Jump to content

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை வரலாற்று சாதனை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் வரலாற்றில் முதல்முறையாக சதனை படைத்துள்ளது.

Articles Tagged Under: கொழும்பு பங்குச் சந்தை | Virakesari.lk

இந்நிலையில்,  அனைத்து பங்கு விலைச் சுட்டெண் இன்று முதல் முறையாக 9,000ஐ கடந்து அதன் உயர்ந்த மதிப்பைப் இன்று பதிவு செய்துள்ளது.

இன்றைய நாளின் (01) கொடுக்கல் வாங்கலின் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 9,163.13 ஆக பதிவாகியிருந்ததாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

முன்னதாக 2021 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அனைத்து பங்கு விலைச்சுட்டெண் உயர்ந்த மதிப்பை பதிவு செய்திருந்த போது, 8,920.71 ஆக பதிவாகி இருந்தது.

இன்றையதினம் பரிமாறப்பட்ட பங்குகளின் மொத்த புரள்வு 14.56 பில்லியன் ரூபாவாக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பங்குப் பரிவர்த்தனை வரலாற்று சாதனை | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@vasee@Kadancha இதை பற்றி என்ன நினைக்கிறீகள்? பணமதிப்பை ஈடு செய்ய மக்கள் பங்குகளை வாங்குறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

@vasee@Kadancha இதை பற்றி என்ன நினைக்கிறீகள்? பணமதிப்பை ஈடு செய்ய மக்கள் பங்குகளை வாங்குறார்களா?

முன்பு இதை பற்றி இங்கே ஓரிரு முறை சொல்லி இருக்கிறேன்.

கொழும்பு பஞ்க சந்தை செயற்கை  முறையில், முக்கியமாக பக்ஸ்ஸகளுக்கு தெரிந்தவர்கள் மூலம், அவர்களுக்கு வேண்டுமா நேரத்தில் ஏற்றி (இறக்கப்படும்) நிலையில் இருக்கிறது (அதாவது ஓர் frenzy buying ஐ செயற்கையாக ஏற்படுத்தி, விற்பதற்கு (short) ஏற்ற சூழ்நிலை உருவாக்குவது).    

இந்த ஏற்றமும் அப்படியாக இருபதற்கு வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் அந்நிய  செலாவணி பற்றாக்குறை , இருப்பதும் விரைவாக வெளியேறுகிறது, credit rating உம் மாறவில்லை.

SDR க்கு,  சர்வதேச முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு முதலீடு என்றால், உடனடியாக ஏறியல்லவா இருக்க வேண்டும்.  

உள்நாட்டு முதலீடு என்றால், மேலே சொன்னதை தான் சந்தேகிக்க வேண்டி இருக்கிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

நன்றி கடஞ்சா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

@vasee@Kadancha இதை பற்றி என்ன நினைக்கிறீகள்? பணமதிப்பை ஈடு செய்ய மக்கள் பங்குகளை வாங்குறார்களா?

இந்த ஆண்டின ஆரம்பத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்கு சந்தையிலிருந்து விலக இலங்கையர்களால் $802 மில்லியன் அளவில் முதலிட்டு 30%  வளர்ச்சியை எட்டியதாக புளூம்பேர்க இணையம் கூறுகிறது,நீங்கள் கூறுவது போல் மக்கள் பணவீக்கத்திற்கெதிராக தமது சேமிப்பை பணமாக வைத்திருக்காமல் பங்கு சந்த்தையில் முதலிடுவது ஆகவும் இருக்கலாம்

இப்போதிருக்கும் சூழ்நிலையில் மக்கள் பங்குச்சந்தையிலிருந்து வெளியேறவே முயற்சிப்பார்கள் (பங்கு சந்தை சரிவிலிருந்து தப்புவதற்காக, தங்கத்தில் முதலிடுவது பாதுகாப்பான முதலீடு) 

அல்லது பங்கு சந்தையில் பெரிய முதலீட்டாளர்கள் தாம் வெளியேறுவதற்கான சந்தையை உருவாக்குதலாகவும் இருக்கலாம். 

Wyckoff’s Laws and the logic of market

https://www.facebook.com/millionairestockz/videos/221621255369871/ 

பெரிய முதலீட்டாளர்கள் செயற்கையாக விலையை உயர்த்தி பாமர மக்களை கவர்ந்து  உயர் விலயில் தமது பங்குகளை விற்று விடுவார்கள்

Accumulation என்பது விலை உய்ராமல் மெதுவாக பங்குகளை வாங்கி குவிப்பது 

Distribution என்பது விலை குறையாமல் மெதுவாக பங்குகளை விற்பது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mark up என்பது வாங்கின பங்குகளை விற்பதற்கான சந்தையை உருவாக்குவது

Mark down வேகமாக விற்று பதட்டத்தை உருவாக்கி மற்றவர்களை விற்கத்தூண்டுவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

இது தான் அவ்வப்போது பொதுவாக நடைபெறுவது, பக்சாக்களின் தொழில் சார் நிபுணர்களால்,   சொறி சிங்களத்தின் பங்கு சந்தையில்.

இயற்கையாக நடைபெறுவது போல் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

Mark up என்பது வாங்கின பங்குகளை விற்பதற்கான சந்தையை உருவாக்குவது

Mark down வேகமாக விற்று பதட்டத்தை உருவாக்கி மற்றவர்களை விற்கத்தூண்டுவது

4 hours ago, Kadancha said:

இது தான் அவ்வப்போது பொதுவாக நடைபெறுவது, பக்சாக்களின் தொழில் சார் நிபுணர்களால்,   சொறி சிங்களத்தின் பங்கு சந்தையில்.

இயற்கையாக நடைபெறுவது போல் இருக்கும்.

இவை ஏனைய சந்தைகளிலும் நடைபெறுவதை நான் அவதானித்துள்ளேன். Whales தமது இஸ்டம் போல் manipulate பண்ணுவது.

ஆனால் எல்லா indicators உம் கீழ் நோக்கி இருக்க, பங்கு சந்தை மட்டும் மேல் நோக்கி, அதுவும் வரலாறு காணா விதத்தில் போவது விநோதமாக தோன்றுகிறது.

அதுவும் foreign investors எல்லாரும் தலை தெறிக்க ஓடிய பின்.

ஒன்றில் இது மனிபுலேசன் ஆக இருக்க வேண்டும்.

அல்லது பணத்தை வெளியில் அனுப்ப முடியாது, அனுப்பினாலும் அறாவிலை, ஆகவே இப்போ இருக்கும் இலங்கை பணமதிப்பில் பங்குகளை வாங்கினால் inflation protection ஆக இருக்கும் என கருதுகிறார்களோ தெரியாது.

மனிபுலேசன் என்றால் விரைவில் ஒரு crash  ஐ எதிர்பார்க்கலாம்.

இருக்கும் பிரச்சனைகளோடு, ஒரு crash ஐயும் engineer பண்ணி, தமக்கு தாமே மேலும் பிரச்சனையை பக்சாக்கள் கூட்ட விரும்புவார்களா?

பிகு

Manipulation + protecting against inflation, இரெண்டின் கலவையாகவும் இருக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

 ஓரளவிற்குமேல் market manipulate செய்ய முடியாது என்றே சொல்லப்படுகிறது, பிரித்தானிய மத்திய வங்கி ஜோர்ஜ் சோரஸ்,நிக் லீசன் டொகியோ குறியீடு  என பங்கு சந்தையில் பல உதாரணங்கள் சொல்வார்கள்.தவறான முதலீட்டினை எவ்வளவு பெரிய பண பலம் முலமும் market manipulate செய்ய முடியாது என கூறுவார்கள். கேம் சொடொப் விதி விலக்கு, ஆனால் அதற்குக்காரணம் short squeeze. 

இலங்கை பொருளாதார சூழலில் பங்கு சந்தை சரிவு தடுக்க முடியாத ஒன்று. ஆனால் ஒட்டு மொத்த பஙகு சந்தையினையும் market manipulate செய்ய முடியுமா? அவ்வளவு செல்வந்தர்கள் இலங்க்கையில் உள்ளார்களா? அப்படி செய்தால் ஒரு கட்டத்திற்குமேல் பொருளாதார ரீதியாக அதனை செய்பவர்கள் பாதிப்படைவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, vasee said:

நீங்கள் சொல்வதில் முழுவதுமாக உடன்படுகிறேன்.

இலங்கை பொருளாதாரத்தின் Fundamentals பிழையாக இருக்கும் போது, ஒட்டு மொத்த மார்கெட்டையும் மனிபுலேட் பண்ணி தொடர்ந்தும் உயரத்தில் வைத்திருக்க முடியாது?

அப்படி செய்தாலும் ஏனையவர்கள் விற்கும் போது, விலை குறைந்து மனிபுலேட் செய்தவர்கள் கையைசுடும் என்பது மிக சரியே.

மறுவளமாக, தங்கம், காணி போன்ற அசையா சொத்துக்கள் இருக்கும் போது, சாதாரண மக்கள் பணவீக்கத்தை எதிர்த்து பங்குகளில் முதலிடுகிறார்கள் என்பதும் அவ்வளவு தூரம் ஏற்கமுடியாததே.

இலங்கையில் பெரிய institutional investors உம் இல்லை. 

அப்போ எப்படி பங்குச்சந்தை இப்படி வரலாறு காணா எழுச்சியை எட்டுகிறது?  

#ஒரே குழப்பம்.

3 hours ago, goshan_che said:

அப்போ எப்படி பங்குச்சந்தை இப்படி வரலாறு காணா எழுச்சியை எட்டுகிறது?  

இதெல்லாம் market முழுமையாக சுதந்திரமாக இருந்தால்.

மார்க்கெட் manipulation (அது செய்வது குறிப்பிட்டவர்கள்) என்றால் தான், குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்க அல்லது வாங்க வேண்டும், crash அல்லது depression சாத்திய கூறுகள் இருக்கிறது. 

சொறி சிங்களத்தின் stock market, சுதந்திரம் எனும் போர்வையில், கட்டுப்படுத்தப்படுகிறது, அதை ஒழுங்கு வரைமுறைக்குள் கண்காணிப்பில் வைத்திருந்து (regulations and  regulators), சுதந்திரத்தையம், ஒழுங்கையும் உறுதிப்படுத்துபவர்களும் சேர்ந்து (அதாவது, பக்ஸக்கள் மற்றும் வித்தியாகாம இல் இருக்கும் தொழில் / திறமை சார் அரச  stock market பணியாளர்கள் என்று அதிகாரமுள்ள, வெளியே தெரியாத cartel).    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இருக்கும் பிரச்சனைகளோடு, ஒரு crash ஐயும் engineer பண்ணி, தமக்கு தாமே மேலும் பிரச்சனையை பக்சாக்கள் கூட்ட விரும்புவார்களா?

பிரச்னை இல்லை, crash இல் அரசுக்கு (அல்லது எந்த நோக்கத்திற்காக crash)  காசு வரும் என்றால்.

crash இல்  பணம் கைமாறுகிறதே தவிர ஒருபோதும் அழிவதில்லை.

நீங்கள் நாட்டுக்கு முதலில் சொல்லியது (வளங்கள் போன்றவற்றை கொண்டு செல்ல முடியாது போன்றது) இதில் சரியாக பொருந்தும். 

ஒரேயொரு, எதிர்வாதம், exit பண்ணுவது இலகு என்பதால் ஸ்டாக் market இல் பணம் வருகிறது. அனால், அவ்வளவு சில்லறை (சதாரண மக்கள்) முதலீட்டாளர்கள் இருக்கிறார்களா?

அல்லது, சீன முதலீடர்களின் , cartel உடன் சேர்ந்த முயற்சியாகவும் இருக்கலாம்.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், நன் சொல்வதற்கான எதிர் உதாரணம் இரான்.

பெரும் தடைகளுக்கு மத்தியிலும், ஈரானின் stock மார்க்கெட் ஏறுகிறது.

ஆனால், ஈரான் மீது அமெரிக்கா மட்டுமே தடை.

மற்றது, ஈரான் இடம் இன்றியமையாத வளமான மசகு என்னை இருக்கிறது, அதை விற்றபனையும் செய்கிறது , தடை இல்லாத போதுள்ள விற்பனையிலும் குறைவு என்றாலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://iranintl.com/en/iran-in-brief/survey-shows-77-percent-investors-tehran-stock-market-lost

Monday, 19 Jul 2021 16:47

Survey Shows 77 Percent Of Investors In Tehran Stock Market Lost

...

Many politicians and experts have said that they saw government manipulation to make money in the stock market to replenish its empty coffers during a US ban on its oil exports.

இதுவும் ஓர் திட்டமாக இருக்கலாம், ஏற்கனவே சொன்னது போல் crash இல் பணம் கைமாறுகிறதே தவிர அழிவதில்லை. திறைசேரிக்கு பணம் வந்தால் சரி.

சொறி சிங்களம், ஈரான் செய்தது போல் அரச வளம் / சொத்தை பங்கு சந்தையில் விற்கிறதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

பதிலுக்கு நன்றி. நீங்கள் பார்க்கும் கோணமும் ஏற்புடையதுதான்.

ஆனால்,

வாங்குபவர், விற்பவர் regulate பண்ணுபவர் எல்லாரும் ஒரே கார்ட்டெல் ஏன்றாலும் தொடர்ந்து வாங்கல் விற்றல் செய்து volume இருக்க வேண்டுமே?

GameStop short squeeze நேரம், institutional investors (with open short positions), பெரிய வால்யூமில் குறைந்த நட்டத்துக்கு தமக்கிடையே விற்று, அதன்மூலம் பங்கு சரிகிறது என்ற தோற்றபாட்டை உருவாக்கி, அதில் வெற்றியும் கண்டார்கள் என்பதை அவதானித்தேன்.

இது, இதன் எதிர் வழமாக மிக குறைந்த லாபத்தில் பங்குகளை தமக்கிடையே வாங்கி, அதன் பின் crash பண்ணும் ஐடியாவக இருக்கலாம்.

ஆனால் இதில் அவர்கள் லாபம் அடைந்தாலும், நாடு இன்னும் கீழேதானே போகும்? 

அல்லது இப்படி உயர் விலையில் பொய்யாக மெயிண்ட்டையின் பண்ணி, நாடு தாளவில்லை என காட்டலாம் என நினைகிறார்களோ?

ஈரான் இதைதான் செய்கிறது என நீங்கள் கூறுவதாக விளங்கி கொள்கிறேன்.

என்னதான் கார்டெல் அமைப்பாக செயல்பட்டாலும், ஒட்டுமொத்த சந்தையை இப்படி கையாள முடியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசயம் வெரி சிம்பிள்…

😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, goshan_che said:

ஆனால் இதில் அவர்கள் லாபம் அடைந்தாலும், நாடு இன்னும் கீழேதானே போகும்? 

எப்படியும் நடக்கும் என்பதால் இப்படி நடந்தால், அதன் மூலம் பணத்தை அரசு பெறுமாயின், அரசின் பிரச்னை தற்கலிகமாக ஓரளவு  தீரும்.

40 minutes ago, goshan_che said:

அல்லது இப்படி உயர் விலையில் பொய்யாக மெயிண்ட்டையின் பண்ணி, நாடு தாளவில்லை என காட்டலாம் என நினைகிறார்களோ?

ஆனால் , இன்னொரு விதமாக, இது பின்கதவால் தனியார் வைப்புகளை தேசியமயப்படுத்துவது, அரசுக்கு பணம்  வருமாயின், மேலதிக சில்லறை முதலீட்டர்களையும் உள்ளிழுத்தால்.

தெடர்ந்து சிறிது சிறிதாக ஏறவேண்டும். 

இப்பொது நடப்பது, ஓர் kick off போல. 

அனால், ஈரான் போல crash பண்ணலாம்.

அப்படி பெரிதாக crash இல்லாவிட்டால் இன்னும் நல்லம், பண வேகத்தால், அது ஓர் very slow crash ஆகும். அநேகமான சில்லறை முதலீட்டாளர்களுக்கு nominal ஆக ஒரு இழப்பும் இல்லை. அரசியலுக்கும், தேர்தலுக்கும் 'நன்றான' பொருளாதாரம்.  

http://www.sundaytimes.lk/210613/business-times/four-new-state-owned-businesses-to-be-listed-in-the-cse-446254.html

நினைத்தது சரியாகவே இருக்கிறது. இப்பொது 58  அரசின் உடைமை வியாபார கம்பனிகள் (sobe) ஆக்கி பங்குச் சந்தையில் விற்றபதற்கு ஏறபாடுகள்   , அதில்  4 சந்தைக்கு வந்துவிட்டது.  இந்த selendiva என்பது அரசு காணிகள், வளங்களை (அல்லது அவைகளில்) முதலிடும் கம்பனி. சில்லறை முதலீட்டார்கள் இதனால் கவரப்படுவார்கள்.

51 minutes ago, goshan_che said:

வாங்குபவர், விற்பவர் regulate பண்ணுபவர் எல்லாரும் ஒரே கார்ட்டெல் ஏன்றாலும் தொடர்ந்து வாங்கல் விற்றல் செய்து volume இருக்க வேண்டுமே?

உள் நாட்டு  நிறுவனமயப்பட்ட முதலீட்டளர்களை புதிய பங்குகளை அறிகுக்கப்படுத்த கட்டாயப்படுத்தி, அதனுடன் அரசும் தனது ஏதாவது பங்குகளை அறிமுகப்படுத்தலாம். 

சுதந்திரமான சந்தையில் கூட, பொதுவாக நடப்பதும், கம்பனிகள் புதிய பங்குகளை அறிமுகப்படுத்துவது, stock market   குறிப்பிட்ட காலத்துக்கு (2- 3 அல்லது அ தத்திற்கு மேற்றப்பட்ட மாதங்கள்) ஏறும் போது.

41 minutes ago, goshan_che said:

என்னதான் கார்டெல் அமைப்பாக செயல்பட்டாலும், ஒட்டுமொத்த சந்தையை இப்படி கையாள முடியுமா ?

சொறி சிங்களத்தின் பங்கு சந்தை முழுமையான தனியார் சந்தை இல்லை என்று நினைக்கிறன்.

மற்றது, தனியார் (சில்லறை) முதலீட்டர்களை தவிர, ஏனைய அனைத்து உள்நாட்டு நிறுவனமயப்பட்ட முதலீட்டர்களை கட்டுப்படுத்தக் கூடிய நிலையிலேயே உள்ளது சொறி சிங்களம். 

சில்லறை முதலீட்டர்கள் ஒன்றனால் ஒழிய, அப்படி நடப்பதத்திற்கு வாய்ப்பு இல்லை, இருந்தாலும் அவர்களின் volume போதுமா என்பதும் இருக்கிறது, மாற்றத்தை ஏற்றப்படுத்த முடியாது.   

இதை விட என்ன கட்டுப்பாடு   தேவை தேவை, market ஐ அரசுக்கு (அல்லது அரசுக்கு வேண்டியவர்களின்) வேண்டிய வழியில் கொண்டு செல்வதற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்வதில் முழுவதுமாக உடன்படுகிறேன்.

இலங்கை பொருளாதாரத்தின் Fundamentals பிழையாக இருக்கும் போது, ஒட்டு மொத்த மார்கெட்டையும் மனிபுலேட் பண்ணி தொடர்ந்தும் உயரத்தில் வைத்திருக்க முடியாது?

அப்படி செய்தாலும் ஏனையவர்கள் விற்கும் போது, விலை குறைந்து மனிபுலேட் செய்தவர்கள் கையைசுடும் என்பது மிக சரியே.

மறுவளமாக, தங்கம், காணி போன்ற அசையா சொத்துக்கள் இருக்கும் போது, சாதாரண மக்கள் பணவீக்கத்தை எதிர்த்து பங்குகளில் முதலிடுகிறார்கள் என்பதும் அவ்வளவு தூரம் ஏற்கமுடியாததே.

இலங்கையில் பெரிய institutional investors உம் இல்லை. 

அப்போ எப்படி பங்குச்சந்தை இப்படி வரலாறு காணா எழுச்சியை எட்டுகிறது?  

#ஒரே குழப்பம்.

உண்மைதான் எனக்கும் இலங்கை பங்கு சந்தை போக்கு புரியவில்லை, பொதுவாக பங்கு சந்தையில் ஈடுபடுபவர்கள் 2 ஆராய்வுகளை மேற்கொள்ளுவார்கள்
1. Fundamental analysis 
2. Technical analysis 

technical analysis படி பார்த்தால் 10000 புள்ளிகள் வரை உயரலாம் பங்கு சந்தை.

3 hours ago, Kadancha said:

இதெல்லாம் market முழுமையாக சுதந்திரமாக இருந்தால்.

மார்க்கெட் manipulation (அது செய்வது குறிப்பிட்டவர்கள்) என்றால் தான், குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்க அல்லது வாங்க வேண்டும், crash அல்லது depression சாத்திய கூறுகள் இருக்கிறது. 

சொறி சிங்களத்தின் stock market, சுதந்திரம் எனும் போர்வையில், கட்டுப்படுத்தப்படுகிறது, அதை ஒழுங்கு வரைமுறைக்குள் கண்காணிப்பில் வைத்திருந்து (regulations and  regulators), சுதந்திரத்தையம், ஒழுங்கையும் உறுதிப்படுத்துபவர்களும் சேர்ந்து (அதாவது, பக்ஸக்கள் மற்றும் வித்தியாகாம இல் இருக்கும் தொழில் / திறமை சார் அரச  stock market பணியாளர்கள் என்று அதிகாரமுள்ள, வெளியே தெரியாத cartel).    

நீங்கள் கூறுவது போல பங்கு சந்தை சரிவின் போது short ஈடுபடுபவருக்கு பணம் கைமாறுகிறது. Regulation மூலம் shorting கட்டுப்படுத்தினாலும் 2008 buy low algorithm (தின வர்த்தகர்களை  shooters குறிவைத்து ) பயன்படுத்தி பல. நீண்டகால முதலீட்டாளர்கள் தமது பெறுமதியற்ற பங்குகளை விற்று விட்டு வெளியேறியது போல இலங்கையிலுள்ள பங்குகளை உரிமையாக வைத்துள்ளவர்கள் regulation விற்பதி தடுக்காதல்லவா?இதனால் தொடர்ந்தும் சந்தையை வாங்குபவர் பணம் பெறுமதியற்ற பங்குகளை வாங்குவதால் இழக்கப்படாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

விசயம் வெரி சிம்பிள்…

😜

அட எங்களுக்கும் சொல்லுங்கோவன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

இதனால் தொடர்ந்தும் சந்தையை வாங்குபவர் பணம் பெறுமதியற்ற பங்குகளை வாங்குவதால் இழக்கப்படாதா?

அரசுக்கு,  உடனடியாக cashflow இருக்க வேண்டும், ஏதாவது  ஒரு வழியில் பணம் வந்தால் சரி. அந்த வழி வெளிப்பார்வைக்கு நியாயமாக இருக்க வேண்டும்; அடுத்த தேர்தலை சந்திக்க வேண்டும்; எனக்கு வாக்களிப்பவருக்கு இதைப்பற்றி ஒரு மண்ணும் தெரியாமல் இருக்கிறது; அதுவே நல்லது.

எவர் விற்பது, எவர் வாங்குவது,  அல்லது எவர் ஏய்க்கப்படுகிறார் என்பதே அடிப்படை பிரச்சனை.

 பெரும் பகுதியை வாங்குபவர் சில்லறை முதலீட்டார்கள் என்றால் ஒரு பிரச்சனையும் இல்லை. இவர்களுக்கு, தனியாகவோ  அல்லது குழுவாகவோ பலமும் இல்லை. 

வாங்குவதும் விற்பதும், ஒரே நாட்டுக்குள் என்பதால், அரசுக்கு கிடைக்க வேண்டிய அத்தனையும் கிடைக்கும்.

அரசும் முதல் இட்டு  இருந்தால், அதிலும் அரசுக்கு பணம் வரும், அதாவது சில்லறை வைப்புகள், சேமிப்புக்கள் அரசுடைமை ஆகிறது. 
 
எல்லாமே நன்று ஓர் எல்லை வரைக்கும்.

அதற்குள், வேறு ஏதாவது வழி இருக்கிறதா?

சொறி சிங்களத்தின் நிலையில் இருந்தால், இப்படித் தான் எனது சிந்தனை போகும் ( kick the can down the road).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2021 at 17:09, Kadancha said:

@kadancha  நன்றி

நீங்கள் கூறிய விடயம் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதற்குக்காரணம் இலங்கை பங்குச்சந்தை நடைமுறை பற்றி எதுவும் தெரியாது, அது தவிர பொருளாதாரம், வங்கி, பங்கு சந்தை தொடர்பான துறை சார் கல்வியறிவு எனக்கில்லை, அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய பங்கு சந்தை மற்றும் நாணய சந்தை அனுபவம் மட்டுமே உள்ளது.

அதிலும் குறிப்பாக வெறும் Technical analysis பயன்படுத்துவதால்,நுண் பொருளாதாரம்  தேவைப்படுவதில்லை.

எனது புரிதலின் படி பங்கு விலை அதிகரிப்பு எவ்வாறு ஏற்படுகிறது என்றால் ஒரு நிறுவனத்தால் வெளியிடப்படும் பங்குகள் அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள்,மற்றும் பெரிய முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகள் நீண்ட கால முதலீட்டின் அடிப்படையில் வைத்திருப்பார்கள். 

இது தவிர சந்தையில் உள்ள பங்குகள் (மிதக்கும் பங்குகள்) கையாளுபவர்கள் Market makers. 1987 பங்கு சந்தை சரிவின் போது அனைவரும் தமது பங்குகளை விற்க முற்பட அந்த பங்குகளை வாங்குவதற்கு ஒருவரும் இருக்கவில்லையாம், அதன் பின்னரே இவர்கள் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவர்கள் பங்குகளின் அனைத்து நடவடிக்கைகளையும் அறிந்து கொண்டவர்கள், யாரிடம் எவ்வளவு பங்குள்ளது போன்ற விடயங்கள். இவர்கள் பங்கு சந்தை உறையாமல் வாங்கல் விற்றல்களை மேற்கொள்வதுடன் இலாபமும் ஈட்டுவார்கள்.

அடுத்த தரப்பு சில்லறை வர்த்தகர்கள், சந்தையில் மிதக்கும் பங்குகளே பங்கு சந்தை நாளாந்த பங்குகளின் ஏற்ற இறக்கங்களை பொதுவாக தீர்மானிக்கின்றன பெரிய முதலீட்டாளர்களின் நடவடிக்கைகளே அந்த பங்கின் பெறுமதி மாற்றத்தை தீர்மானிக்கும். 

பெரிய முதலீட்டாளர்களிலும் பலர் உள்ளதால், பெறுமதியற்ற பங்கினை ஒருவர் தொடர்ந்து வாங்கினால் மற்ற பகுதியனர் தமது சுமையை அவரிடம் இறக்கி விடமாட்டார்களா? அல்லது இலங்கை பங்கு சந்தை எதோ ஒருவகையில் தற்காலத்திற்கு பெறுமதியாகவுள்ளதா?

எது எவ்வாறாயினும் Technical analysis படி 10000 புள்ளிகள் வரை செல்லலாம், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, vasee said:

வசி,

நீங்களும் கடஞ்சாவும் சேர்ந்து, பங்கு, நாணய வர்தகம் பற்றி ஒரு திரியை ஆரம்பிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இது மருதரின் @Maruthankerny ஐடியா. ஆனால் ஆள் பிசியாகிவிட்டார் போலுள்ளது.

பிரபா @பிரபா சிதம்பரநாதன் உம் ஆர்வமாக உள்ளார் என தெரியும்.

கேள்வி கேட்க நானும் தயார்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

வசி,

நீங்களும் கடஞ்சாவும் சேர்ந்து, பங்கு, நாணய வர்தகம் பற்றி ஒரு திரியை ஆரம்பிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இது மருதரின் @Maruthankerny ஐடியா. ஆனால் ஆள் பிசியாகிவிட்டார் போலுள்ளது.

பிரபா @பிரபா சிதம்பரநாதன் உம் ஆர்வமாக உள்ளார் என தெரியும்.

கேள்வி கேட்க நானும் தயார்🤣.

நீங்களே அந்த திரியை ஆரப்ம்பியுங்கள், உங்கள் கேவிகள் மிகவும் சிந்திக்கவைக்கக்கூடிய கேள்விகள் அதற்கு பதில் தெரிந்தவர்கள் பதிலளிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, vasee said:

நீங்கள் கூறிய விடயம் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, அதற்குக்காரணம் இலங்கை பங்குச்சந்தை நடைமுறை பற்றி எதுவும் தெரியாது, அது தவிர பொருளாதாரம், வங்கி, பங்கு சந்தை தொடர்பான துறை சார் கல்வியறிவு எனக்கில்லை, அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய பங்கு சந்தை மற்றும் நாணய சந்தை அனுபவம் மட்டுமே உள்ளது.

நான் சொன்னது சிங்கள  அரசியல் அதிகார பீடங்கள் எப்படி சிந்திக்க தலைப்படும் என்பதற்கு.

பங்கு சந்தையில், அந்த சிந்தனையை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதே கேள்வி.

சுருக்கமாக, சில்லறை முதலீட்டார்ளர்களை, உணர்வு பூர்வ அடிப்படையில் (investments by sentiments) சந்தைக்கு இழுப்பது இப்போதுள்ள ஓர் வழி .
    
மிகுதிக்கான பதிலை பின்பு எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூடியதற்கான காரணம், சென்ற கிழமையில் 127 பில்லியன் ரூபாய்கள், டாலர் விலையேற்றத்தை ஈடு செய்வதற்கு மத்திய வங்கியால்   அச்சடிக்கப்பட்டு இருக்கிறது.

சொறி சிங்களத்தின் மதியவங்கி பின்கதவால் மற்றும் உள்ளால் விடயம்  தெரிந்தவர்கள் (விதியாகம போன்றவர்கள், பெரும் நிறுவங்கள் வைத்திருப்பவர்கவ்ர்கள்), முந்தி விட்டார்கள்.

அனால், எதிர்பார்த்தது போல, சில்ல்லரை முதலீட்டார்கள், party க்கு பிந்தியுள்ளார்கள் (பிந்த   வேண்டும் என்பதே   வித்தியாகாம மாறும் சொறி சிங்களத்தின் எல்லா ஆக்கிரங்களினதும் எதிர்பார்ப்பு, விருப்பம்), எரிக்கப்படும் உள்ளார்கள். 

அசடிக்கப்படும் போது, நாணயதின் பெறுமதி குறையும் என்பதுடன், assets இன் பெருமத்தூபி அதிகரிக்கும் என்பது சாதாரண பொருளியல் விதி.

சொறி சிங்களத்தின் வெனிசுவேலா ஆரம்பம் ஆகி இருக்கிறது.

முதலில் சொன்னதில், சொறி சிங்களத்தின் பங்கு சந்தை சுதந்திரம் இல்லை என்பதாய் தாண்டி, 

குறிப்பிட்டே சில வட்டம் ( வித்தியாகாம, பெரும் நிறுவனங்கள், அதிகாரத்துக்கு கிட்ட உள்ளவர்களால்) கட்டுப்படுத்தக்  கூடிய நிலையில் என்பது யதார்த்தமாக  இருக்கிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கஜேந்திரன் கட்சி கட்டுகாசை இழக்குமென்று சொன்ன பெரும்தகைகளில் ஒருவர்.😎
    • அது சரி  அந்த 300  ரூபாய் யாரிடம் கொடுப்பது  ??   அந்த சத்தம் எனக்காக உருவாக்கப்படவில்லை   சத்தம் பசியை. தீர்க்க போவதுமில்லை  தமிழ்நாட்டிலும். இலங்கையிலும் சில இடங்களில் இலவசமாக சாப்பிடலாம்   10 ரூபாய் க்கு  விரும்பிய அளவு இட்டலி சாப்பிடும் ஆய. கடையும் தமிழ்நாட்டில் உண்டு”   😀
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோத‌ரி🙏🥰......................................
    • ஓம் ஓம் நீங்க‌ள் அவுட்டு விடும் புர‌ளி ஒரு போதும் உண்மை ஆகி விடாது தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையா தானே செய‌ல் ப‌டுகின‌ம் அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ மேல‌ இருந்து எங்க‌ளுக்கு அழுத்த‌ம் வ‌ருது உங்க‌ளுக்கு வேறு சின்ன‌ம் கொடுக்க‌ கூடாது என்று 😡 இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ தேர்த‌ல் ஆணைய‌ம் யார் க‌ட்டு பாட்டில் இருக்கு என்று விவ‌சாயி சின்ன‌ம் ப‌றி போன‌தில் பிஜேப்பியின்  குள‌று ப‌டிக‌ள் உள் குத்து வேலைக‌ள் நிறைய‌ இருக்கு....................இப்ப‌டியே போனால் உங்க‌ளுக்கும் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளுக்கும் வித்தியாச‌ம் இல்லாம‌ போய் விடும் யாழில் உங்க‌ளுக்கு இருக்குல் ந‌ட் பெய‌ரை நீங்க‌ளாக‌வே கெடுக்க‌ வேண்டாம்.....................உள்ள‌தை க‌ண்ட‌ அறிய‌ என‌க்கும் தமிழ் நாட்டில் ஆட்க‌ள் இருக்கின‌ம்............. ந‌டுநிலையான‌ விம‌ர்ச‌க‌ர்க‌ள் எத்த‌னையோ பேர் இப்ப‌வும் இருக்கின‌ம் விலை போகாம‌ய்...........................அவ‌ர்க‌ள் உண்மைய‌ உண்மை என்றே சொல்லுவின‌ம் அதுக்குள் போலி க‌ட்டுக் க‌தை இருக்காது சொல்வ‌தெல்லாம் உண்மை😏.......................
    • அமெரிக்காவின் ஹோபோக்கன் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில்(Supermarket) பொருட்களை வாங்கி விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்ற இந்திய மாணவிகள் இருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச் சேர்ந்த 22 வயது மாணவியுமே கைதாகியுள்ளனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் விசாரணை குறித்த விடயம் தொடர்பாக பல்பொருள் அங்காடி ஊழியர்கள் ஹோபோக்கன் நகர பொலிஸாருக்கு  தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இரு மாணவிகளையும் கைது செய்து விசாரித்துள்ளனர். அதில் ஒரு மாணவி காசு கொடுக்காத பொருளுக்கு இரு மடங்கு பணத்தை தந்து விடுவதாகவும், மற்றொரு மாணவி இது போன்று இனி செய்ய மாட்டேன் என்று கதறி உள்ளார். இருப்பினும் தவறு செய்திருப்பது உறுதியானமையினால் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://tamilwin.com/article/two-indian-students-arrested-in-the-us-1713462403
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.