Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண்


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண்

சுப்பிரமணியம் பாஸ்கரன்

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும்,  போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து  சவால் மிக்கதாகவே உள்ளது.

குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு, இவ்வாறான கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் பாரிய சவாலாக விளங்குகின்றன. இலங்கையில் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட நாடுகளிலும் இது ஒரு சவாலாகவே உள்ளது.

வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக, முகமாலைப் பகுதி காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்று,  12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமது சொந்த நிலத்துக்குத் திரும்ப முடியாத நிலையில், பல  ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு பகுதிகளிலும், பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.

குறிப்பாக, வடக்கு, கிழக்கு பிரதேசங்களில்,  உயர்பாதுகாப்பு வலயங்கள், நிலச் சுவீகரிப்புகள், வெடிபொருள் அச்சுறுத்தல்கள் என்பன, இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த நிலங்களில் மீளக்குறியேறாமைக்கான காரணங்களாக அமைகின்றன.

வடபகுதியில், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை, இத்தாவில், இந்திராபுரம்  ஆகிய  கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாது, பலகஸ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். 

image_9f5731d716.jpg

1999ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்த காலம் வரையும், அதன்பின்னர் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதிகளில், யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புகளும் பரஸ்பரம் மோதிக்கொண்ட, கிளாலி முதல் முகமாலை, நாகர்கோவில் வரையான முன்னரங்க நிலை காணப்பட்ட பகுதிகளில், தினமும் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டும் பலர் அங்கவீனர்களாகியும் இருந்தனர். இந்தப்பகுதிகள், போரிட்டோரின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் களமாகவும் காணப்பட்டன. 

எறிகணைகள், துப்பாக்கி ரவைகள் என்பவற்றால் சல்லடை போடப்பட்டு, எண்ணற்ற உயிர்கள் பறிக்கப்பட்ட ஓர் இடமான முகமாலையிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாகவும் சின்னாபின்னமாகவும்  வெடிபொருட்கள் விதைக்கப்பட்டன. 

இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீளவும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் வகையில், முகமாலை பகுதியில் வெடிபொருட்களை அகற்றும் பணிகள் கண்ணிவெடிகளை அகற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால், 2010ஆம் ஆண்டு முதல் இன்று வரை,  பெரும் சவால்களுக்கு மத்தியில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இங்கிருந்து இடம் பெயர்ந்து, இதுவரை மீள் குடியேறமுடியாமல் வாழ்ந்து வருவோரின் ஒருமித்த குரலாக ஒலிப்பது, “எங்களது சொந்த வீடு இல்லாத துன்பத்தை, கடந்த 25 வருடங்களாக அனுபவித்து வருகின்றோம். 1996ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், முகமாலை, இத்தாவில், இந்திராபுரம்  ஊர்களில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று, தற்போது யாழ்ப்பாணத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வருகின்றோம். நாங்கள் நிம்மதியாக வாழவில்லை; அடிக்கடி வேறுவேறு வீடுகளுக்கு மாறிக்கொண்டுதான் இருக்கின்றோம். இப்போது, இலட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து, நாலாயிரம் ரூபாய் வாடகை கொடுக்கின்றோம். 12 ஆண்டுகளாகியும் சொந்த காணிக்குள் கால்பதிக்க முடியாது இருக்கின்றோம். எங்களுடைய காணியை பார்க்க வேண்டும்; எங்களது வீட்டில் குடியிருக்க வேண்டும்”  எனத் தமது அவாக்களையும் அபிலாசைகளையும் உணர்பூர்வமாக வெளிப்படுத்தினார்கள். 

image_827c5865a5.jpg

அவர்கள், மேலும் விவரிக்கையில், “நாங்கள், உறவினர்களின் காணியில் வசித்து வந்த காலப்பகுதியில், பல துன்பங்களை அனுபவித்து விட்டோம். ‘இரவானால் கிணற்றில் தண்ணீர் அள்ளாதீர்கள்’ என்பார்கள். எங்களது பாவனைக்கு செடிகொடி வைக்கேலாது; ஆடு, மாடு வளர்க்க முடியாது! இப்படி எத்தனையோ கஸ்ரங்களை அனுபவித்து விட்டோம். எனவே, எங்களது காணிகளில் வெடிபொருட்களை அகற்றி எங்கள் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும்” என இடம்பெயர்ந்து வாழும் குடும்பங்களின் ஆதங்கங்கள் தொனித்தன.   

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலையின் கிழக்கு பகுதி, இதுவரை வெடிபொருட்கள் அகற்றப்படாத மிக ஆபத்தான பகுதியாகக் காணப்படுகின்றது. 

இந்நிலையில், மீள்குடியேற்றத்துக்கு அடையாளப்படுத்தப்பட்டு, மக்கள் மீள்குடியேறிய பகுதி தவிர,  ஏனைய பகுதிக்குள் பொதுமக்கள் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

தடைசெய்யப்பட்ட பகுதிகள் மிக ஆபத்தான பகுதிகளாக இருப்பதால், அப்பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்வதை முற்றாகத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்றும்  உரியஅதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்ற போதிலும், அந்த அறிவுறுத்தல்களை மீறி, பலர் உட்சென்று விபத்துகளில் சிக்கி, உயிரிழப்புகளை எதிர் கொண்டதுடன் அங்கவீனர்களாகவும் ஆகியுள்ளனர். 

2010ஆம் ஆண்டு, யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருந்த  செய்திக்குறிப்பில், ‘இலங்கையின், வடக்கில் 640 கிராமங்களில், 105 மில்லியன் வரையான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர், மக்கள் மீள்குடியேறுவதற்கும் பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டாலும், இன்னும் சில பகுதிகளில் வெடிபொருட்களின் ஆபத்துக் காணப்படுகின்றது.

குறிப்பாக, வடபகுதியில் தற்போது மிக ஆபத்தான பகுதியாக, கிளாலி தொடக்கம் முகமாலை, நாகர்வோவில் வரையான பகுதிகள் காணப்படுகின்றன. இதில், முகமாலைப் பகுதியே மிக ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த மக்கள் தமது சொந்த ஊரில் மீள்குடியேறுவதற்குக் காணப்படும் சகல தடைகளும் நீக்கப்பட்டு, குறிப்பாக, வெடிபொருட்கள் அகற்றப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக வாழ வழிசமைக்கப்பட வேண்டும் என்பதே மனிதாபிமானம் படைத்த எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மறைந்திருக்கும்-வெடிபொருட்கள்-இன்னும்-அதிரும்-மண்/91-280431

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • அமெரிக்க நிறுவனதுடனான ஒப்பந்தம்: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இடையே கடுமையான மோதல் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் மோதல் எழுந்துள்ளது. அமைச்சர்களான விமல், கம்மன்பில, வாசுதேவ உள்ளிட்டவர்கள் இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளது. அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடது முன்னணி, லங்கா சம சமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி ஆகியன ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி, அரசாங்க கூட்டணியில் உள்ள 10 கட்சிகளின் தலைவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மூன்று பக்கம் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடிதத்தில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் எரிவாயு விநியோக ஏகபோகம் ஒரு நிறுவனத்திற்கு மாற்றுவது குறித்த கவலைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் கோரப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தரப்பினர் கடந்த வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் அலரிமாளிகளில் மேற்கொண்ட கலந்துரையாடல் தோல்வியில் முடிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1241291
  • காணாமல் போனவர்கள்... படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார்- செல்வம் காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்க முடியுமென தெரிவித்ததன் ஊடாக, அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான விளக்கத்தினை எங்களால் சொல்ல முடியும். எமது இயக்கத்துக்கும் வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றையும் காரணங்களையும் சொல்லமுடியும். தமிழ் மக்களின் விடுதலைக்காக துப்பாக்கி எந்தி போராடியவர்கள் நாம். இப்போதும் மக்களின் விடுதலைக்காக போராடவேண்டும் என்ற சிந்தனையே எமக்குள்ளது. தனிப்பட்ட முறையில் மாறி மாறி கருத்துக்களை சொல்வதால் மக்கள் வெறுப்படைகின்றனர். நாம் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்ற விடயத்தினை கடந்த தேர்தல் மூலம் மக்கள் எமக்கு உணர்த்தியுள்ளனர். எனவே எமது தலைவர்கள் விட்டுச்சென்ற பணியினை தொடர்ந்து முன்னெடுப்போம். இதேவேளை ஜிஎஸ்பி பிளஷ் வரிச்சலுகையினை பெற்றுகொள்ளவதற்கான யுக்தியாகவே  ஜனாதிபதியின் ஐ.நா உரையை பார்கின்றேன். இலங்கையில் வாழும் அனைத்து இனமும் சமம் என்று அவர் தெரிவித்தார். ஆனால் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து அடிக்கடி ஒரு விடயத்தை அவர் குறிப்பிட்டு வருகின்றார். தான் சிங்கள மக்களின் வாக்குகளாலேயே வெற்றிபெற்றேன் என்றார். மேலும், தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகள் இராணுவ பிரசன்னம், உயிரிழந்தவர்களை நினைவுகூரக் கூட முடியாத இக்கட்டான நிலையில் தமிழினம் இருக்கின்றது. எனவே, இனங்கள் அனைத்தும் சமன் என்று தெரிவிப்பதை ஏற்கமுடியாது. அது உண்மைக்கு புறம்பானது. காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்க முடியும் என தெரிவித்ததன் ஊடாக அவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அவர் ஏற்றுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241280
  • இரண்டு தடுப்பூசிகளையும்... வழங்கிய நாடுகளின், பட்டியலில் 5 ஆவது இடத்தில் இலங்கை இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் 5 ஆவது இடத்தில் இலங்கை இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொத்மலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் கூறியுள்ளதாவது, “உலகில் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடத்துக்கு வந்துள்ளது. நிதி நெருக்கடி இருந்தாலும் கூட சுகாதார அமைச்சினால், அமைச்சரவையில் முன்வைக்கப்படும் பத்திரங்கள் நிராகரிக்கப்படுவதில்லை. மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதால்தான் இவ்வாறு நடைபெறுகின்றது. நாட்டை மூடுமாறு சிலர் கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு மாதம் அரசாங்க சம்பளம் வழங்கப்படுகின்றது. ஆனால் நாட்கூலி பெறுபவர்களின் நிலைமை? அத்துடன், நாடு தற்போது வழமைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும் குறைவடைகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1241309
  • எமது வாக்குச் சாவடியில்... 08:02´வது  நிமிடமளவில்,  இரண்டாவது வாக்கை மகனும், மூன்றாவது வாக்கை  நானும் செலுத்தி விட்டு வந்துள்ளேன்.  முதலாவதாக, ஒரு கிழவி... வாக்கு போட்டவர். வாக்கு சாவடியில்... எம் மூன்று பேரைத் தவிர,  கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, வேறு ஒரு ஆட்களையும் காணவில்லை.   ஞாயிற்ருக்  கிழமை... சனம், நல்ல நித்திரை கொள்கிறார்கள் போலுள்ளது. வழமையாக  பத்து  மணிக்குப் பிறகு தான்.. ஆட்கள் மெல்ல, மெல்ல  வருவார்கள்.  நாங்கள், எங்கள் தாத்தா காலத்திலிருந்து... பரம்பரை பரம்பரையாக....  CDU க்குத்தான் வாக்கு போடுகிறனாங்கள். இந்த முறை... SPD க்கு வாக்குப் போட்டுள்ளோம். தேர்தல் வாக்குச்  சாவடியிலிருந்து... ✍️ யாழ்.கள  நிருபர்... தமிழ் சிறி.  🤣
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.