Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

தமிழர்களின் பெயரில் விடுதலைப் புலிகளின் செயலால் வெட்கி தலை குனிகிறேன்! சுமந்திரன் பகிரங்கம்

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புலவர் said:

முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கும் சுமத்திரன் வரலாற்றைப் படிக்க வேண்டும்.முஸ்லிம்கள் யாழ்ப்பபாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பொழுது ஒரு முஸ்லிம் கூட உயிர் ஆபத்து ஏற்படவில்லை. சிறு காயந்தானும் ஏற்படவில்லை.

இது உண்மையல்ல. காதுகளில் இருந்து தோடுகளை பிடுங்கி எடுத்தால் காது காயப்பட்ட முஸ்லிம் பெண்கள் பற்றிய செய்திகள் வந்திருந்தன.

Link to comment
Share on other sites

 • Replies 118
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

சுமந்திரனுக்கு தன் வேலை பகுப்பு என்ன என்பதில் ஆரம்பம் முதலே தடுமாற்றம். நீங்கள் நீதிபதி அல்ல சுமந்திரன். நாம் தேர்வு செய்து அனுப்பிய எம்பி. அதாவது நம் தரப்பு வக்கீல். எமது வக்கீலாக நீங்

goshan_che

நான் முன்பும் ஒருதரம் எழுதியுள்ளேன். சுமந்திரன் ஒரு நல்ல வக்கீலா என்பதில்  எனக்கு டவுட் உண்டு, ஆனால் அவர் ஒரு கெட்டிகார அரசியல்வாதி இல்லை.  எதையும் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் உண்டு. அமெரி

அக்னியஷ்த்ரா

அண்ணை சும்  வெல்கிறார் ஆனால் கூத்தமைப்பு படிப்படியாக தோற்று பிரதிநிதித்துவம் இழந்துகொண்டே செல்கிறது, எதிர்வரும் காலங்களிலும் வெல்வார் ஏன் கூத்தமைப்பு ஒட்டுமொத்தமாக தமிழர் பிரநிதித்துவம் இழந்து தெருக்க

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

கந்தையா சந்திரனுக்கு சென்று தமிழீழ கொடியை நாட்டாத சந்தர்ப்பமும் இல்லை, ஒலிம்பிக்கில் தங்கம் பெற்று தமிழீழத்துக்கு பெருமை சேர்க்காத சந்தர்ப்பமும் இல்லை, அப்படித்தானே? 😄 இந்தமாதிரி, சர்வதேச அரசியல்தலைவர்களின் காதில் பூச்சுற்ற வெளிக்கிட்டுத்தான் இருந்த இடம் தெரியாமல் போனார்கள். மாற்றங்களை விரும்பாத நீங்கள் அப்படியே தொடருங்கள்.

சந்திரன் பற்றியும் ஓலிம்பிக் பற்றியும் இங்கு ஆராய்வு செய்யவில்லை.  ஒரு நாடு இல்லாத ஒரு சுதந்திர நாட்டை பெற போராடும் ஈழத்தமிழ்ராகிய நாம்  எப்படி உலகநாடுகளின் நலன்களப்போன முடியும் ?முழுத்தமிழரும்.  ஒரு அமைப்புக்கு கீழ் இல்லை.  தமிழனின். ஆட்சியின் கீழுமில்லை. உலகநாடுகளுக்குள். இந்தியாவும் வரும்........நீங்கள்  தமிழ்ஈழவிடுதலைப்புலிகளின்.  தலைவராக இருந்திருந்தால் இன்று நாங்கள்  தமிழ்ஈழத்தில்  வாழவோம். என்ன செய்ய எமக்கு அந்தப் பலன் இல்லை  

 • Haha 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

கந்தையா அண்ணை… வாந்தி எடுப்பவர்களுக்கும், வாதம் செய்பவர்களுக்கும்… ஆறு வித்தியாசம் இருக்கு. 🤣

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2021 at 02:15, Justin said:

 எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும் போதுமா? அதிகரிக்கிற எண்ணிக்கையினர் செயல்பாட்டுத் திறனையும் பேண வேண்டியதில்லையா? 

நான் நினைக்கிறேன், எண்ணிக்கையை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதை விட இருக்கும் தமிழ் இளைஞர்களை கல்வியிலும், துறை சார்ந்த திறன்களிலும் சிங்களவர்களை விட அதிகரித்த ஆதிக்கம் செலுத்த வைக்க வேண்டும்.

நான்  சொல்லுவது. பாராளுமன்றத்தில் கூடுதல் பிரதிநிதிகளைப்பெற வேண்டும் 

சுதந்திரம்பெற்றபோது. 1/4 பங்கு அங்கத்தவரை நாங்கள்  கொண்டுருந்தோம். இப்போ  1/10. பங்கு. அங்கத்தவர். தான் உண்டு.  கல்வியை. தரபபடுத்தல் முலம் தடுக்கலாம்.....சிங்களவரிடம். படைப் பலம். இருக்கும்போது.  பொருளாதாரத்தை தட்டி ப்பறிக்க முடியும் வேலைவாய்ப்பு கூட. அனுமதி மறுக்கப்படலாம். எனது கருத்து  பாராளுமன்றத்தில் நாங்கள்  பலமடைய வேணடும். மற்றவை கிடைக்கும்   2017. இல். யாழ்ப்பாணம் இல் மூன்று கிழமைகள் நின்றேன் 80....90..பிறந்த வர்கள் நன்கு படித்து நல்ல வேலையிலிருக்கிறார்கள். ஏன் சிஙகப்பூர்....டுபாய்.  .....கூட போய்வேலைசெய்கிறார்கள்....எதிர்காலத்தில் இது கூடும். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2021 at 21:08, நியாயத்தை கதைப்போம் said:

அங்குள்ள பலரும் வெளிநாட்டுக்கு ஓடிவிட முடியாதா எனும் அங்கலாய்ப்பிலேயே உள்ளார்கள். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் இப்போது இலகுவாக இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாய் உள்ளதால் வெளிநாட்டு வாழ்க்கை, சம்பளம், இதர இன்னோரன்ன விடயங்கள் பற்றி விரிவாகவே அறிந்து வைத்து உள்ளார்கள். எமது நேரங்களை கூட துல்லியமாக கூறுகின்றார்கள். ஆப்கானிஸ்தான் போன்று நாட்டை விட்டு வெளியேற ஒரு வாய்ப்பு கிடைக்குமாயின் நிலமையே வேறு. 

இப்போது சுவிஸ் ஜேர்மனியிலிருந்து சிலர் ஊரில் போய்யிருக்கிறார்கள்.  தமிழ்ஈழம் கிடைத்தால்.  சீனா. யப்பன்.  காரர் மாதிரி. ஓரிச்சினல் விசாவில் படிப்பு  வேலைவாய்ப்பு   வியாபாரம் எல்லாம். ஈழத்தமிழன் செய்வான். நீங்கள் 84......90...காலப்பகுதியில் நிக்கிறீர்கள்.  இது 2021.  ஜேர்மனி கடந்த வருட ஆரம்பத்தில். சட்டமூலம்  கொணடு வந்தவர்கள்  நல்ல தொழில்நுட்பம் தெரித்தோர். சொந்தச் செலவில். இங்கே வந்து இருந்துவேலை செய்ய முடியும் 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கந்தையா அண்ணை… வாந்தி எடுப்பவர்களுக்கும், வாதம் செய்பவர்களுக்கும்… ஆறு வித்தியாசம் இருக்கு. 🤣

வாந்தி, வயித்துப்போக்கு தவிர வேறெதுவும் தெரியாதா? இவை பற்றித்தான் அதிகம் எழுதுகிறீர்கள்.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தை வகை தொகையின்றி அழித்தவர்களோடு வாழ்வதில் பெருமை காண்பவர், ஏன் தமிழர் செயலுக்காக வெட்க்கித் தலைகுனிய வேண்டும்? தமிழரை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டதை நினைத்து தலை குனியவேண்டியவர் எப்படி பேசுகிறார். இப்போ, குற்றம் இளைத்தவர்களே மற்றவர்களை குறை கூறுவதால்  தாம் நல்லவர்களாகி விடுவோம்  என்று நினைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

நீங்கள் சுமந்திரனைத் திட்டுகிறீர்களா அல்லத் வேறு யாரையுமா?😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

நீங்கள் சுமந்திரனைத் திட்டுகிறீர்களா அல்லத் வேறு யாரையுமா?😂

எனக்கும் அதே சந்தேகம். யுத்தத்தையும் சமாதான பேச்சுவார்ததைகளையும் முழு பொறுப்பு எடுத்து நடத்தி முழு முடிவுகளையும் எடுத்தவர்களே  தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு கொண்டுவந்ததற்கு முழு பொறுப்பு.  தமிழர்கள் இன்றைய அவலநிலைக்கு வந்த பின்னர் தான் சுமந்திரன் அரசியலுக்கே வந்தார். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

ஆஹா.... ஹா..... ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள், "கனவிலும் காக்கைக்கு *** ஆழைகிற எண்ணமாம்." கண்விழித்ததிலிருந்து தூங்கும் வரை புலிகளுக்கு எப்படி சாணி அடிப்பது என்கிற எண்ணந்தான். புலிகளுக்கு முதல் நடந்தவை உங்களுக்கு தெரியாதா? அல்லது மறைக்கிறீர்களா? புலிகள் ஆயுதம் ஏந்துவதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்று சிந்தித்ததுண்டா? அரசு செய்யும் அடாவடியை கதைத்தால் உடனே ஓடோடி வந்து புலிகளுக்கு கல் எறிந்து சிங்களத்தின் அடாவடியை மறைத்து விடுகிறீர்கள், இன்னொருவர் பல காரணங்களை தேடி எடுத்து வந்து சிங்களத்தை நிஞாயப்படுத்த முனைகிறார். எதுக்கு? சுமந்திரன் வேறொரு கட்சியிலிருந்து கொண்டு இந்தக்கருத்தை சொல்லியிருந்தால், அவருக்கு தெரிந்தது இவ்வளவுதான் என்று கடந்து போயிருப்பேன். ஆனால் தமிழரின் ஏகபிரதிநிதிகள் நாங்கள் என்று வாக்கு வேண்டி புலிகள் உருவாவதற்கு முன்னே பாராளுமன்றம் போனவர்கள் சாதித்தது என்ன? புலிகள் ஆயுதம் ஏந்த முன் எத்தனை இனக்கலவரங்கள் அரங்கேறியதே என்ன செய்தார்கள்? இன்று அரசை காப்பாற்ற இரகசியமாக வெளிநாட்டுத் தூதுவர்களை சந்திப்பவர்கள் எங்கள் பிரச்சனையை அன்று  ஏன் கொண்டுசெல்லவில்லை? சிங்களவன் மண்டையை உடைச்சு அனுப்பியபோது, பொத்திக்கொண்டு போய் கட்டுப்போட்டுவிட்டு கூடிக்குலாவியது ஏன்?  இருக்கட்டும், தங்கள் பாட்டுக்கு இளமைக்கனவுகளோடு சுற்றித்திரிந்த பொடியளுக்கு இரத்தப்பொட்டு வைத்து, உசுப்பேத்தியது யார்? இதெல்லாம் தெரியாமலா இந்தக்கட்சியில் வந்து இணைந்தார் சுமந்திரன்? வந்து என்ன மாற்றம் செய்தார்? மக்கள் என்னை தெரிந்து அனுப்பினார்கள் என்று பாராளுமன்றம் போய் முஸ்லிம்களுக்கும், சிங்களத்துக்கும் கதைக்கிறாரே அன்றி தமிழருக்காக குரல் கொடுக்கிறாரா? இந்தக் கட்சியில் இருப்பதற்கு இவர் வெட்கப்பட வேண்டும், இந்தளவு அழிவையும் ஏற்படுத்தியதற்காக இவர்கள் நாண்டுகொண்டு சாகவேண்டும். எத்தனை கனவுகளோடு, இலட்சியங்களோடு தங்கள் பிள்ளைகளை பெற்று, பாதியிலே பறிகொடுத்து விட்டு, பரிதவித்துக்கொண்டு இருக்கும் பெற்றவர்களுக்கு இந்த அரைவேக்காட்டின் பேச்சு எவ்வளவு வலியைக் கொடுக்கும் என்று நீங்கள்  நினைத்ததுண்டா? எவ்வளவு இலகுவாக சொல்லிவிட்டார். அவர்கள் என்ன தமக்காக, தமது குடும்பத்துக்காகவா ஆயுதம் ஏந்தினார்கள்? மனசாட்சியோடு சுமந்திரனின் ஒவ்வொரு பேட்டியையும் கேளுங்கள், தீர்வு பற்றி உறுதியாய் ஏதாவது சொல்கிறாரா? ஒரு தடவை சொன்னார், தமிழரசு கட்சி என்று சொன்னால் சிங்களவனுக்கு பயமாம், தமிழர் இலங்கையை பிடிக்கப்போகினம், இந்தியாவில அப்போ அப்பிடி நடந்தது, அதனால அவர்களுக்கு சந்தேகமாம். அப்போ ஏன் அந்தக்கட்சியில் வந்து சேர்ந்தார்? நாங்கள் கேட்பது  எல்லாம் இனி நடக்காத காரியமாம். அப்போ ஏன் ஒவ்வொருதடவையும் பொய்யான வாக்குறுதிகளையும், தீர்வுகளையும் சொல்லி வாக்கு கேட்க்கிறார்கள்? எய்தவன் இருக்க அம்பை ஏன் அடிக்கடி நோகிறீர்கள்? தங்கள் பிள்ளைகளின்  வயதொத்தவர்கள் குடும்பமாக வாழும்போது, தம்பிள்ளைகள் உயிரோடு இல்லையே என்று பெத்தவர்கள் வயிறு எப்படித்துடிக்கும். உங்கள் வெறுப்புகளை தூர வைத்துவிட்டு உண்மையை தேட முனையுங்கள். இதற்கு மேலும் உங்களுடன் கதைப்பதால் பயனில்லை, ஒருநாள் உணரும் நாள் வரும், அப்போ நீங்களே வருந்துவீர்கள். இலங்கையில் ஜெ. வி .பியும் பல தவறுகளை செய்தது. அவர்களை சிங்கள மக்கள் தூற்றிக்கொண்டா இருக்கிறார்கள்?

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஆயுதம் தூக்கியபின்தான் இனக்கலவரம் நிறுத்தப்பட்டது. இப்பவும் தொடக்கிப்போடுவார்கள், புலிகள் ஆயுதம் ஏந்தியதற்கான காரணம் நிஞாயப் படுத்தப்பட்டுவிடும் என்பதற்காக கொடுக்கை அடக்கிக்கொண்டு இருக்கிறார்கள். 

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஒருநாள் உணரும் நாள் வரும், அப்போ நீங்களே வருந்துவீர்கள்.

இவர்கள் உணருவார்களா? வருந்துவார்களா? ஆனால் இவர்களும் தேவை.!!

 Quellbild anzeigen

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

இவர்கள் உணருவார்களா? வருந்துவார்களா? ஆனால் இவர்களும் தேவை.!!

 Quellbild anzeigen

ஆனால், பிரச்சினை என்னவென்றால், இரண்டரை மணித்தியால சினிமாவில், வில்லன்கள் இறுதியில் தோற்றுவிடுவார்கள். ஆனால் தமிழர்களின் வாழ்வில் வில்லன்களே எப்போதும் வென்றுகொண்டிருக்கிறார்கள். அதுதான் வேதனை !

நான் சொன்னது எதிரி வில்லனையும், இனத்திற்குத் துரோகம் செய்தவர்களையும். யாழில் இருப்பவர்களையல்ல !

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக விசாரணை கோரி ஐ.நாவுக்கு கடிதம்! கூட்டமைப்பில் இருந்து சுமந்திரன் வெளியேறுவாரா?

தமிழரசுக் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. எனினும் தமிழரசுக் கட்சி தனித்து செயற்படுவதும் ஆரோக்கியமானதல்ல. தமிழரசுக் கட்சியில் இருந்து சுமந்திரன் வெளியேறப்போவதாக கூறினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கூட்டமைப்பு தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது. அது உடைந்து போவதை நான் விரும்பவில்லை. சுமந்திரன் வெளியேறப்போவதாக கூறினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது.

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட நிர்ப்பந்திக்கப்பட்டேன். இது திட்டமிடப்பட்ட சதி. அதில் நான் பலிக்கடாவாக்கப்பட்டேன்.

கட்சித் தலைமையும் உறுப்பினர்களும் எடுத்த முடிவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் என்னை குறை கூறுவது தவறானது. இது எனக்கு மனவருத்தத்தை தருகிறது.

யார் மாகாண சபையை குழப்பினார்கள். யார் மறைமுகமாக இருந்து செயற்பட்டார்கள் என்றெல்லாம் எனக்கு தெரியும். கட்சியின் நலன்கருதி அதனை வெளியிடவில்லை.

புலிகளுக்கு எதிரான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழரசுக் கட்சி ஐ.நாவுக்கு கடிதம் எழுதவில்லை.

அவ்வாறு வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது. அது உடைந்து போவதை நான் விரும்பவில்லை.

தமிழரசுக் கட்சியை யாராலும் அழிக்க முடியாது. எனினும் தமிழரசுக் கட்சி தனித்து செயற்படுவதும் ஆரோக்கியமானதல்ல. தமிழரசுக் கட்சியில் இருந்து சுமந்திரன் வெளியேறப்போவதாக கூறினால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவ்வாறானதொரு முடிவை எடுப்பார் என நான் நினைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/federation-formed-by-the-national-leader-1631089367

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

பெருமாள் - தெரியாமல் நடந்து விட்டது என நினைகிறேன் - தமிழ்வின் தலையங்கம் - நீங்கள் போட்ட தலையங்கம் அல்ல.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஐநாவுக்கு கடிதம் எழுதியதா கூட்டமைப்பு? கட்சியில் இருந்து சுமந்திரன் வெளியேறுவாரா?

என்கிறது தமிழ்வின்னின் தலையங்கம்.

கேள்வி தொனி இல்லாமையால் உங்கள் தலைப்பில் - இப்படி நடந்து விட்டது போல தெரிகிறது.

பிகு

சிலவேளை தமிழ்வின் பின்னர் தலைப்பை மாற்றியதோ தெரியாது.

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அங்கே செய்தி வந்த உடனேயே இங்க இணைக்கப் பட்டிருக்குது!  தமிழ் வின் தலைப்பை மாற்றியதாக நான் நினைக்கவில்லை!

நிற்க: முன்னர் ஒரு அரசியல் ஆய்வுக் கட்டுரையை இணைத்த யாழ் உறவு, தடித்த எழுத்தில் சில பகுதிகளைக் காட்டியதே விதி மீறல் என்று பொங்கிய "விதிப் பரிசோதகர்களைத்" தேடுகிறேன்! கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரையும் காணோம்!😂

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எம்மினத்தைக் காயப்படுத்தி மாற்றுச் சமூகத்தைத் திருப்திப்படுத்துவது நியாயமல்ல.

Pirasanna.png
Share on facebook
 
Share on twitter
 
Share on linkedin
 
Share on whatsapp

வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கு மாகாணத்தில் மாற்றுச் சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு தொடர்பாக ஏன் கருத்திட மறுக்கின்றார்கள். இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய அரசியற் நிலவரம் தொடர்பில் இன்று கருத்துத் வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டோர் அம்மக்களின் உணர்வுகளை மதித்து தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும். தாம் யதார்த்தமாகப் பேசுகின்றோம் என்ற எண்ணத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டும் விதமாகச் செயற்படுதல் கூடாது.

அனைத்து இனங்களையும் மதிக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் எம்மினத்தைக் காயப்படுத்தி அதன் மூலம் மாற்றுச் சமூகத்தைத் திருப்திப்படுத்த எண்ணுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

அண்மையில் எமது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் யுத்த காலத்தில் வட மாகாணத்திலிருந்த முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நடவடிக்கை இனச்சுத்திகரிப்பு என்ற வகையில் இடம்பெற்றது. இது குறித்து தாம் வெட்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இது இன்று நேற்றல்ல அவர் காலா காலமாகச் சொல்லிக் கொண்டு வருவதே. ஆனால் தேவையற்ற சந்தர்ப்பங்களில் இதனை அவர் குறிப்பிடுவது தமிழ் மக்களை இன்னும் மனம்நோகச் செய்யும் விடயமாகும்.

நாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தனியே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றே மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்படுகின்றோம். எமக்கு மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாக்களிப்பதும் இல்லை, வாக்களிக்கவும் மாட்டார்கள். எனவே அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக எம் சமூகத்தை நோகடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது அரசியலுக்காவோ, வாக்கிற்காகவோ அல்லாத, தனிமனித ஒழுக்கம் சார்ந்த விடயமாக இருக்கின்றது.

நமது வடக்கு கிழக்குப் பிராந்தியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், தமது கருத்துக்கள் இரண்டு பிராந்தியங்களையும் சார்ந்தே இருக்க வேண்டும். வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கில் மாற்றுச் சமூகத்தினால் இடம்பெற்ற இன அழிப்பு தொடர்பில் ஏன் கருத்திட மறுக்கின்றார்கள்?

வரலாறு என்பது அனைவருக்கும் ஒன்றே. ஒரு இனத்தை அழிக்காமல் அவர்களை உயிருடன், பாதுகாப்பாக வெளியேற்றியமை தொடர்பில் வெட்கப்படும் நம்மவர்கள் எமது இன மக்களை கொத்துக் கொத்தாகக் காட்டிக் கொடுத்தும் எல்லைப் புறக் கிராமங்களில் வெட்டியும், சுட்டும் இனஅழிப்புச் செய்த விடயத்திற்கு என்ன சொல்லப் போகின்றார்கள். எத்தனை அழிப்புகள் கிழக்கில் இடம்பெற்றன. இதற்கெல்லாம் வெட்கப்பட மாற்றுச் சமூகத்தில் இரந்து எந்தப் பிரதிநிதியும் வரமாட்டார்கள்.

ஊர்காவற்படை, புலனாய்வாளர்கள் என்ற பெயரில் எத்தனையோ அழிப்புகள் கிழக்கில் இடம்பெற்றன. இந்த அழிப்புகளில் கிழக்கு மாகாணத்தில் எத்தனை தமிழ் கிராமங்கள் இல்லாமல் போயிருக்கின்றன. இவைகளை பற்றியும் சற்று அறிந்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் யார் வெட்கப்படப் போகின்றார்கள்?

வெறுமனே தாம் அறிந்த விடயங்களை வைத்து மாத்திரம் கருத்து கூறுதல் தமிழ்த் தேசியத்திற்குப் பொருந்தாத ஒன்றாகும். கிழக்குத் தமிழ் மக்களையும் நினைவில் வைத்து தங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். பாதிப்புற்ற ஒரு சமூகம் தமக்காக பாடுபடும் கட்சி என்ற நம்பிக்கையில்தான் எம்முடன் அன்று தொட்டு இருக்கின்றார்கள். அந்த நம்பிக்கையைச் சீர்குலைக்கும் விதத்தில் கருத்துக்கள் கூறுவது நல்லதல்ல.

மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகள், நடவடிக்கைகளை நாம் மதிக்கின்றோம். ஆனால் இவ்வாறான கருத்துக்கள் மூலம் அவர் மீது கொண்டுள்ள மதிப்பினை அவரே குறைத்துக் கொள்ளக் கூடாது. எமது பிரச்சினைகள் தொடர்பில் அவரால் மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள் முக்கியம் வாய்ந்தவை. இருப்பினும் தாம் கூறும் கருத்துக்கள் தொடர்பில் அவர் கரிசனை கொள்ள வேண்டும். இனியாவது அவர் விடுகின்ற அறிக்கைகள் மேலும் மேலும் நிந்தனைக்குள்ளான தமிழ் சமூகத்திற்கு இன்னலை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது என்பதே எமது நோக்கம், எமது மக்களின் நோக்கமும் அதுவேயாகும்” என்று தெரிவித்தார்.
 
செய்தியின் மூலம்; ahalnews.com 

புரட்டாதி 8, 2021

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அப்போ! இவர் விடும் அறிக்கைகள், வெளியிடும் கருத்துக்கள் கட்சியின் கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை மீறியதே. இதில யாரோ உருவாக்கிய கட்சியில் இருந்துகொண்டு, உலக்கை தேய்ந்து உளிப்பிடியான கதையாய் கட்சி நிக்குது. இதில பெரிய கட்சியாம்  என்று பெருமை வேற, ஒழுக்கம், கட்டுப்பாடு வகுப்பு வேற. இவ்வளவுகாலமும் மக்கள் நிராகரித்தாலும் எப்படியோ நுழைந்து வந்தவர், இப்போ இவர் கட்சியை விட்டு வெளியேறணும் அல்லது சம்பந்தரும் இவரும் தான் கட்சியை பிடித்துக்கொண்டு இருக்க வேணும்.

22 hours ago, பெருமாள் said:

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட நிர்ப்பந்திக்கப்பட்டேன். இது திட்டமிடப்பட்ட சதி. அதில் நான் பலிக்கடாவாக்கப்பட்டேன்.

உண்மையை எப்படி ஒளித்து வைத்தாலும் அது உடைத்துக்கொண்டு வெளிவரும் தனது நேரம் வரும்போது.

கபித்தானை உடனே அழைக்கிறேன்!

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அடடே! நான் கவனிக்கவில்லை, பயபுள்ள இங்கதான் நிக்கிறாரா? நானும் கடவுச் சொல்லை தொலைத்து விட்டு  தடவுகிறார் என்று நினைத்தேன்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.