Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

சமர்க்களங்களில் பயன்படுத்தப்படும் ஊர்திகளுக்கான தமிழ்ச்சொற்கள்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்+

main-qimg-bfd5d3014b85d06bf733ba2a92f6e2ac

 

 • சமர்க்களங்களில் பயன்படுத்தப்படும் ஊர்திகளுக்கான தமிழ்ச்சொற்கள் :

 

 1. ஏவுகணை காவி - missile carriers
 2. உந்துகணை காவி - rocket carriers (weapon)
 3. உந்துகணை சேணேவி- rocket artillery
 4. சேணேவி - Artillery | ஆக்கியோன்: திரு. திருத்தம் பொன் சரவணன்
 5. உந்துருளி - motorbike
 6. கவசச் சண்டை ஊர்தி - Armoured fighting vehicle
  1. சண்டை - இருவர்/இரண்டு செய்யும் போர்..
 7. குதிரையிழு சுடுகலன் - Tachanka
 8. போரூர்தி- war wagon
 9. காப்பூர்தி - protected vehicle
  1. இள பேரரையர் சரா ஆனையிறவில் செலுத்திய ஊர்தி இவ்வகையே.
 10. பொநோவகம் - jeep
  1. பொது நோக்க வகம் என்பதன் சுருக்கம்
 11. தண்டவாளச் சுடுகலன் - railway gun
 12. கவச மகிழுந்து - armoured car
 13. தானே பிலிற்றுந்திய வானூர்தி எதிர்ப்பு ஊர்தி - self-propelled anti-aircraft vehicle
 14. தானே-பிலிற்றுந்திய சேணேவி - self-propelled artillery
 15. பல்குழல் உந்துகணை செலுத்தி - multi-barrel rocket launcher
 16. தானே பிலிற்றுந்திய பல்குழல் உந்துகணை செலுத்தி - self propelled multi-barrel rocket launcher
 17. தானே பிலிற்றுந்திய தெறோச்சி - Self-propelled howitzers
 18. சிறு தகரி- Tankette
 19. தகரி- tank
 20. இலகு தகரி- light tank
 21. நடுத்தரத் தகரி- medium tank
 22. கன தகரி- heavy tank
 23. முதன்மைத் தகரி- main tank
 24. மீக கனத் தகரி- super heavy tank
 25. தீயுமிழ் தகரி- flame tank
 26. காலாட்படைத் தகரி- infantry tank
 27. வலசைத் தகரி- cruiser tank
 28. வேவூர்தி- Reconnaissance vehicle
 29. கவச வேவூர்தி - Armoured Reconnaissance vehicle
 30. வேவு மகிழுந்து- Scout car
 31. உள்ளூர் காவலூர்தி- internal security vehicle
 32. செம்மைப்படுத்தப்பட்ட சண்டை ஊர்தி- improvised fighting vehicle
 33. சுடுகலன் சாகாடு- small vehicles like pickups carrying guns
 34. கவச பாரவூர்தி- armoured truck
 35. சுடுகலன் பாரவூர்தி- gun truck
 36. கவச ஆளணி காவி- armoured personnel carrier
 37. படைக்காவி - troop carrier
  1. 'படையினர் காவி ' என்பதன் சுருக்கமே படைக்காவி ஆகும். இது துருப்புக்காவி என்ற வேற்று மொழி கலந்த சொல்லிற்கு பகரமாக்கப்பட்ட சொல்லாகும்.
 38. காலாட்படை சண்டை ஊர்தி- infantry fighting vehicle
 39. காலாட்படை நகர்திறன் ஊர்தி - infantry mobility vehicle
 40. காப்பாற்றப்பட்ட சுற்றுக்காவல் ஊர்தி - protected patrol vehicle
 41. கவசக் காவலூர்தி- armoured security vehicle
 42. இலகு தந்திர பன்னோக்கு ஊர்தி- light tactical multi-role vehicle
 43. ஈரூடக ஊர்தி- amphibious vehicle
 44. கண்ணிவெடி-தடுப்பு, பதிதாக்குதல்-காப்பாற்றப்பட்ட காலாட்படை நகர்திறன் ஊர்தி - Mine-resistant, ambush-protected infantry mobility vehicle
 45. கவசப் பொறியியல் ஊர்தி - armoured engineering vehicle
 46. உடைக்கும் ஊர்தி- breaching vehicle
 47. கவச இடிவாருகம் ( இடித்து வாரும் ஊர்தி)- armoured bulldozer
 48. கவச மீட்சி ஊர்தி- armoured recovery vehicle
 49. கவச ஊர்தி-செலுத்தப்படும் பாலம் - armoured vehicle-launched bridge
 50. கவச கண்ணிவெடி அகற்றல் ஊர்தி- armoured mine clearing vehicle
 51. தாக்குதல் உடைப்பம் ஊர்தி - assault breacher vehicle
 52. பாரிய கவச சண்டைப் பொறியியல் ஊர்தி மற்றும் பக்கம் காவி - Heavily armoured combat engineering vehicle and section carrier
  1. பக்கம் - section
 53. பொறியியலாளர் சதள ஊர்தி - Engineer Squad Vehicle
 54. கணையெக்கி காவி- mortar carrier
 55. தகரி நாசகாரி- tank destroyer
 56. கவசத் தொடர்வண்டி- armored train
 57. சண்டை இசிவூர்தி- Aerosani/ Aerosled
 58. சேணேவி இழுபொறி- artillery tractor
 59. தெறோச்சி - howitzers
 • தெறு+ ஓச்சு + இ
  • தெறு- சுடுதல்
  • ஓச்சு- எறிதல், செலுத்துதல், பாச்சுதல், உயர்த்துதல் , தூண்டி விடுதல்
  • இ- விகுதி

அதாவது எறிகணையினை சுட்டு மிகக் கூடிய தொலைவிற்கும் அதிக அளவிலான உயரத்திற்கும் செலுத்துத்தும் ஓர் படைக்கலம் என்று பொருள் படும்.

LTTE howitzer வகை-83 122மிமீ தெறோச்சி & வகை-66 152 மிமீ தெறோச்சி.jpg

 


 • பிற்சேர்க்கை:-

MORTAR- கணையெக்கி

main-qimg-cb31ee1f06c21aa658303ca63f2ba434-mzj

MORTAR என்னும் ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்சொல்லினை உருவாக்கித் தந்த திரு திருத்தம் பொன் சரவணன் (Thiruththam Pon Saravanan) அவர்கட்கு மிக்க நன்றி

 • கணையெக்கியானது எறிகணைகளை எக்கி ஏவும் ஆற்றல் வாய்ந்தது. ஆதலால் 'எறிகணை' என்னும் சொல்லில் உள்ள 'கணை' என்னும் விகுதியையும் 'எக்குதல்' என்னும் சொல்லினை எக்கி என்று மாற்றி இரண்டையும் இணைத்து

கணை+எக்கி = கணையெக்கி

என்று உருவாக்கப்பட்டுள்ளது. எக்குதல் என்னும் சொல்லுக்கு,

-மேலே செல்ல வீசுதல்

-உள்ளிழுத்தல்

-தாக்கி யூடுருவுதல்

ஆகிய பொருட்கள் உள்ளன. இவை mortar செய்யும் அத்தினை காரியத்தினையும் குறிக்கிறது. அதாவது மோட்டார் என்னும் ஆய்தமானது எறியங்களை உயரத்திற்கு செலுத்துவதில்லை ; மாறாக மிக குறுகிய தொலைவிற்கு மட்டுமே செலுத்துகிறது ( கூடியது 4.5கி.மீ). மேலும் அது மனித வலு இல்லாமல் தானகவே எக்கி எறியத்தினை செலுத்துகிறது. அந்த எறிகணையனது எதனையும் தாக்கி ஊடறுத்துச் செல்லும் வலிமை வாய்ந்தது. ஆகவே இச்சொல்லானது mortar என்னும் இங்கிலீசுச் சொல்லுக்கான சரியான தமிழாக்கமாகும்.

 • கூடுதல் செய்திகள்:

 


உசாத்துணை:

படிமப்புரவு-

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

 • நன்னிச் சோழன் changed the title to சமர்க்களங்களில் பயன்படுத்தப்படும் ஊர்திகளுக்கான தமிழ்ச்சொற்கள்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.