Jump to content

ராஜபக்சக்களின் படு தோல்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Gotabaya-Mahinda-Basil-678x381.jpg

இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு நாடு -ஒரு சட்டம் – நாட்டைத் தட்டி நிமித்துகிறேன் எனப் பதவிக்கு வந்த ராஜபக்சக்களால் நாட்டைச் சீனாவிடம் அடைக்கலம் வைக்க முடிந்ததே தவிர நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியவில்லை. ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில் பெரும் வெற்றி ஈட்டிய ராஜபசக்களின் செல்வாக்கு தற்பொழுது தேய்ந்து போய்க்கொண்டிருக்கின்றது. இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி, அந்நிய செலவாணியின் வீழ்ச்சி, என ஓட்டுமொத்த பொருளாதாரமே வீழ்ச்சி அடைந்துள்ளது. எரிபொருள், உரம்  மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. வெளிநாடுகளில் வாங்கிய கடனை கட்ட முடியாமல்  திணறுகிறது இலங்கை. இந்து சமுத்திரத்தின் முத்து இப்போது கடனில் தாண்டுவிடும் முத்தாகி விட்டது. இலங்கை கடன் கொடுக்க முடியாது திவாலாகும் நிலை சாத்தியம் என கூறப்படுகிறது.

முதலில் மஹிந்த ராஜபக்ச நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார் என்றார்கள். அதன் பின்னர் கோத்தபாய கொண்டு செல்வார்கள் என்றார்கள். இப்பொழுது பசில் நாட்டின் பொருளாதாரத்தை நிமித்தப் போகிறார் என்கிறார்கள். இவர்கள் எவரிடமுமே மக்கள் சார்பான நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அரசியல் பொருளாதாரக் கொள்கை இல்லை. இனத்துவேசத்தை வளர்த்து விடுவதை அரசியல் கொள்கையாவும் -சீனாவிடம் கடனை வாங்குதலை பொருளாதாரக் கொள்கையாகவும் மட்டுமே கொண்டிருக்கின்றனர். பசில் அல்ல அதன் பின்னர் நாமல் வந்தாலும் இந்தப் பாதையில் பயணித்து நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியாது. கொரோனாவைக் கட்டுப்படுத்த ,சரிந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசிடம் எந்த விதமான காத்திரமான வேலைத்திட்டமும் இல்லை என்பதே நிதர்சனம்.

 பசில்  நிதியமைச்சர் ஆனவுடன் பங்குச் சந்தை ஆகா ஓகோ என வளரப் போகிறது என்றெல்லாம் ஆருடம் கூறினார்கள். பசில் நிதியமைச்சர் ஆன தொடக்கம் பங்கு சந்தையில் எதுவித மாற்றமும் நிகழவில்லை. ஆக இவர்கள் இல்லாத ஒன்றை ஊதிப் பெருப்பித்து இருப்பது போல் காட்டுகின்றனரே தவிர உண்மையான பொருளாதார வளர்ச்சி ஏற்படவில்லை. அண்மையில் இலங்கை மத்திய வங்கி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகளவான பணத்தை அச்சிட்டுள்ளது. அண்மையில் 20845 கோடி ரூபா பெறுமதியான , பணம் அச்சிடப்பட்டுள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியையே அரசின் இந் நடவடிக்கை எடுத்துக் காட்டுகின்றது. அரச வருமானம் அரசின் அன்றாட நடவடிக்கைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு உள்ளது

தமது அதிகாரத்தை நிலை நிறுத்தி வைத்துக் கொள்ளுதலே – குடும்ப ஆட்சியை விஸ்தரித்தலே, ராஜபக்ச குடும்பங்களின் நோக்கமாக உள்ளது. அடுத்த 2024 ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டா, தானே போட்டியிடுவது  அல்லது பசிலை நிறுத்துவது, அதன் பின் வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமலை நிறுத்துவது என தமது அதிகாரத்தை தக்க வைப்பதிலேயே ராஜபக்ச குடும்பம் மும்முரமாக நிற்கின்றது.   நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸநாயக்க , பிரியங்கர ஜயரத்ன போன்றோர் தம்மால் சுயாதீனமாக இயங்கமுடியவில்லை என வெளிப்படையாக குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்கள். ராஜபக்ச குடும்ப அரசு அனைத்து அதிகாரத்தையும் தமக்குள் வைத்துக்கொண்டு இருக்கின்றது என்பது இதிலிருந்து புலனாகின்றது

மறுபக்கத்தில் பொருளாதார நெருக்கடியில் திணறும் இவ்வரசைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் மும்முரமாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு ஆளும் கட்சியும், ஆட்சியை கைபற்றிக் கொள்வதற்கும் எதிர்கட்சியும் என  இரு கட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றன. தலையணையை மாற்றினால் தலைவலி தீராது என்பது போல், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பிரச்சனை தீர்க்கப்படப்போவதில்லை. இங்கு மக்கள் பிரச்சனை என்பது இரண்டாம் பட்சமே.

 நாட்டின் தேசிய வளங்கள் ஒவ்வொன்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகின்றது. கொழும்புத் துறைமுக நகர் சீனாவுக்கு ,திருகோணமலை துறைமுகம் மற்றும் எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கும் , கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவிற்கும் என மோடிக்கு நிகராக நாட்டை கூறு போட்டு விற்கின்றனர். தமது சொந்த சொத்துக்கள் போல் வளங்களை விற்பனை செய்வதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு உருவாக்கி உள்ளது. சீனா  அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் தமது அரசியல் அதிகாரப் போட்டியை நடத்தும் களமாக மாறிக்கொண்டிருக்கின்றது இலங்கை. தனது தலையை வெட்ட தானே தலையைக் கொண்டு போய்க் கொடுக்கும் ஆடு போல் செயற்படுகின்றது தற்போதைய கோத்தபாய அரசு

சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து அண்மையில் 70 கோடி டொலர் கடனாகப் பெற ஒப்பந்தம் கைச்சாத்தானது. அது தவிர மேலும் பல கோடி டொலரை கடனாகப் பெற இலங்கை அரசு உத்தேசித்துள்ளது. அது தவிர ஏற்கனவே வறுமை நாடான பங்களாதேஷிடமிருந்து கூட  20 கோடி டொலரை கடனாகப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. உலகம் முழுக்க கடனுக்கு கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டது இலங்கையின் பொருளாதாரம்.

‘யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பது குறித்து எனக்கு அக்கறையில்லை. அவர்களைப் பற்றி நாம் இப்போது சிந்திக்க முடியாது’ என 1983 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன டெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஜே ஆரின் பாணியைப் பின்பற்றும் கோத்தபாயவும் சிறிய மாற்றத்துடன்  இதே கருத்தை தான் கொண்டிருக்கின்றார். அதாவது ஜே ஆர் யாழ்ப்பாண மக்களைப் பற்றி மட்டும்தான் கருத்திற்கொள்ளவில்லை கோத்தபாயவோ ஒரு படி மேலே சென்று ஒட்டு மொத்த இலங்கை மக்களைப் பற்றியே கருத்திற் கொள்ளவில்லை என்பது அவரின் அரசியல் பொருளாதார நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுகின்றது. இவ்வரசை நம்பி வாக்களித்த 69 லட்சம் மக்களை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இலங்கை மக்களையும் இவ் அரசு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது.

கொரோனா பெரும்தொற்று பரவும் இந்த மோசமான காலகட்டத்தில் கூட அதிகாரத்தைக் கைப்பற்றுவதையும் தமது குடும்பத்தை விஸ்தரிப்பதையும் மட்டுமே நோக்காக கொண்டு இயங்கும் இவ்வரசை மக்கள் இனியும் நம்பிக்கொண்டிருக்காமல், மக்கள் சார்பான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளுடன்  இயங்கும் அமைப்புகளுடன் இயங்கி தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். 

https://ethir.org/?p=6883

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மினத்தின் மீது கொட்டப்பட்ட அடிக்கொரு குண்டுகளுக்கும் இன்று நாட்டை வித்தும் ......???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இங்கையின் பொருளாதாரம் படு மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது.

சிறிலங்காவின் வங்குரோத்து

இது எக்காலமும்  எக்காரணம் கொண்டும் ஈழத்தமிழரை பாதிக்காது.
இதற்கு ஆயிரம் காரணங்கள் உதாரணங்கள் சொல்லலாம்.

 

Link to comment
Share on other sites

On 24/8/2021 at 11:25, குமாரசாமி said:

சிறிலங்காவின் வங்குரோத்து

இது எக்காலமும்  எக்காரணம் கொண்டும் ஈழத்தமிழரை பாதிக்காது.
இதற்கு ஆயிரம் காரணங்கள் உதாரணங்கள் சொல்லலாம்.

 

ஆயிரம் வேண்டாம், ஒரு இருநூறை எடுத்துவிடலாமே? ஈழத்தமிழரெல்லாம் ஐரோப்பாவிலும் கனடாவிலும் இருப்பவர்கள் என்ற கணக்கு என்றால் ஆயிரமும் விளக்கத்துக்கு வந்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/8/2021 at 19:25, குமாரசாமி said:

இது எக்காலமும்  எக்காரணம் கொண்டும் ஈழத்தமிழரை பாதிக்காது.
இதற்கு ஆயிரம் காரணங்கள் உதாரணங்கள் சொல்லலாம்.

நடுக்கடலில் நித்திற்கும் 200 அடி  கப்பலில் ஓர் முனையில்  பெரிய வெடிப்பு ஏற்றப்பட்டு தண்ணீர் உள்ளே வருகிறது, வடிப்பும் பெரிதாகிறது, போதாகுறைக்கு புயலும் வருவதாக காலநிலை அறிவிப்பும் வருகிறது.

கப்பலில் இருக்கும் எவராவது, நான் வெடிப்பு இல்லாத முனையில் இருப்பதால், ஒரு பிரச்னையும்  இல்லை என்று  எவராவது சொல்ல முடியமா?    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் முடியாது   ஆனால்  ஒரு  தீவிலுள்ளவர்கள்  சொல்லலாம்  தீவை இரண்டாக  பிரித்து விட்டால் சரி 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

ஆயிரம் வேண்டாம், ஒரு இருநூறை எடுத்துவிடலாமே? ஈழத்தமிழரெல்லாம் ஐரோப்பாவிலும் கனடாவிலும் இருப்பவர்கள் என்ற கணக்கு என்றால் ஆயிரமும் விளக்கத்துக்கு வந்துவிட்டது.

ஈழத்தமிழர் அபிவிருத்து நிதியம் அல்லது ஈழத்தமிழர் அபிவிருத்தி அறக்கட்டளை என பகிரங்கமாக ஏதாவது உள்ளதா?

விடுதலைப்புலிகள் காலத்தில் யுத்தம் சம்பந்தமில்லாமல் புலம்பெயர் மக்கள் மனவுமந்து வழங்கிய நிதிகள் எல்லாம் உங்கள் குருட்டு மூளைக்கு ஏதாவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kadancha said:

நடுக்கடலில் நித்திற்கும் 200 அடி  கப்பலில் ஓர் முனையில்  பெரிய வெடிப்பு ஏற்றப்பட்டு தண்ணீர் உள்ளே வருகிறது, வடிப்பும் பெரிதாகிறது, போதாகுறைக்கு புயலும் வருவதாக காலநிலை அறிவிப்பும் வருகிறது.

கப்பலில் இருக்கும் எவராவது, நான் வெடிப்பு இல்லாத முனையில் இருப்பதால், ஒரு பிரச்னையும்  இல்லை என்று  எவராவது சொல்ல முடியமா?    

நான் சொல்ல வருவது எந்த கஷ்டத்திலும் உயிர் பிழைத்த சமுதாயம் அது. 

நான் வாழ்ந்த ஊரைப் போல் பல்லாயிரம் ஊர்கள் இயற்கையை மட்டும் நம்பி வாழ்பவர்கள்.

கூப்பன் மாவும் தேவையில்லை
மின்சாரமும் தேவையில்லை
டுக்குட்டுக்கு வாகனமும் தேவையில்லை.


இனியில்லையென்ற யுத்தம் நடந்தும் இன்னும் தலைநிமிர்ந்து நிற்கும் வடக்கு கிழக்கு. அவ்வளவிற்கு இயற்கையின் கொடை இலங்கையில் உள்ளது.

தொடர்ந்தால் தொடரலாம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kandiah57 said:

ஆம் முடியாது   ஆனால்  ஒரு  தீவிலுள்ளவர்கள்  சொல்லலாம்  தீவை இரண்டாக  பிரித்து விட்டால் சரி 😂

இந்த புலம்பெயர்ந்த மக்கள் கூட்டம் என்பது பல நாடுகளை வாழவைக்கும். வைக்கிறது. இலங்கையை தவிர.

இன்று கூட தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வை வைக்க முடிந்தால்???? இலங்கை வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, விசுகு said:

இந்த புலம்பெயர்ந்த மக்கள் கூட்டம் என்பது பல நாடுகளை வாழவைக்கும். வைக்கிறது. இலங்கையை தவிர.

இன்று கூட தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வை வைக்க முடிந்தால்???? இலங்கை வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்.

உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான்களின் அனைத்துப் பயங்கரவாதத்தையும் அங்கீகரித்து அவர்களுடன் உறவாடி நிற்கும் அமெரிக்கனை வைச்சு புலிகளுக்கு வகுப்பெடுத்தவர்களும் இதற்குள் நிற்கினம். இப்ப அமெரிக்காவுக்கு என்ன வகுப்பெடுப்பினமோ தெரியல்ல.

தலிபான்கள்.. அமெரிக்காவை ஒரு புறம்.. மறுபுறம் சீனாவையும் அணைச்சுக் கொண்டு.. அரபுலகத்தையும் தாஜா பண்ணிக்கிட்டு போகிறார்கள். ஹிந்தியா.. சார்க் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. 

புலிகள் ஹிந்தியாவையும் மேற்குலகையும் கூடிய கவனத்தில் வைத்த வேளை மற்றைய தரப்புக்களை அணுகக் கூட இல்லை. இது அவர்களின் இராஜதந்திரத் கொள்கை வகுப்புத் தோல்வி. அதுவே அவர்களை அழிக்க நினைத்தவர்களுக்கு சவாலற்ற சூழலையும் உருவாக்கித் தந்துவிட்டது. 

புலிகளை அழிக்க உதவிய அணைவரும்.. இன்று தலிபான்களை அவர்களின் பயங்கரவாதத்தை ஏற்று நிற்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

ஆக பயங்கரவாதத்திற்கு ஒரு வரவிலக்கணம் கிடையாது. எல்லாம் அவரவர் தேவைக்கு ஏற்ப தான் அமைகிறது. இதில புலிகளுக்கு வகுப்பெடுப்பு..?!

ராஜபக்சங்கள் எப்பவோ தோற்றுவிட்டார்கள். அதுதான் ரோட்டை வைச்சு அரசியல் செய்யினம். அது நாட்டை கோட்டை விடும் அளவுக்கு போயிட்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kadancha said:

கப்பலில் இருக்கும் எவராவது, நான் வெடிப்பு இல்லாத முனையில் இருப்பதால், ஒரு பிரச்னையும்  இல்லை என்று  எவராவது சொல்ல முடியமா?    

பல பாரிய புயல்களையும் பாரிய நீண்ட கடலோட்டம்களையும் கண்டவர்களுக்கு அந்த கப்பல் தாழ்வது ஒரு பிரச்சனையே இல்லை கடலே காணாத மனிதர்களுக்குத்தான்  அந்த பிரச்சனை அவர்களின் வாழ்வின் கடைசி நேர பிரச்சனை யாக இருக்கும் .

இப்ப இப்படியான கருத்துக்கள் எழுவது இயற்கைதான் ஆனால் யதார்த்தம் இன்னும் சில வருடங்களில் தெரிந்து விடும் .

குடிக்கவேண்டாம் அப்பத்தான் பணம் அனுப்புவேன் என்று நட்ப்பு ஒன்று அவரின் சிறிய தகப்பனுக்கு சொல்ல  சித்தப்பரோ  போடாங் நீயும் உந்த பணமும் என்று சொல்லிவிட்டு விசுவமடு காட்டுக்குள் அவரின் சொந்த நிலத்தில் ஒதுங்கிக்கொண்டு சுய விவசாயம் மரக்கறியில் இருந்து அரிசி பால் இறைச்சி மட்டும் அல்ல அவரின் சொந்த தேவைக்கு கசிப்பும் காய்ச்சி நன்றாய் குடித்துவிட்டு வாட்ஸுப் கோலில் பிறமகனுடன் வாரத்தில் ஒருநாள் லைவ் பைட்டிங் நடக்கும்🤣 அதுவும் உயர மரமொன்றில் ஏறி இருந்தபடி  .நம்ம சனம் பல தடங்களை கண்டதுகள் பாஸ் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலர் ஊரில் இருந்து கிளம்பி ஐரோப்பா வந்த பிறகு ஊரின் நிலைமை தவிர வேறெல்லாவற்றையும் அப்டேற் செய்திருக்கிறார்கள்.

யுத்த காலத்திலும் சரி, பின்னர் சுனாமிக்குப் பின்னரும் சரி தமிழர்கள் தப்பி வாழ்ந்தது உள்ளூர் உற்பத்தியின் தன்னிறைவால் அல்ல! வெளிநாட்டுப் பணம், நிவாரணம் , தொண்டு நிறுவனங்களின் திட்டங்கள் என்பனவே பிரதான காரணங்கள். இதில் வெளிநாட்டுப் பணம் எல்லாத் தாயக தமிழருக்கும் நேரடியாகக் கிடைப்பதில்லை. நிவாரணம், தொண்டு நிறுவனங்கள் முன்பு போல இப்போது மும்முரமாக செயல்படுவதில்லை.

 ஆளுக்காள் மாறி மாறி  முதுகு சொறியச் சுகமாகத் தான் இருக்கும்! அது தானே முக்கியம்?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

வெளிநாட்டுப் பணம்

 

பணம் இருந்தாலும், பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது முடங்குகிறது.

 ஏனெனில், letter of credit ஐ வங்கிகள் கொடுக்க மறுக்கிறது அல்லது தாமதிக்க வைத்து, பொருட்களின் அத்தியாவசிய தேவை அடிப்படையில் கையிருப்பில் இருக்கும் டாலர் பகிரப்படுகிறது. அது கூட, காத்திருந்தே பெற வேண்டிய  நிலை.  

 

 

1 hour ago, பெருமாள் said:

பல பாரிய புயல்களையும் பாரிய நீண்ட கடலோட்டம்களையும் கண்டவர்களுக்கு அந்த கப்பல் தாழ்வது ஒரு பிரச்சனையே இல்லை கடலே காணாத மனிதர்களுக்குத்தான்  அந்த பிரச்சனை அவர்களின் வாழ்வின் கடைசி நேர பிரச்சனை யாக இருக்கும் .

 

1 hour ago, பெருமாள் said:

இப்ப இப்படியான கருத்துக்கள் எழுவது இயற்கைதான் ஆனால் யதார்த்தம் இன்னும் சில வருடங்களில் தெரிந்து விடும் .

குடிக்கவேண்டாம் அப்பத்தான் பணம் அனுப்புவேன் என்று நட்ப்பு ஒன்று அவரின் சிறிய தகப்பனுக்கு சொல்ல

cancer க்கு  கீமோ மருந்து எடுக்க முடியாமல் இருக்கிறது. 

ஒன்றை நீங்கள் யோசிக்கவில்லை. 

corana வில் இழப்பு கூடவாயினும், black death அளவு வீதம் இல்லை. black death 75 -200 மில்லியன் காவு கொண்டது ஓர் காரணம், சராசரி உடல் நலம் அந்த நேரத்தில் சராசரி சனத்தொகையில் குறைவு.    

இலங்கையை பொறுத்தவரை, சனத்தொகையின் பெரும் பகுதி 3 நேரம் ஏதோ ஓர் உணவு எடுக்க கூடியதாக இருப்பதால். முழு உலகமும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு வேளை  உணவு.

இப்படி பொருளாதர  தாக்கம், முழு சமூகத்தின் நோயெதிர்ப்பு தரத்தை குறைக்கும். மறுபடி இன்னொரு corana அலை வந்தால், நிலை என்ன ? 

ஒருவர் குடிப்பதை வைத்து கொண்டு, மில்லியன்  அளவான சனத்தொகைக்கு விளக்கம் கற்பிகிறீர்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Copied
நாங்கள்_சாக மாட்டோம்.
நாங்கள் சாகவே மாட்டோம்.!!!

விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம்......💯

எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள்.💔💔

ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை.....💥💥💥

பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.....🤯

எரிவாயு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை....💯

எரிபொருள் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தொலைபேசி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.....🤳

மரக்கறி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை....🌶🥕🥦

சீனி இன்றி பனங்கட்டியுடன் பிளேன்ரீ குடித்தோம் நாங்கள் சாகவே இல்லை....☕(டெல்டா_ரெபி)

அங்கர் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை.....🥛
பசளை இன்றியிம் விவசாயம் செய்தோம் நாங்கள் சாகவே இல்லை.....🌱🌾

இனவாதப் படுகொலையால் மட்டும் அதிகமாகச் செத்தோம் .....🧟‍♂️

வயலுண்டு, தோட்டமுண்டு, பனையுண்டு, தென்னையுண்டு, கடலுண்டு, குளமுண்டு,
மீனுண்டு உப்புண்டு
பகிர்ந்துண்டு பல்லுயிரோம் பண்புண்டு.
நாம் சாகப்போவதே இல்லை.....

நெருப்பிலும்💥💥 நீந்திக் கரைசேர்வோம்...💥💥💥
உங்களால் இவ்வளவும் தாண்டி நீந்திக் கரைசேர முடியுமானால் மனம் மாறாதிருங்கள.......

நன்றி முகநூல் பதிவுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள்.


வன்னியில் உள்ள ஓர் பகுதி சனத்தொகையே, 2009 இல், உண்மையான பகுதி  உணவு பஞ்சத்தை எதிர்நோக்கியது. நல்ல  காலம் அது நீடிக்கவில்லை. நீடித்து இருந்தால், பஞ்சத்தால் இறந்தது, கொல்லப்சட்டத்தை விட கூடாவாக இருந்து இருக்கும்.  

வட கிழக்கின் மற்ற பகுதிகள், மற்றும் இலங்கைத் தீவின் ஏனைய பகுதிகள், உண்மையான உணவு  பஞ்சத்தை சமகால வரலாற்றில் காணவில்லை.  

இந்த அனுபவம் எல்லாம், சிங்கள பகுதிகளுக்கு தாராளமாக எல்லாம் கிடைத்த போது, மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் நடந்த வழங்கல்.

புலிகழும் , அப்படி மட்டுப்படுதப்பட்ட அளவில் வந்ததை பங்கிட்டு எடுத்து வெளிப்படை. 

புலிகளும் அவர்களுக்கும், அவர்களை நேரடியாக  சார்ந்த சனத்தொகைக்கும் புலிகளின் வழங்கல் வழியாக வழங்கல் செய்தது என்பதும் நடந்தது. 

இப்பொது, சிங்கள பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்படும் போது, வடகிழக்குக்கு எத்தகைய  வழங்கல்  இருக்கும் என்பது.

மற்றது, வெளிப்படையாக, கொரானா  பெருத்தொற்றுக்கு  மத்தியில்.

வடகிழக்கில், இன்னமும் முழுமையாக food security இல்லாத நிலையில்.  

தொண்டு நிறுவனங்களும், 2008 இல் சிங்களதால் வ்லோற்றகரமாக வெளியேற்றப்படும் வரை, இருந்த ஊக்கமும், மும்மரமும் இல்லாத நிலையில்.     

கொரன முடக்கத்தில், அங்கிளருபவர்கள், ,  முழுமையாக தனிப்பட்டுக்கு விட்ட ஊர்களுக்கு, கிராமங்களுக்கு , வெளி  உதவி இன்றி வழங்க முடியாது இருந்தது என்பதை இதில் எவ்வாறு எடுத்துக் கொள்வது.     

இவைகளே  வேறுபாடு. 

Link to comment
Share on other sites

நாங்கள் சாகவல்லை. ஏனென்றால் எப்போதோ தப்பியோடி புலம் பெயர்ந்த நாடுகளில் வாழ்கிறோம். 

செத்ததும் உறவுகளை இழந்ததும், வீடிழந்ததும்  ஊரில் வாழும் மக்கள் தானே. 

தமிழ் தேசியம் பேசி உசுப்பேற்றி காது குளிர யுத்த செய்திகளை கேட்ட நாம் சாகவில்லை. செத்ததும் அங்கவீனர் ஆகியதும் ஊரில் வாழ்ந்த மக்கள் தானே. 

தொடர்ந்தும் உசுப்பேற்றி முன்பு செய்தது  போல்  அடுத்தடுத்த தலைமுறையையும்  நாசப்படுத்தலாம்   என்ற நப்பாசையில் துடிக்கும் நாம் இன்னும் சாகவில்லை. 

அடுத்த தலைமுறைக்கும் நஞ்சையும் எமது தோற்று போன முட்டாள் தன போராட்ட  முறையையும் திணிக்காமல் மண்டையை போட்டுவிடுவோமோ என்பதே எமது தற்போதைய கவலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருட்டுக்குள் ஒளித்து நின்று புனைபெயர் முகமூடி போட்டு வெளிச்சத்தில் நிற்பவர் மேல் கல்லெறிவது இலகுவான ஒன்று .முன்பெல்லாம் புலிகள் பிழை செய்தார்கள் அவர்களின் ஆதரவாளர்கள் பிழை செய்தார்கள் என்று நேரடியாக புலி இருக்கும்போதே சுட்டி காட்டினார்கள் புலி  மவுனித்த பின்னரும் ஆக்கபூர்வமான செயல்பாட்டில் இன்றும் உள்ளனர் தங்களின் காலத்தின் பின்னரும் அமைதியானவழியில் ஊரில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கணும் என்று வாழுபவர்கள் உண்மையில் மகான்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இருட்டுக்குள் ஒளித்து நின்று புனைபெயர் முகமூடி போட்டு வெளிச்சத்தில் நிற்பவர் மேல் கல்லெறிவது இலகுவான ஒன்று .முன்பெல்லாம் புலிகள் பிழை செய்தார்கள் அவர்களின் ஆதரவாளர்கள் பிழை செய்தார்கள் என்று நேரடியாக புலி இருக்கும்போதே சுட்டி காட்டினார்கள் புலி  மவுனித்த பின்னரும் ஆக்கபூர்வமான செயல்பாட்டில் இன்றும் உள்ளனர் தங்களின் காலத்தின் பின்னரும் அமைதியானவழியில் ஊரில் இருப்பவர்களுக்கு நல்லது நடக்கணும் என்று வாழுபவர்கள் உண்மையில் மகான்கள் .

அட? பெருமாளின் உண்மையான பெயர் பெருமாள் தானா? அவதார் படத்தில் இருப்பதும் பெருமாளா?

(வெளிச்சத்தில் இருப்பவர் என்று சொல்லியிருக்கிறாரே?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Justin said:

அட? பெருமாளின் உண்மையான பெயர் பெருமாள் தானா? அவதார் படத்தில் இருப்பதும் பெருமாளா?

(வெளிச்சத்தில் இருப்பவர் என்று சொல்லியிருக்கிறாரே?)

பெருமாளின் கருத்துக்கு... இது, பதில் அல்ல.  
மீண்டும்... ஒரு முறை, முயற்சிக்கவும்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

பெருமாளின் கருத்துக்கு... இது, பதில் அல்ல.  
மீண்டும்... ஒரு முறை, முயற்சிக்கவும்.  🤣

வாய்ப்பேயில்ல ராஜா! நான் ஒரு தடவை முயற்சித்தா மூன்று தடவை முயற்சித்த மாதிரி!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

அட? பெருமாளின் உண்மையான பெயர் பெருமாள் தானா? அவதார் படத்தில் இருப்பதும் பெருமாளா?

(வெளிச்சத்தில் இருப்பவர் என்று சொல்லியிருக்கிறாரே?)

வயதுக்கு மூத்தவர்களுடன் வாய் காட்ட கூடாதாம் உங்கப்பாட்டுக்கு முழங்குங்க 🤣

2 hours ago, தமிழ் சிறி said:

பெருமாளின் கருத்துக்கு... இது, பதில் அல்ல.  
மீண்டும்... ஒரு முறை, முயற்சிக்கவும்.  🤣

உண்மை படிப்பவர்களுக்கு விளங்கும் தள்ளி போவம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

வெளிநாட்டுப் பணம்,

மண்ணாங்கட்டி வெளிநாட்டு பணம்.😡 😡 😡


சாமானும் பொருட்களும் கரண்டும் இல்லையெண்டால் காசு ஒண்டையும் இறைக்காது...புடுங்காது.

சகல தடைகளும் தமிழருக்கெதிராய்  உங்கடை சிங்களம் கொண்டு வந்த பிறகுதான் தமிழன் இயற்கையை நம்பி வாழ்ந்தான். வேலியில் படர்ந்த செடியும் பனை தென்னையும்  அவன் வாழ்வாதாரம்.

இனியும் இது பற்றி கதைத்தால் ஒட்ட நறுக்கப்படும். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நீங்கள் அல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, குமாரசாமி said:

மண்ணாங்கட்டி வெளிநாட்டு பணம்.😡 😡 😡


சாமானும் பொருட்களும் கரண்டும் இல்லையெண்டால் காசு ஒண்டையும் இறைக்காது...புடுங்காது.

சகல தடைகளும் தமிழருக்கெதிராய்  உங்கடை சிங்களம் கொண்டு வந்த பிறகுதான் தமிழன் இயற்கையை நம்பி வாழ்ந்தான். வேலியில் படர்ந்த செடியும் பனை தென்னையும்  அவன் வாழ்வாதாரம்.

இனியும் இது பற்றி கதைத்தால் ஒட்ட நறுக்கப்படும். ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நீங்கள் அல்ல

அப்படியா? எப்படிப் பாதிக்கப் பட்டீர்கள்? கிழக்கு ஜேர்மனியில் இருந்தா அல்லது மேற்கு ஜேர்மனியில் இருந்தா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/8/2021 at 05:03, விசுகு said:

இந்த புலம்பெயர்ந்த மக்கள் கூட்டம் என்பது பல நாடுகளை வாழவைக்கும். வைக்கிறது. இலங்கையை தவிர.

இன்று கூட தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வை வைக்க முடிந்தால்???? இலங்கை வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்.

தமிழன் பல குற்றங்களை சொல்வான் ஆனால் வாழவைப்பான் ....வைத்தைருக்கிறான்..சுயநலம் உள்ளவன் தான் ஆனால் பொதுநலமும் அவனிடம் உண்டு ....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.