Jump to content

திராவிட அடையாளமே தமிழரின் பெருமை!


Recommended Posts

திராவிடக் களஞ்சியம் சர்ச்சை: `திமுக அரசின் தமிழர் அடையாள அழிப்பு முயற்சி!’ - கொதிக்கும் சீமான்

சீமான்

சீமான்

``அந்நியர்கள் தமிழர் நிலத்தில் ஆளுகை செய்யவும், அதிகாரம் செலுத்தி தமிழர்களை அடிமைப்படுத்தவும் தமிழர்கள்மீது திணிக்கப்பட்ட அரசியல் விலங்குதான் திராவிடமாகும்.” - சீமான்.

சங்கத் தமிழ் இலக்கியங்களை, எளிய தொகுப்பாக வெளியிடப்போவதாகவும், அதற்கு `திராவிடக் களஞ்சியம்’ எனப் பெயர் சூட்டப்போவதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார். அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்துக் கருத்து தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், ``சங்கத் தமிழ் நூல்களுக்கு `திராவிடக் களஞ்சியம்’ எனப் பெயர் சூட்டுவது, தமிழ்மொழி, தமிழினம் இரண்டையும் மறைக்கும் செயல்... இவ்வாறு பெயர் சூட்டுவதைத் தமிழக அரசு கைவிட வேண்டும்’’ என்றார்.

தங்கம் தென்னரசு, பெ. மணியரசன்
 
தங்கம் தென்னரசு, பெ. மணியரசன்

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்துக் கண்டனம் தெரிவித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களைத் தொகுத்து, அவற்றை `திராவிடக் களஞ்சியம்’என அடையாளப்படுத்தப்போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பெருமைமிக்கத் தொல் தமிழர் வரலாற்று அடையாளங்கள் யாவற்றையும் தன்வயப்படுத்தும் திராவிடத் திரிபுவாதிகள் தற்போது தமிழ் நூல்களின் மீதும் கைவைக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது” என்றார்.

 

தொடர்ந்து, ``தமிழர்களை `திராவிடர்கள்’ என்பது, தமிழ்நாட்டைத் `திராவிட நாடு’ என்பது, தமிழ் இலக்கணத்தை, `திராவிட இலக்கணம்’ என்பது, தமிழர் திருநாளான பொங்கலை `திராவிடர் திருநாள்’ என்பது, தமிழ் மாமன்னன் கரிகால் பெருவளவனைத் `திராவிட மன்னன்’ என்பது, தமிழர் கட்டடக்கலையைத் `திராவிடக் கட்டடக்கலை’ என்பது, தமிழர் நாகரிகமான சிந்துசமவெளி நாகரிகத்தை, `திராவிட நாகரிகம்’ என்பது, தமிழ்க் கல்வெட்டுகளை, `திராவிடக் கல்வெட்டுகள்’ என்பது, தமிழர் பண்பாடான கீழடியை, `திராவிடப் பண்பாடு’ எனத் திரிப்பது என தமிழர்களின் மொழி, இனம், நிலம், கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, நாகரிகம் தொடர்பான தொன்ம அடையாளங்கள் யாவற்றையும் அழித்து, அவற்றின்மீது திராவிட முத்திரை குத்தியது போதாதென்று, தற்போது, தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதற்கான வரலாற்று பெருஞ்சான்றுகளாகவும், யாராலும் மறுக்க முடியாத தரவுகள் நிறைந்த ஆவணங்களாகவுமுள்ள தமிழ் நூல்களைத் `திராவிடக் களஞ்சியம்’ எனும் பெயரில் அடையாள மாற்றம் செய்ய முயல்வது திராவிடத் திருட்டுத்தனத்தின் உச்சமாகும். இந்த நாடு தமிழ்நாடு; இங்கு வாழும் மக்கள் தமிழ் மக்கள்; மொழி தமிழ்மொழி; அதில் எழுதப்பட்டவை யாவும் தமிழ் இலக்கியங்கள்; அந்த நூல்களைத் தொகுக்கிறபோது மட்டும் எப்படித் திராவிடக் களஞ்சியமாக மாறும் எனும் கேள்விக்கு எவரிடமும் விடையில்லை.

சீமான்
 
சீமான்

`தமிழர் தலைவர்’, `தமிழினத் தலைவர்’ என்று அடைமொழிகளைத் தங்களுக்கு வைத்துக்கொண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாடு எனப் பேசி வாக்குகளைப் பெற்று வென்று, ஆட்சியதிகாரத்தை அடைந்த பிறகு, `திராவிட இனம் ’, `திராவிடக் களஞ்சியம்’, `திராவிடச் சிறுத்தை’ என்று பேசுவது திட்டமிட்ட தமிழர் அடையாள அழிப்பு வேலை. இப்போது திராவிடம், திராவிடர் என்று பேசுவோர், தேர்தலுக்கு முன் வாக்கு கேட்டு செல்லும்போதோ, தங்கள் கட்சி மாநாடுகளுக்கு அழைக்கும்போதோ திராவிடர்கள் என்று ஒருபோதும் கூறுவதில்லையே... ஏன்? திராவிட இனம் எனக் கூறிவிட்டு நாட்டின் பெயரை மட்டும் `திராவிட நாடு’ என்று மாற்றாமல் ஏன் `தமிழ்நாடு’ என்று மாற்றினீர்கள்?

அந்நியர்கள் தமிழர் நிலத்தில் ஆளுகை செய்யவும், அதிகாரம் செலுத்தி தமிழர்களை அடிமைப்படுத்தவும் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட அரசியல் விலங்குதான் திராவிடம். அடிப்படையில், திராவிடர்கள் எனக் கூறப்படுவோர்க்கு தனித்த அடையாளங்கள் ஏதுமில்லாததால், தமிழர்களின் மொழி, இன, தேச, பண்பாட்டு, வரலாற்று அடையாளங்களைத் திருடித் தன்வயப்படுத்துகிற சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். தற்போதைய செயல்பாடும் அதன் நீட்சியே. மொத்தத்தில், தமிழர்களை திராவிடர்கள் எனத் தவறாக அடையாளப்படுத்தியது ஒரு வரலாற்றுப் பேரவலம்.

 

 

தமிழர்களை திராவிடர்கள் என்பதற்கு எடுத்தாள்கிற ஆதாரங்கள் யாவும் மனுஸ்மிருதி உள்ளிட்ட சம்ஸ்கிருத நூற்களின் குறிப்புகள் என்பதே, திராவிடம் என்பது ஆரியத்தின் கள்ளக் குழந்தை என்பதை உறுதிபட நிறுவுகிறது. ஆங்கிலேயர்கள் எப்படித் தங்கள் உச்சரிப்புக்கு ஏற்றவாறு தமிழக ஊர்களின் பெயர்களை மாற்றினார்களோ, அப்படித்தான் ஆரியர்கள் கையாண்ட திராவிட உச்சரிப்பும். அதுவும் விந்திய மலைக்குத் தெற்கே வாழ்ந்த ஆரியர்களைக் குறிக்கவே `திராவிடர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர். எனவே, சொல்லளவில் பார்த்தாலும், பொருளளவில் பார்த்தாலும் திராவிடம் என்பது தமிழருக்கு எதிரானதே. தமிழர் அல்லாத வடவர்கள் செய்த உச்சரிப்புப் பிழைக்காக அதை ஒரு தேசிய இனத்தின் மீது திணிப்பது வரலாற்றுப் பெருங்கொடுமை. நீதிக்கட்சியின் பெயரை, `திராவிடர் கழகம்’ என்று மாற்றியபோதே அதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கி.ஆ.பெ விசுவநாதம், அண்ணல் தங்கோ உள்ளிட்ட தமிழினத் தலைவர்கள், `தமிழர் கழகம்’ என்று பெயர் மாற்ற வலியுறுத்தி உரிமைக்குரல் எழுப்பினர். ஆனால், நீதிக்கட்சியில் பிறமொழியாளர்கள் ஆதிக்கம் அதிகமிருந்த அக்காலத்தில் தமிழர்களின் உரிமைக்குரல் எடுபடாமலேயே போனது. ஒரு குறிப்பிட்ட சிலரின் வாழ்வுக்கும், வளத்துக்கும் பல்லாயிரம் ஆண்டுக்காலமாகத் தொடர்ந்துவரும் ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தையே மாற்றுவதென்பது தமிழ் மண்ணுக்கும் இனத்துக்கும் செய்கிற பச்சைத் துரோகம்.

ஸ்டாலின் - சீமான்
 
ஸ்டாலின் - சீமான்

‘வடமொழியை நட்பாகக்கொள்ளும் திராவிடத்துக்கும், பகையாகக்கொள்ளும் தமிழுக்கும் எந்தத் தொடர்புமில்லை. பால் தயிராய் திரிந்த பிறகு மீண்டும் பாலாகாததுபோல, வடமொழி கலந்து ஆரியமயமாகிப்போன திராவிடம் மீண்டும் தமிழாகாது. வடமொழிக் கலப்பால் திராவிடம் உயரும்; தமிழ் தாழும். திராவிடம் அரை ஆரியமும், முக்கால் ஆரியமுமாதலால் அதனோடு தமிழை இணைப்பின், அழுகலோடு சேர்ந்த நற்கனியும் கெடுவதுபோல், தமிழும் கெடும். தமிழனும் கெடுவான். பின்பு, தமிழுமிராது; தமிழனுமிரான். இந்தியா முழுவதும் ஆரியமயமாகிவிடும். தமிழ் வேறு; திராவிடம் வேறு என்பதுடன் ஆரியமும் திராவிடமும் ஒன்றேயென அறிக! தமிழ் என்னும் சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும் திராவிடம் என்னும் சொல்லில் இல்லை. தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி, திராவிடம், திராவிடன், திராவிட நாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது. திராவிடம் என்பதே தீது, தீது!’ என எச்சரிக்கிறார் மொழிஞாயிறு ஐயா தேவநேயப்பாவாணர்.

 
 

`தமிழ்நாடு’ என்று கூறத் தவறி, `திராவிட நாடு’ என உச்சரித்ததால் தமிழர்களின் தேசிய இன உணர்ச்சி மழுங்கடிக்கப்பட்டது. வழக்கொழிந்த வடமொழிகூட சம்ஸ்கிருத மொழிக் குடும்பம் என உலக அரங்கில் பெருமையாக அழைக்கப்படும்போது, அதைவிடப் பழம்பெருமை வாய்ந்த, தொன்றுதொட்டு இன்றுவரை வழக்கத்திலுள்ள, உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக விளங்கக்கூடிய தமிழ்மொழிக்குத் தமிழ்மொழிக் குடும்பம் என்று வழங்கப்பெறாமல், `திராவிட மொழிக் குடும்பம்’ எனத் திரித்து வழங்கப்பெற்றதால் தமிழ்மொழி தன் பெருமையையும், சிறப்பையும் இழந்து நிற்கிறது. ‘திராவிட இனம்’ என்ற சொல்லே தமிழர்களை உளவியலாகச் சிறைப்படுத்தி முடக்கிப்போட்டது. மொழிச் சிதைவுக்கே வடவர்களுக்கு எதிராகப் போர் தொடுத்திட்ட தமிழினம், ஈழ நிலத்தில் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டபோதும் நெட்டை மரங்களென அசைவற்று நின்றது. தமிழர்கள் இன உணர்ச்சியை அடையவிடாமல் தடுத்துக் கெடுத்ததில் திராவிட மறைப்புகளுக்கு முதன்மைப் பங்கு உண்டு. தமிழ், தமிழர், தமிழர் நாடு என உச்சரிக்கத் தவறி, அடையாளத்தைத் தொலைத்து, இன உணர்வை இழந்ததால், இனப்படுகொலையையே சகித்துக்கொள்ளும் அளவுக்குப் பேரிழப்பில் தமிழர்களைக் கொண்டுபோய் நிறுத்தியது.

கீழடி - கொந்தகை ரோடு
 
கீழடி - கொந்தகை ரோடு

ஆரிய அதிகார வர்க்கம், தமிழ் மொழியிலுள்ள ஊர்களின் பெயர்களைச் சம்ஸ்கிருதமாக மாற்றியது. தமிழர் தெய்வங்களின் பெயர்களைச் சம்ஸ்கிருதமாக மாற்றியது. மக்களின் பெயர்களும் சம்ஸ்கிருதமாக மாறின. மக்கள் பெயரும், ஊர்களின் பெயரும், தெய்வங்களின் பெயரும் வடமொழியாக்கப்படும்போது, அந்நிலமே தமிழர் அல்லாத ஆரியர்கள் வாழ்ந்த இடங்களாக அடையாளப்படுத்தக்கூடிய ஆபத்து உண்டு. எனவே, பெயர் மாற்றம் என்பது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. அது நம் அடையாள அழிப்பு. வரலாற்றுத் திரிபு. மொழியிலுள்ள பெயர்களை மாற்றுவதே அடையாள அழிப்பென்றால், திராவிடம், திராவிடர், திராவிட நாடு எனக் கூறி, தமிழ் மொழியின், இனத்தின், நிலத்தின் பெயரையே மாற்றுவது அதைவிடப் பன்மடங்கு பேராபத்து.

தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பதற்கான சான்றுகள் சங்கத்தமிழ் இலக்கியங்கள் முழுதும் விரவிகிடக்கின்ரன. ஆனால், திராவிடம், திராவிடம் என்பதற்கான சான்றுகள் எதுவும் சங்கத்தமிழ் இலக்கியங்களிலோ, காப்பியங்களிலோ இல்லை என்பது மறுக்கவியலா பேருண்மை. திராவிடத்துக்கான மூலச் சான்றுகள் கற்பனைத் திணிப்புகளாகவும், தமிழர்களல்லாத அந்நியர்களின் கூற்றுகளாகவும், சம்ஸ்கிருத மொழி இலக்கியங்களாகவும் உள்ளன. தமிழ் மொழிக்கென்று தனித்த இலக்கியங்கள் உள்ளன. தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளுக்கும்கூட இலக்கியங்கள் உள்ளன. ஆனால், திராவிட மொழிக்கென்று இலக்கியம் எங்கே இருக்கிறது... முதலில் திராவிடம் என்பது ஒரு இனத்தின் பெயரா... மொழியின் பெயரா... நிலத்தின் பெயரா... திசையின் பெயரா... நிறத்தின் பெயரா அல்லது தத்துவத்தின் பெயரா? திராவிடம், திராவிடர் எனும் சொல்லாடல்களுக்கு முதலில் திமுக அரசு விளக்கமளிக்க முன்வர வேண்டும். தமிழகத்திலுள்ள ஒருசில திராவிட அரசியல்வாதிகளைத் தவிர, எந்தத் தென்மாநில மக்கள் தங்களை திராவிடர்கள் என்று ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்பதையும், எந்தச் சங்கத்தமிழ் இலக்கியத்தில் திராவிடம் என்பதற்கான சான்றுகள் உள்ளன என்பதையும் ஆளும் திமுக அரசு திராணியிருந்தால் தெளிவுபடுத்தட்டும்.

தமிழ்ப் பேரினத்தின் வரலாறுகள் யாவும் மறைக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட நிலையில் மீதமிருக்கும் இலக்கியச் சான்றுகளையும் திருடி, கையகப்படுத்தி, திராவிடமயமாக்க முயல்வது ஈனச்செயல். ஆயிரமாண்டுகளாக தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும் தமிழர்களின் மொழி, இலக்கியம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றைத் தலைமுறைகள் கடந்து, கடத்திவருபவை தமிழ் இலக்கியங்களே. இவ்வாறு தமிழர்களின் அறிவுக்கொடையாக, கருத்து கருவூலமாக விளங்கும் பழந்தமிழர் இலக்கியங்கள் மீது கைவைப்பதென்பது தமிழர் இனத்தையே முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் வஞ்சகச் செயல்.

எனவே சங்க இலக்கியங்கள் என்றாலும் சரி, அதற்குப் பின்வந்த இலக்கியங்கள் என்றாலும் சரி... எந்தவொரு தமிழ் நூலுக்கும் ‘திராவிட இலக்கியம்’ என்று பெயர் மாற்றம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கால்டுவெல் என்ற ஆங்கிலேயர் `திராவிடம்’ என்று சொல்லிவிட்டார் என்பதற்காக தமிழ் நூல்களைத் தொகுத்து, `திராவிட இலக்கியம்’ என்று பெயர் மாற்றுவது, சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் சட்டமியற்றியதற்காக தமிழர்களை `இந்துக்கள்’ என்று அடையாளப்படுத்தும் ஆரியர்களின் சூழ்ச்சிக்கு ஒப்பானது. அத்தகைய கொடுஞ்செயலை தமிழ் இளந்தலைமுறையினரும், இனமானத் தமிழர்களும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என அறுதியிட்டு உரைக்கிறேன்.

ஆகவே, ஆளும் திமுக அரசு தனது தமிழர் அடையாள அழிப்பு முயற்சியைக் கைவிட்டு, தமிழ் நூல்களின் தொகுப்புக்கு, `தமிழ்க் களஞ்சியம்’ என்றே பெயர் சூட்டவேண்டுமென வலியுறுத்துகிறேன். அதைச் செய்யத் தவறி, தமிழர்களின் உணர்வுகளை அலட்சியம் செய்யும்பட்சத்தில், மிகக் கடுமையான போராட்டங்களை அரசு எதிர்கொள்ளும் சூழல் உருவாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

https://www.vikatan.com/government-and-politics/politics/seeman-attacks-dmk-government-for-promoting-dravidian-instead-of-tamil?pfrom=wru-infinite

Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து தமிழ் பேசிவரும்  தெலுங்கர்களை மலையாளிகளை கன்னடர்களை நாங்கள் தமிழர்களாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்த அடையாளத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் ஆயத்தமாக இல்லை. இவர்கள் தங்களை ஒருபோதும் தமிழர் என்ற அடையாளத்துக்குள் வர ஆயத்தமாக இல்லை. தமிழகத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வருவதால் தம் மொழிவாரி மாநிலங்களுக்குச் செல்லப்போவதும் இல்லை. தமிழகத்தை தங்கள் ஆட்சிக்குள் வைதிருப்பதற்கு திராவிடம் என்ற சொல் அவர்களுக்குத் தேவை. தமிழ் தான் திராவிடம் என்று வடமொழியில் சொல்லப்பட்டது என்றால் அதை தமிழ் என்றே சொல்லிவிட்டுப்போவதில் என்ன சிக்கல் இருக்கின்றது?

அது நிற்க ஒரு நல்ல சித்தாந்தத்துக்கு திராவிடச் சித்தாந்தம் என்று பெயர்வந்து விட்டது வைத்துக்கொண்டாலும், அந்தச் சித்தாந்தம் ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செய்யும் அரசியலுக்குப் பயன்படுவதான் துயரம். இவர்கள் நினைப்பது போல உதய்ணா எல்லாம் தமிழகத்தின் முதல்வராகிவிட முடியாது. இப்படியே போனால் அடுத்த தலைமுறை திராவிடச் சித்தாந்தங்களில் இருந்து வெளியில் வந்துவிடும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

சாதியை ஈழத்தில் ஒழிக்கலாம்.ஏனெனில் அது சாத்தியமாகும் என நிரூபிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதை கனவிலும் நினைக்க கூடாது. ஏனென்றால்  அங்கு அரசியல் கட்சிகள் இல்லை மாறாக எல்லாமே சாதீய கட்சிகள்.

ஈழத்தில் அவர்களால் சாதியை தற்காலிகமாக அடக்க முடிந்ததே தவிர ஒழிக்க முடியவில்லை.

1995-2002 இடையில் கூட புலிகள் வன்னிக்கு போய் விட்டார்கள் என்ற துணிவில் சாதி யாழ்பாணத்தில் கொஞ்சம் தலையை தூக்கி பார்த்தது.

புலிகள் சாதியை அழித்திருந்தால் 2009 க்கு பின், மீண்டு வரும் வைரஸ் போல் எப்படி சாதி வந்தது?

நான் முன்பே எழுதியதுதான்.

தலைவர் இருந்து தனிநாட்டை அமைத்து கொடுத்து விட்டு போயிருந்தாலும், அடுத்த 15 வருடத்தில் அதை சாதியின், பிரதேசத்தின், மதத்தின் பெயரால் துண்டாடி மீண்டும் நாட்டை சிங்களவரிடம் கொடுத்திருப்போம் நாம்.

இதே யாழ் களத்தில் கூட பார்கிறோமே? பழுத்த தமிழ் தேசியவாதிகள் கூட மதம் என்று வந்துவிட்டால் குழு பிரிந்து அடிபடுவதை.

புலிகள் காலத்தில் இயக்கத்துக்கு வெளியால் எத்தனை சாதி மறுப்பு திருமணங்கள் நிகழ்ந்தன?

அவர்கள் காலத்திலும் “யாழ் உயர் சைவ வேளாண் குலத்தில் பிறந்த …..” என்று மண விளம்பரங்களும், அந்தியேட்டி கல்வெட்டுக்களும் வரத்தான் செய்தது.

புலிகள் செய்த காரியங்களில் நான் 100% ஒத்து போகும் காரியங்களில் ஒன்று இந்த சாதியத்தை அடக்கியதைதான் -  ஆனால் அவர்களால் கூட அடக்கவே முடிந்தது, அழிக்க முடியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி உயிருடன் இருக்கும் போது... 
அவரை தி.மு.க. வினர் (மட்டும்)  தமிழ் இனத் தலைவர் என்றார்கள். 😎

ஏன் அவரை... திராவிட இனத் தலைவர் என அழைக்கவில்லை? 🤔

அப்படி அழைத்திருந்தால்.... 
ஆந்திரா காரனும், கன்னட காரனும், மலையாளியும்.... 
வாயிலேயே... ஏறி  மிதிச்சிருப்பாங்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

அது நிற்க ஒரு நல்ல சித்தாந்தத்துக்கு திராவிடச் சித்தாந்தம் என்று பெயர்வந்து விட்டது வைத்துக்கொண்டாலும், அந்தச் சித்தாந்தம் ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செய்யும் அரசியலுக்குப் பயன்படுவதான் துயரம். இவர்கள் நினைப்பது போல உதய்ணா எல்லாம் தமிழகத்தின் முதல்வராகிவிட முடியாது. இப்படியே போனால் அடுத்த தலைமுறை திராவிடச் சித்தாந்தங்களில் இருந்து வெளியில் வந்துவிடும். 

 

இந்த துயரத்தை, ஒரு குடும்ப ஆட்சியை, கருணாநிதியின் துரோகத்தை, ஊழலை, ஸ்டாலினின் இயலாமையை, உதயண்ணாவின் ஹம்மர் காரை இன்னும் பலதை துகிலுரித்து அரசியல் செய்யலாம்.

இதைதான் இங்கே வருட கணக்காக எழுதி வருகிறேன் (பந்தி, பந்தியாகவும்🤣).

இவ்வளவு ஏன் தி மு க, அதிமுகவில் குறித்த சாதியினரின் ஆதிக்கம் அதிகம் என்பது கூட நியாயாமான சுட்டல்தான்.

ஆனால் - இதை பெரியார் தமிழனின் தலையில் மிளகாய் அரைத்தார் - என்பதும், ஒரு ஒட்டு மொத்த மக்கள் கூட்டமே தமிழரை வேண்டும் என்றே கூடி கெடுக்கிறது என்பது போலவும் அரசியல் செய்வது “சானாதன எதிர்ப்பு” அணியை இருகூறாக்கி - அதில் பிஜேபியை புகுத்தும் உத்திதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட பண்பாட்டு ஒற்றை அடையாளம் என்பதை தவிர்த்து பார்த்தால் - திராவிட சித்தாந்தத்துக்கும், தமிழ் சித்தாந்ததுக்கும் ஒரு வேறுபாடுமில்லை.

அதனால்தான் ஒரு போதும் நாம் திராவிடர் என உணராத தலைவரும், என் போன்ற சாமானியரும் திராவிட சித்தாந்தத்தை, சனாதன எதிர்ப்பு சித்தாந்தமாக கருத முடிகிறது.

ஆகவே சனாதன எதிர்ப்பு சித்தாந்தமாக திராவிடத்தை, தமிழ் தேசியத்தால் பிரதி செய்வதில் ஒரு முரணுமில்லை.

ஆனால் இப்படி செய்வதாக போக்கு காட்டியபடி, பார்பனர்களை தமிழர் என்பதும், இராகவன்களுக்கு ஆதரவு கொடுப்பதும், பெரியாரை தமிழகத்தில் இருந்து நீக்குவோம் என சூளுரைப்பதும், மறைமுக சனாதன ஆதரவு அரசியலே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

ரஜனி அரசியலுக்கு வருவார் என்று, சீமானை திட்டுமாறு அவரை தூண்டி விட்டார் ராகவா லாரன்ஸ். பிறகு பார்த்தால், அண்ணா, நீங்க கொடுத்த ஒரு லட்சம் ரூபா செக், பணம் இல்லாம திரும்பிரிச்சு.... கஷ்ட்டமா இருக்குது.... பணத்தை அனுப்பி வைத்து செக்கை வாங்கிக்குங்க என்று வீடியோ போடுது...

கேள்விப்பட்டு அரண்டு போன ரஜனி.... இப்படி கேவலமான வேலை பார்த்து அரசியல் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று லாரண்சுக்கு டோஸ் விட்டாராம்....

பதறி அடித்து ஆளை அனுப்பி, காசை கொடுத்து, செக்கை வாங்கி... உன் சங்காதமே வேணாம் தாயி என்று ஓடியே விட்டார்....

ஆகவே, திமுக கூட்டம் அந்த அம்மணியை நம்பி நடவடிக்கை எடுக்கும் என்று நினைப்பது.... வேலில போற ஓணானை, வேட்டிக்குள் விட்ட கதை தான். 😁

அண்ணன் தலைவருக்கு எதிராக வழக்கமாகக் கொதித்துக்கொண்டிருந்த நடிகை, இப்போது சகட்டுமேனிக்கு வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டார். பழைய வண்டவாளங்களையெல்லாம் அம்மணி தண்டவாளம் ஏற்ற, இதன் பின்னணி குறித்து விசாரிக்கச் சொன்னாராம் அண்ணன் தலைவர். ‘திராவிடத்துக்கு எதிராக நீங்க ஓவரா பேசியதால்தான் இந்த ரூட்டில் பதிலடி கொடுக்க வெச்சிருக்காங்க’ எனத் தகவல் வந்ததாம். ‘ஆளும் தரப்பு எப்படியெல்லாம் வேலை பார்க்குது…’ எனச் சொல்லிச் சிரித்தாராம் அண்ணன் தலைவர். #சிரிச்சு சிரிச்சு வந்தா ‘சீ’னா தானா டோய்!

https://www.vikatan.com/government-and-politics/politics/political-gossips-11

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பிரபா said:

அண்ணன் தலைவருக்கு எதிராக வழக்கமாகக் கொதித்துக்கொண்டிருந்த நடிகை, இப்போது சகட்டுமேனிக்கு வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டார். பழைய வண்டவாளங்களையெல்லாம் அம்மணி தண்டவாளம் ஏற்ற, இதன் பின்னணி குறித்து விசாரிக்கச் சொன்னாராம் அண்ணன் தலைவர். ‘திராவிடத்துக்கு எதிராக நீங்க ஓவரா பேசியதால்தான் இந்த ரூட்டில் பதிலடி கொடுக்க வெச்சிருக்காங்க’ எனத் தகவல் வந்ததாம். ‘ஆளும் தரப்பு எப்படியெல்லாம் வேலை பார்க்குது…’ எனச் சொல்லிச் சிரித்தாராம் அண்ணன் தலைவர். #சிரிச்சு சிரிச்சு வந்தா ‘சீ’னா தானா டோய்!

https://www.vikatan.com/government-and-politics/politics/political-gossips-11

அம்மணி வீயூ, 500 தாண்டுதில்லையே...... என்ன பிரயோசனம் என்று தலைல அடிக்குதாம் பணம் வீசிய தீம்கா பார்ட்டி......

அம்மணி......  வட்ட தோசை, சதுர தோசை..... செவ்வக தோசை, முக்கோண தோசை என்று டிசைன், டிசைனா சுட்டாலும், ஓரே மா.... புளித்த அதேமா..... வேலைக்காகாது....

வரைற்றி வேணும்மா, வரைற்றி என்று ஒப்பீனா எழுதுகிறார்கள், அம்மணி ரசிக சிகாமணிகள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதியம் ஈழத்தில், புலிகள் காலத்தில் அடக்கப்படவும் இல்லை. ஒடுக்கப்படவும் இல்லை.

அதனை தூக்கிப்பிடித்துக் கொண்டு நிற்க முடியாத, சிங்களத்துடனான ஜீவமரணப் போராட்டம்.

மக்கள், இரண்டு நிலைமையின் போதே சாதியை மறப்பர். ஒன்று உயிர் தப்பி வாழ நடாத்தும் போராட்டம்....

அடுத்தது, பொருளாதார முன்னேற்றம் அடைந்த நிலை.

பிரிட்டனில், முன்னர் அரச குடும்பம் வெளியே சாதாரண மக்களுள் மண உறவு வைக்காது.

எலிசபேத் ராணிக்கு கிரேக்க இளவரசர்.... ஆனாலும் அவரது பெரியப்பர் வேலைகாரியை விரும்பியதால் முடி இழந்தார். மகன் சார்ஸ், சாதாரண டயாணாவையும், பின்னர் கலியாணம் கட்டி, பிள்ளை பெத்து விவாகரத்து பெற்ற சாதாரண குடு்ம்ப அம்மணியையும், சார்ஸ் மகன் ஹரி.... அரை கறுப்பு அம்மணி என்று பொருளாதார நிலை மாற்ற வைத்துள்ளது.

பிரிட்டிஸ் காலத்தில், தமிழகத்தின், தாழ்தப்பட்டோரே சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டனர். பொருளாதார வளப் பெருக்கத்தால், அங்கே சாதீயம் இல்லை. பக்கத்து மலேசியாவில் உள்ளது.... குறைவாக....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஈழத்தில் அவர்களால் சாதியை தற்காலிகமாக அடக்க முடிந்ததே தவிர ஒழிக்க முடியவில்லை.

ஒரு இன வரலாற்றில் இருக்கும் பிரச்சனை 30 வருடங்களில் முடிந்திருக்கும் என எதிர்பார்த்தது மிக தவறு.மண்ணோடு மண்ணாக இருக்கும் சாதி பிரச்சனையை ஓரிரு சந்ததிகளின் பின்னர் மட்டுமே ஒழிக்க முடியும்.அதற்க்கு சாதி ஒழிப்பை நடைமுறைப்படுத்தியவர்கள் நீண்ட காலம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும்.
 

7 hours ago, goshan_che said:

1995-2002 இடையில் கூட புலிகள் வன்னிக்கு போய் விட்டார்கள் என்ற துணிவில் சாதி யாழ்பாணத்தில் கொஞ்சம் தலையை தூக்கி பார்த்தது.

புலிகள் சாதியை அழித்திருந்தால் 2009 க்கு பின், மீண்டு வரும் வைரஸ் போல் எப்படி சாதி வந்தது?

நான் கூறியது ஈழத்தில் சாதியை அழிக்கலாம் அதற்கான சாத்தியங்கள் நிரூபித்து காட்டப்பட்டன என மட்டுமே எழுதியிருந்தேன். அவர்கள் காலத்தில் சாதிப்பேச்சுக்கள் பொது வெளியில் பகிரப்படவில்லை. அப்படியானவர்கள் தண்டிப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. புலிகள் காலத்தில் சாதிகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு விட்டது  என நான் சொல்லவேயில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

தலைவர் இருந்து தனிநாட்டை அமைத்து கொடுத்து விட்டு போயிருந்தாலும், அடுத்த 15 வருடத்தில் அதை சாதியின், பிரதேசத்தின், மதத்தின் பெயரால் துண்டாடி மீண்டும் நாட்டை சிங்களவரிடம் கொடுத்திருப்போம் நாம்.

இது துரோகிகள் மட்டும் அடிக்கடி பாவிக்கும் வசனங்கள். 
கட்டுக்கோப்புடன் இருந்த ஒரு அமைப்பை சிதறடித்து அழித்தார்களே  ஒழிய வேறொரு அற்புதங்களும் அவர்கள் செய்யவில்லை. 

கருணாவும் பிள்ளையானும் மட்டுமே நீங்கள் சொல்லும் கருத்திற்கு லாயக்கு. வடபகுதி அரசியல்வாதிகள் யாராவது பிரதேசவாதம் பேசினார்களா? சாதிகள் சொன்னார்களா?

தமிழர் விடுதலைக்கூட்டணி காலத்திலையே சாதிக்கு சாவுமணி அடிக்கப்பட்டது.பிரதேச வாதம் தூக்கியெறியப்பட்டது. மதவாத பேச்சுக்கே இடமில்லை.

7 hours ago, goshan_che said:

இதே யாழ் களத்தில் கூட பார்கிறோமே? பழுத்த தமிழ் தேசியவாதிகள் கூட மதம் என்று வந்துவிட்டால் குழு பிரிந்து அடிபடுவதை.

யாழ் கருத்துக்களத்தில் அநேக இடங்களில் மத இன மோதல்கள் நடப்பவைதான். ஆனால் அதே யாழ்களத்தில் அனைத்து உறவுகளும் ஒருமித்து நின்ற அற்புதங்களை நீங்கள் காணத்தவறியமைக்கு மிக வருந்துகின்றேன்.

வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

அவர்கள் காலத்திலும் “யாழ் உயர் சைவ வேளாண் குலத்தில் பிறந்த …..” என்று மண விளம்பரங்களும், அந்தியேட்டி கல்வெட்டுக்களும் வரத்தான் செய்தது.

ஒரு இனத்தில் எல்லாம் இருக்கத்தான் செய்யும். அதை கடந்து சென்று நமது அலுவல்களை  தொடர்வதே சாலச் சிறந்தது.

 வெள்ளைக்காரன் உயர்திரு மேடம் ரோயல் பமிலி வேல்ஸ் விக்ரோரியா எல்லாம் கண்ணுக்கு தெரியாது. ஆனால்  வெள்ளாளன் ஒண்டு சொன்னால் மட்டும் போதும் நடு முடி நட்டுக்கிட்டு நிக்குமாக்கும்.🤣

நிற்க....

எல்லாம் பிறப்பால் வருபவை அதை கடந்து போனால் நீயும் மனிதன் நானும் மனிதன்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

சாதியம் ஈழத்தில், புலிகள் காலத்தில் அடக்கப்படவும் இல்லை. ஒடுக்கப்படவும் இல்லை.

👆🏼👇 உங்களுக்கான பதிலை கு.சா அண்ணை எழுதியுள்ளார்.

போராட்டம், வட கிழக்கை வெளியில் இருந்து பார்க்கும், உங்கள் புரிதல் இன்மைக்கு இதுவும் இன்னொரு எடுத்துக்காடு.

இங்கே புலிகள் சாதியத்தை அழித்தார்களா, இல்லை அடக்கினார்களா என்பதே கேள்வி.

அப்படி இரெண்டுமே நடக்கவில்லை என்பது உங்கள் தூரத்தே இருந்து போராட்டத்தை பார்க்கும் பார்வையே அன்றி வேறில்லை.

2 hours ago, குமாரசாமி said:

அதற்க்கு சாதி ஒழிப்பை நடைமுறைப்படுத்தியவர்கள் நீண்ட காலம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும்.

 

2 hours ago, குமாரசாமி said:

மண்ணோடு மண்ணாக இருக்கும் சாதி பிரச்சனையை ஓரிரு சந்ததிகளின் பின்னர் மட்டுமே ஒழிக்க முடியும்.

இது நியாயமான கருத்து. ஆனால் தலைவர் மூன்று சந்ததிகள் கடந்து வாழும் வரம் பெறவில்லையே?

என் கணிப்பில் - அவர் நேரடி கண்காணிப்பு இல்லாது போனதும் இந்த பிரிவினைகள் மேலே வந்து இருக்கும் என்றே நினைக்கிறேன்.

2 hours ago, குமாரசாமி said:

புலிகள் காலத்தில் சாதிகள் முற்று முழுதாக அழிக்கப்பட்டு விட்டது  என நான் சொல்லவேயில்லை

அப்ப நீங்களும் நானும் ஒன்றைதான் சொல்லுறம். ஆங்கிலத்தில் இதை agreeing violently என்பார்கள். மூர்க்கமான ஒற்றுமை🤣.

2 hours ago, குமாரசாமி said:

தமிழர் விடுதலைக்கூட்டணி காலத்திலையே சாதிக்கு சாவுமணி அடிக்கப்பட்டது.பிரதேச வாதம் தூக்கியெறியப்பட்டது. மதவாத பேச்சுக்கே இடமில்லை.

அப்போ நான் வேறு ஒரு யாழ்பாணத்தில் வாழ்ந்திருக்கிறேன் போலும்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

யாழ் கருத்துக்களத்தில் அநேக இடங்களில் மத இன மோதல்கள் நடப்பவைதான்.

இதைதான் நான் கூறினேன். எப்போதும் யாழ்கள உறவுகள் அடித்து கொள்வதாக எழுதவில்லை. தமிழ் தேசியத்தின் பால் அணைத்துகொள்பவர்கள் கூட மதம் என்று வந்தால் அடித்து கொள்வார்கள் என்பதுதான் கூறினேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரிதல் தவறு.

நான் சொன்னது.... சாதியம் பார்க்கும் நிலையில், போராட்ட காலத்தில் மக்கள் இருக்கவில்லை. உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் சாதியவாதத்துக்கு இடமிருக்கவில்லை.

ஆமி முன்னேறி வருகிறது என்று இடம் பெயர்ந்து வந்த மக்களில், பலர், கோவில் அய்யர் குடும்பங்கள் கூட, தாழ்த்தப்பட்டவர்கள் என்று அவர்களால் கருதப்படுபவர்கள் வீடுகளில் தங்கி உணவருந்தி நகர்ந்து இருக்கிறார்கள். 

இந்தியாவில், சுதந்திர போராட்டகாலத்தில் சாதி, மதம் இல்லாமல் போராடினார்கள். சுதந்திரம் கிடைக்கும் தருவாயில், உடனடியாக, மத மோதலும், பின்னர் சாதிய வேறுபாடும் தலை தூக்கியது. மத வெறுப்பின் உச்சத்தில் காந்தியே கொலையானார்.

அதேபோலவே யுத்தம் நடைபெறும் போது, பொது எதிரி, உயிர் காப்பு காரணமாக, சாதியம் இல்லாமல் போனது, யுத்தம் மறைந்ததும், மீண்டு விட்டது. அதனை புலிகள் அடக்கவும் இல்லை, ஒடுக்கவும் இல்லை.

புலிகள் சிங்களத்துக்கு எதிராக போரிட்டார்களே அன்றி, சாதியத்துக்கு எதிராக அல்லவே.

முக்கியமாக, சாதிமறுப்பு திருமணங்கள், பொதுவாக சமுகங்கள் மத்தியில் சுஜமாக யுத்தகாலத்தில் நடக்கவில்லை.

தமிழத்திலும் பார்க்க, ஈழத்தில் சாதிய வாதம் குறைவாக இருந்ததுக்கு முக்கிய காரணம், (சுதந்திரத்துக்கு முன்னர், கிறித்தவ மிஷனரிகள் மதம் மாறுதலுக்கு என கொடுத்த இலவச கல்வி, சுதந்திரத்துக்கு பின்னான, CW கன்னங்கரா தந்த) இலவச கல்வியும், அதனால் விளைந்த, தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்டவர்களிடையே நிகழந்த உயர்வும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

நான் சொன்னது.... சாதியம் பார்க்கும் நிலையில், போராட்ட காலத்தில் மக்கள் இருக்கவில்லை. உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் சாதியவாதத்துக்கு இடமிருக்கவில்லை.

முற்றிலும் தவறு. இடம் பெயர்ந்து வந்த மக்களை சாதி பார்த்து ஒதுக்கி புலிகள் தலையிட்ட பல சம்பவங்கள் உள்ளன. 

எனது ஊரில் கூட திருவிழா விடயத்தில் அவர்கள் தலையிட்டு நியாயமான தீர்ப்பு வழங்கினானர்கள்.

கீழே திருமாவழவனினதும், நெடுமாறன் ஐயாவினதும் அவதானங்கள். 

அதற்கு திருமாவளவன் இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் (20.1.2011) பதில் அளித்துள்ளார். 

"... .... மறுநாள் காலையில் பிரபாகரனைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டேன். முதல்நாள் நான் அண்ணனிடம் கொடுத்திருந்த எங்கள் கட்சியின் 'தாய்மண்' இதழ்களை அவர் படித்துவிட்டு வந்திருந்தார். 'தாய்மண் இதழ்களைப் படித்துவிட்டு இரவெல்லாம் எனக்கு மன உளைச்சலாக இருந்தது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் வாயில் மலத்தைத் திணிக்கின்ற அளவிற்கு தமிழகத்தில் சாதி அவலங்கள் தொடர்வதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டுத் தலைவர்கள் எப்படி இதை சகித்துக் கொள்கிறார்கள்?" என்று கேட்டார்.

அதனைத் தொடர்ந்து ஈழத்தில் நிலவும் சாதிப் பிரச்சனைகளைப் பற்றி நெடுநேரம் பேசினார்.  புலிகள் இயக்கம் சாதி அடையாளமே இல்லாமல் கட்டமைக்கப்பட்டிருப்பதாகவும், சாதி வெறியர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கி வருவதாகவும் கூறி சில நிகழ்வுகளையும் கூறினார்.

அப்போது, 'தொடக்கத்தில் என்னை ஒரு கரையாளர் என்ற அளவில்தான் பார்த்தார்கள். என்னுடைய திருமணத்திற்குக் கூட எதிர்ப்பு வந்தது. இப்போது ஈழத்தில் அப்படியொரு நிலை எதுவும் இல்லை' என்று மிகுந்த உருக்கத்தோடும், கொதிப்போடும் பேசினார்.

 

தலித் முரசு 2001 ஜனவரி இதழுக்கு அளித்த பேட்டியில் பழ.நெடுமாறன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார்.

விடுதலைப் புலிகளின ஆதிக்கத்தில் இருக்கிற பகுதிகளில் எல்லாம் தீண்டாமையை அடியோடு ஒழித்து விட்டார்கள். சாதிவெறியுடன் யாராவது பேசினால், செய்தால் கடுமையான தண்டனையை புலிகள் விதித்து வருகின்றனர். அங்கு நடைபெறும் போராட்டம் வெறும் அரசியல் போராட்டமாக நடைபெறவில்லை; அது சமூகப் போராட்டமாகவும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், இதெல்லாம் அங்கு சாத்தியமாகிறது.

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12472&Itemid=263

 

இவர்கள் எல்லாம் தேவையில்லை. புலிகளின் ஆட்சியில் வாழ்ந்த நானும், இன்னும் பலரும் இங்கே வாழும் சாட்சியாக இருக்கிறோம்- புலிகள் எப்படி சாதியை ஒழிக்க முனைந்தார்கள் என்பதற்கு. 

15 hours ago, Nathamuni said:

இன்னும் ஒரு விடயம்; வைகைபுயல் வடிவேலுவை மீண்டும் இறக்குவது, உதயநிதி .... அவருடன் படத்தில் நடிக்க வைத்து ஓடாத அவர் படங்களை ஓடப்பண்ணி, எம்ஜியார் ஸ்ரைலில முதல்வராக....

வடிவேலுவுக்காக, சில அரசியல் பயமுறுத்தல் செய்தே, ரெட் காட் நீக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சங்கர் இழந்த பணம் குறித்து கேட்ட போது, வாயால வடைசுடும் வடிவேலு, அதெல்லாம் பொய்யுங்க, பத்து கோடி என்ன, நூறு கோடி நஸ்டம் என்று சொல்லலாம்.... பார்தீகளா என்கிறார்.... ஸ்ராலின் அய்யாவை பார்த நேரத்திலிருந்து, நம்ம லைப் பிரைட் ஆயிரிச்சு என்கிறார் வடிவேலர்....

இனிமேல் யாழில் அடிச்சு விட முன்னம் அண்ணன் சீமானை ஒருக்கா கேட்டு விட்டு அடிச்சு விடவும் 🤣.

வடிவேலு பிரச்சனை முடிவுக்கு வர நான்தான் காரணம்.. முதலமைச்சர் இல்லை... மார்தட்டும் சீமான்.

https://tamil.asianetnews.com/politics/i-am-the-reason-for-ending-the-vadivelu-problem-no-chief-minister-marthattum-seeman--qz9rd9

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் சாதியம் குறித்து, நெடுமாறன் என்னும் தமிழகத்தவர் எழுதி அதனை நாம் வசித்து புரிய வேண்டிய கொடுமையை என்ன சொல்வது?

அந்த புத்தகமும், எழுத்தும் தமிழகத்தவர்களுக்கு.... எமக்கானது என்று நினைத்தால்..... அப்புறம் நினைப்பவர்கள்..... விருப்பம்.....

****
இன்று முழுவதும் சீமான் பேட்டி, காணொளிகள் பல வந்துள்ளன. எதிலுமே நான் தான் காரணம் என்று சொல்லவே இல்லை.

ஆனால், வைகைப்புயலுக்கு இணை, வைகைப்புயல் தான் என்று பாராட்டியே சொன்னார். பிரபாகரன் அவரை பாராட்டி இருந்தார்  என்றும் சொன்னார். கடந்த சில தினங்களாகவே, சீமான் சொல்லாததை, சொன்னதாக அடித்து விட்டு கொண்டு இருக்கிறார்கள், தீம்கா ஊடங்கள்.

அதில் யாரோ இங்கே இன்று போட்டிருந்தார், சீமான், ராகவன் ஆதரவு நிலைபாடு தவறு என்று.... அவர் புரிதல் அப்படி.

அதே நபர் சொல்லி இருந்தார், விசயலட்சுமி புகார் மீது நடவடிக்கை இன்னும் இல்லையாம் என்று.

நடவடிக்கை எடுக்க, போலீசாரிடம் தான் புகாருடன் போகவேண்டும், ஸ்டாலின் அய்யாவிடம், முகப்புத்தக காணொளி மூலமாக அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

 

இன்று முழுவதும் சீமான் பேட்டி, காணொளிகள் பல வந்துள்ளன. எதிலுமே நான் தான் காரணம் என்று சொல்லவே இல்லை.

ஆனால், வைகைப்புயலுக்கு இணை, வைகைப்புயல் தான் என்று பாராட்டியே சொன்னார். கடந்த சில தினங்களாகவே, சீமான் சொல்லாததை, சொன்னதாக அடித்து விட்டு கொண்டு இருக்கிறார்கள், தீம்கா ஊடங்கள்.

அதில் யாரோ இங்கே இன்று போட்டிருந்தார், சீமான், ராகவன் ஆதரவு நிலைபாடு தவறு என்று.... அவர் புரிதல் அப்படி.

3.39 ஆவது நிமிடத்தில் இருந்து பார்க்கவும்.

 

16 minutes ago, Nathamuni said:

ஈழத்தின் சாதியம் குறித்து, நெடுமாறன் என்னும் தமிழகத்தவர் எழுதி அதனை நாம் வசித்து புரிய வேண்டிய கொடுமையை என்ன சொல்வது?

அந்த புத்தகமும், எழுத்தும் தமிழகத்தவர்களுக்கு.... எமக்கானது என்று நினைத்தால்..... அப்புறம் நினைப்பவர்கள்..... விருப்பம்...

அப்ப இவர் ஓகேயா? ஆரோ அன்ரன் பாலசிங்கமாம். 

ஏதோ விடுதலை புலிகள் என்ற ஏதோ ஒரு பத்திரிகையில் எழுதினாராம்.

ஆனால் புலிகள் சாதியை அடக்கவும் இல்லை ஒழிக்கவும் இல்லை என்று நாம் வாழும் காலத்திலேயே யாழில் வந்து எழுதுத ஒரு முரட்டு கெத்து தேவைதான் 🤣

உங்களை சொல்லி குற்றமில்லை. உங்களை பற்றி இன்னும் விளங்காமல் சாமரம் வீசுவோரை சொல்லணும்.

————-

 

சாதியமும் புலிகளும்

Jan 1, 1991 | Articles (Tamil)

விடுதலைப் புலிகள் பத்திரிகை

தை 1991

காலங்காலமாக, தமிழீழ சமூகத்தின் உணர்வுடன் கலந்திருந்த – வெறுக்கத்தக்க – ஒடுக்குமுறையாகிய சாதியப் பேய் இன்று தனது பிடியை இழந்து வருகின்றது. எமது 18 வருட கால ஆயுதப் போராட்டம் இதைச் சாதித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்து வர வர, சாதியத்தின் முனையும் மழுங்கி வருகின்றது.

அப்படியிருந்த பொழுதிலும் சாதிய ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளைச் சிற்சில இடங்களில் இன்றும் காணக்கூடியதாகவே உள்ளது. அவ்விதம் நாம் சந்தித்த ஒரு முக்கிய சம்பவத்துடன் கட்டுரை ஆரம்பமாகின்றது.

சாதியம் தொடர்பான புலிகளின் கருத்தை இக்கட்டுரை தொட்டுச் செல்கின்றது.

யாழ்ப்பாண நகருக்குச் சமீபமாக ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு இருக்கிறது. அந்தக் கிணறு அமைந்திருக்கும் காணி ஒரு தனிநபருக்குச் சொந்தமானது. அந்த மனிதர் தன்னை ஒரு ‘உயர்சாதிக்காரர்’ என எண்ணிக் கொள்பவர். அந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் எனப்படும் ஒரு மக்கள் பிரிவும் இருக்கிறது. இந்த மக்களுக்குக் குடிதண்ணீர் வசதியில்லை. இவர்கள் இந்த நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு வருகிறார்கள். தண்ணீர் அள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள். இதைக் கண்டதும் கிணற்றுக் காணியின் சொந்தக்காரர் ஓடி வருகிறார். தண்ணீர் எடுப்பதற்குத் தடை விதிக்கிறார். தாழ்த்தப்பட்டோர் தனது கிணற்றைத் தீண்டக்கூடாது என்கிறார்.

இதேபோன்று வடமராட்சியில் ஒரு சம்பவமும், காரைநகரில் ஒரு சம்பவமும் நடக்கிறது.

பாதிக்கப்பட்ட அந்த ஏழை மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் வந்து முறையிடுகின்றார்கள். விடுதலைப் புலிகள் அந்த ‘உயர்சாதிக்காரர்’ என்பவரை அழைத்து நியாயம் கேட்கின்றார்கள். சமூகநீதி – சமத்துவம் பற்றி விளக்குகின்றார்கள். மாறும் உலகத்தைப் பற்றியும் – மனித நாகரீகத்தைப் பற்றியும் பேசுகின்றார்கள். கிணற்றுச் சொந்தக்காரர் இலகுவில் மசிவதாக இல்லை.

தனது காணி, தனது கிணறு, தனது சாதி என அகம்பாவம் பேசுகின்றார். உழுத்துப்போன சமூக மரபுகளை நியாயமாகக் காட்ட முனைகின்றார்.

இவை உண்மையில் நடந்த சம்பவங்கள். இப்படிச் சில சம்பவங்களை யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் இன்றும் சந்திக்கின்றார்கள்.

சாதிவெறி என்ற பிசாசு எமது சமூகத்திலிருந்து இன்னும் ஒழிந்துவிடவில்லை என்பதற்கு இந்தச் சம்பவங்கள் நல்ல உதாரணம்.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் சாதிப்பேய் கோரத்தாண்டவம் ஆடியது. அதுதான் சமூக நீதியாகவும் பேணப்பட்டு வந்தது. பின்னர் அதற்கெதிராக நியாயம் கேட்டு அடக்கப்பட்ட மக்கள் போர்க்குணம் கொண்டார்கள்.

‘அடங்காத் தமிழர்’ ஒரு புறமும், அடக்கப்பட்ட தமிழர்கள் ஒரு புறமுமாகக் களத்தில் இறங்கினார்கள்.

தாழ்த்தப்பட்டோர் எனப்படும் மக்களுக்குக் கோவில்கள் திறந்துவிடப்பட வேண்டும். தேனீர்க் கடைகளில் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதுதான் இந்தச் சாதிய எதிர்ப்புப் போராட்டத்தின் குறிக்கோள்.

இதற்காக மோதல்கள் நடந்தன. இரத்தம் சிந்தப்பட்டது. உயிர் இழப்புக்களும் நடைபெற்றன.

இது அன்றைய காலகட்டத்தின் ஒரு முற்போக்கான போராட்டமாகும். அடக்கப்பட்ட அந்த மக்களின் போர்க்குணம் புரட்சிகரமானது.

ஆனால் தீண்டாமையைக் கடைப்பிடிப்போரின் மனம் திறபடாமல் கோவில்களைத் திறப்பதிலோ, தேனீர்க் கடைகளில் சமவுரிமை கிடைப்பதிலோ சாதியம் ஒளிந்துவிடப் போவதில்லை.

அதே சமயம் ‘தீண்டாமை ஒழிப்பு’ என்ற பெயரில் சாதிய ஒழிப்பிற்காகக் கூட்டணித் தலைவர்கள் நடாத்திய போராட்டம் கேலிக்கூத்தானது மட்டுமல்ல, சாதியத்திற்கு எதிரான அடக்கப்பட்ட மக்களின் போர்க்குணத்தைத் தமக்கே உரிய ‘புத்திசாதுரியத்துடன்’ மழுங்கடிக்கும் ஒரு சதிச்செயலுமாகும்.

இவர்கள் நடாத்திய ‘சமபந்திப் போசனம்’ என்ற நாடகம் தங்களை ‘உயர்சாதிக்காரர்’ எனத் தம்பட்டம் அடித்து விளம்பரப்படுத்தத்தான் பயன்படுத்தினார்கள். கூட்டணியினரின் இந்தப் போராட்டங்கள் அரசியல் இலாபங்களுக்காக நடாத்தப்பட்ட விளம்பரங்களேயல்லாமல் சாதிய முரண்பாட்டை அழித்துவிடும் புரட்சிகர நோக்கத்தைக் கொண்டதல்ல.

‘சாதியம்’ என்பது காலம் காலமாக எமது சமுதாய அமைப்பில் வேரூன்றிக் கிடக்கும் ஒரு சமூகப் பிரச்சினை. வேதகால ஆரிய நாகரீகத்தின் வர்ணகுல அமைப்பிலிருந்து சாதிப் பிரிவுகள் தோற்றம் கொண்டன என்றும், பின்னர் திராவிட சமுதாயத்தில் சாதியம் வேரூன்றிப் பரவியது என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பிராமணர்கள் வேத நூல்களை எழுதினார்கள். மனுநீதி சாஸ்திரங்களைப் படைத்தார்கள். இவற்றில் எல்லாம் பிராமணரை அதி உயர்ந்த சாதியாகக் கற்பித்துச் சாதிய அமைப்பை இறைவனின் படைப்பாக நியாயப்படுத்தினார்கள் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. சாதியத்தின் மூலத்தை ஆராய்ந்தபடி செல்வது இங்கு அவசியமில்லை. எங்கிருந்தோ, எப்படியோ இந்த சமூக அநீதிமுறை தமிழீழ சமுதாயத்திலும் வேரூன்றி, விருட்சமாகிவிட்டது. தமிழீழ மக்களின் சமூக உறவுகளுடனும், சம்பிரதாயங்களுடனும், பொருளாதார வாழ்வுடனும், கருத்துலகப் பார்வையுடனும் பின்னிப் பிணைந்ததாகச் சாதியம் உள்ளது என்பது யதார்த்த உண்மை. சாதிய முறை, தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டதால் பொருளாதார உறவுகளிலிருந்து எழுகிறது. மத நெறிகளும், சித்தாந்தங்களும், சட்டங்களும் சாதிய முறையை நியாயப்படுத்தி வலுவூட்ட முனைகின்றன.

கிராமியப் பொருளாதார வாழ்வை எடுத்துக் கொண்டால் தொழிற் பிரிவுகளின் அடிப்படையில் சாதிய முறை அமையப் பெற்றிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சாதி என்ற முத்திரை குத்தப்பட்டிருக்கிறது. ஒரு தொழில் உன்னதமானது. மற்றைய தொழில் உன்னதம் குறைந்தது, அல்லது இழுக்கானது என்ற மூடநம்பிக்கையின் அடிப்படையில் தொழில் செய்து வாழும் மக்கள் சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்தத் தொழிற் பிரிவுகளிலிருந்தும், அவற்றிற்குக் கொடுக்கப்பட்ட பொய்யான அந்தஸ்துக்களிலிருந்தும் ‘உயர்சாதி’, ‘தாழ்ந்த சாதி’ என்ற மூடத்தனமான சமூக உறவுகளும், அவற்றைச் சூழவுள்ள சடங்குகள், சம்பிரதாயங்களும் தோற்றம் கொண்டுள்ளன.

செய்யும் தொழில் எல்லாம் உயர்ந்தது. உழைப்பில் உன்னதமானது, இழுக்கானது எனப் பாகுபாடு காட்டுவது மூடத்தனம். தொழிலின் மகத்துவத்தை சாதியம் இழிவுபடுத்துகிறது. உழைக்கும் வர்க்கத்தை, உண்மையான பாட்டாளி வர்க்கத்தைத் தாழ்த்தப்பட்டோர் என்றும், தீண்டாதார் என்றும் அவமானப்படுத்துகிறது. மனித அடிமைத்தனத்திற்கும், படுமோசமான ஒடுக்குமுறைக்கும், சுரண்டல் முறைக்கும் சாதியம் காரணியாக இருந்து வருகிறது.

நீண்ட காலமாக எமது சமுதாயத்தில் நிலவி வந்த சாதிய வழக்குகளையும், சம்பிரதாயங்களையும் தொகுத்து, அந்நிய காலனித்துவ ஆட்சியாளர் அதனைச் சட்டமாக்கினார்கள். இதுதான் தேச வழமைச் சட்டம் எனப்படும். இச் சட்டங்கள் சாதியப் பிரிவுகள் பற்றியும், சாதிய வழக்குகள் பற்றியும் விளக்குகின்றன. சாதியத்தை நியாயப்படுத்தி வலுப்படுத்த முனைவதோடு, ‘உயர்சாதிக்காரர்’ எனக் கருதப்படும் ஆளும் வர்க்கத்தின் அபிலாசைகளைப் பேணும் வகையிலும் இந்தச் சட்டத் தொகுப்பு அமைந்திருக்கின்றது.

பிரித்து ஆளும் கலையில் கைதேர்ந்த அந்நிய காலனித்துவவாதிகள், மூடநம்பிக்கைகளிலிருந்து பிறந்த சமூக வழக்குகளை சட்டவடிவமாக்கிச் சாதிய முரண்பாட்டை வலுப்படுத்தினார்கள். சாதியத்தால் பயனடைந்த ‘உயர் சாதியினர்’ எனப்படுவோர் சாதியத்தை எதிர்க்கவில்லை. இந்தப் பழைய, பிற்போக்கான ஆளும் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை நாடியதே தவிர எமது சமூகத்தில் நிலவும் அநீதிகளையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடத் துணியவில்லை.

பதவிகளைக் கைப்பற்றிக் கொள்வதற்காகக் காலத்திற்குக் காலம் சாதிய எதிர்ப்புப் போராட்டம் என்ற போர்வையில் சில கேலிக்கூத்துக்களை நடாத்தி, அப்பாவிகளான பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவுகளைப் பெற்றுப் பதவிக் கட்டில் ஏறினார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், அவர்கள் முன்னெடுத்த தேசிய விடுதலைப் போராட்டமும், தமிழீழ சமுதாயத்தில் ஒரு யுகப் புரட்சியை உண்டு பண்ணியது எனலாம். அரச பயங்கரவாத அட்டூழியங்களும், அதனை எதிர்த்து நின்ற ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டமும், எமது சமூக அமைப்பில் என்றுமில்லாத தாக்கங்களை விழுத்தின. பழமையில் தூங்கிக் கொண்டிருந்த எமது சமுதாயம் விடுதலை வேண்டி விழித்தெழுந்தது. வர்க்க, சாதிய காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் தேசாபிமானப் பற்றுணர்வு தோன்றியது. தமிழீழ மக்கள் ஒரே இன மக்கள் என்ற இனவுணர்வும் பிறந்தது. சாதிய வேர்களை அறுத்தெறிந்து எல்லாச் சமூகப் பிரிவுகளிலிருந்தும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒரு தேசிய விடுதலை இராணுவத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டி எழுப்பியது. ஒரு தேசிய விடுதலை இயக்கமாகப் புலிகள் கண்ட வளர்ச்சியும், அவர்களது புரட்சிகர அரசியல் இலட்சியங்களும், சாதியத்திற்கு ஒரு சவாலாக அமைந்தன. தேசிய சுதந்திரத்தை மட்டுமன்றி, சாதியம் ஒழிக்கப்பட்ட ஒரு சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் உறுதியான கொள்கையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகின்றது.

புலிகள் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், அவர்களது இலட்சியப் போராட்டமும், சாதிவேறுபாட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின் செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடித்தளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்படுத்தியிருக்கின்றன. இது சமூக உணர்வுகளிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சாதி குறித்துப் பேசுவதோ, செயற்படுவதோ குற்றமானது என்பதைவிட அது வெட்கக் கேடானது, அநாகரீகமானது என்று கருதும் ஒரு மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது.

இது சாதியம் தொடர்பாகக் காலம் காலமாக இருந்து வந்த சமூக உணர்வில் ஏற்பட்ட பிரமாண்டமான மாற்றமாகும்.

இருந்தாலும் சாதியப் பேயை எமது சமூகத்திலிருந்து முற்றாக ஓட்டிவிட முடியவில்லை. சாதிய வழக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. சாதிய வெறியர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். சாதியப் பிரச்சினைகளையும் நாம் சந்திக்கத்தான் செய்கின்றோம்.

காலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து, மக்களின் ஆழ்மனதில் புரையோடிவிட்ட ஒரு சமூக நோயை எடுத்த எடுப்பில் குணமாக்கிவிடுவதென்பது இலகுவான காரியமல்ல. அப்படி நாம் அவசரப்பட்டுச் சட்டங்கள் மூலமாகவோ, நிர்ப்பந்தங்கள் வாயிலாகவோ சாதியப் பேயை விரட்ட முனைவதும் புத்திசாலித்தனமானது அல்ல.

இன்றைய நிலையில் இந்தப் பிரச்சினைகளை நாம் இவ்விதமாகப் பார்க்கலாம்.

உயிர் வாழ்வுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களில் சாதி வெறிகாட்டி, அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல். இது கொடூரமானது; அனுமதிக்க முடியாதது.

மற்றையது சாதி ரீதியான ஏனைய முரண்பாடுகள். இவற்றை அதனதன் தன்மைகளுக்கு ஏற்றவிதத்தில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயலிழக்கச் செய்யலாம்.

புலிகளின் விடுதலைப் போராட்டமும், அதனால் எழுந்த புரட்சிகரப் புறநிலைகளும் சாதிய அமைப்பைத் தகர்க்கத் தொடங்கியிருக்கிறன. எனினும் பொருளாதார உறவுகளிலும், சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்து விடப் போவதில்லை. எனவே சாதிய ஒழிப்புக்குச் சமுதாயப் புரட்சியுடன், மனப்புரட்சியும் அவசியமாகிறது.

பொருளாதாரச் சமத்துவத்தை நோக்கமாகக் கொண்ட சமுதாயப் புரட்சியை முன்னெடுப்பது விடுதலைப் புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும். தேசிய விடுதலையைப் பெற்று, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாகச் செயற்படுத்த முடியும். ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்திலிருந்தே கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புரட்சிகரமான பொருளாதாரத் திட்டங்களைச் செயற்படுத்தி, கூட்டுத்தொழில் முயற்சிகளை அமுல்படுத்தி, சாதிய உறவுகளைப் படிப்படியாக உடைத்தெறிவது சாத்தியமானதொன்று.

சமூகச் சிந்தனையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது. ஏனெனில் சாதிய வழக்குகளும், சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கின்றன. இந்த அறியாமையைப் போக்க மனப்புரட்சி அவசியம். மன அரங்கில் புரட்சிகரமான விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம். இங்குதான் புரட்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது.

எமது இளம் பரம்பரையினருக்குப் புரட்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும். பழமையான, பிற்போக்கான கருத்துக்கள், கோட்பாடுகள், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, புதிய முற்போக்கான உலகப் பார்வையைப் புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும். அறியாமை இருள் நீங்கிப் புதிய விழிப்புணர்வும், புரட்சிகர சிந்தனைகளும் இளம் மனங்களைப் பற்றிக் கொண்டால் சாதியம் என்ற மனநோய் புதிதாகத் தோன்றப் போகும் புரட்சிகர சமுதாயத்திலிருந்து நீங்கிவிடும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2019ல் , லைக்கா சுபாஷ்கரண் வேண்டுதலில் வடிவேலு உடன் பஞ்சாயத்து செய்தவர் சீமான்.

வடிவேலு ஒத்துக்கொண்டாலும், சங்கர் தரப்பு ஒத்துக்கொள்ளவில்லை. ஒன்று புலிகேசி 24ல் நடி அல்லது, நஷ்டஈடு கொடு என்று விடாப்பிடியாக நின்றார்.

இப்போது, சங்கர் தரப்பினை, பணம் வாங்காமல் விட்டுக்கொடுத்து, பணிய வைத்தது, உதயநிதி.

வெட்டி ஓட்டும் இந்த காணொளிகளில் வருபவைகளை அப்படியே எடுக்காமல், நம்பகத்தன்மை வாய்ந்த பல ஆங்கில ஊடகங்கள் உள்ளன, அதிலிருந்து பல விடயங்களை அறியலாம்.

வடிவேலு, அரசு தனது பக்கம் என்ற தைரியத்தில், பத்துகோடியா.... சங்கர் சொல்வது பொய்....நூறு கோடி என்று சொல்லலாம், பார்த்தீர்களா என்று வாய் சவடால் விட்டாரே...

அதே வடிவேலு.... அதே மேடையில் சுபாஷ்கரனுக்கும் நன்றி சொல்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

2019ல் , லைக்கா சுபாஷ்கரண் வேண்டுதலில் வடிவேலு உடன் பஞ்சாயத்து செய்தவர் சீமான்.

வடிவேலு ஒத்துக்கொண்டாலும், சங்கர் தரப்பு ஒத்துக்கொள்ளவில்லை. ஒன்று புலிகேசி 24ல் நடி அல்லது, நஷ்டஈடு கொடு என்று விடாப்பிடியாக நின்றார்.

இப்போது, சங்கர் தரப்பினை, பணம் வாங்காமல் விட்டுக்கொடுத்து, பணிய வைத்தது, உதயநிதி.

இந்த காணொளிகளில் வருபவைகளை அப்படியே எடுக்காமல், நம்பகத்தன்மை வாய்ந்த பல ஆங்கில ஊடகங்கள் உள்ளன, அதிலிருந்து பல விடயங்களை அறியலாம்.

வடிவேலு, அரசு தனது பக்கம் என்ற தைரியத்தில், பத்துகோடியா.... சங்கர் சொல்வது பொய்....நூறு கோடி என்று சொல்லலாம், பார்த்தீர்களா என்று வாய் சவடால் விட்டாரே...

மேலே காணொளியில் 3.39 இல் சீமானிடம் இது பற்றி கேட்க - சீமான் சொல்கிறார் தானே இதை தீர்த்து வைத்ததாக.

சீமானே தன் வாயால் சொன்னது நம்பகம் இல்லையா?

ஒன்றில் நீங்கள் அடித்து விடுகிறீர்கள் அல்லது சீமான் அடித்து விடுகிறார்?

எது என்று நீங்களே சொல்லுங்கள்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடிவேலு விடயத்தினை, அரசியல் கொண்டு பார்க்காமல், சினிமா வட்டார செய்தி கொண்டு பார்த்தால் என்ன நடந்தது என்று புரியும்.

இங்கே, சீமான், உதயநிதி வடிவேலு, சங்கர் எல்லோருமே சினிமாக்காரர்கள்.

இதிலை நாண்டு கொண்டு நிக்க, இது பெரிய விசயமில்லை..... வடிவேலு நடிக்க போறார் எண்டது தான் விடயம்....

**

அடுத்தது.... காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்....

போராட்ட காலத்தில் சாதியம் இல்லாமல் போன கதை....

இது குறித்து, பலர், சிங்களவர்கள் கூட எழுதி உள்ளனர்.... இது குறித்து விவாதித்தால்.... நீண்டு கொண்டே போகும்.... ஆனால் அது நல்ல விவாதமாக இருக்கும்.

நித்திரை வருவதால்....  பிறகு எப்போதாவது பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

வடிவேலு விடயத்தினை, அரசியல் கொண்டு பார்க்காமல், சினிமா வட்டார செய்தி கொண்டு பார்த்தால் என்ன நடந்தது என்று புரியும்.

இங்கே, சீமான், உதயநிதி வடிவேலு, சங்கர் எல்லோருமே சினிமாக்காரர்கள்.

இதிலை நாண்டு கொண்டு நிக்க, இது பெரிய விசயமில்லை..... வடிவேலு நடிக்க போறார் எண்டது தான் விடயம்....

வடிவேலுவின் திரை மீள் வருகையை பற்றி இந்த அரசியல் திரியில் முதலில் எழுதியவர் நீங்கள்.

நிற்க,

இவர்கள் எல்லாம் சினிமாகாரர் என்பது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பு அல்ல.

நீங்கள் வடிவேலு பிரச்ச்னையை தீர்த்தது ஸ்டாலின், உதய் என்றீர்கள்.

சீமானோ தன்ன்வாயால் “முதல்வர் தீர்க்கவில்லை” நானே தீர்த்தேன் என்கிறார்.

இதில் யார் அடித்து விடுகிறார்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இங்கே சொன்னது, போதும் என்று மதுரைக்கு போய் தாயுடன் இருந்த வடிவேலுவை முதலில் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்ததை... அது நடந்தது 2019ல்.

கொரோனாவால் ஒதுங்கி.... மீண்டும் பலர் முயல்வில் முடிந்து உள்ளது.

பிரச்சனை..... வடிவேலர் வருகிறார்..... ஆனால் புலிகேசியில்,நடிக்க போவதில்லை..... சங்கருடன் சமாதானமாகவில்லை....

ஆக, சீமான் தரப்பு, தமிழர் வடிவேலுவை நடிக்க அழைத்து வந்துள்ளது  என்கிறது.

உதயநிதி தரப்பு, சங்கரை, நஷ்டஈடு கேளாமல், ரெட் காட்டினை நீக்க வைத்துள்ளது... அதனை வெளியே சொல்ல மாட்டாது. உதயநிதியுடன் படத்தில் நடிக்க கூடும் என்கிறார் வடிவேலு.

ஆக, ஊர் கூடி தேர் இழுத்து உள்ளது. அவ்வளவுதான்.

புரியுதா.... அல்லது இன்னும் அடித்து விடுதல் நிலைப்பாடு தானா? 🤗🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

சீமான் இங்கே சொன்னது, போதும் என்று மதுரைக்கு போய் தாயுடன் இருந்த வடிவேலுவை முதலில் பேச்சுவார்த்தைக்கு கொண்டு வந்ததை... அது நடந்தது 2019ல் 

 

🤣🤣🤣🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

நல்ல வேளை சீமான் சொன்னது வடிவேலுக்கும் அவரின் பங்காளிக்குமான வாய்க்கால் தகராறை தீத்தது பற்றி என சொல்லாமல் விட்டீர்களே🤣.

இவ்வளவும் போதும்.

இது சம்பந்தமான நம் இருவரின் உரையாடலையும் வாசித்து, சீமானின் பேட்டியையும் பார்ப்போர் புரிந்து கொள்வார்கள். 

யார் அடித்து விட்டார்கள் என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபாஷ்கரன்.... சீமானை தொடர்ப்பு கொண்டிருந்தார்.... ஆக... புரிந்தால் சரி...
சுபாஷ்கரன் சம்பந்த பட்டுள்ளார்....என்று வடிவேலு சொல்கிறார்.

ஸ்டாலினை சந்தித்து உள்ளார்...

அடித்து விட்டேன் என்று நிறுவினால் தான் இன்று நித்தா வரும் போலை கிடக்குது.... ஐயோ பாவமே...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.