Jump to content

தமிழர்களின் பெயரில் விடுதலைப் புலிகளின் செயலால் வெட்கி தலை குனிகிறேன்! சுமந்திரன் பகிரங்கம்

Recommended Posts

14 minutes ago, nunavilan said:

முள்ளிவாய்க்காலில் நடந்தவை இனப்படுகொலை என சுமந்திரனால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?? 

10 hours ago, பெருமாள் said:

இனப்படுகொலையை சரியான ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும் என பல தடவைகள் நான் சொல்லியிருக்கிறேன். அதையும் திரிபுபடுத்தி இனப்படுகொலை நடக்கவில்லையென நான் சொல்வதாக தெரிவிக்கிறார்கள்.

அப்படியல்ல இனப்படுகொலை நடந்தது. ஆனால் அது நிரூபிப்பதற்கு மிகவும் கடினமான சர்வதேச குற்றம்.

இனப்படுகொலை நடந்ததென சொல்லி சர்வதேசத்தை ஏற்றுக் கொள்ள வைக்க முனைகின்ற நாங்கள் இனசுத்திகரிப்பு நடந்தது என்பதை மறுத்தால் சர்வதேசம் ஒருபோதும் எங்களை ஏற்றுக் கொள்ளாது.

இனசுத்திகரிப்பு நடந்தது என்பது வெளிப்படையாக தெரிகின்ற ஒரு விடயம். நான் இன்னொரு உதாரணத்தையும் கூறுகிறேன்.

2007ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த போது திடீரென ஒரு நாள் அதிகாலையில் கொழும்பில் விடுதிகளில் தங்கியிருக்கின்ற தமிழர்களை வெளியேற்றுமாறு ஒரு பணிப்புரையை வழங்கி பேருந்துகளிலே எல்லாரும் ஏற்றப்பட்டு வடக்கிற்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

அன்றைக்கே நாங்கள் உடனடியாக ஒரு வழக்கு தாக்கல் செய்து அன்று காலையிலேயே பத்து மணிக்கு அதை தடுத்து நிறுத்துகின்ற ஒரு உத்தரவை நான் பெற்றிருந்தேன். வவுனியாவிற்கு பேருந்துகள் போய் சேருவதற்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டு திரும்பவும் அவர்கள் கொண்டு வரப்பட்டார்கள்.

அது குறித்து சர்வதேசத்திலே மிக மோசமான விமர்சனங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக எழுந்த காரணத்தினாலே அப்போது பிரதமராக இருந்த ரட்ண சிறி விக்ரமநாயக்க நாடாளுமன்றத்திலே மன்னிப்பு கோரினார்.

இலங்கையிலேயே ஒரு பிரதம மந்திரி மக்களிடம் மன்னிப்பு கோரியது அது ஒரு தடவை. ஏன் அவ்வாறு மன்னிப்பு கோரினார் என்றால் அது ஒரு இனசுத்திகரிப்பிற்கான நடவடிக்கை என்று நாங்கள் நீதிமன்றத்திலே சொல்லியிருந்தோம்.

உலக நாடுகள் அதனை ஏற்றிருந்தன. அங்கே நடந்தது என்ன? கொழும்பிலே வாழ்ந்த அத்தனை தமிழர்களையும் வெளியேற்றவில்லை. குறித்த சிறிய எண்ணிக்கையான விடுதிகளிலே இருந்தவர்களை வெளியேற்றியதையே இனசுத்திகரிப்பு என்று சர்வதேசம் சொல்லியிருக்கிறது.

அது தான் இனசுத்திகரிப்பிற்கான வரைவிலக்கணமாக இருந்தது. ஆனால் இலங்கையிலே வடக்கிலே நடந்தது முற்றுமுழுதாக, பரம்பரையாக வாழ்ந்துவந்த ஒருவரையும் விடாமல் அனைத்து முஸ்லிம்களையும் வெளியேற்றியது இனசுத்திகரிப்பு.

அது இல்லையென்று சொன்னால் ஒன்று சட்டம் தெரியாதவராக இருக்க வேண்டும். அதற்கு பிறகு என்னை சட்டத்தரணியென்று அழைக்க முடியாது. சர்வதேச குற்றங்களிலே இன்னொரு மோசமான குற்றம் இனசுத்திகரிப்பு.

ஆகவே அந்த குற்றம் தமிழ் மக்களின் பெயரினாலே நடத்தப்பட்டது. இதனாலேயே நான் வெட்கித்தலை குனிகிறேன் என பல தடவைகள் சொல்லியிருக்கிறேன். அதையே திரும்பவும் சொல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/sumanthiran-interview-1630327520

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சுமந்திரனுக்கு தன் வேலை பகுப்பு என்ன என்பதில் ஆரம்பம் முதலே தடுமாற்றம்.

நீங்கள் நீதிபதி அல்ல சுமந்திரன்.

நாம் தேர்வு செய்து அனுப்பிய எம்பி. அதாவது நம் தரப்பு வக்கீல்.

எமது வக்கீலாக நீங்கள் எங்கள் தரப்பு நியாத்தை மட்டும்தான் கதைக்க வேண்டும்.

முஸ்லீம்கள், சிங்களவர் தரப்பு நியாயத்தை அவர்கள் தரப்பு வக்கீல்கள் போதிய அளவு கதைப்பார்கள்.

இல்லை நான் எல்லா தரப்பு நியாயத்தையும் கதைப்பேன் என்றால் - நீங்கள் தமிழர் தரப்பின் வக்கீல்/பிரதிநிதி என்ற பதவிநிலைய (எம்பி) துறந்து விட்டு, ஒரு சட்ட வல்லுனராக கருத்து சொல்லுங்கள்.

கோசான்… மிகச் சரியாக சொன்னீர்கள். 👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சுமந்திரனின் கருத்தைப் பார்க்கும்போது எனக்கு குணா கவியழகன் அவர்கள் சொன்னது ஞாபகம் வருகிறது.

இதைக் கேளுங்கோ... தொடர்ந்து...

  • கவனி: வஞ்சகர்களுக்கு நான் மரியாதை கொடுப்பதில்லை. (கருணா கூட்டம், டக்லஸ் போன்றோர், கூத்தமைப்பின் கைப்புள்ளைகள்) இது என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கப்பா ...
போதாக்குறைக்கு தனியே வேற பேச வெளிக்கிறங்கியிருக்கிறார், விரலை மட்டும் சூப்பிக்கொண்டு திரும்பி வந்தால் தமிழர்கள் கழட்டும் கழட்டுவையில் அடுத்த M.P கனவும் ஆப்பு அதுதான்  புலிகளை பற்றி எதையாவது எடுத்து விட்டு எஜமானர்களுக்கு  நூல்விட்டு பார்க்கிறார், மனக்குளிர்ந்து ஒரு குச்சி மிட்டாயையாவது கையில் சொருகி விடமாட்டார்களா அதை வைத்து தனது காலத்தை அரசியலில்  ஓட்டிவிடமுடியாதா என்ற அங்கலாய்ப்புத்தான், என்ன டிகிரி எடுத்தவனே நாட்டை விட்டு ஓடுறான்,Phd படிவச்சவன் எங்கே இருக்கப்போறான் ...? 
 ஐயா எடுத்து விடப்போறது  Phd  படிச்சவனுக்கே விளங்க கஷ்ட்டம், பாவம் சாமானிய மக்கள் கொரோனவுடன் சேர்ந்து மூளைக்காய்ச்சலும் வரப்போகுது   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

முள்ளிவாய்க்காலில் நடந்தவை இனப்படுகொலை என சுமந்திரனால் ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?? 
முஸ்லிம்களை புலிகள் விரட்டியது இனச்சுத்திகரிப்பு என ஏன் எண்ணையை ஊற்றுகிறார். இரட்னாயக்கா மன்னிப்பு கேட்டது போல புலிகளும் மன்னிப்பு கேட்டார்கள் தானே. இவரால் கோத்தபாய செய்தது இனச்சுத்திகரிப்பு என இப்போ சொல்ல துணிவு உள்ளதா??

தெய்வமே, திரும்பவும் முதல்ல இருந்தா?🤦‍♀️ ஒரிஜினல் பதிவை வாசிக்கவே மாட்டிங்களா?

சுமந்திரன் நிரூபிக்கக் கஷ்டம் என்று மட்டும் தானே சொல்கிறார்? சரி அவர் திறமையற்ற வழக்கறிஞர் என்று ஒதுக்கி விடலாம், ஒரு பக்கம் இருக்கட்டும்!

தற்போது எத்தனை வழக்கறிஞர்கள் தமிழ் அரசியல் வாதிகளாக இருக்கின்றனர்? ஒரு ஜட்ஜ் கூட இருக்கிறாரே எங்களிடம்? அவர்களை வைத்து ஒரு இனப்படுகொலை வழக்கை ஆரம்பிக்க வேண்டியது தானே? ஏன் செய்கிறார்களில்லை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டின் இக்கட்டுநிலையில் எல்லாம் சிங்கள, தமிழ் துவேசத்தை தூண்டி தப்பித்து கொண்டவை. இப்போ அது ஆட்டங்கண்டதால, முஸ்லீம், தமிழ் குரோதம் வளர்க்க சிங்களத்தின் முகவர் தயாராகிறார். கடந்து சென்றால் வாலை சுருட்டிக்கொண்டு, தலையை தொங்கபோட்டுக்கொண்டு,  திரும்பிப் போகவேண்டியதுதான். கொரோனா காலத்தில் மக்களை ஆறுதல்படுத்த வேண்டிய நேரத்தில், பழைய குப்பையை ஏன் கிளறுகிறார்? நாங்கள் கல்லெறிய வேண்டாமே!

இப்போ இவர் றிஷாத்துக்காக களமிறங்க போகிறார் என்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

சம்பந்தப்பட்டவர்களால் மன்னிப்பு கேட்டு முடித்து வைக்கப்பட்ட சம்பவத்திற்கு உங்களைப்போன்றோர் எண்ணை ஊற்றி எரிய வைப்பதன் நோக்கம் புரிகின்றது.

இந்த உரையாடலை ஆரம்பித்து வைத்தவர் பெருமாள். இந்த செய்தியை பிரசுரம் செய்தது தமிழ்வின்.

மேலே இணைக்கப்பட செய்திக்கு நானும் எனது கருத்தை கூறி உள்ளேன். அவ்வளவே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

ட்ரம்ப் செய்த எந்தச் செயலையும் கள்ள மௌனம் மூலம் ஆதரிக்கும் குடியரசுக் கட்சி கள்ள அரசியல் வாதிகளுக்கும் சுமந்திரனுக்கும் என்ன வேறு பாடு? 

அண்ணை ஒரு சின்ன கேள்வி 
இந்த வேறுபாட்டை உருவாக்கி நாங்க எதை கண்டோம், இனி எதை காணப்போகிறோம் ,
ஆனால் நாங்கள்  அநியாயத்திற்கு மக்கு இனவாதி பண்டாக்களுடன் அரசியல் செய்ய இன்டர்நெஷனல் ரேஞ்சுக்கு ஆட்களை தயார்படுத்துவதாலோ என்னவோ மண்கவ்வல்கள் பலமாக இருந்து கொண்டேயிருக்கிறது,
இலங்கையின் சிங்கள  அரசியல் மூலதனம் இனவாதம் அதற்கு கல்வித்தகைமையும் தேவையில்லை தொழில்தகைமையும் தேவையில்லை, அடிப்படை நாகரிகமும் தேவையில்லை, முண்டிக்கொண்டு சிறுபான்மையை முழு தூசனத்தில் பாராளுமன்றத்தில் ஏசத்தெரிந்தால் போதும், இதற்கெதற்கு   அமெரிக்கன் குடியரசு அல்லது அதற்கு மேற்பட்ட தரம் கொண்ட அரசியல்வாதி நமக்கு தேவை, அதாவது சிம்பிளா வாழைமரத்திற்கு பாத்தி கிண்டும் வேலைக்கு  எதற்கு ஹார்வர்ட் யுனி டிகிரி என்கிறேன்     

Link to comment
Share on other sites

2 hours ago, Justin said:

தெய்வமே, திரும்பவும் முதல்ல இருந்தா?🤦‍♀️ ஒரிஜினல் பதிவை வாசிக்கவே மாட்டிங்களா?

சுமந்திரன் நிரூபிக்கக் கஷ்டம் என்று மட்டும் தானே சொல்கிறார்? சரி அவர் திறமையற்ற வழக்கறிஞர் என்று ஒதுக்கி விடலாம், ஒரு பக்கம் இருக்கட்டும்!

தற்போது எத்தனை வழக்கறிஞர்கள் தமிழ் அரசியல் வாதிகளாக இருக்கின்றனர்? ஒரு ஜட்ஜ் கூட இருக்கிறாரே எங்களிடம்? அவர்களை வைத்து ஒரு இனப்படுகொலை வழக்கை ஆரம்பிக்க வேண்டியது தானே? ஏன் செய்கிறார்களில்லை? 

நீதிபதி விக்நேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் இனப்படுகொலை நடந்ததென்று உண்மையாகவே நம்பியிருந்தால் என்றோ அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பார்கள். அவர்கள் இனப்படுகொலை நடந்ததென்று சொல்வது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் பணத்தை சுரண்டுவதற்காக மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் என்பது இன அழிப்பின் உச்சம். அது உண்மை. வரலாறு.

இதை எல்லாம் சுமந்திரனும் ஒப்புக்கொள்கிறார். ஆனால் இதை இப்ப நிரூபிக்க முடியாது. காலம் எடுக்கும் என்றார். இந்த நிலைப்பாட்டை நானும் ஆதரித்தேன்.

இப்ப கேள்வி என்னவென்றால் இதுவரை இதை நிரூபிக்க 12 வருடங்களாக சுமந்திரன் என்ன நடவடிக்கை எடுத்தார்? 12 வருடங்களுக்கு அவர் தமிழ் மக்கள் பிரதிநிதியாக இருந்த பின்னரும் அதாவது  முள்ளிவாய்க்காலுக்கான சாட்சியங்களும் ஆதாரங்களும் இருந்தும் அவர் அதை சேகரிக்கவில்லை எனில் இப்ப நிரூபிக்க முடியாது என்ற இவரின் கூற்று சாட்சிகள் ஆதாரங்கள் அழியும் வரை பொறுத்திருத்தலாகி விடும்.

அப்படியானால் சுமந்திரன் எதற்காக எவருக்காக காத்திருக்கிறார்??? யாருடைய பிரதிநிதியாக இருக்கிறார்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அப்படியானால் சுமந்திரன் எதற்காக எவருக்காக காத்திருக்கிறார்??? யாருடைய பிரதிநிதியாக இருக்கிறார்???

விசுகண்ணை 
இன்னுமா உங்களுக்கு தெரியாது ...? உங்களுக்கு வரவர நக்கல் கூடிப்போச்சுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

உண்மை, ஆனால் ஒரு திருத்தம் - சுமந்திரன் எங்கள் தீவிர தேசியர்களுக்கு உரிய அரசியல் வாதியல்ல என்று வர வேண்டும்!

 ஆனால் அவர் சொல்வதில் உள்ள நியாயங்கள், உண்மைகள் சுட்டாலும் , புரிந்து கொண்டு நகரும் மக்களே பெரும்பான்மையான தமிழர்கள் என்பது என் கணிப்பு!

ஒரு அரசியல்வாதி தன் வாக்காளர்கள் கேட்க விரும்புவதை மட்டும் பேசி, சில இடங்களில் கள்ள மௌனம் காத்து தேர்தலில் வென்று பென்சன் வாங்கி விட்டுப் போவதால் யாருக்கு என்ன பயன்? அவருக்கென்று இருக்கும் moral compass ஐயும் பயன்படுத்த வேண்டும்! இல்லையேல், ட்ரம்ப் செய்த எந்தச் செயலையும் கள்ள மௌனம் மூலம் ஆதரிக்கும் குடியரசுக் கட்சி கள்ள அரசியல் வாதிகளுக்கும் சுமந்திரனுக்கும் என்ன வேறு பாடு? 

இப்படி சுமந்திரன் பேசுவதை  விரும்பா விட்டால் வாக்களர்கள் அவரைத் தேர்வு செய்யாமல் விடலாம் - இப்படி அவரே கடந்த தேர்தல் நேரத்தில் சொல்லியிருந்தார்! 

அதை நிர்வாகத்திடம் தான் கேட்க வேணும்😂
 
சுமந்திரன் தீவிர தமிழ்தேசியம் பேசுவோரின் பிரதிநிதி இல்லைத்தான். ஆனால் அவரின் இப்படியான செயல்பாடுகள் அவருக்கு வாக்களித்த மிதவாத தமிழ் தேசிய வாக்காளரை கூட கடுப்பாக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

அரசியல்வாதிக்கு moral compass முக்கியம்தான் மறுக்கவில்லை. ஆனால் அதையே 100% செய்யவும் கூடாது. நெளிவு சுளிவும் வேண்டும்.

எப்போதும் 100% அறவழி தான் நடப்பேன், அறப்போத்ஃனைகள்தான் செய்வேன் என்றால் - அப்படியானவர் அரசியலுக்கு பொருத்தமானவர் என நான் நினைக்கவில்லை.

புலிகளே தவறு என்று ஒத்து கொண்ட விடயம் இது. நாங்கள் இருவருமே இதை பற்றி போதியளவு எழுதி விட்டோம் யாழில்.

ஆனால் இதை எடுத்து, அதை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு கதைப்பது, takes the focus away.

“இது புலிகள் கூட தவறு என ஒத்துகொண்ட விடயம். மன்னிப்பும் கேட்டாயிற்று. இனி நாம் நடக்க வேண்டியதை பார்ப்போம். முஸ்லிம் ஓரளவுக்கு யாழ் திரும்பி விட்டார்கள். முன்பு இங்கே வாழ்ந்து, இன்னும் திரும்பாமல் இருப்பவர்கள் திரும்ப வர வேண்டிய உதவிகளை அரசு செய்யவேண்டும் ”.

“ஆனால் தமிழர்கள் இழந்த நில, உடமை இழப்புகள் பல இன்னும் அப்படியே இருக்கிறன. உரிமை இழப்பும் அப்படியே”. வீரமுனை தொட்டு, சத்துருகொண்டான் வரை நாமும் தமிழ்-முஸ்லிம் முறுகலால் பாதிக்கபட்டோம்”. அதற்கான மன்னிப்பும் கோரப்படவில்லை.

“எல்லாரும் பாதிக்கப்பட்டிருப்பதால், கடந்தகாலத்தை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல்- இழப்புகளை நிவர்த்தி செய்து ஒன்றிணைந்து முன்னேறுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்”.

சுமந்திரன் இப்படி சொல்லி இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

கஜேந்திரனுக்கு, விக்கிக்கு ஒரு அடி போடுவதாக நினைத்து சுமந்திரன் தேவையில்லாமல் வாயை விட்டுள்ளார் என்பதே என் கருத்து.

8 hours ago, Justin said:

ஆனால் அவர் சொல்வதில் உள்ள நியாயங்கள், உண்மைகள் சுட்டாலும் , புரிந்து கொண்டு நகரும் மக்களே பெரும்பான்மையான தமிழர்கள் என்பது என் கணிப்பு!

மிக சரியான கணிப்பு. இந்த விடயத்தில் மக்களின் கருத்து உங்களை, என்னை ஒத்ததாகவே இருக்கிறது. அதனால்தான் சுமந்திரனும் இப்படி சொல்லிவிட்டும் வெல்கிறார்.

ஆனால் சில விடயங்களில்…பழைய ரெக்கோர்ட் மாரி ஒரே இடத்தில் நிற்கிறார். 

Link to comment
Share on other sites

சுமந்திரன் சொல்கிறாரோ இல்லையோ ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு பிரதேசத்தில் இருந்து ஒரு நாளில் பலவந்தமாக வெளியேற்றிய முட்டாள் தனமான நடவடிக்கைகள் போன்ற  செயல்களே தமிழீழ விடுதலை போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக எதிரி பிரச்சாரம் செய்யவும் அதில் எதிரி  வெற்றியடையவும் வழிவகுத்தது. அதை செய்த புலிகளே  அது தவறு தான் என்று ஒத்து கொள்ளவேண்டிய நிர்பந்தம்  ஏற்பட்டது. இனரீதியில் ஒடுக்கப்படோம் என்று விடுதலை வேண்டிப் போராடிக் கொண்டு வேறு ஒரு இனம் மீது ஒடுக்குமுறை புரிந்தது ஏன் என்பது போன்ற  கேள்விகளுக்கு புலிகள் இருக்கும் போதே அவர்களாலேயே  பதில் கூறமுடியாமல் தடுமாறினார்கள். இறுதியில் மன்னிபு கேட்டாரகள். 

ஆகவே இது போன்எற கேள்விகள் ஊடக சந்திப்புகளில் கேட்கப்படும் போது எவராலும் பொது வெளியில் அதற்கு  நியாயம் கற்பிக்க முடியாது. “காட்டி கொடுத்தார்கள் அதனால் வெளியேற்றினோம்” என்ற பதிலை தெரு மதகுகளில் இருந்து வம்பு பேசுபவர்கள்  வேண்டுமானால் கூறிவிட்டு போகலாம். 

ஆனால் தமிழர் சார்பில் யார் பேசுனாலும் அது சுமந்திரனல்ல  சுமந்திரனின் அரசியலை மூர்க்கமாக எதிர்பவர்களால் கூட அதை நியாயப்படுத்த முடியாது. இதுவே ஜதார்ததம். இன்று  தனிநபர் வக்கிரத்துடன் ரவுடித்தனம் பண்ணுவதே தமிழ் தேசியம் என்ற அளவுக்கு தமிழ் தேசியத்தை சிறுமைப்படுத்தியவர்கள் இந்த புலம் பெயர் போலிகளே. 

5 minutes ago, goshan_che said:

சுமந்திரன் தீவிர தமிழ்தேசியம் பேசுவோரின் பிரதிநிதி இல்லைத்தான். ஆனால் அவரின் இப்படியான செயல்பாடுகள் அவருக்கு வாக்களித்த மிதவாத தமிழ் தேசிய வாக்காளரை கூட கடுப்பாக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

அரசியல்வாதிக்கு moral compass முக்கியம்தான் மறுக்கவில்லை. ஆனால் அதையே 100% செய்யவும் கூடாது. நெளிவு சுளிவும் வேண்டும்.

எப்போதும் 100% அறவழி தான் நடப்பேன், அறப்போத்ஃனைகள்தான் செய்வேன் என்றால் - அப்படியானவர் அரசியலுக்கு பொருத்தமானவர் என நான் நினைக்கவில்லை.

புலிகளே தவறு என்று ஒத்து கொண்ட விடயம் இது. நாங்கள் இருவருமே இதை பற்றி போதியளவு எழுதி விட்டோம் யாழில்.

ஆனால் இதை எடுத்து, அதை இனப்படுகொலையுடன் ஒப்பிட்டு கதைப்பது, takes the focus away.

“இது புலிகள் கூட தவறு என ஒத்துகொண்ட விடயம். மன்னிப்பும் கேட்டாயிற்று. இனி நாம் நடக்க வேண்டியதை பார்ப்போம். முஸ்லிம் ஓரளவுக்கு யாழ் திரும்பி விட்டார்கள். முன்பு இங்கே வாழ்ந்து, இன்னும் திரும்பாமல் இருப்பவர்கள் திரும்ப வர வேண்டிய உதவிகளை அரசு செய்யவேண்டும் ”.

“ஆனால் தமிழர்கள் இழந்த நில, உடமை இழப்புகள் பல இன்னும் அப்படியே இருக்கிறன. உரிமை இழப்பும் அப்படியே”. வீரமுனை தொட்டு, சத்துருகொண்டான் வரை நாமும் தமிழ்-முஸ்லிம் முறுகலால் பாதிக்கபட்டோம்”. அதற்கான மன்னிப்பும் கோரப்படவில்லை.

“எல்லாரும் பாதிக்கப்பட்டிருப்பதால், கடந்தகாலத்தை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல்- இழப்புகளை நிவர்த்தி செய்து ஒன்றிணைந்து முன்னேறுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்”.

சுமந்திரன் இப்படி சொல்லி இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

கஜேந்திரனுக்கு, விக்கிக்கு ஒரு அடி போடுவதாக நினைத்து சுமந்திரன் தேவையில்லாமல் வாயை விட்டுள்ளார் என்பதே என் கருத்து.

மிக சரியான கணிப்பு. இந்த விடயத்தில் மக்களின் கருத்து உங்களை, என்னை ஒத்ததாகவே இருக்கிறது. அதனால்தான் சுமந்திரனும் இப்படி சொல்லிவிட்டும் வெல்கிறார்.

ஆனால் சில விடயங்களில்…பழைய ரெக்கோர்ட் மாரி ஒரே இடத்தில் நிற்கிறார். 

உங்கள் கருத்துகளின் தர்க்க நியாயங்கள் சிறப்பாக உள்ளது. நன்றி கோசான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

உங்கள் கருத்துகளின் தர்க்க நியாயங்கள் சிறப்பாக உள்ளது. நன்றி கோசான். 

நன்றி துல்ப்ஸ்🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் பிழைகளை ஒரு கனிசமான எண்ணிக்கையில் தமிழ்மக்கள் விவாதிக்க ஆரம்பித்ததே 2000ம் களின் பின்னர்தான்(மாற்று அமைப்புகளில் சம்பந்தமுடைய புலிகளை எதிர்க்க அரசியல் ரீதியான நோக்கமுடன் செயற்பட்டவர்களை கருத்தில் எடுக்கவில்லை).. ஆனால் 94 களிலேயே முஸ்லிம்களை வெளியேற்றிய விடயத்தில் தம்மை சுயவிமர்சனம் செய்த்திருக்கிறார்கள் புலிகள்.. தமது தவறை உணர்ந்து தலைவர் பிரபாகரன் மன்னிப்புகேட்டிருக்கிறார்.. பாராட்டப்படவேண்டிய விடயம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

அதனால்தான் சுமந்திரனும் இப்படி சொல்லிவிட்டும் வெல்கிறார்.

அண்ணை சும்  வெல்கிறார் ஆனால் கூத்தமைப்பு படிப்படியாக தோற்று பிரதிநிதித்துவம் இழந்துகொண்டே செல்கிறது, எதிர்வரும் காலங்களிலும் வெல்வார் ஏன் கூத்தமைப்பு ஒட்டுமொத்தமாக தமிழர் பிரநிதித்துவம் இழந்து தெருக்கோடியில் நின்றாலும் வெல்வார் ...அல்லது வெல்லவைக்க படுவார் ...ஈழத்தமிழர்களிற்கு இனித் தலைவர்கள் தரப்படுவார்களேயொழிய உருவாவதெல்லாம் நடக்காது அது தேசியத்தலைவருடன் முடிந்துவிட்டது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் உரிமை மீறல்களை நிஞாயப் படுத்த தமிழருக்குள்ளேயே தலைமைகள் இருந்தாற்தானே அது ஏற்றுக்கொள்ளப்படும். அதுக்காகவாவது வெல்லவைக்கப்படுவார். சம்பந்தனின் சாணக்கியம் இப்படியொருவரை உள்வாங்கியது. தான் போனாலும் இந்தக்கரையான் தமிழரை உருப்படாமல்  அரித்து கொண்டியிருக்கும் எனும் சந்தோசம் அவருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை சும்  வெல்கிறார் ஆனால் கூத்தமைப்பு படிப்படியாக தோற்று பிரதிநிதித்துவம் இழந்துகொண்டே செல்கிறது, எதிர்வரும் காலங்களிலும் வெல்வார் ஏன் கூத்தமைப்பு ஒட்டுமொத்தமாக தமிழர் பிரநிதித்துவம் இழந்து தெருக்கோடியில் நின்றாலும் வெல்வார் ...அல்லது வெல்லவைக்க படுவார் ...ஈழத்தமிழர்களிற்கு இனித் தலைவர்கள் தரப்படுவார்களேயொழிய உருவாவதெல்லாம் நடக்காது அது தேசியத்தலைவருடன் முடிந்துவிட்டது  

போன தேர்தலிலேயே… சுமந்திரன் வெல்லவில்லை. வெல்ல வைக்கப் பட்ட ஆசாமி.

யாழ். மத்திய கல்லூரியில்,  வாக்கு எண்ணும்… போது, நடந்த கூத்துகள்… உலகப் பிரசித்தி பெற்றவை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை சும்  வெல்கிறார் ஆனால் கூத்தமைப்பு படிப்படியாக தோற்று பிரதிநிதித்துவம் இழந்துகொண்டே செல்கிறது, எதிர்வரும் காலங்களிலும் வெல்வார் ஏன் கூத்தமைப்பு ஒட்டுமொத்தமாக தமிழர் பிரநிதித்துவம் இழந்து தெருக்கோடியில் நின்றாலும் வெல்வார் ...அல்லது வெல்லவைக்க படுவார் ...ஈழத்தமிழர்களிற்கு இனித் தலைவர்கள் தரப்படுவார்களேயொழிய உருவாவதெல்லாம் நடக்காது அது தேசியத்தலைவருடன் முடிந்துவிட்டது  

சரியாகச் சொன்னீர்கள் ஐயனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கற்பகதரு said:

ஈழத்தமிழர்கள் என்றுமே பயங்கரவாதிகள்தான். சிங்களவரின் நிலத்தை தமது என்று நிறுவ முயல்வது முதல் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்தது வரை எல்லாமே பயங்கரவாதம் என்று எல்லா உலகநாடுகளும் உரத்து சொல்லிவிட்டன. அதனால்தான் ஈழம் பயங்கரவாதிகளின் நாடாகிவிடும் என்பதால் அப்படியே உலகநாடுகள் எல்லாம் சேர்ந்து பொசுக்கென்று அமத்தி அழித்து விட்டார்கள்.

அவையள் என்னவெண்டாலும் சொல்லட்டும் அண்ணை, நீங்கள் என்ன சொல்ல வாறியள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  விடயத்துக்கு  சுமந்திரன்  ஏன் வருடாந்தம். மன்னிப்புக்  கேட்கிறார்?  இவரது மன்னிப்பு முஸ்லிம் மக்கள் எற்றுக்கொண்டுயுள்ளார்களா ?  அல்லது  அவர்களின் தலைவர்கள் எற்றுக்கொண்டுயுள்ளார்களா. ?இவரது மன்னிப்பால் தமிழ்  மக்களுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதாவது நன்மை உண்டா  ?தனி நபர் சுமந்திரன்  எத்தனை  கோடி முறையும்  மன்னிப்புக் கோர முடியும் ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதியாய்...தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக. ஒருபோதும்  மன்னிப்பு கோரக்கூடாது 

Link to comment
Share on other sites

21 hours ago, கற்பகதரு said:

2 hours ago, ஏராளன் said:

அவையள் என்னவெண்டாலும் சொல்லட்டும் அண்ணை, நீங்கள் என்ன சொல்ல வாறியள்?

உலகநாடுகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை சாமானியன் எனக்கு கொடுக்கிறீங்கள் பாருங்கோ, அங்கதான் அழிவே ஆரம்பமானது. விஜிதரனும், விமலேஸ்வரனும், சிறி சபாரத்தினமும், ஆனந்தராஜாவும் உலகநாடுகளின் அங்கிகாரத்திலும் பார்க்க முக்கியமானவர்களாக போனதால் … இன்று இருந்த இடமே தெரியாமல் போனவர்கள் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கற்பகதரு said:

உலகநாடுகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை சாமானியன் எனக்கு கொடுக்கிறீங்கள் பாருங்கோ, அங்கதான் அழிவே ஆரம்பமானது. விஜிதரனும், விமலேஸ்வரனும், சிறி சபாரத்தினமும், ஆனந்தராஜாவும் உலகநாடுகளின் அங்கிகாரத்திலும் பார்க்க முக்கியமானவர்களாக போனதால் … இன்று இருந்த இடமே தெரியாமல் போனவர்கள் யார்?

உலக நாடுகள்  வாயை  மூடிக்கொண்டு இருக்கிறது  நீங்கள்  இங்கே கருத்து தெரிவித்து கொண்டுயிருக்கிறீர்கள் எனவே உங்ககிட்ட கேட்ட கேள்வி சரியானது மீண்டும்  நான்  கேக்கிறேன். உங்கள்  கருத்து என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

ஒரு  விடயத்துக்கு  சுமந்திரன்  ஏன் வருடாந்தம். மன்னிப்புக்  கேட்கிறார்?  இவரது மன்னிப்பு முஸ்லிம் மக்கள் எற்றுக்கொண்டுயுள்ளார்களா ?  அல்லது  அவர்களின் தலைவர்கள் எற்றுக்கொண்டுயுள்ளார்களா. ?இவரது மன்னிப்பால் தமிழ்  மக்களுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதாவது நன்மை உண்டா  ?தனி நபர் சுமந்திரன்  எத்தனை  கோடி முறையும்  மன்னிப்புக் கோர முடியும் ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதியாய்...தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராக. ஒருபோதும்  மன்னிப்பு கோரக்கூடாது 

மிக சரியான கருத்தும் கேள்வியும்.....👍👍👍👍👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.