Jump to content

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நிருபரை ஏன் சிங்களம் தெரியாமால் இந்த வேலை செய்கிறாய் என்று பொலிஸ் கேட்டது தப்பு.அத்துடன் அந்த பொலிஸ் தான் தமிழ் தெரிந்து வைத்திருக் வேணும் தமிழர் பகுதியில் குப்பை கொட்டுவதால்.ஆனால் தமிழர்கள் சிங்களம்.அறிந்திருப்பதில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
29 minutes ago, சுவைப்பிரியன் said:

அந்த நிருபரை ஏன் சிங்களம் தெரியாமால் இந்த வேலை செய்கிறாய் என்று பொலிஸ் கேட்டது தப்பு.அத்துடன் அந்த பொலிஸ் தான் தமிழ் தெரிந்து வைத்திருக் வேணும் தமிழர் பகுதியில் குப்பை கொட்டுவதால்.ஆனால் தமிழர்கள் சிங்களம்.அறிந்திருப்பதில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கிறேன்.

உங்கள் கருத்தில் எனக்கு மாற்று கருத்து இல்லை. அதை அமுல்படுத்த எமக்கு ஒரு அரசியல் அலகை பெற்றுக் கொள்ள தவறியது எமது தவறு என்பதே எனது நிலைப்பாடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, tulpen said:

உங்கள் கருத்தில் எனக்கு மாற்று கருத்து இல்லை. அதை அமுல்படுத்த எமக்கு ஒரு அரசியல் அலகை பெற்றுக் கொள்ள தவறியது எமது தவறு என்பதே எனது நிலைப்பாடு. 

ஆமாம் தட்டில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். பெறத்தான் தவறி விட்டோம்.

போங்க

போய் நஞ்சு மனசால வரலாற்றை படிக்காமல் மண்டையால சிந்தித்து பாருங்கள் 😡

Link to comment
Share on other sites

50 minutes ago, விசுகு said:

போய் நஞ்சு மனசால வரலாற்றை படிக்காமல் மண்டையால சிந்தித்து பாருங்கள் 😡

மண்டையால் சிந்தித்தவர்களை எல்லாம் மண்டையில் போடும் போது  அதை கண்டித்து திருத்தாமல் கைதட்டி நாம் ஊக்கப்படுத்தியதால் இப்போது நாம் புலம்பவேண்டி உள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1950 களில் இருந்தே இந்த பிரச்சினை இருக்கின்றது. 

தற்போதுள்ள நிலையில் எல்லோரும் படித்து முன்னெறுகின்றார்கள். யாழில் இன்றைய இளைஞ‌ர்கள் நன்கு சிங்களம் கதைக்கின்றார்கள், தனியார் துறையிலும் அரசாங்கத்திலும் நல்ல பதவியில் உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

1956 ஆம் ஆண்டு சூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டம் நிறைவேற்றப் படுவதற்கு முன் வட கிழக்குத் தமிழ் பாடசாலைகளில் சிங்களப் புத்த பிக்குகளும் ஆசிரியர்களாக வந்து சிங்களம் படிப்பித்தார்கள். தமிழ் மாணவர்களும் ஆர்வத்தோடு சிங்கள மொழி கற்றார்கள். அரச கருமமொழிச் சட்டத்தை நிறைவேற்றிச் சிங்கள மொழி தமிழர்மீது திணிக்கப்பட்டதால் அந்த மொழி கற்றல் தடைப்பட்டது. பலாத்காரத்தை யாரும் விரும்புவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மண்டையால் சிந்தித்தவர்களை எல்லாம் மண்டையில் போடும் போது  அதை கண்டித்து திருத்தாமல் கைதட்டி நாம் ஊக்கப்படுத்தியதால் இப்போது நாம் புலம்பவேண்டி உள்ளது.  

நன்றி

நீங்க நஞ்சு மனசால தான் வரலாற்றை படிக்கிறீர்கள் என்பதை ஏற்றுக் கொண்டதற்கு.

உங்கள் போன்றவர்கள் இன்று வரை எம்மை பயங்கரவாதிகளாக்க உலகம் முழுவதும் உழைக்கும் வரை தமிழினத்துக்கு விடிவில்லை. சிங்களத்தை விட எம்மை பயங்கரவாதிகளாக்கியவர்கள் அதற்காக அதிகம் உழைப்பவர்கள் நீங்கள் தான்.

தமிழர் விடுதலை எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இந்த பேக்கரி உரிமையாளர்களும் அவர்களிடம் வேலை செய்த சிங்களவரும் நன்றாக தமிழ் பேசினர் என்பதே உண்மை. சிறு வயதில் அவர்களை எமது ஊர் அயலவர்கள் என்றே நினைத்தேன். 

நான்… அவர்களை, எங்களின் சொந்தக்காரர் என நினைத்தேன். 😂

பொய் சொல்லலாம்… ஆனால், மூட்டைக் கணக்கில் சொல்லப் படாது. 🤣

Link to comment
Share on other sites

18 minutes ago, தமிழ் சிறி said:

நான்… அவர்களை, எங்களின் சொந்தக்காரர் என நினைத்தேன். 😂

பொய் சொல்லலாம்… ஆனால், மூட்டைக் கணக்கில் சொல்லப் படாது. 🤣

நீங்கள் கிழட்டு வயதில் அப்படி சொந்தக்காரராக  நினைக்கலாம்.   ஆனால் நான் கூறியது மத, இன வேறுபாடு தெரியாத மிகவும் சிறிய வயதில் அப்படி நினைத்தது பற்றியது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விசுகு said:

நன்றி

நீங்க நஞ்சு மனசால தான் வரலாற்றை படிக்கிறீர்கள் என்பதை ஏற்றுக் கொண்டதற்கு.

உங்கள் போன்றவர்கள் இன்று வரை எம்மை பயங்கரவாதிகளாக்க உலகம் முழுவதும் உழைக்கும் வரை தமிழினத்துக்கு விடிவில்லை. சிங்களத்தை விட எம்மை பயங்கரவாதிகளாக்கியவர்கள் அதற்காக அதிகம் உழைப்பவர்கள் நீங்கள் தான்.

தமிழர் விடுதலை எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.😡

இது அவசியமற்ற ஆத்திரம் விசுகர்! ருல்பென் குறிப்பிட்டுக் காட்டிய செயல்கள் நடந்த போது இதே ஆத்திரம் உங்களுக்கு வரவில்லை என நம்புகிறேன் - ஆனால் செய்ததைச் சுட்டிக் காட்டும் போது வருகிறது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நன்றி

நீங்க நஞ்சு மனசால தான் வரலாற்றை படிக்கிறீர்கள் என்பதை ஏற்றுக் கொண்டதற்கு.

உங்கள் போன்றவர்கள் இன்று வரை எம்மை பயங்கரவாதிகளாக்க உலகம் முழுவதும் உழைக்கும் வரை தமிழினத்துக்கு விடிவில்லை. சிங்களத்தை விட எம்மை பயங்கரவாதிகளாக்கியவர்கள் அதற்காக அதிகம் உழைப்பவர்கள் நீங்கள் தான்.

தமிழர் விடுதலை எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.😡

விடுங்கள் விசுகர் ! இதுகளெல்லாம் திருந்தாத ஜென்மங்கள். இவர்களை ஏறெடுத்துப்பார்க்காமல் கடந்துசெல்வதே எமக்கு நல்லது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

ஆனால், சிங்களவரைப் பொருத்தவரை நானும் தமிழனே, நானும் இன்னொரு புலிதான். என்னுடன் பல்கலையில் படித்தவர்களே என்னை இழுத்துக்கொண்டுபோய் மொறட்டுவை பொலீஸில் கொடுத்தார்கள். அபோதுதான் நான் எனது அடையாலத்தினை உண்மையாக உணர்ந்துகொண்டேன். நான் என்னதான் சிங்களம் பேசி, அவர்களுடன் என்னையும் ஒருவனாகக் காட்ட முனைந்தாலும் என்னை அவர்கள் தம்மில் ஒருவனாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.எனக்குத் தெரிந்த சிங்களம் என்னை காப்பாற்றவில்லை. எனக்கு சிங்களவர்களைப் போலவே அசல் உச்சரிப்புடன் சிங்களம் பேசமுடியும் என்று நான் காட்டிவந்த "விலாசம்" என்னைக் காப்பாற்றவில்லை. மொறட்டுவையில் வைத்து அடித்தபோது "நீ புலிகளின் புலநாய்வுத்துறையால் அனுப்பப்பட்டவன் தானே? அதுதானே சிங்களம் பேசுகிறாய்?" என்று கேட்டே அடித்தார்கள். எனக்குச் சிங்களம் தெரியுமென்பதால் பிரபாகரனையும் புலிகளையும், ஒட்டுமொத்தத் தாமிழர்களை படுமோசமாகச் சித்தரித்து சிங்களத்தில் என்னிடம் கூறி, "உனது நண்பர்களுக்குச் சொல்லடா" என்று கத்தினார்கள். 

இதே போல் என் நண்பனுக்கும் நிகழ்ந்தது. ஆனால் அவன் பிளட் இயக்கம் சார்பானவன்.இன்றும் அதேதான். ஆனால் இந்த நொடி வரை விடுதலைப்புலிகளை அவன் கூடாத மாதிரி விமர்ச்சித்ததேயில்லை. ஏனெனில் அவனுக்கு இந்த உலகத்தின் அரசியல் நன்கு தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

தினசரி இங்க வந்து சிங்களத்தை திட்டி ஒப்பாரி வைத்து புலம்புவது மட்டும் கிழிஞ்ச தேய்ஞ்ச இத்துபோன கசற் இல்லையா? 

ஈழத்தமிழர்கள் சிங்கள பொதுமக்களுக்கு ஏதாவது கொடுமைகள் செய்தார்களா?
இனவாத சிங்களம் ஈழத்தமிழருக்கு செய்த அழிவுகள் கொடுமைகள் பற்றி ஏதாவது தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

களை பிடுங்குதென்றல் என்ன? அடுத்தவர் பெற்ற பிள்ளைகளை போட்டு தள்ளும் ஈனச்செயல் தானே! 

 தமிழர் பிரதேசங்களில் சிங்கள இராணுவம் செய்த மனித அழிவுகளில் இறந்தது யார் பெற்ற பிள்ளைகள்?

சிங்கள/இந்திய இராணுவத்திற்கு தெரியாத இடங்களில் மறைந்திருந்த போராளிகளை காட்டிக்கொடுத்தவர்கள் யார் பெற்ற பிள்ளைகள்?

8 hours ago, tulpen said:

இந்த பேக்கரி உரிமையாளர்களும் அவர்களிடம் வேலை செய்த சிங்களவரும் நன்றாக தமிழ் பேசினர் என்பதே உண்மை. சிறு வயதில் அவர்களை எமது ஊர் அயலவர்கள் என்றே நினைத்தேன். 

உங்கள் எழுத்துக்களின் வாசனை மூலம் நாம் நாம் தெரிந்து கொண்டோம்.
டொட்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்கள் சிங்கள பொதுமக்களுக்கு ஏதாவது கொடுமைகள் செய்தார்களா?

ஏதோ நம்மால் முடிந்த பங்களிப்பு 🙂:

https://en.m.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE

1 hour ago, குமாரசாமி said:

இனவாத சிங்களம் ஈழத்தமிழருக்கு செய்த அழிவுகள் கொடுமைகள் பற்றி ஏதாவது தெரியுமா?

https://en.m.wikipedia.org/wiki/List_of_attacks_on_civilians_attributed_to_Sri_Lankan_government_forces

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/9/2021 at 20:31, valavan said:

நியாயத்தை கதைப்போம் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒரே அநியாயமா கதைக்கிறீர்களே சித்தப்பு.

அவருக்கு சிங்களவனுக்கு செம்புத்தூக்க மட்டும்தான் தெரியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2021 at 08:46, கற்பகதரு said:

பரிதாபமாக இருக்கிறது, குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்கிறதா? முத்தமுதல் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் குடும்பம் பிளைக்கும்.

நீங்களே இவ்வளவுகாலமும் பிள்ளை குட்டிகளுடனிருக்கும்போது (ஒரு சின்ன நம்பிக்கைதான்) ரஞ்சித் இருப்பதில் வியப்பேதும் இல்லையே!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இவ்வாறு எமது மக்கள் குறைந்த பட்சம் தமது ஆதங்கத்தையாவது பயமின்றி சொல்ல முன்வருவது ஒரு நல்ல விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/9/2021 at 19:58, முதல்வன் said:

கதிர்காமரை சொல்லலாம். மாமனிதர் ரவிராஜ் இதற்குள் எப்படி அடங்குவார். 

அவரால் காப்பாற்றப்பட்டவர்கள் இன்னும் பலர் இருக்கிறார்கள்.

கதிர்காமர் சிங்களத்துக்கு முட்டுக்கொடுத்தார், தன்னை நிஞாயப்படுத்துவதற்காக அந்த நிஞாயப்படுத்தலுக்கு வலுச் சேர்ப்பதற்காக அவரை சிங்களம் பயன்படுத்தியது. இந்த தமிழர், தமிழரின் நிஞாயமான போராட்டத்தை சிங்களத்துக்கு எதிரான பயங்கரவாதமாக சித்தரித்தார். தகுதியிருந்தும் பிரதமராகும் வாய்ப்பை ஏன் இழந்தார்? தமிழன் என்கிற ஒரே காரணத்திற்காக. மாமனிதர், அமரர் ரவிராஜ் ஏன் கொலை செய்யப்பட்டார்? தனது  சிங்கள மொழியாற்றலை வைத்து சிங்களவரிடம் தமிழரின் போராட்டத்தின் நிஞாயத்தை புரிய வைக்க முயன்றதால் படுகொலை செய்யப்பட்டார். சிங்கள மக்களுக்கு  பொய்யை சொல்லி ஏமாற்றி வந்தது வெளியில் வந்தால் தமது செல்வாக்கு குறைவதோடு, அரசியல் கனவும் கலைந்து விடும் என்கிற பயத்தினால் அவரை போட்டுத்தள்ளியது. ஆகவே தமிழர் கற்கும் சிங்களம் சிங்களத்துக்கு முட்டுக்கொடுக்கவே அல்லாது நமக்கு உதவாது. நாங்கள் சிங்களத்தை கற்றாலென்ன, விழுந்து, விழுந்து சேவகம் செய்தாலென்ன, தமிழன் தமிழன்தான். சிங்களவன் சிங்களவன் தான்.  சரி; இங்கு எத்தனைபேர் எனக்கு சிங்களம் தெரியும் நான் சிங்களவரால்  எந்த துன்பமும் அடையவில்லை என்று சொல்லுகிறார்கள், அவர்களில் எத்தனைபேர் தங்கள் சிங்கள நண்பர்களுக்காவது நமது போராட்டத்தின் நிஞாயத்தை சொன்னார்களா? சொல்லியும் புரிந்தார்களா? சொல்லவில்லையா? ஏன் சொல்லவில்லை? சொன்னால் தெரியும் என்ன நடக்கும் என்று. வேணுமென்றால் தமிழருக்கு பெருமையாய் சொல்லலாம் எனக்கு சிங்களம் தெரியுமென்று. இங்கு சில தடவை நான் சொல்லியுள்ளேன். சிங்களம் தெரிந்தவர்கள் முகநூல் வழியாக சிங்கள இளம் சந்ததிக்கு நமது போராட்டத்தின் நிஞாயத்தை புரியவைக்க முயலலாம், இன்றைக்கு இல்லாவிட்டாலும் ஒருநாள் அதற்கான பலன் கிடைக்கும். ஆனால் தனக்கு எது நடக்கும் என்று தெரிந்தும் ரவிராஜ் முயன்றார். பொய்யை சொல்லி ஏமாற்றி காரியம் சாதிக்கும் சிங்களம் சும்மா இராது. முகநூல் இலகுவான வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, satan said:

சிங்களத்தை கற்கும் இரு வகையானோரையும், அவர்கள் செயலையும் நீங்கள் மிக சரியாக இனம் காட்டியுள்ளிர்கள்.

ரவிராஜ் ஏன் கொலையானார் என்பதுக்கு நீங்கள் கொடுத்த விளக்கமும் 100% சரியே.
 
ஆனால் ஒரு ரவிராஜை யுத்த காலத்தில் போட்டு தள்ளியது போல், பெரும் எண்ணிக்கையில் தமிழர்களை கொல்ல இப்போ முடியாதல்லவா?

கணிசமான அளவு தமிழர்கள் சிங்கள மொழியில் ஒவ்வொரு மட்டத்திலும் எம் நிலைப்பாட்டை எடுத்து சொல்லும் போது அதில் ஒரு சிறிய தாக்கமாவது நிகழும்.

பிக்குகளின், அரசியல்வாதிகளின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் சிங்கள மக்களின் ஒரு குறித்த சதவீதத்தையாவது உண்மையை தரிசிக்க வைத்தால் - அது எமக்கு நன்மையாகாதா?

ஒரு 10 வருடத்தில் 500 பேரையாவது விக்ரமபாகு போல் சிந்திக்க தூண்டலாமே?

ஆயுதம் மெளனித்த பின் - இப்படியாக ஒரு வகையில் நான் ஏன் முயல கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

ஆயுதம் மெளனித்த பின் - இப்படியாக ஒரு வகையில் நான் ஏன் முயல கூடாது?

இது வேலை செய்யாது கோஷான். பேசுவதற்கு வேண்டுமானால் இவை அழகான சொற்றொடர்களாக இருக்கலாம். நிதர்சனத்தில் பயன்படாது.
காஷ்மீரிலும், திபெத்திலும், பலஸ்த்தீனத்திலும் நீதி கேட்டுப் போராடும் மக்களின் உண்மையான கோரிக்கைகளை அந்த ஆக்கிரமிப்பாளர்கள் புரிந்துகொள்ளாமல் விட்டதாலேயே இன்றுவரை அம்மக்கள் அவலப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது சிங்களவர்களுக்கு தமிழரின் கோரிக்கைகள்தான் புரியவில்லை என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு நாம் கேட்பது என்னவென்பது நன்றாகவே தெரியும், அதன் நியாயத்தன்மையும் புரியும். இவை எதுவுமே தெரியாமலா சந்திரிக்காவும் ரணிலும் புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள்? இது தெரியாமலா பண்டாரநாயக்காவும், சேனநாயக்காவும் தமிழரசுக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்தார்கள்? நிச்சயமாக இல்லை. நாம் கேட்பது என்னவென்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர்களுக்கு அதனைத் தர விருப்பமில்லை. நாங்கள் சிங்களத்தில் அதைக் கேட்டாலென்ன, தமிழில் கேட்டாலென்ன, விடை எப்போதுமே ஒன்றுதான்.

1948 இலிருந்து ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த காலம் வரைக்கும் எமது தமிழ்த் தலைவர்கள் இதைச் செய்யவில்லை என்று சொல்கிறீர்களா? காலிமுகத் திடல் சத்தியாக்கிரகத்திற்கு என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டீர்களா? 1977 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் கூறியதை சிங்களவர்கள் ஏற்றுக்கொண்டார்களா? 

சரி, இதையெல்லாம் விட்டு விடுங்கள். தாமே தருவதாகக் கூறிய தீர்வுகளையாவது தந்தார்களா? 

சிங்களவர்களுக்கு நாம் புரியவைப்பதற்கு மீதம் ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் அதைச் செய்து காட்டி விட்டோம்.

இனி வேறு முறையில் சொல்வதற்கு புதிதாக எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆனால் சிலவேளை நாம் எமது முன்னைய வேண்டுகோள்களை  எல்லாம் கைவிட்டு, "இந்நாடு சிங்களவர்களுக்கு உரியது, நாம் வந்தேறிகள், சிங்களமும் பெளத்தமும் இந்நாட்டின் அதியுச்ச சக்திகள். உங்களுக்கு எதைத் தர வேண்டும் என்று விருப்பம் இருக்கிறதோ, அதைத் தாருங்கள்" என்று கேட்டுப் பார்க்கலாம். அப்போதுகூட எமக்கு எதுவுமெ கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.

நாம் சொல்வதை அவர்கள் கேட்கப்போவதில்லை. மாறாக தாம் கேட்க விரும்புவதை நாங்கள் சொல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

சுதந்திரத்தின் பின்னரான 73 வருடகால சிங்களவர்களுடனான தமிழரின் சரித்திரத்திலிருந்து நான் புரிந்துகொண்டது இதனைத்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எரித்ரியாவிலும், வியட்நாமிலும், பொஸ்னியாவிலும், குரோஷியாவிலும், சோவியத்தின் ஆப்கான் ஆக்கிரமிப்பிலும் ஆக்கிரமிப்பாளர்கள் தாம் மேற்கொண்ட ஆக்கிரமிப்புப் போர்களில் தோற்கடிக்கப்பட்ட பின்னரே அடக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை கிடைத்தது. குறைந்தது அருகிலிருந்த பிராந்திய வல்லரசொன்றாவது அம்மக்களுக்கு ஆதராவாக இருந்தது.

எம்மைப்பொறுத்தவரை ஆக்கிரமிப்புப் போரை வெற்றிகொள்வதில் நாம் தோற்றுவிட்டோம். எமக்கு ஆதரவான எந்தச் சக்தியும், அயலில் மட்டுமல்ல இந்த உலகிலும் இல்லை என்பதே இப்போது நிதர்சனமாகிறது. 

போரில் வெற்றிபெற்ற தரப்பு விட்டுக் கொடுத்ததாக சரித்திரம் இல்லை. அவர்கள் வைத்ததே சட்டம், அவர்கள் கூறுவதே நீதி, அவர்கள் விரும்பித் தருவதாகச் சொல்வதே தீர்வு. இதில் நாம் கேட்பதற்கு எதுவுமே இல்லை. ஆக்கிரமிப்பாளனின் தயவில் இருக்கும் அடிமைகள் நாங்கள். அவனின் மொழிபேசுவதால் மட்டும் எமது அவலம் நீங்கிவிடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

இது வேலை செய்யாது கோஷான். பேசுவதற்கு வேண்டுமானால் இவை அழகான சொற்றொடர்களாக இருக்கலாம். நிதர்சனத்தில் பயன்படாது.
காஷ்மீரிலும், திபெத்திலும், பலஸ்த்தீனத்திலும் நீதி கேட்டுப் போராடும் மக்களின் உண்மையான கோரிக்கைகளை அந்த ஆக்கிரமிப்பாளர்கள் புரிந்துகொள்ளாமல் விட்டதாலேயே இன்றுவரை அம்மக்கள் அவலப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது சிங்களவர்களுக்கு தமிழரின் கோரிக்கைகள்தான் புரியவில்லை என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு நாம் கேட்பது என்னவென்பது நன்றாகவே தெரியும், அதன் நியாயத்தன்மையும் புரியும். இவை எதுவுமே தெரியாமலா சந்திரிக்காவும் ரணிலும் புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள்? இது தெரியாமலா பண்டாரநாயக்காவும், சேனநாயக்காவும் தமிழரசுக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்தார்கள்? நிச்சயமாக இல்லை. நாம் கேட்பது என்னவென்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர்களுக்கு அதனைத் தர விருப்பமில்லை. நாங்கள் சிங்களத்தில் அதைக் கேட்டாலென்ன, தமிழில் கேட்டாலென்ன, விடை எப்போதுமே ஒன்றுதான்.

1948 இலிருந்து ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த காலம் வரைக்கும் எமது தமிழ்த் தலைவர்கள் இதைச் செய்யவில்லை என்று சொல்கிறீர்களா? காலிமுகத் திடல் சத்தியாக்கிரகத்திற்கு என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டீர்களா? 1977 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் கூறியதை சிங்களவர்கள் ஏற்றுக்கொண்டார்களா? 

சரி, இதையெல்லாம் விட்டு விடுங்கள். தாமே தருவதாகக் கூறிய தீர்வுகளையாவது தந்தார்களா? 

சிங்களவர்களுக்கு நாம் புரியவைப்பதற்கு மீதம் ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் அதைச் செய்து காட்டி விட்டோம்.

இனி வேறு முறையில் சொல்வதற்கு புதிதாக எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆனால் சிலவேளை நாம் எமது முன்னைய வேண்டுகோள்களை  எல்லாம் கைவிட்டு, "இந்நாடு சிங்களவர்களுக்கு உரியது, நாம் வந்தேறிகள், சிங்களமும் பெளத்தமும் இந்நாட்டின் அதியுச்ச சக்திகள். உங்களுக்கு எதைத் தர வேண்டும் என்று விருப்பம் இருக்கிறதோ, அதைத் தாருங்கள்" என்று கேட்டுப் பார்க்கலாம். அப்போதுகூட எமக்கு எதுவுமெ கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.

நாம் சொல்வதை அவர்கள் கேட்கப்போவதில்லை. மாறாக தாம் கேட்க விரும்புவதை நாங்கள் சொல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

சுதந்திரத்தின் பின்னரான 73 வருடகால சிங்களவர்களுடனான தமிழரின் சரித்திரத்திலிருந்து நான் புரிந்துகொண்டது இதனைத்தான். 

நீங்கள் சொல்வதில் ஒன்றில் கூட எனக்கு மாற்று கருத்து இல்லை.

எமது வரலாற்றை திரும்பி பார்த்தால் - இது வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது.

சாதாரண சிங்கள மக்கள் இனவாதிகள் இல்லை என முன்பு ஒருவர் எழுதியபோது நான் அதை மறுத்து எழுதினேன்.

இனவாதத்தின் ஊற்று கண் சாதாரண சிங்கள மக்கள்தான். ஆனால் அதன் போஷகர்கள் பிக்குகள், பிரதிநிதிகள் அரசியல்வாதிகள் என.

ஆனால் சாதாரண சிங்கள மக்களுக்கு நேரடியாக நாம் எம் தரப்பு நியாயத்தை தெளிவாக எடுத்து சொல்லவில்லை. சொன்ன ரவிராஜ் போன்றோரும் உடனடியாக அகற்றபட்டார்கள்.

உலக வரலாற்றை பார்க்கும் போது மதங்களின் கட்டுப்பாட்டில் பெரும் இனவாத கூட்டங்களாக இருந்த இனங்கள் கூட அதில் இருந்து வெளி வந்துள்ளன.

அடுத்து இலங்கையில் முஸ்லீம்களை நாம் உதாராணமாக கொள்ள முடியாதா?

ஈஸ்டர் தாக்குதல் போல் ஒன்றின் பின்பும் முஸ்லீம்கள் தம்மை பெரும் தாக்குதலில் இருந்து காப்பாற்ற ஒரு காரணம் முஸ்லீம் தலைமைகள், இரெண்டாம் தலைமைகள் வேறு பட்ட மட்டங்களில் உடனடியாக, நேரடியாக, சிங்கள மக்களுடன் அவர்கள் மொழியில் உரையாடியது எனவும் நினைக்கிறேன்.

கால ஓட்டத்தில் எந்த அமைப்பின் பிடியும் ஒரு மக்கள் கூட்டதின் மேல் தளரவே செய்யும். ஒரு காலத்தில் பிக்குக்களின் பிடி தளரும் போது, நாம் எமது நியாயத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் எடுத்து சொல்ல முடியும் என்றால் - சிறு மாற்றமாவது ஏற்படலாம்.

புலம் பெயர் பொருளாதார பலம், அடுத்த சந்ததிகள் புலம் பெயர் அரசியலில் ஆதிக்கம், தமிழ் நாட்டில் தமிழ் தேசிய எழுச்சி, இவை எல்லாம் ஒன்று கூடி வரும் போது, ஒரு நியாயமான தீர்வை சிங்கள மக்கள் ஏற்கும் நிலை வரலாம் என்பதே, இப்போ நம் எல்லாருக்கும் தெரியும் ஒரே தீர்வுக்கான வழி, இல்லையா?

தமிழர்கள் சிங்கள புலமை பெறுவது இந்த வழியை இலகுவாக்கும் என்பது என் நம்பிக்கை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

ஈஸ்டர் தாக்குதல் போல் ஒன்றின் பின்பும் முஸ்லீம்கள் தம்மை பெரும் தாக்குதலில் இருந்து காப்பாற்ற ஒரு காரணம் முஸ்லீம் தலைமைகள், இரெண்டாம் தலைமைகள் வேறு பட்ட மட்டங்களில் உடனடியாக, நேரடியாக, சிங்கள மக்களுடன் அவர்கள் மொழியில் உரையாடியது எனவும் நினைக்கிறேன்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னர் முஸ்லீம்கள் தம்மை சஹ்ரான் குழுவினரிடமிருந்து அந்நியப்படுத்திக்கொண்டார்கள், குறைந்தது அந்நியப்படுத்தியதாகக் காட்டினார்கள். ஒட்டுமொத்த முஸ்லீம் அரசியல்வாதிகளே இத்தாக்குதல்களிலிருந்து தம்மை விலத்தி, ஒரே குரலில் இதனைக் கண்டித்தார்கள். இதனாலேயே முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டன. மாறாக அவர்கள் சிங்களத்தில் பேசியதற்காக என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், முஸ்லீம் அரசியல்வாதிகள் எப்போதுமே , பாராளுமன்றம் உட்பட சிங்களத்திலேயே பேசினார்கள். ஒரு சில முஸ்லீம் அரசியல்வாதிகளைத் தவிர பெரும்பாலானோர் அரசியலுக்காகப் பேசுவது சிங்களம். தமிழருடன் பேசும்போது தமிழும், சிங்களவருடன் பேசும்போது சிங்களமௌம் என்பதே அவர்களின் உத்தி. பாம்புக்கு வாலையும், மீனுக்குத் தலையையும் காட்டும் கூட்டம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
    • 2013ம் ஆண்டு ல‌ண்ட‌ன் நாட்டு ஊட‌க‌மான‌ ச‌ண‌ல்4 த‌ப்பி பால‌ச்ச‌ந்திர‌னின் ப‌ட‌த்தை வெளியிட‌ அதை பார்த்த‌ லைய‌லோ க‌ல்லுரி மாண‌வ‌ர்க‌ள் போராட‌ அந்த‌ போராட்ட‌த்தை ஜெய‌ல‌லிதா காவ‌ல்துரைய‌ வைத்து குழ‌ப்பி அடிச்சா............ஆனால் அந்த‌ போராட்ட‌ம் அடுத்த‌ நாளே தமிழ‌க‌ம் எங்கும் தீயாய் ப‌ர‌விய‌து............இப்ப‌டியே போனால் த‌ன‌து க‌ட்சிக்கு ஆவ‌த்து வ‌ரும் என்று தெரிந்து தான் ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னால் அறிக்கை விட்டவ‌ர் நாங்க‌ள் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று....... அதே கூட்ட‌னில‌ இருந்த‌ திருமாள‌வ‌னும் ஊட‌க‌ம் மூல‌ம் சொன்னார் விசிக்காவும் காங்கிர‌ஸ் கூட்ட‌னில‌ இருந்து வில‌கிறோம் என்று...............இது தான் உண்மை ச‌ம்ப‌வ‌ம்..................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.