Jump to content

வறிய மக்களை திரட்டி உதவித்தொகை வழங்கியவர்கள் கைது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வறிய மக்களை திரட்டி உதவித்தொகை வழங்கியவர்கள் கைது

September 6, 2021

spacer.png

ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மக்களை கூட்டி உதவித்தொகை வழங்கிய குற்றச்சாட்டில் மூவரை நெல்லியடி காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.  வடமராட்சி பகுதியில் வாழும் வறிய மக்களுக்கு உதவி தொகையாக ஒருவருக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் ஒருவர் உதவி தொகை வழங்கியுள்ளார்.

நெல்லியடி காவல்துறைப் பிரிவுக்கு மதவடி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை உதவி தொகை வழங்கப்படுவதாக அறிந்த அவ்வூர் மக்கள் பலரும் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.

அது தொடர்பில் தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த நெல்லியடி காவல்துறையினா்  உதவி தொகை பெற வந்த மக்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர் , உதவி தொகை வழங்கியவர் , அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் உள்ளிட்ட மூவரை  கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதேவேளை குறித்த கொடை வள்ளல் ஒருவருக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வீதம் சுமார் 500 க்கும் மேற்பட்டவர்களுக்கு சுமார் 10 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://globaltamilnews.net/2021/165617

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் தானே??

அரசு கொடுத்தால் சரி ஊர்க்காரர்கள் கொடுத்தால் தப்பா?!

Link to comment
Share on other sites

43 minutes ago, விசுகு said:

நல்ல விடயம் தானே??

அரசு கொடுத்தால் சரி ஊர்க்காரர்கள் கொடுத்தால் தப்பா?!

ம்… உங்களுக்கு இதிலே எங்கே தவறு நிகழ்ந்துள்ளது என்று புரியவேயில்லையா? அது ஆச்சரியத்துக்கு உரியதல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

ம்… உங்களுக்கு இதிலே எங்கே தவறு நிகழ்ந்துள்ளது என்று புரியவேயில்லையா? அது ஆச்சரியத்துக்கு உரியதல்ல.

எங்களுக்கு புரிந்துவிட்டது சாரே 
லட்சக்கணக்கில் வரிசையில் மக்களை நிற்கவைத்து  பல கொரோனா கொத்தணிகளை உருவாக்கிய ஓடாவி வைத்தியன் தம்மிக்கவை கைதுசெய்து சங்கிலேயே மிதிக்காமல் அவனது பாணியை வாங்கிக்குடித்து இலங்கை சுகாதார அமைச்சர் ருசியில் மண்டையை ஆட்டியபோதே புரிந்துவிட்டது, எங்களுக்கு புரிந்துவிட்டது இன்னும் உங்களுக்கு புரியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

அது தொடர்பில் தகவல் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த நெல்லியடி காவல்துறையினா்  உதவி தொகை பெற வந்த மக்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்திய பின்னர் , உதவி தொகை வழங்கியவர் , அதற்கான ஏற்பாடுகளை செய்தவர் உள்ளிட்ட மூவரை  கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்

இங்கு உதவி பெற்றவர்களுக்கு அரசாங்க உதவித்தொகை நிறுத்தப்படும். அத்தோடு உதவி செய்தவரிடம் எப்படி உங்களுக்கு இவ்வளவு பணம் வந்தது? என்று வறுத்தெடுத்து விட்டு, வெளிநாட்டிலிருந்து இவருக்கு பணம் அனுப்பி புலிகளை மீள உருவாக்குகிறார்கள் என்று பின்னாளில் குற்றம் சுமத்தப்படும். இனிமேல் ஏழைகளுக்கு உதவ யாரும் முன்வரமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அக்னியஷ்த்ரா said:

எங்களுக்கு புரிந்துவிட்டது சாரே 
லட்சக்கணக்கில் வரிசையில் மக்களை நிற்கவைத்து  பல கொரோனா கொத்தணிகளை உருவாக்கிய ஓடாவி வைத்தியன் தம்மிக்கவை கைதுசெய்து சங்கிலேயே மிதிக்காமல் அவனது பாணியை வாங்கிக்குடித்து இலங்கை சுகாதார அமைச்சர் ருசியில் மண்டையை ஆட்டியபோதே புரிந்துவிட்டது, எங்களுக்கு புரிந்துவிட்டது இன்னும் உங்களுக்கு புரியவில்லை 

செருப்படி… 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவியது நல்ல விடயம், ஒழுங்கு படுத்தலில் கோட்டை விட்டிட்டார். விதானையிடம் விபரம் எடுத்து தனக்கு தெரிந்தவர்கள் ஊடாக விசாரித்து அறிந்து கொஞ்ச கொஞ்ச பேராக அழைத்து கொடுத்திருக்கலாம். இனி என்ன காவல் தன்னையும் கொஞ்சம் கவனிக்கச் சொல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

உதவியது நல்ல விடயம், ஒழுங்கு படுத்தலில் கோட்டை விட்டிட்டார். விதானையிடம் விபரம் எடுத்து தனக்கு தெரிந்தவர்கள் ஊடாக விசாரித்து அறிந்து கொஞ்ச கொஞ்ச பேராக அழைத்து கொடுத்திருக்கலாம். இனி என்ன காவல் தன்னையும் கொஞ்சம் கவனிக்கச் சொல்லும்.

நீங்கள் சொன்னபடி அவர் செய்தாலும், இப்படி ஓருவர் கொடுக்கிறார் என்று கேள்விப்பட்டு சனம் திரளுவதை தடுப்பது எப்படி?

ஒவ்வொரு நாளும் சதோச வின் முன்னால் திரளும் மக்களை சிறீலங்க அரச அதிகாரம் இப்படியா கையாளுகிறது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

நீங்கள் சொன்னபடி அவர் செய்தாலும், இப்படி ஓருவர் கொடுக்கிறார் என்று கேள்விப்பட்டு சனம் திரளுவதை தடுப்பது எப்படி?

ஒவ்வொரு நாளும் சதோச வின் முன்னால் திரளும் மக்களை சிறீலங்க அரச அதிகாரம் இப்படியா கையாளுகிறது???

தமிழன் என்றால் கிள்ளுக்கீரை தான்.
எனது ஊரில் எனக்கு தெரிந்தவர்கள் இப்படித்தான் உதவி செய்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஏராளன் said:

தமிழன் என்றால் கிள்ளுக்கீரை தான்.
எனது ஊரில் எனக்கு தெரிந்தவர்கள் இப்படித்தான் உதவி செய்தார்கள்.

கிராம சேவகரிடம் குறைந்த வருமானம் பெறுபவர்கள் லிஸ்ட்டை எடுத்து உதவி செய்து இருக்கலாம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.