Jump to content

ஊருக்கு போய் வந்த தம்பர்..!பாகம்.2


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.201808070152271902_Malaysian-flight-sudden-passenger-cancellation_SECVPF.gif.jpeg.f50e48cc7d8fa8baafca77ecc17534e2.jpeg

 

ஊருக்கு போய் வந்த தம்பர்..! (பாகம்2)

*****************************

பெரு மூச்சுவிட்ட தம்பர்

பின் தொடர்ந்தார்..

வெளிநாடுகளில் ஒருத்தரும்

இல்லாத குடும்பங்களும்

வேலை,வீட்டுத்தோட்டம்

படிப்பென்று பண்போடுதான்

சிக்கனமாய் 

வாழுதுகள் பாருங்கோ

 

இங்கிருந்து சிலர் 

ஊருலாப்பென்று

ஊருக்கு போய் எதோ

சந்திர மண்டலத்துக்கு 

போய் வந்த

மாதிரி வெளிநாட்டைப்பற்றி

விளாசித்தள்ளுவார்களாம்.

பாருங்கோ.

 

வந்து நிற்கிற கொஞ்ச

நாட்களுக்குள்ள 

கிடாய் அடிச்சு

கோழி அடிச்சு  

மதுப்போத்தல்ல 

விழுந்தடிச்சு

பக்கத்து வீடுகளுக்கு

பகட்டுக் காட்டி

 

காசையெடுத்து வீசி

கஸ்டப்பட்டதுகள் 

வாங்கும் அன்றாட 

பொருட்களுக்கெல்லாம்

விலையை ஏத்தியும்

விரக்தியை ஏத்தியும்

விலாசம் காட்டிறதால

வெளிநாட்டுக்காரர் 

என்றாலே

வெறுப்பாக்கிடக்கிதாம்

பாருங்கோ.

 

அதுகும் திருமணம் பேசி

போன மாப்பிளையெண்டால்

சொல்லி வேலையில்லையாம்

 

அங்க நான் நிற்கையில

அடியுங்கடா போண் என்று

ஐந்தாறிட்ட 

சொல்லி விட்டு போய்

அவங்களும்  அடிக்க இவரோ

வெளிநாட்டில பெரிய

அதிகாரிபோல

 கால் நிலத்தில படாதாம் 

பாருங்கோ..

 

சிலர்..

தண்ணிப்போத்தல 

கட்டிக்கொண்டு

எதோ ஒரு பாலவனத்துக்கு

வந்தமாதிரியே பாசாங்கு 

பண்ணிறதப்பாத்தா 

அதுகளுக்கு

பத்திக்கொண்டுதான் 

வருமாம் பாருங்கோ

 

இப்படி இப்படி 

சொந்த காசைக் 

கொண்டுபோய் 

சோக்குப்பண்ணிறது 

குறைவு பாருங்கோ

 

வங்கியில லோண் எடுத்ததும் 

வட்டிக்கு வாங்கியதுமாய் 

கொண்டு போய் 

பெருமை காட்டுறதாலத்தான்

வெளிநாட்டில மரத்தில 

புடுங்குறாங்க என

சிலர் நினைப்பதுவும்

தப்பில்லைப் பாருங்கோ

 

என்.. 

நண்பன் சுப்பரும்

இருந்த இடத்தவிட்டு 

எழும்பேலாமக்கிடக்காம்

என்று அறிந்து பாப்பமென்று 

போன்னான் பாருங்கோ

 

அவனப்பாத்த நல்லாத்தான் 

இருக்கிறான்

அறிஞ்சதைக்கேட்டா 

அவன் சொல்றான்

இது வெளிநாட்டு உறவின்ர 

காணி அதுதான்

இருந்தா எழும்ப முடியாது.

 

இந்த வருத்தம் எனக்கு 

மட்டுமல்ல

நிறையப்பேருக்கு இருக்கு.

மச்சான் என்று

அவன் சிரிக்கிறான் 

பாருங்கோ.என

தம்பர்

ஏதோ சொல்ல வந்தார்..

 தொடரும்..

அன்புடன் -பசுவூர்க்கோபி-

எனது யாழ் அன்பு இதயங்களுக்குளுக்கு "ஊருக்கு போய்வந்த தம்பர்" முதல் பாகத்தையும்

கீழே தந்துள்ளேன்.படித்துவிட்டு கவிதைபற்றிய உங்கள் கருத்தை தாருங்கள்.நன்றிகள்.  

 

https://www.youtube.com/user/PasuvoorkGobi 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போய் பந்தா காட்டும் நம்மவர்க்கு நன்றாக உறைக்க சொன்னீர்கள் .அடுக்கு வரிகள் மிகவும் அழகு .பாராட்டுக்கள். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கோபி…!

கவிதை கொஞ்சம் சீரியஸாகப் போகுது போல கிடக்குது…!

வெளி நாட்டு உறவினர் வீட்டில் இருந்தால் எழும்பாமல் இருக்கிறது தான் இப்போதைய யதார்த்தம். படம் காட்டிறது எமது இனத்தின் நிற முகூர்த்தில் பின்னிப் பிணைஞ்சு போய் இருக்குது போல..!

தொடருங்கள்…!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பந்தா பேர் வழிகளால் தான் மற்றவர்களுக்கும் கெட்ட பெயர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

இப்படியான பந்தா பேர் வழிகளால் தான் மற்றவர்களுக்கும் கெட்ட பெயர்.

நாங்கள் யாரையும் அப்படி நினைக்க மாட்டம்  

 

13 hours ago, பசுவூர்க்கோபி said:

என்.. 

நண்பன் சுப்பரும்

முந்தய காலத்தில் சுப்பண்ணை என ஒரு நண்பர் இருந்தார் அவர் நினைவும் வந்து போகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகிறார் தம்பர் ......தொடருங்கள் கோபி ......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

இப்படியான பந்தா பேர் வழிகளால் தான் மற்றவர்களுக்கும் கெட்ட பெயர்.

பந்தா பேர்வழிகள் எல்லா நாட்டு சனத்திலையும் இருக்கு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிலாமதி said:

ஊருக்கு போய் பந்தா காட்டும் நம்மவர்க்கு நன்றாக உறைக்க சொன்னீர்கள் .அடுக்கு வரிகள் மிகவும் அழகு .பாராட்டுக்கள். 
 

நன்றிகள்  அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றிகள்.. தொடருங்கள் தோழர் ..💐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.