Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… இது, யாருக்கோ… உள் குத்துப் போலை கிடக்குது. 🤣😂

அது… யார் எண்டு, கண்டு பிடிக்கிறது தான்… கஸ்ரமாயிருக்கு. 😂😂😂😂

அண்ணை, இண்டைக்கு குரோசியாவில அதிகம் குளிர் போல, இங்க வந்து பத்த வக்கிறியள் 🤣.

அது சரி எங்கட காணிய உயர்த்தி island ஆக்கிற பிளான் எப்படி போகுது?

இப்பவே பக்கத்து வீட்டு காணியளையும் வாங்கி, நல்லா பெருசாக்குங்கோ.  ஆனால் ஆகலும் பெருசாக்க வேண்டாம், பிறகு ஆஸ்பத்திரி அல்லது ஏர்போட் கட்ட எண்டு எடுத்து போடுவாங்கள்.

இன்னும் 30 வருசம்தான்…. போனா கிடையாது, பொழுதுபட்டால் கிட்டாது🤣.

நான் நெடுத்தீவில போய் நல்ல தண்ணியில்லா காடு கொஞ்சம் வாங்கி விடப்போறன். இன்னும் 30 வருசத்தில லாஸ் வேகாஸ்சுக்கு தண்ணி காட்டலாம்🤣.

Link to comment
Share on other sites

 • Replies 145
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kadancha

உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று  நினைக்கிறன். ஸ்பானிய தீவுகள் , புளோரிடா போன்றவற்றின்   சுற்றுலா துறையயில் வெளியே சொல்லப்படாத, அனால் அவர்களின் கலாசாரத்துடன் ஒன்றிப்பு உள்ள ஓர் பெரிய சுற்றுலா

குமாரசாமி

உணவே மருந்து என ஊரில் சொல்வார்கள். நீங்கள் சொன்ன வாழ்க்கை முறையை ஊரில் இருக்கும் வரை வாழ்ந்திருக்கின்றேன். இதை மனதில் வைத்தே இலங்கையில்  உணவுப்பஞ்சம் வந்தாலும் கிராமத்து ஊர்கள் தப்பித்துக்கொள்ளும் என

goshan_che

நெடுத்தீவில இராவணன் பாதம் எண்டு ஒரு கல்லு இருக்கு தெரியுமா? அதில இருந்து பழைய வெளிச்ச கோபுரம் நோக்கி போகும் வழியில் எனக்கு ஒரு பெரிய உப்புகாடு இருக்கு. கோவேறு கழுதையள் எல்லாம் கோடைகாலம் தண்ணி இல்லாமல்

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்… இது, யாருக்கோ… உள் குத்துப் போலை கிடக்குது. 🤣😂

அது… யார் எண்டு, கண்டு பிடிக்கிறது தான்… கஸ்ரமாயிருக்கு. 😂😂😂😂

தண்ணிப் பிரச்சணை பெரும் பிரச்சணை தான் போலை கிடக்குது.

கச்சதீவு... பாலைதீவு, இரணதீவு மக்கள் வாழாமைக்கு காரணம் குடி தண்ணீர் இல்லை.

இப்பதானே கடல் நீரை குடிதண்ணீர் ஆக்கிற தொழில் நுட்பம் வந்துட்டுது..... முப்பது வருசத்தில இன்னும் திறமா வந்திடும்.... பிறகென்ன இப்ப காணிய வாங்கி விட்டா, சந்ததி வாழ்த்தும்.....

கிழவன்.....இலண்டனில இருந்து... விசயமே தெரியாத மாதிரி....எழுதி, எழுதி.... ஜடியா.... பிடிச்சு வாங்கி போட்டதெல்லே எண்டு....

😁 😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரிய கிடாரம் வாங்கிறம். கீழ நல்ல விறகு, கொஞ்சம் மொக்கு, பன்னாடை சேர்த்து பத்த வைக்கிறம்- கடாரத்தின் மூடியில் படியும் நீராவியை நல்ல தண்ணி ஆக்குறம், ஹோஸ் பைப்பை அதில பூட்டி கச்சதீவுக்கு இழுக்கிறம்🤣.

கடல்நீரை நன்னீராக்குவது நல்ல திட்டம்தான் ஆனால் அதன் செலவு மிக அதிகம்.
யாழ்பாணத்தின் எத்தனை மடங்கு பெரிய பொருளாதாரம் சென்னை? அவர்களே இதை ஓரளவுக்கு மேல் செய்ய முடியவில்லை. 

அத்துடன் இதில் பல சூழலியல் பின் விளைவுகளும் உள்ளன. அதை சமன் செய்யும் பொறிமுறையும் அதிக செலவீனமானதே.

இப்படி நடைமுறை சாத்தியமில்லாத திட்டங்களை சும்மா கற்பனாவாதமாக கதைத்து நகைசுவை பண்ணாமல் - நடக்கிற மாரி ஏதும் கதைச்சால் நல்லம்.

உதாரணமாக வட கிழக்கில்  காற்றாலைகளை நிறுவலாம்.  சூரிய பலகைகளை நிறுவலாம். 

யூகேயை சுற்றி உள்ள கடல் படுக்கையை காற்றாலை குத்தகைக்கு விட்டு crown estate போன வருடம் கொள்ளை லாபம் பார்த்தது.

ஆனால் ஊரில் இதை அரசுதான் செய்ய முடியும்.

சூரிய பலகைகள் சின்ன அளவில் செய்யலாம். குறிப்பாக தீவு பகுதியில் கைவிடபட்ட தோட்ட இதர நிலங்களை ஒன்றாக்கி, புலம்பெயர் கூட்டு முதலீட்டில் - சூரிய பண்ணைகள் அமைக்கலாம். 

Selling back to the national grid இலங்கையில் சரிவராவிட்டாலும், நமது ஊர்களின் மின்சார தேவைகளையாவது பூர்த்தி செய்யலாம்.

இதில் உள்ள சாதக பாதகங்கள் பற்றி எனக்கு அறிவில்லை, நான் துறைசார் நிபுணரும் இல்லை. ஆனால் இப்போ லண்டனிலேயே வீட்டுக்கு பொருத்துகிறார்கள். குறித்த வருடத்தில் இட பணம் வந்து விடும் அதன் பின் வீட்டு மின்சாரம் (பராமரிப்பு செலவு போக) இலவசம். 

Edited by goshan_che
5 ⏭குறித்த
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

தேன், தினை, கொள்ளு, கம்பு, குரக்கன்… போன்றவற்றை… சாப்பிட்ட எமது முப்பாட்டி, கொள்ளுப் பாட்டி எல்லாரும்…

200, 300 வருசம் வாழ்ந்து இருப்பார்கள் தானே…

வெள்ளைக்காரனின்… கோதம்ப மாவை சாப்பிடத் தொடங்கின பிறகுதான்… அல்ப ஆயுசிலை சாக வேண்டி வந்திட்டுது. 

100% உண்மை தமிழ்சிறி, 

தேன், தினை, கொள்ளு, கம்பு, குரக்கன்…மட்டுமல்ல ஏதோ சாமை  வரகு கம்பு  எள்ளு(இது மட்டும் தெரியும்) மற்றும் நல்லெண்ணையில் தயாரித்த களிகள் ,சோளம்,ஒடியல் புட்டு   இதுதான் அவர்கள் உணைவாம்,

இதெல்லாம் அமுக்கிபோட்டுத்தான் அந்தகால பழசுகள் 85 வயசுக்கப்புறமும் தலைநிறைய முடியுடனும் நாலைஞ்சுபேரை தூக்கிபோட்டு அடிக்குற வலிமையுடனும், இன்றுள்ள பல நோய்களைபற்றி கேள்விபடாதவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதைவிட உடற்பயிற்சியென்று தனியாக செய்யவேண்டியதில்லை, வாகன பழக்கங்கள் குறைந்த அந்நாட்களில் எத்தனை நூறு கிலோ மீற்றருக்கும் நடையாம், கதிர்காமம் வற்றாபளைக்கெல்லாம் நடந்துகூட போவார்களாம், அப்புறம் துலாவில் தண்ணி இறைப்பு, நான் சிறுவயசில் ஒருமுறை அம்மாகூட பக்கத்து ஊருக்கு போனபோது துலாவில் தண்ணி அள்ளபோய் துலாவோட மேல போயிட்டன் ஜிம்முக்கு போறதவிட பலமான பயிற்சி.

, அதைவிட  பாரங்களை தூக்கிகொண்டு சுமப்பது என்று, அந்த உணவுகளையும் அமுக்கிபோட்டு இப்படி உடலைவருத்தி வேலையும் செய்ஞ்சா பொக்சிங் விளையாடுறவங்கள் ரேஞ்சிலதான் உடம்பு  இருக்கும்.

காலையில் தேத்தண்ணி கோப்பி எல்லாம் கிடையாதாம் காலை எழுந்ததும் பழஞ்சோறு தண்ணி சின்ன வெங்காயம்,கொத்தமல்லி தண்ணி , இஞ்சி சாறு என்று ஆகாரங்கள் மட்டும்தானாம்,பழஞ்சோறு தண்ணி கண்பார்வையை கூர்மையாக்கும், உடலை குளிர்மையாக வைத்திருக்கும்  என்று இன்றும் சொல்கிறார்கள், 

அதனால்தான் அந்தகால பழசுகள் மூக்குகண்ணாடி பாவிப்பது குறைவென்று நினைக்கிறேன், இப்போ 5 வயசிலேயே சோடாபுட்டி கண்ணாடி, 65 வயசுக்குள்ளயே உலகின் பாதி வருத்தங்களை சுமந்தபடி மேட்டர் ஓவர் என்று சொல்லிட்டு கிளம்பி லங்காசிறியில் மரண அறிவித்தல் பகுதியில் வரிசையாய் சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார்கள் போலும்.

அதோட சின்னவெங்காயமும் இஞ்சிசாறும் சேர்ந்தால்  தசை நார்களில் குளுக்கோசின் அளவு உறிஞ்சப்பட்டு சுகர் எகிறின ஆக்கள்  இன்சுலீன் பயன்படுத்தாமலே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்,  இந்த விளக்கம் எல்லாம்  அவர்கள் அறிந்திருந்திருந்தார்களோ இல்லையோ  மருத்துவ குணம் கொண்ட வாழ்க்கைமுறை வாழ்ந்திருக்கிறார்கள் போலும்.

கிழவி சாகும்வரை பக்கத்தில இருந்து ஆதிகால கதைகளை துருவி துருவி கேட்டுக்கொண்டிருப்பேன், அது ஒரு அருமையான படம் பார்த்ததுபோலிருக்கும், அதைவிட அவ பயன்படுத்திய பல தமிழ் சொற்கள் அறவே வழக்கொழிந்து போய்விட்டது என்பது மேலதிக தகவல்.

1 hour ago, Nathamuni said:

கொப்பிழக்காமல் கருத்தாடுவோம்.....

அப்படி எதுவும் இல்லை நாதம்ஸ் , எந்த வெள்ளைக்காரர் காலம் என்று நீங்கள் கேட்ட கேள்வியை நான் தவறாக புரிந்து கொண்டு பதிலளித்திருக்கிறேன்  என்று எடுத்துகொள்கிறேன்.

 • Like 2
 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

முப்பது வருசத்தில சிம்பிளா தண்ணிய மாத்தித் தாற ரெக்னோலஜி வந்திடும்.... இப்ப இருக்கிற விலை அதிகமான தொழில் நுட்பம் அப்ப இராது.

இலண்டணில இருந்து மெல்போனுக்கு நேரா பறக்குது விமானம். ஜந்து வருசத்துக்கு முன்னம், இரண்டுடொரு இடத்திலை இறங்கி பெற்றோல் போடனும்.

இன்னும் பத்து வருசத்தில டீசல் வாகனம் பிரித்தானியாவில் தடை. மின்வாகனம் பககம் முழு கவனம் வரப்போகுது.

ஜயோ பெற்றோல், டீசல், விலை கூட என்று அழுவதும், பத்து வருசத்துக்கு பிறகு என் பிள்ளை எப்படி உந்த விலையில டீசல் காருக்கு டீசல் வாங்க ஏலும் என்று கதறவதால் என்ன பயன்? 😁

11 minutes ago, valavan said:

அப்படி எதுவும் இல்லை நாதம்ஸ் , எந்த வெள்ளைக்காரர் காலம் என்று நீங்கள் கேட்ட கேள்வியை நான் தவறாக புரிந்து கொண்டு பதிலளித்திருக்கிறேன்  என்று எடுத்துகொள்கிறேன்.

சும்மா பகிடிக்குத் தான்.... 😝

Edited by Nathamuni
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

முப்பது வருசத்தில சிம்பிளா தண்ணிய மாத்தித் தாற ரெக்னோலஜி வந்திடும்.... இப்ப இருக்கிற விலை அதிகமான தொழில் நுட்பம் அப்ப இராது

அப்படி சும்மா கண்ணை மூடி கொண்டு சொல்ல முடியாது. டெக்னோலொஜி சில சமயம் leaps and bounce இல் முன்னேறும், சில சமயம் அப்படியே இருக்கும். 

ஆகவே யாழ்பாணம் சிங்கபூராகும், தண்ணி பிரச்சனை தீர்ந்து விடும் என்று speculation அடிப்படையில், காசை போய் speculative investment செய்து உப்பு காட்டை வாங்குவது அவரவர் விருப்பம்.

ஆனால் ஒரு குடாநாட்டுக்கான பொருளாதாரத்தை இப்படி speculation அடிப்படையில் தீர்மானிக்க முடியாது.

இப்படி எழுதுபவர்கள், தாங்களே போய் ஒரு உப்புகாட்டை வாங்க மாட்டார்கள், சும்மா கற்பனாவாதம் மட்டும் கதைக்கலாம்.

22 minutes ago, valavan said:

100% உண்மை தமிழ்சிறி, 

தேன், தினை, கொள்ளு, கம்பு, குரக்கன்…மட்டுமல்ல ஏதோ சாமை  வரகு கம்பு  எள்ளு(இது மட்டும் தெரியும்) மற்றும் நல்லெண்ணையில் தயாரித்த களிகள் ,சோளம்,ஒடியல் புட்டு   இதுதான் அவர்கள் உணைவாம்,

இதெல்லாம் அமுக்கிபோட்டுத்தான் அந்தகால பழசுகள் 85 வயசுக்கப்புறமும் தலைநிறைய முடியுடனும் நாலைஞ்சுபேரை தூக்கிபோட்டு அடிக்குற வலிமையுடனும், இன்றுள்ள பல நோய்களைபற்றி கேள்விபடாதவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதைவிட உடற்பயிற்சியென்று தனியாக செய்யவேண்டியதில்லை, வாகன பழக்கங்கள் குறைந்த அந்நாட்களில் எத்தனை நூறு கிலோ மீற்றருக்கும் நடையாம், கதிர்காமம் வற்றாபளைக்கெல்லாம் நடந்துகூட போவார்களாம், அப்புறம் துலாவில் தண்ணி இறைப்பு, நான் சிறுவயசில் ஒருமுறை அம்மாகூட பக்கத்து ஊருக்கு போனபோது துலாவில் தண்ணி அள்ளபோய் துலாவோட மேல போயிட்டன் ஜிம்முக்கு போறதவிட பலமான பயிற்சி.

, அதைவிட  பாரங்களை தூக்கிகொண்டு சுமப்பது என்று, அந்த உணவுகளையும் அமுக்கிபோட்டு இப்படி உடலைவருத்தி வேலையும் செய்ஞ்சா பொக்சிங் விளையாடுறவங்கள் ரேஞ்சிலதான் உடம்பு  இருக்கும்.

காலையில் தேத்தண்ணி கோப்பி எல்லாம் கிடையாதாம் காலை எழுந்ததும் பழஞ்சோறு தண்ணி சின்ன வெங்காயம்,கொத்தமல்லி தண்ணி , இஞ்சி சாறு என்று ஆகாரங்கள் மட்டும்தானாம்,பழஞ்சோறு தண்ணி கண்பார்வையை கூர்மையாக்கும், உடலை குளிர்மையாக வைத்திருக்கும்  என்று இன்றும் சொல்கிறார்கள், 

அதனால்தான் அந்தகால பழசுகள் மூக்குகண்ணாடி பாவிப்பது குறைவென்று நினைக்கிறேன், இப்போ 5 வயசிலேயே சோடாபுட்டி கண்ணாடி, 65 வயசுக்குள்ளயே உலகின் பாதி வருத்தங்களை சுமந்தபடி மேட்டர் ஓவர் என்று சொல்லிட்டு கிளம்பி லங்காசிறியில் மரண அறிவித்தல் பகுதியில் வரிசையாய் சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார்கள் போலும்.

அதோட சின்னவெங்காயமும் இஞ்சிசாறும் சேர்ந்தால்  தசை நார்களில் குளுக்கோசின் அளவு உறிஞ்சப்பட்டு சுகர் எகிறின ஆக்கள்  இன்சுலீன் பயன்படுத்தாமலே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்,  இந்த விளக்கம் எல்லாம்  அவர்கள் அறிந்திருந்திருந்தார்களோ இல்லையோ  மருத்துவ குணம் கொண்ட வாழ்க்கைமுறை வாழ்ந்திருக்கிறார்கள் போலும்.

கிழவி சாகும்வரை பக்கத்தில இருந்து ஆதிகால கதைகளை துருவி துருவி கேட்டுக்கொண்டிருப்பேன், அது ஒரு அருமையான படம் பார்த்ததுபோலிருக்கும், அதைவிட அவ பயன்படுத்திய பல தமிழ் சொற்கள் அறவே வழக்கொழிந்து போய்விட்டது என்பது மேலதிக தகவல்.

அருமையான பதிவு வல்லவன்.

என் வாழ்க்கையும், நபர்களையும் நினைவூட்டியது🙏🏾.

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாழ்பாண உல்லாச பயண துறை முதலீடுகள் பேய்த்தனமா அடி வாங்கி இருக்குது போல கிடக்குது.😟

1999ல் கொழும்பில் கொலிடே போனவர், கிறடிட் காட்டை பத்தாயிரம் பவுண்ஸ்க்கு அடித்து வாங்கி விட்ட வீடு, ஒரு இலட்சம் பவுண்ஸ்க்கு எட்டு வருசத்தில வித்தார்.

அதே காசில மேலும் வாங்கிப் போட்டு, கோடிக்கணக்கில பணம் பார்த்தார்.

இன்னும் பல வீடுகள் விக்க ரெடி.... வைரஸ் கெடுத்துக் போட்டுதாம்.

எங்க, எப்ப, எப்படி முதலிட வேணும் என்று தெரியாவிடில்.......  இப்படி புலம்பல்ல தானே முடியும். 😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

3 hours ago, Kadancha said:

எல்லாவற்றுக்கும் முதல் அங்கு சாதியால் பிரிவதை எப்படி அணை போடலாம் என்பதை விவாதிப்பது நன்று.

கவலைக்குரிய விடயம் என்னவெனில் இந்த விடயங்கள் அதிகரித்துக்கொண்டு போவதுதான்.. 

நீங்கள் இணைத்த linkல் முதலாவது கட்டுரையில் சிறிய பகுதியை வாசித்து கொண்டிருக்கையில் நினைத்தேன் படித்த சமூகம் என்ற கர்வம் அவ்வளவுதான். இதனால் சாதிக்கப்போவது என்ன? 

On 6/9/2021 at 19:43, Kadancha said:

இலங்கைத் தீவில் இருந்த வேடுவர்கள் அறிந்திருந்ததை, அறியாமல் எழுதிய பறங்கியின் மமதை  கருது இது.

மரவள்ளி இலையை இப்படி சமைக்கலாம் என இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.. interesting 🤔 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த உரையாடலில் ஒரு விடயம் பற்றி மட்டும் என் கருத்து: நான் இலங்கையில் சென்ற முக்கியமான நகரங்களிலெல்லாம் பிரதான மருத்துவமனை நகர மத்தியில் அல்லது மத்திக்கு மிக அண்மையில் இருப்பதைத் தான் கண்டிருக்கிறேன்! இது ஏனென்று யாராவது யோசித்திருக்கிறீர்களா? 

இலங்கையின் மருத்துவமனைப் பாவனையாளர்கள் பெரும்பாலும் வெளிநோயாளர்கள். பொதுப் போக்குவரத்தில் ஏறிப் போய்த் தான் அரச மருத்துவமனைக்குச் செல்வர். வெளிநாடுகளில் இருப்பது போல  சொந்தக்காரை ஓட்டிச் சென்று வாசலில் valet இடம் திறப்பைக் கொடுத்து விட்டு சக்கர நாற்காலியில் குந்தி மருத்துவ மனைக்குள் செல்லும் வழமை இலங்கையில் அரச மருத்துவ மனைகளில் கிடையாது. 

பிறகேன் நகரமத்தியிலிருந்து ஆஸ்பத்திரியை தூர மாற்ற வேண்டும்? ( அடுத்த 30 வருடத்தில் யாழில் தனியார் கார்களின்  தொகை கூடி விடுமா? அல்லது வீதியோடு சமாந்தரமாக ஆஸ்பத்திரி நோக்கி அமெரிக்கா போல light rail போகுமா?)

நான் அறிந்தவரை யாழ் நகரத்தில் 5G கோபுரத்தைக் கட்டவே மக்கள் பயந்து அகற்று என்று குரல் கொடுத்தார்களாம். இத்தகைய சமூகப் பின்னணிகளை முற்றாக மறந்து விட்டு கனவு இராச்சியம் அமைப்பது மன உற்சாகத்திற்கு நல்லதென்றால் செய்யலாம்!

Edited by Justin
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

1 minute ago, Justin said:

இந்த உரையாடலில் ஒரு விடயம் பற்றி மட்டும் என் கருத்து: நான் இலங்கையில் சென்ற முக்கியமான நகரங்களிலெல்லாம் பிரதான மருத்துவமனை நகர மத்தியில் அல்லது மத்திக்கு மிக அண்மையில் இருப்பதைத் தான் கண்டிருக்கிறேன்! இது ஏனென்று யாராவது யோசித்திருக்கிறீர்களா? 

இலங்கையில் மட்டுமல்ல Justin அண்ணா இங்கேயும் சில மருத்துவமனைகள் நகரின் மத்தியில்தான் உள்ளது ஏனெனில் போக்குவரத்து வசதிக்காக.. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இலங்கையில் மட்டுமல்ல Justin அண்ணா இங்கேயும் சில மருத்துவமனைகள் நகரின் மத்தியில்தான் உள்ளது ஏனெனில் போக்குவரத்து வசதிக்காக.. 

மண்டைதீவு, மூன்று மைல் தொலைவில் தானே உள்ளது. முப்பது மைல் இல்லையே...

இலண்டணில், சில சிறிய வைத்திய சாலைகளை மூடியுள்ளனர். செலவைக் கட்டுப்படுத்த...

முப்பது வருடத்தில் உலகநாடுகள் எங்குமே, தமிழர் பரம்பி விடடனரே. பொருளாதார வளம் கூடும் போது, அங்கே முதலீடுகள் நடக்கும். சிங்களவரும் வேலை தேடி வந்து தமிழ் பேசுவதும் நடக்கும்.

நாம் பிறந்த போது வெள்ளையர் இல்லை. எமது தாத்தாமார், வெள்ளையர்  எங்க போறது.... சுதந்திரம் எப்ப வாறது என்று அங்கலாய்திருப்பர்.....

அதே போல, சிங்கள பிடியும் தளரும், ஒருநாள்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

யாரிடமாவது தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் திட்டவரைவு இருக்கா??

இருந்தால் இங்கே  பேசப்படும் பல  விடயங்களுக்கு விடை கிடைக்கும்??

Link to comment
Share on other sites

17 minutes ago, Nathamuni said:

நல்ல விடயம் நாதமுனி அண்ணா!!

ஆனால் எனக்குள் இருக்கும் கேள்வி இதுதான் .. வேரூன்றி வளர்ந்த ஒன்றை பிடுங்கி இன்னொரு இடத்தில் வைப்பதற்கும் …அதை பிடுங்காமல் மேலும் உரமூட்டி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? 

செலவழிக்கும் நேரத்தையும் பணத்தையும் வேறு துறைகளில் முதலீடு செய்யலாமே? 

யாழ்ப்பாண நகர் மத்தியில் இடவசதி குறைவு என்றால் வைத்திய சாலையை ஏன் மாற்றவேண்டும்.. மண்டைதீவில் புதிதாக ஒரு வணிக கட்டிட தொகுதியை கட்டி.. அதிகஅத்தியாவசியமில்லாத கடைகளை அங்கே அப்புறப்படுத்தினால் நகரில் இடநெருக்கடியோ போக்குவரத்து நெருக்கடியோ ஏற்படாது.. 

தண்ணீரையும் நன்னீரக்கிவிடலாமே ஏனெனில் வைத்தியசாலையை மாற்றி இலாபம் உழைக்கமுடியாது.. வியாபாரம் என்றால் முதலாளிகள் எப்படியும் தண்ணிக்கணக்கையும் விலைப்பட்டியலில் சேர்த்துவிடுவார்கள்

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்ல விடயம் நாதமுனி அண்ணா!!

ஆனால் எனக்குள் இருக்கும் கேள்வி இதுதான் .. வேரூன்றி வளர்ந்த ஒன்றை பிடுங்கி இன்னொரு இடத்தில் வைப்பதற்கும் …அதை பிடுங்காமல் மேலும் உரமூட்டி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? 

செலவழிக்கும் நேரத்தையும் பணத்தையும் வேறு துறைகளில் முதலீடு செய்யலாமே? 

யாழ்ப்பாண நகர் மத்தியில் இடவசதி குறைவு என்றால் வைத்திய சாலையை ஏன் மாற்றவேண்டும்.. மண்டைதீவில் புதிதாக ஒரு வணிக கட்டிட தொகுதியை கட்டி.. அத்தியாவசியமில்லாத கடைகளை அங்கே அப்புறப்படுத்தினால் நகரில் இடநெருக்கடியோ போக்குவரத்து நெருக்கடியோ ஏற்படாது.. 

தண்ணீரையும் நன்னீரக்கிவிடலாமே ஏனெனில் வைத்தியசாலையை மாற்றி இலாபம் உழைக்கமுடியாது.. வியாபாரம் என்றால் முதலாளிகள் எப்படியும் தண்ணிக்கணக்கையும் விலைப்பட்டியலில் சேர்த்துவிடுவார்கள்

இருக்கும் வைத்தியசாலை, நான் நிணைப்பது தவறில்லை எனில், பிரிட்டிஸ் காலத்தையது.

நோயாளிகளை வைத்துக்கொண்டு தரமுயர்த முடியாது.

நவீன வசதிகள் கொண்ட வைத்தியசாலை எதிர்காலத்தில் தேவை.

நான் சொல்வது, இருபது முப்பது வருட கனவு. இன்றைய நிலையில் பார்காதீர்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்ல விடயம் நாதமுனி அண்ணா!!

ஆனால் எனக்குள் இருக்கும் கேள்வி இதுதான் .. வேரூன்றி வளர்ந்த ஒன்றை பிடுங்கி இன்னொரு இடத்தில் வைப்பதற்கும் …அதை பிடுங்காமல் மேலும் உரமூட்டி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்? 

அதற்கு செலவழிக்கும் நேரத்தையும் பணத்தையும் வேறு துறைகளில் முதலீடு செய்யலாமே? 

யாழ்ப்பாண நகர் மத்தியில் இடவசதி குறைவு என்றால் வைத்திய சாலையை ஏன் மாற்றவேண்டும்.. மண்டைதீவில் புதிதாக ஒரு வணிக கட்டிட தொகுதியை கட்டி.. கடைகளை அங்கே அப்புறப்படுத்தினால் நகரில் இடநெருக்கடியோ போக்குவரத்து நெருக்கடியோ ஏற்படாது.. 

தண்ணீரையும் நன்னீரக்கிவிடலாமே

யாழ் வைத்தியசாலையை 

பலாலி விமானத்தளத்தை

பற்றியெல்லாம்  அடிக்கடி  பேசப்படுகிறது தான்

அப்படியென்றால் அவை சரியான  இடங்களில்  இல்லை  என்று  தானே அர்த்தம்???

கடல் நீரை நன்னீராக்குதலை பற்றியும் பேசப்படுகிறது

யானையை  கட்டி  தீனி  போட  எவரும்  தயாரில்லை  என்பதே  பட்டறிந்த பாடம்???

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

யாழ்பாண உல்லாச பயண துறை முதலீடுகள் பேய்த்தனமா அடி வாங்கி இருக்குது போல கிடக்குது.😟

1999ல் கொழும்பில் கொலிடே போனவர், கிறடிட் காட்டை பத்தாயிரம் பவுண்ஸ்க்கு அடித்து வாங்கி விட்ட வீடு, ஒரு இலட்சம் பவுண்ஸ்க்கு எட்டு வருசத்தில வித்தார்.

அதே காசில மேலும் வாங்கிப் போட்டு, கோடிக்கணக்கில பணம் பார்த்தார்.

இன்னும் பல வீடுகள் விக்க ரெடி.... வைரஸ் கெடுத்துக் போட்டுதாம்.

எங்க, எப்ப, எப்படி முதலிட வேணும் என்று தெரியாவிடில்.......  இப்படி புலம்பல்ல தானே முடியும். 😁

கருத்துக்கு கருத்து வைக்க முடியாவிட்டால் அடுத்து இதுதானே🤣.

🤣 நான் தமிழன் ஐயா.

11 plus பிள்ளைகளுக்கு படிக்க உதவி செய்தனான் என்றதும் அதை வைத்து நல்ல காசு பாக்கும் டியூசன் டீச்சராக என அங்கலாய்க்கும், எங்கேயும், எமது சாவிலும் லாபம் பார்த்த இனத்தவன் அல்ல🤣.

தொப்பி அளவுதானே?

நான் அது பற்றிய திரியிலேயே சொல்லியுள்ளேன் அது ஒரு ethical investment. அதன் 4து objective தான் லாபம். அதில் எனக்கு பல புத்தி கொள்முதல் இருந்தது. சிலருக்கு உதவ முடிந்த, ஒரு மரபுரிமையை பாதுகாத்த “மன லாபம்” இருக்கிறது.

நான் லண்டனில் இருந்து கூகிள் மேப்பில் மண்டைதீவுக்கு பாலம், கச்சைதீவுக்கு தண்ணீர்குழாய் பதிக்கும் fantasist அல்ல, முடிந்தளவு செயல் செய்தவன் என்ற சின்ன பெருமிதமும் இருக்கிறது😎.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

யாழ் வைத்தியசாலையை 

பலாலி விமானத்தளத்தை

பற்றியெல்லாம்  அடிக்கடி  பேசப்படுகிறது தான்

அப்படியென்றால் அவை சரியான  இடங்களில்  இல்லை  என்று  தானே அர்த்தம்???

கடல் நீரை நன்னீராக்குதலை பற்றியும் பேசப்படுகிறது

யானையை  கட்டி  தீனி  போட  எவரும்  தயாரில்லை  என்பதே  பட்டறிந்த பாடம்???

அடிக்கடி பேசப் படுகிறது என்றால் இப்போது இருக்கிற இடம் சரியில்லை என்ற அர்த்தம் கொள்வது தலைகீழ் அணுகுமுறையாகத் தெரிகிறது! 

சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும், எது சரியான இடம் என்று சுட்டிக் காட்டும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டுமல்லவா? 
உதாரணமாக: அடுத்த 30 ஆண்டுகளில் மண்டைதீவும் ஏனைய தீவுகளும் அப்படியே இருக்குமா அல்லது மாலைதீவுகள் போல கடலின் கீழே போகுமா?  

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, விசுகு said:

யாரிடமாவது தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகத்தின் திட்டவரைவு இருக்கா??

இருந்தால் இங்கே  பேசப்படும் பல  விடயங்களுக்கு விடை கிடைக்கும்??

லண்டனில் ரெஜி வந்த புதிதில், ஒரு கூட்டத்தில் ஒரு நகல் காட்டினார். இப்போ பதிவு இருக்குமா? @நன்னிச் சோழன் தேடிப்பார்க்கவும். 

அதில் ஒரு குறிப்பிட்ட திட்டம் முறிகண்டியை மையமாவைத்து - அற்புதமான திட்டம். கட்டாயம் உங்களையும் அணுகி இருப்பார்கள் என நினகிறேன்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

அடிக்கடி பேசப் படுகிறது என்றால் இப்போது இருக்கிற இடம் சரியில்லை என்ற அர்த்தம் கொள்வது தலைகீழ் அணுகுமுறையாகத் தெரிகிறது! 

சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும், எது சரியான இடம் என்று சுட்டிக் காட்டும் போது கொஞ்சம் யோசிக்க வேண்டுமல்லவா? 
உதாரணமாக: அடுத்த 30 ஆண்டுகளில் மண்டைதீவும் ஏனைய தீவுகளும் அப்படியே இருக்குமா அல்லது மாலைதீவுகள் போல கடலின் கீழே போகுமா?  

மண்டைதீவு அல்ல

ஏன்  யாழ்ப்பாணம்   மட்டுமல்ல

இலங்கையே கடலுக்குள்  தான்  போகப்போகிறது???

காலங்கள்  வேண்டுமானால்  கொஞ்சம் முன்னுக்கு  பின்  ஆகலாம்?

3 minutes ago, goshan_che said:

லண்டனில் ரெஜி வந்த புதிதில், ஒரு கூட்டத்தில் ஒரு நகல் காட்டினார். இப்போ பதிவு இருக்குமா? @நன்னிச் சோழன் தேடிப்பார்க்கவும். 

அதில் ஒரு குறிப்பிட்ட திட்டம் முறிகண்டியை மையமாவைத்து - அற்புதமான திட்டம். கட்டாயம் உங்களையும் அணுகி இருப்பார்கள் என நினகிறேன்.

என்னிடம் அந்த  புத்தகம் வீட்டில்  இருக்கும்

தேடி எடுக்கலாம்

என்ன பார்த்தால் மேலும் மேலும் கவலை  தான்  அதிகரிக்கும்

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

கருத்தல்ல, மறுகருத்து  வைக்க....

புலம்பல்.....

இத்திரியில் வைக்கப்பட்ட கருத்தே நான் மேல்கோள் காட்டினேன் அன்றி, பழைய திரிக்கதையை அல்ல.

அப்புறம்.... தனிப்பட்ட தாக்குதல்..... இதுதானே வழமை.....

நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கவேண்டும்.... அவநம்பிக்கையுடன் அல்ல...

தணணீர் தேவை தான்..... அதனையே சொல்லி கனவை பொசுக்க வேண்டாமே.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

யாழ் வைத்தியசாலையை 

பலாலி விமானத்தளத்தை

பற்றியெல்லாம்  அடிக்கடி  பேசப்படுகிறது தான்

அப்படியென்றால் அவை சரியான  இடங்களில்  இல்லை  என்று  தானே அர்த்தம்???

கடல் நீரை நன்னீராக்குதலை பற்றியும் பேசப்படுகிறது

யானையை  கட்டி  தீனி  போட  எவரும்  தயாரில்லை  என்பதே  பட்டறிந்த பாடம்???

இது பேசப்படுவது இப்படி சில கற்பனாவதிகளால்தான். 

பலாலி அமைவிடம் பற்றி முன்பே ஒரு கட்டுரை வந்தது, காற்றின் போக்கு, தர அமைப்பு, வெள்ள அபாயம் இப்படி பலதை கொண்டே மிகவும் தாழ் நில பரப்பான யாழில், மேட்டு நிலத்தில் இது அமைய பெற்றது.

அப்படி இருந்தும் அண்மையில் ஒரு புயலில் வெள்ளகாடாகியது. 

கூடவே காங்கேசன் துறை ரயில், பஸ் துறைமுகம் எல்லாம் சேர, வெளிநாட்டில் இருப்பது போல் ஒரு transport hub ஆக வரகூடிய அமைவும் உண்டு. தீவுகள், வடமராட்சி, தென்மராட்சி, நகரம் எங்கும் இருந்தும் வருவது இலகு, சமதூரம்.

இதை தூக்கி எதோ ஒரு தீவு பகுதியில் வைத்தால் - நில அமைவு பற்றி உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை.

பிறகு, ரோடு, தண்ணீர், ரயில் எல்லாம் அதுக்கு தனியா இங்கே இருந்து போக வேண்டும்.

நாடு போற போக்கில் இந்த கதை எல்லாம் அடுத்த 30 ஆண்டில் சாத்தியமா?🤣.

ஆங்கிலத்தில் இப்படி கதைப்பர்களிடம் சொல்வார்கள். Let me know what you are using என்று. அப்படி ஏதும் மூலிகைகை அடித்து விட்டு பாலம் கட்டுகிறார்களோ தெரியவில்லை🤣.

17 minutes ago, விசுகு said:

என்னிடம் அந்த  புத்தகம் வீட்டில்  இருக்கும்

தேடி எடுக்கலாம்

என்ன பார்த்தால் மேலும் மேலும் கவலை  தான்  அதிகரிக்கும்

உண்மைதான்.

Edited by goshan_che
 • Like 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

மண்டைதீவு அல்ல

ஏன்  யாழ்ப்பாணம்   மட்டுமல்ல

இலங்கையே கடலுக்குள்  தான்  போகப்போகிறது???

காலங்கள்  வேண்டுமானால்  கொஞ்சம் முன்னுக்கு  பின்  ஆகலாம்?

மாலைதீவு கடலில் மூழ்கப்போகிறது..... அங்கே விமான நிலையம், கோட்டல்கள் அமைத்தவர்கள், என்ன மூலிகையை உபயோகித்திருப்பார்கள்? 🤪 🤔

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

மாலைதீவு கடலில் மூழ்கப்போகிறது..... அங்கே விமான நிலையம், கோட்டல்கள் அமைத்தவர்கள், என்ன உபயோகித்திருப்பார்கள்? 🤪

யாமறியோம்  பராபரனே??🤣

ஆனால் சிங்கப்பூரில் நின்றபோது

அதுவும் கடலுக்குள்  போகப்போவதால்

தாங்கள்  முந்திக்கொண்டு தற்பொழுதே

கடலுக்குள் வாழ முயலப்போவதாக சொன்னார்கள்???

Edited by விசுகு
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

மண்டைதீவு அல்ல

ஏன்  யாழ்ப்பாணம்   மட்டுமல்ல

இலங்கையே கடலுக்குள்  தான்  போகப்போகிறது???

காலங்கள்  வேண்டுமானால்  கொஞ்சம் முன்னுக்கு  பின்  ஆகலாம்?

இது சரியான பார்வையாக தெரியவில்லை அண்ணை. மாலை தீவில் வேறு வழியில்லை. அவர்கள் இருக்கும் இடத்தில் கட்டினார்கள். அப்போ புவி வெப்பமாதல், கடல் நீர் உயர்தல் பற்றி அதிகம் யாரும் அறிந்திருக்கவில்லை.

எது எப்படியோ, இதெல்லாம் யதார்ததுக்கு எவ்வளவு புறம்பானவை என்பது உங்களுக்கும் கட்டாயம் தெரியும். 

இங்கே எழுதப்படும் சிலதை யாழ்பாணத்தில் இருந்து வாசிக்கும் யாரும் வாயால் சிரிக்க மாட்டார்கள்🤣.

7 minutes ago, விசுகு said:

யாமறியோம்  பராபரனே??🤣

ஆனால் சிங்கப்பூரில் நின்றபோது

அதுவும் கடலுக்குள்  போகப்போவதால்

தாங்கள்  முந்திக்கொண்டு தற்பொழுதே

கடலுக்குள் வாழ முயலப்போவதாக சொன்னார்கள்???

ஒட்டுமொத்த ஜகார்தாவையே போனியோ தீவுக்கு இடம்மாற்ற போகிறார்கள்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா ஒரு ஆஸுபத்திரிக்கா இவ்வளவு சண்டை.

அண்ணைக்கு ஒரு ஆஸ்பத்திரி மண்டைதீவிலை

மிச்ச ஆட்களுக்கு யாழ் நகர் மத்தியிலே,

வேற ஆட்களுக்கு எங்கை வேணுமோ கட்டுங்க.

🤣🤣🤣

 • Haha 2
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.