Jump to content

நியுசிலாந்தில் வணிகவளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கையை சேர்ந்தவர்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, valavan said:

தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவரை பிடித்து நாடு கடத்தாமல், கடைசிவரை அவரை பத்திரமா பாதுகாத்து நியூசிலாந்து மக்களுக்குகத்திகுத்து வாங்கி கொடுத்திருக்கு காவல்துறை.

வளவன்….சிலவேளை, இந்த முஸ்லீம் பயங்கர வாதிகளை, சிலோன் சோனகனை வைத்து… கூண்டோடை அப்பிறதுக்கு, நியூசிலாந்து காவல் துறை திட்டம் போட்டிருக்கலாம். அதுக்குள்ளை.. சிலோன் சோனலன் முந்தி விட்டான்.

என்றாலும்… அவனை, 60 வினாடிக்குள்… அல்லாவிடம் அனுப்பி வைத்து விட்டார்கள். இப்ப… அவன் அங்கை, 76 கன்னிப் பெண்களுக்கு… கால் கழுவி கொண்டிருப்பான்.

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்தில் அப்பாவி ம‌க்க‌ள் மீது மேற்கொள்ள‌ப்ப‌ட்ட‌ த‌னி ந‌ப‌ர் தாக்குத‌லை கடுமையாக கண்டிக்கிறோம்.

received_513032726623299.jpeg

நியூஸிலாந்து போன்ற‌ அமைதியான‌ நாடுக‌ளில் வாழ‌க்கிடைப்ப‌தே பெரும் பாக்கிய‌மாகும். 

அத‌னை மீறி இத்த‌கைய‌ தாக்குத‌லை ந‌ட‌த்திய‌வ‌ர் நிச்ச‌ய‌ம் ஒரு ம‌ன‌ நோயாளியாக‌த்தான் இருக்கும்.

இந்த‌ நிலையில் த‌னி ஒரு ம‌னித‌னின் த‌வ‌றை ஒரு ச‌மூக‌த்தின் மீதோ, ச‌ம‌ய‌த்தின் மீதோ போடாம‌ல் அந்த‌ ம‌னித‌ன் மீது ம‌ட்டுமே போட்ட‌ பிர‌த‌ம‌ர் ஜெஸிந்தா மெட‌ம் பாராட்டுக்குரிய‌வ‌ர், ம‌ரியாதைக்குரிய‌வ‌ர், எடுத்துக்காட்டான‌வ‌ர்.

ஜெசிந்தா மெட‌ம் எதிர்க்க‌ட்சி த‌லைவி அல்ல‌. நாட்டின் பிர‌த‌ம‌ர். அத்த‌கைய‌ பிர‌த‌ம‌ர் இவ்வாறு துணிச்ச‌லாக‌ பேசியுள்ளார்.

ஆனால் ந‌ம‌து நாட்டில் சில‌ முட்டாள்க‌ள் ஈஸ்ட‌ர் தாக்குத‌லை ந‌ட‌த்திய‌ போது இப்ப‌டியொரு வார்த்தையை பிர‌த‌ம‌ர் ர‌ணிலோ, அமைச்ச‌ர் ச‌ஜித்தோ சொல்ல‌வில்லை. மாறாக‌ ஒரு அப்பாவி முஸ்லிம் ச‌மூக‌த்தின் மீது அடிக்க‌ விட்டு பார்த்துக்கொண்டிருந்த‌ன‌ர்.

த‌னிந‌ப‌ர்க‌ள் த‌வ‌று செய்வ‌து எல்லா ச‌மூக‌ங்க‌ளிலும் உள்ள‌து. அத‌ற்காக‌ அந்த‌ ச‌மூக‌த்தின் மீது ப‌ழி போடுவ‌து அறிவுள்ளோர் செய‌ல் அல்ல‌.

ஆட்சியாள‌ர்க‌ளின் ம‌னோ நிலையை வைத்தே நாட்டு ம‌க்க‌ள் எதையும் தீர்மானிப்ப‌ர். ஒரு ச‌மூக‌த்துக்கெதிராக‌ தாக்குத‌ல் ந‌ட‌த்துவ‌தை அர‌சு அனும‌திக்கும் என்ற‌ உண‌ர்வு இருந்தால் ம‌ட்டுமே கும்ப‌லாக‌ தாக்க‌ முனைவ‌ர்.

இவ்வாறுதான் 83 ஜூலை தாக்குத‌லும், க‌ண்டி, திக‌ன‌, மினுவாங்கொடை, காலி என‌ ஐ தே க‌ ஆட்சியின் அனும‌தியுட‌ன் தாக்குத‌ல் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌தாகும்.

அதே போல் யாரோ சில‌ர் செய்த‌ அமெரிக்க‌ கோபுர‌ தாக்குத‌லுக்காக‌ அமெரிக்கா ஆப்கான் மீது குண்டுக‌ள் போட்டு ல‌ட்ச‌க்க‌ன‌க்கான‌ பொது ம‌க்க‌ளை அழித்த‌ன‌ர்.

இந்த‌ வ‌கையில் பிர‌த‌ம‌ர் ஜெஸிந்தாவின் வார்த்தைக‌ள் அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளுக்கு எடுத்துக்காட்டாகும்.

Mubarak Abdul Majeed

https://www.madawalaenews.com/2021/09/blog-post_97.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

வளவன்….சிலவேளை, இந்த முஸ்லீம் பயங்கர வாதிகளை, சிலோன் சோனகனை வைத்து… கூண்டோடை அப்பிறதுக்கு, நியூசிலாந்து காவல் துறை திட்டம் போட்டிருக்கலாம். அதுக்குள்ளை.. சிலோன் சோனலன் முந்தி விட்டான்.

என்றாலும்… அவனை, 60 வினாடிக்குள்… அல்லாவிடம் அனுப்பி வைத்து விட்டார்கள். இப்ப… அவன் அங்கை, 76 கன்னிப் பெண்களுக்கு… கால் கழுவி கொண்டிருப்பான்.

இந்த நபர் பள்ளிவாசலில் இன்னொருவரிடம் தான் சிரியா போய் ஐசில் உடன் சேரபோவதாக சொல்லி உள்ளார், பின்னர் சிங்கபூருக்கு ஒருவழி டிக்கெட் போட்டு ஆக்லாண்ட் ஏர்போட்டில் தடுத்துள்ளார்கள், வேட்டை கத்தி வாங்கி கைதாகியுள்ளார், ஐசில் பிரசுரங்களை வைத்திருந்துள்ளார்.

எனிலும் இவரை “பயங்கரவாத தாக்குதலுக்கு தயார் படுத்தினார்” என்று தண்டித்து வருட கணக்கில் உள்ளே போட நியூசிலாந்து சட்டம் இடம் கொடுக்கவில்லையாம்.

அதனால் ஐசில் ஆதரவு பிரசுரம் வைத்திருந்தார், கத்தி வாங்கினார் என்ற சின்ன குற்றத்துக்கே வழக்கு போட்டுள்ளார்கள்.

அந்த வழக்கிலும் “நான் இன்னும் 10 கத்தி வாங்குவேன், அது என் உரிமை” என ஜூரியிடம் கூறியுள்ளார்.

நியூசிலாந்து சட்டத்தில் உள்ள ஓட்டைகள்காரணமாகவே இந்த தாக்குதல் சாத்தியமானதாக தெரிகிறது.

இப்பவும் இவரின் பெயரை வெளியிட சட்ட தடை. இன்னும் சில நாட்கள் எடுக்குமாம் பெயரை சொல்ல.

https://www.dailymail.co.uk/news/article-9957273/New-Zealand-police-waited-outside-supermarket-knifeman-injured-seven-avoid-spotted.html

Link to comment
Share on other sites

நியூசிலாந்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு- காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம்!

நியூசிலாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடாத்திய குறித்த நபர், ஐ.எஸ். அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் இது தீவிரவாத தாக்குதல் எனவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர், மட்டக்களப்பு- காத்தான்குடி முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த முகமட் சம்சுதீன் ஆதில் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் எட்டு வயதிலேயே கொழும்புக்குச் சென்று அங்கு கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் பின்னர் 2011ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2021/1237640

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிப்படாத தகவல்.

பயங்கரவாதி சம்சுதீன் - கொழும்பு சென்பீட்டர்ஸ் மாணவன். அவரின் தந்தை ரகர் வீரர் துவான் சம்சுதீன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, விசுகு said:

அவர்கள் அதை ஒத்துக்கொள்ளவதில்லை 

ஆனால் உலகத்துக்கு சிங்களம் அப்படி தான் காட்டும்.

பிரித்தானியாவில் தடையை நீடிக்க சொன்ன காரணங்களை பார்த்தால் இது புரியும்??

20 hours ago, குமாரசாமி said:

 இன்று சிலோன் முஸ்லீம் யாரவது நான் தமிழன் என்று சொல்ல கேள்விப்பட்டுருக்கின்றீர்களா?
ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாக ஏதாவது கூட்டம் நடக்குது எண்டால் மட்டும்  தங்களுக்கும் ஒரு அலகு, சுழகு வேணுமெண்டு தொப்பியோட குந்திடுவாங்க....

எனக்கு அவர்களை பிடிக்காது என்பதற்காய் அவர்கள் தமிழர் இல்லை என்றாகி விட மாட்டார்கள் ...அவர்களது தாய் மொழி தமிழ் ...அதைத் தான் அவர்கள் வீட்டில் கதைக்கிறார்கள் ...தமிழ் சோனகர் என்றே தங்களை சொல்லிக் கொள்கிறார்கள் 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

எனக்கு அவர்களை பிடிக்காது என்பதற்காய் அவர்கள் தமிழர் இல்லை என்றாகி விட மாட்டார்கள் ...அவர்களது தாய் மொழி தமிழ் ...அதைத் தான் அவர்கள் வீட்டில் கதைக்கிறார்கள் ...தமிழ் சோனகர் என்றே தங்களை சொல்லிக் கொள்கிறார்கள் 
 
இலங்கையில் நடந்த இனக்கலவரங்களில் சிங்களம் யாரை தேடித்தேடி  கொலை செய்து,பெண்களை வன்புணர்வு செய்து, சொத்துக்களை சூறையாடியது? இனக்கலவரங்களில் முஸ்லீம்கள் அகதியாக மட்டக்களப்பு யாழ்ப்பாணம் நோக்கி சென்றார்களா? ஈழத்தமிழர்  உரிமைப்போராட்டத்திற்க்காக இன்று எந்த முஸ்லீம் அரசியல்வாதி பாராளுமன்ற கூட்டங்களில் விவாதிக்கின்றார்? 😡

முஸ்லீம்களும் தமிழர் என்று சிங்கள இனவாதிகள் நினைக்கின்றார்களா?
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கனடா தமிழர்களும் குடும்பத்துக்கு பத்து பிள்ளைகளை பெற்று சந்ததியை விருத்தி செய்யலாமே? யார் மறித்தது?

நீங்கள் சொல்லுறது சரிதான்.......இருந்தாலும் தமிழர்கள் உழைத்து சம்பாதித்து சொந்தக்காலில் நிற்க விரும்பும் மானத்தமிழர்கள்.பிள்ளைக்காசில் பயங்கரவாதத்திற்கு காசு கொடுப்பவர்கள் அல்ல.வந்து சேர்ந்து வாழவைக்கும் நாட்டிற்கு கண்ணியமாக இருக்க நினைப்பவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

எனக்கு அவர்களை பிடிக்காது என்பதற்காய் அவர்கள் தமிழர் இல்லை என்றாகி விட மாட்டார்கள் ...அவர்களது தாய் மொழி தமிழ் ...அதைத் தான் அவர்கள் வீட்டில் கதைக்கிறார்கள் ...தமிழ் சோனகர் என்றே தங்களை சொல்லிக் கொள்கிறார்கள் 
 
சரியாகச் சொன்னீர்கள்! நாம் என்ன தான் மணலுக்குள் தலை புதைத்தாலும்,  இன்று பி.பி.சியும் அவர் இலங்கையைச் சேர்ந்த தமிழர் என்று செய்தியில் அறிமுகம் செய்திருக்கிறது! ஏன்? இஸ்லாம் என்பது அவர் மதம்; தமிழ் என்பது இனம்!

"...He has now been identified as Ahamed Aathil Mohamed Samsudeen, a 32-year-old Tamil, who arrived in New Zealand in 2011 and sought refugee status"

https://www.bbc.com/news/world-asia-58446260 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் முஸ்லிம்கள்.. சர்வதேச.. மத அடிப்படைவாதக் குற்றங்களை இழைத்தால்.. அவர்கள் தமிழர்களாகி விடுகிறார்கள். ஆனால் உள்நாட்டில்.. அரசியல் உரிமை என்று வந்தால்.. தனி இனம்... இனச்சுத்திகரிப்பு..  தனி அலகு.. முஸ்லீம்கள் இனமாகி விடுகிறார்கள்.

பிபிசிக்கு தமிழ் முஸ்லிமுக்கும்.. தமிழர்களுக்கும் வித்தியாசம் தெரியல்லையா.. அல்லது.. இரு சமூகங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியவில்லையா.. அல்லது இந்தச் செய்தியை விளங்காத மாதிரி வில்லங்கத்தில் புனைய முனைகிறதா பிபிசி..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(பிபிசியிடம் எழுத்துமூலமாக.. தவறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பார்ப்போம் செய்தியை திருத்தினமோ என்று. )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அகதி கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ளார் என செய்தியில் உள்ளது. அவர் தன்னை நியூசிலாந்து அரசுக்கு எப்படி அறிமுகம் செய்தார் என்று யாருக்கு தெரியும்? நீதிமன்ற தடை நீக்கப்பட்டு அவர் விபரம் பகிரங்கப்படுத்தப்பட்டால் உண்மை அறியவரும்.

3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்லுறது சரிதான்.......இருந்தாலும் தமிழர்கள் உழைத்து சம்பாதித்து சொந்தக்காலில் நிற்க விரும்பும் மானத்தமிழர்கள்.பிள்ளைக்காசில் பயங்கரவாதத்திற்கு காசு கொடுப்பவர்கள் அல்ல.வந்து சேர்ந்து வாழவைக்கும் நாட்டிற்கு கண்ணியமாக இருக்க நினைப்பவர்கள்.

அப்படித்தான் நானும் நம்பிக்கொண்டு உள்ளேன். 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

உங்கள் கருத்து திரிக்கு சம்பந்தமில்லாத கருத்து .

உண்மைதான். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. கனடா அகதிகள் விவகாரம், மற்றும் பல்லின மக்களின் அரசியல் பங்களிப்பு பற்றி வேறோர் உரையாடலில் வறுத்து எடுக்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை குத்திய இலங்கையர் காத்தான்குடியை சேர்ந்தவர்

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கத்தியால் கொலை செய்தவர் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சூப்பர் மார்க்கட் ஒன்றில் பொதுமக்கள் ஆறு பேரை கத்தியால் குத்திய பின்னர் அந்த நாட்டு போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இலங்கையர், காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இலங்கை ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்ட சஹரான் சொந்த ஊர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து கத்திக்குத்து சம்பவத்தில் குற்றம்சாட்டப்படும் இந்த நபர், 2011ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு மாணவர் விசா மூலம் சென்றவர் என இலங்கை போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில் என்பது அவர் பெயர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் 1989ஆம் ஆண்டு பிறந்தவர் என, அவரது தயார் எம்.ஐ. பரீதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மேற்படி நபர், மட்டக்களப்பு புனித மெதடிஸ்த மத்திய கல்லூரி, அட்டுலுகம பிரதேசத்திலுள்ள பாடசாலை மற்றும், கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர்.

இவருடைய தந்தை முகம்மட் சம்சுதீன் அரச பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றி ஓய்று பெற்ற பின்னர், தற்போது தனது மகளுடன் கனடாவில் வசித்து வருகிறார்.

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில்
 
படக்குறிப்பு,

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில்

ஆதிலுக்கு ஒரு சகோதரியும் இரண்டு ஆண் சகோதரர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆதில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாவார்.

ஆதிலின் தாய் மட்டுமே தற்போது அவர் பிறந்த ஊரான காத்தான்குடியில் உள்ளார். இலங்கை போலீசார், குற்றப் புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் ஆதிலின் தாயை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்.

இதேவேளை கனடாவிலுள்ள தனது மகளிடமும் அந்த நாட்டுப் போலீசார், ஆதில் தொடர்பில் விசாரணை நடத்தியதாகவும் அவரது தாய் பிபிசி தமிழிடம் மேலும் தெரிவித்தார்.

ஆதில் தொடர்பாக அவரது தாய் பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக நேர்க்காணல் ஒன்று விரைவில் வெளியாகும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-58453628

Link to comment
Share on other sites

உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி. கவனத்தில் கொள்வார்கள் என நம்புவோமாக...........

9 hours ago, nedukkalapoovan said:

(பிபிசியிடம் எழுத்துமூலமாக.. தவறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பார்ப்போம் செய்தியை திருத்தினமோ என்று. )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

(பிபிசியிடம் எழுத்துமூலமாக.. தவறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பார்ப்போம் செய்தியை திருத்தினமோ என்று. )

நல்ல முயற்சி நெடுக்ஸ். முஸ்லீம்களை தனி இனமாக Moors என்று இலங்கை சட்டங்களே சொல்லும் போது, இவரை தமிழ் என பிபிசி சொல்வது பிழைதான்.

எப்படியும் உங்களுக்கு பதில் போட்டே ஆக வேண்டும். என்ன சொல்கிறார்கள் என்பதை அறியத்தாருங்கள்.

திருத்தாவிட்டால் OFCOM போகலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤔 BBC தமிழிற்குதான் சரியான செய்திகளை போடத்தெரியவில்லை என்றால் BBC ஆங்கிலமும் பிரச்சனையாக உள்ளமையால் நான் இனிமேல் “The Age” அல்லது அதன் சகோதர பத்திரிக்கையான “Sydney Morning Herald” மட்டுமே வாசிக்க நினைத்துள்ளேன் ஏனெனில் அவர்கள் மாத்திரமே “The man who stabbed at least five people and injured another two in a terrorist attack at an Auckland shopping mall has been named as Ahamed Aathill Mohammad Samsudeen after a suppression order was lifted on Saturday night.

Samsudeen, 32, arrived in New Zealand in 2011 from Sri Lanka on a student visa.

A Muslim, he arrived seeking refugee status, claiming he and his father had experienced serious problems with Sri Lankan authorities due to their political backgrounds.” என செய்தி போட்டிருக்கிறார்கள்.. 

 https://www.google.com.au/amp/s/amp.smh.com.au/world/oceania/terrorist-who-stabbed-6-people-in-nz-named-20210904-p58otd.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, manimaran said:

உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி. கவனத்தில் கொள்வார்கள் என நம்புவோமாக...........

3 hours ago, goshan_che said:

நல்ல முயற்சி நெடுக்ஸ். முஸ்லீம்களை தனி இனமாக Moors என்று இலங்கை சட்டங்களே சொல்லும் போது, இவரை தமிழ் என பிபிசி சொல்வது பிழைதான்.

எப்படியும் உங்களுக்கு பதில் போட்டே ஆக வேண்டும். என்ன சொல்கிறார்கள் என்பதை அறியத்தாருங்கள்.

திருத்தாவிட்டால் OFCOM போகலாம். 

முன்னைய முறைப்பாட்டிற்கு பதிலோ நடவடிக்கையோ பிபிசியால் எடுக்கப்படாத நிலை தொடர்வதால்.. மீண்டும் ஒரு முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

இந்த உண்மைக்குப் புறம்பான பிபிசியின் செய்தி உள்ளடக்கத்திற்கு எதிராக தமிழ் மக்கள் பரந்த அளவில் தமது முறைப்பாட்டை பிபிசிக்கு சமர்ப்பிப்பது இன்னும் நல்லம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

முன்னைய முறைப்பாட்டிற்கு பதிலோ நடவடிக்கையோ பிபிசியால் எடுக்கப்படாத நிலை தொடர்வதால்.. மீண்டும் ஒரு முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.

இந்த உண்மைக்குப் புறம்பான பிபிசியின் செய்தி உள்ளடக்கத்திற்கு எதிராக தமிழ் மக்கள் பரந்த அளவில் தமது முறைப்பாட்டை பிபிசிக்கு சமர்ப்பிப்பது இன்னும் நல்லம். 

நானும் அனுப்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2003ம் ஆம் ஆண்டு ஜனவறி மாதம் 29ம் திகதி முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட ஒலுவில் பிரகடனத்தின் பொழுது வாசிக்கப்பட்ட கவிதை ஒன்றில் தமிழர் தரப்பைக் குறிவைத்து கூறப்பட்டிருந்த சில வரிகள் இவை:

நாங்கள் அறுத்தெறிந்த தொப்புள் கொடி.. எங்கள் ஆண்குறியில் வெட்டி எறிந்த சதைத்துண்டு..

இவற்றால் அறிந்துகொள் – உன் மொழியால் நாங்கள் பேசும் மதம் பற்றி

இன்னும் உன்வெறி அடங்காமல் எங்களை அடித்துவிரட்ட உன் மொழிச் சாட்டையை நீ நீட்டினால்

எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம் – இனியும் உன்மொழி பேசாதபடிக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, colomban said:

இழப்புகள் இரு தரப்பிலும் உண்டு.  

இரு தரப்பையும் தமிழர் என்ற அடைப்புக்குள் சேர்ப்பதும் இனி காலம் பிந்திய செயல்.

ஆனால் இருவருக்கும் ஒரே பொது வாழிடம்தான்.

தொடர்ந்தும் பழையதை  கிண்டாமல் - சிறுபான்மை stakeholders ஆக அரசியல் செய்வதே இரு தரப்புக்கும் நன்மை தரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை குத்திய இலங்கையர் காத்தான்குடியை சேர்ந்தவர்

  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கத்தியால் கொலை செய்தவர் - கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நியூசிலாந்து ஒக்லான்ட் நகரிலுள்ள சூப்பர் மார்க்கட் ஒன்றில் பொதுமக்கள் ஆறு பேரை கத்தியால் குத்திய பின்னர் அந்த நாட்டு போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இலங்கையர், காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இலங்கை ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்ட சஹரான் சொந்த ஊர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து கத்திக்குத்து சம்பவத்தில் குற்றம்சாட்டப்படும் இந்த நபர், 2011ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு மாணவர் விசா மூலம் சென்றவர் என இலங்கை போலீஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில் என்பது அவர் பெயர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் 1989ஆம் ஆண்டு பிறந்தவர் என, அவரது தயார் எம்.ஐ. பரீதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நியூசிலாந்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மேற்படி நபர், மட்டக்களப்பு புனித மெதடிஸ்த மத்திய கல்லூரி, அட்டுலுகம பிரதேசத்திலுள்ள பாடசாலை மற்றும், கொழும்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர்.

இவருடைய தந்தை முகம்மட் சம்சுதீன் அரச பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றி ஓய்று பெற்ற பின்னர், தற்போது தனது மகளுடன் கனடாவில் வசித்து வருகிறார்.

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில்
 
படக்குறிப்பு,

முகம்மது சம்சுதீன் அஹமட் ஆதில்

ஆதிலுக்கு ஒரு சகோதரியும் இரண்டு ஆண் சகோதரர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆதில் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாவார்.

ஆதிலின் தாய் மட்டுமே தற்போது அவர் பிறந்த ஊரான காத்தான்குடியில் உள்ளார். இலங்கை போலீசார், குற்றப் புலனாய்வு பிரிவினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் ஆதிலின் தாயை தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்.

இதேவேளை கனடாவிலுள்ள தனது மகளிடமும் அந்த நாட்டுப் போலீசார், ஆதில் தொடர்பில் விசாரணை நடத்தியதாகவும் அவரது தாய் பிபிசி தமிழிடம் மேலும் தெரிவித்தார்.

ஆதில் தொடர்பாக அவரது தாய் பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்யேக நேர்க்காணல் ஒன்று விரைவில் வெளியாகும்.

https://www.bbc.com/tamil/sri-lanka-58453628

கனடாவுக்கு நசல் இருக்கும் போல...🤭

அண்மையில் ஒரு வீடியோ.

ஒரு ஆப்கன் பெண்..... பத்து தலிபான்கள் வீதியோரத்தில் விசாரணை..... முழங்காலில் இருக்குமாறு சொல்லி..... அல்லாகு அக்பர் முழங்குகிறார்கள். தீடீரென பெண் சாய்கிறார். பின்னால் நின்ற ஒருவர் கைத்துப்பாக்கி புகை விடுகிறது.

இறை பேரை சொல்லியவாறே கொலைகள் செய்யும் மதம் இது ஒன்று தான் போலும் என்று நிணைக்க தோன்றியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

எங்கள் நாவுகளை நாங்கள் அறுத்தெறிகின்றோம்

அதை செய்து இருந்தால் இலகுவாக குறிவைக்கப்படுவார்கள் என்று தெரிந்த படியால்தான் பிடிக்காத மொழியென்றாலும் அருவருப்பாய் கதைப்பதாலதான் தமிழ் அவர்கள் வாயில் செத்து பிழைக்குது .

அப்புதுல் கமீத் போன்ற வர்கள் மாறி பிறந்துவிட்டார்கள் அவர்களிடையே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2021 at 09:36, அக்னியஷ்த்ரா said:

அமைதி மார்க்க பேர்வழிகள் ஆரம்பிச்சுட்டானுவ ,பாவம் பிரதமர்  முக்காடு போட்டு முஸ்லிம்களுடன் குந்தியிருந்தும் இரக்கம் காட்டாமல் அவனுங்க வேலையை காட்டிவிட்டானுவ  

சம்மாந்தத்துறையில், சைவ கோயில் ஏதாவது அழிக்கப்பட்டு, அந்த  இடத்திலோ அல்லது அதற்கு அருகிலோ பள்ளிவாசலை எதாவது கட்டப்பட்டு இருக்கிறதா.

மட்டக்களப்பு பகுதியில் இருப்பவர்கள் இதை விபரமாக உறுதிப்படுத்த முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நானும் அனுப்புகிறேன்.

நிறைய முறைப்பாடுகள் அனுப்பப்பட்டால் நடவடிக்கை எடுப்பார்கள் என்றே நினைக்கிறோம்.

பிபிசிக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டிற்கு தற்போது அவர்களால் ஒரு பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதன் கீழ்.. தமது செய்திப் பிரிவுக்கு இந்த முறைப்பாடு பாரப்படுத்தப்படும் என்றும்.. 24 மணி நேரத்துக்குள் இந்தச் செய்திக்கு எதிராக கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் அது நாளை காலையில் செய்தி மீளாய்வுப் பிரிவுக்குப் பாரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைபாட்டிற்கான குறியீட்டு இலக்கமும் பதிவிடப்பட்டுள்ளது. 

வழமையான தமது முழுமையான வினைத்திறனாற்றலுக்கு 2 வாரங்கள் வரை அவகாசம் கோரப்பட்டுள்ளது. மேலும்.. கால அவகாசம் நீட்டிக்கப்படின்.. அது தெரியப்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.