Jump to content

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

சிங்களத்தை கற்கும் இரு வகையானோரையும், அவர்கள் செயலையும் நீங்கள் மிக சரியாக இனம் காட்டியுள்ளிர்கள்.

ரவிராஜ் ஏன் கொலையானார் என்பதுக்கு நீங்கள் கொடுத்த விளக்கமும் 100% சரியே.
 
ஆனால் ஒரு ரவிராஜை யுத்த காலத்தில் போட்டு தள்ளியது போல், பெரும் எண்ணிக்கையில் தமிழர்களை கொல்ல இப்போ முடியாதல்லவா?

கணிசமான அளவு தமிழர்கள் சிங்கள மொழியில் ஒவ்வொரு மட்டத்திலும் எம் நிலைப்பாட்டை எடுத்து சொல்லும் போது அதில் ஒரு சிறிய தாக்கமாவது நிகழும்.

பிக்குகளின், அரசியல்வாதிகளின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் சிங்கள மக்களின் ஒரு குறித்த சதவீதத்தையாவது உண்மையை தரிசிக்க வைத்தால் - அது எமக்கு நன்மையாகாதா?

ஒரு 10 வருடத்தில் 500 பேரையாவது விக்ரமபாகு போல் சிந்திக்க தூண்டலாமே?

ஆயுதம் மெளனித்த பின் - இப்படியாக ஒரு வகையில் நான் ஏன் முயல கூடாது?

யுத்த களத்தில் புலிகளால் கைதியாக பிடிக்கப்பட்ட ஒரு இராணுவத்தினை புலிகள் விடுவித்த போது, சிங்கள ஊடகவியலாளர்கள் அவரை பேட்டியெடுக்க சென்றார்கள். ஆனால் அவரை பேட்டியெடுக்க விடாமல் தடுத்து, மீணடும் போர் முனைக்கு அனுப்பி வைத்தது சிங்களம். காரணம் என்ன?

Link to comment
Share on other sites

 • Replies 165
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

suvy

1980 ன் முற்பகுதிகளில் தென் பகுதிகளில் வியாபாரம் செய்த, வசித்த, படித்த பலரும் சரளமாக சிங்களம் பேசுவார்கள்.(எழுத்து படிக்கத் தெரியாவிட்டாலும்)......அதேபோல் வடக்கில்  வாழ்ந்த சிங்களவர்களும் கொச்சையாக வே

valavan

தமிழர் பகுதிகளில் தமிழ் நிர்வாகம் மற்றும் தொடர்பாடல் பிரதான மொழி.  ஒரு உள்ளூர் செய்தியாளர் உள்ளூரில் பணியாற்றுவதற்கு பிரதான சிங்கள மொழி எதற்கு அவசியம்? ஒரு சிங்கள ஊடகவியலாளர் சிங்கள பகுதியில் செய

சுப.சோமசுந்தரம்

வெவ்வேறு மொழி பேசும் நிலங்களை இணைத்து ஒரு நாடாக்குவது பூகோள அடிப்படையிலான தேவை அல்லது தேர்வாக இருக்கலாம். அரசியல் அடிப்படையில் அது ஒரு புரிந்துணர்வு, ஒப்பந்தம் அவ்வளவே. அவ்வாறு அமைந்த/அமைத்த ஒரு நாட்ட

 • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, satan said:

யுத்த களத்தில் புலிகளால் கைதியாக பிடிக்கப்பட்ட ஒரு இராணுவத்தினை புலிகள் விடுவித்த போது, சிங்கள ஊடகவியலாளர்கள் அவரை பேட்டியெடுக்க சென்றார்கள். ஆனால் அவரை பேட்டியெடுக்க விடாமல் தடுத்து, மீணடும் போர் முனைக்கு அனுப்பி வைத்தது சிங்களம். காரணம் என்ன?

ரவிராஜை கொலை செய்த அதே காரணம்தான். தமிழர் தரப்பு நியாயாம் சிங்கள ஊடகத்தில் கொஞ்சமேனும் வரக்கூடாது. அவர் சொல்லி இருந்தாலும் ஊடகங்கள் போட்டிராது.

ஆனால் பல்லாயிரகணக்கில் தமிழர்கள் சிங்களம் மூலம் இதை சொல்ல தொடங்கும் போது எதுவும் செய்ய முடியாது போகும்.

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கோசான் உங்களுக்கு இவளவு பொறுமை உள்ளதா.பாராட்டுக்கள்.

 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

இங்கு சிலருக்கு விரும்பி ஒரு மொழியை கற்பதற்கும் ஏன் எனது மொழியை கற்கவில்லை என்ற திணிப்புக்கும் வித்தியாசம் தெரியவில்லை. 
மொன்றியலில் போய் பிரென்ஞ் காரரிடம் ஏன் ஆங்கிலம் கற்கவில்லை என கேட்டால் கொலை வரை போகலாம்.

 • Like 2
 • Thanks 1
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

இங்கு சிலருக்கு விரும்பி ஒரு மொழியை கற்பதற்கும் ஏன் எனது மொழியை கற்கவில்லை என்ற திணிப்புக்கும் வித்தியாசம் தெரியவில்லை. 
மொன்றியலில் போய் பிரென்ஞ் காரரிடம் ஏன் ஆங்கிலம் கற்கவில்லை என கேட்டால் கொலை வரை போகலாம்.

மற்றையோரை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனது மேலே உள்ள அனுபவ பகிர்வை பார்திருந்தீர்களானால் எனக்கு இந்த வித்தியாசம் விளங்குகிறது என்பது நன்றாக புரியும்.

நாமாகவே அவர்கள் மொழியை கற்று, அதை ஒரு ஆயுதமாக பாவிக்கலாம் என்பதே நான் சொல்வது. 

நீங்கள் எழுதியது எனக்கு இல்லை என்றால், அட்வான்ஸ் மன்னிப்புகள்.

Link to comment
Share on other sites

15 hours ago, குமாரசாமி said:

உங்களைப் போன்ற என்னைப் போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள்  சிறந்த ஜனநாயக நாடுகளில் வாழ்கின்றோம். சகல உரிமைகளுடனும் சமத்துவமான முறையிலும் வாழ்கின்றோம். இது போல் சமத்துவம் ஏன் இலங்கையில் சாத்தியமாக்க முடியவில்லை? 

இயக்க கலாச்சாரத்தை தவிர்த்து ஒரு பதிலை உங்களால் தர முடியுமா?

ஏன்? உங்கள் வடக்கு சிங்களவரின் தமிழ் பரிச்சயம் பற்றிய தகவலைப் பிழையென்று சுட்டிக் காட்டியமைக்கு தண்டனையோ?😂

Link to comment
Share on other sites

On 6/9/2021 at 09:14, ரஞ்சித் said:

தனிப்பட்ட ரீதியில் சிங்களம் படிப்பது தமிழருக்கு உதவலாம். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இதனால் தமிழரும் பங்குகொள்ளலாம். 

சிங்களவருக்கு ஏலவே தெரிந்த எம்பக்க நியாயங்களை நாம் மீண்டும் அவர்கள் மொழியில் சொல்வதால் ஏதும் நடந்துவிடும் என்பதனை என்னால் இப்போதுவரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

சிலவேளை, தமிழரிடமிருந்து தமக்கு இனிமேல் எந்த ஆபத்தும் வராது, அல்லது தமிழரால் இனிமேல் எதனையுமே கேட்கமுடியாது என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை அவர்களிடத்தில் வரும்போது, "சரி, இப்போது  பேசுங்கள், கேட்கலாம்" என்று கூறலாம். இது நாம் எமது அடையாளத்தை இழந்து, எமது தாயகத்தை இழந்து அல்லது தாயகத்திற்கான தேவை அற்றுப்போய், இனிமேல் எமக்கான உரிமையும், தாயகமும் வேண்டாம் என்று நாமே விலகி வரும்போது நிகழலாம். அதை நோக்கித்தான், இன்றைய சிங்களப் பேரினவாதம் நகர்ந்து வருகிறது.
குடியேற்றம், சிங்கள மயமாக்கல், கலாசார ஆக்கிரமிப்பு என்று அனைத்துமே சிறுபான்மையினரைப் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே அமைக்கப்பட்டு வருகின்றன. முடிவில், எமது தாயகத்திலேயே நாம் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டு, அங்கொன்றும், இங்கொன்றுமான சிறு கிராமங்களுக்குள் அல்லது பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் நாம் அடக்கப்படும்போது "தாயகம்" எனும் எமது கோட்பாடு அர்த்தமற்றுப் போய்விடும். 

இதுதான் அந்த வித்தியாசம். 

இப்போது உங்கள் முன்னைய தியரி தவறென்று உங்களுக்கு விளங்குகிறதா?

வேலை வாய்ப்பு, கல்வி முயற்சி என்பன மும்மொழிப் பரிச்சயமின்மையால தாயக தமிழருக்கு கிடைக்காமல் போனால் அடுத்த 10 ஆண்டுகளில் அவர்கள் நிலைமை என்ன? இப்பவே அத்தகைய எதிர்காலத்தை ஊகிக்க ஏதுவான சம்பவங்கள் வடக்கில்: வாள் வெட்டுக் குழுக்களும், கஞ்சாக் காரர்களும், வேலையில்லாத பட்டதாரிகளும். 

 சமூக முன்னேற்றமில்லாமல், தாயக உணர்வை மட்டும் வைத்திருந்தால் புலம்பெயர் தமிழருக்கு நன்மைகள் கிடைக்கலாம், தாயக தமிழருக்கு பாரிய நன்மைகள் கிடைக்காது!

 • Like 1
Link to comment
Share on other sites

9 hours ago, ரஞ்சித் said:

இலங்கையில் ஹிந்தி திணிக்கப்படவில்லை தனி. சிலர் இந்தியப் படங்களைப்பார்த்து தமது விருப்பப்படி கற்றுக்கொள்கிறார்கள் அப்பன்.

ஆனால், தமிழ்ப் பிரதேசத்தில் “ஏன் நீ இன்னும் சிங்களம் தெரியாமல் இருக்கிறாய்?” சிங்கள அதிகாரியொருவர் கேட்பது விருப்பத்தின்பேரில் இல்லையென்பதும், அது ஒரு ஏளனத்துடன் கூடிய கட்டாயப்படுத்தல் தான் என்பது உங்களுக்குப் புதியாதது அல்லவே?

சிங்களத்தை தெரிந்துகொண்டால் பல பிரச்சினைகளை இலகுவாக தீர்த்தும் கொள்ளலாம் என்பது அவருக்கு தெரிந்திருக்கும் என்னவோ
சின்ன உதாரணம் எனது தம்பி சிறிய பிரச்சினையை நம்ம தமிழர்கள் பெட்டிசன் போட்டு எழுதிவிட்டார்கள் கொழும்பிலிருந்து சி, ஐடி ,ரிஐடி எல்லோரும் வந்து விசாரித்தார்கள் சிங்களம் தெரிந்து இருந்ததால் பிரச்சினைகளை தெளிவாக விளங்கப்படுத்த முடிந்தது அதனால் எந்த பிரச்சினையும் எழவில்லை .எத்தனை பேர் இன்னும் மொழி தெரியாம;ல் சிறைகளில் வாழ்கிறார்கள் உங்களுக்கு தெரியாததா என்ன தங்கள் மீது என்னெ கேஸ் போட்டிருக்கு என்று தெரியாமலே பலர் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டும் இருக்கிறார்கள் ரகுநாதன்.

சிங்களம் படியுங்கள் என அவர்கள் திணிக்கவில்லை சிங்களம்  தெரிந்து வைத்துக்கொள்வதால் இனிவரும் காலங்களில் பிழைத்த்கொள்வோம் என்றே சொல்கிறேன். 
வட கிழக்கில் சிங்களம் தேவைப்படாவிட்டாலும் வேறு இடங்களுக்கு சென்றால் நிட்சயமாக சிங்களம் தேவை இங்குள்ளவர்களுக்கு 

6 hours ago, குமாரசாமி said:

ஹிந்தி_தெரியாது_போடா... தேசிய அளவில் டிரெண்டான ஹேஷ்டேக்

இவர்கள் தமிழே சுத்தமாக பேசமாட்டார்கள் ஆங்கிலக்கலவை ஆனால் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் கிந்தி வராது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை மத்தியகிழக்கில் நான் வேலை செய்த போது தமிழ்நாட்டு தமிழர்களால் நம்ம இலங்கை தமிழர்கள் , சிங்களவர்கள் பேசும் அளவுக்கு கூட கிந்தி பேச வராது .

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இவர்கள் தமிழே சுத்தமாக பேசமாட்டார்கள் ஆங்கிலக்கலவை ஆனால் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் கிந்தி வராது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை மத்தியகிழக்கில் நான் வேலை செய்த போது தமிழ்நாட்டு தமிழர்களால் நம்ம இலங்கை தமிழர்கள் , சிங்களவர்கள் பேசும் அளவுக்கு கூட கிந்தி பேச வராது .

அவர்களுக்கு  தேவையில்லாத கிந்தி  எதற்கு  தெரிந்திருக்கணும்  என்று  எதிர்பார்க்கிறீர்கள்???

Link to comment
Share on other sites

3 minutes ago, விசுகு said:

அவர்களுக்கு  தேவையில்லாத கிந்தி  எதற்கு  தெரிந்திருக்கணும்  என்று  எதிர்பார்க்கிறீர்கள்???

அவர்களுக்கு தேவை இல்லை என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் மத்திய கிழக்கில் அவர்களுக்கு கிந்தி தெரிந்திருக்க வேண்டும் பிழைக்க போன இடம் தமிழ் நாட்டில் பெருமையா சொல்லிக்கொள்ளலாம் கிந்தி தேவை இல்லையென ஆனால் வட மாநிலத்துக்கு போனால் தண்ணிர் என்று கேட்டால் கொடுக்கமாட்டான்

தற்போது நீங்கள் பல பாசைகள் பேசுவீர்கள் ஏன் எதற்கு உங்கள் கடைக்கு வருபவர்களிடம் தமிழ் பேசி வியாபாரம் செய்யலாமே ???

 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

புரியல சகோ

நான் பிரான்சில் பிரெஞ்சு பேசுவதற்கும்

தமிழ்நாட்டுக்காறன் மத்திய  கிழக்கில் கிந்தி பேசுவதற்கும் என்ன சம்பந்தம்???

இவ்வாறு  தான் சம்பந்தமில்லாமல்

ஏதோ  எல்லாம் உறுட்டி விடுகின்றோமா???

நீங்கள் இப்படி ஒப்பிடுவது தவறு!

மேலே வர என்ன மொழி வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் திறமையும் புலம் பெயர் ஆசியர்களிடமும் தமிழரிடமும் உண்டு!ஆனால் பூர்வீக தாயகத்தில் இருப்போர் மட்டும் அவர்கள் உள்ளூரில் கோழி மேய்க்கப் போதுமான மொழியை மட்டும் கற்றிருந்தால் போதுமானது! - ஏனெனில் புலம் பெயர் தமிழரின் தாயகக் கனவிற்காக place holder ஆக வைக்கப் பட்டிருப்போர் தான் தாயக தமிழர்கள்! 

Just now, Justin said:

தனி - புரிந்திருக்கும் என நம்புகிறேன், கவலை முகம் வேண்டாம் :  மேல் கருத்து sarcasm!

 • Like 2
 • Sad 1
Link to comment
Share on other sites

3 minutes ago, விசுகு said:

புரியல சகோ

நான் பிரான்சில் பிரெஞ்சு பேசுவதற்கும்

தமிழ்நாட்டுக்காறன் மத்திய  கிழக்கில் கிந்தி பேசுவதற்கும் என்ன சம்பந்தம்???

இவ்வாறு  தான் சம்பந்தமில்லாமல்

ஏதோ  எல்லாம் உறுட்டி விடுகின்றோமா???

நான் மத்திய கிழக்கைதான் உதாரணத்துக்கு சொல்லவந்தேன் தமிழ் நாட்டில் எங்களுக்கு கிந்தி தேவையில்லை என அவர்கள் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் மாநிலத்தை தாண்டினால் பல பாசைகள் பேசித்தான் ஆக வேண்டும் கற்றுக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் பிச்சைதான் எடுக்க வேண்டும் பிழைப்புக்கு 

நீங்கள் நாடு கடந்து உங்கள் இருப்புக்கும் தொழிலுக்கும் மாற்று மொழியை கற்று வளர்ச்சியடைகிறீர்கள் ஆனால் இங்குள்ளவர்கள் தங்கள் பிரச்சினையை முகம் கொடுத்து தீர்க்க கூட சிங்களம் கற்றுக்கொள்ள தேவையில்லை என சொல்கிறீர்க்ளே இதுதான் புரியவில்லை . இது சிங்கள பெளத்த நாடு ஆகிவிட்டது என்பதை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையே

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நீங்கள் இப்படி ஒப்பிடுவது தவறு!

மேலே வர என்ன மொழி வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் திறமையும் புலம் பெயர் ஆசியர்களிடமும் தமிழரிடமும் உண்டு!ஆனால் பூர்வீக தாயகத்தில் இருப்போர் மட்டும் அவர்கள் உள்ளூரில் கோழி மேய்க்கப் போதுமான மொழியை மட்டும் கற்றிருந்தால் போதுமானது! - ஏனெனில் புலம் பெயர் தமிழரின் தாயகக் கனவிற்காக place holder ஆக வைக்கப் பட்டிருப்போர் தான் தாயக தமிழர்கள்! 

அதாவது மத்திய  கிழக்கில்  வேலை  செய்ய கிந்தி படிக்கணும்???

அல்லது  தண்ணீர் கிடைக்காமல் சாகணும்???

Link to comment
Share on other sites

4 minutes ago, Justin said:

ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்

Link to comment
Share on other sites

Just now, விசுகு said:

அதாவது மத்திய  கிழக்கில்  வேலை  செய்ய கிந்தி படிக்கணும்???

அல்லது  தண்ணீர் கிடைக்காமல் சாகணும்???

விசுகர்: பதிலை தனியே சொல்லட்டும், மத்திய கிழக்கில் வேலை நிலைமைகள் எனக்குத் தெரியாது!,

ஆனால் எனக்கு விளங்கியது - வேலை இடத்தில் சிறப்பாகப் பணியாற்ற அங்கே மேலதிகாரி, கீழே இருப்போர் பேசும் மொழி தெரிந்திருந்தால் நல்லது! இது மத்திய கிழக்கின் இந்தியக் கம்பனிகளில் வேலை செய்வோரின் நிலையாக இருக்கலாம்! - குறிப்பாக ஆங்கிலம் தெரியாத ஊழியர்கள் அதிகம் இருக்கும் நிலையில் இது முக்கியமாக இருக்கக் கூடும்!

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் மத்திய கிழக்கைதான் உதாரணத்துக்கு சொல்லவந்தேன் தமிழ் நாட்டில் எங்களுக்கு கிந்தி தேவையில்லை என அவர்கள் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் மாநிலத்தை தாண்டினால் பல பாசைகள் பேசித்தான் ஆக வேண்டும் கற்றுக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் பிச்சைதான் எடுக்க வேண்டும் பிழைப்புக்கு 

நீங்கள் நாடு கடந்து உங்கள் இருப்புக்கும் தொழிலுக்கும் மாற்று மொழியை கற்று வளர்ச்சியடைகிறீர்கள் ஆனால் இங்குள்ளவர்கள் தங்கள் பிரச்சினையை முகம் கொடுத்து தீர்க்க கூட சிங்களம் கற்றுக்கொள்ள தேவையில்லை என சொல்கிறீர்க்ளே இதுதான் புரியவில்லை . இது சிங்கள பெளத்த நாடு ஆகிவிட்டது என்பதை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லையே

முதலில் உங்கள் கற்பனைகளுக்கு  நான் பதில் சொல்லமுடியாது

தமிழர்கள்  தொழிலுக்காக சிங்களம்  படிக்கவேண்டாம்  என  நான்  எங்காவது  எழுதினேனா???

இரண்டாவது

தாயகத்திலிருந்து நீங்கள் சிங்களம் படிக்கணும் என்று  சொல்லும்  அதே  உரிமை

அவர்களது  தாயகத்திலிருந்து கொண்டு (தமிழ்நாடு)  கிந்தி  தேவையில்லை என்று  சொல்லவும்  உரிமையுண்டு. அவர்களை  தண்ணி  கிடைக்காமல் சாகவேண்டியது  தான் என்று  சொல்வது  எவ்வளவு  அபத்தம்???

உங்களுக்கு  வந்தால் ரத்தம்?

மற்றவர்களுக்கு  வந்தால் சட்னியா???

Edited by விசுகு
 • Thanks 1
Link to comment
Share on other sites

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் இதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்

இங்கே சில புலம்பெயர் தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் (மேலே தியரி கூட வைத்திருக்கிறார்கள்- போய் வாசிக்கலாம்!😂).

தாயக தமிழர்கள் இதை ஏற்றுக் கொள்ளாமல் சிங்களமும் ஆங்கிலமும் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதே என் அபிப்பிராயம்!

 • Like 2
Link to comment
Share on other sites

3 minutes ago, Justin said:

இங்கே சில புலம்பெயர் தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் (மேலே தியரி கூட வைத்திருக்கிறார்கள்- போய் வாசிக்கலாம்!😂).

தாயக தமிழர்கள் இதை ஏற்றுக் கொள்ளாமல் சிங்களமும் ஆங்கிலமும் கற்றுக் கொள்ள வேண்டுமென்பதே என் அபிப்பிராயம்!

தற்போது இங்கு கருத்து எழுதியவர்களையும் பார்க்க அதிகமானோர் சிங்களம் ஆங்கிலம் கற்றுக்கொண்டு வருகிறார்கள் காரணம் இலங்கையை புரிந்து கொண்டுள்ளார்கள் தங்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு .

7 minutes ago, விசுகு said:

முதலில் உங்கள் கற்பனைகளுக்கு  நான் பதில் சொல்லமுடியாது

தமிழர்கள்  தொழிலுக்காக சிங்களம்  படிக்கவேண்டாம்  என  நான்  எங்காவது  எழுதினேனா???

இரண்டாவது

தாயகத்திலிருந்து நீங்கள் சிங்களம் படிக்கணும் என்று  சொல்லும்  அதே  உரிமை

அவர்களது  தாயகத்திலிருந்து கொண்டு (தமிழ்நாடு)  கிந்தி  தேவையில்லை என்று  சொல்லவும்  உரிமையுண்டு. அவர்களை  தண்ணி  கிடைக்காமல் சாகவேண்டியது  தான் என்று  சொல்வது  எவ்வளவு  அபத்தம்???

உங்களுக்கு  வந்தால் ரத்தம்?

மற்றவர்களுக்கு  வந்தால் சட்னியா???

எப்போதும் நீங்கள் கருத்தை விளங்குக்கொள்வது , புரிந்துகொள்வது இல்லை அண்ண நான் சொன்னது அவர்கள் மாநிலத்தை விட்டுப்போனால் தண்ணீர் என்று கேட்டால் மற்ற மாநிலத்தவனுக்கு அது புரியாது ஆக மொழி படிக்க வேண்டும் தானே அதே போல் தான் நானும் சிங்களப்பகுதிக்கு போனால் தண்ணீர் என்று கேட்டால் தமிழ் தெரியாதவனின் அவன் என்ன கொடுப்பான் எனக்கு அதுவே மொழியை தெரிந்து கொண்டு வத்துறு கொடுங்கள் என்று  கேட்டால்  கொடுப்பானா இல்லையா?? கொடுப்பான் நீங்கள் அதிகம் யோசிக்கிறீர்கள் அண்ண

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நண்பொருவர் கூறியது இது உண்மையோ தெரியவில்லை. இப்பொழுது யாழ்பாணத்து பெண்கள்  சிங்களம் பேசும் ஆண்களயே திருமணம் முடிக்க விரும்புகின்றார்களாம். பண்பான / ஸ்டயிலான சிங்கள ஆண்களை மிக பிடிக்குமாம்.

வங்கிகள் / அரச  நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் சிங்கள்வர்களுடன் ஒன்றினைந்து ஒரு புரிந்துணர்வுடன் ஆக வேலை செய்வதற்கு சிங்களம் அவசியம் என தெரிந்து வைத்திருக்க விரும்புகின்றார்க்ளாம். அதேபோல் அழகுக்கலை போன்றவற்றை சிங்கள பெண்களிடமே இவர்கள் கற்று வருகின்றார்களாம். 

இளயோர்கள் சிங்கள் இன்வாதிகளையும், தமிழ் இனவாதிகளயும் வெறுக்கின்றார்களாம். 
சாணக்கியன் போற்ரோர் இதானாலேயே இளையோர் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஶ்ரீலங்காவில் ஒரு கடும்போக்கு சிங்கள் அரசு வேண்டும்  என்றே இங்கு தீவிர தமிழ் தேசியம் பேசும் பலர் விரும்பினார்கள். 2005 ல் கிடைத்த பாடத்தை மறந்து 2015 ல் மகிந்த வரவேண்டும் என்றே பல தீவிர தமிழ் தேசியர்கள் இங்கு எழுதினார்கள்.  இப்போது மட்டும. குத்துது குடையுது என்று புலம்புவதன் அர்த்தம் புரியவில்லை. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இவர்கள் தமிழே சுத்தமாக பேசமாட்டார்கள் ஆங்கிலக்கலவை ஆனால் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் கிந்தி வராது என்று உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை மத்தியகிழக்கில் நான் வேலை செய்த போது தமிழ்நாட்டு தமிழர்களால் நம்ம இலங்கை தமிழர்கள் , சிங்களவர்கள் பேசும் அளவுக்கு கூட கிந்தி பேச வராது .

ஒரு சிங்களப்பகுதியில் தண்ணீர் தாருங்கள் என கேட்டால் புன்னகையுடன் தண்ணீர் தருவார்களா?

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

முதலில் உங்கள் கற்பனைகளுக்கு  நான் பதில் சொல்லமுடியாது

தமிழர்கள்  தொழிலுக்காக சிங்களம்  படிக்கவேண்டாம்  என  நான்  எங்காவது  எழுதினேனா???

இரண்டாவது

தாயகத்திலிருந்து நீங்கள் சிங்களம் படிக்கணும் என்று  சொல்லும்  அதே  உரிமை

அவர்களது  தாயகத்திலிருந்து கொண்டு (தமிழ்நாடு)  கிந்தி  தேவையில்லை என்று  சொல்லவும்  உரிமையுண்டு. அவர்களை  தண்ணி  கிடைக்காமல் சாகவேண்டியது  தான் என்று  சொல்வது  எவ்வளவு  அபத்தம்???

உங்களுக்கு  வந்தால் ரத்தம்?

மற்றவர்களுக்கு  வந்தால் சட்னியா???

வணக்கம் விசுகர்!

தொழில் சார்பு மொழி தெரிந்து கொள்ளலுக்கும் இனவாத மொழி திணிப்புக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டங்களுடன் மோதுவது எப்பலனையும் தராது.
அவர்களின் நோக்கம் சிங்களத்திற்கு வெள்ளை அடிப்பது மட்டுமே.
 
 • Like 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சின்ன உதாரணம் எனது தம்பி சிறிய பிரச்சினையை நம்ம தமிழர்கள் பெட்டிசன் போட்டு எழுதிவிட்டார்கள் கொழும்பிலிருந்து சி, ஐடி ,ரிஐடி எல்லோரும் வந்து விசாரித்தார்கள் சிங்களம் தெரிந்து இருந்ததால் பிரச்சினைகளை தெளிவாக விளங்கப்படுத்த முடிந்தது அதனால் எந்த பிரச்சினையும் எழவில்லை

எனது அனுபவத்தையும் சொல்கிறேன். அந்த கிராமத்தில் நன்கு சிங்களம் பேசத் தெரிந்தவர், படித்தவர்  ஆனால் ஏழை. பக்கத்துவீட்டுக்காரன் பணக்காரன், தமிழே ஒழுங்காக எழுத, வாசிக்கத் தெரியாதவர். ஊரை ஏமாற்றி, கொள்ளையடித்து சேர்த்த பணம். கேள்வி கேட்க முடியாது. அந்த பிரதேச   சிங்கள பொலிஸ், இராணுவம் அவர்கள் கையில். இந்த செருக்கன் அந்த ஏழைகளுக்கு பல தொல்லைகளை கொடுத்துவந்தான். அவர்களுக்கு தெரியும் இவனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் பொறுத்துக்கொண்டு இருந்தார்கள். ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்கமுடியவில்லை அவர்களால், வருகிறது வரட்டும் முயன்றுதான் பார்ப்போமே என்று போலீசுக்கு போனாராம். அங்கே அந்த கொள்ளைக்காரனுக்கு கதிரை போட்டு, மாத்தையா மரியாதைவேறு.  இவர் சிங்களத்தால் தான் இவனால் பட்ட துன்பங்களை எல்லாம் எடுத்துச் சொல்லியும், தன்னை அவமானப்படுத்தியதால், பிரச்சனையை நீதிமன்றத்திற்கு அனுப்பும்படி கேட்டாராம். அதற்கு போலீசு சொல்லிச்சாம், நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ சொல்லித்தரத் தேவையில்லை, போய் அடங்கி இருக்கப்பார் என்று அவனுக்கு முன்னாலேயே சொன்னாராம். அதன்பின் அவனது கொடுமைகள் தாங்காமல், தான் எது நடந்தாலும் கடவுளில் பாரத்தைப் போட்டுவிட்டு இருந்து விட்டாராம். அதன் பின் அந்த பொலிஸ் அதிகாரிக்கு இட மாற்றம் தென்பகுதிக்கு வந்தபோது, தன்னை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று மக்களை கடிதம் எழுதும்படி கேட்டாராம் அதற்கு என்ன காரணம், உங்கட ஊருக்கு மாற்றலாகி போவதில் ஏன் தயக்கம்? என்று கேட்டவர்ளுக்கு சொன்னார், இங்கு வேலை செய்தால் சம்பளம் கூடுதல். அது உண்மையோ என்னவோ? ஆனால் நிறைய கைலஞ்சம் பெற்று, கள்ளரையும், அடாவடிகளையும் வளர்த்து தம் வருமானத்தை பெருக்கிக்கொண்டார்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

பல்லாயிரகணக்கில் தமிழர்கள் சிங்களம் மூலம் இதை சொல்ல தொடங்கும் போது எதுவும் செய்ய முடியாது போகும்.

இங்கு சிங்களம் தெரிந்தவர்கள் எத்தனைபேர் உண்டு, நீங்கள் உட்பட. சொன்னதை வைத்து சொல்கிறேன். யாராவது அதை செய்ததுண்டா? நீங்கள் உட்பட. இனிவருங்காலத்திலும் கற்று  தமது சொந்த நன்மைகளுக்காகவே பயன்படுத்தவர்கள். நாம் தடுக்கப்போவதில்லை. முடிந்தவர்கள் செய்யலாம் ஆனால் திணிப்பதையே நாம் வெறுக்கிறோம் என்பதை புரிந்து கொண்டால் சரி. 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)