Jump to content

ஆதிக்க சக்திகளினது நலனும் ஆப்கானிஸ்தான் விடுதலையும்-பா.உதயன் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிக்க சக்திகளினது நலனும் ஆப்கானிஸ்தான் விடுதலையும்-பா.உதயன் 

தலிபான்கள் ஆப்கானிஸ்தானையும் அந்த மக்களையும் விடுதலை செய்தார்கள் என்றால் ஏன் அந்த மக்கள் அவர்களை வரவேற்று வீதியில் இறங்கி கொண்டாடுவதற்கு பதிலாக அந்த மக்கள் தங்கள் நாட்டை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பல பெண் ஊடகவியலா ளர்கள், கலைஞர்கள், புத்தியீவிகள் பலர் அழுதபடியே தங்கள் இருத்தல் பற்றியும் அடிப்படை மதவாதிகளால் நடைமுறைக்கு கொண்டு வர இருக்கும் சரியா சட்டங்கள் பற்றியும் பயத்துடன் பேசுவதை ஊடகங்கள் ஊடக அறிகிறோம். அந்த மக்கள் வெறுக்கும் இந்த பஸ்தூன் தலிபான்களோடு எப்படி சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள் சுய நலனோடு பல நாடுகள். 

இந்திய முன்னை நாள் நிதி அமைச்சரும் மூத்த அரசியல் வாதியுமாக இருந்து பல பயங்கரவாதத்தை பார்த்தவராகவும் இருந்த Yaswant Singa இந்திய Times என்ற தொலைக் காட்சிக்கு வழங்கிய பேட்டியிலே பின் வருமாறு கூறுகிறார் நோர்வேயின் அணுசரணையோடு நடந்து விடுதலைப் புலிகளுடனான பேச்சு வார்த்தையில் பார்வையாளராகக் கூட இந்தியா பங்கு கொள்ளாத போதும் வரலாற்றில் நடந்த பல துன்பகர நிகழ்வுகளை எல்லாம் மறந்து பெரும் பயங்கரவாத கொலைகள் கடத்தல்கள் மிகவும் பழமையும் தொன்மையும் பிரச்சித்தியும் வாய்ந்த பாமியான் பள்ளத்தாக்கில் அடையாளமாக  அமைந்திருந்த புத்தரின் சிலை உடைப்பு உட்பட காரணமானவர்களோடு டோகாவில் நடந்த அமெரிக்கா தாலிபான்களுக்கிடை யிலான சமாதான உடன்படிக்கை போச்சுவார்த்தையில் இந்தியா கலந்து கொண்டது எப்படி என்று கேட்க்கிறார். தமிழ் இனத்துக்கு எதிராக நடந்தேறிய இனப் படுகொலைகளை இவர்கள் ஏன் கண்டிக்கவில்லை. இருந்த போதும் இந்தியா எந்த முடிவையும் இப்போதைக்கு எடுக்காமல் (Strategic waiting ) மூலோபாய காத்திருப்பு போல் தலிபான்களின் மாற்றத்திற்காக காத்திருப்பது போல் தெரிகிறது. சீனா மட்டும் ஆரம்ப காலங்களில் தாலிபானை ஆதரிக்காது போதும் இன்று அதன் பல சுய நலன்கள் கருதி தலிபானின் ஆட்சியை அங்கீகரிக்கவுள்ளது.

அமெரிக்கா கொடுத்த அதி நவீன ஆயுதங்களோடு கூடிய ஆப்கானிய தேசிய இராணுவத்தை விட அரைவாசி அளவு கூட இல்லாத தாலிபான்களால் எப்படி எந்தவித எதிர் தாக்குதலும் இன்றி நடந்தே காபூலுக்குள் நுழைய முடிந்தது. இரண்டு பெரிய சக்தி மிக்க எதிரிகளான சீனாவையும் அமெரிக்காவையும் தனது நிகழ்ச்சி நிரலில் கொண்டு வந்து இருவரையும் தனது நண்பன் போல் ஆக்கிக் கொண்டு அருகில் பாகிஸ்தானோடும் உறவை வளர்த்து இந்தியாவை பெரும் சிக்கலுக்குள் மாட்டி விட்டு ஆட்சிக்கு வர இருக்கும் தாலிபான்களால் இன்னும் எத்தனை காலம் ஆப்கானிஸ்தானை தொடர்ந்து ஆள முடியும். மத அடிப்படை வாதிகளால் ஒரு சமூக மாற்றத்தை கொண்டு வர முடியுமா. இன்னும் எத்தனை ஆக்கிரமிப்பு படைகள் திரும்பவும் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைவார்கள். அமெரிக்க படைகளால் விட்டுச் செல்லப்பட்ட ஆயுதங்களும் மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளிடம் இருந்து தலிபான்களுக்கு கிடைத்த பெருமளவு ஆயுதங்களையும் எதிர் காலத்தில் யாருக்கு எதிராக திருப்பப் போகிறார்கள். சோவியத் அமெரிக்கா பனிப் போரோடு தொடங்கிய ஆப்கானிஸ்தானின் ஆடுகளமும் அவர்களால் உருவாக்கிய குழுக்களும் இன்னும் எத்தனை களங்களை காணவிருக்கிறது. எப்படியான ஆட்சியை ஆப்கானிஸ்தாலில் கொண்டு வர முயல்கிறார்கள் . 

பயங்கரவாதத்தோடு கூடிய ஆட்சியா அல்லது ஜனநாயகத்தோடு எல்லோரும் சம உரிமையோடு வாழும் ஆட்சியை எதிர் காலத்தில் ஒரு மாற்றங்களோடு தாலிபான்களால் ஆட்சி நடத்த முடியுமா. அல்லது இவர்களுக்கு எதிரான குழுக்களுக்கும் இவர்களுக்கும் இடையில் ஒரு மோதலை அதிகாரம் மிக்க நாடுகள் மீண்டும் ஏற்படுத்துவார்களா. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரசியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையிலானா உறவுகளில் இனி எப்படியான மாற்றங்கள் எதிர் விளைவுகள் ஏற்படலாம். எனவே இந்தப் பெரிய பேரரசுக ளுக்கு இடையிலான அதிகார நலன் சார் ஆட்டம் 18 ம் நூறாண்டில் இருந்து தொடங்கிய Angelo Afghan யுத்தத்தில் இருந்து பெரிய காய் நகர்தல் விளையாட்டு (Great Game) எப்போ முடிவுக்கு வரும். மத தீவிரவாத்தையும் பயங்கரவாதத்தையும் தாண்டி ஆப்கான் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைக்காக போராடி தங்கள் தேசத்தை தாங்களாகவே மீட்டெடுப்பார்களா. இவைகள் எல்லாம் மில்லியன் டொலருக்கான கேள்வியாகவே இன்று இருக்கின்றன. பயங்கரவாதத்தை கையில் எடுத்தும் இவ்வளவு இராஜதந்திர ரீதியாக காய் நகர்த்திய தாலிபான்களுக் தாங்கள் ஒரு மாற்றத்துக்கு வராது போனால் தொடந்து ஆட்சியை கொண்டு நடத்த முடியாது என்றும் உலக அங்கீகாரத்தை பெற முடியாது என்றும் தெரிந்திருக்கும் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

அமெரிக்கா சோவியத் யூனியனோடு  தொடங்கிய இந்த பூகோள ஆதிக்க நலன் சார் அரசியல் பனிப் போர் வரலாறு இன்று சீனா அமெரிக்க பாகிஸ்தான்  இந்தியா என்று பரந்து இன்னும் ஒரு ஒழுங்கோடு பயணிக்கவிருக்கிறது. எல்லாமே ஆதிக்க சக்திகளினதும் நலனிலும் அவர்களால் உண்டாக்கப் பட்ட உலக ஒழுங்கிலும் அதன் நிகழ்ச்சி நிரலிலும் எல்லாமே நடந்தேறுகின்றன.

பா.உதயன் ✍️
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, uthayakumar said:

ஆப்கான் மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைக்காக போராடி தங்கள் தேசத்தை தாங்களாகவே மீட்டெடுப்பார்களா. இவைகள் எல்லாம் மில்லியன் டொலருக்கான கேள்வியாகவே இன்று இருக்கின்றன

தரணியில் நடப்பது
தார்மீக போர் அல்ல‌
தர்மயுத்தமும் அல்ல‌
தக்கன தப்பி பிழைப்பதக்கான 
தறுதலை யுத்தம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, putthan said:

தரணியில் நடப்பது
தார்மீக போர் அல்ல‌
தர்மயுத்தமும் அல்ல‌
தக்கன தப்பி பிழைப்பதக்கான 
தறுதலை யுத்தம்

சரியாக சொன்னீர்கள் நன்றி புத்தன் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.