Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

யாழ்ப்பாண நகரத்தின் அடையாளங்களை மேம்படுத்தல்! ஐந்திறன்.


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ஜஸ்டீன் அண்ணா, மணிமாறன் சொல்வதோடு முரண்பட முடியாது. சராசரி ஆயுள் இப்போ கூட என்பது மறுக்க முடியாது.

நான் இப்படி நினைகிறேன். ஊகம்தான்.

முன்பு நோய்வாய்பட்டவர்கள் இறக்க, இருப்பவர்கள் சுகதேகிகளாக நீண்டகாலம் இருந்தார்கள்.

இப்போ பரவலாக பலரும் நீண்ட காலம் வாழ்கிறார்கள் ஆனால் எல்லாருக்கும் வருத்தம்?

எனது பூட்டி (96), அம்மப்பா (86), அம்மம்மா (93), அப்பம்மா (85) - அவர்களின் கடைசி 3/4 வருடம் வரை எழுந்து நடமாடி அவரவர் காரியங்களை பார்த்தார்கள். 

ஆனால் அவர்களின் பிள்ளைகள் கனபேர் 75 தாண்டவில்லை. இருப்பவர்களும் அதிகம் நோய்வாய்பட்ட நிலையே. 

 

 

இது சரியான விளக்கம். முன்னோர் நீண்டகாலம் வாழ்ந்தனர் எனும் போது நாம் எத்தனை பேரைப் பற்றிக் கதைக்கிறோம் என்ற தரவு முக்கியமானது! எமக்குத் தெரிந்த நால்வர் நூறு தாண்டினால் சனத்தொகையின் சராசரி வாழ்வு காலம் அதிகமாக இருந்தது என்று சொல்ல முடியாது! இங்கே தான் சாதாரண பரம்பல் (normal distribution) என்ற புள்ளி விபரவியல் கூறு விளக்கப் பட வேண்டும்! 

1950 களில் நீண்ட நாள் வாழ்ந்தோர் சனத்தொகைச் சராசரியில் (population mean) இருந்து 2 standard deviations  தள்ளி வெறும் 2.5% இனராக  இருப்பர்! தற்போது சனத்தொகை சராசரியே அதிகரித்து விட்டது, எனவே அந்த அதிக நாள் வாழும் 2.5% இனரின் வயதும் அதிகரித்து விட்டது! (இதை விளக்க எனக்கு தலை வலிக்கிறது, யாராவது படம் மூலம் முடிந்தால் விளக்குங்கள்!😂)

இந்த சனத்தொகைச் சராசரியைத் தான் நான் குறிப்பிடுவது! அது தான் முன்னேற்றத்தை அளக்க உரிய வழி என நினைக்கிறேன்.  

 • Thanks 1
Link to comment
Share on other sites

 • Replies 145
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kadancha

உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று  நினைக்கிறன். ஸ்பானிய தீவுகள் , புளோரிடா போன்றவற்றின்   சுற்றுலா துறையயில் வெளியே சொல்லப்படாத, அனால் அவர்களின் கலாசாரத்துடன் ஒன்றிப்பு உள்ள ஓர் பெரிய சுற்றுலா

குமாரசாமி

உணவே மருந்து என ஊரில் சொல்வார்கள். நீங்கள் சொன்ன வாழ்க்கை முறையை ஊரில் இருக்கும் வரை வாழ்ந்திருக்கின்றேன். இதை மனதில் வைத்தே இலங்கையில்  உணவுப்பஞ்சம் வந்தாலும் கிராமத்து ஊர்கள் தப்பித்துக்கொள்ளும் என

goshan_che

நெடுத்தீவில இராவணன் பாதம் எண்டு ஒரு கல்லு இருக்கு தெரியுமா? அதில இருந்து பழைய வெளிச்ச கோபுரம் நோக்கி போகும் வழியில் எனக்கு ஒரு பெரிய உப்புகாடு இருக்கு. கோவேறு கழுதையள் எல்லாம் கோடைகாலம் தண்ணி இல்லாமல்

 • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Justin said:

இது சரியான விளக்கம். முன்னோர் நீண்டகாலம் வாழ்ந்தனர் எனும் போது நாம் எத்தனை பேரைப் பற்றிக் கதைக்கிறோம் என்ற தரவு முக்கியமானது! எமக்குத் தெரிந்த நால்வர் நூறு தாண்டினால் சனத்தொகையின் சராசரி வாழ்வு காலம் அதிகமாக இருந்தது என்று சொல்ல முடியாது! இங்கே தான் சாதாரண பரம்பல் (normal distribution) என்ற புள்ளி விபரவியல் கூறு விளக்கப் பட வேண்டும்! 

1950 களில் நீண்ட நாள் வாழ்ந்தோர் சனத்தொகைச் சராசரியில் (population mean) இருந்து 2 standard deviations  தள்ளி வெறும் 2.5% இனராக  இருப்பர்! தற்போது சனத்தொகை சராசரியே அதிகரித்து விட்டது, எனவே அந்த அதிக நாள் வாழும் 2.5% இனரின் வயதும் அதிகரித்து விட்டது! (இதை விளக்க எனக்கு தலை வலிக்கிறது, யாராவது படம் மூலம் முடிந்தால் விளக்குங்கள்!😂)

இந்த சனத்தொகைச் சராசரியைத் தான் நான் குறிப்பிடுவது! அது தான் முன்னேற்றத்தை அளக்க உரிய வழி என நினைக்கிறேன்.  

விளக்கிற உங்களுக்கே தலை வலிக்கிறதெண்டால், விளங்கமுனையும் எமக்கு?🤣.

ஆனால் கொஞ்சம் விளங்கினமாரித்தான் இருக்கு. 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

தேன், தினை, கொள்ளு, கம்பு, குரக்கன்…மட்டுமல்ல ஏதோ சாமை  வரகு கம்பு  எள்ளு(இது மட்டும் தெரியும்) மற்றும் நல்லெண்ணையில் தயாரித்த களிகள் ,சோளம்,ஒடியல் புட்டு   இதுதான் அவர்கள் உணைவாம்,

இதெல்லாம் அமுக்கிபோட்டுத்தான் அந்தகால பழசுகள் 85 வயசுக்கப்புறமும் தலைநிறைய முடியுடனும் நாலைஞ்சுபேரை தூக்கிபோட்டு அடிக்குற வலிமையுடனும், இன்றுள்ள பல நோய்களைபற்றி கேள்விபடாதவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

அதைவிட உடற்பயிற்சியென்று தனியாக செய்யவேண்டியதில்லை, வாகன பழக்கங்கள் குறைந்த அந்நாட்களில் எத்தனை நூறு கிலோ மீற்றருக்கும் நடையாம், கதிர்காமம் வற்றாபளைக்கெல்லாம் நடந்துகூட போவார்களாம், அப்புறம் துலாவில் தண்ணி இறைப்பு, நான் சிறுவயசில் ஒருமுறை அம்மாகூட பக்கத்து ஊருக்கு போனபோது துலாவில் தண்ணி அள்ளபோய் துலாவோட மேல போயிட்டன் ஜிம்முக்கு போறதவிட பலமான பயிற்சி.

, அதைவிட  பாரங்களை தூக்கிகொண்டு சுமப்பது என்று, அந்த உணவுகளையும் அமுக்கிபோட்டு இப்படி உடலைவருத்தி வேலையும் செய்ஞ்சா பொக்சிங் விளையாடுறவங்கள் ரேஞ்சிலதான் உடம்பு  இருக்கும்.

காலையில் தேத்தண்ணி கோப்பி எல்லாம் கிடையாதாம் காலை எழுந்ததும் பழஞ்சோறு தண்ணி சின்ன வெங்காயம்,கொத்தமல்லி தண்ணி , இஞ்சி சாறு என்று ஆகாரங்கள் மட்டும்தானாம்,பழஞ்சோறு தண்ணி கண்பார்வையை கூர்மையாக்கும், உடலை குளிர்மையாக வைத்திருக்கும்  என்று இன்றும் சொல்கிறார்கள், 

அதனால்தான் அந்தகால பழசுகள் மூக்குகண்ணாடி பாவிப்பது குறைவென்று நினைக்கிறேன், இப்போ 5 வயசிலேயே சோடாபுட்டி கண்ணாடி, 65 வயசுக்குள்ளயே உலகின் பாதி வருத்தங்களை சுமந்தபடி மேட்டர் ஓவர் என்று சொல்லிட்டு கிளம்பி லங்காசிறியில் மரண அறிவித்தல் பகுதியில் வரிசையாய் சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார்கள் போலும்.

அதோட சின்னவெங்காயமும் இஞ்சிசாறும் சேர்ந்தால்  தசை நார்களில் குளுக்கோசின் அளவு உறிஞ்சப்பட்டு சுகர் எகிறின ஆக்கள்  இன்சுலீன் பயன்படுத்தாமலே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்,  இந்த விளக்கம் எல்லாம்  அவர்கள் அறிந்திருந்திருந்தார்களோ இல்லையோ  மருத்துவ குணம் கொண்ட வாழ்க்கைமுறை வாழ்ந்திருக்கிறார்கள் போலும்.

உணவே மருந்து என ஊரில் சொல்வார்கள். நீங்கள் சொன்ன வாழ்க்கை முறையை ஊரில் இருக்கும் வரை வாழ்ந்திருக்கின்றேன். இதை மனதில் வைத்தே இலங்கையில்  உணவுப்பஞ்சம் வந்தாலும் கிராமத்து ஊர்கள் தப்பித்துக்கொள்ளும் என ஒரு திரியில் கூறினேன்...... ஆனால் அங்கேயும் தகராறு பண்ணினார்கள்.

பொருளாதார தடைகள் காலத்திலும் போர் உச்ச காலத்திலும் கிராமத்து வாழ்க்கை முறை மட்டுமே மக்களை காப்பாற்றியது.

 • Like 3
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முதல்வன் said:

ஏனப்பா ஒரு ஆஸுபத்திரிக்கா இவ்வளவு சண்டை.

அண்ணைக்கு ஒரு ஆஸ்பத்திரி மண்டைதீவிலை

மிச்ச ஆட்களுக்கு யாழ் நகர் மத்தியிலே,

வேற ஆட்களுக்கு எங்கை வேணுமோ கட்டுங்க.

🤣🤣🤣

ரவுணுக்கை இருந்த பஸ் ஸ்ராண்டை  மெல்ல மெல்ல பண்ணைக்கு மாத்தவே கொதிச்சனீங்கள்..... பெரியாஸ்பத்திரியை மண்டைதீவுக்கு கொண்டு போக விடுவியளே? 🤣🤣🤣🤣🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

அடுத்த 30 வருடத்தில் யாழில் தனியார் கார்களின்  தொகை கூடி விடுமா? அல்லது வீதியோடு சமாந்தரமாக ஆஸ்பத்திரி நோக்கி அமெரிக்கா போல light rail போகுமா?)

நீங்கள் tube light உம், ஆமை உங்களிலும் வேகம் (நக்கல் அல்ல). 

அவையளின் futuristic திட்டம், எல்லாரும் personal copter இல் பறந்து போக்குவரத்து. தீவில் copter pads க்கும் parking க்கும்  பஞ்சமில்லை.  

 • Haha 1
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

இந்த உரையாடலில் ஒரு விடயம் பற்றி மட்டும் என் கருத்து: நான் இலங்கையில் சென்ற முக்கியமான நகரங்களிலெல்லாம் பிரதான மருத்துவமனை நகர மத்தியில் அல்லது மத்திக்கு மிக அண்மையில் இருப்பதைத் தான் கண்டிருக்கிறேன்! இது ஏனென்று யாராவது யோசித்திருக்கிறீர்களா? 

இலங்கையின் மருத்துவமனைப் பாவனையாளர்கள் பெரும்பாலும் வெளிநோயாளர்கள். பொதுப் போக்குவரத்தில் ஏறிப் போய்த் தான் அரச மருத்துவமனைக்குச் செல்வர். வெளிநாடுகளில் இருப்பது போல  சொந்தக்காரை ஓட்டிச் சென்று வாசலில் valet இடம் திறப்பைக் கொடுத்து விட்டு சக்கர நாற்காலியில் குந்தி மருத்துவ மனைக்குள் செல்லும் வழமை இலங்கையில் அரச மருத்துவ மனைகளில் கிடையாது. 

பிறகேன் நகரமத்தியிலிருந்து ஆஸ்பத்திரியை தூர மாற்ற வேண்டும்? ( அடுத்த 30 வருடத்தில் யாழில் தனியார் கார்களின்  தொகை கூடி விடுமா? அல்லது வீதியோடு சமாந்தரமாக ஆஸ்பத்திரி நோக்கி அமெரிக்கா போல light rail போகுமா?)

 

இதன் விளக்கத்தை நேற்றே எழுதிவிட்டு இணைக்காமல் விட்டுவிட்டேன், ஏன் அருவரியில் இருந்து வாக்குவாதப்பட வேண்டும் என்று.  எழுதியது  இருந்ததால் இணைக்கிறேன். இப்போதும் வாதம் செய்ய அல்ல.

நவீன நகர் திட்டமிடலில்,  தொழில்முறை தேவை  அடிப்படை காரணம், பொது வைத்திய சாலையையும், போதனா வைத்திய சாலையையும் பிரிக்க முடியாது. ஒன்றுக்கு ஒன்று துணை, ஒன்றை ஒன்று இட்டு நிரப்புபவை (இதை பற்றி நான் வாதாட வரவில்லை. வேண்டுமானவர்கள், நேரில் சென்று அவதானித்து, அப்படி இல்லாவிட்டால் ஒரு சில ஆதாரங்களை சமர்ப்பிக்கவும்). 

இட மாற்றம் வேண்டுமாயின் (எந்த இடமாயினும்), இரண்டும் ஒரே இடத்துக்கு மாற்றப்பட வேண்டும். அதன் படி, பொது  போக்குவரத்துக்கு (பேரூந்து) தரிப்பு நிலையத்தையும் மாற்ற வேண்டும்.   

அதன்படி, வர்த்தகம் மற்றும் அனைத்து சேவைகளும், மாற்றப்படும் இடத்துக்கு, பொது  போக்குவரத்துக்கு) நடை தூரத்தில் (இப்போதைய நிலையில்)  உள்ள இடத்துக்கு மாற்றப்பட வேண்டும். அல்லது மோனோ rail போன்ற போக்குவரத்துக்கு அமைத்து, சேவைகள் தொட்டம் தொட்டம் ஆக பிரிக்கப்படலாம். இது சாத்தியமில்லை. இப்போதைய நிலையில்.

தனித்தனியாக, நகர் அமைப்பு  திட்டத்தை பார்க்க முடியாது. அதிலும். முக்கியமான சேவைகள்.

நூலகமும், பூங்கா, வீரசிங்கம் மண்டபமும் அவற்றின் இடத்தில அமைக்கப்பட்ட காரணம், இரு பெரும் பாடசாலைகள், பொழுது போக்கு, கடற்கரை அண்டிய பிரதேசம். இப்பொதுள்ள இளம் கலாசாரத்திற்கு, அந்த இடம் மிகவும் வசதி என்பது வேறு விடயம். 

எல்லோரும், இப்போதைய நிலையில் இருந்து பார்கிறீர்கள்.

நான் பார்ப்பது, ஆக குறைந்தது, 900 இல் இருந்து மற்றம் எப்படி வந்தது என்று. எப்போதும் பொது சேவைகள் ஒன்றாக (நடை தூரத்தில்) இருந்தே வந்துள்ளது.

ஆனால், வளர்ச்சியில், விருத்தியில் அவை மாற்றப்பட முடியாது என்பது  இல்லை. 

முன்பு இங்கு குறிப்பிட்டு இருந்தேன், இலங்கைத் தீவில் (அநேகமாக) முதலில் இருந்த நூல் / அருங்காட்சி அ கம் (சரசுவதி மகால்), நல்லூர் இராசதானிக்குள் இருந்தது.  அனைத்துமே இராசதானிக்குள் இருந்தது.  

அதன் படி, இப்போதைய திட்டமிடலும் அவ்வளவாக வேறுபாடு இல்லை, நவீன வசதிகள் , அளவுகளை போன்றவற்றை தவிர.

 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

அண்ணை, இண்டைக்கு குரோசியாவில அதிகம் குளிர் போல, இங்க வந்து பத்த வக்கிறியள் 🤣.

அது சரி எங்கட காணிய உயர்த்தி island ஆக்கிற பிளான் எப்படி போகுது?

இப்பவே பக்கத்து வீட்டு காணியளையும் வாங்கி, நல்லா பெருசாக்குங்கோ.  ஆனால் ஆகலும் பெருசாக்க வேண்டாம், பிறகு ஆஸ்பத்திரி அல்லது ஏர்போட் கட்ட எண்டு எடுத்து போடுவாங்கள்.

இன்னும் 30 வருசம்தான்…. போனா கிடையாது, பொழுதுபட்டால் கிட்டாது🤣.

நான் நெடுத்தீவில போய் நல்ல தண்ணியில்லா காடு கொஞ்சம் வாங்கி விடப்போறன். இன்னும் 30 வருசத்தில லாஸ் வேகாஸ்சுக்கு தண்ணி காட்டலாம்🤣.

கோசான்.... அதுக்கு எல்லாம், பக்கா  திட்டம்  ஏற்கெனவே ரெடி பண்ணியாச்சு.
மண்டைதீவில்... கட்டப்   போற, ஆஸ்பத்திரிக்கு... அத்திவாரம் வெட்டும் போது,
வாற  மண்ணை  எடுத்து,  காணியை உயர்த்தலாம் எண்டு இருக்கிறன். :grin:
அந்த மண், காணாட்டி.....  😎
காக்கை தீவில்.... ஐந்து நட்சத்திர ஹோட்டேல்  கட்டும்  போது,
"ஸ்விம்மிங் பூல்"   கட்டுறத்துக்கு,  தோண்டுற மண்ணையும் போட்டால்...
நம்மடை காணி... அரைப் பனை, உயரத்துக்கு வந்திடும்.   🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kadancha said:

பொது வைத்திய சாலையையும், போதனா வைத்திய சாலையையும் பிரிக்க முடியாது. ஒன்றுக்கு ஒன்று துணை, ஒன்றை ஒன்று இட்டு நிரப்புபவை (இதை பற்றி நான் வாதாட வரவில்லை. வேண்டுமானவர்கள், நேரில் சென்று அவதானித்து, அப்படி இல்லாவிட்டால் ஒரு சில ஆதாரங்களை சமர்ப்பிக்கவும்). 

மேலும் சிறப்பு தேர்ச்சி மருத்துவமனைகள் கூட தனித்து இயங்காமல் - ஒரு கூட்டின் அங்கமாக இயங்குவதே வினைதிறனானது என நினைகிறேன்.

கொவிட்டை கட்டுபடுத்த அமைக்கபட்ட சிறப்பு மருத்துவமனைகளுக்கு சில காலத்திலேயே நோயாளிகள் வருகை பூச்சியமாகி போனது.

வெண்டிலேட்டர் உட்பட்ட வசதிகள் இருந்தாலும் கொவிட்டில் இருந்து மீள உதவும் இதர வசதிகள் (rehab, physiotherapy) இந்த ஆஸ்பத்திரிகளில் இல்லாமையால் -வைத்தியர்கள் நோயாளரை அனுப்பவில்லை என்றார்கள்.

3 hours ago, தமிழ் சிறி said:

கோசான்.... அதுக்கு எல்லாம், பக்கா  திட்டம்  ஏற்கெனவே ரெடி பண்ணியாச்சு.
மண்டைதீவில்... கட்டப்   போற, ஆஸ்பத்திரிக்கு... அத்திவாரம் வெட்டும் போது,
வாற  மண்ணை  எடுத்து,  காணியை உயர்த்தலாம் எண்டு இருக்கிறன். :grin:
அந்த மண், காணாட்டி.....  😎
காக்கை தீவில்.... ஐந்து நட்சத்திர ஹோட்டேல்  கட்டும்  போது,
"ஸ்விம்மிங் பூல்"   கட்டுறத்துக்கு,  தோண்டுற மண்ணையும் போட்டால்...
நம்மடை காணி... அரைப் பனை, உயரத்துக்கு வந்திடும்.   🤣

பலே, பலே🤣.

நான் ஒரு நிலகீழ் honeymoon suit ஒண்டும் கட்டுறன் - அதிலயும் கொஞ்சம் மண் வரும். தேவையெண்டா சொல்லுங்கோ. 

காணியை சுத்தி, கார்பெட் ரோட்.

நல்லா தாரை வார்த்து, மண்ணை போடப்போறன்🤣

ஆனால் என்னை விட உயத்த கூடாது (தமிழன் நான்🤣).

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

நாதம்ஸ், குறை நினைக்காமல் அப்படியே உங்களுக்கு தெரிந்த அமைச்சர்களிடம் சொல்லி நயினாதீவுக்கு ஒரு  பாலத்தை முதலில் போடுங்கோ

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

விரலுக்கேற்ற வீக்கம் என்பதிற்கமைய எனது கருத்துக்கள்

சுற்றுலாவுடன் சம்பந்தமாக நான் ஒப்பிட்டது புளோரிடா மற்றும் ஸ்பானியா நாடுகளில் இருப்பது போன்று எமது  தீவுப்பகுதிகளிலும் செய்யலாம் என்பதே. அது இங்கே நக்கல் நையாண்டிகளுடன் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு விட்டது. 
சந்தோசம்.

எனது கேள்வி என்னவென்றால்  இது சாத்தியமென்றால் புளோரிடாவுக்கு சமமாய் ஏன் புங்குடுதீவை/நெடுந்தீவை மாற்ற முடியாது?
புங்குடுதீவு வரலாற்று சிறப்புமிக்க "கண்ணகைபுரம்" நுழைவாயில் கோபுரம்.. 30.09.2018 - YouTube

எல்லாம் படம் மற்றும் காணொளிகளுக்கு மட்டும் தான் சாத்தியமாகுமா?

Nallur Entrance| Jaffna |புதிதாக அமைக்கப்பட்ட நல்லூர் நுழைவாயில் | யாழ்ப்பாணம் | Hover Holic - YouTube

 

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

பலே, பலே🤣.

நான் ஒரு நிலகீழ் honeymoon suit ஒண்டும் கட்டுறன் - அதிலயும் கொஞ்சம் மண் வரும். தேவையெண்டா சொல்லுங்கோ. 

காணியை சுத்தி, கார்பெட் ரோட்.

நல்லா தாரை வார்த்து, மண்ணை போடப்போறன்🤣

ஆனால் என்னை விட உயத்த கூடாது (தமிழன் நான்🤣).

முதல் இரவு... அன்று,  
தேன் நிலவு,  அறையை... 
நிலத்துக்கு கீழ், அமைத்தால்....
சந்திரனை... பார்க்க முடியுமா?     🤔

அந்த அறையை.... கூரை, முகட்டில் அமைத்தால் தானே....
முதல் இரவு காணும்.... புது மண தம்பதியர்...
மல்லாக்க... படுத்துக் கொண்டு,  நிலவை.. பார்க்க முடியும்.    😛

இது... உங்களது,  கொம்பனிக்கு உரிய இலவச.. அட்வைஸ்.
பிக்கோஸ்... ஐயாம், ஒறிஜினல்... பனங் கொட்டை  தமிழன்.    😂     🤣

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2021 at 16:59, பிரபா சிதம்பரநாதன் said:

வேரூன்றி வளர்ந்த ஒன்றை பிடுங்கி இன்னொரு இடத்தில் வைப்பதற்கும் …அதை பிடுங்காமல் மேலும் உரமூட்டி வளர்ப்பதற்கும் என்ன வித்தியாசம்?

உங்கள் கேள்விக்கு பல பதில்கள் இருக்கின்றது.
இருந்தாலும் ஒன்று இரண்டு பதில்கள்.


முதலில் விஸ்தீரணம்.அது அங்கில்லை.

 அன்றைய காலங்களில் எல்லாம் நெரு நெருக்கமாகவே வீதிகளையும் கட்டிடங்களை அமைத்திருந்தார்கள். அன்றைய வாழ்வுக்கு அது சரியாக இருந்தது. இன்று அப்படியல்ல. பரந்த வீதிகள் பரந்த காணிகளுக்குள் கட்டிடங்கள் என புதிய பரிமாண தோற்றங்கள். அடுத்த 100/200 வருடங்களை கணக்கு வைத்து திட்டமிடுகின்றார்கள்.

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

முதல் இரவு... அன்று,  
தேன் நிலவு,  அறையை... 
நிலத்துக்கு கீழ், அமைத்தால்....
சந்திரனை... பார்க்க முடியுமா?     🤔

அந்த அறையை.... கூரை, முகட்டில் அமைத்தால் தானே....
முதல் இரவு காணும்.... புது மண தம்பதியர்...
மல்லாக்க... படுத்துக் கொண்டு,  நிலவை.. பார்க்க முடியும்.    😛

இது... உங்களது,  கொம்பனிக்கு உரிய இலவச.. அட்வைஸ்.
பிக்கோஸ்... ஐயாம், ஒறிஜினல்... பனங் கொட்டை  தமிழன்.    😂     🤣

உங்கள் அறிவுறையை எங்கள் மன்னார் அண்ட் கம்பெனி, இண்டார்நேசனல் லிமிடெட் ஏற்று கொள்கிறது.

நன்றி.

உங்கள் அறிவுறைப்படி எங்கள் honeymoon suit ஐ, சந்திரனை எப்போதும் பார்க்கும் வண்ணம், முழுக்க முழுக்க கண்ணாடியால் இழைக்கும்படியும், திரைசீலைகள் உட்பட எந்த மறைப்பும் இருக்க கூடாது என்றும் எங்கள் ஒப்பந்ததாரருக்கு அறிவித்துள்ளோம்.

உங்கள் உதவியின் நினைவாக, இதை “தமிழ் சிறீ தேனிலவு மாடம்” என்று பெயரிட உத்தேசித்துள்ளோம்🙏🏾🤣.  

Link to comment
Share on other sites

17 hours ago, குமாரசாமி said:

உங்கள் கேள்விக்கு பல பதில்கள் இருக்கின்றது.
இருந்தாலும் ஒன்று இரண்டு பதில்கள்.


முதலில் விஸ்தீரணம்.அது அங்கில்லை.

 அன்றைய காலங்களில் எல்லாம் நெரு நெருக்கமாகவே வீதிகளையும் கட்டிடங்களை அமைத்திருந்தார்கள். அன்றைய வாழ்வுக்கு அது சரியாக இருந்தது. இன்று அப்படியல்ல. பரந்த வீதிகள் பரந்த காணிகளுக்குள் கட்டிடங்கள் என புதிய பரிமாண தோற்றங்கள். அடுத்த 100/200 வருடங்களை கணக்கு வைத்து திட்டமிடுகின்றார்கள்.

 

எதிர்கால தேவை கருதி விஸ்தீரணம் செய்ய வேண்டுமாயின் மேலே கடஞ்சா கூறியபடி ஒன்றோடு ஒன்று இணைந்த சேவைகள்(அத்தியாவசிய) அனைத்தும் இடம் மாறவேண்டும்.. அப்படியாயின் அதற்கு தகுந்த இடம் எது? எல்லா வசதிகளையும் மாற்ற முடியுமா? 

அதைவிட மானிப்பாயில் உள்ள வைத்தியசாலை, மூளாய் வைத்தியசாலை, மந்திகை, இணுவில் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலைகளின் தரத்தை உயர்த்தினால் யாழ்ப்பாண போதனாவைத்தியசாலை நெருக்கடியை குறைக்கலாம்..இடத்தை மாற்றவேண்டிய தேவை இருப்பதாக தெரியவில்லை.. பணமும் நேரமும் மனித உழைப்புமே வீண்விரயமாகும்.. அத்துடன் இந்த போதனா வைத்தியசாலையும் எங்களுடைய வரலாற்றில் சம்பவங்களை கொண்டது.. எதிர்கால சந்ததிக்கு வரலாற்றை தெரியப்படுத்தவேண்டும் என விரும்பும் நாங்கள் ஏன் அதை மாற்றவேண்டும்? 

18 hours ago, குமாரசாமி said:

சுற்றுலாவுடன் சம்பந்தமாக நான் ஒப்பிட்டது புளோரிடா மற்றும் ஸ்பானியா நாடுகளில் இருப்பது போன்று எமது  தீவுப்பகுதிகளிலும் செய்யலாம் என்பதே

இதில்(சுற்றுலாத்துறையில்) முதலீடு செய்தால் லாபம் வராதாமே??? 

இரண்டாவது தீவுபகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுடன் இது சம்பந்தமாக நாடவேண்டும்.. இதை எத்தனை பேர் விரும்புவார்கள்.. இவ்வளவு காலமும் அங்குள்ள மக்களின் வாழ்க்கையை வளம்படுத்த எடுத்த முயற்சிகள் ஏன் பலனளிக்கவில்லை? 

இப்பொழுது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயங்களை பற்றி கதைத்து பயனில்லை என்பது எனது எண்ணம். 

எனக்கு யாழ்ப்பாணத்தில் பிடித்த கடற்கரை மணற்காடு, அதே போல கெருடாவிலில் எனது அப்புவின் வீடு கடற்கரையோடு அமைந்த ஒன்று.. எனக்கு நினைவுள்ளது பாறைகற்களால் சிறிய கடற்பரப்பை நீச்சல் குளம் மாதிரி செய்து வைத்திருந்தார்கள்.. beach house மாதிரி செய்யலாம் ஆனால் முடியாது. அவ்வளவுதான்.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
 • Like 2
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

விரலுக்கேற்ற வீக்கம் என்பதிற்கமைய எனது கருத்துக்கள்

சுற்றுலாவுடன் சம்பந்தமாக நான் ஒப்பிட்டது புளோரிடா மற்றும் ஸ்பானியா நாடுகளில் இருப்பது போன்று எமது  தீவுப்பகுதிகளிலும் செய்யலாம் என்பதே.

 

13 hours ago, குமாரசாமி said:

எனது கேள்வி என்னவென்றால்  இது சாத்தியமென்றால் புளோரிடாவுக்கு சமமாய் ஏன் புங்குடுதீவை/நெடுந்தீவை மாற்ற முடியாது?

 

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு நினைவுள்ளது பாறைகற்களால் சிறிய கடற்பரப்பை நீச்சல் குளம் மாதிரி செய்து வைத்திருந்தார்கள்.. beach house மாதிரி செய்யலாம் ஆனால் முடியாது. அவ்வளவுதான்.. 

 

உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று  நினைக்கிறன்.

ஸ்பானிய தீவுகள் , புளோரிடா போன்றவற்றின்   சுற்றுலா துறையயில் வெளியே சொல்லப்படாத, அனால் அவர்களின் கலாசாரத்துடன் ஒன்றிப்பு உள்ள ஓர் பெரிய சுற்றுலா ஈர்ப்புக்  காரணி, casual sex. 

Sun, Sea, Sand and Sex tourism theme.

ஸ்பானியாவில் இளம் வயதுக்கு (கட்டாயம் இல்லை, அனால் அங்கெ குவிவது பொதுவாக  இளம் வயது)   என்று பிறிம்பாக இருக்கிறது,  Ibiza. 

மற்ற தீவுகள், பொதுவாக எல்லா வயதுக்கும், அனால் ஈர்ப்பது matured இல் இருந்து உள்ள சனத்தை.  

இப்பொது Goa, ஹிப்பி, backpacker போன்ற casual sex இல்  இருந்து, refined crowd க்கான  sun, sea, sand and sex சுற்றுலா களமாக  மாறி வருகிறது. மும்பையில் இருந்து புகையிரத சேவை அமைத்ததும் காரணாமாயிருக்கலாம். 

கிந்தியா, இமாலய மாநிலத்தில், நுவரெலியா, கண்டி போன்ற காலநிலை உள்ள இடத்தில, இப்படி  ஓர் சுற்றுலா மையத்தை உத்தியோக பற்றற்ற முறையில் திறந்து விட்டு உள்ளது. 

இங்கே Maldives என்று பலமுறை எழுதப்பட்டது, Maldives சுற்றுலா துறையின் அடி நாதமாக பின்னிப்பிணைந்த, வெளியே காட்டப்படாத  tourism theme என்ன? நான் Sun, Sea, Sand and Sex என்று பண்பாக சொல்கிறேன். வெள்ளைக்காரர் பச்சையாக (casual) சொல்வது,  Shag until sore tourism theme.     

சொறி சிங்களமும் இதை வெளியே காட்டாமல், பல இடங்களில் (கடற்கரை சார்ந்த இடங்களில்) செய்து உள்ளது. ஓரிரு வருடங்களுக்கு முதல் அமைச்சர் ஒருவரே சொல்லி இருந்தார், பல இடங்களை, 'தாராள மனப்பான்மையுடன்' தெற்கில் திறக்குமாறு.  

sun, sea, sand and sex tourism theme என்பது விட்டு வேறு என்ன tourism theme, தீவு பகுதிகளில்  உருவாக்கலாம்.  eco tourism - வாய்ப்பு இல்லை. 

அனால், நெடுந்தீவில், கோசன் சொல்லி இருந்தார், பவள பாறைகள் இயற்றக்கையாக உருவாகுவதாக. அது underwater eco tourism ஆக வாய்ப்பு உள்ளது. எவ்வளவு சாத்தியம் என்பது ஓர் கேள்வி.

ஸ்பெயின் தீவுகள் போண்றவைற்றில் வெளியில் இருந்து சுற்றுலா பயணிகள் வரவிரட்டாலும், இலாபம் ஈட்டும். வேறு நாடுகளில் இருந்து பயணிகள் வருவது, இலாபத்தை bonus ஆக்குகிறது.    

இதனால், கலாசாரம் பெரியதொரு முட்டுக்கட்டையாக இருக்கும். வேறு தெரிவு இருப்பது தெரிந்தால் சொல்லுங்கள்.

அதனால், முதலில் எம்மவர்கள் பயணிகள் ஆக  வந்து சுற்றுலா வியாபாரத் துறை நாட்டம் இல்லாமல் நடக்குமா என்பதயே முதல் கேள்வி. இல்லை என்பதே எனது உடனடி பதில். ஏனெனில், அங்குள்ள தமிழர் இடையே சுற்றுலா என்பது இன்னமும் கலாசாரத்தின் பகுதியாக வரவில்லை. புலம் பெயர் தமிழரில் வந்து விட்டது (கட்டாயமாக sun, sand, sea, sex  என்று சொல்லவில்லை,விதம் விதமான சுற்றுலா theme). காரணம், இங்கே உள்ள பொருளியல் வாழ்க்கை முறை (mechanised life style). (சிங்களவரில் சுற்றுலா, அவர்களின் கலாசாரத்தின் பகுதியாகி கொண்டு வருகிறது. மற்றும், தமிழர் கலாசார பிறழ்வுகள் என்று பார்ப்பதில்,   , சிங்களவரின் மனவோட்டம் (attitude) தாராள மயமானது.)  

இந்த மாற்றம் அங்கெ வருவது என்பது, பிரளயத்திற்கு ஒப்பானது. 
     
இதை விட மிகுதி, வெளி போக்குவரத்து, உள்ள போக்குவரத்துக்கு, வேறு உல்லாச வசதிகள் என்பதற்கு முதலீடு.  

இதன் ஏறத்தாழ ஒப்பீடு, ஏறத்தாழ பிரித்தானியர் வடகிற்கு  புகையிரப் பாதை பகீரதப் பிரயாணத்தின் ஊடாகவே வந்தது.

பிரித்தானியர், வடபகுதிக்கு புகையிரத சேவை ஆரம்பிப்பது இல்லை என்று உறுதியாக இருந்தனர், ஏனெனில், அதில் இலாபம் இருக்காது என்பதால். பல வருட அழுத்தங்களின் பின்பே வந்தது (அதற்கு கூட, முதலாக பணம் சேர்த்து கொடுக்கப்பட்டதாக செவி வழி வரலாற்றில் அறிந்த நினைவு உள்ளது).   

தீவுகளுக்கும்  பொருந்தும். எனவே முதலில் தொடங்க வேண்டியது, வெளிப்போக்குவரத்து, பகுதியாக உள்ளது, ஆனால் முழுமையாக இல்லை. 

ஒருவரும், தமிழர் கூட மற்றும் எந்த தமிழ் நிர்வாகமும், முழுமையான அதிகாரத்தை கொண்டு இருந்தாலும், இலாபம் இல்லாமல் முதல் போடமாட்டார்கள். அதனால், இப்பொது தனி நாடக இருந்தால் கூட, தீவு பகுதியில் சுற்றுலா முதலீடு வராது. 

அந்த பகுதியை சேர்ந்தவர் நீங்கள் - இலாப வாய்ப்பு 51% என்றால், முதலீடுவீர்களா?  எந்தவொரு, முதலீட்டுக்கும், 80% க்கு மேல் உறுதி தன்மை வேண்டும்.  நீங்கள் மனக்கிளர்ச்சியில் முதலிடலாம், ஆனால், எந்தவொரு அடிபட்ட, hard nosed முதலீட்டார்கள் செய்யமாட்டார்கள்.

அபிவிருத்தியில், எப்போதும் இது ஓர் பிரச்னை தான் - ஆனால், idea நிலையிலேயே உறுதி இல்லாத போது, யார் முதலிடுவார்கள்?

நீங்கள் 'எதிர்பார்க்கும் சுற்றுலாத் துறை' ,  யாழ் பெருநகர பகுதி 'தொழில்  செய்பவர்களால் நிரம்பும் போது', சாத்தியமாகலாம். அப்போது, வாழ்கை முறையும் மாறி இருக்கும், இருக்க வேண்டும் (அந்த சூழலில் கூர்ப்படைந்த 'இயந்திர' வாழ்க்கை).  அதில்  இள வட்டமே முதன்மையாக பங்கு பற்றும், கலாசார பிறழ்வுகள் இல்லா  விட்டாலும்.  அனால், அந்த நேரத்தில், அது கலாசார பிறழ்வாக பார்க்கப்படுமா, இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.  இன்னொன்றும் உளது, இப்படியான மாற்றத்தில், தீவு  (குறிப்பாக மண்டை தீவு, ஊர்காவற்றுறை) பகுதியின் குடித்த தொகை பரம்பல், செறிவும் கூடலாம், அது ஒரு விதத்தில் சுற்றுலா துறைக்கு வசதியும். (basic economics - more human presence - more human activity - more human interactions - more need for development, infrastructure, services etc that will be viable, sustainable, profitable .... leads to urbanisation, ஆங்கிலத்துக்கு மன்னிக்கவும் ).   

கன்னத்தில்  அடித்த மாதிரி சொல்வது என்றால், தீவு பகுதியில் இருந்து இப்பொது அடிப்படை வசதி, தேவை என்பதற்கு இடம்பெயரும் நிலை மாறி, தீவு பகுதியிலும் அத்தகைய தேவைகள், வசதிகள்  உள்ளது, அங்கே எமது வாழ்விடத்தை அமைக்கலாம் (first choice) என்று நிலை வர வேண்டும்.   

ஆனால், அதற்கு கூட தீவு பகுதியில் உள்ளவர்களின் மனவோட்டத்தில்  முதலில் இளக்கம் (attitude relaxing) வேண்டும்.     

இன்னொரு விதத்தில், யாழ் நகருக்கு அண்டிய தீவு பகுதிகள், பொருளியல் அடிப்படையில், 'கொடுத்து வைத்தவை'. ஏறத்தாழ rural (இப்போதைய நிலையிலும்) இடம், அந்த மாகாணத்தின் உச்ச urban (நகர்) மத்திக்கு மிகவும் அண்மையில் இருப்பது. 

இதை விட, என்னிடம் வழியில்லை, நேரமும் இல்லை, வாதமும் செய்ய வரவில்லை, விளக்கம் அளிப்பதத்திற்கு.    

 • Like 1
 • Thanks 3
Link to comment
Share on other sites

8 hours ago, Kadancha said:

இதை விட, என்னிடம் வழியில்லை, நேரமும் இல்லை, வாதமும் செய்ய வரவில்லை, விளக்கம் அளிப்பதத்திற்கு.

 உங்களின் நேரத்திற்கும் விரிவான விளக்கத்திற்கும் மிக்க நன்றி.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
தேவையற்ற வசனம் நீக்கப்பட்டது
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

இந்த கோட்டை விட்டு நாங்கள் தாண்டமாட்டம்.:cool:

p-mRTqtkBliobJaTQSjpHt7i-2IcThbF-F0ebcTQCdBlNA6_mjE6qd7G9gKe8E1Oa-4eSRml8PPSYOHJmf4I-GMMIe0A5FrdyRJvgROelLLM

DTTjj-QV4AAcIjh.jpg

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இந்த கோட்டை விட்டு நாங்கள் தாண்டமாட்டம்.:cool:

p-mRTqtkBliobJaTQSjpHt7i-2IcThbF-F0ebcTQCdBlNA6_mjE6qd7G9gKe8E1Oa-4eSRml8PPSYOHJmf4I-GMMIe0A5FrdyRJvgROelLLM

DTTjj-QV4AAcIjh.jpg

 

அண்ணா, குறை நினைக்காமல் தீவுப் பகுதிகளில் தமிழர்களை போய் குடியேற சொல்லுங்கோ ...முஸ்லீம்களும் ,சிங்களவர்களும் போய் குடியேறின பிறகு இங்கு வந்து திட்றேல்ல

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அண்ணா, குறை நினைக்காமல் தீவுப் பகுதிகளில் தமிழர்களை போய் குடியேற சொல்லுங்கோ ...முஸ்லீம்களும் ,சிங்களவர்களும் போய் குடியேறின பிறகு இங்கு வந்து திட்றேல்ல

இன பரப்பலை விடுத்து........எந்த நாட்டிலும் அபிவிருத்தி செய்யப்படும் இடங்களை நோக்கியும் அந்த இடங்களில் வேலை வாய்ப்பை தேடியுமே மக்கள் அந்த இடத்திற்கு இடம் பெயர்வர். இதற்காகவே பல நாடுகளில் தலைநகரங்களை அவ்வப்போது மாற்றுவார்கள்..அல்லது ஒவ்வொரு நகரங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவத்தை கொடுப்பார்கள். விமான நிலையத்திற்கு ஒரு நகரம் முக்கியம் அதேபோல் துறைமுகத்திற்கு வேறொரு நகரம் முக்கியம் சுற்றலாவிற்கு இன்னொரு நகரமென இப்படியே தொடரும்...😎

யப்பான் அல்லது சீனா இலங்கையின் வடபகுதியை குத்தகைக்கு எடுப்பார்களாயின் 50 வருடத்தில் சொர்க்கபுரியாக்கி விடுவார்கள்.

அய்க்...அய்க்...ச்...ச்...ச் .      மாட்டு வண்டில் விடுறனாம் 😁

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎-‎09‎-‎2021 at 23:01, குமாரசாமி said:

இன பரப்பலை விடுத்து........எந்த நாட்டிலும் அபிவிருத்தி செய்யப்படும் இடங்களை நோக்கியும் அந்த இடங்களில் வேலை வாய்ப்பை தேடியுமே மக்கள் அந்த இடத்திற்கு இடம் பெயர்வர். இதற்காகவே பல நாடுகளில் தலைநகரங்களை அவ்வப்போது மாற்றுவார்கள்..அல்லது ஒவ்வொரு நகரங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் முக்கியத்துவத்தை கொடுப்பார்கள். விமான நிலையத்திற்கு ஒரு நகரம் முக்கியம் அதேபோல் துறைமுகத்திற்கு வேறொரு நகரம் முக்கியம் சுற்றலாவிற்கு இன்னொரு நகரமென இப்படியே தொடரும்...😎

யப்பான் அல்லது சீனா இலங்கையின் வடபகுதியை குத்தகைக்கு எடுப்பார்களாயின் 50 வருடத்தில் சொர்க்கபுரியாக்கி விடுவார்கள்.

அய்க்...அய்க்...ச்...ச்...ச் .      மாட்டு வண்டில் விடுறனாம் 😁

என்னால முடியல்ல அண்ணா ...யாழை அபிவிருத்தி செய்து நவீனமயமாக்கி போட்டு, எல்லாரையும்  அந்த சிறிய பரப்பில்  குடியேற பண்ணி விட்டு மிச்ச இடங்கள் அழிந்து போகட்டும் என்று விடலாமா 😕

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபமன்றோ.......!   😁

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.