Jump to content

ஒரு நெல்லு புட்டாகிறது….- Dr. T. கோபிசங்கர்


Recommended Posts

பின்னேரம் புகைக்கூட்டடியில ஆணியில தொங்கிக்கொண்டிருந்த சுளகை எடுத்து அதில ஒட்டியிருந்த காய்ஞ்சு போன பழைய மாவை தட்டி சுரண்டிப்போட்டு , சாடையா நுனி கருகின நீத்துப் பெட்டியை கழுவி அம்மம்மா எடுத்து வைக்கேக்க அண்டைக்கு புட்டுத்தான் எண்டு தெரியும் . 

மூடி போட்ட பிளாஸ்டிக் பக்கட்டில இருந்து மூண்டு சுண்டு மா. 

பிளாஸ்டிக்கிற்கு முன்னைய காலம் சருவச்சட்டிலையும் அதுக்கு முந்தி மண் பானையிலும் தான் அரிசி மாவை போட்டு வைக்கிறது .

ஒரு சுண்டு எண்டுறது பழைய ரின்பால் பேணி , சிலர் அளக்கிற பேணி எண்டும் சொல்லுறவை. 

சோறு எண்டால் அப்ப ஒரு சுண்டு மூண்டு பேருக்கு தான் காணும், புட்டுக்கு எண்டா இரண்டு பேருக்கு தான் சரி. ஆனால் இப்ப dieting எண்டு வந்தா பிறகு doctors advise பண்ணினம் carbohydrates cut பண்ணட்டாம். 

ஆனால் என்னத்தை சாப்பிட்டாலும் யாழ்ப்பணத்தானுக்கு இரவு புட்டும் குளம்பும் சாப்பிட்டாத்தான் நித்திரை வரும். 

அதிலயையும் மொட்டைக்கறுப்பன் அரிசிமாப்புட்டு புட்டுக்கே தனிச்சிறப்பு தரும். 

தட்டார் சந்தீல இருக்கிற வைத்திலிங்கம் மரக்காலை தான் ஏரியா எல்லாருக்கும் விறகு , மரம், பலகை supply . 

துலாபாரம் படத்தில வாற பெரிய தூக்குத்தராசு தான் விறகு நிறுக்கிறது . 

தூக்கு கணக்கு தான் விறகுக்கு . 4 படி ஒரு பக்கம் வைப்பினம் ஒண்டு 54 றாத்தல் , 216 றாத்தல் ஒரு தூக்கு . விறகிலும் பாக்க பிறவெட்டு மலிவு ஆனால் வாங்கேக்க வெறும் பட்டை மட்டும் வாங்காமல் கொஞ்சம் விறகுத்துண்டும் இருந்தாத் தான் நல்லா எரியும். கொத்தின விறகில்லாமல் முழு விறகை வாங்கி வீட்டை கூலிக்கு கொத்திறது தான் லாபம், அதோட கொத்தேக்க வாற சிராகையையும் பாவிக்கலாம். 

சின்ன சிராகையை தணல் மூட்டி புகைச்சட்டிக்குள்ள வைச்சு வேப்பமிலையை வைச்சுத்தான் நுளம்பு விரட்டிறது . 

குவிச்சு வைச்ச உமிக்குள்ள இரண்டு சிராகையை தணல் மூட்டி வைச்சிட்டா அடுத்த நாள் பல்லு மினுக்க கரி ready . 

விறகு கொத்தேக்க ஏலாமல் விட்ட வைரமான விறகான மொக்கை ( மொக்கு விறகை - கொமர்ஸ்காரன்கள் எல்லாம் வரிஞ்சு கட்டப்போறாங்கள்) வைச்சு பிறவெட்டையும் அடுக்கி அடீல வைச்சு தென்னம் மட்டை , சிரட்டை , பொச்சு மட்டை எல்லாம் அடுக்கி பெரிய கிடாரம் முட்டத் தண்ணி விடவேணும் . 

தண்ணி கொதிக்க முதல் பத்தாயத்தில இருக்கிற நெல்லை கடகத்தில கொண்டு வந்து கிடாரத்தின்டை கழுத்து வரைக்கும் நெல்லைக் கொட்டீட்டு கலக்க, பதர் மிதக்கும் அதை அள்ளி எறிஞ்சிட்டு விறகை உள்ள தள்ள அடுப்பு தகதகக்கும். 

நெல்லு புழுங்கலாக மாற நல்ல ஒரு மணம் வரும் , இரண்டு நெல்லை எடுத்து கையால நசிச்சா அவியாத சோறு மாதிரி நசிஞ்சால் பதம் சரி. கிடாரத்தின்டை வளையத்துக்கால உலக்கையை கொழுவி அடுப்பில இருந்து இறக்கி கொண்டு போய் பரவச்சரி. கொழும்பில intern செய்யேக்க Co House officer Jayamal க்கு you know அரிசி is புழுங்கிங் எண்டு அவனுக்கு புழுங்கல் அரிசி எண்டால் என்ன எண்டு நான் விளங்ஙகப்படுத்த அவனும் பாவம் “ஹரி ஹரி“ எண்டு ஏதோ விளங்கின மாதிரி தலையாட்டினது, நான் நொந்து போன தருணம் . 

அவிச்ச புழுங்கலை மழை நனையாம காய விட்டு முள்ளு விறாண்டியால இழுத்து இழுத்து சீராப் பரவி பிறகு ,எடுத்து சாக்கில கட்டி வைச்சு குத்தி அரிசியாக்கிறது ஒரு பெரிய procedure .

என்ன தான் mill இல அரிசியை குத்தினாலும் மண்வாசனை படத்தில வாற மாதிரி உரல்ல குத்தி வாற கைக்குத்தரிசி taste mill அரிசில வராது .  

வீட்டை இரண்டு கல் உரலும் ஒரு மர உரலும் இருந்தது . மர உரல் எங்கடை வீட்டை சீயாக்காய் அரப்பு இடிக்கவும் ,அக்கம் பக்கம் எல்லாம் செத்த வீட்டுக்கு சுண்ணம் இடிக்க போய் வாறது . 

அகண்ட வாய் கல்லுரல் நெல்லுக்குத்தவும் மாவிடிக்கவும் பாவிக்கிறது, ஒடுங்கின வாய் அரிசியை பதத்திக்கு தீட்டவும் மாவிடிக்கேக்க அரிச்சு வாற கப்பியை மாவாக்கவும் பாவிக்கிறது. 

இந்தக்கப்பியை கஞ்சியா காய்ச்சி உழுந்தோட தோசை மாவுக்கு சேத்தால் நல்ல soft ஆக தோசை வரும் .

செந்தாவும் நாங்கள் எள்ளுப்பாகு இடிக்கிறதும் ஒடுங்கின உரல் எண்டு சொல்லுறது கேக்குது. ( இப்படி உரலுக்க தான் புது மாப்பிளை தலையை விட்ட கதை நடந்தது எண்டு ஆச்சி சொல்லிறவ) .

புட்டு taste அதன் மாவிலும் குழைக்கிற பதத்திலும் தான் இருக்கு . நெல்லை குத்ததேக்க சரியா தீட்ட வேணும். Mill இல நெல்லை குத்தி அரிசியை தீட்டேக்க முதல்ல அரிசி வந்தாப்பிறகு அவங்கட்டை அண்ணை தவிடும் வேணும் எண்டு சொல்லேக்க ,வேண்டா வெறுப்பா ஒருக்கா பாத்திட்டு அந்த blade ஐ எடுக்க தவிடு ,அரிசி வந்த அதே ஓட்டையால வரும் . ஆனால் உமி எண்டால் பின்னால போய் பிறம்பா அள்ள வேணும் .

மனோகரா சந்தி செல்லையா mill ல நெல்லுக் குத்தி , அரிசியை தீட்டேக்க பார்த்து கொஞ்சமா தீட்ட சொல்லாட்டி வீட்ட வந்தா அம்மா புறுபுறுப்பா. 

குத்தின அரிசி தனி உர பாக்கிலேம் , உமி தவிடு தனித்தனி பாக்கிலேம் கட்டி போட்டு , bag கொண்டு போகாட்டி ,அரிசிக்கு மேல harbajan Singh ன்டை கொண்டை மாதிரி தவிட்டை கட்டிக்கொண்டு வாறனாங்கள். 

கடைசீல அவங்கடை mill காசை கட்டப்போனா அவன் தானே பொக்கற்றுக்க கைய விடப் பாப்பான் காசுக்கு? . ஒரு மாரி அதிலையும் தப்பி , பின் கரியரில அரிசியும் முன்னால தவிட்டு பாக்கையும் உமி பாக்கையும் வைக்க ஆரையும் உதவிக்கு கேட்டு சைக்கிளை உழக்க தொடங்க கொஞ்சம் balance தடுமாறும் . 

எல்லாத்தையும் சமாளிச்சுப் போய் கொண்டு இருக்கேக்க திடீரெண்டு பண்டிக்கோட்டு பிள்ளையார் கோவலடியால ஏதாவது வாகனம் வந்து ,cycle brake ஐ பிடிச்சா சரி, ஒண்டு முன் bag விழும் இல்லாட்டி பின்னான் சரியும். 

ரோட்டுக் கரையில் cycle நிப்பாட்டி திருப்பி weight balance எல்லாம் செஞ்சு வீட்டை வந்தா அம்மா உடன கணக்கு கேப்பா . 

முதலே கள்ளக்கணக்கு சரியாப் பாத்து கவனமா களவா காசை எடுத்து வைச்சிட வேணும் , இல்லாட்டி எப்படி பிடிக்குமோ தெரியாது மனிசி, டக்கெண்டு கண்டு பிடிச்சிடும் . Shorts pocket எல்லாம் Indian army மாதிரி full checking நடக்கும் .எனக்கு அண்ணா தான் போட்டுக் குடுத்ததெண்டு இப்பவும் doubt .

கொண்டந்த உமி மரத்தூளோடு சேந்து தூள் அடுப்புக்க போகும் ( மரத்தூள் அடுப்பும் சிக்கனச் சமையலும் தனியா எழுத வேண்டிய subject ), தவிட்டை பால் கொண்டு வாற பாலன் கொண்டு போவான் . ( பனை மாதிரி நெல்லும் எல்லாப் பாகமும் மனிதனுக்கு பயன் தான் ) . 

அரிசியை ஊறப்போட்டு வடிச்சு வீட்டை கல்லுரலில மா இடிக்கிறது Mill க்கு முற்பட்ட (IPKF க்கு உட்பட்ட) காலம்.

அரிசி மாவை வறுத்து பதம் சரியா கொஞ்சம் Reddish brown ஆக வரேக்க அடுப்பை நிப்பாட்ட வேணும் . ஆனா கோதம்ப மா வறுக்கேக்க மணம் நல்லா தூக்கும் . கைவிடாம வறுத்து ஒரு golden colour ம் மணமும் வரேக்க இறக்க சரியா்இருக்கும் அந்த மணம் அரிசி மாவில இல்லை.

அரிசி மாவை வறுத்து அரிச்சு பானைக்க போட்டு வைச்சா கொஞ்ச நாளைக்கு பாவிக்கலாம் , இது கோதம்ப மா மாரி வண்டு வராது. வறுத்த மாவை அரிக்கேக்க வாற அரிசி மா கட்டைக்கு தேங்காப்பூ சீனி போட்டு சாப்பிட்டால் சும்மா…..அப்பிடி இருக்கும். 

அரிசி மாப்புட்டுக்கு குழைக்க பதம் எடுக்கத் தெரியாத மனிசி மார்டை புதுப்புது கண்டு பிடிப்புகள் தான் அவிச்ச கோதம்ப மாவும் ஆட்டாமாவும் mix பண்ணிறது ( தனி அரிசி மா 24 கரட் தங்கம் அதில செப்பு பித்தளை எல்லாம் சேர்க்க கூடாது) . 

Experience ஆக்கள் நேர சுளகிலயே புட்டைக் குழைப்பினம் இல்லாட்டை சட்டீல குழைச்சு பிறகு சுளகில போட்டு கொத்த வேணும் . மாவை போட்டு மேல சுடுதண்ணி விட்டு குழைச்சு, கட்டி உப்பு சிரட்டையில கரைச்சு வைச்சு தெளிச்சுத் தெளிச்சு புட்டுக் குழைக்கிறது ஒரு கலை . 

ரின்பால் பேணியால இல்லாட்டி விளிம்பில்லாத பித்தளை தேத்தண்ணி பேணி யால கொத்தி கையால பினைஞ்சு சரியான பதத்தை எடுக்க வேணும். அப்பிடி மாவை கொத்திச் சுளகில கொழிச்சா வாற புட்டு அப்படியே ஓரே size ஆ இருக்கும். புட்டு கொஞ்சம் சின்ன size ஆ வர vertical movement ஐ நிப்பாட்டி மெல்லக் கொழிக்க segregation சரியா வரும் . 

நுனியல இருக்கிற உதிர்நத மாவை திருப்பி அள்ளி அடியில இருக்கிற கட்டியோட சேத்து குழைக்க வேணும் . சிலர் கையாலயே சின்னன் சின்னனா உருட்டியும் புட்டு செய்வினம் . எப்படி தட்டில போட்டு கொத்திற taste சட்டீல வறுக்கிற கொத்து ரொட்டீல வராதோ அதே போல் சுளகில கொத்திற புட்டு taste எதிலேம் வராது . 

சுளகின்டை நடுவில இருக்கிற பதமான size புட்டை நீத்துப் பெட்டீலயோ புட்டுக் குழலிலயோ கையால மெல்லமா ,love பண்ணிற காலத்தில முதல் முதலா மனிசியை தொடுறமாதிரி பட்டும் படாமலும் அள்ளிப்போட்டு , அதோட புட்டுக்கு தேங்காய் பூவை 

Mix பண்ணுறதும் ஒரு கலை தான் .   

சுளகிலேயே தேங்காய் பூவை mix பண்ணலாம் , இல்லாட்டி நீத்துப்பெட்டீக்க போடேக்க கலந்து போடலாம் , இல்லாட்டி தனிய புட்டை அவிச்சிட்டு பிறகும் தேங்காய் பூவை கலக்கலாம் . ஒவ்வொண்டிலேம் ஒவ்வொரு taste வரும் .

தேங்காய் கொஞ்சம் முட்டுக் காய் எண்டா முதலிலேயே கலக்கிறது தான் நல்லம் . என்னதான் Machine scrapers வந்தாலும் . நல்ல பாரமான செத்தல் தேங்காயை ( அடப்பாமான ) உடைச்சு திருவலையில ஆழமாத் திருவினா ஒவொரு பூவும் இரண்டு inch நீளத்திற்கு வரும் . இது தான் கறுத்த புட்டு மாப்பிளைக்கு ஏத்த வெள்ளை பொம்பிள்ள . இரண்டையும் கலந்தால் வாறதும் ஒரு கலவி இன்பம் தான் .

எனக்கெண்டால் ஆய கலகளில் சிறந்த கலை புட்டவிக்கிற கலை எண்டும் அடுத்தது அதை சாப்பிடுற கலை எண்டும் தான் சொல்லுவன் அவிச்ச் புட்டை எப்படி சாப்பிடுறது எண்டு தனிய எழுதோணும்….

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

றகு கொத்தேக்க ஏலாமல் விட்ட வைரமான விறகான மொக்கை ( மொக்கு விறகை - கொமர்ஸ்காரன்கள் எல்லாம் வரிஞ்சு கட்டப்போறாங்கள்) வைச்சு பிறவெட்டையும் அடுக்கி அடீல வைச்சு தென்னம் மட்டை , சிரட்டை , பொச்சு மட்டை எல்லாம் அடுக்கி பெரிய கிடாரம் முட்டத் தண்ணி விடவேணும்

எப்படி எரிச்சாலும் கொஞ்சம் தீஞ்ச மாரி மொக்கு மிஞ்சும். இரவில டோர்ச் இல்லாமல் போகேக்க தருணம் பார்த்து மொக்கு வேலையை காட்டி கவித்து விடும்🤣.

26 minutes ago, நிழலி said:

அவிச்ச புழுங்கலை மழை நனையாம காய விட்டு முள்ளு விறாண்டியால இழுத்து இழுத்து சீராப் பரவி பிறகு ,எடுத்து சாக்கில கட்டி வைச்சு குத்தி அரிசியாக்கிறது ஒரு பெரிய procedure .

இந்த காயப்போடுற நேரம் ஒரு மணம் வருமே 🤮

27 minutes ago, நிழலி said:

அரிசியை ஊறப்போட்டு வடிச்சு வீட்டை கல்லுரலில மா இடிக்கிறது Mill க்கு முற்பட்ட (IPKF க்கு உட்பட்ட) காலம்.

 

வழக்கொழிந்து போய்கொண்டிருந்த பலதை கொஞ்சம் மீட்டுத்தந்த காலம், ஐபிகேஎப் காலம். 

 

30 minutes ago, நிழலி said:

கடைசீல அவங்கடை mill காசை கட்டப்போனா அவன் தானே பொக்கற்றுக்க கைய விடப் பாப்பான் காசுக்கு?

இப்படி ஒரு கரெக்டர் எல்லா ஊரிலும் இருக்கும் போல 🤣.

 

31 minutes ago, நிழலி said:

ஆனால் என்னத்தை சாப்பிட்டாலும் யாழ்ப்பணத்தானுக்கு இரவு புட்டும் குளம்பும் சாப்பிட்டாத்தான் நித்திரை வரும்

மலையாள மழை விட்டாலும், தூவானம் விடவில்லை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில்  அரிசிமாவில் புட்டு சாப்பிட என்ன வாசம் ...வெறும் தேங்காப்பூவும் ,புட்டும் சும்மா சாப்பிடலாம் ...ஏன் அந்த வாசம் இங்கு புட்டு அவிக்கும் போது வருதுதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கு கணக்கு தான் விறகுக்கு . 4 படி ஒரு பக்கம் வைப்பினம் ஒண்டு 54 றாத்தல் , 216 றாத்தல் ஒரு தூக்கு . விறகிலும் பாக்க பிறவெட்டு மலிவு ஆனால் வாங்கேக்க வெறும் பட்டை மட்டும் வாங்காமல் கொஞ்சம் விறகுத்துண்டும் இருந்தாத் தான் நல்லா எரியும். கொத்தின விறகில்லாமல் முழு விறகை வாங்கி வீட்டை கூலிக்கு கொத்திறது தான் லாபம், அதோட கொத்தேக்க வாற சிராகையையும்.....!

 

இந்தப் படிக்கல்லு (இரும்பாலானது) ஒன்று 56 றாத்தல் இருக்கும் .......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2021 at 13:39, ரதி said:

ஊரில்  அரிசிமாவில் புட்டு சாப்பிட என்ன வாசம் ...வெறும் தேங்காப்பூவும் ,புட்டும் சும்மா சாப்பிடலாம் ...ஏன் அந்த வாசம் இங்கு புட்டு அவிக்கும் போது வருதுதில்லை 

அது நம் நாடு ..இது  வெளிநாடு . மண் சட்டி உணவுக்கும் மின்சாரத்தில் சமைக்கும் உணவுக்கும் உள்ள வித்தியாசம்  . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2021 at 19:39, ரதி said:

ஊரில்  அரிசிமாவில் புட்டு சாப்பிட என்ன வாசம் ...வெறும் தேங்காப்பூவும் ,புட்டும் சும்மா சாப்பிடலாம் ...ஏன் அந்த வாசம் இங்கு புட்டு அவிக்கும் போது வருதுதில்லை 

உண்மைதான் ,அந்த வாசம் ரெண்டு தெருவுக்கே வரும் ,அதுவும் கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு,அல்லது உருளைக்கிழங்கு பிரடடல் எண்டால் சொல்லி வேலையில்லை ,இப்பவே அந்த புட்டு வாசம் எனக்கு வர்ற மாதிரி இருக்கு...😋

Link to comment
Share on other sites

On 8/9/2021 at 13:39, ரதி said:

ஊரில்  அரிசிமாவில் புட்டு சாப்பிட என்ன வாசம் ...வெறும் தேங்காப்பூவும் ,புட்டும் சும்மா சாப்பிடலாம் ...ஏன் அந்த வாசம் இங்கு புட்டு அவிக்கும் போது வருதுதில்லை 

கடையில் வாங்கிய அரிசி மா என்பதால் தான் அந்த வாசம் இல்லை. அம்மா கனடா வந்திருக்கும் போது, அரிசியை ஊற வைத்து தர தமிம் மில் ஒன்றுக்கு கொண்டு போய் திரித்து எடுத்துக் கொண்டு வந்து வறுத்து அதை புட்டுக்கு இடியப்பத்துக்கு பாவித்தோம்...அதே வாசனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை அரிசி மாவில் தான் கலப்படமோ ?  அம்மாவின்   கைப்படட சமையல் ஆறிப்போனாலும் அமுதம் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

கடையில் வாங்கிய அரிசி மா என்பதால் தான் அந்த வாசம் இல்லை. அம்மா கனடா வந்திருக்கும் போது, அரிசியை ஊற வைத்து தர தமிம் மில் ஒன்றுக்கு கொண்டு போய் திரித்து எடுத்துக் கொண்டு வந்து வறுத்து அதை புட்டுக்கு இடியப்பத்துக்கு பாவித்தோம்...அதே வாசனை.

அரிசி மா பொதி செய்து நீண்ட காலமாய் இருப்பதால் தான் ஊர் வாசமும் ,சுவையும் வருகுதில்லை என்று நினைக்கிறேன் ...கலப்படமும் இருக்குமோ தெரியாது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2021 at 18:39, ரதி said:

ஊரில்  அரிசிமாவில் புட்டு சாப்பிட என்ன வாசம் ...வெறும் தேங்காப்பூவும் ,புட்டும் சும்மா சாப்பிடலாம் ...ஏன் அந்த வாசம் இங்கு புட்டு அவிக்கும் போது வருதுதில்லை 

அரிசி மா கடையில் வாங்காது நீங்களே ஊறவிட்டு அரைத்துப் பிட்டு அவித்துப் பாருங்கள். அதே பழைய வாசனைவரும் ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரிசி மா கடையில் வாங்காது நீங்களே ஊறவிட்டு அரைத்துப் பிட்டு அவித்துப் பாருங்கள். அதே பழைய வாசனைவரும் ரதி.

மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி . நீண்ட நாட்கள் காணோம்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரிசி மா கடையில் வாங்காது நீங்களே ஊறவிட்டு அரைத்துப் பிட்டு அவித்துப் பாருங்கள். அதே பழைய வாசனைவரும் ரதி.

மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி . நீண்ட நாட்கள் காணோம்

குளிர் தொடங்கி வீட்டு தோட்டம் முடிய வருவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிலாமதி said:

மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி . நீண்ட நாட்கள் காணோம்.?

இரண்டாவது வக்சின் போட்டபின்  உடல்நிலை மனநிலை இரண்டிலும் மாற்றங்கள். 😀

19 hours ago, ஈழப்பிரியன் said:

குளிர் தொடங்கி வீட்டு தோட்டம் முடிய வருவா.

உடனே விளங்கீற்றுது உங்களுக்கு. இரு மாதங்களாகக் கணனியைத் திறக்கவே இல்லை.😀 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கண்டது சந்தோசம் சகோதரி........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎-‎09‎-‎2021 at 21:15, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அரிசி மா கடையில் வாங்காது நீங்களே ஊறவிட்டு அரைத்துப் பிட்டு அவித்துப் பாருங்கள். அதே பழைய வாசனைவரும் ரதி.

என்னட்ட மிக்சி இல்லை 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரதி said:

என்னட்ட மிக்சி இல்லை 
 

ஒரு இரும்பு உரல் வாங்க வேண்டியதுதானே😁😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.