூனை, வௌவால், ஓநாய், நரி போன்ற மிருகங்களாலும் இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது. வெறி நாயின் எச்சில் நமது உடலின் மேல் உள்ள சிராய்ப்பு காயங்களில் பட்டாலோ, உடலின் உள் பகுதியில் பட்டாலோ ரேபிஸ் பரவும். வௌவால்கள் வசிக்கும் குகைகளின் உள்ளே நாம் நுழைந்தாலே இந்த நோய் ஏற்படும். குறிப்பாக தெற்கு ஆசியா, ஆப்ரிக்கா நாடுகளில்தான் அதிகம் காணப்படுகிறது.

 எங்கெல்லாம் தெருநாய்கள் அதிகம் உள்ளனவோ அங்கெல்லாம் இந்த நோய் அதிகம் காணப்படும். நாம் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும், தெரு நாய்களுக்கும் தடுப்பூசி போடுவது மட்டும்தான் இந்த நோயைத் தடுக்க உதவும். 

நோய்க்கிருமி பரவும் விதம்

நமது உடலில் ரேபிஸ் நோய்க்கிருமி பின்வரும் இரண்டு வழிகளில் உள்ளே செல்கிறது. நேரடியாக கை, கால் நரம்புகளின் வழியாக மூளையைச் சென்றடைகிறது. தசைகளில் உற்பத்தியாகி மிகவும் பாதுகாப்பாக இருந்து நரம்பு மண்டலம் வழியாக மூளையைச் சென்றடைகிறது. மேலும் இது தண்டுவடம், சிறுமூளை, மூளையின் மற்ற பகுதிகளிலும் பரவுகிறது. சளி, சிறுநீர் மற்றும் கண் போன்றவற்றில் ரேபிஸ் வைரஸ் இருந்தால் அது பரவாது. 

நோய் அறிகுறிகள்

9 நாளிலிருந்து 90 நாட்களுக்குள் ரேபிஸ் நோய்க்கிருமி மனித உடலில் உற்பத்தியாகும். முகத்திலும், கழுத்திலும், தலையிலும் கடிபட்டால் சீக்கிரமாகவே இந்த நோய் ஏற்படும். இந்த நோய் தொடங்கிய 10 நாட்களில் காய்ச்சல், தலைவலி, தொண்டை கரகரப்பு, இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். அதன்பின் நரம்பு மண்டல பாதிப்புகள் உண்டாகும். பின்னர் வலிப்பு, தண்ணீரைப் பார்த்து பயம், தூக்கமின்மை, குழப்பம், ஒளியைப் பார்த்து பயம், சுய நினைவு இல்லாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் ஏற்பட்ட பின்னர் சரியான சிகிச்சை அளிக்காதபோது நோய் தீவிரமாகி இறுதியில் மரணம் ஏற்படும். 

சிகிச்சைமுறை

நல்ல சுவாசத்தை உறுதிப்படுத்த வேண்டும். பிராணவாயு அதிகம் செலுத்த வேண்டும். வலிப்பு நோயை கட்டுப்படுத்த வேண்டும். அமெரிக்காவிலுள்ள Milwaukee நகரில் கடைபிடிக்கப்படும் மருத்துவ முறையைப் பின்பற்றினால், தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளியைக் காப்பாற்ற முடியும்.

தடுப்பு முறைகள்

ரேபிஸ் நோய் வராமல் தடுக்கவும், வந்த பின்பு தடுக்கவும் பின்வரும் தடுப்பூசிகள் உள்ளன. Purified chick embryo cell vaccine (PCEC), Purified vero cell rabies vaccine (PVRV) ஆகிய இந்த இரண்டும் நாய்கள், பூனைகள் போன்ற விலங்குகளுக்கு போடக்கூடிய தடுப்பூசிகள்.  

வெளிநாட்டிலிருந்து வருபவர்களும், ரேபிஸ் நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் Human diploid cell vaccine (HDCV) என்கிற தடுப்பூசியை 0, 7, 21, 28 என்கிற கால இடைவெளியில் போட்டுக் கொள்ளலாம். மனிதர்களுக்கு நாய்கடிக்கும் முன்பு போட்டுக்கொள்ளும் இந்த தடுப்பூசியை அவரவர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து தேவைக்கேற்ப ஒரு முறை மட்டும் போட்டுக் கொண்டால்கூட போதுமானது.

நாய் கடித்த பிறகு மனிதர்களுக்கு Human rabies immunoglobulin (HRIG) என்கிற தடுப்பூசியை 0, 3, 7, 14, 28 ஆவது நாட்களில் போட வேண்டும்.
விலங்குகள் கடித்தால் உடனடியாக செய்ய வேண்டியவைநாய் போன்ற பிற விலங்குகள் கடித்தோ அல்லது பிராண்டியோ ஏற்பட்ட காயத்தை 10 முதல் 15 நிமிடங்களுக்கு சோப்பும் தண்ணீரும் கொண்டு கழுவ வேண்டும். சோப்பு இல்லாவிட்டால் நீரைப் பீய்ச்சிக் கழுவ வேண்டும்.

70 % ஆல்கஹால் அல்லது எத்தனால் அல்லது பொவிடோன் - அயோடின் பயன்படுத்தியோ காயத்தைக் கழுவ வேண்டும். இது உயிரைக் காக்க மிகவும் உதவியாக இருக்கும். அதன் பிறகு உடனடியாக மருத்துவரை அணுகி உரிய தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். கர்ப்பப்பையில் வளரும் கருவை இந்த தடுப்பு மருந்து பாதிப்பதில்லை. எனவே விலங்குகளால் கடிபட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதே பாதுகாப்பானது.

ரேபிஸ் நோய் ஏற்பட்டால் அது மரணம் விளைவிக்கும் தன்மையுடையது. இந்த நோயால் ஆண்டுதோறும் 59,000 பேர் இறக்கின்றனர். விழிப்புணர்வு கல்விதான் இந்த நோயைத் தடுக்க உதவும் சரியான வழி. கிராமங்கள், நகரங்கள் மற்றும் தொலைதூர இடங்களுக்கும் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை கொண்டு செல்ல வேண்டும்.

http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=3301&id1=100&issue=20191101

Link to comment
Share on other sites

3 - 4 வருடங்களுக்கு முன் இலங்கைக்குச் சுற்றுலா சென்ற பிரெஞ்சுக் குடும்பம் ஒன்றின் சிறுவன் கடற்கரையில் ஒரு நாய் கடித்தபின் பிரான்ஸுக்கு வந்து நோய்த் தொற்றுக்கு உள்ளாகி மைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நாய்போல் குரைத்து இறந்ததாக செய்தி ஒன்றில் படித்திருந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வளர்த்த செல்ல பிராணியான  நாய் எனக்கு பல்லை ஓநாய் போல  நெறுமி கடித்த போது தான் தெரிந்தது, அந்த நாய்க்கு Rabies என்று.

அந்த நாயை எல்லோரினதும் நலன் கருதி, அதன் வேதனையை தவிர்ப்பதற்கும், நோய் முற்றாக அதனை ஆட்கொள்ள முதல் மீளாத் தூக்கத்துள் செல்வதற்கு வழிவகை செய்தோம்.

அன்றில் இருந்து, எல்லா பிராணி வளர்ப்பும், வளர்ப்பு மீன் கூட,  வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

எனக்கும் 21 ஊசிகள் தொப்புளை சுற்றி போடப்பட்டது.

வீடியோ ஐ தெரியாமல் பார்த்து விட்டேன், அந்த நேரத்து உணர்வுகள் வந்து விட்டது.

எந்த வகை மிருகம், பறவை, ஊர்வன வாயினும்  சரி, உங்கள் வீடு செல்ல பிராணியாயினும் சரி, வெளிப்பார்வைக்கு எத்தகைய நல்ல உடல் நிலையில் அவை இருந்தாலும், மிருக வைத்தியத்துக்கு ஒழுங்காக அவை உட்படுத்தப்பட்டு இருந்தாலும்,  அவற்றின் நகம் அல்லது  பற்கள் இரத்த உராய்வு  அல்லது கீறல் ஏற்படுத்தினால், உடனே அவசர வைத்திய சேவையை நாடுங்கள். 

விட்டால், விளைவு விபரீதம் ஆக கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். 

மற்றும், மிருகம், பறவை, ஊர்வன போன்றவற்றின் எந்த வித கசியும் திரவங்களும், எது வழியாகவோ உஙக்ளின் குருதி அல்லது உங்களின் திரவம் கசியும் உறுப்புகளிலும் தொடுகை ஏற்படாமல் கவனமாக பழகுங்கள்.  

youtube அல்லது வேறு சமூக வலைத்தளங்களில் வரும் பிராணிகளிற்கு முத்தம் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். 


வீடியோ இல் இருக்கும் சிறுவன், தப்பி பிழைப்பதற்கு, வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.  Spinal cord ஐயும், மூளையையும், Rabies வைரஸ் அடைந்து விட்டதற்கான அறிகுறிகள்.  தப்பி இருந்தால், தெய்வாதீனம்.

UK இல், Rabies  இற்கு  முன்கூட்டியே vaccine எடுக்கலாம், முக்கியமாக வேறு நடுகல், கண்டகளிற்கு பிரயாணம் எனும் காரணத்தால்.      

https://www.nhs.uk/conditions/rabies/

அது நடந்த பொது , நான் விரும்பியும், எல்லோரின் நலனுக்காகவும், என்னை நானே தனிமைப்படுத்தினேன், குடும்பத்தின் உதவியோடு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியாமல் பார்த்து விட்டேன்.இப்படியுமா ? அதிர்ச்சி அடைந்தேன்.  புனைகதைகளில்  கேள்விப்பட்டிருக்கிறேன். .  அறிய தந்தமைக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காணொளியை பார்த்த பின்… மிருகங்களிடம் இருந்து, தூர விலகி இருக்க வேண்டும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் நானும் இலங்கையில் இப்படி நாய் கடித்து ஒரு சிறுவன் இறந்து போனதை கேள்விப்பட்டேன். அவருடைய தகபனார் எனது நண்பர். மிகவும் கொடுமையானது.

கள உறவு ஜஸ்டின் அவர்களுக்கு இதைபற்றி மேலதிக விபரங்கள் தெரியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kadancha said:

வீடியோ இல் இருக்கும் சிறுவன், தப்பி பிழைப்பதற்கு, வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.  Spinal cord ஐயும், மூளையையும், Rabies வைரஸ் அடைந்து விட்டதற்கான அறிகுறிகள்.  தப்பி இருந்தால், தெய்வாதீனம்.

கோசானும் இணையவனும் சொன்னபிறகு அந்த செய்தியை உறுதி படுத்திக்கொண்டேன்,  Kadancha வின் இந்த பதிவையும் பார்த்த பிறகு ஏதோ ஒரு மன அழுத்தம் போல் உணர்வு. எத்தனையோ அவலங்களை பார்த்துவிட்டு வந்தவர்கள்தான் இருந்தாலும் வாழவேண்டிய வயசில் ஒரு குழந்தையின் கதை இப்படி முடியுதே என்று உயிரோடு பார்க்கும்போது என்னவோ செய்யுது.

இதனால்தான் மேற்குலகத்தில் பல விசயங்களை தரவேற்றவும் காணொளிபடுத்தவும் அனுமதியில்லை போலும்.

நான் நினைக்கிறன் ஊரில விசர்நாய்கடி என்று இதைதான் சொல்வார்களோ? எல்லாத்தையும் தமிழில் சொல்லி பழகினால் சில சமயங்களில்  பாதிப்புக்களும் உண்டு என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kadancha said:

நான் வளர்த்த செல்ல பிராணியான  நாய் எனக்கு பல்லை ஓநாய் போல  நெறுமி கடித்த போது தான் தெரிந்தது, அந்த நாய்க்கு Rabies என்று.

அந்த நாயை எல்லோரினதும் நலன் கருதி, அதன் வேதனையை தவிர்ப்பதற்கும், நோய் முற்றாக அதனை ஆட்கொள்ள முதல் மீளாத் தூக்கத்துள் செல்வதற்கு வழிவகை செய்தோம்.

அன்றில் இருந்து, எல்லா பிராணி வளர்ப்பும், வளர்ப்பு மீன் கூட,  வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

எனக்கும் 21 ஊசிகள் தொப்புளை சுற்றி போடப்பட்டது.

வீடியோ ஐ தெரியாமல் பார்த்து விட்டேன், அந்த நேரத்து உணர்வுகள் வந்து விட்டது.

எந்த வகை மிருகம், பறவை, ஊர்வன வாயினும்  சரி, உங்கள் வீடு செல்ல பிராணியாயினும் சரி, வெளிப்பார்வைக்கு எத்தகைய நல்ல உடல் நிலையில் அவை இருந்தாலும், மிருக வைத்தியத்துக்கு ஒழுங்காக அவை உட்படுத்தப்பட்டு இருந்தாலும்,  அவற்றின் நகம் அல்லது  பற்கள் இரத்த உராய்வு  அல்லது கீறல் ஏற்படுத்தினால், உடனே அவசர வைத்திய சேவையை நாடுங்கள். 

விட்டால், விளைவு விபரீதம் ஆக கூடிய வாய்ப்புகள் மிக அதிகம். 

மற்றும், மிருகம், பறவை, ஊர்வன போன்றவற்றின் எந்த வித கசியும் திரவங்களும், எது வழியாகவோ உஙக்ளின் குருதி அல்லது உங்களின் திரவம் கசியும் உறுப்புகளிலும் தொடுகை ஏற்படாமல் கவனமாக பழகுங்கள்.  

youtube அல்லது வேறு சமூக வலைத்தளங்களில் வரும் பிராணிகளிற்கு முத்தம் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். 


வீடியோ இல் இருக்கும் சிறுவன், தப்பி பிழைப்பதற்கு, வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.  Spinal cord ஐயும், மூளையையும், Rabies வைரஸ் அடைந்து விட்டதற்கான அறிகுறிகள்.  தப்பி இருந்தால், தெய்வாதீனம்.

UK இல், Rabies  இற்கு  முன்கூட்டியே vaccine எடுக்கலாம், முக்கியமாக வேறு நடுகல், கண்டகளிற்கு பிரயாணம் எனும் காரணத்தால்.      

https://www.nhs.uk/conditions/rabies/

அது நடந்த பொது , நான் விரும்பியும், எல்லோரின் நலனுக்காகவும், என்னை நானே தனிமைப்படுத்தினேன், குடும்பத்தின் உதவியோடு.
 

பெரிய கண்டத்தில் இருந்து மீண்டுள்ளீர்கள்.

 

16 minutes ago, valavan said:

கோசானும் இணையவனும் சொன்னபிறகு அந்த செய்தியை உறுதி படுத்திக்கொண்டேன்,  Kadancha வின் இந்த பதிவையும் பார்த்த பிறகு ஏதோ ஒரு மன அழுத்தம் போல் உணர்வு. எத்தனையோ அவலங்களை பார்த்துவிட்டு வந்தவர்கள்தான் இருந்தாலும் வாழவேண்டிய வயசில் ஒரு குழந்தையின் கதை இப்படி முடியுதே என்று உயிரோடு பார்க்கும்போது என்னவோ செய்யுது.

இதனால்தான் மேற்குலகத்தில் பல விசயங்களை தரவேற்றவும் காணொளிபடுத்தவும் அனுமதியில்லை போலும்.

நான் நினைக்கிறன் ஊரில விசர்நாய்கடி என்று இதைதான் சொல்வார்களோ? எல்லாத்தையும் தமிழில் சொல்லி பழகினால் சில சமயங்களில்  பாதிப்புக்களும் உண்டு என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

நான் இந்த வீடியோவை பார்க்காமல் தவிர்த்தமைக்கு ஒரு காரணம் உண்டு.

பேஸ்புக்கில் ஒரு தமிழ்நாட்டு அரசியல் செயற்பாட்டாளரை பின் தொடர்ந்து வந்தேன். ஒரு கட்டத்தில் அவரின் எதிர்கள் இந்த நோயை அவருக்கு பிரியமான நாய்க்கு செலுத்தி அதன் கடி மூலம் அவருக்கு செலுத்தி அவரை கொன்றதாக அவரே பேஸ்புக்கில் முடியுமானவரை எழுதினார்.

உண்மையா, பொய்யா தெரியவில்லை ஆனால் அவர் சொன்ன விடயங்கள் மன கிலேசத்தை தந்தது.

Link to comment
Share on other sites

இவ்வாறு நாய் கடித்து வந்த ஒருவரை சிறுவயதில் கண்டுள்ளேன். தகப்பனுக்கும் சிறுவயது மகனுக்கும் நாய் கடித்தது. தகப்பன் இறந்து மகன் பிழைத்து விட்டார்

11 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை பார்த்த பின்… மிருகங்களிடம் இருந்து, தூர விலகி இருக்க வேண்டும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டது.

பயப்படத் தேவையில்லை. எமக்கு எப்படி தடுப்பூசிகள் அவசியமோ அதே போன்று மிருகங்களுக்கு, குறிப்பாக நாயிற்கு மிக அவசியம். வீட்டில் வளர்ப்பு பிராணிகளை வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மிருக வைத்தியரிடம் காட்டி கவனம் எடுக்க வேண்டும்.

நான் முயல் வளர்க்கின்றேன். நெஞ்சுக்கு மேல் போட்டுக் கொண்டு நித்திரை கொள்வது வரைக்கும் செய்வதுண்டு. முயல்களுக்கு இப்படியான வருத்தங்கள் வரா விடினும், ஒரு வருடத்துக்கு ஒரு முறையாவது மிருக வைத்தியரிடம் காட்டி வருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, valavan said:

நான் நினைக்கிறன் ஊரில விசர்நாய்கடி என்று இதைதான் சொல்வார்களோ?

 

Rabies ஐ த் தான், அங்கு விசர் நாய் கடித்து விட்டது என்று கதைக்கும் போது சொல்லப்படும். 

உண்மையில், அது Rabies என்று ஏறத்தாழ அனைவருக்கும் (மருத்துவர்களை தவிர) தெரியாது. 

எனது நேரடி அனுபவத்தால், இந்த நோயைப் (Rabies) பற்றி அங்கிருக்கும் போதே தெரிய வேண்டி வந்தது.     

அனால், Rabies இன்  பரவல், தாக்கம் காலநிலையாலும் வேறுபாடும் போல வெளிப்பார்வைக்கு இருக்கிறது.

பொதுவாக, அங்கு (இலங்கை போன்ற வெப்ப வலய நாடுகளில்) முதல் அறிகுறி நாய்களில் தெரிந்ததும் (பொதுவாக சூரிய வெளிச்சச்த்தை அவை தவிர்க்கும், தெரிந்தவர்களை கண்டும் வெறுக்கும், வெருளும்   அல்லது பயப்படும்), ஓரிரு நாட்களில் வாயால் வீணி வடிக்க தொடங்கும். 

அப்படி எனது வளர்ப்பு நாய் என்னை  தவிர்த்த பொது தான்,  அருகில் சென்று என்ன பிரச்னை என்பதை அறிய முயலும் போதே பல்லை நெறுமி கடித்தது. அதன் பின் ஒரு நாள் விட்ட பின், அந்த நாயின் வாயால் வீணி வெளிப்படத்  தொடங்கியது.

அத்துடன் முடிவு எடுத்தது, நிரந்தர உறக்கமே அந்த நாயின் வேதனை குறைவான முடிவு என்று.  

எந்த சிறு காயம்  காயம் வந்தாலும், எனது வீட்டில் ஓர் பழக்கம்,  Hydrogen Peroxide ஆல்  கழுவி, பின் Dettol ஆல்  துடைத்து, சிறு இரத்த கசிவு இருந்தால் பிளாஸ்டர் அல்லது பெரிதாக இருந்தால் பஞ்சை வைத்து  கட்டுவது முதலில் (கோசான் இணைத்த மருதத்துவ  குறிப்பும் இதை சொல்கிறது) . இதை செய்துவிட்டே, மருத்துவரிடம் சென்றோம். அவரே, ஓர் ஊசியை போட்டு விட்டு, நாயின் அறிகுறியை ஓரிரு நாட்கள் கவனித்து சொல்லும்படி சொன்னார். அதை தொடர்ந்து, அந்த மருத்துவரே,  21 ஊசிகள்  ஆனா தடுப்பு மருந்தை  பெறுவதற்கு  யாழ் மருத்துவமனைக்கு என்னை அனுப்பி வைத்தார்.           

ஆனால், இங்கு மேற்கு நாடுகளில், அறிவுரையும், விழிப்பு உணர்வு, கவன ஈர்ப்பும் மிகவும் முக்கியம், ஏனெனில் இங்கு இது வெளிப்படையாய்  இல்லை. 

இதனால், விழிப்பு உணர்வு இல்லை. 

மற்றது, மேற்கில், எந்த வளர்ப்பு பிராணியும்( சிலவற்றை தவிர) வேறு நபர்களை கண்டு வெருளுவதோ, பயப்படுவதோ இல்லை.

என்னக்கு தெரிந்தவர்களுக்கு, இதை சந்தர்பார்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்வது, இந்த விழிப்புணர்வுக்காக.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/8/2021 at 09:37, Kadancha said:

அன்றில் இருந்து, எல்லா பிராணி வளர்ப்பும், வளர்ப்பு மீன் கூட,  வேண்டாம் என்று விட்டு விட்டேன்.

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய அனுபவத்தை, நினைப்பதற்கு கஷ்டமானதாக இருந்தாலும் அதை பகிர்ந்தது கூட ஒரு விழிப்புணர்வு செயலே. அதற்கு நன்றி..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கண்டி-கம்பளையில்  வசித்த காலத்தில் எங்கள் வீடு, பெரிய ஆஸ்பத்திரிக்கு சற்று முன்னாள் தான் இருந்தது. இப்படியான விசர் நாய் கடித்த ஒரு வாலிபரை அவரது பெற்றோர்கள் கொண்டுவந்திருந்தார்கள்.
சரியாக எங்கள் வீட்டின் முன் தான் அந்த வாலிபரை இளைப்பாற வைத்தார்கள். அப்போது அவர் நாயை போலவே சத்தமும் இட்டுக்கொண்டு, தவழ்ந்தபடியே போனார். வாயிலும் கூட நுரை போல சளி தள்ளிக்கொண்டும் இருந்தது. மிகவும் பயந்து போய்விட்டேன். அப்போது எங்கள் வீட்டில் 2 நாய் இருந்தது.
இந்த வீடியோ அந்த சின்ன வயது நினைவுகளை மீட்டிப்பார்க்கிறது.

இப்போதும் நான் நாய்குட்டி ஒன்றை வளர்க்கிறேன். அதற்கு கொடுக்கவேண்டிய 4 வகையான ஊசிகளும் கொடுத்தாயிற்று. என்னவோ கடவுள் தான் துணை. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் நாய்கள் அதிக கவனிப்பு இல்லைதானே . கிரமமாக ஊசி போடுவதில்லை .ஆனால் வெளி நாட்டு நாய்கள் பிள்ளைபோல அல்லவா வளர்க்க படுகிறது . எங்களிடமும் ஒன்று இருக்கிறது  7 வருடங்களாக  மிகுந்த செல்லம் . குலைக்காது.ஆனால் எமெர்ஜெண்சி க்கு மட்டும் குலைக்கும்  . 

தெரு முனையில் மகனின் கார் வரும் போது வாயிலில் போய் நிற்கும். இப்போது அப்பாவின் செல்ல பிள்ளை . ஸ்பெஷல் சாப்பாடு    தண்ணீர் .படுக்கை விளையாட்டுப்பொருள் என்று சகல வசதியும் அதுக்கு கொடுத்தாகி விட்ட்து . 

மாலையில் வெளியே  பனியோ குளிரோ ,வெயில் என்றால் இரவு ஏழு மணிக்கு  கூட்டி செல்லாவிடடால் லீஸ் (காவல் கயிறு ) கவ்வி கொண்டு வந்தது முன்னால்  போட்டு     கூட்டி போகிறாயா ?இல்லையா என்று பார்வையால் கேள்வி கேட்க்கும். குழந்தைகள் வாலை    பிடித்து  இழுத்தாலும் கோபம் வராது . தோற்றத்தைக்கண்டு பயப்பிடுவார்கள்.பெல் அடித்தால்
முதல் ஆளாக 12   படியேறி வாயிலில் நிற்கும்.  யாரைக்   கண்டாலும் தன்னை தலையில் தடவ சொல்லிக் கேட்க்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

ஊர் நாய்கள் அதிக கவனிப்பு இல்லைதானே . கிரமமாக ஊசி போடுவதில்லை .ஆனால் வெளி நாட்டு நாய்கள் பிள்ளைபோல அல்லவா வளர்க்க படுகிறது . எங்களிடமும் ஒன்று இருக்கிறது  7 வருடங்களாக  மிகுந்த செல்லம் . குலைக்காது.ஆனால் எமெர்ஜெண்சி க்கு மட்டும் குலைக்கும்  . 

தெரு முனையில் மகனின் கார் வரும் போது வாயிலில் போய் நிற்கும். இப்போது அப்பாவின் செல்ல பிள்ளை . ஸ்பெஷல் சாப்பாடு    தண்ணீர் .படுக்கை விளையாட்டுப்பொருள் என்று சகல வசதியும் அதுக்கு கொடுத்தாகி விட்ட்து . 

மாலையில் வெளியே  பனியோ குளிரோ ,வெயில் என்றால் இரவு ஏழு மணிக்கு  கூட்டி செல்லாவிடடால் லீஸ் (காவல் கயிறு ) கவ்வி கொண்டு வந்தது முன்னால்  போட்டு     கூட்டி போகிறாயா ?இல்லையா என்று பார்வையால் கேள்வி கேட்க்கும். குழந்தைகள் வாலை    பிடித்து  இழுத்தாலும் கோபம் வராது . தோற்றத்தைக்கண்டு பயப்பிடுவார்கள்.பெல் அடித்தால்
முதல் ஆளாக 12   படியேறி வாயிலில் நிற்கும்.  யாரைக்   கண்டாலும் தன்னை தலையில் தடவ சொல்லிக் கேட்க்கும். 

நீங்கள் என்ன சொன்னாலும் நான் ரோட்டின் அந்த பக்கம் குரொஸ் பண்ணி நடந்துதான் போவன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2021 at 19:04, goshan_che said:

நீங்கள் என்ன சொன்னாலும் நான் ரோட்டின் அந்த பக்கம் குரொஸ் பண்ணி நடந்துதான் போவன்🤣

👍

பாதுகாப்பு தான் முக்கியம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே பல விழிப்புணர்வைத் தரும் கருத்துக்கள் இருக்கின்றன. ஏற்கனவே றேபிஸ் நோய் பற்றி நான் யாழில் சில வருடங்கள் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன் - யாராவது தேடிப்பாருங்கள்.  

1. மருத்துவ வசதி குறைந்த நாடுகளைப் பொறுத்த வரை றேபிஸ் என்பது உயிர் தப்ப முடியாத நோய். எனவே தடுப்பது தான் ஒரே வழி.

2. வெளிநாடுகளில் செல்லப் பிராணிகளிடையே றேபிஸ் பரவுவது குறைவெனினும், fox, skunk, possum, raccoon போன்ற காட்டு விலங்குகளோடு உங்கள் செல்லப் பிராணிகள் தொடர்பில் வந்தால், றேபிஸ் தொற்றுக்குள்ளாகலாம்! செல்லப் பிராணிகள் தடுப்பூசி எடுத்திருந்தால், அவை றேபிஸ் தொற்றுக்குள்ளாவதும், மனிதர்களுக்குக் கடத்துவதும் பெருமளவு தடுக்கப் படும்.

3. றேபிஸ் பற்றிய இன்னொரு தகவல்: அனேகமான பாலூட்டி விலங்குகளை றேபிஸ் வைரஸ் தொற்றும் , ஆனால்  றேபிஸ் நோயை வெளிப்படுத்துவதில் விலங்குகளிடையே வித்தியாசமிருக்கும். உதாரணமாக, குதிரையில்  றேபிஸ் தொற்று பெரும்பாலும் dumb rabies ஆக வெளிப்படும். இதன் அர்த்தம் - றேபிஸ் தொற்றிய குதிரை நாயைப் போல கடிக்க முயலாது! ஆனால், வாயைத் திறக்க முடியாமல் அவதிப்படும்.

எனவே, எந்த வீட்டுப் பிராணியும் சாப்பிட இயலாமல், தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிப் பட்டால் அவதானமாகக் கையாள வேண்டியது அவசியம்.

கண்டியில் வேலை செய்த போது ஒரு மாடு வளர்ப்பவர் தன் பசுமாடு சாப்பிட இயலாமல் இருந்ததால், வலுக்கட்டாயமாக அதன் வாயைத் திறந்து கஞ்சியெல்லாம் பருக்கியிருக்கிறார். மூன்று நாட்களின் பின்னர் தான் எங்களிடம் வந்தார். றேபிஸ் என்று நோய் நிர்ணயம் செய்து, கருணைக் கொலை செய்து, மாட்டின் மூளைத்திசுவை கொழும்பிற்கு அனுப்பி வைத்தோம். றேபிஸ் என்று உறுதியானதும் அவர் றேபிசுக்கெதிரான அன்ரிபொடி சிகிச்சை எடுத்துக் கொண்டார் - அதனால் தப்பி விட்டார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

ஏற்கனவே றேபிஸ் நோய் பற்றி நான் யாழில் சில வருடங்கள் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்

நுணாவிலானின் இணைப்பினூடாக பார்த்தபோது ஏறத்தாழ பத்து வருடங்களின் முன்னரே Justin யாழில் ரேபிஸ் பற்றிய தெளிவான விழிப்புணர்வூட்டும் கட்டுரை வரைந்திருக்கிறார் நிச்சயமாக பாராட்டுக்குரியதொன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

நுணாவிலானின் இணைப்பினூடாக பார்த்தபோது ஏறத்தாழ பத்து வருடங்களின் முன்னரே Justin யாழில் ரேபிஸ் பற்றிய தெளிவான விழிப்புணர்வூட்டும் கட்டுரை வரைந்திருக்கிறார் நிச்சயமாக பாராட்டுக்குரியதொன்று.

அந்த காணொளியும் புதிது அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

அந்த காணொளியும் புதிது அல்ல.

ஆம் குமாரசுவாமியண்ணை அதை நான் ஆரம்பத்திலேயே  மேலே சொல்லிவிட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

நுணாவிலானின் இணைப்பினூடாக பார்த்தபோது ஏறத்தாழ பத்து வருடங்களின் முன்னரே Justin யாழில் ரேபிஸ் பற்றிய தெளிவான விழிப்புணர்வூட்டும் கட்டுரை வரைந்திருக்கிறார் நிச்சயமாக பாராட்டுக்குரியதொன்று.

நன்றி நுணா, வளவன்.

அந்தக் கட்டுரையை எழுதிய போது இலங்கையில் ஆண்டு தோறும் 100 பேருக்கு மேல் றேபிசினால் இறந்து கொண்டிருந்தனர். ஆனால், என் மிருக வைத்திய அனுபவத்தில் இலங்கை மக்களுக்கு றேபிஸ் பற்றித் தெரிந்த அளவு மிகக் குறைவாக இருந்தது. இன்றும் கூட றேபிஸ் பெரிதாக இல்லாத ஒரு நாட்டில் நுண்ணுயிரியல் கற்பிக்கும் போது றேபிஸ் பற்றிய ஒரு சிலைட் என்னுடைய குறிப்புகளில் இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

நன்றி நுணா, வளவன்.

அந்தக் கட்டுரையை எழுதிய போது இலங்கையில் ஆண்டு தோறும் 100 பேருக்கு மேல் றேபிசினால் இறந்து கொண்டிருந்தனர். ஆனால், என் மிருக வைத்திய அனுபவத்தில் இலங்கை மக்களுக்கு றேபிஸ் பற்றித் தெரிந்த அளவு மிகக் குறைவாக இருந்தது. இன்றும் கூட றேபிஸ் பெரிதாக இல்லாத ஒரு நாட்டில் நுண்ணுயிரியல் கற்பிக்கும் போது றேபிஸ் பற்றிய ஒரு சிலைட் என்னுடைய குறிப்புகளில் இருக்கும்!

நன்றி அண்ணா,

ரேபீஸ் தடுப்பூசியை ஒருக்கால் எடுத்தால் பூரண பாதுகாப்பு கிடைக்குமா? எத்தனை வருடங்களுக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நன்றி அண்ணா,

ரேபீஸ் தடுப்பூசியை ஒருக்கால் எடுத்தால் பூரண பாதுகாப்பு கிடைக்குமா? எத்தனை வருடங்களுக்கு?

கோசான், றேபிஸ் தடுப்பூசியின் பாதுகாப்பு போலியோ வக்சீனுடைய பாதுகாப்பைப் போல வாழ்நாள் முழுவதும் இருக்காது. எனவே இரு வகையான தடுப்பூசி செலுத்தும் முறைகள் வைத்திருக்கிறார்கள். (அலட்டலைத் தாண்டிச் சென்றால் - சுருக்கமான பதில் கீழே😂)

1. றேபிஸ் தொற்ற முன்னரே முற்பாதுகாப்பாக எடுத்துக் கொள்வது (pre-exposure prophylaxis): இது மிருக வைத்தியர்கள், காட்டு விலங்குகளோடு வேலை செய்வோர் ஆகியோரில் மட்டும் பின்பற்றப் படுகிறது. முதல் டோஸ் எடுத்துக் கொண்ட பின்னர், 2 வருடங்களுக்கொரு முறை இரத்தத்தில் றேபிசுக்கெதிரான அன்ரிபொடி இருக்கிறதா எனப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அன்ரிபொடி குறிப்பிட்ட அளவுக்குக் குறைந்தால், ஒரு பூஸ்ரர் ஊசி எடுக்க வேணும்.

2. றேபிஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் எடுத்துக் கொள்வது (post-exposure prophylaxis): இது தான் பெரும்பாலானோர் எடுத்துக் கொள்ளும் றேபிஸ் தடுப்பூசி. றேபிஸ் தொற்று ஏற்பட்ட பின்னர், 4 ஊசிகள் போடுவர். மேலே குறிப்பிட்ட மாதிரி 2 வருடங்களுக்குள் நீங்கள் றேபிஸ் வக்சீன் முன்னர் எடுத்திருந்தால், இந்த 4 ஊசிகள் பாதுகாப்பைத் தரும். இரண்டு ஆண்டுகளுக்குள் நீங்கள் றேபிஸ் வக்சீன் எடுத்திருக்கா விட்டால், இந்த 4 றேபிஸ் தடுப்பூசிகளோடு சேர்த்து றேபிஸ் இம்மியுனோசீறம் (RIG) எனப்படும் அன்ரிபொடியையும் ஏற்றுவார்கள். 

சுருக்கமான பதில்: றேபிஸ் தடுப்பூசிப் பாதுகாப்பு வாழ்நாள் முழுவதும் தொடராது, ஆனால் அன்ரிபொடி பரிசோதனை மூலம் பாதுகாப்பை அறியலாம், பூஸ்ரர் ஊசி எடுக்கலாம்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ரேபிஸ் ( Rabies)
--------------------------------------
இது வைரசால் உருவாகும் ஒரு நோயாகும்.
இவ்வைரஸ் நாய், பூனை போன்ற வீட்டு மிருகங்களாலும் ( domestic animals) , வௌவால் , நரி, ஓநாய் போன்ற காட்டு மிருகங்களாலும் பரப்பப்படுகின்றன!
எமது பிரதேசத்தில் கட்டாக்காலி நாய்களும், பூனைகளுமே பிரதான நோய்க்காவிகளாக விளங்குகின்றன.
எவ்வாறு பரவுகிறது?
ரேபிஸ் வைரஸ் மேற்கூறிய விலங்குகளின் உமிழ்நீர்ச்சுரப்பியில் காணப்படுகின்றன .
இவற்றால் கடிபடுகையில் உமிழ்நீருடன் சேர்ந்து நம் இரத்தத்தில் கலக்கின்றன.
உடலில் காயங்கள் இருக்கும் போது, அவ்விடத்தில் கடிக்காமல் வெறுமனே நக்கப்பட்டாலும் வைரஸ் நம் உடலினுள் செல்ல வாய்ப்புள்ளது!
தொற்றுக்குள்ளானவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் எனக்கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில் தொற்றுக்குள்ளான மனிதர்களின் உமிழ்நீரில் உள்ள வைரசின் செறிவு மிகக்குறைவாக காணப்படுவதால், அவர்களால் கடிக்கப்பட்டாலும் , கடிபட்டவருக்கு நோய் பரவும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது!
தொற்றுக்குள்ளானவரை பராமரிப்பதாலோ, அவருடன் புழங்குவதாலோ, அவருடன் பாலியல் தொடர்பு வைப்பதாலோ நோய் பரவும் வாய்ப்பு மிகமிக குறைவாகும்.
எனினும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ( கையுறை, முகமூடி - face mask , உடலை முழுதும் மூடிய உடை போன்றன) புழங்குவது நல்லது.
தோலில் காயங்கள் இருக்கும் பட்சத்தில், முன்னெச்சரிக்கையாக ரேபிஸ் வக்சின் ( ரேபிஸ் ஊசி) ஏற்றிக்கொள்வது சிறந்தது!
என்ன நடக்கிறது?
உடலினுள் புகுந்த வைரசானது, நரம்புகளினுள் நுழைந்து, அவற்றினூடாக மூளையைச் சென்றடைகிறது!
இந்தப் பயணத்துக்கான நேரம் ஆளுக்காள் மாறுபடும். பொதுவாக நாய் கடித்து, 1-3 கிழமைகளுக்குள் நோய் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கும்!
இரத்தத்தில் கலந்த கிருமி நரம்பு மண்டலத்தை அடையும் வரை மட்டுமே அதன் பயணத்தை எம்மிடமுள்ள மருந்துகளின் மூலம் தடுக்க முடியும்.
நரம்புகளினுள் வைரஸ் உள்நுழைந்து விட்டால், அதன்பின் அவற்றின் ஆக்கிரமிப்பை தடுக்க எவராலும் இயலாது! கொடுமையான ஒரு மரணமே முடிவாக இருக்கும்!
எனவே நாய் கடித்தவுடன் எவ்வளவு விரைவாக மருத்துவ உதவியை நாடுகிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது!
நோய் அறிகுறிகள்.
கடிபட்ட நாளிலிருந்து, குணங்குறிகள் வெளிப்பட ஆரம்பிப்பதற்கான காலம் ( incubation period) ஆளுக்காள் மாறுபடும். பொதுவாக சில கிழமைகள் எடுத்தாலும், சிலருக்கு பல வருடங்களின் பின்னும் நோயறிகுறிகள் வெளிப்படக்கூடும்!
ஆரம்பத்தில் காய்ச்சல் , சோர்வு, உணவில் விருப்பின்மை போன்ற அறிகுறிகள் தென்படும். கடிபட்ட இடத்தில் வலியுடன் கூடிய ஒருவித கூச்ச உணர்வு (tingling sensation) ஏற்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
இவ்வறிகுறிகள் ஏற்பட்டு 10-14 நாட்களுக்குள் நரம்பு மண்டலம் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தோன்றும்!
நிலையாக இருக்கமுடியாமல் அவதிப்படுதல் ( agitated ), மூச்சு விட சிரமம், விழுங்குவதற்கு சிரமம் போன்றன ஏற்படும்.
நோயாளி நீரைப் பருகும்போது மிகக்கடுமையான " தொண்டை தசைச்சுருக்கம்" ஏற்படுவதால், கடுமையான வலி ஏற்படும்.
இதனால் நீரைக் கண்டாலோ, சிலநேரங்களில் நீரின் பெயரைக்கேட்டாலோ, நோயாளியின் அவதி ( agitation) கடுமையாகும் ( நீர் வெறுப்பு நிலை).
வெளிச்சம், ஒலி , காற்றின் ஸ்பரிசம் என்பவையும் அவதியை கடுமையாக்கும்.
இவ்வறிகுறிகள் தோன்றினால் 1-2 கிழமைக்குள் மரணம் தவிர்க்க
முடியாததாகும்!
சிகிச்சை
விசர்நாய்க்கடி என்றதும் நம் நினைவுக்கு வருவது தொப்புளைச் சுற்றிப் போடப்படும் 14 ஊசிகள் தான். இந்த ஊசிகளுக்குப் பயந்தே பெரும்பாலானோர் வைத்தியசாலைக்கு வருவதில்லை!
எனினும் தற்போது இந்த செயன்முறையானது நடைமுறையில் இல்லை!
நாய் கடித்த உடனே, உடனடியாக கடிபட்ட இடத்தை சோப் கொண்டு மிக நன்றாக கழுவ வேண்டும்.
கடிபட்ட இடத்தை கீறுவதோ, கட்டுகள் போடுவதோ கூடாது.
இயலுமான விரைவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வது முக்கியமாகும்!
உங்களுக்கு ஏற்பட்ட காயத்தின் தன்மையை பொறுத்து பாரிய காயம் ( major wound) & சிறிய காயம் ( minor wound) எனப் இரண்டாக பிரிக்கப்படுகிறது.
தலை, முகம், மார்பு, வயிறு, கைகள் என்பவற்றில் ஏற்படும் இரத்தக்காயங்கள் மற்றும் உடலின் எந்த இடத்திலும் ஏற்படும் ஆழமான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காயங்கள் பாரிய காயங்களாகவும், கால்களில் ஏற்படும் சிராய்ப்புக் காயங்கள் சிறிய காயங்களாகவும் கொள்ளப்படுகின்றன!
இருவகையான ஊசிமருந்துகள் வழங்கப்படுகின்றன
1- ரேபிஸ் இம்மியூனோ குளோபியுலின் :- இது க
டிபட்ட உடனே போடப்படுவது. காயமேற்பட்ட இடத்தை சுற்றி ஊசிமூலம் போடப்படும். ரேபிஸ் கிருமிக்கான உடனடி எதிர்ப்புசக்தி இதன்மூலம் வழங்கப்படும்.
2. ரேபிஸ் வக்சின் - இது உடலால் ரேபிஸ் வைரசுக்கெதிரான எதிர்ப்புச் சக்தியை உருவாக்க தூண்டுதலை ஏற்படுத்தும் மருந்து.
பாரிய காயங்களுக்கு: 5 தடவைகளில் ( கடிபட்ட நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள், பதிநான்காம் நாள், முப்பதாம் நாள்) ஊசிமூலம் ஏற்றப்படும்.
சிறிய காயங்களுக்கு 4 தடவைகளில் ( கடிபட்ட அன்று இரு தடவைகள், ஏழாம் நாள், இருபத்தோராம் நாள்) போடப்படும்
எல்லா ஊசிகளும் கைகளில் அல்லது தொடையில் போடப்படும்!
கடித்த நாயானது:
1- வீட்டில் வளர்க்கப்படும்,
2- ரேபிஸ் ஊசி இருவருடங்களுக்கு மேற்படாத இடைவெளியில் இருதடவைகள் போடப்பட்ட,
3- கடைசி ஊசி கடிபட்ட நாளுக்கு ஒரு வருடத்துக்குள் போடப்பட்டதாக இருப்பின், கடித்த நாய் 21 நாட்களுக்கு கண்காணிக்கப்படும். நாய் அக்காலப்பகுதியில் ஆரோக்கியமாக இருப்பின் ரேபிசுக்கான ஊசிமருந்துகள் கடிபட்டவருக்கு வழங்கப்படத் தேவையில்லை!
தடுக்கும் முறை.
பாதகமான விளைவொன்று ( உதாரணமாக ஒரு நோய்நிலைமை) ஏற்படுவதை மூன்று நிலைகளில் தடுக்கலாம்.
1. வருமுன் தடுத்தல் (primary prevention)
2. வரும்போது தடுத்தல் ( Secondary prevention) - ஒரு நோயின் ஆரம்ப நிலையிலேயே இனங்கண்டு குணப்படுத்தல்.
3- வந்த பின் தடுத்தல் ( Tertiary prevention) - ஒரு நோய் முற்றாக ஏற்பட்டபின், அதற்கு வைத்தியம் செய்து குணமாக்கல்.
விசர்நாய்க்கடியால் வரும் ரேபிஸ் நோயைப் பொறுத்த வரையில் முதலிரு நிலைகளில் மட்டுமே நோயை தடுக்கவோ குணமாக்கவோ முடியும்!
மூன்றாம் நிலைக்கு வருகையில் நோயாளியின் மரணம் நிச்சயிக்கப்பட்டதாகின்றது!
கட்டாக்காலி நாய்களின் பரம்பலை இல்லாதொழித்தலே சிறந்த " வருமுன் தடுக்கும்" முறையாக கொள்ளப்படுகிறது. ஆரம்பகாலங்களில் கட்டாக்காலி நாய்கள் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டாலும், பின் வந்த நல்லாட்சி அரசாங்கங்கள் உயிர்வதை பாவம் எனும் கொள்கைக்கிணங்க, நாய்க்கொலையை தடை செய்து, அவற்றுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்வதை ஊக்குவித்தன.
இதுவே இப்போது நடைமுறையிலுள்ள நாய்களின் பரம்பலை ஒழிப்பதற்கான நடைமுறையாகும்.
வீட்டில் வளர்க்கப்படும் மிருகங்களெனில், அவற்றுக்கான நோய்த்தடுப்பூசி சரியான கால இடைவெளியில் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துங்கள்.
கட்டாக்காலி நாய்களுக்கான குடும்பக்கட்டுப்பாட்டு செயற்றிட்டத்துக்கென நாய்களைப் பிடிப்போரும், பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களும் ( PHI) உங்கள் பிரதேசத்துக்கு வரும்போது அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குங்கள்!
நாய் கடித்தவுடன் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்
டுவந்து, மேற்படி ஊசிமருந்துகளை போடுதலே நோய்த்தடுப்புக்கான வினைத்திறனான தடுப்பு முறையாகும்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ரேபிஸ் தடுப்பு நிலையம் தனியாக உள்ளது. தினமும் பத்துக்கு குறையாத நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்!
மேற்கூறப்பட்ட நோயின் குணங்குறிகள் வெளிக்காட்டப்பட்ட பின், அதாவது நோய்க்கிருமி நரம்பு மண்டலத்தில் நுழைந்த பின், சிகிச்சையளிப்பதில் எவ்வித பயனுமில்லை.
எனவே நோய் அறிகுறிகள் வெளிப்படும் வரை காத்திருக்காமல், நாய் கடித்த உடனேயே வைத்தியசாலைக்கு வருவது மிக அவசியமானதாகும்.
***********************

நன்றி  முகப்புத்தகத்திலிருந்து டொக்டர் சஜீதன் பேரின்பராசா 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.