Jump to content

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

இங்கு சிங்களம் தெரிந்தவர்கள் எத்தனைபேர் உண்டு, நீங்கள் உட்பட. சொன்னதை வைத்து சொல்கிறேன். யாராவது அதை செய்ததுண்டா? நீங்கள் உட்பட. இனிவருங்காலத்திலும் கற்று  தமது சொந்த நன்மைகளுக்காகவே பயன்படுத்தவர்கள். நாம் தடுக்கப்போவதில்லை. முடிந்தவர்கள் செய்யலாம் ஆனால் திணிப்பதையே நாம் வெறுக்கிறோம் என்பதை புரிந்து கொண்டால் சரி. 

அப்படிச் செய்தோர் வந்து "நாம் செய்தோம், முயன்றோம்" என்றால் நம்ப எத்தனை பேர் தயார்? தமிழ் மக்களுக்கு நன்மை தரும் நோக்கில் இங்கே கருத்துக்கள் வைத்தாலே அது சிங்களவனை வெள்ளையடித்தல் என்பர்! 
 
Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

அப்படிச் செய்தோர் வந்து "நாம் செய்தோம், முயன்றோம்" என்றால் நம்ப எத்தனை பேர் தயார்? தமிழ் மக்களுக்கு நன்மை தரும் நோக்கில் இங்கே கருத்துக்கள் வைத்தாலே அது சிங்களவனை வெள்ளையடித்தல் என்பர்! 
 
உங்கள் முயற்சி ஒரு சிலரின் இனவாத  மனவோட்டங்களையாவது  மாற்றியிருந்தால் மிகுந்த மகிழ்ச்சியே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போது இங்கு கருத்து எழுதியவர்களையும் பார்க்க அதிகமானோர் சிங்களம் ஆங்கிலம் கற்றுக்கொண்டு வருகிறார்கள் காரணம் இலங்கையை புரிந்து கொண்டுள்ளார்கள் தங்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு .

எப்போதும் நீங்கள் கருத்தை விளங்குக்கொள்வது , புரிந்துகொள்வது இல்லை அண்ண நான் சொன்னது அவர்கள் மாநிலத்தை விட்டுப்போனால் தண்ணீர் என்று கேட்டால் மற்ற மாநிலத்தவனுக்கு அது புரியாது ஆக மொழி படிக்க வேண்டும் தானே அதே போல் தான் நானும் சிங்களப்பகுதிக்கு போனால் தண்ணீர் என்று கேட்டால் தமிழ் தெரியாதவனின் அவன் என்ன கொடுப்பான் எனக்கு அதுவே மொழியை தெரிந்து கொண்டு வத்துறு கொடுங்கள் என்று  கேட்டால்  கொடுப்பானா இல்லையா?? கொடுப்பான் நீங்கள் அதிகம் யோசிக்கிறீர்கள் அண்ண

அதே சிங்கள பகுதியில் சிங்களத்தில் நண்பர்கள் இருந்தும் தண்ணீரை சிங்களத்தில் கேட்டும் தண்ணீர் தராதது மட்டும் அல்ல உயிரையே கேட்டதால் தான் நான் இன்று பிரான்சில் இருக்கிறேன். எனவே நீங்கள் எப்படி கேட்டாலும் சிங்களம் ஒன்றும் தராது.

நீங்கள் சொல்வதெல்லாம் 2 தலைமுறைக்கு முன் நான் பட்டறிந்த பாடங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிங்களத்தை தெரிந்துகொண்டால் பல பிரச்சினைகளை இலகுவாக தீர்த்தும் கொள்ளலாம் என்பது அவருக்கு தெரிந்திருக்கும் என்னவோ
சின்ன உதாரணம் எனது தம்பி சிறிய பிரச்சினையை நம்ம தமிழர்கள் பெட்டிசன் போட்டு எழுதிவிட்டார்கள் கொழும்பிலிருந்து சி, ஐடி ,ரிஐடி எல்லோரும் வந்து விசாரித்தார்கள் சிங்களம் தெரிந்து இருந்ததால் பிரச்சினைகளை தெளிவாக விளங்கப்படுத்த முடிந்தது அதனால் எந்த பிரச்சினையும் எழவில்லை .எத்தனை பேர் இன்னும் மொழி தெரியாம;ல் சிறைகளில் வாழ்கிறார்கள் உங்களுக்கு தெரியாததா என்ன தங்கள் மீது என்னெ கேஸ் போட்டிருக்கு என்று தெரியாமலே பலர் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டும் இருக்கிறார்கள் ரகுநாதன்.

சிங்களம் படியுங்கள் என அவர்கள் திணிக்கவில்லை சிங்களம்  தெரிந்து வைத்துக்கொள்வதால் இனிவரும் காலங்களில் பிழைத்த்கொள்வோம் என்றே சொல்கிறேன். 
வட கிழக்கில் சிங்களம் தேவைப்படாவிட்டாலும் வேறு இடங்களுக்கு சென்றால் நிட்சயமாக சிங்களம் தேவை இங்குள்ளவர்களுக்கு 

இவர்கள் தமிழே சுத்தமாக பேசமாட்டார்கள் ஆங்கிலக்கலவை ஆனால் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் கிந்தி வராது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை மத்தியகிழக்கில் நான் வேலை செய்த போது தமிழ்நாட்டு தமிழர்களால் நம்ம இலங்கை தமிழர்கள் , சிங்களவர்கள் பேசும் அளவுக்கு கூட கிந்தி பேச வராது .

சட்டத்தரணியின் மூலம் சட்ட சிக்கல்களை அணுகுவதுதான் சரியாகவிருக்கும்,  சில வேளை நீங்கள் தவறாகப்புரிந்து கொள்ளக்கூடும், எதற்கு தேவையில்லாத சவால், ஆச்சரியமான விடயம் என்ன வென்றால் அசமந்த போக்கில் செயற்படும் அரச இயந்திரம் ஒரு புகாருக்கு குற்றபுலானாய்வு துறை எல்லாம் ஒடோடி வருகிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

இங்கு சிங்களம் தெரிந்தவர்கள் எத்தனைபேர் உண்டு, நீங்கள் உட்பட. சொன்னதை வைத்து சொல்கிறேன். யாராவது அதை செய்ததுண்டா? நீங்கள் உட்பட. இனிவருங்காலத்திலும் கற்று  தமது சொந்த நன்மைகளுக்காகவே பயன்படுத்தவர்கள். நாம் தடுக்கப்போவதில்லை. முடிந்தவர்கள் செய்யலாம் ஆனால் திணிப்பதையே நாம் வெறுக்கிறோம் என்பதை புரிந்து கொண்டால் சரி. 

திணிப்பதை வெறுப்பதை புரிந்து கொள்வது மட்டும் அல்ல நானும் வெறுக்கவே செய்கிறேன்.

யாராவது அதை செய்ததுண்டா? எனக்கு தெரிந்த சிலர் நேரடியாக செய்ய போய், புலி முத்திரை குத்தபட்டு சிறை வரை போனார்கள் (அவர்களை வெளியே எடுக்க தமிழ் தேசியவாதிகள் பெரும்தொகை பெற்றார்கள்). 

ஆகவே யுத்த கெடுபிடிக்கிடையே எதை சொல்லி விட்டு உயிர் வாழலாம் என்ற எல்லை வரை சொல்லியுள்ளேன். ஆயுத போராட்டத்தை தவிர்த்து, தமிழருக்கு ஒரு சுயாட்சி அலகை கொடுப்பாதால் சிங்களவருக்கு ஒரு ஆபத்தும் இல்லை போன்றவற்றை.

இதன் பலாபலன் பூச்சியமாக இருக்கலாம்.

ஆனால் மாறி வரும் யுத்தமற்ற சூழலில், பேரினவாதத்தின் கண்கள் அடிப்படைவாதத்தின் மீது திரும்பியுள்ள சமயம் - இதை வேறு வகையாக கையாளமுயற்சிக்கலாம்.

வெளிதோற்றத்துக்கு முரணாக தெரியலாம் ஆனால் தமிழ்நாட்டில் ஹிந்தி எதிர்புக்கு நான் ஆதரவுதான்.

காரணம் எமது பலம், பலவீங்களும் தமிழ்நாட்டின் பலம், பலவீனங்களும் ஒன்றல்ல.

தமிழ்நாட்டிலும், மத்திய கிழக்கு உட்பட்ட உலகெங்கும் பிழைக்க தமிழ், ஆங்கிலம் போதும்( மத்திய கிழக்கு சிங்களவர்கு ஹிந்தி தெரியாதுதானே). 

தமிழ் நாடு இருக்கும் அரசியலமைப்பு மூலம் உத்தரவாத பட்ட பலமான நிலையில் (ஒப்பீட்டளவில்) ஹிந்தியை கற்று அதை சாதாரண ஹிந்தி பேசுபவர்களிடம் எடுத்து போய் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தேவை அங்கே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஒரு சிங்களப்பகுதியில் தண்ணீர் தாருங்கள் என கேட்டால் புன்னகையுடன் தண்ணீர் தருவார்களா?

ஐயா நான் என்னுடைய சிறு வயதில் கேள்விப்பட்டது உண்மையே தெரியாது.

முன்பு சாதாரணமாக யாழ்ப்பாணத்தில் முன்பின் தெரியாதவர்கள் தண்னீர் கேட்டால் சிரட்டையில் தண்ணீர் மொண்டு வந்து கொடுப்பார்கலாம். இது உண்மையா ? 

இதை ஒர் சிங்கள நண்பனும் என்னிடம் உறுதிப்ப்டித்தினான்.
ஒரு வேளை சாதி வேறுபாட்டினால் இப்படி செய்வார்களோ தெரியவில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, colomban said:

நான் அறிந்தவரை உண்மைதான். நான் சிரட்டையில் கொடுத்ததை காணவில்லை.

ஆனால் யானை மார்க் சோடா போத்தலில் தேனீர் கொடுப்பதை கண்டுள்ளேன்.

சோடாபோத்தல் வரமுன்பு சிரட்டை என்பது ஊகிக்க கூடியதே.

எனது முஸ்லிம் நண்பர் ஒருவரின் மல்வாணை வீட்டுக்கு போயிருந்த போது, ஒரு வயசான ஐயா, தனக்கும் இப்படி நடந்ததாக கூறினார்.

அதே போல், தாழ்தப்பட்டவர்கள் வளவில் வேலை செய்து தண்ணி தாகம் எடுத்தால், அவர்களாக கிணற்றில் அள்ள முடியாது.

வீட்டில் ஒருவரை அழைக்க, அவர்கள் வந்து அள்ளி ஊத்துவார், வாளியில் கை படாமல் தண்ணீரை குடிக்கவேண்டும்.

இவ்வாறு டிசைன், டிசைனாக வெளி ஆட்களையும், சக தமிழனையும் கீழ்தரமாக நடத்தியவர்கள்தான் நாம்😡

ஆனால் இதில் இன்னொன்றையும் பார்க்க வேண்டும்.

சில நேரம் கொடுப்பவர்கள் தாமே சிரட்டையில் குடிக்கும் நிலையில் இருந்தார்களோ தெரியாது.

எனது சோடா போத்தல் அவதானிப்பு இப்படியானது அல்ல. அங்கே வீட்டுகாரருக்கு நல்ல பீங்கான் கோப்பைகள் இருந்தன.

தவறணைகளில் சிரட்டை பாவனை இருந்ததாக அறிகிறேன். அது சமரசம் உலாவும் இடம்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1980 ன் முற்பகுதிகளில் தென் பகுதிகளில் வியாபாரம் செய்த, வசித்த, படித்த பலரும் சரளமாக சிங்களம் பேசுவார்கள்.(எழுத்து படிக்கத் தெரியாவிட்டாலும்)......அதேபோல் வடக்கில்  வாழ்ந்த சிங்களவர்களும் கொச்சையாக வேணும் தமிழ் பேசுவார்கள்.....சலுசல, மண்டைதீவு வானொலி, போலீஸ் உத்தியோகத்தவர்கள், சில கராஜ்கள்,பாண் பேக்கரிகள், சிங்கள பாடசாலை என்று கணிசமானவர்கள் வாழ்ந்து வந்தார்கள்......!

பின் அரச உத்தியோகத்தவர்கள் சிங்களம் படித்தால் கூடுதலான போனஸ் + சம்பள உயர்வு போன்றவை மென்மையான முறையில் சட்டபூர்வமாக அறிவிக்கப் பட்டதுடன் நிக்காமல் அதற்குரிய தகுதியான ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப் பட்டதோடு வேலை நேரத்திலேயே ஒரு மணித்தியாலம் ஒதுக்கியும் குடுக்கப் பட்டது......(அதாவது அவர்கள் அறிவித்து விட்டு வாளாவிருக்கவில்லை.அதற்கான முயற்சிகளையும் உடனேயே மேற்கொண்டார்கள்).

அப்புறம் இயக்கங்கள் உருவாக்கி அரச யந்திரங்கள் ஆங்காங்கே ஸ்தம்பிக்கிற நிலைகள் ஏற்பட்டதும் இவையாவும் உறங்கு நிலையில் இருந்தன..... பின் 2009 இன அழிப்பின் உச்சம் தொட்ட வருடம்......உலகின் பெரும்பான்மையான நாடுகளின் பங்களிப்புடன் இவ்வளவு நேரத்துக்குள் இதனை முடித்திட வேண்டும் என்னும் காலக்கெடுவோடு வெற்றிகரமாக அழித்து முடித்து விட்டன..... அமெரிக்க ஜனாதிபதி கூட வெள்ளை மாளிகையில் இருந்து இதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்...... அன்று பாதுகாப்பு அமைச்சராக இருந்து பெண்களை எடுத்து கொள்ளுங்கள் ஆண்களை கடலில் வீசுங்கள் என்றவர்தான் இன்றைய ஜனாதிபதி........இந்த ஜனாதிபதி ஜனாதிபதியாக வந்த வழியில் ஒரு தமிழனோ அன்றி முஸ்லீமோ ஜனாதிபதியாக வர முடியுமா........இப்பொழுது உறங்கிக் கிடந்த திட்டங்கள் எல்லாம் "சோம்பி"யாக  எழுந்து ஒவ்வொன்றாய் வருகின்றன.....!

இப்ப சொல்லுங்கள் வாழ்வுரிமைக்கே கையேந்தி நிற்கும் நிலையில் மொழியுரிமையை எப்படி எதிர்பார்க்க முடியும்......அதைவிட அவலமான விடயம் அன்று எம்மை அழிக்க அனுசரணை புரிந்த நாடுகளிடம்தான் இன்று அகதியாக அந்தஸ்து பெற்று பதவியுயர்வு போல் வதிவிட உரிமை பெற்று அவர்களிடம் நீதி இருக்கு, நியாயம் இருக்கு, ஜனநாயகம் இருக்கு என்றெல்லாம் புகழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்......இது உலக அரசியல்....தூரதிஷ்டவசமாக நாமும் அதில் சிக்குண்டு நகர்ந்து கொண்டிருக்கிறோம்.......அவர்களுக்கு அவசியம் என்றால் நள்ளிரவில்கூட  எம் நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கலாம்...... ஹிட்லரில் இருந்து கடாபிவரை தொடர்ந்து கொண்டிருக்கும் எவ்வளவு பேரின் அழிவுகளைப்  பார்த்துக் கொண்டிருக்கிறோம்.......!

உங்களில் சிலராவது ஜெயமோகனின் "வெள்ளையானை" கதை (அது கதையல்ல அன்றைய நிஜம்) படித்திருக்கலாம்.....அல்லது அதை படிக்காதவர்கள், படிக்க நேரமில்லாதவர்களுக்காக இதை இணைக்கிறேன்.......சிறிது சிறிதாகவாவது பார்த்து அல்லது படுக்கும் போதாவது கேட்டுக் கொள்ளுங்கள்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

சுவியரையே கவலைப் பட வைச்சாப் பிறகு இதில் மேலும் எழுத ஏதும் இல்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரையில் சுவியர் அரசியல் திரியில இவளவு எழுதி பார்த்தது இல்லை.சாது மிரன்டால் காடு கொள்ளாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2021 at 13:06, tulpen said:

ஒப்பீட்டு ரீதியில் மக்கள் தொகையில் சிங்களம் தெரிந்த தமிழரின் சதவீத்த்தை விட தமிழ் தெரிந்த சிங்களவரின் சதவீதம் அதிகம் என்பது எனது கணிப்பு.  

உள்ளங்கை நெல்லிக்கனி போல அப்பட்டமாக தெரியும் ஒரு விடயத்தில் கூட உங்கள் கணிப்பு தவறாய் இருக்கிறதே துல்பென்.. இது தாண்டி உங்கள் அரசியல் கணிப்பு ???
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2021 at 07:53, ரஞ்சித் said:

இது வேலை செய்யாது கோஷான். பேசுவதற்கு வேண்டுமானால் இவை அழகான சொற்றொடர்களாக இருக்கலாம். நிதர்சனத்தில் பயன்படாது.
காஷ்மீரிலும், திபெத்திலும், பலஸ்த்தீனத்திலும் நீதி கேட்டுப் போராடும் மக்களின் உண்மையான கோரிக்கைகளை அந்த ஆக்கிரமிப்பாளர்கள் புரிந்துகொள்ளாமல் விட்டதாலேயே இன்றுவரை அம்மக்கள் அவலப்படுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லது சிங்களவர்களுக்கு தமிழரின் கோரிக்கைகள்தான் புரியவில்லை என்று நினைக்கிறீர்களா? அவர்களுக்கு நாம் கேட்பது என்னவென்பது நன்றாகவே தெரியும், அதன் நியாயத்தன்மையும் புரியும். இவை எதுவுமே தெரியாமலா சந்திரிக்காவும் ரணிலும் புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்தார்கள்? இது தெரியாமலா பண்டாரநாயக்காவும், சேனநாயக்காவும் தமிழரசுக் கட்சியுடன் ஒப்பந்தம் செய்தார்கள்? நிச்சயமாக இல்லை. நாம் கேட்பது என்னவென்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர்களுக்கு அதனைத் தர விருப்பமில்லை. நாங்கள் சிங்களத்தில் அதைக் கேட்டாலென்ன, தமிழில் கேட்டாலென்ன, விடை எப்போதுமே ஒன்றுதான்.

1948 இலிருந்து ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த காலம் வரைக்கும் எமது தமிழ்த் தலைவர்கள் இதைச் செய்யவில்லை என்று சொல்கிறீர்களா? காலிமுகத் திடல் சத்தியாக்கிரகத்திற்கு என்ன நடந்தது என்பதை மறந்துவிட்டீர்களா? 1977 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானம் கூறியதை சிங்களவர்கள் ஏற்றுக்கொண்டார்களா? 

சரி, இதையெல்லாம் விட்டு விடுங்கள். தாமே தருவதாகக் கூறிய தீர்வுகளையாவது தந்தார்களா? 

சிங்களவர்களுக்கு நாம் புரியவைப்பதற்கு மீதம் ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் அதைச் செய்து காட்டி விட்டோம்.

இனி வேறு முறையில் சொல்வதற்கு புதிதாக எதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆனால் சிலவேளை நாம் எமது முன்னைய வேண்டுகோள்களை  எல்லாம் கைவிட்டு, "இந்நாடு சிங்களவர்களுக்கு உரியது, நாம் வந்தேறிகள், சிங்களமும் பெளத்தமும் இந்நாட்டின் அதியுச்ச சக்திகள். உங்களுக்கு எதைத் தர வேண்டும் என்று விருப்பம் இருக்கிறதோ, அதைத் தாருங்கள்" என்று கேட்டுப் பார்க்கலாம். அப்போதுகூட எமக்கு எதுவுமெ கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.

நாம் சொல்வதை அவர்கள் கேட்கப்போவதில்லை. மாறாக தாம் கேட்க விரும்புவதை நாங்கள் சொல்லவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

சுதந்திரத்தின் பின்னரான 73 வருடகால சிங்களவர்களுடனான தமிழரின் சரித்திரத்திலிருந்து நான் புரிந்துகொண்டது இதனைத்தான். 

அருமையான கருத்து 👍

Link to comment
Share on other sites

51 minutes ago, Sasi_varnam said:

உள்ளங்கை நெல்லிக்கனி போல அப்பட்டமாக தெரியும் ஒரு விடயத்தில் கூட உங்கள் கணிப்பு தவறாய் இருக்கிறதே துல்பென்.. இது தாண்டி உங்கள் அரசியல் கணிப்பு ???
 
எனது கணிப்பு தவறென்று ஏற்கனவே ஒத்து கொண்டு விட்டேன். அத்துடன் எனது முன்னைய அரசியல் கணிப்பு கூட தவறு தானே. அதை தானே சுட்டிக்காட்டுகிறேன்.  

Link to comment
Share on other sites

On 6/9/2021 at 01:44, கற்பகதரு said:

கற்பகதரு யுத்த காலத்தில் இரு பகுதியினரும் செய்த பயங்கரவாத செயல்களை கூறியதை எவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, colomban said:

ஐயா நான் என்னுடைய சிறு வயதில் கேள்விப்பட்டது உண்மையே தெரியாது.

முன்பு சாதாரணமாக யாழ்ப்பாணத்தில் முன்பின் தெரியாதவர்கள் தண்னீர் கேட்டால் சிரட்டையில் தண்ணீர் மொண்டு வந்து கொடுப்பார்கலாம். இது உண்மையா ? 

இதை ஒர் சிங்கள நண்பனும் என்னிடம் உறுதிப்ப்டித்தினான்.
ஒரு வேளை சாதி வேறுபாட்டினால் இப்படி செய்வார்களோ தெரியவில்ல.

ஓம்...உண்மைதான்.

சுருக்கமாக ஒரு கதை. இங்கே பலமுறை சொல்லி விட்டேன். இருந்தாலும் உங்களுக்காக  இன்னொரு தடவை சொல்கிறேன் கேளுங்கள் 😁

விக்ரமாதித்தன் கதைகள் - Home | Facebook

சிறு வயதில் இந்த காரியங்களை நானும் செய்திருக்கின்றேன். கிணற்றில் தண்ணீர் அள்ளித் தருமாறு கேட்பார்கள். இப்ப நேரமில்லை கொஞ்சத்தாலை வாறன் எண்டு சொல்லி காக்க வைத்திருக்கிறேன்.சிரட்டையில் தேநீர் ஊத்தி கொடுத்திருக்கிறேன்.புத்தி தெரிய வர பிராயச்சித்தமாக அவர்களையே நண்பர்களாக்கி கொண்டேன். அவர்கள் வீட்டில் உணவு உண்டேன். அதனால் என் உறவுகளாலேயே விலக்கி வைக்கப்பட்டேன்.

நாடும் சமுதாயமும் அதற்கேற்ற அரசியல்வாதிகளும் அப்படிஇருக்க  ...நான் என்ன செய்யட்டும்?:(

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

சிறு வயதில் இந்த காரியங்களை நானும் செய்திருக்கின்றேன். கிணற்றில் அள்ளித்தருமாறு கேட்பார்கள். இப்ப நேரமில்லை கொஞ்சத்தாலை வாறன் எண்டு சொல்லி காக்க வைத்திருக்கிறேன்.சிரட்டையில் தேநீர் ஊத்தி கொடுத்திருக்கிறேன்.புத்தி தெரிய வர பிராயச்சித்தமாக அவர்களையே நண்பர்களாக்கி கொண்டேன். அவர்கள் வீட்டில் உணவு உண்டேன். அதனால் என் உறவுகளாலேயே விலக்கி வைக்கப்பட்டேன்.

நீங்கள் நல்ல மனிதர்.

On 5/9/2021 at 16:44, கற்பகதரு said:

5 hours ago, tulpen said:

கற்பகதரு யுத்த காலத்தில் இரு பகுதியினரும் செய்த பயங்கரவாத செயல்களை கூறியதை எவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.  

இப்படியெல்லாம் எழுதி எம்கள உறவுகளின் நியாயமான நிலைப்பாட்டையும், தர்மத்தின் பக்கம் அவர்கள் நிற்பதையும் கேள்விக்குள்ளாக்க கூடாதன்றோ? 😀😃😄😁😆

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.