Jump to content

தலிபான் சகோதரர்கள் மீது ‘பாசத்தைப் பொழியும்’ கனடிய அமைச்சர் மரியம் மொன்செஃப்!

Recommended Posts

ஆப்கானிஸ்தான் | தலிபான் சகோதரர்கள் மீது ‘பாசத்தைப் பொழியும்’ கனடிய அமைச்சர் மரியம் மொன்செஃப்!

ஒரு சிறு அலசல்
மாயமான்

ட்றூடோவின் அமைச்சரவையில் பெண்கள் மற்றும் பாலியல் சமத்துவ விவகாரங்களுக்கான அமைச்சர் மரியம் மொன்செஃப் தலிபான்களை ‘எமது சகோதரர்கள்’ எனக்கூறிய விடயம் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் ஊடகங்களால் எடுத்துக் கொடுக்கப்பட்ட இந்த அஞ்சல் தடியைக் கொண்டோடுவதற்கு எதிர்க்கட்சிகளிடம் ஆட்கள் இல்லை எந்பது வேறு விடயம்.

நாக்கு வழுக்குவதால் இப்படிப் பல தடவைகள் பல அரசியல்வாதிகள் ஊடகங்களினால் போட்டுக்கொடுக்கப்பட்டு எதிர்க்கட்சிகளால் மொங்கப்பட்டுப்பட்டிருந்தாலும் ‘out of context’ எனக் கூறிப் பலரும் தப்பி விடுவார்கள். ஆனால் மரியம் மொன்செஃப் விடயம் கொஞ்சம் வித்தியாசமானது.

மரியம் மொன்செஃப் ஆப்கானிஸ்தானிலிருந்து கனடாவுக்கு அகதியாக வந்தவர். அதில் ஒரு திருத்தம்: அவர் தமது குடும்பத்தினருடன் ஈரானில் அகதி முகாமிலிருந்து பின்னர் கனடாவுக்கு வந்தவர். பின்னர் ஒருவாறு கனடிய பாராளுமன்றத்துக்குத் தேர்வாகி, பாலியல் சமத்துவவாதியான ட்றூடோவின் அமைச்சரவையில் அமைச்சராகப் பட்டம் சூட்டப் பெற்றவர்.

கன்சர்வேட்டிவ் அரசு கொண்டுவந்த குடிவரவாளருக்கு எதிரான பல சட்டங்களில் முக்கியமான ஒன்று – முறையாக நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பின் – மரியம் மொன்செஃப் இப்போது காபுல் விமான நிலையத்தில் குழந்தைகளுடனும், பெட்டி படுக்கைகளுடனும் நின்றிருக்க வேண்டியவர். அந்த வகையில் அவர் ட்றூடோவுக்கு எப்போதும் கடமைப் பட்டவர்.

ஹார்ப்பரின் காலத்தில் நடைமுறைக்கு வந்த ஒரு சட்டத்தின்படி, ஒருவர் பொய் சொல்வதன் மூலம் கனடிய குடிவரவுத் தகமையைப் பெற்றிருப்பாரானால் கனடியக் குடிமகனாக (மகளாக) இருந்தாலும், அவரது குடியுரிமை பறிக்கப்பட்டு நாடுகடத்தப்பட வேண்டியவர்.

இதற்கும் மரியத்துக்கும் என்ன சம்பந்தம்?. அமைச்சர் மொன்செஃப் தனது கனடிய குடியுரிமை விண்ணப்பத்தில் தான் தனது குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்ததாக இமிகிரேசனுக்குக் ‘கதை’ விட்டிருக்கிறார் (நாம் செய்யாததா?). ஹார்ப்பரின் சட்டப்படி மொன்செஃப்பின் குடியுரிமை பறிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டிருக்க வேண்டும். ஏதோ புண்ணியவான் ட்றூடோ புகுந்து விளையாடி அவரைக் காப்பாற்றியிருந்தார். மீதி கறுப்புத் திரையில்…

அப்படியாகப்பட்ட மரியம் மொன்செஃப் தலிபான்களைச் சகோதரர்கள் என்று ஊடக சந்திப்பின்போது கூறியதைக் கனடிய ஊடகங்கள் நோண்டத் தொடங்கியுள்ளன. “அது கலாச்சார வழக்குடன் தொடர்புடையது’ எனத் தற்போது லிபரல் war room, damage control நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த வேளையில் மரியம் மொன்செஃப்பை முன்னுக்குத் தள்ளுவதன் மூலம், வெற்றிக்களிப்பில் துவண்டுபோயிருக்கும் தலிபான்களை உற்சாகப்படுத்தி, காபுலில் மாட்டுப்பட்டிருக்கும் ஆப்கான் நண்பர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் கனடாவுக்கு எடுப்பிக்க ட்றூடோ திட்டமிட்டிருக்கலாம். எனவே இந்த ‘சகோ’ வார்த்தை திட்டமிட்ட பாசாங்கு எனவும் நாம் பார்க்க வேண்டும். அல்லது தலிபான் ஆட்சியை அங்கீகரிப்பதன் மூலம் கனடாவுக்கு வருவதற்காக எல்லைகளில் கூடாரமடித்திருக்கும் ஏகப்பட்ட அகதிகளை ‘நீங்களே வைத்திருங்கள்’ என தலிபான்களைக் கெஞ்சும், நேசநாடுகள் போடும் திட்டத்தின் ஆரம்பவுரையாகவும் அது இருக்கலாம். மரியத்துக்கு மட்டுமல்ல கனடியர்கள் எல்லோருக்கும் தலிபான்கள் சகோதரர்கள் என்பதாகவே இந்த உரையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போ இலங்கை அரசாங்கத்துடன் பேச முற்படும்போது நமது கரி ஆனந்தசங்கரி மூலம் ஊடகங்களுக்கு ஏன் அறிக்கை விடவில்லை என நீங்கள் கேட்பது புரிகிறது. மறுமொழி: தலிபான்கள் terrorists (இதுவரை), இலங்கை அரசு நண்பன். போதுமா?

ஊடகங்கள் முன்னிலையில் தலிபான்களுக்கு மரியம் விடுத்த அறைகூவல் இதுதான்:

“I want to take this opportunity to speak with our brothers, the Taliban. We call on you to ensure the safe and secure passage of any individual in Afghanistan out of the country. We call on you to immediately stop the violence, the genocide, the femicide, the destruction of infrastructure, including heritage buildings,”

இப்பேச்சைத் தொடர்ந்து “கனடிய அரசு தலிபான்கள் மீது மென்போக்கைக் கடைப்பிடிக்கிறதா என அவரிடம் கேட்டபோது, “அப்படியில்லை” என அவர் தெரிவித்திருந்தார்.

அதே வேளை தலிபான்களைத் தாம் அங்கீகரிக்கப் போவதில்லை என கனடியப் பிரதமர் ட்றூடோ தலையிலடித்துச் சத்தியம் செய்கிறார். சிரியப் பிரச்சினையால் அகதிகளால் நிரம்பி வழியும் நேசநாடுகள் இன்னுமொரு அகதி அலையால் அள்ளுப்படுவதை விரும்பவில்லை எந்பது எதிர்பார்க்கக் கூடியது தான். எனவே தலிபான்களுடன் இணக்கிப்போய் அவர்களைக் கண்டும் காணாமலும் அங்கீகரித்து இப்படியான ‘சகோதர பாசத்தை’ அள்ளி இறைப்பதுவே அவர்கள் கற்றுக்கொண்ட ஒரே ராஜதந்திரம். மற்றப்படி எல்லாமே முதலைக் கண்ணீர்.

இப்படியான நடிப்பிற்கு ஏற்ற பலர் ட்றூடோ அரசில் இருக்கிறார்கள். மரியம் மொன்செஃப் அவர்களில் ஒருவர் மட்டுமே.

வழக்கம் போல ட்றூடோவின் வாக்குச் சிலம்பத்துக்கு முன்னால் நின்றுபிடிக்குமளவுக்கு கனடிய எதிர்க்கட்சியில் ஆட்கள் இல்லை (இதை நாக்கு வழுக்கி ‘ஆண்கள் இல்லை’ என எடுத்துக்கொள்ளக் கூடாது!)

இன்னும் பல அதிரடித் தேர்தல் ‘சங்கதிகளை’ எதிர்பாருங்கள்…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடியும் சகோதர பாசம் விட்டுப் போகுமே?

அடுத்தது ஜஸ்டின் ட்றுடோ செப்டெம்பர் 21 பிரதமர் பதவியில் இருந்து தூக்கியெறியப்படுவார். கனடாவுக்குள் பயங்கரவாதிகளின் குடியேற்றங்களை இனியும் அனுமதிக்கமுடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nunavilan said:

“I want to take this opportunity to speak with our brothers, the Taliban. We call on you to ensure the safe and secure passage of any individual in Afghanistan out of the country. We call on you to immediately stop the violence, the genocide, the femicide, the destruction of infrastructure, including heritage buildings,”

வெள்ளைக்காரர் நாடுகளில் பாசத்தில் மட்டுமல்ல, முன் பின் தெரியாதவன் , மோதலில் ஈடுபவர்கள்,கோபத்தில் ஒருவர் தவறை சுட்டிகாட்டும்போதும் பிறதர் என்று அழைப்பது சாதாரண வழக்கு சொல்.

மரியம் சொன்னது என்னவென்றுதான் பார்க்கவேண்டும், அவர் தலிபான்களை பாசம் பொங்க அழைதத்தா தெரியவில்லை, சகோவை போய் பிளீஸ் வன்முறை,இனபடுகொலைகள்,பெண்கொலை மற்றும் கட்டுமானங்களை இடிச்சு தள்ளுறத பிளீஸ் நிறுத்து என்று யாராவது கேட்பார்களா?  

அது தலீபான்களை மறைமுகமாக கேவலபடுத்தியதாகவே தெரிகிறது,

உலகசெய்திகளை சும்மா அலசி ஆராய்ஞ்சு கலாஞ்சி தள்ளும் நமது ஊடகவியலாளர்கள் வழமையாக அனுப்பிவிடும் சக்கை லொறிகளில் இதுவும் ஒன்று என்றுதான் நினைக்கிறேன்.

இந்த லட்சணத்தில இன்னும் அதிரடி சங்கதிகளை எதிர்பார்க்கட்டாம்ல, இன்னும் ஓவரா உருட்டிவிட போகினம் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2021 at 13:06, valavan said:

உலகசெய்திகளை சும்மா அலசி ஆராய்ஞ்சு கலாஞ்சி தள்ளும் நமது ஊடகவியலாளர்கள் வழமையாக அனுப்பிவிடும் சக்கை லொறிகளில் இதுவும் ஒன்று என்றுதான் நினைக்கிறேன்.

சரியகச் சொன்னீர்கள்.
ஆனால் கனேடிய பிரதமர் ரூடோ இருக்கிராரே அவர் தாடிவைத்து தலிபான்கள் உடை அணியகூடியவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படைகள் விலகல் தொடங்கியவுடன் பிபிசி க்கு அழுதழுது பேட்டி கொடுத்தவர் இவரா ?

Link to comment
Share on other sites

கனடாவின் அமைச்சர் ஒருவர் கேகேகே(kkk )எனது சகோதரர்கள் என்று சொல்லி இருந்தால் என்ன நடந்திருக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில் அமெரிக்க பிரதர்ஸ்சும், தலிபான் பிரதர்சும் ஒன்றாகி, ஐஎஸ்சுக்கு எதிராக போராடினாலும் ஆச்சரியமில்லை.

பிறகு நேட்டோ அங்கதுவ நாடுகள் எல்லாம் தலிபான் பிரதர்சோடு கம்பளத்தில் உக்காந்து பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டி வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சரியகச் சொன்னீர்கள்.
ஆனால் கனேடிய பிரதமர் ரூடோ இருக்கிராரே அவர் தாடிவைத்து தலிபான்கள் உடை அணியகூடியவர்.

இதே போல் தான் ரூடோ அவர்கள் தமிழர்களின் பொன் நாள் தைப்பொங்கல் வாழ்த்து சொன்ன போதும் பலர் கொதித்தெழுந்தார்கள்.

ராத்திக்கா இப்போதும் அரசியலில் இருக்கின்றாரா?  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/8/2021 at 06:30, வாலி said:

எப்பிடியும் சகோதர பாசம் விட்டுப் போகுமே?

அடுத்தது ஜஸ்டின் ட்றுடோ செப்டெம்பர் 21 பிரதமர் பதவியில் இருந்து தூக்கியெறியப்படுவார். கனடாவுக்குள் பயங்கரவாதிகளின் குடியேற்றங்களை இனியும் அனுமதிக்கமுடியாது

மீண்டும் லிபரல் ஆட்சி அமைவதற்கே வாய்ப்புக்கள் அதிகம். பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம் ஆனால், ஆட்சி மாறுவதற்கு சாத்தியங்கள் மிகவும் குறைவு.

Link to comment
Share on other sites

12 minutes ago, goshan_che said:

போற போக்கில் அமெரிக்க பிரதர்ஸ்சும், தலிபான் பிரதர்சும் ஒன்றாகி, ஐஎஸ்சுக்கு எதிராக போராடினாலும் ஆச்சரியமில்லை.

பிறகு நேட்டோ அங்கதுவ நாடுகள் எல்லாம் தலிபான் பிரதர்சோடு கம்பளத்தில் உக்காந்து பேரிச்சம் பழம் சாப்பிட வேண்டி வரலாம்.

ஏற்கனவே பின்லாடனின் தந்தைக்கு அமெரிக்கா செங்கம்பளம்  விரிச்சிருக்கு. பேரிச்சம்பழம் சாப்பிடுவது எல்லாம்  ஜு ஜு பி.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிபிசி தேர்தலுக்கு முந்தய கணிப்பில் பழைமைவாத கட்சி தாராளவாத கட்சியைவிட சற்று முன்நிலைக்கு வந்துள்ளது. கொவிட் கொடுப்பனவுகளை மட்டும் நம்பியே ட்ருடோ தேர்தலில் இறங்கியுள்ளார். இவரிடம் மீண்டும் ஆட்சி போனால் கனடாவை யாருமே காப்பாற்ற முடியாமல் போய்விடும். 

https://newsinteractives.cbc.ca/elections/poll-tracker/canada/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

ஏற்கனவே பின்லாடனின் தந்தைக்கு அமெரிக்கா செங்கம்பளம்  விரிச்சிருக்கு. பேரிச்சம்பழம் சாப்பிடுவது எல்லாம்  ஜு ஜு பி.😃

தந்தைக்கு மட்டுமா, பின்லேடனே ஒரு காலத்தில் ராஜா வீட்டு கண்ணு குட்டிதானே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவ்கன் அவலங்களோ அல்லது கொரனா இடர்களோ கனேடிய பிரதமர் உருவாக்கியவை அல்ல. அவர் மக்கள் மீது பெருந்தன்மையுடன், கரிசனையுடன் செயற்பட்டு உள்ளார்.

வேறு கட்சிகள் இந்த விடயங்களை இவரை விட சிறப்பாக கையாண்டு இருப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை.

அகதிகளை அரவணைப்பதில் கனடா உலகில் முன்னோடியாக திகழ்கின்றது. இலங்கை தமிழ் மக்கள் மட்டுமே அகதிகள் அல்ல.

அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போது வாய் தடுமாறுவது ஒன்றும் புதிய விடயம் இல்லை.  

Link to comment
Share on other sites

இம்முறையும்  ஜஸ்டின் ட்ரூடோ, புதிய ஜனநாய கட்சியின் உதவியுடன் ஆட்சி அமைப்பார். ஒன்றோடியோ மாகாணமும், அட்லாண்டிக் மாகாணங்களும் அவருக்கு வாக்குகளை அள்ளி வழங்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆவ்கன் அவலங்களோ அல்லது கொரனா இடர்களோ கனேடிய பிரதமர் உருவாக்கியவை அல்ல. அவர் மக்கள் மீது பெருந்தன்மையுடன், கரிசனையுடன் செயற்பட்டு உள்ளார்.

வேறு கட்சிகள் இந்த விடயங்களை இவரை விட சிறப்பாக கையாண்டு இருப்பார்கள் என்று சொல்வதற்கு இல்லை.

அகதிகளை அரவணைப்பதில் கனடா உலகில் முன்னோடியாக திகழ்கின்றது. இலங்கை தமிழ் மக்கள் மட்டுமே அகதிகள் அல்ல.

அரசியல்வாதிகள் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போது வாய் தடுமாறுவது ஒன்றும் புதிய விடயம் இல்லை.  

நீங்கள் நியாயத்த கதைக்கேக்க நாங்கள் என்னத்த பறையிறது!

இலங்கை தமிழ் அகதிகளுடன் இஸ்லாமியப் பயங்கரவாத நாடுகளில் இருந்து கனடா மற்றும் அய்ரோப்பிய நாடுகளுக்கு வரும் அகதிகளை ஒரே பார்வையில் வைத்து பார்க்கக்கூடாது.  எந்தவொரு நாட்டிலும் அடைக்கலம் தந்த  அந்நாட்டுக்கு நன்றியில்லாமல் மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் தமிழ் அகதிகள் ஈடுபடுவதில்லை. இதன் அடிப்படையில் ஆப்கான் மற்றும் சிரியா போன்ற நாடுகளில் இருந்து பயங்கரவாதிகளை கனடா இறக்குமதி செய்துள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாலி said:

இந்த விடயத்தில் வாலி கனடாவில் இருக்கும் என் பல உறவுகள் போல "முஸ்லிம்" எதிர்ப்பு நிலையினால் இப்படி பேசுகிறார் என நினைக்கிறேன். 

கனடா நிலை தெரியவில்லை. அமெரிக்காவில் ஆப்கான் வழி வந்த இஸ்லாமியர்களால் பயங்கரவாத செயல்கள் பெரிதாக நிகழவில்லை, யாரும் கொல்லப் பட்டிருப்பதாக தகவல் இல்லை -அமெரிக்காவில் ஆப்கான் குடியேறிகளால் கொல்லப் பட்டவர்களை விட ( "0") வெள்ளையின மேலாண்மை வாதிகளால் கொல்லப் பட்டோர் அதிகம் என்றே ஒரு கணக்கெடுப்புச் சொல்கிறது! 

 நேரடியாக யுத்தத்தினால் பாதிக்கப் படாமலே அகதியாக ஈழத்தமிழர்கள் பெருந்தொகையானோர் மேற்கு நாடுகளுக்கு வரும் போது, இவ்வளவு கோரங்களால் பாதிக்கப் பட்ட ஆப்கான் அகதிகளுக்கு தமிழர்களை விட முன்னுரிமை வழங்குவது நியாயமானது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கான் நாட்டில் இஸ்லாம் எனும் பெயரில் அடிப்படைவாதச் சட்டங்களே அச்சமூகத்தை ஒழுங்குபடுத்துகிறது,
இதில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அடக்கம். கடந்த தொண்ணூறுகளிலிருந்தே ஆப்கான் பெண்கள் இஸ்லாமிய அடிப்படைவாத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி வருகினும் அவர்கள் திருமணம் செய்து குழந்தைகளைப்பெற்று அவர்களை வளர்க்கும் பொறுப்பிலிருந்து விலகவில்லை. 

அதாவது கிட்டத்தட்ட முப்பதுவருடங்களுக்கு மேலான இந்த இக்கட்டு நிலையிலிருந்து தப்பிக்கொள்ள அப்பெண்கள் தங்கள் பிள்ளைகளை ஒரு கருவியாகப் பாவிக்கவில்லை மாறாக அவர்கள சரி எது தப்பு எது எனக்கூறு வளர்க்காமல் இஸ்லாமிய அடிப்படைவாதக் கோட்பாடுகளை அவர்களும் பின்பற்றும்விதமாகவே வளர்த்துவிட்டுள்ளார்கள் 

இன்று தெருவில் ஆயுதங்களுடன் தலிபான் எனக்கூறுக்கொண்டு திரியும் ஆண்கள் இவர்களே அனைவரும் இருஒஅதிலிருந்து முப்பது வயதுக்குள் உள்ளடக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களே.

ஆகவே உலகம் இவர்களை அப்படியே கைவிடுவதே சரி. அதைவிடுத்து அங்கு போய் லித்தியம் கிண்டுகிறன் என வெளிக்கிடுபவர்கள் வெளிக்கிடட்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.