Jump to content

நிக்கொலா ரெஸ்லா: 20ம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிக்கொலா ரெஸ்லா: 20ம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவன்

by vithai
fd-960x640.jpg

Tesla எனப் பெரிடப்பட்ட மின்சாரக் கார் வீதிகளில் திரிய ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்காவில் 2003 இல் ஆரம்பிக்கப்பட்ட Tesla Motors நிறுவனம் 2008 இல் தனது முதல் -தனி மின்சாரத்தில் இயங்கும்- காரை பாவனைக்கு கொணர்ந்தது. “ரெஸ்லாவின் தூரநோக்கும் புத்திக்கூர்மையும் இன்றி இன்றைய எமது மின்சாரக் கார் சாத்தியமில்லை” என அந்த நிறுவனம் தமது இணையத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. யார் இந்த ரெஸ்லா?

மின்சாரத்தைக் கண்டுபிடித்தவர் யார், வானொலியைக் கண்டுபிடித்தவர் யார் என்றெல்லாம் பாடசாலையில் மனனமாகத் தீத்தப்பட்ட அறிதலோடு ஒரு பொதுமனிதஜீவியாக நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 19ம் நூற்றாண்டில் தொடங்கி 20 ம் நூற்றாண்டுக்குள் தொடர்ந்த இந்த கண்டுபிடிப்புகளும் விஞ்ஞான சர்ச்சைகளும் எமது பாடசாலை ஆசிரியர்களை வந்தடையவில்லையா என்ற கேள்வி எழுகிறது. பரீட்சைக்கு வெளியில் ஒரு சிறிய அறிவுத் தூண்டலையாவது செய்ய அவர்களால் முடியவில்லையா என்ற வருத்தம் எழுகிறது.

விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்பது திடீரென ஒருவரால் கண்டுபிடிக்கப் படுவதில்லை. அந்த கண்டுபிடிப்புக்கான தொடக்கம் ஒரு கனவாகவோ கற்பனையாகவோ (புனைவாகவோ) இருக்கிறது. பின்னர் அது ஒரு கோட்பாட்டு வடிவமாக (theory) வரையறுக்கும் முனைப்புப் பெறுகிறது. அது பிறகு செயல் வடிவத்துக்கு மாற்றம் பெற்று, மீண்டும் மீண்டுமாக முயற்சிக்கப்படுகிறது. ஓய்வற்ற பரிசோதனைகளினூடும் உழைப்பினூடும் அது செழுமையாக்கப்படுகிறது. அது சமூகப் பயன்பாடாக பொதுவாக மாற்றப்பட ஏதுவானதாக மாறுகிறபோது அதைக் கண்டுபிடித்தவர் யார் என அடையாளப்படுத்தப்படுகிறார். அதுமட்டுமன்றி அது பொருளீட்டும் வழிக்கு மாற்றப்படுகிறபோது மட்டுமே அதைக் கண்டுபிடித்தவர் பிரபலப்படுத்தப் படுகிறார். இக் கண்டுபிடிப்புகளை வியாபாரம் சார்ந்து இல்லாமல் சமூகம் சார்ந்து பிரயோகிக்க முயற்சித்தவர்களின் வரலாறுகள் இருட்டடிப்புச் செய்யப் படுகின்றன. இங்குதான் மறைக்கப்பட்ட ஒரு வரலாற்றின் நாயகன் நிக்கோலா ரெஸ்லா பேசப்பட வேண்டியவராக மாறுகிறார். “20ம் நூற்றாண்டை கண்டுபிடித்த மனிதன்” எனவும் Mad Scientist என செல்லமாகவும் விளிக்கப்பட்டவர் அவர்.

இவர் 10.07.1856 இல் பல்கானில் ஸ்மில்ஜான் (Smiljan) என்ற இடத்தில் பிறந்தவர். அப்போது அவுஸ்திரிய பேரரசின் ஆளுகைக்குள் ஸ்மில்ஜானும் இருந்தது. இந்தப் பகுதி தற்கால கொராற்சியா பகுதிக்குள் இருக்கிறது. ஆனால் அவர் ஒரு சேர்பியர். தகப்பன் Milutin என்பவர் ஓதோடொக்ஸ் மதத்தின் பாதிரியாராக இருந்தவர். தாய் அசாதாரண ஞாபகசக்தி கொண்டவர் என சொல்லப்படுகிறது. ரெஸ்லா தனது தாயை ஆதர்சமாக நேசித்தார். தனது கண்டுபிடிப்புகளுக்கு அவரையே கௌரவப்படுத்தினார். தற்போதைய சேர்பியாவின் தலைநகரான பெல்கிராட் இல் (1952) ஒரு ரெஸ்லா நூதனசாலை (museum) உம், தற்போதைய கொரோற்சியாவின் தலைநகர் சாகிராப் இல் (1954) இன்னொரு நூதனசாலையும் இருக்கின்றன. ரெஸ்லாவை கொரோற்சியர்களும் சேர்பியர்களும் தத்தமது நாட்டைச் சேர்ந்தவர் என இழுபறிப்படுகிறார்கள்.

ரெஸ்லா தனது பத்தொன்பதாவது வயதில் ஒரு மின்சாரவியல் பொறியியலாளராக Graz (Austria) இல் பட்டப்படிப்பை மேற்கொண்டார். ஆனால் பணவசதியின்மை காரணமாக இடையில் நிறுத்திக் கொண்டார். பட்டப்படிப்புகள் இல்லாமலே அவர் ஒரு இயற்பியல்வாதியாகவும் மின்னணு பொறியியலாளராகளும் கண்டுபிடிப்பாளராகவும் கல்வியெல்லைகளைத் தாண்டி முன்னே சென்றார். அவர் ஒரு விநோதமான மனிதராக இருந்தார். அவரது கண்டுபிடிப்புகளின் தொடக்கம் கற்பனை. அதில் அவர் காணுகிற புனைவான உருவ அமைப்புகளை (image) அப்படியே தனது கண்டுபிடிப்புகளின் வடிவமாக்கினார். ஒருமுறைகூட அது பிழைத்ததில்லை என்கிறார். தனது வாழ்நாளில் 300 க்கு மேற்பட்ட சிறியதும் பெரியதுமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியதாக பதிவுகள் காணக் கிடைக்கின்றன.

அவர் தனது படிப்பை இடைநிறுத்திய பின் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் தொடர்புகளைத் துண்டித்தார். புடாபெஸ்ற் க்கு சென்று அங்கு ஒரு தொலைபேசி நிறுவனத்தில் வேலைசெய்தார். பின்னர் 1882 இல் பாரிஸ் சென்று அங்கு எடிசன் கம்பனியின் (Edison Compay) பிரெஞ்சுக் கிளையில் வேலை செய்தார். இங்கு வேலை செய்த சார்ள்ஸ் பச்லர் என்பவரின் சிபாரிசுக் கடிதத்தோடு 1884 இல் ரெஸ்லா நியூயோர்க்குக்கு கடல்வழிப் பயணம் செய்தார். பயணத்தின்போது பணத்தைப் பறிகொடுத்த அவர் நியூயோர்க்கை அடைந்தபோது நான்கு சதம் மட்டுமே எஞ்சியிருந்தது. அந்தக் கடிதத்தில் சார்ள்ஸ் எடிசனுக்கு இப்படி எழுதியிருந்தார். “எனக்குத் தெரிந்த அபாரமான இரு மனிதர்களில் நீங்கள் ஒருவர். மற்றவர் இந்த இளம் மனிதர்” என ரெஸ்லாவைச் சுட்டி எழுதியிருந்தார். ரெஸ்லாவும் எடிசனும் ஒருவரை ஒருவர் ஆகர்சிப்பவர்களாக இருந்தனர். “என்னிடம் மிக கடுமையாக உழைக்கும் உதவியாளர்கள் இருக்கிறார்கள். But You take the cake” என எடிசன் சான்றிதழ் வழங்கினார். அந்தக் காதல் நீடிக்கவில்லை. எடிசனின் நேரோட்ட மின்சார முறைமையும் (DC current) ரெஸ்லாவின் ஆடலோட் மின்சார முறைமையும் (AC current) முரண்பாட்டின் களமாக மாறியது.

Edison

1.jpg எடிசன்

எடிசன் கம்பனியின் நிர்வாகி நியூயோர்க்கில் நேரோட்ட மின்சாரத்தில் இயங்கும் இயந்திரத்தை செழுமைப்படுத்தினால் ரெஸ்லாவுக்கு ஐம்பதினாயிரம் டொலரை போனஸ் ஆக அளிப்பதாகக் கூறியிருந்தார். ஒரு சில மாதங்களின் பின் ரெஸ்லா அதை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். ஆனால் எடிசன் பணத்தை கொடுக்க மறுத்தார்.

“You don’t understand our American humor” எனக் கூறி எடிசன் ரெஸ்லாவுக்கு தனது உண்மை முகத்தைக் காட்டினார். ரெஸ்லா வேலையிலிருந்து தன்னை விடுவித்தார். 1885 இல் சொந்தமாக ஒரு மின்சார நிறுவனத்தைத் தொடங்கினார். அவரது கண்டுபிடிப்புகளுக்கு முதலிட முன்வராத முதலீட்டாளர்கள் அந்தக் கம்பனியையும் அவரது கண்டுபிடிப்புகளின் உரிமங்களையும் வாங்கிக்கொள்ள முயற்சித்தனர். அந்த சூழ்ச்சியை அவர் அடையாளம் கண்டு மறுத்தார். அவரால் சொந்தமாக பொருளாதார ரீதியில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தனது நிறுவனத்தைக் கைவிட்டு வீதி புனரமைப்புப் பணியில் சேர்ந்தார். ஒரு நாளைக்கு 2 டொலர் கூலியாகப் பெற்றார்.

ரெஸ்லாவின் ஆடலோட்ட மின்சார முறைமையை பரிசீலித்த Western Union Company ரெஸ்லாவின் கண்டுபிடிப்பை முதலீடாக மாற்ற எத்தனித்து, அவருக்கு ஒரு பரிசோதனைக்கூடத்தை எடிசனின் கம்பனிக்கு அருகாமையில் உருவாக்கிக் கொடுத்தது. இதுவே DC க்கும் AC க்குமான ‘மின்சார யுத்தமாக’ மாறியது. அங்குதான் ரெஸ்லா ஆடலோட்ட மின்சார முறைமையை பயன்பாட்டுக்கு மாற்ற induction motor இனை வடிவமைத்தார். அதாவது கண்டுபிடித்தார். இந்த முறைமையே இன்று உலகெங்கும் பெரும்பாலும் பாவனையில் உள்ளது. இங்கும் தான் வடிவமைத்த இயந்திரம் கற்பனையில் தான் கண்ட அதே வடிவமைப்பில்தான் இருந்தது என ரெஸ்லா குறிப்பிட்டார். ரெஸ்லா உருவாக்கிய AC motor உம் ஆடலோட்ட மின்சார முறைமையும்தான் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னரான மாபெரும் கண்டுபிடிப்பாகும்.

2.jpg

எடிசனின் நேரோட்ட மின்சாரத்தினை உயர் அழுத்த (voltage) அல்லது தாழ் அழுத்த மின்சாரமாக மாற்ற முடியாததால் ஒற்றைவழி மின்சாரப் பாதையின் தூரம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமைந்தது. ஒருசில மைல் தூரத்தை மட்டுமே அது எட்டக்கூடியதாக இருந்ததால் அந்த தூர இடைவெளிகளில் அதற்கான மின்சார உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால் அந்த மின்சார வசதி கிராமப் புறங்களை எட்டுவது இலகுவானதல்ல. அதாவது அது சமூகமயப்படுத்தப்படுதல் சாத்தியம் குறைந்ததாக இருந்தது. ரெஸ்லாவின் இருவழிப் பாதை கொண்ட ஆடலோட்ட மின்சாரத்தை மின்னழுத்தமாற்றியின் (transformer) மூலமாக உயர் அல்லது தாழ் அழுத்த மின்சாரமாக மாற்றக்கூடியதாக இருந்ததால் அது நீண்ட தூரம் பயணம் செய்யும் வலுவை எட்டியது. அதன் பலனே இன்று மின்சாரம் குச்சொழுங்கை வரை வந்து மக்களுக்கு ஒளியூட்டுகிறது.
Edison’s General Electric Company க்கு போட்டியாக நின்ற George Westinghouse ரெல்சாவின் இந்த கண்டுபிடிப்பு எடிசனை ஆட்டம் காணச் செய்யும் என நம்பியதோடல்லாமல், அது பெரும் இலாபமீட்டக்கூடியது என அடையாளம் கண்டு அங்கீகரித்தது. அதற்கான அனுமதிப் பத்திரத்தைக் கொடுத்து அறுபதினாயிரம் டொலரை ரெஸ்லாவுக்கு வழங்கியது. அதன் உரிமம் விற்பனையாகிற மின்சாரத்தின் அளவைப் பொறுத்து தீர்மானிக்கப்படும் எனவும் உடன்பாட்டுக்கு வந்தது.

Tesla VS Edison

3.jpg

மின்சார கண்டுபிடிப்புக்கான உரிமத்தைப் பெற்றிருந்த எடிசன் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிலைக்கு தான் வந்துவிடலாம் என்ற அச்சத்தில் வெகுண்டெழுந்தார். ரெஸ்லாவின் ஆடலோட்ட மின்சாரத்துக்கு எதிரான பெரும் பிரச்சாரத்தில் இறங்கினார். மாநில அரசுகளிலிருந்து பொதுமக்கள் வரை தவறான தகவல்களை பரப்பி லொபி செய்துகொண்டிருந்தார். மின்சாரக் கதிரையில் மிருகங்களை இருத்தி ஆடலோட்ட மின்சாரம் மூலம் கொலை செய்து அதன் ஆபத்தை பொதுவெளியில் செய்து காட்டினார். அது மிருகக்காட்சிச் சாலையிலிருந்து யானையை வாங்கி அதன் உயிரைப் பறித்துக் காட்டியதுவரை சென்றது. பின் மின்சாரக் கதிரை மரணதண்டனை முறைமைக்கு அதை பயன்படுத்திக் காட்டி எதிர்ப்பிரச்சாரம் செய்தார். ரெஸ்லாவின் ஆடலோட்ட மின்சாரம் மிக ஆபத்தானது என நிறுவும் அவரது முயற்சிகள் இவ்வாறாகத் தொடர்ந்தன.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததான புலுடாவின் 400 வது வருடத்தைக் கொண்டாடும் விதமாக 1883 இல் நடந்த சிக்காக்கோ உலகக் கண்காட்சி (World’s Fair) நிலைமையை தெளிவுபடுத்தியது. 27 மில்லியன் மக்கள் வந்து பார்வையிடலாம் என கணிக்கப்பட்டிருந்த மாபெரும் கண்காட்சி இது. பல நாட்களாக நடைபெற்ற இந்த கண்காட்சியை நேரோட்ட மின்சாரத்தின் மூலம் மின்சாரமயப்படுத்த எடிசன் 554’000 டொலரை பேரம் பேசினார். ஆனால் கண்காட்சியை ரெல்சாவின் ஆடலோட்ட மின்சாரத்தை பயன்படுத்தி ஒளிரச் செய்வதற்கு Westing Hause 399’000 டொலருடன் ஒப்பந்தம் செய்தது. இது ஆடலோட்ட மின்சார முறைமைக்கு கிடைத்த பெரும் வெற்றியாக அமைந்தது.

1896 நவம்பரில் நயாகரா நீர்வீழ்ச்சி மின்சார கம்பனியானது நீர்வீழ்ச்சியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தை Westing Hause க்கு வழங்கியிருந்தது. இந் நிறுவனம் ரெஸ்லாவின் AC induction motor க்கான உரிமத்துக்கு ஏற்கனவே லைசென்ஸ் வழங்கியிருந்தது. Hydroelectric அணை புதிதாக கட்டப்பட்டு, ஆடலோட்ட மின்சார முறைமையில் நயாகரா நீர்வீழ்ச்சி மின்சாரத்தை பெற்றெடுத்தது- இதுவே வரலாற்றில் முதன்முதலாக நீர்வீழ்ச்சியிருந்து மின்சாரம் உற்பத்திசெய்யப்பட்ட நிகழ்வாகியது. நயாகரா நியூயோர்க் Buffalo பகுதி முழுவதையும் மின்சார ஒளிபாய்ச்சத் தொடங்கியது. ரெஸ்லாவின் ஆடலோட்ட மின்சார வலிமை இன்னொரு பரிமாணத்தில் நிரூபிக்கப்பட்டது. DC க்கும் AC க்குமான போரில் AC வெற்றிபெற்றது. இன்று நயாகராவைப் பார்த்தபடி ரெஸ்லா சிலையாக வடிவம் பெற்று நிற்கிறார்.

4.jpg Niagara Power Plant

ஆனால் Westing Hause நிறுவனம் பத்து மில்லியன் கடனுக்குள் வீழ்ந்தது. ரெஸ்லாவின் எழுச்சி விரைவிலேயே வீழ்ச்சியாக மாறியது. 1897 இல் அந் நிறுவனம் தாம் ஏற்கனவே ரெஸ்லாவுக்கு உரிமம் குறித்து வழங்கிய உறுதிமொழியை காப்பாற்ற முடியாமல் போனது. அது ரெஸ்லாவிடம் அதை மறுபரிசீலனை செய்யுமாறு மன்றாடியது. எந்தவித வியாபார நோக்குமின்றிய ஒரு சமூக மனிதனான அசல் விஞ்ஞானியான ரெஸ்லா தனது நன்றிக்கடனை அந்த நிறுவனத்துக்கு செலுத்துமுகமாக தனது உரிம ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார். அன்று அது 12 மில்லியன் டொலர் பெறுமதியானது. இன்றைய பெறுமதியில் அது 300 மில்லியன் டொலர். அதை அவர் இழந்தார். அவர் ஒரு கறாரான வியாபாரியாக இருந்திருந்தால் உலகத்தின் முதல் பணக்காரராக மாறியிருக்க முடியும் என்கிறார்கள். அந் நிறுவனம் ரெஸ்லாவுக்கு 216000 டொலரை கொடுத்து ரெஸ்லாவின் ஆடலோட்ட மின்சாரத்துக்கான நிரந்தர அனுமதியைப் பெற்றுக்கொண்டது. இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சுயாதீனமாக ஒரு மின்சார ஆய்வுகூடத்தை ரெஸ்லா நிறுவினார். அவர் 300 க்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தினார்.
1898 இல் முதன்முதலில் Remote Control இனை உருவாக்கி New York Madison Park இல் ஒரு வள்ளத்தை இயக்கிக் காட்டினார் ரெஸ்லா. மக்கள் இதை அவரது மந்திரசக்தியாக நினைத்து பார்த்து பரவசப்பட்டனர். இதன்மூலம், Drone களை கண்டுபிடித்திருக்கும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிநாதமாக ரெஸ்லா இருக்கிறார்.

Tesla’s first Remote control

மின்சார பிறப்பாக்கியில் தொடங்கி அதை தொலைதூரமாய் காவிவந்து உங்கள் வீட்டு சுவரிலுள்ள மின்சொருகிக்குள் (plug) கொண்டுவருவது வரை ரெஸ்லாதான் வருகிறார். அதிலிருந்து பெரும்பாலான உங்கள் உபகரணங்களை இயக்கும் வழியில் அல்லது மின்கலங்களை மின்னேற்றம் செய்யும் வழியில் எடிசன் வருகிறார். அந்த வழிகளில் AC இனை DC ஆக மின்னுருமாற்றம் செய்யும் converter/switching adaptor இன் உதவி அவருக்குத் தேவைப்படுகிறது. AC இல் இயங்கும் உபகரணங்களும் இருக்கின்றன. அவற்றை இயக்குவதில் மின்னழுத்தமாற்றி (transformer) பாவிக்கப்படுகிறது.

5.jpg Tesla’s first Remote control

ஆக ஆடலோட்ட மின்சாரத்தை நேரோட்டமாக மின்னுருமாற்றம் செய்ய வேண்டிய தேவை ஓரளவு நீடிப்பதால் எடிசன் வாழ்கிறார். வாழட்டும். ஆனால் எமது பாடப் புத்தகங்கள் ரெஸ்லாவை கொலைசெய்வதுதான் வருத்தமளிக்கிறது. ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மின்சாரத்தை எடுத்துவந்து எமது அன்றாட பாவனைவரை வழங்கிய ஒரு மகத்தான கண்டுபிடிப்பாளனை நாம் காணாதிருக்கிறோம். அறியாதிருக்கிறோம்.
(இன்று நேரோட்ட மின்சாரத்தை உயர் அழுத்த அல்லது தாழ் அழுத்தத்துக்கு மாற்ற முடிகிற கண்டுபிடிப்புகள் வளர்ச்சியடைந்துவிட்டது என்பதை ஒரு அறிதலுக்காக இங்கு குறித்துக்கொள்ளலாம்)

முதன்முதலில் மின்சாரத்தை கண்டுபிடித்தது யார் என்ற கேள்விக்கு மற்றைய கண்டுபிடிப்புகள் போன்றே அது சமூகமயப்படுவதுதான் விடையளிக்க முடியும். 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான Bagdad Battery எனப்படும் மண்கூசாக்களை 1936 இல் அவுஸ்திரியா அகழ்வாராய்ச்சியாளர் Wilhelm König ஈராக்கில் கண்டுபிடித்தார். அது 0.5 வோல்ற் மின்சாரத்தை உருவாக்க வல்லதாக இருக்கிறது. ஈராக் யுத்தத்தின்போது -கீழைத்தேய வரலாறுகளை அழித்தொழிக்கும்- மேலைத்தேய நாடுகளின் சூழ்ச்சி பக்டாட் அருங்காட்சியகத்திலிருந்து அவற்றை களவாடிச் சென்றுவிட்டது. சுவிசில் (interlaken) இருந்த Mystery Park என்ற கீழைத்தேய அறிவியில் காட்சியகத்தின் முகப்பில் இந்த பக்டாட் பற்றறியின் தொழிற்பாட்டு அடிப்படையில்ஒரு மாதிரி வடிவம் (பெரிய கண்ணாடிக் கூசாக்களில்) அதன் தொழிற்பாட்டு அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது. அது உற்பத்தியாக்கிக்கொண்டிருந்த மின்சாரம் ஒரு ரியூப் லைற்றை ஒளிரச் செய்தபடி இருந்தது. இப்போ இல்லை. Mystery Park மூடப்பட்டுவிட்டது.

பக்டாட் பற்றறியை முதன்முதலில் உருவாக்கிவரை கண்டுபிடித்து அவர் மின்சாரத்தைக் கண்டுபிடித்தார் என யாரும் சொல்வதில்லை. எடிசனுக்கு முன்னரே நேரோட்ட மின்சாரத்தை உருவாக்கும் முயற்சியில் சில விஞ்ஞானிகள் இருந்தனர். ரெல்சாவுக்கு முன்னரும் ஆடலோட்ட மின்சாரத்தை உருவாக்கும் முயற்சியில் சில விஞ்ஞானிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் யாரையும் மின்சாரத்தைக் கண்டுபிடித்ததாக சொல்வதில்லை. சமூக வாழ்வியல் பயன்பாட்டுக்கு அது உகந்ததாக அது பூரணமாக்கப்படும்போதே கண்டுபிடித்தவர் யார் என்ற கேள்வியும் விடையும் கிடைக்கிறது. ரெஸ்லா ஆக்கிரமித்திருக்கும் மின்சார உலகில் எடிசன் ஒரு மூலையில் நிற்கிறார். மின்சாரத்தை கண்டுபிடித்தவர் தோமஸ் அல்வா எடிசன் என நாம் பாடமாக்கி வைத்திருக்கிறோம்.

20ம் நூற்றாண்டை அண்மித்த காலத்தில் ரெஸ்லா உயர் மின்னழுத்தத்தையும் (voltage) அதிர்வலைகளையும் (frequency) உருமாற்றும் வலுவுடைய ‘ரெஸ்லா சுருள்’ (Tesla Coil) இனை கண்டுபிடித்தார். இது நியோன், புளோரசன்ற் போன்ற புதிய வகை மின்சார ஒளியூட்டலை உருவாக்கியதோடல்லாமல், எக்ஸ்ரே படப்பிடிப்பை சாத்தியமாக்குவற்கான அடிப்படையையும் வழங்கியது. இந்த ‘ரெஸ்லா சுருள்’ வானொலி பக்கம் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியது.

electro-magnetic-motor-edited.jpg Electo Magnetic motor radio-waves-edited-1.jpg Tesla Radio Waves

அடுத்த எழுச்சியையும் வீழ்ச்சியையும் ரெஸ்லா சந்தித்தார். இந்த ‘ரெஸ்லா சுருள்’ வானொலி சமிக்ஞையை அனுப்பவும் பெறவும்கூட சாத்தியங்களை உருவாக்கியது. அதேநேரம் இந்த கண்டுபிடிப்பு முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனியுடன் போட்டியில் களமிறங்கினார் ரெஸ்லா. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல இலண்டனில் இருந்த மார்க்கோனிக்கு அமெரிக்காவில் இருந்த எடிசன் பொருளாதார பக்கபலத்தை வழங்கினார். 1895 இல் 50 மைல் தூரம் பயணம் செய்யக்கூடிய வானொலி சமிக்ஞையை அனுப்பி தனது கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்ட ரெஸ்லா ஆயத்தமானார். எதிர்பாராதவிதமாக அவரது ஆய்வுகூடம் தீக்கிரையானது. அவரது ஆண்டுக்கணக்கான ஆராய்ச்சிகளும் கருவிகளும் ரெல்சாவின் எழுச்சியின்மேல் சாம்பலாய் மூடியது.

அதிலிருந்து விரைவில் விடுபட்ட அவர் தனது வானொலி ஒலிபரப்புக்கான கண்டுபிடிப்புகளுக்கு உரிமம் கோரி 2 ஆண்டுகளின் பின் (1897) அமெரிக்க உரிம நிலையத்தில் பதிவுசெய்தார். 1900 மார்ச் மற்றும் மே மாதங்களில் அவரது வானொலிய 2 கண்டுபிடிப்புகளுக்கும் உரிமம் வழங்கப்பட்டது. (இல.645576 , இல. 649621). அதே ஆண்டு நவம்பர் மாதம் மார்க்கோனி தனது வானொலிய கண்டுபிடிப்புக்கு உரிமம் கோரி விண்ணப்பித்தார். (இல.7777). அமெரிக்க ‘உரிம நிலையம்’ அதை நிராகரித்தது. ரெஸ்லாவின் வடிவத்தை (Tesla Coil) பிரதிபண்ணியதாக காரணத்தை முன்வைத்தது.

ரெஸ்லா மீண்டும் எழுந்தார். தொடர்புச் சாதனங்களின் மாபெரும் எதிர்காலத்தை உருவாக்க அவர் கனவு கண்டார். ஒரு புதிய உலகை சிருஸ்டிக்கும் முயற்சி அது எனவும் கூறினார். கம்பியில்லா தொடர்பாடலை (wireless communication) உருவாக்க அவர் திட்டமிட்டார். தொலைபேசி ஊடாக கடல்கடந்து செய்திகளை மட்டுமல்ல, இசையை நிகழ்ச்சிகளை படங்களை ஒளிபரப்ப முடியும் எனவும் இராணுவ தொடர்பாடல்களை பாதுகாப்பாக செய்ய வழி ஏற்படும் எனவும் ரெஸ்லா அமெரிக்க முதலீட்டாளர் மோர்கனோடு (J.P.Morgan) விருந்துண்ணும்போது கூறினார். இந்த wireless முழுவதுமாக பிரயோகிக்கப்படும் நிலை வந்தால் இந்த உலகம் ‘ஒரு பிரமாண்டமான மூளையாக’ உருமாற்றம் அடையும் என சொன்னார். ஒரு விஞ்ஞான புனைவாக்கம் போல் இருந்த அவரது பேச்சை மோர்கன் நம்பியதில் வியப்பேதுமில்லை. (இன்று அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது).

மோர்கன் ரெஸ்லாவின் இந்தத் திட்டத்துக்கு முதலிட ஒப்புக்கொண்டார். ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் டொலரை அவர் அதற்காக ஒதுக்கினார். கிடைக்கும் பணத்தை வைத்து தனது வேலைகளைத் தொடங்குவது என ரெஸ்லா திட்டமிட்டார். 1898 இல் நியூயோர்க்கின் Long Island மத்தியில் Wardenclyffe Tower என அழைக்கப்பட்ட 186 அடி உயரமுள்ள ஒரு இராட்சத தொடர்பு சாதனக் கோபுரத்தை ரெஸ்லா நிர்மாணித்தார். இக் கோபுரத்தின் உச்சியில் உருக்கினாலான 55 தொன் எடையுள்ள அரைக் கோளம் வடிவமைக்கப்பட்டது. 16 இரும்பு குழாய்கள் 300 அடி ஆழத்துக்கு பூமிக்குள் செலுத்தப்பட்டன. ஒரு பிரமாண்டமான கனவை நனவாக்கும் எதிர்கால பிரமிப்பாக அந்தக் கோபுரம் உருவாகியது. பிரபல பொறியிலாளர் வைற் என்பவரால் 1901 இல் இக் கோபுரம் வடிவமைக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததை விடவும் அதிக செலவைத் தின்றுதீர்த்த இக் கோபுரம் முழுமையடையாமல் நின்றுபோனது.

tower-on-newspaper-edited.jpg

மோர்கனிடம் மேலதிக பணத்துக்கான கோரிக்கையை ரெஸ்லா முன்வைத்தபோதும் அது சாத்தியமாகவில்லை. ரெஸ்லாவின் கனவு நனவாகாமல் உருக்குலைந்தது இந் நேரம் பல முதலீட்டாளர்கள் மார்க்கோனிக்குப் பின் வரிசைகட்டத் தொடங்கியிருந்தனர். 1901 டிசம்பரில் மார்க்கோனி இங்கிலாந்திலிருந்து Newfoundland க்கு முதன்முதலாக வானொலி சமிக்ஞையை அனுப்புவதில் வெற்றிகண்டார். வெகுண்டெழுந்த ரெஸ்லா மார்க்கோனி தனது பதினேழு கண்டுபிடிப்புகளின் வடிவமைப்புகளை களவாடியிருப்பதாக அதாவது பிரதிபண்ணியிருப்பதாக நீதிமன்றம் சென்றார். வழக்கின் போக்கு மார்க்கோனிக்கு சாதகமாக சென்றுகொண்டிருந்தது. அதே நேரம் 1904 இல் எதிர்பாராதவிதமாக அமெரிக்க உரிம நிலையம் கச்சையை மாற்றிக் கட்டியது. தாம் நிராகரித்த மார்க்கோனியின் முந்தைய உரிம விண்ணப்பத்தை மீள்பரிசீலனைக்கு எடுத்து, அதை அவருக்கு வழங்கியது. மார்க்கோனியின் தந்தையின் செல்வாக்கும் எடிசனின் பின்புலமும் அமெரிக்க உரிமை நிலையத்தின் பின் கதவு வழியாக உட்புகுந்ததாக சொல்லப்படுகிறது. இது ரெஸ்லாவுக்கு பெரும் பொருளாதார இழப்பையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தியது.

Marconi

marconi-edited.jpg

ரெஸ்லாவின் இறப்பின் பின்னரான சில மாதங்களில் அமெரிக்க உயர்நீதிமன்றம் இந்தக் களவை உறுதிசெய்து தீர்ப்பளித்தது. வானொலி கண்டுபிடிப்பில் ரெஸ்லாவின் பங்கை உறுதிசெய்வதாக அது அறிவித்தது. 1901 இல் தொடுக்கப்பட்ட வழக்கு 1943 இல் -அதுவும் ரெல்சா இறந்தபின்- தீர்ப்புக்கு வந்து சேர்ந்த அவலம் நிகழ்ந்தது. அதாவது 42 ஆண்டுகளுக்குப் பின் வானொலி கண்டுபிடிப்பில் ரெஸ்லாவுக்கு பெரும் ‘பங்கிருந்ததாக’ நீதிமன்றம் சூட்சுமமாக அறிவித்தது.

ஆனால் 1901 இலிருந்தே இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனி வானொலியை கண்டுபிடித்ததாக நிலைநாட்டப்பட்டுவிட்டது. 1943 தீர்ப்புக்குப் பின்னரும் அதேதான் தொடர்கிறது. மாற்றமில்லை. 1911 இல் மார்க்கோனிக்கு வானொலியைக் கண்டுபிடித்தவர் என நோபல் பரிசு வழங்கப்பட்டது. அன்றுமுதல் பாடப் புத்தகங்களில் வானொலியின் தந்தை மார்க்கோனி என பதியப்பட்டது. அவர் பெரும் செல்வந்தர் ஆனார். மற்றைய கண்டுபிடிப்புகள் போலவே வானொலி கண்டுபிடிப்பிலும் பல விஞ்ஞானிகளின் முயற்சி தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால் ரெஸ்லாவிடமிருந்து களவாடப்பட்ட ரெஸ்லா சுருள் தொழில்நுட்பமும் அமெரிக்க உரிம நிறுவனத்தின் சூழ்ச்சியும் வானொலியை மார்க்கோனியின் கண்டுபிடிப்பாக மாற்றியது. ரெல்சாவின் இன்னொரு வீழ்ச்சி இது.
தொடர்ந்து நியூயோர்க் ஹொட்டேலின் 33 வது மாடியில் ஒரு சிறிய அறையில் வாழ்ந்துவந்த ரெஸ்லா எப்போதும் ஊடகங்களின் செய்திகளினிடையே வந்துபோய்க்கொண்டிருந்தார். அந்த அறைக்கான வாடகையை Westing Hause நிறுவனம் இறுதிவரை செலுத்திவந்தது அவருக்கு ஒரு ஆறுதலாக இருந்தது.

மீண்டும் எழுந்த ரெல்சா 1912 இல் ஒரு புதிய வடிவிலான Turbine Engine ஒன்றினை வடிவமைத்து பரீட்சித்துப் பார்த்தார். Westinghouse Manufacturing, General Electric Company இரண்டுமே பெரும் பணச் செலவில் Turbine Engine வடிவமைப்புகளை மெருகூட்டுவதில் ஈடுபட்டன. காற்று மூலம் இயங்கும் இந்த இயந்திரத்தினை உபயோகித்து பெரும் காற்றாலையை இயங்கச்செய்து வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்கத் தொடங்கின.

1928 இல் அவருக்கு 72 வயதாக இருக்கும்போது தனது கடைசி கண்டுபிடிப்புக்கான உரிமத்தை அமெரிக்க உரிம நிலையத்திடமிருந்து பெற்றார். “Apparatus For Aerial Transportation” என பெயரிடப்பட்ட இந்த வடிவமைப்பு உலங்கு வானூர்தியையும் விமானத்தையும் ஒருசேர ஒத்த வடிவமைப்புடைய பறக்கும் இயந்திரமாகும். இதன் எடை 800 இறாத்தல். இது ஒரு வாகன தரிப்பிடத்திலிருந்தோ கூரையிலிருந்தோ ஏன் யன்னலிலிருந்தோகூட பறக்கவிடப்படக்கூடியது என்றார் ரெஸ்லா. இதை 1000 டொலர்களுக்கு உற்பத்தி பண்ணி விற்க முடியும் என்றார். முதலிட யாரும் முன்வரவில்லை. செங்குத்தாக இறங்கி ஏறும் இன்றைய VSTOL (vertical short takeoff and landing) விமானங்களின் கருவறை ரெல்சாவின் இந்தக் கண்டுபிடிப்புத்தான்!. இங்கும் இந்த மனிதனை பணம் கைவிட்டது. அவன் தனது கனவை இழந்தான்.

1931 இல் அவரது 75 வது பிறந்தநாளில் நியூயோர்க் ரைம் சஞ்சிகையின் முகப்பு அட்டையில் ரெஸ்லா சிந்தித்துக்கொண்டிருந்தார். அவரது கண்டுபிடிப்புகள் குறித்தான எழுத்துகளை அந்த சஞ்சிகை வெளியிட்டிருந்தது. அல்பேர்ட் அயன்ஸ்ரைன் உட்பட 70 க்கு மேற்பட்ட விஞ்ஞானிகளின் வாழ்த்துக் கடிதங்களை ரெல்சாவுக்கு அனுப்பினர்.

முதலாவது உலக யுத்த தொடக்கத்தின்போது கடலில் உள்ள கப்பல்களினை கண்டறிய புதிய வழியை மொழிந்தார். உயர் அதிர்வுள்ள றேடியோ அலைகளை செலுத்துவதன் மூலம் அவை கப்பலில் பட்டு தெறித்து வரச்செய்து அவைகளை ஒரு புளோறசன்ற் திரையில் விழுத்த முடியும் என்றார். இந்த திட்டம் அந்தக் காலவெளியில் மிக முன்னோக்கிய கதையாடலாக இருந்தது. அதுவே இன்றைய றாடர் தொழில்நுட்பத்தின் முதல் விளக்கமாக இருந்தது. அதுமட்டுமல்ல எதிர்காலத்தில் இறக்கைகளற்ற வாகனங்கள் தானியக்கி கருவி (remote control) மூலம் இயக்கப்படுவதற்கும் அவை செங்குத்தாகவே தரையில் வெடிகுண்டுகளோடு எதிரியின் நடுவே எதிர்பாராத விதமாக இறக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் வரும் என்று எச்சரிக்கை செய்த முதல் மனிதர் அவர்.

தனது தந்தையிடமிருந்து அவர் பெற்றுக்கொண்ட போரெதிர்ப்பு மனவுணர்வு அவரை போரற்ற உலகு ஒன்றிற்கான தொழில்நுட்ப வழிவகைகளை கண்டடையும் முனைப்பை ஊக்குவித்தது. யூலை 1934 இல் மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்தபோது அவர் இதில் தீவிரமாக சிந்திக்கலானார். தனது 78 வயதில் Dead Beam என்ற ஒன்று பற்றிய கட்டுரையை நியூயோர்க் ரைம்ஸ் இல் வெளியிட்டார். இதற்கு நாட்டு எல்லைப் புறம் முழுவதும் மின் நிலையங்களை அமைக்க வேண்டும். செறிவூட்டப்பட்ட மின்துகள்களைக்கொண்ட கதிர்வீச்சை வானில் ஏவுவதின் மூலம் அது உற்பத்தியாக்கும் அளவிடற்கரிய சக்தியானது 250 மைல் தூரத்திற்குள் ஒரே நேரத்தில் பத்தாயிரம் போர்விமானங்களை வீழ்த்தக்கூடியது என அறிவித்தார். இந்த வலுவை ஒவ்வொரு நாடும் பெற்றுக்கொள்ளும்போது சீனப்பெருஞ்சுவர் போன்று தத்தமது நாட்டுக்கு ஒரு தொழில்நுட்பப் பாதுகாப்பு அரணை அமைக்க முடியும், இதன்மூலம் போர் சாத்தியமற்றதாக்கப்படும் என நம்பினார். பிரமிப்பூட்டிய ரெஸ்லாவின் இந்தக் கூற்று பல வாதப் பிரதிவாதங்களை உருவாக்கியது. அப்படியானதொரு கண்டுபிடிப்பு நம்பமுடியாததாகவும் நகைப்புக்கு உரியதாகவும் பேசு பொருளானது. விஞ்ஞானத்தின் எல்லா கண்டுபிடிப்புகளுமே அதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த மனிதர்க்கு நம்ப முடியாததாகவேதான் இருந்தது என்பதை கவனத்தில் எடுத்தால், ரெஸ்லாவின் Dead Beam சாத்தியமற்றது என வாதிடுவது விஞ்ஞான தர்க்கமல்ல. எதிர்காலம்தான் அதற்கு விடைதர முடியும்.

1937 இல் போர் உடைப்பெடுத்தது. தனது முயற்சிக்கு Peace Beam என மாற்றிப் பெயரிட்ட ரெஸ்லா அது குறித்த தொழில்நுட்ப விபரிப்புகளையும் வரைபடங்களையும் கொண்ட அறிக்கையினை தயாரித்து, தனது கண்டுபிடிப்பை நிகழ்த்திக் காட்ட பொருளாதார உதவி கேட்டு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா போன்ற நாடுகளுக்கு அனுப்பினார். அவர் எதிர்பார்த்த பெறுபேறு அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை. . New Art of Projecting Concentrated Non-Dispersive Energy Through Natural Media என்பதே அவர் சமர்ப்பித்த அறிக்கை. இந்த தொழில்நுட்ப விபரிப்பிலிருந்து உருவிய கண்டுபிடிப்பே அமெரிக்காவினதும் சோவியத் யூனியனினதும் charged particle beam weapon ஆகும்.
ரெஸ்லா சமூகத்தை நேசிக்கிற, போரை வெறுக்கிற ஒரு விஞ்ஞானியாக இருந்தார். ஆனால் இந்த உலகின் ஆதிக்கப் போட்டிகளின் அரசியலை புரிந்துகொண்டிருக்கவில்லை. தனது Peace Beam இனை நாடுகள் தத்தமது நாட்டின் பாதுகாப்புக்காக பாவித்தால் போர் சாத்தியமில்லை என மட்டும் நம்பினார். அதற்கான பொருளாதார பலம் வறிய நாடுகளுக்கு எப்படி கிடைக்கும் என அவர் அரசியல் ரீதியில் சிந்திக்கவில்லை. அது அவரது தவறுமல்ல. அவரது முழு வலுவும் விஞ்ஞான உலகத்துள் செலவிடப்பட்டுக் கொண்டிருந்தது. வெளி உலகை அவர் காணவில்லை. இன்றைய உலக அடாவடித்தனங்களை பார்க்கிறபோது அத் திட்டம் நிறைவேறியிருந்தால் வல்லரசுகள் இன்னும் மேலே போய் கொடுமுடியை தரித்திருக்கவே வாய்ப்பு உண்டு.

ரெஸ்லாவின் திட்டத்தை மிக அதிக அளவில் கரிசனை காட்டியது சோவியத் யூனியன். நியூயோர்க் இலுள்ள Amtorg Trading Corporation க்கு ரெஸ்லா இதற்கான தொழில்நுட்ப வரைவுகளை வழங்கினார். இந் நிறுவனம் சோவியத் யூனியனுக்கு ஆயுதங்களை தயாரித்து வழங்குவதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனமாகும். 2 வருடங்களின் பின்னர் 1939 இல் இந்த திட்டத்தின் ஒரு படிநிலை சோவியத் யூனியனில் பரீட்சிக்கப்பட்டது. சோவியத் யூனியன் 25’000 டொலரை ரெஸ்லாவுக்கு வழங்கியது.

tesla-oid-edited.jpg

நியூயோர்க் விடுதியில் ஒரு சிறிய அறையில் தொடர்ந்து வசித்துவந்த ரெஸ்லா கடைசிக் காலங்களில் அருகிலுள்ள பூங்காவில் ஓய்வெடுக்கத் தொடங்கினார். அங்குள்ள வர்ணக் கிளிகளுக்கு உணவூட்டுவதில் மகிழ்ச்சியடைந்தார். காயம்பட்ட அல்லது நோயுற்ற கிளிகளை வீட்டுக்கு எடுத்துவந்து சிகிச்சை அளித்தார். தனது அறையில் கையில் அமர்ந்திருந்த ஒரு கிளி தன் கண் முன்னால் மரணமுற்றதை பின்நாளில் அவர் வேதனையுடன் நினைவு கூர்ந்தார். அதில் தனது மரணத்தை உணர்ந்ததாக அவர் எழுதுகிறார்.

1943 இல் ரெஸ்லா தனது 86 வது வயதில் அறைக்குள் இறந்துகிடந்தார். அவரது கண்டுபிடிப்புகள் குறித்த முக்கிய குறிப்புகளை எப்பிஐ எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. 1952 இல் ரெல்சாவின் மருமகனான சவா கொசோனாவிச் இடம் எஞ்சிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டன. அவைகளை உள்ளடக்கிய பெரும் ரெல்சா நூதனசாலை பெல்கிராட் இலும் பின்னர் சாகிராப் இலும் ரிற்றோவின் ஆட்சியின்போது நிறுவப்பட்டன.

“The Life and Times of Nikola Tesla” என்ற நூலை (2001) எழுதிய Marc Seifer, “எங்களது முழு தொடர்பாடல் முறைமைகளும் (communication system) ரெல்சாவின் முறைமைகளை அடிப்படையாகக் கொண்டது” என எழுதினார். ஆம், 20ம் நூற்றாண்டின் தொழில்நுட்ப உலகை சிருஸ்டித்த ஒரு மாபெரும் மனிதரிடமிருந்து எல்லாவற்றையும் உருவி எடுத்த பணக்கார விஞ்ஞானிகளினதும், முதலீட்டு நிறுவனங்களினதும், அமெரிக்க உரிம நிலையத்தினதும் (Patent Office), அமெரிக்க நீதித்துறையினதும் சூழ்ச்சிக்குப் பலியாகிப்போனவன் அவன். வரலாறும் இருட்டடிப்பையே அவன் மீது ஒளியாய்ப் பாய்ச்சியது. அவனுக்குக் கடனாளியாக இருக்க வேண்டிய இந்த உலகில் அவன் பெரும் கடனாளியாக மரணித்தான்!

பா. ரவீந்திரன்

Thanks for article Images : “Newsthink”

இணைப்பு 01

bagdad-battery-thx-printerest-1.jpg

இணைப்பு 02

niagara-statue-us-side-1.jpgniagara-statue-canada-side.jpg

நன்றி – சுடுமணல்

இணைப்பு – https://sudumanal.com/2021/08/27/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%b0%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be/?fbclid=IwAR3ljqvdr6rB0j4qlOlvQiV0U-XYh4oGFCXGWrhUBRaugprS-WcAeApj-A0

 

https://vithaikulumam.com/2021/09/01/01092021/

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கிருபன் changed the title to நிக்கொலா ரெஸ்லா: 20ம் நூற்றாண்டைக் கண்டுபிடித்தவன்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2021 at 13:20, கிருபன் said:

---இந்தப் பகுதி தற்கால கொராற்சியா பகுதிக்குள் இருக்கிறது. ஆனால் அவர் ஒரு சேர்பியர். தகப்பன் Milutin என்பவர் ஓதோடொக்ஸ் மதத்தின் பாதிரியாராக இருந்தவர். தாய் அசாதாரண ஞாபகசக்தி கொண்டவர் என சொல்லப்படுகிறது. ரெஸ்லா தனது தாயை ஆதர்சமாக நேசித்தார். தனது கண்டுபிடிப்புகளுக்கு அவரையே கௌரவப்படுத்தினார். தற்போதைய சேர்பியாவின் தலைநகரான பெல்கிராட் இல் (1952) ஒரு ரெஸ்லா நூதனசாலை (museum) உம், தற்போதைய கொரோற்சியாவின் தலைநகர் சாகிராப் இல் (1954) இன்னொரு நூதனசாலையும் இருக்கின்றன. ரெஸ்லாவை கொரோற்சியர்களும் சேர்பியர்களும் தத்தமது நாட்டைச் சேர்ந்தவர் என இழுபறிப்படுகிறார்கள்.

niagara-statue-canada-side.jpg

மிக, மிக... அருமையான ஒரு, அறிவியல் இணைப்பு. கிருபன் ஜீ....
நல்ல ஒரு, சந்தர்ப்பத்தை... தவற, விட்டு... விட்டேன். 
இணைப்பிற்கு... நன்றி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.