Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வட கிழக்கில் பெண் தலைமைக் குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட கிழக்கில் பெண் தலைமைக் குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுமா?

இலங்கையில் வட கிழக்குப்பகுதியில் நேரடியாக இடம்பெற்ற போர் பல்வேறுபட்ட அரசியல்,சமூக,பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்து இன்றளவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல் ரீதியாக, உள ரீதியாக, உயிரிழப்பு ரீதியாக இன்றும் ஈடுசெய்யமுடியாத வடுக்களாகவே வடகிழக்கில் போர் தடம்பதித்துள்ளது.

ஒரு பெண் தனது குடும்பத்தின் தலைவன் இல்லாமல் வாழும் வாழ்க்கையை ‘பெண்தலைமை குடும்பவம்’ என்ற அடையாளத்துடன் அழைக்கிறோம். பெண் தலைமைக் குடும்பங்களாக கணவன் இறந்ததால் விதவையானவர்கள் கணவனால் விவாகரத்து செய்யப்பட்டு பெண் குடும்பங்கள் மற்றும் திருமணம் செய்து கணவனால் கைவிடப்பட்டோர் என்ற அடிப்படையில் வரையறை செய்யப்படுகின்றனர். இவ் நிலைகள் ஏற்பட இயற்கை மற்றும் மனித மனங்கள் காரணமாகவுள்ளது. இதை விட 2009ம் ஆண்டு வைகாசி மாதம் வரை ஏறக்குறைய 30 வருடங்களுக்கு மேல் இந்த நாட்டில் நிலவிய கொடிய யுத்தத்தால் வடக்குக் கிழக்கில் அதிகமானோர் விதவையாக்கப்பட்டனர். அவை தவிர 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, இயற்கை அனர்த்தம், இயற்கை மரணம் என பல காரணங்களால் விதவைகளாகி அனாதரவாக்கப்பட்டுள்ளர்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பெண்கள் தமது கணவனை இழந்து குடும்பத்தின் முழச் சுமையையும் தங்களே சுகமக்கும் கட்டாயத்தில் மிகவும் துன்பகரமான வாழ்க்கையை நடாத்திவருகின்றனர். உலகமே இன்று பெரும் சவாலை சந்திக்கும் ஒரு பிரச்சினையாக இவ் பெண்தலைமைக் குடும்பங்களின் அன்றாட வாழ்வியல் காணப்படுகின்றது.

இன்று உலக அளவில் 245 மில்லியன் பெண்கள் விதவைகளாக வாழ்கின்றனர் என்றால் அது தொடர்பாரக நாம் சிந்திக்கவேண்டியே உள்ளது. எமது நாட்டின் அயல் நாடான இந்தியாவில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 121 கோடி உள்ள நாட்டில் 5 கோடியே 55 இலட்சம் பேர் விதவைகளாக உள்ளமை எவ்வளவு தூரம் அந்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிய முடியும். அத்தோடு உழைக்கும் வர்க்கமான இளைஞர்படைக்கு போதிய வருமானமில்லதா தொழில்களாலும், பெண் தலைமை குடும்பங்கள் வறுமையாலும் பொருளாதார பாதிப்ப்புக்களை சந்திக்கும் நிலையை எதிர்கொள்கின்றனர்.

எமது நாட்டின் மொத்த சனத்தொகையில் 53 வீதமானோர் பெண்களாவர். இப் பெண்களில் 25 மாவட்டங்கள் அடங்கலாக நான்கு லட்சத்திற்கு மேற்பட்டோர் விதவைகளாக உள்ளனர். அதில் தமிழர்கள் வாழும் வடகிழக்குப் பகுதியில் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதவைகள் உள்ளதாக புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 30 வருட கால கொடிய யுத்தமே வட கிழக்கில் அதிகளவான பெண்கள் விதவைகளாக்கப்பட காரணமாகியது.

இவற்றை தவிர வடகிழக்கில் உள்ள பெண்களின் கணவன்மார் யுத்த காலத்திலும் அதன் பின்னரும் காணாமலாக்கப்பட்டு அவர் உயிருடன் உள்ளாரா? இல்லையா என்று எந்த முடிவுமற்ற நிலையில் வாழும் பெண்கள் அதிகம் உள்ளனர். இப் பெண்தலைமைக் குடும்பங்களில் பலர் தனிமையிலும், பலர் குழந்தைகளுடனும், பெற்றோர்களுடனும் இல்லங்களிலும் வாழ்ந்துவருகின்றனர். கணவனை இழந்ததால் குடும்பத்தினை தலைமையேற்கும் நிலையில் வேலையில்லா திண்டாட்டத்தினை சந்தித்து பணம் படைத்தவர்களின் ஆதிக்கத்தின் கிழ் வாழும் ஒரு துர்ப்பாகிய நிலையில் வாழும் சமூகமாக அவர்கள் உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையும் உலக வங்கியும் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் முல்லைத்தீவு மாவட்டம் மாற்றுத்திறனாளிகள், விதவைகள் மற்றும் போசாக்கக் குறைபாடு உள்ளவர்கள் அதிகமாக வாழும் மாவட்டமாக அடையாளம் காணப்பட்டது. வடக்குக் கிழக்கில் நடந்த யுத்தம் இறுதிக்கட்டம் வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் அதி உச்சம்பெற்று இடம்பெற்றதால் அதிக ஆண்கள் கொல்லப்பட்டனர், காணாமலாக்கப்பட்டனர், அங்கவீனமாக்கப்பட்டனர். இதனால் குடும்பத் தலைமை இல்லாமல் வாழ்வாதாரத்தில் வறுமை நிலையை சந்திக்கம் சூழலை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

பல்வேறு துயரங்களை இன்றைய காலத்தில் விதவைகள் சந்திப்பதை நாம் அறியும் போது அவை நமக்கு மிக வேதனையை ஏற்படுத்துகிறது. சில வருடங்களுக்கு முன் முல்லைத்தீவில் உள்ள மூங்கிலாறு பகுதியில் யுத்தத்தில் கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் வசித்துவந்த ஒரு பெண் இரவு வேளையில் தனித்திருக்கமுடியாத அச்சமான சூழலால் தனது உறவினர் வீடு சென்ற சமயத்தில் அவரது வீடு விசமிகளால் தீயிட்டு கொழுத்தப்பட்டது. இதனால் அவரது அனைத்து உடமைகளும் எரிந்து நாசமாகியது. இவ்வாறு வட கிழக்கில் பல அச்ச உணர்வுகளோடு பெண்தலைமைக் குடும்பங்கள் வாழ்வை நடாத்திச் செல்கின்றனர். அண்மையில் சொந்த நிலத்திற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிளவில் போராடிய 80 குடும்பங்களில் 30 குடும்பங்கள் பெண்தலைமை தாங்கும் குடும்பங்களேயாகும். அவர்கள் தமது சொந்த இடத்தினை பெற்றுக்கொள்ள மழை,குளிர்,பணி என பாராது பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடியது சுட்டிக்காட்டப்படவேண்டியதாகும்.

யுத்தத்திற்குப் பின்னர் வடக்கக்கிழக்கப் பகுதியின் கட்டமைப்புக்காக அரசாங்கம் பல மில்லியன் டொளர்களைக் கொண்டு குவித்த போதிலும் யுத்தத்தில் கணவரை, தந்தையை, தாயை, சகோதரத்தை இழந்த மற்றும் காணாமலாக்கப்பட்ட பெண் தலைமைக் குடும்பங்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக போதியளவு பயன்படுத்தப்படவில்லை. சொல்லப்போனால் யுத்தத்திற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கத்திடமும் வட கிழக்கில் காணப்படும் பெண்தலைமை குடும்பங்களை முன்னேற்றத்துக்காக ஒரு முறையான திட்டம் காணப்படவில்லை.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கூற்றுப்படி இலங்கையின் வட பகுதியில் இருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்களில் பெரும்பாலானோர் பெண்களை தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களை சேர்ந்தவர்களே 2015,2016ஆம் ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக வேலை தேடுகின்றனர். 2011ஆம் ஆண்டில் இத்தகைய பெண்களின் எண்ணிக்கை 300ஆக மட்டுமே இருந்தது. இது பின்னர் துரித வளர்ச்சிகண்டதை என மத்திய வங்கி புள்ளிவிபரம் வெளிக்காட்டுகிறது.

பெரும்பாலான விதவைகள் தொழில்வாய்ப்பின்மை, பாதுகாப்பின்மை, வறுமை, வன்முறைக்குள்ளாதல், பொருளாதாரச் சிக்கல், மோசமான சமூகப்பார்வை, அவர்களுக்கு குழந்தை இருந்தால் கல்வி,போசாக்கு,சுகாதாரம் போன்ற விடயங்களில் பொருளாதாரப் பிரச்சினையால் கவனிக்கமுடியாமை, உறவினர் மற்றும் பிறரின் உதவிகளை பல விடயங்களுக்கு நாடவேண்டிய சூழல் என சவால்கள் நிறைந்த வாழ்க்கையை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மரணம் வரை கண்கலங்கி சமூதாயபார்வையால் அடக்கி, ஒதுக்கப்படுபவர்களாகவும், சில ஆண்கள் தமது தேவைக்கு பயன்படுத்தி கைகழுவி விடும் நிலைக்கு தள்ளப்படும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகின்றனர்.
கலாசாரக் கட்டமைப்பால் பிணைக்கப்பட்டுள்ள வடகிழக்கில், பெண்தலைமை குடும்பங்கள் சுப காரியங்களிலும், நல்ல நிகழ்வுகளிலும் முன்னுரிமை இழக்கின்றனர். இதனால் அவர்கள் சமூகத்தில் பயமும் விரக்தியும் ஏற்பட்டு தமது பிள்ளைகளின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு வாழ்க்கையை பல போராட்டங்களுக்கு மத்தியில் கொண்டு செல்கின்றனர்.

விதவைகள் நலனை கருத்திற் கொண்டு மறுவாழ்வு பற்றியும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் புரிவதிலும் சமூகங்களில் உள்ள ஒரு சிலர் சிந்தித்து அதற்காக செயற்பட்டாலும் பலர் சமூகத்தின் மத்தில் வாழும் பெண் தலைமைகள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தாது சுயநலவாதிகளாகவே உள்ளனர். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், விவாகரத்தானோர் மீதான பாரம்பரிய சமூதாயப்பார்வையை நிறுத்தி முற்போக்கான மனநிலையோடு சிந்திக்கும் சமூதாயம் உருவாகி இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டும்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கின் பெண்தலைமைக் குடும்பங்கள் தமது ஒரு நாள் வாழ்வை கழிப்பதை வறுமை சவாலுக்குற்படுத்துகின்றது. இதனால் தம் வறுமையை போக்கும் ஒரு நம்பிக்கைளோடு புறப்பட்டு நுன்நிதி நிறுவனங்களிடம் அகப்பட்டுக்கொள்கின்றனர். இவ் நிதி நிறுவனங்கள் அவர்களின் உழைப்பையும் உடலையும் சுரண்டி உயிர்பறிக்கும் நிலைவரை கொண்டுசென்றுவிடுகின்றனர். காலத்திற்கு காலம் அரசியல் வாதிகளோ தேர்தல் அரசியலுக்காக அவர்களிடம் தேடிச்சென்று நிறைவேறா வாக்குறுதிகள் மூலம் அவர்களது வாக்குரிமைறை தன்வசப்படுத்துகின்றர்.

வட கிழக்கின் பெண்தலைமைக் குடும்பங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை முதலில் அந்ததந்த சமூகமே பொறுப்பெடுத்து கட்டமைக்க வேண்டும். அவர்களது சகோதரங்கள் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு எப்போதும் நம்பிக்கையளிப்பவர்களாக மாறவேண்டும். ஒவ்வொரு பிரதேச செயலகங்களும் தம் எல்லைக்குள் உள்ள பெண்தலைமைக் குடும்பங்களின் எண்ணிக்கையை மாதாந்தம் சரிபார்ப்பதேடு அவர்களுக்கான வாழ்வாதார முன்னேற்றத்திற்கான புத்தாக்கத் திட்டங்களை தயாரித்து அவற்கை அன்றாடம் அவதானித்து முன்னேற்ற அறிக்கை மூலம் பகுப்பாய்வு செய்து வீழ்ச்சிய நிவர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கம் நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். விசேடமாக பெண்தலைமைக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கான கல்வி மற்றும் சுகாதாரம் போக்குவரத்து போன்ற துறைகளில் விசேட சலுகைகளை வழங்கும் திட்டத்தை தேசிய கொள்கையாக மாற்ற அரசியல் ஒன்றினைவதேடு பெண்தலைமைக் குடும்பங்களுக்கான விசேட சமூகப்பாதுகப்புத் திட்டங்களும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறான முற்போக்கான திட்டங்களை நாடளாவிய ரீதியில் கருத்துக்கேட்டு அவற்றை தேசிய கொள்கையாக மாற்ற அரசாங்கம் முன்னவரவேண்டும்.

ஒவ்வொரு சமூகத்திலும் வாழும் பெண்தலைமைக் குடும்பங்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார, உளவியல் பிரச்சனைகள் தீர்ககப்பட்டு அவர்கள் சமூகத்தின் மத்தியில் கௌரவமாகவும் மகிழ்ச்சியாகவும் உடல்,உள ஆரோக்கியத்துடன் வாழும் நிலையை நம் சமூகத்திலிருந்து உதவிக்கரம் கொடுத்து அதிலிருந்தே அரசியல் உயர்மட்ட கொள்கை வகுப்புவரை செல்வதே சிறந்ததாகும்.

கு.பிரஷாந்த் B.A (Hons)
அரசறிவியல் சிறப்புக் கற்கை
கிழக்குப்பல்கலைக்கழகம்,
இலங்கை.

https://www.meenagam.com/வட-கிழக்கில்-பெண்-தலைமைக/

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

திருமணமான பெண்களுக்கு பாதுகாப்பானது என கருதப்பட்ட யாழ்ப்பாண தேசவழமை சட்டம் கூட ஆண்கள் காணமால் போன பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு இப்பொழுது ஏற்புடையதா என சிலசமயங்களில் நினைப்பதுண்டு.. 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.